கிளி 16

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

16

 

 

மருமகள் கீழே இறங்கி வந்ததும் அவளை பிடி பிடி என பிடித்துவிடும் வேகத்துடன் இருந்தவர், அவளின் கோலத்தை கண்டு வாயடைத்து போய் நிற்க.. அதுவும் அவள் சரியாக மகனின் அறையை யாரும் கூறாமல் சென்றதை பார்த்த பிறகு அவர்களின் அந்நியோன்னியம் புத்திக்கு புறப்பட்டாலும் மனது ஏற்க மறுத்தது.

 

 

அது எப்படி அவள் போகலாம்? அதுவும் என் மகனின் அறைக்கு? என்று இன்னமும் தயாளனை தன் மகனா மட்டுமே என்று வரித்துக் கொண்டார் வந்தனா.

 

 

இதுதான் பெரும்பாலான அன்னையர்கள் செய்யும் தவறு. 

பால்குடி மாறாத பாலகனாக இன்னும் மகனை நினைத்து முந்தானை என்னும் தொட்டிலில் போட்டு தூளி கட்டி ஆட்டவே விரும்புகின்றனர். 

 

அவனை நம்பி ஒரு பெண்!!! அவனுக்கு என்று ஒரு குடும்பம்!! என்பதை சட்டென்று ஏற்கமுடியவில்லை பாசத்தை ஓவர் ஃப்லோவாக கொட்டும் அன்னையர்களால்..

 

தாரிகா சென்று சில நிமிடங்களில் பின்னால் இறங்கிவந்த தயாளன் யாரையும் பார்க்காமல் நேராக தன் அறைக்குள் நுழைய போன சமயம் "ராசா.. பேத்தியோட டிரஸ் எல்லாம் உங்க ரூம்ல கொண்டுவந்து வச்சிருக்கேன்.. அவ கிட்ட சொல்லிடு" என்று பேரனை பார்க்காமலேயே சொன்னார் ராசாமணி. அவனை சங்கடப்படுத்த விரும்பாமல்..

 

"அப்பாடா! எப்படி கேக்குறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. நல்லவேலை அவங்களே கொண்டு வந்து வைச்சிட்டாங்க" என்ற கதவை தாழிட்டு விட்டு தன் அறையில் பார்க்க அங்கே இரண்டு பெட்டிகள் இருந்தது. 

 

 

"பாருடா.. நேத்து நைட்டு தான் இங்கிருந்து அத்தை போனாங்க இவ்வளவு காலையில் கொண்டு வந்து கொடுத்து இருக்காங்களே" என்று அவன் யோசிக்கும்போது "அடேய் இது காலை இல்லடா.. மதியம் ஆகப்போகுது" என்று மனசாட்சி காரித் துப்பி விட்டு சென்றது.

 

பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டவன் சட்டென்று திரும்பி நின்று கொள்ள.. தயக்கத்துடன் வெளியில் வந்தவள் சுற்றுமுற்றும் பார்க்க கையை அந்தப் பெட்டி பக்கம் காட்டி "உன் டிரஸ் அதில் இருக்காம் அப்பத்தா சொன்னாங்க" என்றவன் துண்டை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

நல்லவேலை குளிக்க போயிட்டான் என்றவாறு ஒரு பெட்டியை திறந்து பார்த்தவள் அதில் முழுக்க புடவைகள் இருக்க.. "ஐயையோ எனக்கு புடவை கட்ட தெரியாதுனு தெரிந்தும் இவ்வளவு புடவையும் கொடுத்து விட்டுயிருக்க.. ம்மா.. வைச்சு செய்ற மா நீ" என்று சத்தமாக பேசிக் கொண்டே அடுத்த பெட்டியை திறக்க அதில் விதவிதமான சல்வார்கள் நைட்டிகள் அவளுக்கு தேவையான உள்ளாடைகள் என அனைத்தையும் அழகாக தனித்தனியே மடித்து வைத்திருந்தார் ஆடலரசி.

 

 

அவன் வருவதற்குள் ஒரு சல்வார் எடுத்து மாட்டி முகத்தை திருத்தி பொட்டிட்டு பெட்டியை மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

 

 

குளித்து வந்தவன், அங்கே ஒருத்தி இருப்பதையே கண்டுகொள்ளாமல் தன்பாட்டுக்கு வேஷ்டி சட்டையை எடுத்து போட.. "இந்த அய்யனாருக்கு.. கொஞ்சம் கூட இங்கிதமே தெரியல.. இதுல நாம சொன்னா மட்டும் பெருசா ரோஷம் பொத்துகிட்டு நம்ம கிட்ட சண்டைக்கு வந்திட வேண்டியது" என்று இவள் முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

 

அவள் சுடிதார் போட்டு இருந்ததை பார்த்தாலும் ஒன்றும் கூறவில்லை அவன் இல்லை என்றால் அவன் தானே கட்டி விட வேண்டும்… தயாராகியவன் அவளைப் பார்த்து "ஏய் வா!!" என்று‌ அழைக்க..

 

"என் பேரும் ஒன்னும் ஏய் இல்லை தாரிகா!!" என்றாள் வெடுக்கென்று..

 

 

"என் பேரும் அய்யனார் இல்லை.. தயாளன்!! ஆனால் புருஷன் பேரை சொல்லி கூப்பிடக்கூடாது தெரியும்ல.. கூடவே உனக்கு நான் மாமா பையன் தானே.. மாமானு கூப்பிடு இல்ல அத்தான்னு கூப்பிடு இல்ல உங்க அம்மா மாதிரி என்னங்கனு கூப்பிடு" என்றவன் பேசிக்கொண்டே கைகளில் கருப்பு பட்டை வாட்சை அணிந்து கொண்டு, கழுத்தில் அணிந்திருந்த முறுக்கு செயின் வெளியே தெரியுமாறு இரண்டு பட்டன்களை கழட்டிவிட்டு.. காப்பை வலது கையில் மேலே சற்று ஏற்றி விட்டு.. மீசையை ஒரு தரம் சீப்பால் சீவி பின் மேல்நோக்கி அதை முறுக்கி விட்டான்.

 

அவன் செய்வதையே கண் சிமிட்டாமல் பார்த்தாள். "மாமன சைட் அடித்தது போதும்! வா போலாம்.." என்று அவன் முன்னே நடக்க..

 

"மாமன் பொல்லாத மாமன்.. சரியான காட்டான்!!" என்று முணுமுணுத்தவாறு பின்னால் சென்றாள் தாரிகா.

 

இருவரையும் இணைந்து பார்த்த ராசாமணி மருமகள் ஏதேனும் வாய் விடும் முன் "இரண்டு பேரும் போய் சாமி கும்பிட்டு வாங்க ராசா.. சாப்பிடலாம்" என்று கூற அப்பத்தாவிடம் தலையாட்டியவன் திரும்பி மனைவி ஒரு பார்வை பார்த்து வா என்று கண்களால் அழைக்க அவன் பின்னால் சென்றாள் தாரிகா.

 

 

அவனோ கண்களாலேயே மிரட்டி பயமுறுத்தி அவளை வைத்திருக்க.. பார்ப்பவர்களுக்கு புதுமணத் தம்பதிகள் கண்களாலேயே பேசிக்கொள்கின்றார்கள். என்ன ஒரு அந்நியோன்யன்!! அதிலும் ஒரே நாளில்!! என்றுதான் தோன்றியது.

 

 

இன்னும் கல்யாணத்துக்கு வந்த உறவினர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்க.. பார்த்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள.. அன்புச்செழியனுக்கு அப்படி ஒரு மனநிறைவு.. தங்கை மகள் தன் மகனோடு ஒத்துப் போய்விட்டாள் என்று..

 

 

ஒரே நாள்ல இப்படி என் மகன் எப்படி மாறிவிட்டான்?;நான் இருப்பது கூட தெரியாமல்.. ஒரு வார்த்தை பேசாமல் அவனால் எப்படி போக முடிந்தது? எ


ன்று திகைப்பில் இருந்தார் வந்தனா.

 

 

தொடரும்...


   
Quote
(@gowri)
Member
Joined: 10 months ago
Messages: 23
 

வந்து மா...இது தான் starting ...இனி இருக்கு🤣🤣🤣🤣🤣


   
Jiya Janavi reacted
ReplyQuote
Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

@gowri aama pavam vanthu.... 🤣😜


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top