மோகங்களில்… 14
“ஹே ஃபிராடு.. தூங்குற மாதிரி நடிக்கிறியா?” என்று அருகில் கேட்ட குரலில் அவள் தடுக்கிட்டு விழித்து எழ முயல… அவனும் அவள் புறம் குனிந்த தலையை நிமிராமல் வைத்திருக்க.. இருவரின் இதழ்களும் ஒரு நொடி கோர்த்துக் கொண்டன..!!
அவள் மெல்லிய இதழ்களின் ஈரத்தை அவனும்.. அவன் முரட்டு இதழ்களின் கடினத்தை அவளும்..
உணர்ந்தும் உணராத நிலை…
இருவருக்கும் இதழ்களை விலக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை!! அதீத அதிர்ச்சியில் ஆட்பட்டிருந்தனர்!!
கொஞ்சம் கூட இதனை இருவரும் எதிர்பார்க்கவில்லை. அவளோ அதிர்ந்து விழிக்க.. அவன் அதன்பின் தன் முகத்தை திருப்பியவன் சற்று தள்ளி அவளுக்கு முதுகை காட்டியவாறு நின்று சிகையை கோதிக் கொண்டான்.
எங்கே அவள் தப்பாக நினைத்து விடப் போகிறாளோ என்று மெல்ல முகத்தை மட்டும் திரும்பிப் பார்க்க அவளை படபடப்போடு அமர்ந்திருந்தாள். முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி?!
“திரும்பவும் தன்னை தப்பாக நினைத்து விட்டாளோ?” என்று அவள் புறம் திரும்பி “சாரி..” என்று அவள் அவன் கூறும் அதே நேரம் அவளும் மெல்லிய குரலில் “சாரி..” என்றாள்.
“விடு.. விடு..! நான் நீ கண்ண மூடி வேணும்னு படுத்திருக்கிறத பார்த்துட்டு, உன்னை எழுப்ப வேண்டி பக்கத்தில் இருந்து அப்படியே பாத்துட்டேன் இருந்தேன். நான் போயிட்டேனானு நீ கண்ணை திறந்து பார்ப்பேனு எதிர்பார்த்தேன்.. அதான் அப்படி செஞ்சேன்! இட்ஸ் ஜஸ்ட் அ ஆக்சிடென்ட்..!” என்று அவன் தோளை குலுக்கி கொள்ள.. அவளும் சரி என்பது போல தலையசைக்க, பின் அவள் அருகிலேயே அந்த நீள் இருக்கையில் அமர்ந்தான். அவன் அமர்வதைப் பார்த்து தன் கால்களை கீழே வைத்தாள் அவள்.
“ஏன் தூக்கம் வரலையா உனக்கு?” என்று கேட்டதும் “எப்படி சொல்வாள்? கனவில் நீ வந்து காஜி காஜியாக செய்ததை கண்டதும் கண்களில் தூக்கம் வரவில்லை” என்று!!
அதனால் மெல்ல புன்னகை செய்தவள், “கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருந்தது. இவனுங்க வேற ஒதைச்சுக்கிட்டே இருந்தானுங்களா.. அதான் பால் குடிச்சிட்டு வந்து படுக்கலாம்னு பார்த்தேன். ஆனா.. நிறைய குடிச்சிட்டேன் போல அதுவே மூச்சு முட்டுற மாதிரி இருந்தது அதான் இப்படி சாய்ந்த மாதிரி படுத்துக்கலாம்னு.. தூக்கமும் வரல திடீர்னு யாரோ கதவை திறந்ததும் கொஞ்சம் பயந்துட்டேன்! அதான் கண்ண மூடி தூங்குற மாதிரி படுத்துட்டு யாருன்னு பார்க்கலாம்னு பார்த்தா…” என்றவரின் முகம் அதற்கு பின் நடந்ததை எண்ணி சிவந்தது.
ஆனால் அந்த ராத்திரியில் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் துருவால் அதனை கண்டுபிடிக்க இயலவில்லை.
எட்டி மூக்கை பிடித்து ஆட்டியவன் “நம்ம வீட்டில.. அதுவும் உன் ரூம்க்கு என்னைத் தவிர யாரு வந்திட முடியும்?” என்றவன் என்னவோ சாதாரணமாக தான் கூறினான். ஆனால் அந்த வார்த்தையின் மறைப்பு பொருள் அவள் மனதுக்கு அத்தனை இதமாக இருந்தது.
“சரி தூங்கு..” என்று எழந்தவன் கையைப் பிடித்தவள், “கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்களேன். தனியா இருக்கிறது ஒரு மாதிரியா இருக்கு..” என்றதும் புரிந்து கொண்டவன் மெதுவாக அவளது குழந்தை பருவத்தை பற்றி கேட்க ஆரம்பித்தான்.
“பெருசா சொல்லிக்கிற மாதிரி ஃப்ளாஷ்பேக் எல்லாம் எனக்கு இல்ல.. நான் பொறந்து ஒரு வருஷத்திலேயே எங்க அம்மா ஏதோ நோய் தாக்கி இறந்துட்டு.. ஒத்த பிள்ளை அதுவும் பொம்பள புள்ளைய வளர்க்க இஷ்டப்படாத என்னை பெத்தவன், என்னை எங்க ஆயா கிட்ட கொடுத்துட்டு வேற குடும்பத்தை தேடி போய்ட்டான். அதுக்கப்புறம் நான் செத்தனா இருக்கேனானு திரும்பி கூட பாக்கல! எங்க ஆயா தான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தது. ப்ளஸ் டூ வரைக்கும் போராடி முடிச்சேன். காலேஜ் ஒருத்தர் ஸ்பான்சர்ல தான் படிச்சிட்டு இருந்தேன். இரண்டாவது வருஷம் படிக்கும்போது அந்த மகராசனும் கோவிட்ல போய் சேர்ந்துட்டாரு.. அதுக்கு அப்புறம் ஏதாவது தொழில் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கும்போது தான் உங்க எக்ஸ் கண்ணுல பட்டு.. இப்போ இங்கே இருக்கிறேன்” என்று சிரித்தாள்.
“உங்கள பத்தி சொல்லுங்களேன்?” என்றதும் தோளை ஸ்டைலாக வழமை போல குலுக்கிக் கொண்டவன் “அப்பா தொழில் எனக்கு பிடிக்கல.. அதனால நான் கார்மெண்ட்ஸ் ஆரமிச்சு.. அப்புறம் இதுலேயே முன்னுக்கு வந்துட்டேன்! மாசத்துல பாதி நாள் வீட்டுக்கே போக மாட்டேன்.. எங்க அம்மா தான் ஃபோன் பண்ணி நொய்ய நொய்யின்னு பேசுவாங்க.. வேலை டென்ஷன்னா மிட் நைட் இங்க வந்துருவேன். அப்பப்ப பிரண்ட்ஸ் கூட பார்ட்டி இங்கே தான் நடக்கும். இப்ப கொஞ்ச நாளா இங்கே தான் வாசம்..” என்று தோளல குலுக்கி கொண்டான், அவ்வளவுதான் என்பது போல…
“நம்மளை தேட ஒரு ஆள் இருப்பதும் வரம் தானே?” என்றவள் எதார்த்தமாக சொல்ல.. அவனும் தோளை வழக்கம் போல குலுக்கி “அது தேடுற ஆள பொறுத்து இருக்கு” என்று கண்ணடித்து சிரித்தான்.
“எங்க ஆயாவும் அப்படித்தான் நான் ஸ்கூல்ல இருந்து வர லேட்டானா வாசல் வாசலே பார்த்துக்கிட்டே வந்து நிக்கும்” என்று கூறி முடிக்கு முன் காலை மெதுவாக எடுத்து மாற்றி வைத்தாள்.
ஏழாவது மாதம் தொடங்கி விட்டது. ஆனால் பார்ப்பவர்களுக்கு 9 மாதத்தை போல இருக்கும். அவளது பெரிய வயிற்றை பார்த்தவனுக்கு சின்ன மனசு சுணக்கம்.
“இப்படித்தான் இந்த பொண்ணு இந்த வயிற்றை தாங்கிட்டு நடக்கிறாளோ? உக்காந்து எந்திரிக்கிறாளோ? இயற்கையை உபாதைகளுக்கு போய்வராளோ?” என்று ஏதோ மனதின் ஓரத்தில் அவள் மீதான காருண்யம்.
“அடுத்த செக் அப் போகும்போது அந்த டாக்டர் கிட்ட கேக்கணும்.. கால் வந்து இப்ப எல்லாம் ரொம்ப வீங்குது” என்று அவள் காலை பார்த்துக்கொண்டு கூற..
“எங்க காட்டு?” என்றவன் அவளது காலை தூக்கி பார்க்க “வலிக்குது மெதுவா.. சார்” என்றதும் பொறுமையாக எடுத்து தன் மடிமீது வைத்துக் கொண்டவனை இவள் ஆச்சரியமாக பார்க்க.. அவனோ ஆராய்ச்சியாக அவளது காலை தான் பார்த்தான்.
“ஆமா.. இங்கெல்லாம் வீங்கி இருக்கு” என்று அவளது பாதத்தை பார்த்தவன், என்ன நினைத்தானோ “நீ கொலுசு போட மாட்டியா?” என்று கேட்டான்.
மேட்டர்னிட்டி கவுனோ முட்டிக்கும் சிறிது தூரத்தில் இருக்க அவளது வாழைத்தண்டு கால்கள் பளீரென அவனது கண்களுக்கு தெரிந்தது. ஆனால் அவனது கவனமும் வீங்கிய அவளது பாதத்திலும் கொலுசு போடாத கணக்காலிலும் மட்டுமே நின்றது.
மெல்ல தலையாட்டி சிரித்தவள் “ஒரு தடவ திருவிழா அப்போ எங்க ஆயா கிட்ட கேட்டேன். ரொம்ப நாள் காசு சேர்த்து சீட்டு எல்லாம் போட்டு எனக்கு வெள்ளியில ஒரு கொலுசு வாங்கிப் போட்டுச்சு.. ஆனா எங்க ஆயா இறந்த போது அதுக்கு கடைசியா செய்ய என்கிட்ட கைல காசு எதுவுமே இல்லை. அப்ப அந்த கொலுசை கழட்டி தான் அதோட கடைசி காரியங்களை செஞ்சேன். அதுக்கப்புறம் கொலுசு போட என்னமோ பிடிக்கல” என்று சிரித்தவளின் கண்களில் அத்தனை வலி!!
மெல்ல அவளை திரும்பி பார்த்தான் ‘இருபத்து இரண்டு வயது தான் இருக்கும். அதற்குள் எத்தனை எத்தனை சோதனைகளை தாடைகளை தாண்டி வந்து இருக்கிறாள்.. ஆனால் அதை எல்லாம் எப்பொழுதும் முகத்தில் தேக்கி வைத்துக் கொள்ளாமல்.. நான் கஷ்டப்பட்டேன் கஷ்டப்பட்டேன் என்று புலம்பாமல்.. அடுத்த தான் முன்னேறும் வழியை யோசிக்கிறாளே? எப்படிப்பட்ட பெண் இவள்!!’ என்றுதான் பார்த்திருந்தான்.
அவளோ கால் வலியில் எஸ் என்று முணக “என்னாச்சு?” என்று கேட்டவனிடம் “கால் ரொம்ப வலிக்குது” என்றாள்.
“இதற்கு என்ன பண்ணனும் எனக்கு தெரியலையே? மருந்து ஏதாவது தேய்க்கலாமா?” என்று அவன் கேட்க “எனக்கும் தெரியாது!” என்று அவள் உதட்டை பிதுக்க “ஐயோ..!” என்று ஆனது இவனுக்கு.
சாவித்ரி அம்மா இருந்தவரை இம்மாதிரி சிறு சிறு விஷயங்களை எல்லாம் அவரே பார்த்துக் கொண்டதால்.. இவனும் இவளின் தொந்தரவென்றி இவளை பற்றிய கவலையின்றி நிம்மதியாக தன் தொழிலை பார்த்தான்.
இப்போது அவர் இல்லாமல் அடிக்கடி இவளை பற்றி யோசிப்பதும்.. இரவு வேலை சீக்கிரம் முடித்துக் கொண்டு வருவதும்.. இரவில் அவ்வப்போது இவளது அறையை திறந்து இவளின் உறக்கத்தை பத்திரத்தை பார்த்துக் கொள்வதும்.. என்று அவனுக்கு தான் அதிக வேலை.
என்ன செய்வது என்று தெரியாமல் மெல்ல அவனது கைகள் அவளது காலை பிடித்து விட.. அவளோ அந்த சுகத்தில் இருக்கையில் பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு இதத்தை அனுபவித்தாள்.
அப்படியே தூங்கியவளை அள்ளியவன் வாகாக மெத்தையில் படுக்க வைத்தான்.
அடுத்து ஒரு கேட்டக்கர் வரும் வரை இவளை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை அவனுக்கு. அதே நேரம் இரவில் இப்படி தனியாக அவளை விட்டு செல்லவும் மனம் இல்லாமல் நின்றான். சற்று யோசித்தவன் பிறகு ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவளின் அறையிலேயே இரவை கழிக்கலானான்.
மறுநாளும் அவள் அறையிலேயே அமர்ந்து கொண்டு அவன் லேப்டாப்பில் வேலை செய்வதை பார்த்தாள யோசனையோடு அனு.. பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பவளை “நீ படுத்து தூங்கு அனு. எனக்கு வேலை இருக்கு” என்றான் லேப்டாப்பில் பார்வையை வைத்துக்கொண்டு!
“இல்ல.. நீங்க..” என்றதும் திரும்பி அவளை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவன் “நேத்தும் இந்த ரூம்ல தான் தூங்கினேன். அப்படி எல்லாம் உன் மேல பாய்ஞ்சிட மாட்டேன். பாஞ்சாலும் இந்த நிலைமையில்..”’ என்றவன் உதட்டை பிதுக்க.. அவளுக்கோ கோபம் வர அருகில் இருந்த தலையணையை எடுத்து அவன் மீது வீசினாள்.
“கோவப்பட்டாத.. உண்மையைத்தானே சொன்னேன்!” என்று சிரித்தவன் “பேசாமல் தூங்கு அனு! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. இல்ல.. நிஜமாலு உன் மேல பாய்னும்னு ஆசைப்படுறியா? என்று அவன் கண்ணடித்து கேட்க.. அவனை முறைத்து பார்த்தபடி சாய்ந்தமருந்தவள், அப்படியே நன்றாக உறங்கி விட்டாள். இதுவே தினமும் வழக்கமானது இரவில்…
இந்த வழக்கமும் ஒரு நாள் உடைக்கப்பட்டது. அதாவது அவன் திரும்பவும் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது.
ஆனால் இம்முறை இரண்டு நாட்கள் மட்டுமே! அதனால் இரண்டு நாட்களும் அனுவை பார்த்துக் கொள்ள.. சமைக்க வரும் அந்த பெண்மணியிடம் பேசி பணம் கொடுத்து சம்மதிக்க வைத்திருந்தான். அதனால் பயமின்றி இவன் சிங்கப்பூருக்கு பறந்து செல்ல..
இங்கோ சென்னையில் மையம் கொண்டு இருந்த புயல் கரையை நோக்கி வர அடித்து நொறுக்கியது மழை.. கூடவே காற்றும்!!
சென்னையின் புயல் மழையை பற்றி சொல்லவா வேண்டும்? அங்கங்கே தண்ணீர் சேர்ந்து தேங்கிக் கொள்ள.. வழித்தடங்கள் அடைக்கப்பட்டு மக்கள் அன்றாட உணவுக்கு, தண்ணீர்க்கும் மின்சாரத்திற்குமே மிகவும் கஷ்டப்பட்டனர்.
அதிலும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் எல்லா இடங்களிலும் கட்டிடங்களையும் கட்டி வைத்திருக்க.. பின் எங்கே தான் செல்லமாம் இந்த மழை நீர்? ஏற்கனவே அது போய் சேர்ந்த இடமெல்லாம் இன்று கான்கிரீட் கட்டிடங்களாய் முளைத்திருக்க.. ‘நீ வேணா புதுசா வந்திருக்கலாம்! ஆனால் இது என்னிடம்! நீ தான் ஆக்கிரமித்துக் கொண்டாய்!’ என்பது போலவே மழை நீர் சென்னையில் பல இடங்களில் சூழ்ந்து இருந்தது.
இரண்டு நாளில் திரும்பி விடலாம் என்று நினைத்து வேலையை விரைவில் முடிக்க இவன் சுகனையும் கூட்டிக்கொண்டு சென்றிருந்தான். புயல் மழை காரணமாக சென்னைக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதில் நொந்தே போனான் துருவ் வல்லப்.
அதுவும் முதல் நாள் தைரியமாக “நான் பார்த்துகிறேன் சார். நான் பார்க்காத மழையா? நான் பார்க்காத புயலா? நானும் சென்னைவாசி தான் சார்” என்று பேசிவிட்டாள் தான் அனு. ஆனால் அதற்கு அடுத்த நாள் தண்ணீர் சேர சேர இவள் வீட்டிலிருந்த பெண்மணியும் “நானும் என் பிள்ளைகளை குடும்பத்தை பார்க்க வேண்டும் மா” என்று அவசரப்படுத்தினார். அவரின் கவலை அவருக்கு.
என்ன செய்வது என்றே தெரியவில்லை அனுவுக்கு. மீண்டும் துருவுக்கு அழைத்து விவரத்தை சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள்.
வேற வழி இன்றி தாரதியின் உதவியதான் நாடினான் துருவ். “டாக்டர் ப்ளீஸ் எப்படியாவது ஒரு வாரத்துக்கு நீங்க அவளை உங்க ஹாஸ்பிடல் வச்சுக்கோங்க.. என்ன செலவானாலும் நான் பாத்துக்குறேன்! நான் இப்போ வர முடியாது நிலையில் இருக்கேன்” என்று அவன் அத்தனை கூற..
“ப்ளீஸ் துருவ்... நீங்க புரிஞ்சுக்கோங்க! எங்க ஹாஸ்பிடல் கீழ் பார்க்கிங்கில் தண்ணி பூந்துருச்சு.. கீழ பார்க்கிங் முழுக்க தண்ணி. இப்போதைக்கு இங்க இருந்து பேஷண்டை நாங்க உள்ளேயும் அழைச்சிட்டு வர முடியாது வெளியையும் கொண்டு போக முடியாது! ஒன்லி எமர்ஜென்சி மட்டும்தான் பார்க்கிறோம். அதுவும் அத்தியாவசிய தேவைகள் எல்லாம் வாங்க கூட முடியல.. புது பேஷண்ட் எல்லாம் வச்சுக்கவே முடியாது. நீங்க வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கோங்க ப்ளீஸ்..” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே “டாக்டர்.. அந்த ரூம் நம்பர் 305..” என்று செவிலியர் கூப்பிட “நான் வைக்கிறேன் துருவ்” என்று சென்று விட்டாள் தாரதி.
“என்ன செய்வது? என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டே இருந்தவனுக்கு வேற வழி இன்றி சசிகலா தான் ஆபத்பாந்தவனாய் தோன்றினார். வேறு வழி இன்றி அன்னைக்கு அழைத்தவன் “அம்மா எப்படி இருக்கீங்க?” என்றதும்..
“என்ன ஆச்சரியம்? என் மகனா நீ? ஏதோ தப்பான நம்பர் போல இருக்கு?” என்று அவர் ஃபோனை வைத்துவிட.. அம்மா என்று பல்லை கடித்தவன் மீண்டும் அவருக்கு அழைத்தான்.
இம்முறையும் ஃபோனை எடுத்தவர் “ஹலோ ம்மா.. உங்க கிட்ட தான் எப்படி இருக்கிங்கனு கேட்டேன்?” என்றவன், அவர் அடுத்து பேசுவதற்கு முன் “தப்பான நம்பர்னு சொல்லி வச்சீங்க.. அப்புறம் நான் ஃபோனே பண்ண மாட்டேன்! மார்க் மை வோர்ட்ஸ்!” என்று அடிக்குரலில் கூறினான்.
அவன் கடுப்பானதும் இவரு சிரித்துக் கொண்டார்.
“பின்ன என்னடா சொல்லணும்னு நினைக்கிற? புயல் மழைன்னு நாங்க வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிட்டத்தட்ட மூணு நாள் ஆகுது. இவ்வளவு சாவகாசமா ஃபோன் பண்ணி எப்படி இருக்கீங்கனு நேரம் கிடைக்குற பெத்த மகன்கிட்ட இப்படி தான் பேச முடியும்!” தவறாமல் அவனது தவறை சுட்டிக்காட்டினார் சசிகலா.
இதே மற்ற நேரமாக இருந்தால் ‘உங்களுக்கு என்ன பிரச்சனை? வீட்டில் பத்திரமாக தானே இருக்கீங்க? உங்களுக்கு தேவையானது ஏற்கனவே அரேஞ்ச் பண்ணிட்டு தான் வந்திருக்கிறேன்..’ என்று அடுக்கடுக்காக காரணங்களை அடுக்கி அன்னையின் வாயை அடைத்திருப்பான்.
ஆனால் இப்போது அவனுக்கு அனுவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள ஒரு ஆள் வேண்டும். அதற்காக தணிந்தே பேசினான் அன்னையிடம். அதுவும் தனது குட்டு வெளிப்பட்டு விடாமல்…
“அம்மா நான் ஒரு முக்கியமான விஷயமா தான் பேசுறேன்.. என் பிரண்டு ஒருத்தன் என்னுடன் இப்பொழுது கான்ஃபரன்ஸ்காக சிங்கப்பூர் வந்திருக்கான். அவன் வைஃப் பிரக்னண்டா இருக்கா.. அவள வீட்ல விட்டுட்டு வந்துட்டான். அவங்க வீட்ல யாரும் பெரியவங்க இல்ல. அந்த பொண்ணு இப்ப தனியா இருக்கு. நான் எப்படியாவது அந்த பொண்ணை நம்ம வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். நீங்க கொஞ்சம் பாத்துக்க முடியுமா?” என்று கேட்டான்.
“என்னடா இப்படி பொறுப்பே இல்லாம இருக்கீங்க!! மூணு நாளா அந்த பொண்ணு தனியா தான் இருந்துச்சா? அப்பவே சொல்றதுக்கு என்ன? இல்ல போகும்போதே நம்ம வீட்ல விட்டுட்டு போனால் தான் என்ன?” என்று படபடத்தார் சசிகலா.
“அம்மா ரிலாக்ஸ்!! நாங்க போகும்போது ரெண்டு நாள் தான் பிளான். அதனால வந்துவிடலாம்.. அந்த பொண்ணு சமாளிச்சிக்கும் நினைச்சு தான் அவனும் வந்தான். ஆனா.. இப்போ இந்த புயல் மழை திடீர்னு வரும்னு யாரு எதிர்பார்த்தா?” என்றதும் அவன் சொல்வதும் புரிந்தது.
மகனும் செல்லும்போது இரண்டு நாள் சிங்கப்பூர் வேலை என்று சொல்லி தானே சென்றான். திடீர் புயல் மழைக்கு அவர்களை குற்றம் சொல்ல முடியாது அல்லவா? என்று நிதர்சனத்தை புரிந்தவர், “சரி சரி.. நீ அந்த பெண்ணை அனுப்பி வை. நான் பார்த்துக்கிறேன்” என்றார்.
திரும்பவும் தாரதியை உதவிக்கு அழைத்தான். “துருவ்.. ப்ளீஸ் என்னால தான் முடியாதுன்னு சொன்னேன் இல்ல..”
“ஜஸ்ட் ஷட் அப் தாரதி! நான் சொல்வதை ஃபர்ஸ்ட் காது கொடுத்து கேளுங்க.. அனு இப்ப தனியா இருக்கா. அவளை அந்த நிலைமையில் என்னால் அங்க விட முடியாது. நீங்க ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க.. ஒரு ஆம்புலன்ஸ் ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்ணி குடுங்க. அவளை எங்க அம்மா கிட்ட கொண்டு போய் ஒப்படைக்க போறேன்” என்றது பெரும் ஆசுவாசம் தாரதிக்கு.
‘அப்போது உண்மை தெரிந்தால்…’ என்று நினைக்கவே தாரதிக்கு பக்கென்று ஆனது. “ஐயோ உங்க அம்மா கிட்ட விட போறீங்களா? அப்போ அவங்களுக்கு உண்மை எல்லாம் தெரிஞ்சுட்டா??” என்று இவள் பயத்தோடு கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் தெரியாது! என் பிரண்டோட வைஃப்னு சொல்லி இருக்கேன். நீங்க இந்த ஹெல்ப் மட்டும் பண்ணுங்க” என்றதும் “ஓகே.. நான் எப்படியும் அரேஞ்ச் பண்ணிடுறேன்” என்றவள், ஒரு ஆம்புலன்ஸையும் ஒரு செவிலியரையும் அனுப்பி வைக்க அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஒரு வழியாக துருவின் வீட்டு வாசலில் நின்று இருந்தாள் அனுப்ரியா.
முதலில் அவளும் ஒத்துக்கொள்ளவில்லை தான். ஆனால் வேற வழி இல்லையே தனியாக இருக்க வேண்டும். கூட இருப்பவருக்கும் அவர் குடும்பத்தை பார்க்க வேண்டும். ஏதாவது ஆத்திர அவசரம் என்றால் என்ன செய்வது? என்று அவளும் பயந்து தான் துருவின் யோசனைப்படி ஆம்புலன்சில் சென்றாள்.
ஆனால் அந்த ஆம்புலன்ஸ் போய் சேருவதற்குள் அத்தனை தடைகள்! “என்ன தாரதி இவ்ளோ நேரமாகாது ஆம்புலன்ஸ் போகவில்லையா? என்ன ஆச்சு? உங்களால முடியலன்னா சொல்லுங்க.. நான் ஹெலிகாப்டர் அரேஞ்ச் பண்றேன்! ஆனா ப்ரெக்னன்ட் லேடீஸ் போக முடியுமா?” என்று அத்தனை போட்டு படுத்தி எடுத்தான் துருவ் தாரதியை.
“இந்த மாசத்துல எல்லாம் ரிஸ்க் எடுக்க வேணாம் துருவ். மழை நாள நிறைய ரோடு பிளாக் ஆகி இருக்கு.
என் ஸ்டாப்ஸ் நல்லபடியாக அழைச்சிட்டு வருவாங்க.. நீங்க கவலைப்படாதீங்க!” என்று அத்தனை பத்திரம் சொல்லி ஒரு வழியாக அனுவை துருவின் அம்மாவிடம் சேர்த்து விட்டாள்.
வாயிலில் நின்ற பெண்ணை பார்த்ததும் “அட நீயாமா?? நீதான் என் பையன் பிரண்டோட வைஃப்பா?” என்று அவர் கேட்டதும் இவளுக்கு திக் என்று ஆனது.
‘இப்படித்தான் சொல்லி வைத்திருக்கிறேன்’ என்று துருவ் சொல்லியிருந்தால் அல்லவா? அவன் இவளை பத்திரமாக அனுப்ப வேண்டும் என்று அவசரத்தில் இதைப் பற்றி எதையும் அவளிடம் சொல்லவே இல்லை.
‘இவர்கள் தான் அவரோட அம்மாவா? பாவம் இப்படிப்பட்ட நல்லவங்களுக்கு அப்படிப்பட்ட பையன். இல்ல இல்ல அவனும் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான்!” என்று நினைத்தவள், அறியவில்லை..
சாதாரணமாக திருமணமான கர்ப்பிணி பெண்ணின் மீது காட்டும் கரிசனத்திற்கும் அன்பிற்கும்.. திருமணம் இன்றி குழந்தை
யை வயிற்றில் வைத்து அதுவும் மகனின் குழந்தையை வயிற்றில் வைத்திருக்கும் பெண்ணிற்கு அதே அன்பை காட்டுவாரா என்பது சந்தேகமே!!
🤣🤣🤣🤣இது தான் துரு இடியப்பா சிக்கல்😂😂😂😂😂
தாரதி be like சொந்த செலவில் சூனியம் வெச்சிக்கிட்டேன் 🤣🤣🤣🤣🤣
Wait panna la time illa adutha epi sekkirama Venum amam solliputten 😉