அசுரன் 43

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 43

 

காலை கதிரவனின் கதிர்கள் ஜன்னல் வழியே நுழைய.. ஆருஷியின் ஈர கூந்தலில் இருந்து வடிந்த நீர் துளிகள் அவளின் முதுகில் ஏகாந்தமாக வழிந்தோடிக் கொண்டிருந்தன.. 

 

“லூசு.. பாப்பா.. நீ என்ன பேசற.. ??”

லேசான மனத் தடுமாற்றத்தில் இராவண் எழுந்து உட்கார்ந்து விட்டான். அவனுக்கு ஒரு மாதிரி படபடக்க தொடங்கி விட்டது.

 

”ஏன்.. நான் கேட்டதுல என்ன தப்பு ??” என கேட்டவாறு.. அவளும் படுக்கையின் ஓரமாக மெதுவாக உட்கார்ந்தாள்.

 

கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டாள். கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவனையே குறுகுறுவென பார்த்தாள்.

 

காலை கதிரின் மெல்லிய ஒளியில் அழகாக தெரிந்த.. அவளது முகமும்.. கெண்டைக் கால் தெரியும்படி அவள் உட்கார்ந்திருந்த தோற்றமும்.. அவனுள் பெரும் சலன அலையை எழுப்பியது.

அவன் என்ன சொல்வதென புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான். ஆனால் ஏதாவது சொல்ல வேண்டுமே.. இல்லையென்றால் இந்த இராட்சஸி விட மாட்டாளே.. காதல் இராட்ஷஸி..!

”ஏன் மாறா.. என்னை உனக்கு பிடிக்கலியா? அலுத்துப் போய்டேனா? ஒரு வேளை நான் செஞ்சதுக்கு என்னை பழி வாங்குறியா?” என்றுமில்லாமல் இன்று முதன் முறையாக அவளின் மன வலியைப் பேசினாள்.

”ச்ச.. லூசு பாப்பா..அப்படி எல்லாம் இல்ல.. உன்ன…  எப்படி டி.. அதுவும் இந்த நிலைமையில?

”நிஜமா என்னை புடிச்சிருக்கு தான..??”

”ம்ம்ம்.. இதுல உனக்கு சந்தேகம் இருக்கா என்ன?” என்று அவன் அவள் நெற்றி முட்ட.. சற்றே அழுத்தத்துடன் தான்..!

”அப்போ.. நிரூபி.. கம்.. கம் !!” என்று மோகனமாய் சிரித்தவளை கண்டவன், அந்த செவ்விதழை சிறையெடுக்க அதி ஆவல் பொங்கியது.

”எ.. எங்க.. ??” என்று தடுமாறியப்படி கேட்டான் இராவண்.

”என் கிட்ட தான்..! என்னை கிஸ் பண்ணிக்கோ.. !! இல்ல நான் அங்க வரவா ??” அவள் லேசாய் அசைய…

”இல்ல.. இல்ல.. வேணாம் வேணாம்.. நீ உக்காரு.. !! நானே வரேன்.. !!” என்று விட்டு கொஞ்சம் தயக்கத்துடன் கட்டிலில் இருந்தே மண்டியிட்டு அவளை நோக்கி நகர்ந்தான்.

அவனின் தயக்கத்தை பார்த்து.. சிரித்துக் கொண்டே 

”ஆமா.. நீ என்ன லவ் பண்ணற தானே?” 

”என் உயிரை விட டி பாப்பா..!” என்றான் உணர்ந்து..!

“அப்புறம் என்ன ப்ராப்ளம் உனக்கு? நான் ஒரு பொண்ணு.. நானே வெட்கத்த விட்டு என்னை கிஸ் பண்ண வானு கூப்பிடறேன்..! நீ என்னமோ புலி புடிக்க போறவன் மாதிரி இவ்ளோ பயப்படுற?” 

“அது.. நீ கேரிங்கா இருக்கல.. அதான் லேசா பயம் டி பாப்பா” என்றான் உதட்டை கடித்து..!

“இவ்வளோ நாளா நீ என்னை இழுத்து வச்சு கிஸ் பண்ணும்போது தெரியலையா?” என்றாள் அவனை முறைத்து..

“அது நான் கொடுக்கும் போது நீ கொஞ்சம் வீம்பு பண்ணுவியா? அதனால உன்னை கிஸ் பண்றதுல மட்டும் தான் எண்ணம் இருக்கும். அதுக்கு மேல.. ம்ஹூம்.. ஆனா.. இப்போ?” என்றவன் முகத்தைத் திருப்பி சிகையை கோதிக் கொள்ள..

“ஹேய்.. மாறா.. வெட்கப்படுறியா?” என்று அவள் ஆச்சரியமும் சிரிப்பும் கலந்து கேட்க..

“உனக்கு ஓவர் கொழுப்பு ஆயிருச்சு என்னையே கலாய்க்கிற இல்ல..” என்றவன் அவள் அருகில் அமர.. அவளது தோளில் சாய்ந்துக் கொண்டவள்,

“என்ன பயம்? என் மேல பாய்ஞ்சிடுவேன்னா?” என்று அவள் அவனை பார்த்து புருவம் உயர்த்த…

“அப்படி இல்ல.. ஆனாலும் அப்படி தான்..! வர வர நீ ரொம்ப வாயடிக்கிற.. ??”

மெதுவாக அவளை வளைத்தான். அவனின் ஒரு கையை அவள் தோளில் போட.. அவள் என் அடுத்த கையை பிடித்து.. அவனின் விரல்களுடன் அவளது வெண்டை விரல்களைப் பிண்ணி கோர்த்துக் கொண்டாள்.

”ரொம்ப வாயடிக்கறனா நானு??” தலையை உயர்த்தி அவனை பார்த்து கேட்டாள்.

”ரொம்ப இல்ல.. ரொம்ப ரொம்ப.. அதுவும் நாம தனியா வந்ததிலிருந்து உன் வாய் ஓவர் ஃபலோ தான்” என்று அவளது கையில் மெல்லியதாக முத்தமிட்டான்.

”அப்போ… அந்த வாய நீ பேச விடாம அடைச்சிட்டா என்ன மிஸ்டர் மாறா?” என்றவள் அவனது கையை தன் கையால்  அழுத்தினாள்.

அவள் அவனின் விரல்களை பிண்ணிய அடுத்த நொடியே.. அவினின் இதயம் தாறு மாறாக எகிறத் தொடங்கி விட்டது. இப்போது அவளது மென்மேயும் அவன் நெஞ்சில் பட.. அவன் உடம்பில் ஓடிய நடுக்கம்.. கைகள் வரை பரவத் தொடங்கியது. அவள் விரல்களை நெறித்தும்.. மறு கையால் அவள் தோளை அழுத்திப் பிடித்தும் அவனின் நடுக்கத்தை மறைத்துக் கொண்டான்.

”ஹே மாறா.. ஏன் இவ்வளோ டென்ஷன்? ஜஸ்ட் ரிலாக்ஸ்..” என்றவளோ அவனின் உதட்டுக்கு பக்கத்தில் அவள் உதட்டை கொண்டு வந்தாள். 

அவளது பிங்க் கலர் நாக்கை வெளியே நீட்டி பருவ ரசம் ஊறித் ததும்பிக் கொண்டிருந்த.. அவளது வடிவான இதழ்களை தடவி ஈரம் செய்தாள்.! 

அவளது இளம் சூடான மூச்சுக் காற்று அவனின் முகத்தில் மோத.. அவனுக்கோ உள்ளுக்குள் அனல் அடித்தது.

”பாப்பா.. !” குரல் தடுமாற.. மெதுவாக அழைத்தவன், “ வேணாம்.. டெம்ட் பண்ணாதே..! அப்புறம் சேதாரம் ஜாஸ்தியாகும் டி” என்றான் கரகரப்பான குரலில்..

” ம்ம்..??” அவள் கண்களில் வழிந்த மோகத்தில்… அவனுள் மீண்டும் ஏதோ தடம் புரண்டது..!

”பாப்பா??”

“ம்ம்ம்??

“பயமா இருக்குடா பாப்பா”

”ச்சீ.. ஆள பாரு.. !! நானே மடில வந்து சரிஞ்சு கெடக்கேன்.. மடக்கி போட்டு மாஞ்சு மாஞ்சு கிஸ் பண்ணுவியா? அத விட்டுட்டு.. என்னமோ இப்ப தான் டீன்ஏஜ் பையன் ஃபர்ஸ்ட் டைம் கிஸ் பண்றது போல நாணுற.. பயப்படுற..?? இப்ப நீ கிஸ் பண்ணுறியா.. இல்ல நான் கிஸ் பண்ணட்டுமா.. ??” அவனுக்கு மோகம்  தலைக்கேறி விட்டது என்பது தெளிவாக புரிந்தது.

“இங்க பாரு.. நான் கண்ட்ரோல் இருக்கேன். என்னை சீண்டாத டி.. நாம வேற தனியா இருக்கோம். ஒத்த ஒத்த கிஸ்.. என்னை உன்னுள் தடம் புரள வைச்சிடும். நீ டிவின் பேபிய கேரி பண்ற.. ஆல்ரெடி அதுவே உனக்கு கஷ்டம்.. நானும் உனக்கு கஷ்டம் கொடுக்க கூடாது” என்று பேசியவனை கண்டதும் அவளுள் இன்னும் காதல் பொங்கியது..!

“ஆனாலும்.. வர வர ரொம்ப நல்லவனா ஆயிட்டடா.. கஷ்டம் எல்லாம் இல்லை எனக்கு இஷ்டம் தான்..! அப்போ நீ கண்ட்ரோலா இரு.. நான் எனக்கு தேவையானதை எடுத்துக்கிறேன்” எனறு அவனை நெருங்க..

“அட..! இராவண்னா.. என்னடா உனக்கு வந்த சோதனை?? 

இதற்கு மேலும்.. நான் தயங்கிக் கொண்டிருந்தால்.. அப்பறம் அவள் என் ஆண்மையையே சந்தேகப் பட்டு விடுவாள்” என்று நினைத்தவன் கைகளில் அவளை இறுக்கி தன் நடுக்கத்தை அடக்கினேன். 

அவள் உதட்டில் என் உதட்டை பச் சென வைத்து அழுத்தினான்..!!

அவள் கீழுதட்டை அவன் உறிஞ்ச..

“ம்ம்ம்.. !!” என்கிற சிறு முக்கலுடன்.. அவன் நெஞ்சில் கை வைத்து அழுத்தினாள்..!!

அவளின் முழு அதரங்களைமும் தன் அதரங்களுக்கு வைத்து சுவைக்கத் தொடங்கினான். 

அமிழ்தினும் இனிய.. இன்பச் சுவையை அவள் இதழ் கொடுக்க.. கண்களை மூடிக்கொண்டு அனுபவித்து அவள் உதட்டை ருசித்தான். 

தங்களை மறந்த நிலையில் போக உலகத்திற்குள் சஞ்சரித்துக் கொண்

டிருந்தன இவ்விரு காதல் கிளிகள்..!!

 

வருவான் அசுரன்..!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top