கிளி 19

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

19

 

 

"பெண்ணை பார்த்தாச்சா? இப்போ சந்தோஷமா?" என்று கேட்ட கணவனை ஆனந்த அதிர்ச்சியுடன் பார்த்தாள் தாரிகா..

 

"ரொம்ப ரொம்ப சந்தோசம் தயாப்பா" என்று மகளின் கன்னத்தை வருடி முத்தம் கொடுத்தார் ஆடலரசி. கண்கள் கலங்கி குளம் கட்டியது.

 

 

"ஆமா.. ஆமா.. இப்ப வந்து கொஞ்சு.. முத்தம் கொடு.. கட்டிப்பிடி எல்லாம் பண்ணு. ஆனால் ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு என்ன விட்டுட்டு போனதோடு சரி.. ஒரு போன் கால் கூட இல்ல.. என்னை சுத்தமா மறந்து போயிட்டிங்க எல்லோரும்" என்று சலுகையுடன் அன்னையின் தோளில் சாய்ந்துக் கொள்ள.. கொஞ்சலுடன் சிணுங்கும் மனைவியை பார்தத தயாவுக்கோ அந்தத் தோள் தன் தோளாக இருக்க கூடாதா என்று தோன்றியது.

 

 

"அதான் இப்போ வந்துட்டோமே தாரா குட்டி!!" என்று அண்ணனின் குரல் கேட்க.. படக்கென்று திரும்பி பார்த்தாள். அங்கே அகிலனின் தான் கண்களில் பாசத்தோடு.

 

அண்ணனின் இந்த தாரா குட்டி என்ற வார்த்தையை கேட்டு வருடங்கள் ஆகிவிட்டது. சிறு வயதில் இருந்தே அகிலன் அப்படித்தான் அழைப்பான். அவனுடன் சண்டை சச்சரவு என்று‌ வர, தாரா குட்டி மருவி தாராவாகி.. அதுவும் இல்லாமல் போன காலங்களும் உண்டு.

 

இன்று அண்ணன் மறுபடியும் அம்மாதிரி கூப்பிட.. தாரிக்காவுக்கோ வார்த்தை தொண்டையைத் தாண்டி எவ்வளவு முயன்றும் வரவில்லை.. கண்ணீர் மட்டுமே கண்களிலிருந்து வழிந்து அண்ணனிடம் செல்லம் கொஞ்சியது.

 

 

தங்கையின் மறுபக்கம் வந்து அவளை அணைத்துக்கொள்ள மூவருக்குமான அங்கே ஒரு அழகிய பாசப் பிணைப்பு.

 

 

இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டி இதழ்களில் தவழும் புன்னகையோடு மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தான் தயாளன்.

 

 

அவனை திரும்பிப் பார்த்த அகிலனின் கண்களில் அவ்வளவு நிறைவு. அகிலனின் நினைவு ஒரு வாரத்திற்கு முன்பு.. அதாவது இவர்களுக்கு கல்யாணமாகி இரண்டு நாள் கழித்து அந்த சந்திப்பிற்கு சென்றது.

 

 

ஆடலரசி ராசாமணிக்கு போன் செய்து மறு வீட்டுக்கு வந்து அழைக்கவா என்று கேட்க.. அவரோ இப்போது வேண்டாம் என்பதோடு முடித்துவிட அங்கு அவருக்கு அழுகை பொங்கியது.

 

"என்னமா என் பொண்ணு கல்யாணத்தை தான் சீரும் சிறப்புமாக நடத்தல.. மறுவீடுக்கு அழைத்து விருந்து வைக்கலாம் பார்த்தா.. அதுக்கும் விட மாட்டேங்குற.. இந்த பக்கம் இவரும் மலை இறங்க மாட்டேங்குறார் நேரா வந்து அழைக்க.. இதுக்கே நானும் அகிலனும் தான் வரணும். நீயும் வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்? பாவம் என் பொண்ணு" என்று..

 

 

"துர்க்கை அம்மன் கோவிலுக்கு வா!!" என்று போனை வைத்து விட்டார் ராசாமணி.

 

ஆடலரசி அகிலன் ஒருபுறம் ராசாமணி தயாளன் மறுபுறம் அமர்ந்து இருக்க அங்கே பலத்த மௌனம்.

 

 

அவ்வப்போது முந்தானையில் மூக்கைச் சிந்தியவாறு மூக்கை உறிஞ்சி அழுகையை கட்டுப்படுத்தியவாறு அமர்ந்து இருந்தார் ஆடலரசி.

 

 

"ஏய் அரசி.. நடந்தது நடந்து போச்சு அதை நமக்கு சாதகமா மாத்திக்குனுமே ஒழிய, மூக்கைச் சந்திட்டு உட்காரக்கூடாது" என்ற‌ ராசாமணி கூற.. போ மா என்று முகத்தை அரசி திருப்பிக் கொள்ள..

 

 

"ஏற்கனவே பிடிக்காத கல்யாணம் இதில் நீ வேற உன் பொண்ணை விருந்து மருந்து அங்க கூட்டிட்டு போனா.. அவளுக்கு இங்க வீட்டோட ஒட்டுதல் வரவே வராது. வீட்டோட ஓட்டுதல் வரலைன்னாலும் பரவாயில்லை.. பேரன் கூடயாவது ஒன்னும் மண்ணா வாழணுமா இல்லையா? அதுக்கு நீ கொஞ்ச நாள் விட்டுத்தான் பிடிக்கணும். அப்படி ஏதாவது யாரும் காரணம் கேட்டா இருக்கவே இருக்காரு என் மாப்பிள்ளை அவர் கோபம் இன்னும் குறையலனு சொல்லி பழியை அந்த பக்கம் தூக்கி போடு" என்று அசால்டாக சொன்ன பாட்டியை ஆச்சரியமாக பார்த்தான் அகிலன்.

 

 

'இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்தால் வெகு நாள் பிரிந்திருந்து பேசாமல் இருந்தது போல தெரியவில்லையே!!' என்று குறுகுறுப்புடன் தயாளன் பார்க்க.. அவன் காதருகே குறைந்த அகிலன் "சேம் டவுட் மச்சான்.. எனக்கும்!!" என்றான். அதில் ஒன்றை புருவத்தை உயர்த்தி கேள்வியோடு அகிலனை நோக்கினான் தயாளன்.

 

"எனக்கு உங்க மேல சந்தேகம் எல்லாம் இல்ல மச்சான். ஆனால் அந்த நிலைமையில நானும் அப்படியே பேசலனா இந்த கல்யாணம் நடந்திருக்காது. இந்த கல்யாணம் நடக்கலைனா இந்த பேச்சு உங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலும் தொடர்ந்து கிட்டே வந்து நிம்மதியா இருக்க விட்டுருக்காது" என்று சிரித்தவனின் கையைப் புரிதலோடு பிடித்துக் கொண்டான் தயாளன்.

 

"மச்சான்.. உங்களுக்கு ஒரு டிப்ஸ் என் தங்கச்சியை கொஞ்சி கொஞ்சி சமாதனப்படுத்த நினைக்காதிங்க. முடியவே முடியாது! கோல எடுத்தாதான் குரங்காடும் மாதிரிதான் என் தங்கையும்!! கொஞ்சம் அவளை மிரட்டுற மாதிரி பேசினா தான் சமாளிக்க முடியும்" என்று தயாளன் காதில் கிசுகிசுத்தான் அகிலன். புரிதலோடு தலையாட்டி சென்றான் தயா.

 

அதன்பின் ராசாமணி பாட்டியின் திட்டப்படியே மொத்தமாக ஆடலரசி அகிலன் தாரிகாவை தவிர்த்திருக்க.. அடுத்து தயாளனிடமும் அதையே கூற.. அடுத்து வந்த மூன்று நாட்களும் அவள் கண்ணில் படாமல் இவனும் செல்ல.. சோர்ந்து கிடந்த தனிமையில் தன்னைப் பற்றிய சுய அலசல் ஈடுபட்ட பெண்ணுக்கு அனைத்தும் புரிய கணவனிடமும் ஓட்டுதல் வந்தது.

 

 

ஆனாலும் பெண்ணைப் பார்க்க முடியவில்லையே என்று அரசி இரண்டு நாட்களாக போட்டு அகிலனை படுத்தி எடுக்க.. அகிலன் போன் செய்து தயாளனை கோவிலுக்கு வர செய்திருந்தான் தங்கையோடு.

 

 

"உங்க அப்பா எப்ப தான் சீக்கிரம் மலை இறங்கி இருக்காரு? எப்படியும் இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள்ல அவரை கரைத்து பெரிய விருந்து வைக்கலாம் சொந்தக்காரங்க எல்லாரையும் கூப்பிட்டு.. சரியா?" என்று மகளை பிரிய மனமில்லாமல் அகிலனோடு சென்றார் ஆடலரசி.

 

 

அதன் பிறகு கோயிலில் இருந்து வீட்டுக்கு செல்லாமல் அவர்கள் தோட்ட வீட்டுக்கு அழைத்துச் சென்றான் தயாளன்.

 

"இங்கே ஏன்?" என்று பார்க்க…

 

"பாரு!!" என்று அந்த தோட்டத்தை சுற்றி காட்ட கண்கள் விரிய மலர்ச்சியோடு பார்த்தால் அந்த மலர்களை.. 

 

 

ஆர்கிட் முதல் பல அரிய வகை ரோஜாக்கள் என பல மலர்களை பயிரிட்டு பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது தயாளனின் தொழில்.

 

 

"ஆசெம் அய்யனாரு.. காட்டானுக்குள்ளும் ஒரு தொழிலதிபர் இருக்கான் பாரேன்!!" என்று தாடையில் கை வைத்து போலியாக வியந்தவாறு அவள் கூற.. 

 

"அடிங்க.. யாருடி காட்டான்.. வந்தேனு வை!!" என்று அவன் துரத்த.. அவள் அந்த தோட்டத்தை சுற்றி சுற்றி ஓட.. முதலில் அவளை ஓடவிட்டு ரசித்தவன், ஒரு கட்டத்தில் அவளை பிடித்து திமிற திமிற இரு கை

களில் தூக்கிக் கொண்டு அந்த தோட்ட வீட்டுக்குள் நுழைந்தான்.

 

தொடரும்...


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top