அத்தியாயம் 2
படுக்கையில் படுத்திருந்தவனை, “என் அழகு மாமாஆஆஆ..” என கொஞ்சியபடி, தான் கொண்டு வந்திருந்த பையினை தேட.. அதுவோ ஹாலினுள் இருந்தது..
“போச்சிடா?.. பையை மறந்துட்டோமே.. சரி விடு நம்ம வீடு தானே..” என நினைத்துக் கொண்டே அறையை சுற்றி நோட்டமிட்டவளின் கண்களில் பட்டது, நேற்றிரவு தேவன் கழற்றிப் போட்ட சட்டை..
அதனருகே சென்றவள், அவனின் சட்டையை அணிந்துக் கொண்டாள்.. கருப்பு நிற சட்டை வெள்ளை நிற மேனியாளுக்கு அவ்வளவு பாந்தமாக பொருந்தியிருந்தது..
அவனையே அள்ளி அணைத்தாற் போன்ற உணர்வு.. இதழ்க்கடையில் சிறு வெட்கப்புன்னகை..
“என் மாமாஆஆஆ.. எனக்கு மட்டுமே சொந்தமான மாமாஆஆ..” என சிறு நாணத்துடன், வேகமாக வெளியே வந்தவள் நேராக சென்றது என்னவோ கிச்சனிற்கு தான்..
அங்கு ஏதாவது இருக்கிறதா?. என தேடினாள்… கெலாக்ஸ் மட்டும் தான் இருந்தது..
அச்சோ.. பால் வாங்கலையே?.. காபி குடிக்கணுமே.. இல்லன்னா தலைவலிக்குமே என்ன பண்ணலாம்?.. இப்படியே வெளியே போக முடியாது.. என புலம்பிக் கொண்டே கிச்சனை நோட்டமிட்டாள்..
அனைத்துமே நூடுல்ஸ், பாஸ்தா செய்வதற்கான எளிய வகை தான் இருந்தது..
“இந்த மாமாஆஆ.. காய் எல்லாம் வாங்கி வைக்காதா?..” என புலம்பிக் கொண்டே கிச்சனை நன்றாக சுத்திப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவளை இடையோடு வளைத்துப் பிடித்தது வல்லிய கரம் ஒன்று..
“அம்மாஆஆஆ..” என அலற நினைத்தவளின், கழுத்தோடு உரசியது அவளின் கணவனின் அழகிய முகம்.. அவ்வளவு தான் சத்தம் அவளின் தொண்டைக்குழிக்குள் அடங்கிப் போனது..
“என்ன பண்ற?..” என்றான் சற்று கரகரப்பான குரலில்..
அவன் மோகத்தை தாண்டிய தேடல் என்னவென்று அவளுக்கு மட்டுமே புரிந்தது..
நேற்றிரவெல்லாம் அவனின் தேடலில் சுகமாய் கரைந்தவள் தானே அவள்..
“மாமாஆஆ..” என்றாள் கெஞ்சும் குரலில்..
“ம்ம்..” என்றான் மெளனமாகவே,
அவள் இடையோடு கவிபாடிய கரங்களோ, அவள் அணிந்திருந்த சட்டை பொத்தான்களை அவிழ்த்துக் கொண்டிருந்தது..
“மாமாஆஆ.. என்ன பண்ற?..” என்றாள் கிறக்கமாக,
“எனக்கு சொந்தமானதை நான் எடுத்துக்கப் போறேன்..” என்றவனை வெட்கம் கலந்த நாணத்துடன் பார்த்தவள்,
“சட்டையை சொல்லுறீயா மாமாஆஅ..” என்றவளை பார்த்து, ‘இல்லை’ எனும் விதமாய் தலையசைத்தவள், “உன்னைத்தான்..” என கண்களாலேயே அவளைக் கண் காட்டிட, பெண்ணவளின் வதனமோ வெட்கத்தில் சிவந்துப் போனது..
“மாமாஆஆ.. இது பகல்..” என்றாள் வேண்டுமென்றே, அவனின் அருகாமை கசக்கவா செய்யும்.. இன்னும் வேண்டுமென்று அல்லவா அவள் உள் மனம் போராடியது..
“எனக்கு பகல் தான் ரொம்பப் புடிக்கும்..” என்றவன், அதுவரை அவளின் உடலை மறைத்து, தழுவி ஆடவனை இம்சைக்குள்ளாக்கிய ஆடைக்கு விடுதலையளித்திருந்தான்..
அட்சய பாத்திரமாய் அள்ள அள்ள குறையாத, காதலோடு சேர்ந்து தாபத்தையும் அவனுக்கு சேர்த்தேக் கொடுத்தாள் பெண்ணவள்..
அவர்கள் உலகத்தில் பகல் மறைந்தது, இரவு மட்டுமே சூழ்ந்தது..
சிறு சிறு முத்தங்கள் போதுமா, அச்சாரமிட்டவனுக்கு..
இன்னும் அழுத்தமான முத்தங்கள் வேண்டுமென்று பெண்ணவளின் தேகம் தவிக்க.. அவனின் முதுகை அழுந்துப் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்..
அவளை தன் இரு கைகளில் ஏந்திக் கொண்டே தன்னறைக்குச் சென்று விட்டான்..
மீண்டும் ஒரு முத்தப்போர்.. கட்டிலில் அரங்கேறியது.
ஆடவனின் ஆதிக்கத்தில் பெண்ணவள் தன்னிலை மறக்க ஆரம்பித்தாள்..
கூடலின் நிறைவில் அவளை விட்டுப் பிரிந்து படுத்தவன், பக்கவாட்டாக திரும்பிப் படுத்தான்..
கீர்த்தனாவோ மிகவும் களைத்து விட்டாள்..
“மாமாஆஆ..” என்றாள் மேனி உருக, காதல் பெருக..
“ம்ம்.. சொல்லு..”
“பசிக்குது..” என்றதுமே அவளை விட்டு விலகி இருந்தவனின் முகமும் வாடிப் போனது..
“ரொம்ப பசிக்குதா?..” என்றவனின் மார்பில் தலை சாய்த்தவள்,
“ஆமா..” என்றவளின் கன்னத்தில் இச் என்று முத்தம் பதித்தவன், அவளை விட்டு லேசாக விலகினான்..
“சிக்கீரம் ரெடியாகி வா.. காலையில டிபன் வெளியே பார்த்துக்கலாம்..” என்றவனை விழி விரித்துப் பார்த்தாள்..
“அப்போ, இன்னைக்கு உங்களுக்கு வேலை இல்லையா மாமா?..”
“இன்னைக்கு லீவு தான்.. நாளைக்குத் தான் வேலைக்குப் போகணும்..” என்றான்..
“அப்போ என்னை எங்கேயாவது அழைச்சிட்டுப் போ மாமாஆஅ..” என்றவள், வேகமாக எழுந்து குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு வெளியே வந்தாள்..
அவளின் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டு குளியலறைக்குச் சென்றான்..
அவன் குளியலறை விட்டு வெளியே வந்த நேரம், கீர்த்தனா அரக்கு நிற சுடிதாரில் நின்றிருந்தாள்..
சிறு சிறு வெள்ளை பூக்களுடன் வேலைப்பாடு கொண்ட பேன்ட் மற்றும் துப்பட்டா அணிந்திருந்தாள்..
லூஸ் ஹேர் தான் விட்டிருந்தாள்.. ஆனால் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தாள்..
பெரிதாக எந்த வித அலங்காரமும் இல்லை.. ஆனால் பார்ப்பதற்கு மற்றவர்களை கவரும் வண்ணம் இருந்தாள்..
தேவன் கபோர்டின் பக்கம் செல்ல,
“டிரஸ் உங்களுக்கு எடுத்து வச்சிருக்கேன் மாமா.. அதையே போட்டுக்கோங்க..” என்றாள்..
“ம்ம்..” என்றவன், தயங்காமல் அவள் கொடுத்த ஆடையை மாற்றிக் கொண்டு புறப்பட்டனர் இருவரும் பைக்கில்..
முதலில் சென்றது என்னவோ அருகிலிருந்த கிருஷ்ணர் கோவிலுக்குத் தான்..
இருவரும் ஒன்றாக வணங்கி விட்டு வெளியே வந்தனர்..
அடுத்ததாக சென்றது ஹோட்டலுக்குத் தான்.. இருவரும் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தனர்..
தியேட்டருக்கு அழைத்துச் சென்றான்.. தமிழ்ப்படம் என்பதால் மொழி பிரச்சினை இல்லாமல் போனது..
ரொமான்டிக் படம் என்பதால், ரசித்துப் பார்த்தாள் கீர்த்தனா..
வரும் வழியெங்கும் பேசிக் கொண்டே வந்தாள்.. கணவனின் பைக்கில் அமர்ந்து, அவன் முதுகோடு உரசிக் கொண்டே, காதோரம் கதை பேசி வருவது அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தது..
“மாமாஆஆஆ.. அது என்ன?.. இது என்ன?.. இந்த ஊர்ல ஏன் இப்படி இருக்கு?.. நம்ம ஊர்ல ஏன் இப்படி இல்லை.. ஆயிரம் தான் இருந்தாலும், நம்ம ஊர் போல வருமா?..” என ஒவ்வொரு கடையையும் காண்பித்து ஆயிரம் கதை கேட்டு வந்தாள் கீர்த்தனா..
அதில் சிலதைக் குறைப்பட்டும் கொண்டாள்..
மற்றவனாக இருந்திருந்தால், ‘கொஞ்ச நேரம் வாயை மூடேன்டி..” என அவளை சத்தம் போட்டிருப்பார்கள்.. ஆனால் தேவன்.. அமைதியாக நின்றுக் கேட்டுக் கொண்டிருந்தான்..
அவள் தானே பேசுகிறாள்.. அவனுக்கா வாய் வலிக்கப் போகிறது என்ற எண்ணமாக இருக்கலாம்?
“மாமாஆஆ.. எனக்கு பானிபூரி வாங்கிக் கொடுக்குறீயா?..” என்றதும் சற்று உயர்தர கடையைப் பார்த்து நிறுத்தினான்..
அவனுக்கு சுத்தம் என்பது மஸ்ட்.. அதில் எந்த காம்பரமைஸூம் செய்துக் கொள்ள மாட்டான்..
வேகமாக கடைக்குள் சென்றவள், காணாததை கண்டது போல் பானிபூரியை உள்ளுக்குள் தள்ளிக் கொண்டேயிருந்தாள்..
அவள் இப்படிச் சாப்பிடுவதை மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்..
சாப்பிட்டு முடித்து இருவரும் வெளியே வர, தொப்பென்று தேவனின் காலடியில் ஒருவன் வந்து விழுந்தான்..
அவன் விழுந்ததுமே தேவன் ஓரடி பின்னால் வைக்க, பின்னால் நின்றுக் கொண்டிருந்த கீர்த்தனாவின் மேல் இடித்து விட்டான்..
“அவுச்.. மாமா..” என்றவள், அப்பொழுது தான் முன்னே பார்த்தாள்.. யாரோ நான்கைந்து பேர், ஒருவனைப் போட்டு அடி வெளுத்துக் கொண்டிருந்தனர்..
“அச்சோ மாமாஆஆ.. யாரையோ அடிக்கிறாங்க.. வாங்க காப்பாத்துவோம்..” என்றவள், வேகமாக அங்கே செல்லப் பார்க்க.. இறுக்கமாக அவள் கையைப் பிடித்திருந்தான் தேவன்..
தன் கையைப் பிடித்திருந்த தேவனை புரியாமல் பார்த்தாள் கீர்த்தனா..
“என்ன மாமா, என் கையைப் பிடிக்கிறீங்க?.. அவனை அடிச்சேக் கொன்னுடப் போறாங்க.. ப்ளீஸ் மாமா.. அவரைக் காப்பாத்துங்க.. அச்சோ அடிக்கிறாங்க..” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கருப்பு நிற சட்டை, கருப்பு நிற பேன்ட் அணிந்த ஒருவன்.. தன் கைகளில் இருந்த கத்தியை எதிரில் இருந்தவனின் வயிற்றிலேயே இறக்கியிருந்தான்..
பார்த்தவர்களில் பலர் பயத்தில் அலறி விட்டனர்.. கீர்த்தனாவோ பயத்தில் தேவனின் நெஞ்சோடு ஒன்றிக் கொண்டாள்..
அவர்கள் அவனை நடுரோட்டில் போட்டு விட்டு, வெளியேற முயன்றிட. அவர்கள் கார் அந்த இடத்தை விட்டு செல்லவுமே, ரோட்டில் குத்துப்பட்டு கிடந்தவனை நோக்கி ஓடினாள் கீர்த்தனா..
கண்களில் கண்ணீர் அவளையும் அறியாமல் வந்தது..
“அண்ணா.. அண்ணா..” என அவனின் கன்னத்தை தட்டினாள்.. அவ்வளவு வலியிலும் கண்களைத் திறந்தவனின் கண்ணில் பட்டது என்னவோ தேவன்..
கண்கள் அதிர, அவனையே விழியகலாமல் பார்த்தவனின் உயிர் அந்நொடியே போய் விட்டது..
தன் கைகளில் மரணித்து விழுந்தவனைக் கண்டு ஜீவனற்றுப் போனாள் கீர்த்தனா..
“அண்ணாஆஆ..” என்றழைத்தபடி, அவனின் மூக்கில் கை வைத்துப் பார்க்க, அன்றோ உயிர் எந்நொடியோ போய் விட்டதே..
ஏன் அழுகிறாள்?.. என்று அவளுக்கேத் தெரியவில்லை.. ஆனால் முதன் முறையாக வாழ்க்கையில் கொலையைப் பார்த்தவளுக்கு கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது..
ஏனோ ஒரு மனிதனின் உயிர் தன் கண் முன்னால் போனதை தாங்கிக் கொள்ள முடியவில்லை பூ மனம் கொண்ட பெண் அவளால்..
“கீர்த்தனா, வா நாம போகலாம்..” என்றபடி அவளை பைக்கில் அமர வைத்து, வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான் தேவன்..
வீட்டிற்குள் நுழைந்த பின்னும், கீர்த்தனாவிற்கு கண் முன்னே கண்ட மரணமே வந்து நின்றது..
சற்று பதட்டமான நிலையுடனே சுற்றி வந்தாள்.. காலையில் இருந்த மயக்கம், கிறக்கம் எதுவும் இப்பொழுதுஅவளிடம் இல்லை..
“கீர்த்தனா..” என சத்தமாக அழைத்தான் தேவன்..
அவன் அழைத்ததுகாதில் விழுந்தால் தானே..
அவளை தன்னோடு இழுத்துக் கட்டிக் கொண்டவன், “என்னாச்சி?..” என்றான், அவளின் கண்களோடு கண் பார்த்தபடி,
“என்ன மாமா?.. ரொம்ப சாதாரணமா கேட்குறீங்க?.. கண் முன்னாடியே ஒருத்தனைக் குத்திக் கொன்னுப் போட்டுப் போயிருக்காங்க.. யாருமே ஒத்த வார்த்தை என்ன ஏதுன்னு கேட்கலை.. எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்துட்டுப் போறாங்க..” என்றாள் சற்று ஆதங்கமாக,
“இங்கே எல்லாமே அப்படித்தான் கீர்த்தனா, யாருக்கும் யாரையும் திரும்பிப் பார்க்க நேரம் கிடையாது..” என்றவனை சற்று அதிர்ந்து தான் பார்த்தாள் கீர்த்தனா..
“ஏன்.. மாமா நாளைக்கு, உனக்கோ.. எனக்கோ.. ஏதாவது ஆபத்துன்னா, யாருமே வரமாட்டாங்களா மாமாஆஆ..” என கேட்கும் போதே அவளின் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது..
“உண்மையை சொல்லணும்னா, கேட்க மாட்டாங்க.. அது தான் நிஜம்..” என்றவன், அவளை விட்டுப் பிரிந்து படுக்கையில் கிடந்தான்..
அவளுக்குத் தான் திக்கென இருந்தது..
“கேட்க மாட்டார்களா?.. என்ன மாதிரி உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்?..” என வேகமாக தேவனை தேடினாள்.. அவனோ படுக்கையில் படுத்திருந்தவாறே ஆங்கில நாவல் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தான்..
“மாமாஆஆ..” என்றவள், வேகமாக அவனுக்கும், புக்கிற்குமான இடைவெளியில் நுழைந்துக் கொண்டாள்..
மிக மிக அருகாமையில் அவளின் முகம்..
“மாமாஆஅ..” என புலம்ப வந்தவளின் இதழோ, அவன் இதழ்களின் வெம்மையை அறிந்துக் கொண்டிருந்தது..
சற்று அழுத்தமான இதழ் முத்தம் தான் எப்பொழுதும் அவனிடமிருந்து கிடைக்கும்..
அதையும் ரசித்தது பெண் மனம்.. தவிப்பாக போய் பார்த்தாள்..
அவளின் கழுத்தடியில் முகம் புதைத்தவனோ, அவளின் வாசத்தை உணர்ந்தான்..
முத்தங்கள் சத்தமின்றி வாங்கப்பட்டது.. கொடுக்கப்பட்டது..
அவளின் மூளையில் ஓடும் நினைவலைகளை முத்தத்தாலேயே மறக்க செய்தான்..
கொஞ்சல்கள், கெஞ்சல்கள், மிஞ்சல்கள் என அனைத்தும் அரங்கேறியது அந்த அறையில்..
தன் ஆளுமையில் கீழ் அவளைக் கொண்டு வந்திருந்தான் அவளை..
