மோகங்களில்… 9
அன்று மாதாந்திர செக்கப்புக்காக சென்றிருந்தாள் அனு சாவித்ரி அம்மாள் மற்றும் சுகனோடு.
இப்பொழுது இரண்டு தடவைகளாக சாவித்ரி அம்மாள் தான் இவளோடு கூட வருகிறார். தாத்ரிக்கு அந்த வகையில் நிம்மதி!
'தன்னை தொந்தரவு செய்யாமல் ஒரு அனுபவம் உள்ள மெயிடை வேலைக்கு வைத்தானே.. அப்ப ராசா நல்லா இருடா! நல்லா இருடா!" என்று மனதில் துருவை வாழ்த்திக் கொண்டாள்.
'இல்லை என்றால் நிமிடத்திற்கு ஒரு ஃபோனை போட்டு நம்மை படுத்தி எடுத்து விடுவானே! எத்தனை நாளைக்கு தான் ஸ்ரீராமிடம் முழு பூசணியை சோத்தில் மறைக்க முடியும்? நல்ல வேளை அவர்கிட்ட மாட்டுறக்குள்ள நான் தப்பினேன்' என்று நிம்மதி மூச்சோடுதான் அனுவை பரிசோதித்துக் கொண்டிருந்தாள் தாரதி.
"ப்ளட் டெஸ்ட் எடுக்கணும் அது முடிச்சு ரிப்போர்ட் வந்த உடனே என்னை வந்து பாருங்க.. அதுவரைக்கும் நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க! இப்போதைக்கு எல்லாம் நார்மல் தான். டெஸ்ட் ரிப்போர்ட் வந்தால் தான் உங்களோட சுகர் லெவல் கொலஸ்ட்ரால் லெவல் இதெல்லாம் தெரிஞ்சிக்க முடியும். எது எது கண்ட்ரோல் பண்ணனும் சொல்லலாம்" என்றாள்.
சரி என்று அனுவை வெளியில் அழைத்து வந்தார் சாவித்ரி அம்மாள். அவளுக்கு இரத்தம் பரிசோதனைக்கு கொடுத்துவிட்டு இருவரும் அமர்ந்திருந்தனர்.
"ரிப்போர்ட் வரட்டும் ராசாத்தி அப்புறம் இருக்கு பாரு உனக்கு! எவ்வளவு சொன்னாலும் உனக்கு சாப்பாட்டில் கண்ட்ரோல் இல்லயில்ல.. அதுக்கு அப்புறம் இருக்குடி! டாக்டர் கிட்ட உன்னை போட்டு கொடுக்குறேனா இல்லையான்னு மட்டும் பாரு" என்றார் அவளுக்கு மாமியாராய் மாறி..
"நீங்க டாக்டர் கிட்ட என்னை போட்டு கொடுத்தா.. நான் உங்கள உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறாரே அந்த முதலாளி.. அவர்கிட்ட போட்டு கொடுத்துடுவேன்" என்று பதிலுக்கு மிரட்டினாள்.
"போடி.. போடி.. நான் என் வேலையை தான் பார்க்கிறேன். அவர் உன்ன பார்த்துக்க சொல்லி தானே என்னை வேலையில வச்சிருக்காரு.. அதை நான் ஒழுங்கா செஞ்சேன்னு என்னை பாராட்டத்தான் செய்வார்" என்று அவளிடம் நேரா கூறியவர் "இவ பெரிய அவரு வீட்டுக்காரி.. இவ சொன்னதும் இவ வீட்டுக்காரனும் என்னை துரத்தி விட போறாரு ம்க்கும்.." என்று அவளுக்கு கேட்குமாறு சத்தமாகவே முணுமுணுத்தார்.
"அப்படி அவர் மட்டும் என் வீட்டுக்காரனா இருந்தா.. நான் ஏன் அவரு கிட்ட சொல்ல போறேன்! நானே உங்கள புடிச்சு தரதரன்னு கொண்டு போய் வெளியில விட்டுட்டு வந்துடுவேன்.. வேலையை விட்டு தூக்கிடுவேன்" என்று அவளும் வேகமாக கூற.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தோள்பட்டையில் தாடை இடித்து கொண்டு பார்வையை திருப்பிக் கொண்டனர்.
கண்டிப்பா யாராவது இவன்களை பார்த்தால் இருவரும் மாமியார் மருமகள் என்று கண்டிப்பாக நினைத்திருப்பார்கள். ஆனால் இங்கே உறவில்லாத ஒரு உரிமை மெல்லிய நூலிலையாய் ஓடியது இருவருக்குள்ளும்.
இவர்கள் பரிசோதனை கூடத்திற்கு வெளியே பேசிக் கொண்டிருக்கும் போது.. சோர்வாக அவர்கள் அருகில் ஒரு நடுத்தர வயது பெண்மணி அமர்ந்தார். அவரை பார்த்தவுடன் "செல்வி அக்கா.." என்று ஆச்சரியமாக அழைத்தாள் அனு.
செல்வி என்று இவளால் அழைக்கப்பட்ட அந்த பெண்மணியும் இவளை பார்த்து அனு என்று ஆச்சரியமாக அழைத்தார். அவளையும் அவள் வயிற்றையும் பார்த்து "கல்யாணம் ஆகிட்டா.. உனக்கு எத்தனாவது மாசம்?" என்றதும், முதல் கேள்விக்கு பதில் கூறாமல் "ஆறு முடிஞ்சி ஏழு தொடங்கி இருக்கு கா" என்றாள்.
சாவித்ரி ஒரு மாதிரி இவர்கள் பேச்சை கண்டு கொள்ளாதது போல முகம் திருப்பிக் கொள்ள.. மாமியார் போல என்று நினைத்தவர் மேற்கொண்டு பேசாமல் அமைதியாக இருந்தார்.
"என்ன முகமே ஒரு மாதிரி கலங்கி இருக்கு கா?" என்று கேட்டாள் அனு.
"மீனாவுக்கு மஞ்சள் காமாலை அனு" என்றார் அழுது கொண்டே…
"மஞ்சள் காமாலை இந்த காலத்தில் ஈசியா குணப்படுத்தலாம் அக்கா.. கவலைப்படாதீங்க!" என்று இவள் ஆறுதல் அளிக்க..
"இல்ல அனு முன்னமே இருந்திருக்கும் போல.. எனக்கு தான் சரியா தெரியல. வெறும் காய்ச்சல் அதுக்கு மட்டும் மருந்து வாங்கி கொடுத்துவிட்டு இருந்தேன்.
எப்பொழுதும் போல நாம போஸ் டாக்டர் கிட்ட காமிச்சேன். அவரும் மருந்து கொடுத்தார். அப்போ குறையவே இல்ல.. இப்போ ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு.. என் பொண்ண பாக்கவே முடியல ரொம்ப கஷ்டப்படுறா அனு" என்று அவர் முந்தாணையால் கண்களை துடைத்துக் கொண்டே கூறினார்.
"எது நம்ம போஸ் டாக்டரா? அந்த வீணா போனவன் கிட்ட எதுக்கு கூட்டிட்டு போனீங்க.. அவன் முதலில் டாக்டரே கிடையாது! எங்கேயோ கம்பௌண்டரா வேலை பார்த்துட்டு வந்து நம்ம கிட்ட டாக்டருனு ஏமாத்திட்டு இருக்கான். அது நமக்கும் தெரியும்.. சாதாரண தலைவலி காய்ச்சல் சளின்னா பரவால்ல.. இதுக்கு போய் ஏன் அக்கா அவன் கிட்ட காமிச்சீங்க? சரி இப்போ மீனா எப்படி இருக்கா?"
கண்களை துடைத்துக் கொண்டே "நீயே வந்து பாரு.. இங்கே சேர்த்து இப்பதான் ரெண்டு நாளாவது
என்னால இங்க தாக்கு பிடிக்கவே முடியல அனு. வேற எங்க போனாலும் குணப்படுத்த நாளாகும்னு சொல்றாங்க.. இரண்டு நாளுக்கு ஒரு தபா இரத்த டெஸ்ட் எடுக்கனுமாம். உனக்கு தான் தெரியுமே நாமெல்லாம் அன்னாடகாட்சிக.. என்னத்த வச்சிட்டு இருக்கோம் சொல்லு? இருக்கிற ஒரு புள்ளயையும் விட்டுட கூடாதுனு தான் அங்க இங்க கந்து வட்டிக்கு கடன் வாங்கி வைத்தியம் பாத்துட்டு இருக்கேன்.." என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே "மீனாவோட அட்டெண்டர் யாருமா?' என்று லேபில் கேட்க..
"நான் தான் சார்" என்றவர், "சரி அனு நான் வரேன். நீ உடம்பு பார்த்துக்கோ" என்று பரிசோதனை ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு அவர் சென்றார்.
சிறிது நேரம் யோசனையோடு அமர்ந்திருக்க.. "அனுப்ரியா..!" என்று அழைக்க.. இவளும் சென்று தனது ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு தாரதியிடம் சென்று பார்த்தாள்.
"கொலஸ்ட்ரால் கொஞ்சம் கூடி இருக்கே அனு.." என்று சாவித்ரி அம்மாளையும் அனுவையும் தாரதி பார்க்க…
"அதுதான் ஊறிஞ்ச விஷயமாச்சே இவளுக்கு கொழுப்பு ஜாஸ்தினு.. அதை தனியா பிளட் ரிப்போர்ட்டுல வேற நீங்க பார்க்கணுமா? என்கிட்ட கேட்டா நான் சொல்ல மாட்டேனா?" என்று அதுதான் சமயம் என்று அவர் இவளை வார.. இவளோ "சாவி.!" என்று அவரை முறைத்தாள்.
"சுகர் பார்ட்ல இருக்கு.. இன்னும் கொஞ்சம் கூட சேர்த்தாலும் நீ சுகர் பேஷண்ட் ஆயிடுவ!"
"அய்யய்யோ.. நல்லா இருந்த ஒரு பிள்ளையை பேஷண்டா மாத்திட்டீங்களே டாக்டரு" என்று அவள் அதிர்ச்சியாக..
அவளை கண்டிப்போடு பார்த்த தாரதி "நீ அளவுக்கு அதிகமாக தின்னு எங்க மேல பழி போடாதே! கண்ட்ரோல் வேணும் சரியா? வாய்க்கு முதல்ல கண்ட்ரோல் வேணும்" என்று அவர் சற்று அழுத்தி சொல்ல.. சாவித்ரி அம்மா நமட்டு சிரிப்போடு அனுவை பார்த்தார்.
"அம்மா இவளுக்கு இனிமே நீங்க சர்க்கரை கொடுக்காதீங்க.. வெல்லம் கருப்பட்டி இந்த மாதிரி கொடுங்க. அதே மாதிரி எண்ணெய் அளவோடு தான்! ஆயில் அதிகம் இல்லாத பொரியல் பார்த்து பதமா குடுங்க. அப்புறம் உங்களுக்கே தெரியும் பக்குவம் முறை எல்லாம்" என்றதும் சாவித்ரி அம்மாள் கெத்தா அனுப்ரியாவை பார்த்து "இனி நான் பாத்துக்குறேன் டாக்டரமா.. நீங்க கவலையே படாதீங்க!" என்றார்.
"டாக்டரு.. உங்க கிட்ட ஒன்னு கேட்கணும். எனக்கு தெரிஞ்ச பொண்ணு இங்க ஒன்னு அட்மிட்டாக இருக்கு. எந்த ரூம்னு கேட்டு சொல்றீங்களா?" என்று பெயரையும் அவளுக்கு வந்து வியாதியும் சொல்ல.. ரிசப்ஷனில் ஃபோன் செய்து கேட்ட தாரதி "செகண்ட் ஃப்ளோர்ல ரூம் நம்பர் 205" என்றாள்.
"சாவி மா.. அந்த பிள்ளையை போய் ஒரு எட்டு பார்த்துட்டு போயிடுவோமா? எனக்கு மனசே கேட்கல! எங்க வீட்டு பக்கம் தான் அவங்க" என்று சொன்னவுடன் "இதுல என்ன இருக்கிறது ராசாத்தி.. வா பாத்துட்டு போவோம்" என்று லிப்ட் மூலம் அவரை அழைத்து சென்று அங்கே அவர்கள் பார்த்து விசாரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சுகன் ஃபோன் செய்தான். ரொம்ப நேரம் ஆகியும் அவர்களை காணவில்லை என்று.
"அண்ணா சார்.. நாங்க செகண்ட் போல ரூம் நம்பர் டூ நாட் ஃபைல இருக்கோம். நீங்க இங்க வந்து என்கிட்ட இந்த ப்ரிஷ்க்ப்ரிஷன் வாங்கிட்டு போய் டேப்ளட்ஸ் எல்லாம் வாங்கிட்டு இருக்கீங்களா? நான் இங்க ஒருத்தவங்க தெரிஞ்சவங்கள பாக்க வந்து இருக்கேன்" என்று கேட்டாள்.
அவள் சொல்லி எதை மறுத்திருக்கிறான் சுகன். "வந்துட்டேன் மேடம்!" என்றான்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கே பிரசன்னமாகி அனுவிடம் மரியாதையாக ப்ரிஸ்க்ரிஷனை வாங்கி சென்றதை ஒர கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்தார் அந்த செல்வி.
சாவித்ரி அம்மாவும் தனக்கு தெரிந்த பத்திய முறையை செல்வியிடம் கூறிக் கொண்டிருக்க.. இவள் சற்று வெளியே வந்து "அண்ணா சார்.. இந்த பொண்ணுக்கு கொஞ்சம் ஃப்ரூட்ஸ் வாங்கி தரீங்களா? இதை என்னோட கணக்குல கழிச்சிக்க சொல்லிடுங்க. கூடவே உங்க பாஸ்ட பேசி எனக்கு கொஞ்சம் பணம் ஏற்பாடு பண்ணி தர சொல்றீங்களா? இவங்கள ஏழை பட்டவங்க அண்ணா சார்.. பாவம் ஒத்த பொண்ண வச்சுட்டு கஷ்டப்படுறாங்க. எதுவோ நம்மளால முடிஞ்ச உதவி" என்று அவள் மெல்லிய குரலில் பேச அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே "கண்டிப்பாக மேடம்" என்று சென்றான் சுகன்.
பத்து நிமிடங்கள் பேசிய சாவித்திரி அனுழை பார்த்து "கிளம்பலாமா?" என்று கேட்க..
"கொஞ்சம் இருங்க சாவி மா போலாம்" என்றதும் என்ன என்று கண்களை சுருக்கி அவர் கேட்க.. அவளும் கண்களை மூடி அப்புறம் சொல்கிறேன் என்க, சரி தோளை குலுக்கிக் கொண்டார் அவர்.
அனு அந்த மீனா பெண் விழித்தவுடன் அவள் அருகில் சென்று பார்த்தாள். கண்களின் வெண்படலம் அனைத்தும் மஞ்சள் நிறமாக இருக்க.. உடல் முழுவதுமே மஞ்சள் போட்டு குளித்தது போல் இருந்தது. வேதனையோடு அந்த 13 வயது பெண்ணை பார்த்தவள் "கவலப்படாதே மீனு.. சீக்கிரம் சரியாயிடும். டாக்டர் கொடுக்கிறது எல்லாம் கரெக்டா சாப்பிடு. கை வைத்தியம் பக்கம் போய்டாதீங்க சரியா?" என்றதும் அந்த பெண்ணும் சோர்வாக அசதியாக தலையாட்டிக் கொண்டாள்.
சுகன் என்ன பேசினான் துருவிடம் என்றெல்லாம் தெரியாது ஐம்பதாயிரம் பணத்தையும் அந்த பெண்ணுக்கு சில பழங்களையும் வாங்கிக்கொண்டு அவன் வந்திருந்தான்.
"மேடம்..!" என்று அனுப்ரியாவை வெளியே அழைத்து அவற்றையெல்லாம் கொடுக்க "ரொம்ப நன்றி அண்ணா சார்!" என்றவள், செல்வியிடம் சென்று பழங்களை கொடுத்துவிட்டு "என்னால முடிஞ்சது செல்வி கா.. மீனாவோட ட்ரீட்மென்ட் வச்சுக்கோங்க" அவர் கையில் அந்த பணத்தை கொடுத்தாள்.
"அனு.." என்று அதிர்ந்தவர், "இவ்வளவு பணம் எதுக்கு? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அனு.. நீ இவ்வளவு அனுசரனையா வந்து பேசுனதே போதும். பாவம் உனக்கும் நிறைய செலவு இருக்கும் பிரசவ நேரம் வேற" என்று அவர் திருப்பிக் கொடுக்க..
"பரவால்ல வச்சுக்கோங்க அக்கா. என்னால இவ்வளவுதான் முடிந்தது இப்போ.. அப்புறம் மீனுவ பத்திரமா பாத்துக்கோங்க" என்றாள். சாவித்திரி அம்மா அனுப்ரியாவின் மற்றொரு பக்கத்தை வியந்து பார்த்தார் சுகனும் கூடத்தான்..
"சரி அனு.. ரொம்ப.. ரொம்ப.. நன்றி அனு" என்று அத்தனை நெகிழ்ந்தார் செல்வி.
அந்த கார்டரில் முன்னால் சுகன் சென்று கொண்டிருக்க.. பின்னால் இவர்கள் இருவரும் நடக்கும்போது "நீயே பணத்துக்காக தான் இங்கே வந்தேனு சொல்ற.. அப்புறம் அந்த பணத்தை தூக்கி அவங்க கிட்ட கொடுக்குற? பெரிய கர்ணன் பரம்பரை தான் போ!" என்று சாவித்ரி அம்மா நக்கலாக கேட்க..
"அதனால்தான் கொடுத்தேன் சாவிமா! நான் பணத்துக்காக தான் வந்தேன். அது தொழில் பண்ண.. ஆனால் இந்த மாதிரி உயிருக்கு ஆபத்தான நோயோட அந்தப் பொண்ண பார்க்கும்போது எப்படி சும்மா வர சொல்றீங்க? ஏதோ என்னால முடிஞ்சது!" என்றவள் பேசிக் கொண்டு வரும்போது தான் செல்போனை மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவள் கட்டிலில் வைத்து விட்டு வந்தது தெரிந்தது.
"அச்சோ.. செல்ஃபோனை மறந்துட்டேன். சாவி மா வாங்க போய் எடுத்துட்டு வந்துரலாம்" என்று இவர்கள் மீண்டும் அந்த அறையை நோக்கி சென்று கொண்டிருக்க, "நீ மெதுவா வா.. நான் முன்ன போறேன்" என்றார் சாவித்ரி அம்மா.
"ஏ கனகா.. உனக்கு விஷயம் தெரியுமா? அந்த பக்கத்து வீட்டுல அந்த ஆயா கூட இருந்ததே அனு.. அப்புறம் ஏதோ ஒரு ஆசிரமத்தில் தங்கி படிக்குதுன்னு நீங்க எல்லாம் சொன்னிங்களே அவ படிக்கலடி.."
…..
“ஆமாம் பார்த்தேன். இங்க மீனாவ சேர்த்திருக்கிற ஆஸ்பத்திரியில தான் அவளை பார்த்தேன். வயித்த தள்ளிட்டு வந்து இருக்கா.. ஆனா கழுத்துல தாலிய காணும் கால்ல மெட்டிய காணும்! கூட வயசான அம்மா வந்திருக்கு.. பார்த்தா முதல்ல மாமியாருனு நினைச்சேன். ஆனா மாமியார் இல்லை போல.. எவனோ ஒருத்தன் வந்து மேடம் மேடம்னு அவ கண் ஜாடைக்கு எல்லாம் வேலை செய்றான்”
….
“யாருக்கு தெரியும்? பார்த்தா அடுத்த பத்தாவது நிமிஷம் ஐம்பதாயிரம் பணத்தை கொண்டு வந்து கொடுக்கிறா என் கையில.. நம்மளால அவ்வளவு பணம் எல்லாம் தூக்கி கொடுக்க முடியுமா? ஏதோ பழம் வாங்கி கொடுத்தா சரின்னு ஒத்துக்கலாம்.. இவ பணத்தை கொடுக்கிறா? அதிலிருந்து தெரியல எவனோ நல்ல வசதியானவனுக்கு கூத்தியாள போய் இருக்கான்னு.. எல்லாம் கலிகாலம்” என்று பேசியப்படி திரும்ப அங்க இவரது பேச்சை நம்ப முடியாமல் விழி விரிய நின்றாள் அனு கண்கள் கலங்க.
“பாத்துக்கோ.. நல்லா பாத்துக்கோ! இவளுக்கு தான் நீ உதவி செய்யணும்னு நினைச்ச.. தேவையா இதெல்லாம் உனக்கு? மனுஷங்களோட குணமே இதுதான்” என்று சாவித்ரி அம்மா விடு விடு என்று மீனா அருகில் சென்று செல்போனை எடுத்துக் கொண்டு செல்வியிடம் சென்றவர் “ரொம்ப சந்தோசமா இருக்குமா.. கொஞ்ச நேரம் முன்னாடி அவ்ளோ பேச்சு உருகி உருகி பேசுன. இப்போ இந்த மாடிய விட்டு கூட நாங்க தாண்டல அதுக்குள்ள அவள தப்பு தப்பா பேசுற.. என்ன தெரியுமா உனக்கு அவளை பத்தி? வாய்க்கு வந்தபடி பேசாத! ரொம்ப பாவத்தை சேர்க்காதே! எல்லாம் உன் பொண்ணு தலையில தான் விடியும்” என்று நறுக்கு என்று கேட்டுவிட்டார்.
செல்விக்கு மகளை சொன்னதும் மனது திக் என்றாக.. மன்னிப்பு கோரும் முகத்தோடு அணுவை பார்க்க அதற்குள் சாவித்திரி அம்மா அவளை நெருங்கி விட்டார்.
“நீ ஏன் பேய் அறைந்த மாதிரி நிக்கிற வா” என்று அனுப்ரியாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார் சாவித்திரி அம்மாள்.
வீடு வந்தவளுக்கு மனது சரியாகவே இல்லை. ஏதேதோ குழப்பிக் கொண்டே இருந்தது. யார் எது பேசினாலும் அதை எல்லாம் கேட்கக் கூடாது நான் தொழிலதிபியாக ஆக வேண்டும் என்று தீர்மானத்தோடு தான் இதற்கு சம்மதித்தாள். ஆனால் இப்போது ஹார்மோன்களின் சதிராட்டத்தில் அவளது மனது ஒரு நிலையில் இல்லை.
யோசித்து யோசித்து ஒரு கட்டத்திற்கு மேல் “நான் இப்படி இருக்க காரணம் எல்லாம் அவன் தான்!” என்று அப்சராக்கும் இவளுக்கும் இருந்து டீலை எல்லாம் மறந்து விட்டு.. அதில் சம்பந்தமே இல்லாமல் மாட்டிக் கொண்ட துருவை அவளது மனம் குறை சொன்னது! குற்றம் சாட்டியது!!
அத்தனை ஆண்டுகள் அருகில் இவளை பார்த்திருந்தே அந்த செல்வியே இப்படி பேசியது மனதை ஒரு பக்கம் வருத்தியது. தான் தவறு செய்து விட்டோமோ என்று சங்கடப்பட்டது!
மற்றொரு பக்கம் எல்லாத்துக்கும் துருவ் தான் காரணம் என்று அவன் மீது கோபத்தை பிடித்து வைத்துக் கொண்டு இருந்தாள். அவன் வரட்டும் என்று காத்திருந்தாள்!!
அன்று பார்ட்டை முடித்து வீட்டுக்கு செல்ல மனம் இல்லாமல் கெஸ்ட் ஹவுஸ் நோக்கி வந்து கொண்டிருந்த துருவின் மனதிலும் அந்த மற்றொருவன் சொன்ன “இவன் பர்பாமென்ஸ் பத்தலன்னு தான் வொய்ஃப் பிரிஞ்சு போயிட்டா போல..” என்று அந்த வார்த்தைகளை நீங்கா ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.
சொன்னவன் வாய்க்கு சரியான தண்டனை துருவ் கொடுத்து விட்டாலும் மனது ஏனோ ஆறவே இல்லை. ஆர்பரித்துக் கொண்டிருந்தது!!
அவன் மாற்றி சொல்லி இருந்தாலும் அதன் உண்மையான அர்த்தம் துருவ் ஆம்பளை இல்லை என்பது தானே? ஒரு ஆணால் தான் ஆண் இல்லை என்று மற்றொரு ஆணால் சொல்லப்படும் போது வரும் வலி.. வேதனை.. கோபம்.. ஆத்திரம் எல்லாம் அளப்பரியது! அதன் வேகமும் தாக்கமும் அதிகமாகவே இருக்கும்.
“எப்படி அவன் சொல்லலாம்? எப்படி சொல்லலாம்? ப்ளடி ராஸ்கல்..” என்று கோபத்தோடு ஆங்கிலத்தில் அவனை மனதில் வறுத்து எடுத்துக் கொண்டே, வேகவேகமாக வீட்டில் நுழைந்து தன் அறைக்குள் சென்றான். மனதிலும் உடம்பிலும் உள்ள சூட்டை தணிக்க குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு ஒற்றை டவுலோடு வெளியே வர அங்கு காளியாய் நின்று இருந்தாள் துருவின் குழந்தைகளை தாங்கி இருக்கும் அனுப்ரியா.
புசுபுசு என்று மூச்சு வாங்கிக் கொண்டு அவனை பார்த்தவள் “உங்களால தான் இன்னைக்கு எனக்கு கூத்தியான்னு அசிங்கமான பேர் கிடைச்சுச்சு தெரியுமா?” என்று அவர் ஆத்திரமிக கத்த.. வேகமாக அவளிடம் வந்தவன் அவளை தன் புறம் ஒற்றைக் கையால் இழுத்து மறு கையால் கதவை தாழிட்டு “எதுக்கு இப்படி கத்துற? எல்லாருக்கும் கேக்கணுமா?” என்று இவனும் பதிலுக்கு கத்தினான்.
“இங்க பார் திரும்பவும் சொல்றேன் உன்னோட நிலைமைக்கு நான் காரணம் கிடையாது! நீ.. நீ.. மட்டும் தான் காரணம்” என்று அவள் நெஞ்சில் தன் ஒற்றை விரலால் குத்தி அவன் கூற.. அவனையும் தன் நெஞ்சில் பதிந்திருந்த அவன் ஒற்றை விரலையும் கோபத்தோடு பார்த்தவள், அவன் விரலை தட்டிவிட்டு “டோன் டச் மீ!” என்று உறுமினாள்.
ஏற்கனவே பர்பாமென்ஸ் பத்தவில்லை என்று ஒலித்துக் கொண்டிருந்த குரலில் கோபம் மிக.. இவளின் டோண்ட் டச் மீயும் சேர..
“ஐ டூ இட்..” என்றவன் அவளை இழுத்து உஷ்ணமாக முறைத்தவன், இடுப்பில் ஊன்றியிருந்த அவளுடைய கையை வலுவாக பற்றி, அப்படியே வளைத்து, ஒரு முறுக்கு முறுக்கினான்.
“ஆஆஆஆஆஆ…!!!”
அவள் பேச்சு வராமல் அவனை முறைத்துக் கொண்டே நிற்க… அவள் கண்களில் கண்ட பாவமும்.. துடிக்கும் இதழ்களையும் கண்டவன்,
அடுத்த நொடி அதிரடியாக அவள் உதடுகளை தன் உதடுகளால் கவர்ந்தான். அவள் அதிர்ந்து, ஒரு கை அவன் அகன்ற தோளிலும்.. இன்னொரு கை அவனின் விரிந்த நெஞ்சிலும் பதித்து தள்ள முனைய.. அவனோ அவளது எதிர்ப்பில் இன்னும் கிளர்ந்து அவள் உதடுகளை சற்று ஆவேசமாக உறிஞ்சி சுவைத்தான்!!
அவனது கவ்வலில் துடித்துப்போனாள் பாவை. அவன் பற்களின் மெல்லிய அழுத்தம்.. அவளின் பருவ நரம்பில் பட்டு.. அவளுக்கு ஒருவித இன்ப லாகிரியைத் தூண்டினாலும்.. துருவின் இந்த அத்து மீறல் அவளுக்கு கோபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது!!
ஒரு கையால் சட்டென அவன் முகத்தை பிடித்து தடுத்தவளை இன்னும் இன்னும் இறுக்கி அணைத்து துருவ் முத்தமிட… அதீத அதிர்ச்சியில் மயங்கி சரிந்தாள் மாது!!
பாரு அனு இது தான் உலகம்.....அவங்க உன்ன ஓர கண்ணில் பார்க்கும் போதே நினைச்சேன்.....
இப்படி ஒரு விஷ கிருமியா தான் இருக்கும்னு.....
இது தேவையா????
எதே, அவன் எங்க இங்க வந்தான்????
ஆனாலும் டா துரு....
@gowri உண்மை டியர். இப்போ உள்ள உலகம் அப்படித்தான் உதவி செஞ்சவங்களையே தப்பா பேசுறது
இதுக்கா உதவி செஞ்ச அனு 🤧🤧🤧🤧🤧. உதவி செஞ்சாலும் தப்பு செய்யலைனாலும் தப்பு 😡😡😡😡😡