அசுரன் 28

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 28

 

 

அவள் சாப்பாட்டில் தீவிரமாக அவளையே கைகட்டி பார்த்து நின்றிருந்தான் முறைப்பாக ராவண். 

 

“நீ சாப்பிடறது எல்லாம் ஓகே? ஆனா இவ்வளவுத்தையும் ஒரே நேரத்துல சாப்பிட்டேனா.. உனக்கு அசிடிட்டி தான் வரும் டி.. நான் சொல்றதை கேளுடி” என்றான்.

 

அவளோ அதையெல்லாம் கண்டுக்காமல், “அசிடிட்டியாவது மண்ணவாது.. அதைவிட நான் பெரிய அட்ராசிட்டி” என்றபடி அவளுக்கு பிடித்த பூரியை அந்த பருப்பில் கொஞ்சம் தொட்டு.. அருகே இருக்கும் தயிரில் சிறிது தொட்டு.. பின் தன்னை வாய்க்குள் இட்டு..

 

“ம்ம்ம்.. வாவ்… இதுவல்லவோ சொர்க்கம்..!” என்று‌ சப்புகொட்டிச் சாப்பிட, அனைவரும் சிரித்தனர் அவளை பார்த்து..

 

ஆனால் ராவண்னோ அவளை முறைத்து பின் அனைவரையும் ஒரு முறை முறைத்தான்.

 

“அவ அப்படித்தான் ப்ரோ.. சாப்பாட்டுக்குனே பொறந்தவ.. நீங்க வாங்க சாப்பிடலாம்” என்று சுக்ரேஷ் அழைக்க..

 

“இல்ல சுக்ரேஷ் நீங்க சாப்பிடுங்க” என்றவன் அவள் அருகில் இருந்த இருக்கையிலேயே அமர்ந்துக் கொண்டான்.

 

வள்ளியம்மை ஆசையாக பேரனுக்கு ஒரு தட்டை எடுத்து வந்து பரிமாற வர கைநீட்டி அதனை அவன் தடுத்தான். 

 

“ஏம்பா நான் பரிமாற கூடாதா?” என்று அவர் ஆசையாக அன்பொழுக கேட்க.. ஆனால் அவனுக்கோ அதையெல்லாம் கேட்க ஏன் பார்க்கவே விருப்பமில்லை. 

 

ஏதோ சென்டிமென்ட் டிராமா பார்ப்பது போலவே உணர்ந்தவன்

“எனக்கு வேணுங்கறத நான் எடுத்து வச்சு சாப்பிடுவேன்? அதுதான்  இத்தனை வருஷம் பழக்கம். நீங்க எல்லாம் போய் சாப்பிடுங்க” என்றவன் இப்பொழுது ஆருஷியை தான் பார்த்தவாறு திரும்பி அமர்ந்து கொண்டான்.

 

ஆனாலும் வள்ளியம்மை நகராமல் பேரனுக்கு அருகிலேயே நின்றிருந்தார். பரிமாற தானே கூடாது. ஆனால் பேரன் சாப்பிடுவதை அருகில் நின்று பார்த்து தேவையானதை எல்லாம் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஏக்கம் அவருக்கு.

 

“அத்த வாங்க.. நீங்க பக்கத்துல நின்னு அவரு சாப்பிடாம கோபத்துல எழுந்து போயிட போறாரு..” என்றார் ரூபிணி.

 

“ஐயோ வேணா பேரன் சாப்பிட்டாலே போதும்.!” என்று அவரும் அமர்ந்து கொள்ள.. அனைவரும் தங்களுக்கு தாங்களே பரிமாறிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் காலை உணவை..!

 

முதலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆருஷிக்கு தன்னை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ராவண்னை கண்டதும் திருப்பி அவனைப் பார்த்து “சாப்பிடுற பிள்ளையை இப்படி உத்து உத்து பாக்காத மேன். அப்புறம் சாப்பிட்ட சாப்பாடு செரிக்காது.. வயிறு வலிக்கும்..!” என்று அவள் கண்களை உருட்டி மூக்கை சுருக்கி கூற..

 

“நான் பாக்கலைனாலுமே உனக்கு வயிறு வலிக்கு தான் போகுது. சாப்பாடு செரிக்காமல் போக தான் போகுது.. பிடிச்ச சாப்பாடுனாலும் அளவோடு சாப்பிடு டி.. பிடிச்சதுன்னா கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு. இப்படி ஒரேடியா வச்சு சாப்பிடாதடி..!” என்று அவன் அவளுக்காக பேச, 

 

அவளோ “சரிதான் போயா.. என்னை கட்டுப்படுத்த நீ யார்?” என்பதைப் போல பார்த்து வைத்தவள் சாப்பிட மூன்றாவது பூரிக்கு மேல் உள்ளே செல்லவில்லை அவளுக்கு. 

 

இதில் ஏற்கனவே பணியாரம் எத்தனை உள்ளே சென்றது என்று கணக்கு வேற இல்லை. தட்டில் ஆசையாக வைத்தவற்றை பாவமாக பார்த்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க.. “நான் அப்பவே சொன்னேன் இல்லடி” என்று அவன் முறைக்க..

 

“எல்லாம் உன்னால தான் நீ இப்படி பார்த்து பார்த்து கண்ணு வச்சு தான் என்னால இதுக்கு மேல சாப்பிடவே முடியல” என்று அவள் மூக்கை உறிஞ்சினாள். 

 

“இப்போ எல்லாமே வேஸ்டா போயிருச்சு.. எனக்கு சாப்பாடு வேஸ்ட் பண்ணாலே பிடிக்காது” என்றவளின் பேச்சில் ஒரு நிமிடம் கூட யோசிக்காது அவள் தட்டை தன் புறம் நகர்த்தி அவள் மீதம் வைத்தவற்றையெல்லாம் சாப்பிட ஆரம்பித்தான் ராவண். 

 

“ஓ இவளை பத்தி தெரிஞ்சுக்கிட்டு தான் இவ்வளவு நேரம் என் பேரன் சாப்பிடாம உக்காந்திருந்தானா? இந்த சீம சிறுக்கி அங்க சீமைக்கு போய் இதே அட்டூழியம் தான் பண்ணி இருக்கா.. இப்போவது வாயும் வயிறா இருக்கா அப்போ சும்மா தானே இருந்தா? அப்பயும் என் பேரனை இந்த மாதிரி தான் இவ பாடா படுத்தி வச்சிருக்கா.. ஐயோ ஆண்டவா” என்று கணவனுக்கு பின்னே சாப்பிட்டு கணவன் சாப்பிட்ட எச்சிலையில் சாப்பிட்டு வளர்ந்த வள்ளியம்மைக்கு, ஆருஷி சாப்பிட்ட மிச்சத்தை ராவண் சாப்பிடுவதை ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. 

 

“ஐயா ராசா அது வீணா போனா போகட்டும்.. ஐயா நீ வேற சாப்பிடு” என்று அவர் எழுந்து வந்து வேற தட்டை எடுத்து வைக்க முயல.. அவர் கைப்பற்றி தடுத்தவன் “சாப்பாடு வேஸ்ட் பண்றது ரொம்ப தப்பு.. இதுக்காக எவ்வளவு  பேர் கஷ்டப்படுறாங்க தெரியுமா? உங்ககிட்ட இருக்குங்கறதுக்காக எல்லா நேரமும் இத்தனை விதமா ஆக்கி வேஸ்ட் பண்ணலாம்னு  சட்டம் கிடையாது” என்றவன் திரும்பி ஆருஷி பார்த்து,

 

“கர்ப்பம் தொடங்கிய முதல் 3 மாதங்களில் (First trimester)

ஹார்மோன் மாற்றம் காரணமாக வாந்தி, மன உளைச்சல், உணவு வாசனையே பிடிக்காம இதெல்லாம் இருக்கும். இதனால் சாப்பிடும் ஆவல் குறைந்துப் போகும்.. ஆனா அடுத்தடுத்து அது குறைந்து நிறைய சாப்பிட எண்ணம் வரும்.. 

 

குழந்தை வளர வளர, குறிப்பாக 5வது மாதத்திற்குப் பிறகு, கருப்பை பெரியதாகி வயிற்றை மேலே அழுத்தும். இதனால் வயிறு முன்போல் விரிவடைய சிரம்மப்படும்.. சிறிது சாப்பிட்டாலே  வயிறு நெறஞ்சிடும்.. கர்ப்ப ஹார்மோன்கள் செரிமானத்தை மெதுவாக்கும். அதாவது சாப்பிட்டவுடன் bloating, indigestion, acidity போன்றவை விரைவில் தோன்றும்…” என்றதும் இங்கிருந்தவர்கள் எல்லாம் அவனை ஆவென்று வாயைப் பிளந்து பார்த்தனர். 

 

“எவ்வளவு விவரமா பேசுறான் என் பேரன்.. அப்படி என்ன படிச்சிருக்கான்” என்று ரூபிணியிடம் வள்ளியம்மை குசுகுசுக்க.

 

“இருங்க அத்த.. எனக்குமே தெரியாது.. உங்க பேரன் கிட்ட கேட்டு சொல்றேன்” என்றவர் சுக்ரேஷிடம் 

 

“நம்ம ராவண் தம்பி என்ன படிச்சிருக்காரு? கர்ப்பம் காலத்த பத்தி இவாளழவோ வெவரமா பேசுறாரு” என்று அவரும் அவன் காதில் கிசுகிசுக்க.. 

 

சுக்ரேஷ் அன்னையை பார்த்து “அவர் டாக்டர்மா..! அதுவும் கைனகாலஜிஸ்ட் டாக்டர். நம்ம ஹாஸ்பிடல்ல தான் வேலை பார்க்கிறாரு. அதுவும் இல்லாம குழந்தை இல்லாதவங்களுக்காக ஆர்ட்டிஃபிஷியல் அதாவது செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்கவும் நிறைய படிப்பு படிச்சிட்டு வந்திருக்காரு. இந்தியாவில் மட்டும் இல்ல வெளிநாட்டில் கூட இவரோட படிப்புக்கும் இவருக்கும் மதிப்பு அதிகம்” என்று பெருமிதமாக கூறினான். 

 

அதை அப்படியே வள்ளியம்மையின் காதில் ஓதினார் ரூபிணி.

 

“ஓ என் பேரன் டாக்டரா..?? அப்படியே என் சிவாவை போல..” இப்பொழுது பெருமை பொங்க பார்த்தார் பேரனை வள்ளியம்மை.

 

ஆருஷி.. “இப்போ இந்த டீடைல்ஸ் எல்லாம் உன்கிட்ட நான் கேட்டனா? நீ டாக்டர்னு நொடிக்கு நூறு தடவை ப்ரூவ் பண்ண வேணாம்” என்று அவள் நொடித்துக் கொள்ள.. 

 

“நான் டாக்டராவே இல்லனாலும் இந்த டீடைல்ஸ் எல்லாம் கண்டிப்பா நான் தெரிஞ்சு வச்சிருப்பேன். ஏன்னா நீ மட்டும் பிரக்னென்ட் கிடையாது.. வீ ஆர் பிரெக்னன்ட்..!” என்று தான் ஆதர்ஷ காதலன் காண்பவன் என்று அவன் நிரூபிக்க..

 

மொத்த குடும்பமுமே அப்போது அவனை தான் ஏதோ பெருமாளை பார்ப்பது போலவே பரவசத்தோடு பார்த்தது. 

 

“போச்சு.. ஏற்கனவே இவன் தான் பேரனு இந்த ஆச்சி இரண்டு கண்களையும் பாசத்தையும் அன்பைதனயும் வச்சு ஃபயர் விட்டு கிட்டு இருக்காங்க.. இதுல இவன் மெத்த படிச்ச டாக்டர் கூடவே என் மேல ரொம்ப அன்பு அக்கறை காட்டுறான்னு தெரிஞ்சுச்சு.. அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சது..” என்றவள் தனக்குத்தானே பேசிக்கொண்டு அப்படியே தன் குடும்பத்தாரை சுற்றி பார்க்க.. 

 

அவர்கள் கண்களில் கண்ட பரவசத்தை பார்த்து நொந்து கொண்டவள், “ம்ஹூம்.. இனி என் பேச்சு இந்த வீட்ல எடுபடவே எடுபடாது..!” என்று இப்பொழுது கோபமாக ராவண்னை முறைத்தாள்.

 

“என்ன மாமாவ.. சைட் வச்சிட்டு இருக்க பாப்பா.. போய் ஹாஸ்பிடலுக்கு கிளம்பு.. போய் ரெடி ஆயிட்டு கீழே வா. என் கூட இன்னைக்கு நீ ஹாஸ்பிடல் வர நான் சொல்ற டயட்டை தான் இனிமே நீ பாலோ பண்ற” என்றதும் அவள் முறுக்கிக் கொள்ள..

 

“இப்படியே உன்னை தூக்கிட்டு போறதுல எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்ல.. ஆனா.. என் கை அங்க இங்கனு படும் பராவாயில்லையா?” என்று அவன் அவளுக்கு மட்டுமே கேட்குமாறு பேச..  

 

“ஆமா ஆரு.. சீக்கிரம் கிளம்பு” என்று ரூபிணியும் வள்ளியம்மையும் சேர்ந்து அவளை கிளப்பி விட,

 

அவனின் பேச்சில் எழுந்த கோபத்தை காட்ட கூடா முடியாத தன் நிலையை உணர்ந்து சிறுபிள்ளை போல காலை உதறிக் கொண்டு மாடி ஏறி சென்றாள் ஆருஷி.

 

இவனையே பார்த்த நின்றிருந்த வள்ளியம்மை பார்த்தவன் “அவ ரூம் மாடியில் இருக்க வேணாம். கீழே மாத்திடுங்க” என்றான்.

 

“நீங்க பாப்பா மாடி ஏறுறத பத்தி யோசிச்சு சொல்றீங்க நினைக்கிறேன் தம்பி.. நம்ம வீட்டுல லிஃப்டும் இருக்கு. ஆனா என்னமோ லிப்ட்ல போகாம படியில தான் ஏறி போகும் ஆரு” என்ற ரூபிணி கூற,

 

“அப்படினா ஓகே..!” என்றவன் அவனுக்கு தேவையானது மட்டும் எடுத்து வைத்து சாப்பிட்டான்.

 

அதற்குள் ஆருஷி கிளம்பி வந்திருக்க, அவளை உச்சாதி பாதம் பார்த்தவன் கண்களில் மின்னல் வெட்ட அதைப் புரிந்தவளோ உதடு கடித்து அவனை முறைத்தாள். 

 

“சுக்ரேஷ்..‌ நீங்க ஆருஷியோட பொறுப்பை அவளுக்கு என்னென்னு  சொல்லுங்க.. கூடவே பேம்ப்பர் பண்ணிட்டு நிக்காதிங்க” என்றதும் அவனும் ஒரு நமட்டு சிரிப்போடு  ஆருஷியை பார்த்து “ஓகே ப்ரோ” என்றான்.

 

வா என்று அவன் அழைத்துச் செல்ல.. காரில் செல்லும் போதெல்லாம் அவளுக்கு பலவித சிந்தனைகள் குழப்பங்கள் தான்

 

“எப்படி இந்த சமூகத்தை எதிர்கொள்ள போகிறோம்? யாராவது குழந்தை அப்பா யாருனு கேட்டா?  உன் புருஷன் பேரு என்னென்னு கேட்டா? கழுத்துல தாலி எங்கென்று கேட்டா?”

 

அன்று லிவிங் கில் அவனுடன் வாழும் போது இருந்த தைரியம் இளமை துணிவு எதுவும் இப்போது அவளிடம் இல்லை..!

 

ஊர் பேர் தெரியாத இடத்தில் செய்யும் தப்பு.. தன் சொந்த ஊரில் சொந்த பந்தங்கள் முன்னிலையில்.. நண்பர்கள் தெரிந்தவர்கள் அறிய செய்ய தயங்குகிறோம்..! மனம் பதைபதைக்கிறோம்.

 

ஆருஷியும் அந்த நிலையில் தான் இருந்தாள்.

 

அவளின் முகத்தை கொண்டு அகம் அறிந்த அரனோ.. அவளின் கையை அழுத்தி பிடித்தவன் பிடி. மருத்துவமனை நுழைந்ததும் விடவே இல்லை..!

 

“என்னடா அதிசயம்?? டாம்

அண்ட் ஜெர்ரி சேர்ந்து வர்றாங்க??” என்று மருத்துவமனையே வியந்து பார்த்தது அவர்களை..!

 

வருவான் அசுரன்..!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top