அசுரன் 20

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

அசுரன் 20

 

 

 

 

 

வெகு நாளைக்கு பிறகு அன்னையை அழைத்தான் அவரோ இவனது அழைப்பை முதலில் கட் செய்து கொண்டே இருந்தார். 

 

பின் “மாம் ப்ளீஸ் அட்டென்ட் மை கால்.. ஒரு குட் நியூஸ் உங்ககிட்ட நான் ஷேர் பண்ணனும்” என்று வாய்ஸ் நோட் அனுப்ப,

 

க்ளோரியாவோ மகனின் வாய்ஸ் நோட்டையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டவரின் மனதிலோ ஒருவேளை ஆருஷியோடு மகன் சேர்ந்து விட்டானா? அவள் இவனை மன்னித்து ஏற்றுக் கொண்டு விட்டாளா? என்று ஆனந்தத்தில் அவரே இவனுக்கு அழைப்பு விடுக்க..

 

“ஹாய் மாம்.. எப்படி இருக்கீங்க?” என்று ஆனந்தமாக அழைத்த மகனை வெகு நாள் கண்டு பார்த்தவரோ, மனதில் கரை புரண்டு அன்பினை சிறிதளவெறும் காட்டிக் கொள்ளாமல், அமைதியாக அவனை அணு அணுவாக பார்த்தவர் “ஃபைன்”என்று தலை அசைத்தார்.

 

“என்ன மகனை பார்த்து முடிச்சாச்சா? உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்..!” என்றவன் போனை அப்படியே திருப்பி காட்ட, ஆரோக்கிய யை பார்த்தவர் சந்தோஷத்தோடு மகனைப் பார்த்து “ஆருஷி உன்னை மன்னித்து ஏத்துக்கிட்டாளா? ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்துட்டீங்களா?” என்று ஆர்வமாக கேட்டார்.

 

அவனோ “அந்த ராட்சசியாவது என்னை மன்னிக்கிறதாவது?” என்றான் சோகமாக..!

 

“அப்புறம் எதுக்குடா எனக்கு போன் போட்ட? நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?” என்று அவர் அவனை திட்டிக்கொண்டே இருக்க..

 

“மாம்.. மாம்.. ப்ளீஸ்..! முதல்ல நான் சொல்றத கேளுங்க.. நான் உங்ககிட்ட என்ன சொன்னேன் ஒரு குட் நியூஸ்னு சொன்னேனா? கொஞ்ச நேரம் அமைதியா இருங்க?” என்றவன் மெல்ல அவள் அருகில் சென்று அவள் மேல் போர்த்திருந்த போர்வையை மெல்ல விலக்கி அவளின் பெருத்த சூல் தாங்கிய வயிற்றை அன்னைக்கு காட்டினான்.

 

“ஓஹ் மை காட்…! ஷி இஸ் கேரிங்?” என்று நம்ப முடியாமல் இரு கைகளாலும் வாயை பொத்திக்கொண்டு தன் ஆனந்த் அதிர்ச்சியை வெளி காட்டினார் க்ளோரியா.

 

“எஸ் மாம்..! சோ சீக்கிரமே உங்க மருமகளை சமாதானப்படுத்தி பேக் டு ஹோம்” என்றான் புன்னகையோடு..!

 

“ஆமா இப்ப நீ எங்க இருக்க?” என்றவர், அந்த அறையை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே “ஹோட்டல் போல இல்லையே?” என்று வினவினார்.

 

“எனி கெஸ் மாம்?” என்று கள்ளச் சிரிப்போடு கேட்ட மகனை கண்டவருக்கு, உள்ளுக்குள் ஒரு யோசனை ஓடியது ‘அப்படியும் இருக்குமோ?’

 

 ‘ஆனாலும் அது உண்மையா?’ என்று அவருக்கு தெரியவில்லை. ஒரு ஆர்வம் கலந்த எதிர்ப்போடு மகனைப் பார்த்து “இராவண்???” என்று இழுக்க..

 

“எஸ்.. எஸ்.. உங்க மாமியார் வீட்லதான் இருக்கேன். தட் மீன்ஸ்.. என் தாத்தன் வீடு” என்று ஒருவித தோரணையாகவும் அதே நேரம் வெறுப்புமாய் அவன் சொல்ல..

 

“ஈஸிட்?” என்று ஆனந்த அதிர்ச்சி அவரிடம். 

 

“நான் என்ன பொய்யா சொல்றேன்? வேணும்னா வெளியில் போய் தூங்குறவங்களை எல்லாம் தட்டி எழுப்பி உங்க கிட்ட ஒரு இன்ட்ரோ கொடுக்க சொல்லவா?” என்று அவன் குறும்பு புன்னகையோடு கேட்க..

 

“யூ நாட்டி?” என்று சிரித்தவர், “எப்படி நடந்தது இது எல்லாம்?” என்று அவர் கேட்க..

 

ராவண் ஆருஷியை தேடி சென்னை வந்தது.. அவர்கள் மருத்துவமனையிலேயே வேலைக்கு சேர்ந்தது.. அவள் கர்ப்பம் என்று அவன் கண்டுபிடித்து கேட்டது.. அதற்குள் அவள் மாயமாய் மறைந்தது.. மும்பையில் அவளை கண்டுபிடித்தது.. என்று வரிசையாக சொன்னான்.

 

மகன் தான் சொன்ன சொல்லிற்காக இவ்வளவு செய்திருக்கிறான் என்று அவருக்கு ஒரு மனம் பெருமையாய் மகனை நினைத்தாலும்.. 

 

தன் காதலித்த பெண்ணுக்கு அவன் இழைத்த அநீதிக்கு இது தேவை தான் என்று மறு மனம் அவனை குற்றம் சொன்னது.

 

அன்னையின் முகத்திலேயே அவரது அகத்திணை படித்தவன் “ரொம்ப எல்லாம் என்ன தப்பு சொல்லாதீங்க.. எல்லாத்துக்கும் காரணம் என்னோட ஜீன் தான். எங்க தாத்தா கிட்ட இருந்து வந்ததில்ல.. அதனாலதான் இப்படி” என்று அவன் கூறியதில் அவருக்கு சிரிப்பும் வந்தது..

 

“காட் ப்ளஸ் யூ.. டேக் கேர் ஆஃப் போத்” என்றவர் காலை கட் செய்தார்.

 

தன்னை மறந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளை தான் பார்த்தான், ஒரு பெருமூச்சியோடு எப்படி இவளை சமாதானப்படுத்துவது என்று..!!

 

அவள் அருகே படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை..!

 

 காலை நடந்த நிகழ்ச்சிகள் அவன் கண்முன்னே உலா வந்தது..!

 

“குழந்தைக்கு மட்டும் ஆரத்தி சுத்துறீங்க.. குழந்தையை கொடுத்தவனுக்கும் சேர்த்து சுத்தலாம் இல்ல” என்று கேட்ட ராவண்னை தான் குடும்பமே அதிர்ச்சியோடு பார்த்தது.

 

 

“என்ன? என்ன? குழந்தையை கொடுத்தவனா? அப்போ.. அப்போ.. சுக்ரேஷ்..? என்ன ரூபிணி.. என்ன நடக்குது இங்க? எனக்கு தலையெல்லாம் கிறுகிறுனு அப்படியே வருது” தள்ளாடி அமர்ந்தார் வள்ளியம்மை. 

 

“ஆச்சி.. “ என்று ஆருஷியும் சுக்ரேஷூம் பதற..

 

“அத்த..” “பெரியம்மா..” என்று கிரிதரனும் ரூபிணியும் அவரை தாங்கிக் கொள்ள.. அருகில் இருந்த வேலைக்காரர்களோ தங்களுக்குள் குசுகுசு என்று பேசிக்கொண்டு நின்றிருக்க… 

 

கிரிதரனும் இவர்களையெல்லாம் பார்த்தவர் “எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்க்க போங்க..!” என்று சத்தமாக ஆணையிட்டார். பின்பு அவரும் சுக்ரேஷூம் வள்ளியம்மையை கைத்தாங்கலாக உள்ளே அழைத்து வந்து அமர வைத்தனர்.

 

“பெரியம்மாவுக்கு தண்ணி கொண்டு வா ரூபிணி” என்ற கிரிதரன் கட்டளைக்கு..

 

“வேணா.. வேணா.. அவங்களுக்கு இப்ப தண்ணி கொடுக்க வேணாம். கூடா ஒரு டீ.. கொஞ்சம் ஜாஸ்தியா சுகர் போட்டு குடுங்க.‌ அப்பதான் அவங்களோட இந்த திடீர் அதிர்ச்சி குறையும்” என்று குரல் வந்தது என்னவோ ராவண்னிடம் இருந்து..

 

அதிர்ச்சி கொடுத்தவனே அதற்கு வைத்தியத்தையும் சொல்வதை நினைத்து அனைவரும் திரும்பி அவனை தான் சற்று முறைப்போடு குழப்பத்தோடு பார்க்க… 

 

ஆருஷிக்கோ இன்னும் இன்னும் கோபம் தான் வந்தது ராவண் மேல்..!

 

ஆருஷியும் ராவண்னும் இன்னும் வீட்டு வாயிலில் தான் நின்று கொண்டிருந்தனர் ஆச்சியின் முகத்தைப் பார்த்து…

 

ஆருஷி வீட்டினுள் கால் எடுத்து வைக்காமல், தான் செய்த தவறை எண்ணி தயங்கிய நின்று கொண்டிருந்தாள். 

 

ராவண்னுக்கு அந்த தயக்கம் எல்லாம் இல்லை..!

 

ஆருஷியே உள்ளே போகாமல் நிற்கிறாளே என்று அவளுக்கு துணையாக அங்கே நின்று கொண்டிருந்தான். 

 

“இவரு டாக்டர் ராவண் தானே? இவர் எப்படி இங்க? இவருக்கும் ஆருஷிக்கும் எப்படி?” என்று புரியாமல் மகனிடம் கிசுகிசுத்தார் கிரிதரன். 

 

அவனோ தான் ஒரு திட்டம் தீட்டி வந்திருக்க.. அதனை மொத்தமாய் கட்டம் கட்டி தூக்கி விட்ட ராவண்னை தான் கடுப்போடு பார்த்திருந்தான். 

 

அதற்குள் ராவண் சொன்ன மாதிரியே கொஞ்சம் அதிக நாட்டுச் சர்க்கரை போட்டு தேநீரை கொண்டு வந்து வள்ளியம்மையிடம் கொடுத்தார் ரூபிணி.

 

அவருக்கும் அந்த சூடான பானம் சற்று ஆறுதல் கொடுத்தது போலும்.. குடித்து முடித்து ஒரு ஆசுவாசத்தோடு அனைவரையும் பார்த்தார். 

 

ஆருஷியின் அருகில் அத்தனை உரிமையாய்.. ஒரு கையை பாக்கெட்டில் விட்டபடி அமர்தலாய்.. நின்ற அவனிடம் ஏதோ ஒரு பரீட்சயம்.. தொட்ட குறை விட்டு குறை போல அவனை கண்ணெடுக்காது பார்த்திருந்தார் வள்ளியம்மை. 

 

மற்றவர்களுக்கு வேண்டுமானால் இராவண் யாரென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஆருஷிக்கே தெரியுமே? இவர்களுக்கு உள்ளே உள்ள உறவு என்னவென்று?

 

“என்ன ஆச்சி இவனையே இப்படி குறுகுறுனு பார்க்கிறாங்க. ஒருவேளை கண்டுபிடிச்சிருப்பாங்களோ? இவன் அப்படியே மாமா மாதிரி இருக்கான்? இல்லையே..!!” என்று அவளும் ஆச்சியையும் பக்கத்தில் நின்றிருந்த இராவண்னையும் மாறி மாறி பார்த்தாள்.

 

“ஹேய் பாப்பா… இப்படி உன் வீட்டிலே எல்லாரும் முன்னாடியும் என்னை நீ சைட் அடிக்குற. ஐ ஃபீல் சோ ஷை ஐ நோ..” என்று தலையை மட்டும் அவள் புறம் சாய்த்து மெல்லிய குரலில் கூறியவனை கண்டு, கடுப்பாகி தன் கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கலேயே மொத்த தோன்ற.. கையையும் உயர்த்தியும் விட்டாள்.

 

ஆனால் குடும்பமே தங்களை பார்த்துக் கொண்டிருக்க.. ‘இப்பொழுது இவனை அடித்து இருவருக்குள்ள உறவு முறையை அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாய் தெரியப்படுத்த வேண்டுமா?’ என்று அவளது அறிவு திடீரென்று எச்சரிக்கை செய்ய.. உயர்த்திய கையை ஒரு அசட்டு சிரிப்போடு கீழே இறக்கி விட்டாள்.

 

 அவள் உயர்த்திய கையையும் அவளையும் பார்த்து தலையை சாய்த்து சிரித்தவன் “எது? நீ என்ன அடிக்கிறதுனால தான் இவங்க எல்லாருக்கும் நம்மளோட உறவு தெரிந்திட போகுதாக்கும்?” என்று மறுபடியும் சிரித்தவன், அவள் புரியாமல் பார்க்க..

 

“ஏன் டி பாப்பா.. இவ்ளோ பெரிய பூசணிக்காய சோத்துல மறைக்க முடியாது சொல்லுவாங்கல்ல.. அதே மாதிரி உனக்கு முன்னாடி இவ்வளவு பெரிய வயிறு தூக்கிட்டு நிற்கும்.. அதுல அவங்களுக்கு புரியாததா? அப்புறம் நம்ம ரெண்டு பேரும் எப்படி ஜோடியா நின்னுகிட்டு பேசிட்டு இருக்கும்போது விளங்காததா? நீ என்ன அடிக்க கையை உயர்த்தியத்தை வைச்சு அவங்க கண்டுபிடிச்சிட போறாங்க?” என்று அவளைப் பார்த்து கன்னக்கொடுப்புக்குள் நாக்கை சுழற்றியவனை கண்டதும் தான் அவளுக்கு புரிந்தது.

 

அவள் திரும்பி சுற்றும் முற்றும் பார்க்க.. அவர்கள் இருவரும் தான் அவர்கள் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தனர்.

 

சுக்ரேஷ் அவள் அருகில் இல்லை. எப்பவோ அவன் விட்டு உள்ளே சென்று இருந்தான்.

 

இப்பொழுதும் அவள் அருகே அவளுக்காக நின்றிருந்தது ராவண் தான்..!

 

சுக்ரேஷ் வேண்டும் என்றெல்லாம் போகவில்லை. வள்ளியம்மை தள்ளாடியதும் அவரை தாங்கிக்கொண்டு வீட்டில் சென்று அமர வைத்தான்.

 

மற்றபடி ஆருஷியின் மீது அன்பு இல்லாமல் இல்லை. அவளுக்கு அது புரிந்தாலும்.. இவன் இப்படி சொல்லிக் காட்டும் படி நடந்து விட்டதே என்று அவளுக்கு கொஞ்சம் கீழிறக்கமாக இருந்தது.

 

கிரிதரனும் ரூபிணியும் வள்ளியம்மையிடம் “இப்பொழுது உடல்நிலை பரவாலையா?” என்று விசாரித்துக் கொண்டிருக்க.. 

 

“நான் வேணா ஆம்புலன்ஸ் வர சொல்லவா ஆச்சி? ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு வந்துடலாம்” என்று சுக்ரேஷூம் அவரோடு பரிவோடு கேட்டுக் கொண்டிருக்க..

 

ஆனால் அவரது கண்கள் மொத்தமும் ராவண் மீதும் ஆருஷியின் மீதும்..! அவர்கள் இடையே நடக்கும் அந்த சின்ன சின்ன சண்டைகள் கோபம் தாபம் சீண்டல் இதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்தன..!

 

அனுபவம் மிக்கவர் வாழ்ந்து பார்த்தவருக்கு தெரியாதா? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் சம்பாஷனைகள் கொண்டு அவர்களுக்குள்ளே இருக்கும் உறவு என்னவென்று??

 

சுக்ரேஷை பார்த்தவர் “டேய்.. உண்மைய சொல்லு நீ ஆருவ கல்யாணம் பண்ணிக்கிட்டியா? அதுவும் ரிஜிஸ்டர் மேரேஜ்?” என்று தீர்க்கமாக கேட்டவரிடம் பொய் சொல்ல தடுமாறினான் அவன். 

 

அதையெல்லாம் ராவண் ஒருவித சுவாரசியத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவனுக்கு இன்னும் ரோஷம் மிக “ஆமா பண்ணிக்கிட்டேன். ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். ஏன் நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்களா?” என்று கேட்டான்.

 

ஆனால் அவருக்கோ கொஞ்சம் கூட அதில் நம்பிக்கையே இல்லை. வள்ளியம்மை பேச்சில் இப்பொழுது கிரிதரனும் ரூபிடனியும் மகனை சந்தேகத்தோடு பார்க்க..

 

‘என்ன எல்லாரும் என்ன பாக்குறீங்க நான் சொல்றத அப்போ யாரும் நம்ப மாட்டீங்களா?” என்று மீண்டும் அதே பல்லவியை அவன் பாட…

 

“சுக்ரேஷ் ப்ரோ..! பாருங்க உங்கள யாருமே நம்ப மாட்டேங்கறாங்க? எந்த ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல நீங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் பண்ணாக்கிட்டீங்க.. அப்படியே அந்த சர்டிபிகேட்டையும் உங்க ஆச்சிக்கிட்ட காட்டுனிங்கனா.. அப்புறம் ஏன் உங்க கிட்ட குடைஞ்சு குடைஞ்சு அவங்க கேள்வி கேட்க போறாங்க? அப்போ நம்பி தானே ஆகணும்..!” என்றவன் சுக்ரேசுக்கு சாதகமாய் பேசுவது போல பாய்ண்டுகளை வள்ளியமைக்கு எடுத்துக் கொடுக்க…

 

“அது.. அது.. நாங்க மும்பையில பண்ணிக்கிட்டோம் ரிஜிஸ்ட்ரேஷன் காபி இன்னும் வரல” என்று அவன் சாமர்த்தியமாய் சமாளிக்க..

 

“ரெஜிஸ்ட்ரேஷன் காப்பி கொடுக்க கொஞ்சம் டைம் எடுக்கும் தான். அதற்கான பில்லு உங்ககிட்ட கொடுத்திருப்பாங்களே.. அதுவுமில்லாம நீங்க அப்ளை பண்ண ஃபார்ம் ஒரு ஜெராக்ஸ் உங்ககிட்ட இருக்குமே.. அதையெல்லாம் காட்டுங்க ப்ரோ..! காட்டி ஆருஷிய நீங்க தான் கல்யாணம் பண்ணுனீங்கனு‌ நிருப்பீங்க” என்று அவன் துருவி துருலி கேட்ட விதத்தில்.. அதற்கு பதில் அளிக்க முடியாமல் சுக்ரீஷ் திணறவதையும் கண்டு மூவருக்கும்,

 

இப்பொழுது உள்ளங்கையில் நெல்லிக்காய் போல தெரிந்தது சுக்ரேஷ் ஆயுஷியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று..!

 

ஏதோ ஒரு காரணத்திற்காக இருவரும் இப்படி கூறுகிறார்கள் என்று..!

 

அதையும் பெரிதாக யோசிக்க வேண்டி இருக்கவில்லை வள்ளியம்மையால்.. காரணம் இராவண்தான் என்று புரிந்தது. 

 

‘இவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை.. அதனால் பேத்தி மறைந்து வாழ மும்பை சென்று இருக்கிறாள்.‌இப்பொழுது ஏதோ காரணத்திற்காக இதுங்க இரண்டும் இந்த டிராமாவை போடுதுங்க’ என்று சரியாக கணித்தார்.

 

“அப்போ நீ சொல்றதெல்லாம் உண்மைதானு ச என் தலையில அடிச்சு சத்தியம் பண்ணு” என்றதும் அவனுக்கோ கைகள் நடுங்கி விட்டது. 

 

“இன்ட்ரஸ்டிங்..!” என்று சுக்ரேஷையும் வள்ளியம்மையும் அவன் பார்க்க..

 

“நீ சும்மாவே இருக்க மாட்டியா? இப்ப எதுக்கு தேவையில்லாம வீட்டுல குழப்பத்தை உண்டு பண்ற?” என்று ஆருஷி அவனிடம் மெல்லிய குரலில் கடிந்து கொள்ள..

 

“யாரு நான் குழப்பம் பண்றேன்னா? நீயும் உன் விளங்காத மாமனும் தான் குழப்பம் பண்ணிட்டு இருக்கீங்க.. நான் ஜஸ்ட் அவங்களுக்கு எல்லாத்தையும் தெளிய வைக்கிறேன் டி பாப்பா” என்று கைகளை விரித்து தோளை குலுக்கியவனை, நிஜமாலுமே யாரையும் கண்டு கொள்ளாமல் ‘இரண்டு மொத்தினால் தான் என்ன?’ என்று தோன்றுவிட்டது. 

 

“எல்லாருக்கும் முன்னாடி வேணாண்டி பாப்பா..! எது இருந்தாலும் நம்ம ரூமுக்குள்ள போய்..” என்று அவன் கண்ணடித்துக் கூற..

 

இப்பொழுது யாரையும் கண்டுகொள்ளாமல் ஹேண்ட் பேக்காலேயே இரண்டு மொத்தினால் இராவண்னை..! 

 

அவனும் சிரித்துக் கொண்டே அதை வாங்கிக் கொள்ள..

 

“அங்க பாருங்க..” என்று வள்ளியம்மை கண்களாலே ஒவ்வொரிடமும் காட்ட.. இப்பொழுது கிரிதரனுக்கும் ரூபிணிக்குமே தெளிவாக புரிந்து விட்டது. 

 

“முதல்ல பாப்பாவ உள்ள கூப்பிடுங்க அத்த..” என்று வள்ளியம்மையிடம் ரூபிணி மென் குரலில் சொல்ல..

 

“ஆமா ஆருஷி பாவம்.. ரொம்ப நேரமா வெளியில நிக்கிறா” என்று சுக்ரேஷூம் பரிந்துரை செய்ய…

 

“உங்க பாப்பா மதத்துக்கு எல்லாம் என்னோட பர்மிஷன் கேட்டாளா என்ன? இவ வீட்டுக்குள்ள நுழைவதற்கு என்னோட பர்மிஷன் எதிர்பார்த்து நிக்க?” என்ற

வள்ளியம்மை இப்போது தீர்க்கமாக பேத்தியை பார்த்தார். 

 

அவரின் கண்களை நேரடியாக சந்திக்க முடியாமல் அவள் செய்த பிழை அவளை குற்ற உணர்வில் தள்ள.. மெல்ல தலையை குனிந்து கொண்டவளோ “மன்னிச்சிடுங்க ஆச்சி.. அது.. அது....” என்று மன்னிப்பு வேண்டினாள். 

 

“சரி.. சரி.. ஆனது ஆகி போச்சு.. உள்ள வா” என்று அவர் கூப்பிட 

 

ஆருஷி ஒரு நிமிடம் ராவணனை திரும்பி பார்த்துவிட்டு மெல்ல அடி எடுத்து வைக்க போக.. சட்டென்று அவள் கையை பற்றி தடுத்தவன் “இரண்டு பேரும் சேர்ந்து போவோம் பாப்பா..” என்றவன் அவளோடு இணைந்து அவ்வீட்டினில் காலடி எடுத்து வைத்தான்.

 

“டாக்டர் ராவண் நீங்க எங்க ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணலாம் அதனால எங்க ஃபேமிலி பிரச்சினைல தலையிடுற உரிமை உங்களுக்கு இல்லை. ஜஸ்ட் ஸ்டே அவே” என்று சுக்ரேஷ் சற்று வெறுப்பாய் கூற..

 

ஆருஷியின் கைப்பற்றி மெதுவாக அழைத்து வந்தவன் வள்ளியம்மைக்கு முன்னே இரு பாக்கெட்டிலும் கைவிட்டு தன் முழு உயரத்திற்கும் நின்றவன் அவரைக் கூர்ந்து பார்த்தான். அப்பார்வையோ கேட்டது “எனக்கு உரிமை இல்லையா?” என்று..!

 

அவன் பார்வையில் என்ன செய்தியிருக்கிறது என்பதை அவரால் அறிய முடியவில்லை… அவரும் அவனைத்தான் விடாமல் பார்த்தார்.

 

“சார்.. இது எங்க வீடு..! எங்க வீட்டு பிரச்சினை நாங்க பார்த்துக்கிறோம்” என்று அவனை வெளியே துரத்து விடும் நோக்கிலேயே சுக்ரேஷ் பேச..

 

இப்பொழுது அமர்த்தலாக வள்ளியம்மை முன்னிருந்த சோபாவில் அமர்ந்தவன் அருகே ஆருஷியையும் இழுத்து அவள் விருப்பின்றி அமர்த்தி, “உட்காரந்து பேசுங்க எல்லாரும்..” என்று தோரணையாக கையை காட்டினான்.

 

அதில் சுக்ரேஷும் கிரிதரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வ்ள்ளியம்மைக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டனர்.

 

ரூபிணி “என்னத்த இது?” என்று பயந்து வள்ளியம்மையின் தோளை தொட..

 

“என்ன பண்றது எல்லாம் நம்ம வளர்த்து வச்சது.. இழுத்து வந்திருக்கிற வம்பு தான். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு?” என்றவர் கண்களாலேயே அவரை அமைதியாக இருக்கச் சொன்னார்.

 

“சுக்ரேஷ் ப்ரோ.. எனக்கு இந்த வீட்டில உரிமையில்லைன்னு சொல்ல உனக்கு எந்த உரிமை கிடையாது. ஏன்னா இது என் தாத்தன் வீட்டு சொத்து..!” என்றவனை கண்டு இப்பொழுது அமர்ந்திருந்த மூவரும் அதிர்ச்சியோடு எழுந்து நிற்க…

 

“போச்சு..! ஒரு முடிவோட தான் வந்திருக்கிறான்” என்று தலையில் கை வைத்துக் கொண்டாள் ஆருஷி..!

 

“ஐ அம் இராவண் திரேந்திரன் மா

றவேல் சன் ஆஃப் சிவேந்திரன் மாறவேல் சன் ஆஃப் அழகப்பன் மாறவேல்..!” என்று அவன் அதிகாரமாய் தன் உரிமையை கூற..

 

வள்ளியம்மை கண்கள் கலங்க.. பாசம் பொங்க பேரனை பார்த்தார்.

 

அசுரன் வருவான்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top