12
முதலிரவு அறைக்குள் நுழைந்த தயாளன் அங்கிருந்து அலங்காரங்களை ஒரு வெறுப்புடன் பார்த்து "இந்த குள்ளச்சி கூட எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டா?? காலக் கொடுமையடா தயா!!" என்று அலுத்து கொண்டவன், அந்தக் கட்டில் பக்கமே எட்டிப்பார்க்காமல் தனியாக இருந்த ஒற்றை நாற்காலியில் அமர்ந்துகொண்டான். என்னவோ அவன் வாழ்க்கை பூராவும் அந்த ஒற்றை நாற்காலி போல கன்னி பையனாக இருக்கப்போவது போல!!
அதன்பின் கடுகடுப்புடன் உள்ளே நுழைந்த தாரிகாவின் மனது தோரணையாக நாற்காலியில் அமர்ந்து, கையால் தாடையை தாங்கியவாறு தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்த தயாளனை.. ஏதோ இந்தியன் ஆர்மி பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போலவே பார்த்து முறைத்தாள்.
அவள் வரவை உணர்ந்து திரும்பியவன் விழிகள் அவள் விழிகளோடு மோதிக்கொண்டது.
"என் வாழ்க்கையை.. ஒரே ஒரு ஒரு மணி நேரத்தில் திசை மாத்திட்டியேடா!!" என்ற க்ரீச் குரலில் காதைக் குடைந்து கொண்டவன், "யாரு நானா? நானா? உன் கிட்ட எத்தனை தடவை சொன்னேன்.. கையில் இருக்கிற புடவை எடுத்துக் கட்டுனு.. ஒழுங்கு மரியாதையா அந்த புடவையை கட்டி இருந்தேனா வேறு ஏதாவது காரணம் சொல்லி நாம ரெண்டு பேரும் தப்புச்சிருக்கலாம். இப்படி ஒரு கல்யாண நடந்திருக்கவே நடந்திருக்காது. எல்லாத்தையும் நீ செஞ்சிட்டு என்னை சொல்லுவியா நீ?" என்று பதிலுக்கு அவனும் சீறினான்.
"புடவை கட்ட தெரிஞ்சா வாங்கி கட்டி இருக்க மாட்டேனா அதை.. கட்ட தெரியாம தான் இந்த ரூம்ல நின்று தவியாய் தவித்தேன். பாத்ரூம் போனவன் கதவ சாத்திட்டு போயிருக்க கூடாது?" என்று அவன் மேல் இவள் குறைபட..
"என்னது கதவை சாத்தாமல் போனேனா? அய்யோ வாந்தி எடுக்க போற அவசரத்துல இதை நாம் மறந்தே போயிட்டேனே.. கதவைத்திறந்து பார்த்தியா?" என்றவன் மனதில் அந்த நேரத்தில் அவன் உள்ளே எந்த நிலையில் இருந்தானோ அதை பார்த்திருப்பாளோ? என்று சிறு பயம் அவனுக்குள்.
அவனது பதட்டத்தை அவனுக்கு தெரியாமல் ரசித்தவள் "லூசுனு நிரூபிக்கிற பாத்தியா? நான் சொன்னது ரூம் கதவை.. நீ பாத் ரூமில் இருப்பதே எனக்குத் தெரியாது"
"தெரிஞ்ச வந்து பாத்து இருப்பியோ?" என்று கையில் கிடந்த காப்பை முறுக்கிக் கொண்டு அவன் பேச..
"உவ்வே… கருமம்.. அய்யனாரு கணக்கா இப்படி நெடுநெடுவென வளர்ந்து காட்டான் மாதிரி இருக்க.. உன்னை போய் ச்சீசீ" என்று அவள் முகம் சுளிக்க..
"உருவ கேலி தப்பு தாரிகா! அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி!! நீ ரொம்ப ரதி தேவியோ?? என் தோள் அளவுக்கு தான் இருக்க. இதுல தவளை மாதிரி தத்தித்தத்தி சத்தம் போடுற.. நோஞ்சான் மாதிரி ஒரு உடம்பு.. பே" என்று அவனும் இவளுக்கு குறையாமல் பேச..
'பார்த்து பார்த்து டயட்டில் இருந்து மாற்றியே தனது ஜீரோ சைஸ் இடையையும்.. மாடல் போல சிக்கென வைத்திருக்கும் உடலைக் கண்டு சீக்கு பிடித்தவள் என்று சொல்லிவிட்டானே' என்று மனம் குமற தன்னையே சுற்றி சுற்றி பார்த்தாள் தாரிகா.
அவர்கள் அறையின் வெளி தாழ்வாரத்தில் தான் ராசாமணியம்மா நடை பயின்றுக் கொண்டிருந்தார்.
"என்ன இதுங்க பேச்சு சத்தம் இன்னும் கேட்குது.. மருந்து வேலை செய்யலையோ?" என்று பயங்கர சிந்தனை வேறு அவர் முகத்தில்..
"நாளைக்கு டோஸ் இன்னும் கொஞ்சம் கூட போட்டுக் கொடுக்கணும்!!" என்று அவர் ஒரு திட்டம் தீட்ட.. அவர் மருமகளோ இவர்களின் முதலிரவை தடுப்பதற்காக "நெஞ்சு வலிக்குது.. அய்யோ யாரும் இல்லையா.. எனக்கு நெஞ்சு வலிக்குதே" என்று பயங்கர சத்தம் போட்டார்.
அபர்ணா முதலில் பயந்து அம்மாவிடம் ஓடி வந்தவள் "என்ன மா செய்யுது? என்ன செய்யுது சொல்லுமா?" என்று நெஞ்சை நீவி தண்ணி கொண்டுவந்து கொடுக்க, அந்த தண்ணியை தட்டிவிட்டவர் "முதல்ல உங்க அப்பாவையும் அண்ணாவையும் கூட்டிட்டு வா.. எனக்கு நெஞ்சு வலிக்குது.. நான் இப்போவே போய்டுவேன் போல இருக்கு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. படப்படப்பா இருக்கு.." என்று விடாமல் பேசிக்கொண்டே இருந்தார்.
அபர்ணாவுக்கு அன்னையின் நடிப்பை கண்டு கொள்ள முடியவில்லை. அவளும் படப்பிடிப்பில் அப்பாவை எழுப்பி சொல்லிவிட்டு, மாடி ஏறி ஓடி சென்று அண்ணனின் அறை கதவில் கைவைக்க ராசாமணி பாட்டி பாய்ந்து வந்து அவளை பிடித்தார் "என்னடி? என்று கேட்டு.
"அப்பத்தா.. அம்மாவுக்கு நெஞ்சுவலிக்குதாம். அண்ணனை உடனே பார்க்கனும்னு சொல்லுது. அதான் கூப்பிட்டு வந்தேன்" என்றாள்.
"அறிவு இருக்காடி உனக்கு? நீனும் படிச்ச பொண்ணுதானே! காலேஜ் எல்லாம் போற தானே!! ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள் உள்ள ஜோடி இந்த நேரத்தில போய் கூப்பிடுறியே? பாக் அவங்க எந்த நிலைமையில் இருக்கிறார்களோ?" என்று சொன்னவுடன், அவளுக்கு அப்போது தான் அவர் சொன்னது முழுதாக புரிய வெட்கத்துடன் "என்ன அப்பத்தா எப்படி எல்லாம் பேசறீங்க?" என்று வெட்கப்பட்டாள்.
"உன் ஆத்தகாரிக்கு தான் கூறு இல்ல.. நீயும் அப்படியே வா இருப்ப.. வா நாமளே பார்க்கலாம்" என்று அவளை இழுத்துக்கொண்டு மருமகள் அறைக்குள் நுழைந்தார்.
தொடரும