20
தயாளனின் தாபம் ஏறிய பார்வையும் நெருங்கிய உடல் மொழியுமே அவனின் எண்ணத்தை கூற.. அப்போதுதான் அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஞாபகத்தில் வர.. அவனை ஒரே தல தள்ளி முந்தானையை ஒரு உதறு உதறி இடுப்பில் சொருகி.. இடையில் இரு கையையும் வைத்து அவனை முறைத்தாள் தாரிகா!!
"இப்ப எதுக்காக நீ இப்படி மாரியாத்தா மாறிய முறைக்கிற?" என்று அவள் தள்ளிவிட்டதில் கீழே விழுந்தவன், அப்படியே கால்மேல் கால் போட்டு தோரணையாக படுத்து கேட்டான்.
"நீங்க எதுக்கு அவ வீட்டுக்கு போனீங்க?" என்று பற்களை நறநறவென்று கடித்தபடி அவள் கேட்க..
"எவ அவ?" என்று புரியாமல் இவன் குழம்ப..
"அதான் உங்களோட அந்த அவ?" என்று முகத்தை சுளித்து காட்ட..
"எனக்கு இருக்கிற ஒரே அவ.. இவ தான்!!" என்றவன் அவள் சுதாரிக்கும் முன் அவள் கையை பிடித்து ஒரு சுண்டு சுண்டி இழுக்க அவன் மேலேயே விழுந்தாள் தையல்.
"முதல்ல நீங்க சொல்லுங்க?" என்று அவனிடம் இருந்து அவள் விலகி போக..
"நீ யாருன்னு சொல்லலையே டி!" என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
"அதான் உங்க மாமா பொண்ணு" என்று வெளிவராது குரலில் கூறினாள்.
அப்போது புரிந்தது தயாவுக்கு. தன் மாமா வீட்டுக்கு சென்றதை அத்தை அன்னையிடம் கூறியிருப்பார்கள், தன் அம்மா ஏதோ இவளிடம் விளையாடி இருக்கிறார். அதுதான் இந்த கோபம் என்று புரிந்தாலும் "ஆமா போனேன் அதுக்கு என்ன இப்போ? இன்னும் கூட போவேன்!" என்று சீண்டினான்.
"என்னது போனதுக்கே நான் வேண்டாம் சொன்னா.. இன்னும் போவேனோ என்கிட்டே சொல்றீங்க? உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?" என்று அவனது சட்டையை பற்றி உலுக்க..
"ஏன் போக கூடாது?" என்று அவளிடம் சிரிப்பை மறைத்த குரலில் கேட்க..
"ஏன் போக கூடாதா? போக கூடாதானுனா கூடாது தான்!! அது எப்படி நான் இருக்கும்போது நீங்க போகலாம்? என் கழுத்துல தாலி கட்டி பொண்டாட்டியா ஒருத்தி நான் இருக்கும் போது நீங்க எப்படி அங்க போகலாம்? போகக்கூடாதுன்னு போகக்கூடாது தான்!! இன்னொரு முறை நீங்க அங்க போனீங்கனு எனக்கு தெரிஞ்சது? என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!!" என்று அவன் சட்டையை பற்றி உலுக்கி அவள் கேட்ட உரிமையில் அவளின் மனம் உணர்ந்து குளிர்ந்தான் இந்த புது காதல் கணவன்.
"எதுக்கு இந்த கோபம் உனக்கு வருது நான் அவளை பார்க்க போனா?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவனைப் பார்த்து திருதிருவென்று விழித்தாள் தாரா.
"ஏன் தெரியுமா அதற்கு காரணம் பொசசிவ்னஸ்!! என் மேல் உள்ள உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்காத பொசஸிவெனஸ்!!" என்று அவள் நெற்றி முட்டி சிரித்தான்.
"மஞ்சள் கயிறு மேஜிக் என்று சொல்வார்கள் தெரியுமா அது உண்மைதான் போல!!"
"ஆனாலும் நீங்க அங்க போக கூடாது!!" என்று சிறுகுரலில் கொஞ்சலுடன் கூறிய அவளது குளச்சியை இறுக்க அணைத்துக் கொள்ள கை பரபரத்தது தயாளனுக்கு.
"மக்கு பொண்டாட்டி!! அது என் மாமாவின் வீடு டி. அந்த வீட்டுக்கு நான் போனா அவளை பாக்க போனேன் தான் அர்த்தமா? என் மாமா என்கிற அவர் உறவு சாகும் வரைக்கும் கூட தான் இருக்கும். நாமும் அவ்வப்போது போய் வர வேண்டும். அதற்காக எல்லாம் சந்தேகப்படக் கூடாது. சரியா?" என்று கேட்க அவள் விழியை மட்டும் உயர்த்தி அவனை பார்த்து முறைத்தாள்.
"புரிஞ்சுக்கோ டி ராமனுக்கு எப்படி ஒரு வில்! ஒரு சொல்! ஒரு மனைவியோ.. அதேபோல இந்த தயாவுக்கும் இந்த தரு மட்டும்தான் இப்பொழுதும் எப்பொழுதும்!!" என்றவன் அவளிடம் பேசிக் கொண்டே இருக்க.. அவளும் உம் உம் என்று போட்டுக் கொண்டை அவன் பட்டனை சுழற்றுவதாய் நினைத்து மொத்த சட்டை பட்டனையும் கழட்டி விட்டிருந்தாள்.
குனிந்து பார்த்தவன் அவளின் செய்கையை பார்த்து அடக்கமாட்டாமல் வெடித்து சிரித்தான்.
எதற்கு சிரிக்கிறான் என்று பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன.. எழுந்து கதவைத் திறந்து வெளியே ஓட முயல.. அவளுக்கு முன் சென்றவன், கதவை தாளிட்டு அந்த கதவிலேயே அவளை சாத்தி நிறுத்தினான்.
கொஞ்சம் கொஞ்சமாய் அவனிடம் தொலைந்துக் கொண்டிருந்தாள் மாது. அவனின் சூடான மூச்சுக் காற்று, பின்னங்கழுத்தின் பிடி, இடை வருடிக் கொண்டிருக்கும் விரல்கள் இப்படி அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தான் தயாளன் தயவின்றி.
அன்று மருந்து மயக்கத்தில் நடந்த கூடல்.. இன்று காதல் மயக்கத்தில் நடந்தேறியது அவர்களுக்குள்.
இரண்டு நாட்கள் தோட்ட வீட்டிலேயே அவன் மனைவியோடு டேரா போ..ட அவனுக்கு தேவையானவற்றை ராசாமணி பார்த்து பார்த்து அனுப்பி வைக்க.. வந்தனாவுக்கும் அனைத்தும் கைவிட்டுப்போன நிலை.
"நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?" என்று ஒருநாள் தயக்கத்துடன் தயாவிடம் கேட்டாள். அவனும் அவளை பார்த்து சிரித்தவன் "பீடெக் பயோடெக்" என்றான்.
"அப்புறம் ஏன் விவசாயம்?" என்று மெல்லிய குரலில் கேட்டவளிடம் "நம்ம தாத்தா பாரம்பரியமா செஞ்சு வந்ததெல்லாம் விவசாயம் தான்! நம்ம படிப்பு நம் அறிவை விரிவுப்படுத்த தானே ஒழிய.. நம் இயற்கை வளங்களை பாழ்படுத்த அல்ல.. அதனால் எனக்குள் இருந்த திறமையை இதில் காட்டி தொழிலாக செய்து கொண்டிருக்கிறேன். விவசாயத்திற்கு விவசாயமும் ஆனது! கூடவே நான் படித்த படிப்புக்கும் புரோஜனம் ஆனது!!" என்று கூறி வழக்கம்போல மீசையை முறுக்கியவனை காதலுடன் பார்த்தாள் தாரிகா.
இதுநாள் வரை தான் அமர்ந்திருந்த வீட்டுத் தலைவி என்ற சிம்மாசனத்தில் இன்று மருமகள் உட்கார மனம் முரண்டியது வந்தனாவிற்கு.
இது பெரும்பாலான அன்னையர்கள் மாமியார்களாக பதவி உயரும் போது வரும் ஹோம் சிக்னஸ்!!
அதை பெரும்பான்மையோர் அன்புகொண்டு கடந்து வந்தாலும்.. வந்தனாவை போல சிலர்.. தான் என்ற அகந்தையை விட்டு இறங்காமல் தனது நிலையை குறைத்துக் கொள்கிறார்கள்.
ராசாமணி பாட்டி சொன்னது போலவே அடுத்த பத்தாவது மாதத்தில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் தாரிகா.
மூன்று மாதங்கள் மகளை தன் வீட்டில் வைத்து சீராட்டி பாராட்டி அன்றுதான் சகல சீர் வரிசைகளோடு கொண்டுவந்து தன் பிறந்த வீடும் மகளின் புகுந்து வீடுமான அன்பு வீட்டுக்கு அழைத்து வந்தார் ஆடலரசி தன் கணவன் கதிரேசனுடன் தம்பதியராய்.
மனைவியிடம் காட்டும் வீம்பு மகளிடம் எடுபடுவதில்லை.. அதே போல மகளிடம் காட்டும் சிறு கோபம் கூட பேத்தியின் பிஞ்சு கால் உதைக்கு முன் எங்கே நிற்கும்?
மொத்தமாய் தன் பேத்தியின் குண்டு குண்டு கன்னங்களிலும்.. செப்பு இதழ் சிரிப்பிலும்.. மயங்கிப்போய் சண்டையை மொத்தமாய் மறந்து இதோ தன் சம்பந்தி வீட்டிற்கு அட்டகாசமான சிரிப்புடன் நுழைந்தார் கதிரேசன். மாப்பிள்ளையே இவ்வளவு தூரம் இறங்கி வரும்போது மச்சானான அன்புச்செழியன் வரமாட்டாரா என்ன? அவரும் இவருக்கு குறையாத சிரிப்போடு ஆரத்தழுவி வரவேற்றார்.
ஒரு குடும்பத்தை கெடுக்க நினைத்து பிரித்த காளிங்கன் தான் கடைசியில் சொந்த பந்தம் எதுவும் வேண்டாம் என்று குடும்பத்தோடு வேறு ஊருக்கு சென்றுவிட்டார்.
வந்தனாவும் மாறும் காலம் வரும். பொறுப்போமே!!
வந்தது முதல் அண்ணன் மகளை மடியை விட்டு கீழே இறக்க வில்லை நான்தான் அத்தை!! நான்தான் அத்தை!! என்று கூறிக்கொண்டு யாரிடமும் கொடுக்காமல் அலும்பு செய்து..
"அத்தைமடி.. மெத்தையடி.." என்று பாடிக் கொண்டிருந்தவளின் மடியிலேயே தீர்த்தவாரி அபிஷேகம் குட்டி செய்து விட, சிணுங்கிக் கொண்டே மருமகளை அப்பத்தாவிடம் கொடுத்தாள் அபர்ணா. அனைவருக்கும் அப்படி ஒரு சிரிப்பு!!
மாடியில் உள்ள அறையில் அதைக் கழுவ சென்றாள் அபர்ணா.
தயாளனும் அகிலனும் இணைபிரியா நண்பர்களைப் போல வந்தவர்களை வரவேற்பதும்.. விருந்து நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்வதுமாக இருந்தனர்.
அப்போது யாரோ "நல்லி எலும்பு கொண்டா" என்று கேட்க.. தங்கை மகள் விருந்து விழாவில் ஒரு குறை வரக்கூடாது என்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்த அகிலன் பாய்ந்து சென்று நல்லியை கைப்பற்ற முயல.. அதில் சிலபல நல்லிகள் அவன் மேலேயே அபிஷேகம் ஆனது.
அதை சிரிப்புடன் பார்த்த தயாளன் "ஏன் மச்சான் இவ்ளோ அவசரம்? நல்லி உங்களுக்கு உண்டு!! பொறுமை!! பொறுமை!!" என்று கிண்டலடித்தான். அகிலன் பாவமாய் பார்க்க..
"சரி சரி.. மாடியில் ரூம்ல போய் இதை சேன்ச் பண்ணிக்கோங்க.. அங்க என்னோட ஒரு செட் டிரஸ் இருக்கும்" என்று தயா கூற இவனும் மறுக்காமல் மாடிக்கு சென்றவன், கதவை தாளிட்டு விட்டு தனது உடையை களைந்து விட்டு நிற்க.. அதேசமயம் குளியலறையிலிருந்து அபர்ணா வெளியே வர…
அரைகுறை ஆடையுடன் நின்ற அகிலனை பார்த்து அவள் என்பது கதாநாயகிகள் போல புறங்கையால் வாயை மூடி வீல் என்று கத்த..
அந்த சத்தத்தைக் கேட்டு அங்
குள்ளவர்கள் அதறி பதறி கதவைத் தட்ட..
அப்புறம் என்ன..
மீண்டும் ஒரு சரித்திர நிகழ்வு!!
சுபம்..
