அத்தியாயம் 23
என்ன ஆரு.. அப்படியே நிக்கிற ஆச்சி கேக்குறாங்க தானே? மாப்பிள தம்பிக்கு ஃபோன போட்டு வர சொல்லு” என்று ரூபிணி உரிமையா கேட்க..
“எதே? மாப்ள தம்பியா? அப்ப முடிவே பண்ணிட்டாங்களா?” என்று அதிர்ந்து அருகில் இருந்த சுக்ரேஷை பார்த்தாள்.
அவனோ உதட்டைப் பிதுக்கி கையை மேலே காட்டி ‘இனிமே நம்ம கையில எதுவுமே இல்லை.. எல்லாம் கடந்து போச்சு.. இட்ஸ் ஆல் ஃபேட்.!’ என்று சைகை செய்தவன்,
“போடுமா.. போன போடு.. மாப்பிள்ளை தம்பிக்கு போன போடு..” என்று அவனுமே சற்று நக்கலாய் கூற..
“டேய்.. மாமா பையனு கூட பார்க்க மாட்டேன் மூஞ்சிலயே ரெண்டு குத்திடுவேன்.. அதுவும் இவ்வளவு நாள் நீ எனக்கு செஞ்ச உதவிக்காக உன் மேல கை வைக்காம இருக்கேன். நீயும் சேர்ந்து அவங்களோட ஆடுற.. கொன்னுடுவேன்” என்று அவள் அதட்டினாள்.
அதற்குள் மீண்டும் வள்ளியம்மை "என் பேரன் வந்துட்டானா? போன போட்டியா நீ? எங்க அவன்? ரூபி அவனுக்கு பிடிச்சதெல்லாம் செய்ய சொல்லு.. போ.. போ.. ஆமா அவனுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியாதே..!” என்று வருந்தினார்.
“இந்தா இருக்காளே.. உங்க பேத்தி அவகிட்டயே கேளுங்க அத்த” என்று ஆருஷியை கோர்த்துவிட்டு ரூபிணி தப்பித்து சமையலுக்குள் நுழைந்து கொண்டார்.
“மாட்டுனடி.. இவ்ளோ நேரம் எங்களிடம் வாய் அடிச்சியே.. இந்தா வந்துட்டாங்க ஆச்சி.. இப்போ உன் பேச்சு அவங்ககிட்ட காட்டு பாப்போம்..!” என்று நமட்டு சிரிப்போடு நல்ல பிள்ளையாய் ஆச்சியைப் பார்த்து,
“நீங்க ஏன் ஆச்சி அலையறீங்க? இப்படி உட்காருங்க..! இப்ப என்ன உங்களுக்கு உங்க பேரன பாக்கணும்? அதானே? உடனே வர சொல்லிடுவா உங்க பேத்தி.. அவ சொன்னா அவர் மறுபேச்சு பேச மாட்டாரு” என்று அவரை அமைதி படுத்தியவனின் கண்களிலோ ஆருஷியை மாட்டிவிட்ட பாவம்.
“ஆக.. மொத்தம் குடும்பமே சேர்ந்து அவனை தூக்கி தலையில் வைத்து ஆடுறீங்க? அவன் எனக்கு என்ன செஞ்சானு தெரிஞ்சா இப்படி எல்லாம் நீங்க ஆட மாட்டீங்க?” என்று அவள் ஹாலிலே நின்று கத்தினாள்.
“வயித்துல புள்ளைய வச்சுக்கிட்டு இப்படித்தான் கத்துவியா நீனு?” என்று அவள் கன்னத்தில் லேசாக குத்திய வள்ளியம்மை கண்டிக்க.. அவளோ ஆச்சியை முறைத்துக் கொண்டே நின்றிருந்தாள்.
“இங்க பாரு அவன் உனக்கு என்ன தப்பு பண்ணி இருந்தாலும்.. மன்னிக்கவே முடியாத தப்பு பண்ணி இருந்தாலும்.. அதற்கு மூல ஆதி காரணம் உங்க தாத்தா தான். அதனால அவனும் என் குடும்பமும் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க.. அதுக்கு ஏதோ ஒன்ன பழிவாங்கனும் ஏதாவது பேசி இருப்பான்.. அதெல்லாம் நீ மனசுல வச்சுக்காத..!” என்று பேரனுக்காக பரிந்து வந்து ஆச்சியை கண்டவளுக்கு அத்தனை துக்கம்.
“இத்தனை வருஷமா பேத்தி பேத்தினு என்ன கொண்டாடிட்டு இன்னைக்கு ஒரே நாள்ல உரிமை பெற்ற வாரிசு அவன் வந்ததும் அவன் செஞ்சதெல்லாம் நியாயம்.. அவன் பண்ணதெல்லாம் தர்மம்.. எல்லாத்துக்கும் காரணம் தாத்தா தானு தூக்கி சுலபமா பழிய போட்டுட்டீங்க.. ஏன் உங்க பேரனுக்கு அறிவு இல்ல? மெத்த படிச்சவரு தானே உங்க பேரன்? எந்த ஒரு விஷயத்தை செய்யறது முன்னேயும் சாதக பாதகங்களை யோசிச்சு செய்யணும்னு அறிவில்லையா?” என்று அவளும் விடாமல் வாதிட…
“எந்தப் பிள்ளையும் பிறக்கும் போது நல்ல புள்ளையா தான் பொறக்குது ஆரு. அதை மாத்துறது நம்மளோட சமூக கட்டமைப்பும்.. குடும்ப சூழ்நிலையும்.. அப்பா அம்மா வளர்ப்பும்தான் காரணம். கண்டிப்பா என் பையன் என் பேரென்ன நல்லா விதமா தான் வளர்த்திருப்பான். ஆனால் உங்க தாத்தா சொன்ன அந்த சொல்லு.. அவனுக்கு தெரிஞ்சு.. அதனால் மனசு கஷ்டப்பட்டு.. அதனாலதான் இப்படி ஏதோ மூளை கெட்டு போய் செஞ்சுருப்பான். அதுக்காக அவனை வந்து நீ தப்பு சொல்லாதே.. சிவா பையன் கண்டிப்பா நல்லவன் தான்..!” என்று ஆச்சியும் விடாமல் ஆருஷியிடம் மல்லுக்கு நிற்க..
வெகு சுவாரசியமாக இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான் சுக்ரேஷ்.
சுக்ரேஷை பொறுத்த வரை இராவண் சிறந்த மருத்துவன். அதற்கான மரியாதையும் மதிப்பும் அவனிடத்தில் இன்றும் உண்டு..!
ஆனால் தன்னுடன் வளர்ந்த பெண்ணிடம் ஏதோ அவன் தவறுதலாக நடந்து இருக்கிறான். வீட்டிலே யாருக்குமே தெரியாமல் தலைமறைவாக வாழும் வாழ்க்கையை அவள் வாழ விரும்பியிருக்கிறாள் என்றால் எத்தனை மன காயத்தை கொடுத்திருப்பான்.. எத்தனை வலிகளை கொடுத்திருப்பான்.. என்று அந்த கோபம் அவனிடம் இன்னமும் இருக்கிறதுதான்.
அதற்காக உரிமை பட்டவனிடத்தில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு உறவே வேண்டாம் என்று சொல்ல முடியாது அல்லவா?
ஆருஷிக்கும் இராவண்னுக்கும் அனைத்தும் சுகமாக போய்விட்டால் அதன்பின் இவர்களுக்கு வருத்தமோ கோபமோ, இராவண் மீது நிலைக்காது தானே?
அதனால் இதில் எதிலும் தலையிடாமல் அமைதியாக நின்றவனை, ஓர பார்வையால் பார்த்து “வந்து ஹெல்ப் பண்ணுடா” என்று வாய் அசைவில் ஆருஷி அழைக்க..
“போடி முடியாது..! இனி எந்த பிரச்சனையானாலும் நீயே சமாளிச்சுக்கோ.. உன்ன கொண்டு வந்து வீட்டில விட்டுட்டேன். இனி நீயாச்சு.. அவங்களாச்சு.. உன் மாமா பையனாச்சு” என்று அவனும் அதே வாயசைவில் அவளுக்கு பதில் உரைத்தான்.
“ஆரு பாப்பா.. இப்படி டென்ஷன் ஆகாத..!” என்று பழச்சாற்றை எடுத்துட்டு வந்த ரூபிணி ஒன்றை வள்ளியம்மை கையில் கொடுத்து மற்றொன்றாய் ஆருஷி கையில் திணித்தார்.
“இத குடிச்சிட்டு ஆச்சியும் பேத்தியும் கொஞ்சம் அமைதியா உக்காந்து யோசிங்க… வந்த பிள்ளைட்ட எதுவுமே சொல்லாம நம்ம பாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டோம். அது அத்தையும் ப்போ மயங்கி விழுந்துட்டாங்க.. இவங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ? அது தீக்காம எப்படி அவளும் பேசுவா?” என்று தனக்காக பரிந்து பேசிய அத்தையே தோளோடு அணைத்துக் கொண்டவள்,
“கரெக்டா சொன்னீங்க அத்த..! எனக்கும் அவனுக்கும் இடையில இருக்கிற பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது. ஒரு காலத்திலும் நான் அவனை மன்னிக்க மாட்டேன்.. அவனை நான் கூப்பிட மாட்டேன்.. வேணும்னா உங்க பேரன நீங்க கூப்பிட்டுக்கோங்க” என்று கெத்தாக கூறி ஆச்சிக்கு எதிரில் அமர்ந்து கொண்டவளே கண்ட வள்ளியமைக்கு தன் கணவன் அழகப்பனின் மறு உருவம் தன் எதிரே அமர்ந்திருப்பது போல தெரிய அத்தனை கோபம் அதைவிட வருத்தம் அவருக்கு.
“ஏன் பேச மாட்ட நீனு? உனக்கு உறவாய் உறுதுணையாய் இத்தனை பேர நாங்க இருக்கோம்ல.. ஆனா அவனுக்கு யார் இருக்காங்க?” என்று கண்களை துடைத்துக் கொண்டார்.
“போச்சு டா ஆரம்பிச்சுட்டாங்க..!” என்று தலையை இடவலமாக ஆட்டிக் கொண்டாள் ஆருஷி.
“உனக்கு உரிமையா இந்த வீட்டுக்குள்ள வர இருக்குற அதே உரிமை அவனுக்கும் இருக்கு தானே? இத்தனை வருஷமா உங்க தாத்தனுக்கு பயந்து, நான் கொடுத்த வாக்குக்கு பயந்து தான் நான் அவங்கள பாக்காம பேசாம இருந்துட்டேன். நான் சத்தியம் பண்ண என் பையனே இப்ப உயிரோடு இல்ல.. அப்புறம் இனிமே அந்த சத்தியத்துக்கு என்ன மதிப்பு? நான் இப்பவே போறேன்.. எங்க இருந்தாலும் என் பேரன கண்டுபிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வரேன், இந்தா இந்த ஜூஸையும் அவகிட்டையே கொடு. குடிச்சிட்டு தெம்பா உட்கார்ந்து தாத்தனுக்கு ஏத்த பேத்திய இருக்கட்டும்” என்று வீம்பாய் அவர் நடக்க..
“என்ன ஆரு இது.. பாரு அத்த போறாங்க பாரு.. அவங்கள நிப்பாட்டு” என்ற ரூபிணி
“என்ன அத்த நீங்க.. அவளுக்கு மேல வீம்பு பண்ணிட்டு கிளம்புறீங்க? காலையில போலாம் அத்த.. எங்க இருந்தாலும் காலைல அவர போய் நம்ம கூட்டிட்டு வரலாம். இப்போ இங்க வாங்க வந்து உட்காருங்க..” என்று ரூபிணியும் கூடவே சுக்ரேஷூம் சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து வர முயல..
அவரோ “முடியவே முடியாது..! நான் இப்பவே என் பேரன பார்த்தே ஆகணும். என் சிவா பையனை நான் பார்த்தே ஆகணும்.. அப்போ
சரியா கூட அவனை நான் பார்க்கல ரூபி.. என் கையால அவனை தொட்டு தடவி கூட நான் பாக்கல.. அவன் ஸ்பரிசத்த உணரல.. அவனை தொட்டு தடவி ஆரத்தழுவி உச்சி முகூர்த்த முத்தம் கொடுக்கணும் ரூபி.. என் பேரனுக்கு நான் முத்தம் கொடுக்கணும் ரூபி.. என் சிவா பையனுக்கு நான் கொடுக்கணும்.. சின்ன வயசுல நான் அவனுக்கு கொடுக்க தவறவிட்டது எல்லாம் நான் சாகறதுக்குள்ள அவனுக்கு கொடுக்கணும் ரூபி.. அப்ப தான் இந்த கட்ட வேகும்” என்று ஆற்றாமையால் அழுது கரைந்தவரை கண்ட ஆருஷிக்கு மனம் இறங்கியது.
அவரையே உற்றுப் பார்த்தாள் ஆருஷி.. என்ன கண்டுவிட்டார் இந்த தாத்தாவுக்கு மனைவியாய் இத்தனை வருடத்தில்?
காதல் என்று போன பிள்ளையை காலனுக்கு பலி கொடுக்கும் வரை கண்ணாலேயே கண்டதில்லை இவர்..
கண்ணெதிரே தன் ஆசை மகள் மருமகனோடு தனக்கு முன்னே சிவலோக பதவி அடைந்தை கண்டு எத்தனை துக்கப்பட்டு இருப்பார் இவர்?
அடுத்து ஒற்றை பேத்தி என்று அதிகம் செல்ல வைத்து வளர்த்து நானும் எப்படி அவர் தெரியாமல் கல்யாணம் செய்யாமல் கர்ப்பம் என்று வந்து நிற்கிறேன்.. அதற்கும் அவர் மனதினுள் என்ன பாடுபட்டு இருப்பார்?
அத்தனைக்கும் மிகுதியாய்.. எத்தனை வருடம் பேரன் என்று ஒருவன் இருக்கிறான் என்றே தெரியாது. அந்த பேரன் தன் கண் முன்னால் இவ்வளவு நாள் இருந்திருக்கிறான் என்றும் அறியாமல்.. இப்பொழுது பேரனை பார்த்து கட்டி அணைத்து உச்சிமுகர துடிக்கும் இவரின் இந்த ஆசைக்கு நாம் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்..!
பெருமூச்சு ஒன்று விட்டவள்
“இப்ப என்ன உங்க பேரனுக்கு ஃபோன் பண்ணி நான் வர சொல்லணும். அவ்வளவுதானே? நான் போன் பண்
றேன்” என்று ஃபோனை எடுத்து ராவண்னுக்கு அழைத்தாள் ஆருஷி.
வருவான் அசுரன்...
