6
"டேய்.. யாரு நீ.. யாரு நீ? நீ எப்படி இந்த ரூம்குள்ள? எவ்வளவோ தைரியம் இருந்தா.. இப்படி ஒளிஞ்சு இருந்து என்னை பார்த்திருப்ப.. போடா வெளியே.. போ டா.." என்று ஏகத்திற்கும் கத்தினாள் தாரிகா.
முதலில் தயாளனுக்குமே அதிர்ச்சி தான். அவன் வந்தபோது அறையில் யாருமே இல்லை. இப்போது குளியலறையில் இருந்து வெளிவரும்போது தன் முன்னே ஒரு பெண்.. அதுவும் அரைகுறை ஆடையுடன்..
"ஏய்.. இங்க பாரு.. நான் இந்த ரூமுக்கு வரும்போது யாரும் இல்லை. இப்போ நீ வந்துட்டு என்ன சொல்லாத.. அது என்ன போடாங்குற.. மரியாதையா பேசு!" என்றான் வரவழைக்கப்பட்ட நிதானத்துடன்.
"என்னது மரியாதையா? உனக்கு எல்லாம் என்னடா மரியாதை வேண்டிக் கிடக்கு? அங்க தொட்டு இங்க தொட்டு கடைசில கல்யாண மண்டபத்துல இத்தனை பேரு இருக்கும் போது கூட இப்படி மிஸ்பிஹேவ் பண்றிங்களே.. நீங்க எல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல.. உங்களை பெத்ததெல்லாம் ஒரு அம்மா தானே.." என்று இதுநாள் வரை அவளுக்கு தெரிந்த வசனங்களை விடாமல் அவள் கூறிக் கொண்டே போக.. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் தயாளன்.
ஏற்கனவே தங்கைக்கு முன் திருமணம் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு.. இந்த கல்யாண பேச்சு ஆரம்பத்திலிருந்தே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் சண்டை சச்சரவுகள்.. இதனால் அனைத்து பொறுப்பும் அவன் தலைமேல் வந்துவிட.. எல்லா பக்கங்களிலிருந்தும் ஏதோ ஒரு அழுத்தம் அவனைத் தாக்கிக் கொண்டே இருக்க.. அதனால் திருமணம் மாப்பிள்ளைக்கு உண்டான மகிழ்ச்சியும் நிறைவும் அவன் முகத்தில் இல்லவே இல்லை. இப்போது அதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல இந்த பெண்.
அதுவரை அவள் பேசியதே நினைவில் இருந்தவனுக்கு அப்போதுதான் அந்த அறையில் இவர்கள் இருவரும் மட்டுமே இருப்பது புரிய.. "அச்சச்சோ நீயும் நானும் மட்டும்தான் இந்த ரூமில் இருக்கிறோம்.. எவனாவது பார்த்தா அவ்வளவுதான்!! முதல்ல இந்த புடவையை கட்டு" என்றவன் அவள் அருகே செல்ல.. அவளோ தன்னை நெருங்கி வருபவன் எங்கே தன்னை ஆண்டு விடுவானோ என்ற பயத்தில் "கிட்ட வராதே.. கிட்ட வராதே.." என்று அவள் மானம் காக்க எட்டிப் போக..
அவனும் இன்னும் நெருங்கி "நீ புடவையை கட்டு.. இல்லைனா சுத்து. ஏதோ ஒன்னு பண்ணி உன்னை மறைச்சுக்கோ" என்று புடவையை தூக்கி கொண்டு அவள் பின்னாலே சுற்ற…
அதே சமயம் கதவு தட்டப்பட இருவரும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவரை பார்த்து கொண்டனர். இவன் அவளை நெருங்கி கையை பிடித்து புடவையை கொடுக்க முயல.. அவளோ அதை தப்பாக நினைத்து, ஆஆஆ என்று அலற.. அந்த சத்தம் வெளியில் இருப்பவர்களுக்கு நன்றாக கேட்டது.
"என்னப்பா உள்ள ஏதோ பொண்ணு அலறல் கேட்கிறது.. கதவை வேகமாகத் தட்டுங்கப்பா.. இல்ல உடைங்க.. என்ன ஆச்சோ? ஏது ஆச்சோ?" என்று வெளியே இருந்தவர்கள் பேசி கதவை பலமாக தட்ட ஆரம்பிக்க..
"போச்சு.. போச்சு.. எல்லாம் போச்சு!! லூசு சொன்னா கேக்க மாட்டியா? முதல்ல இந்த புடவை கட்டி தொலைடி!" என்று பொறுமையை கைவிட்டு தயாளன் கத்த..
"யாரு லூசு? நானா? நானா? நீ தான் லூசு.. உன் குடும்பமே லூசு!!" என்று அவனுக்கு மேல் கத்தினாள் தாரிகா.
"ஆமாம் ஒரு லூசுக்கு புரிய வைக்க நினைக்கிறேன் பாரு.. நான் லூசு தான்!!" என்று தன் தலையில் அடித்துக் கொண்டவன், புடவையை இவளும் வாங்க மாட்டேங்குறாள்.. இவள் புடவை என் கையில்.. இவளோ அரைகுறை ஆடையில்.. இந்த நிலையில் எங்களைப் பார்த்தால்…. ஆண்டவா!!! கையறு நிலை தான் தயாளனுக்கு.
ஆனால் தாரிகாவுக்கோ பின் நிகழ்வுகளைப் பற்றி ஏதும் கவலை இல்லை. அந்த தருணத்தில் தன்னை திட்டிய அவனை திட்ட வேண்டும்.. அவனை தன்னை நெருங்க விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே!!
பெண் புத்தியின் பின் புத்தி அங்கே வேலை செய்யவில்லை!?
"என்னடா கல்யாணத்தை முடிச்சோமா? சாப்பிட்டு கிளம்புனோமான்னு இல்லாம.. எல்லாத்துக்கும் நச்சு நச்சுனு ஏதாவது சண்டை போட்டுட்டு இருக்கான் உன் மாமன் இவனுங்க குடும்பத்துல வேற என்னத்த பெருசா எதிர்பார்க்க முடியும்? சண்டையும் சச்சரவும் தான்!! நல்ல குடும்பத்துல போய் பொண்ண எடுத்தேண்டா நானு" என்று அகிலனிடம் அரசியை காண்பித்து, அந்த இடத்திலும் மாமனார் வீட்டை மச்சானை பற்றி குறை பேசிக்கொண்டிருந்தார் கதிரேசன்.
அகிலனும் சங்கடமாக அம்மாவை பார்க்க, அவரோ இதெல்லாம் எனக்கு சகஜம்.. பல ஆண்டுகளாக கேட்பதுதான் என்பதைப்போல முகத்தை சுளித்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.
அப்போது தான் தாரிகா அங்கு இல்லை என்பதை உணர்ந்து "எங்கங்க தாரா?" என்று இவர் கேட்க..
"பிரண்டு யாரோ போன் பண்ணாங்கனு அந்தப்பக்கம் போன் பேச போனா" என்று, வேறு எங்கே போயிருக்க போகிறாள் என்று அலட்சியத்துடன் கூறினார் கதிரேசன்.
"போன் பேச ஆரம்பித்தால் அவளுக்கு நேரம் காலமே தெரியாது! மணிக்கணக்கா பேசிட்டே நிற்பா.. இந்த கூட்டத்துல எங்க போய் தேடுறது அவளை?" என்றவாறு அரசி கணவன் கைகாட்டிய இடத்தில் மகளை தேடி கொண்டு சென்றார்.
அப்போது இவர்களுக்கு கடந்து சென்ற ஒரு உறவினரிடம் "என்ன பங்காளி அங்க என்ன ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்கு?" என்று கதிரேசன் கேட்க..
"அதை ஏன் கேக்குற பங்காளி?" என்று சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்தவர் மெல்ல அவரின் காதருகே குனிந்து "இந்த தயாளன் பைய கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்தா வாரேன் சொல்லிட்டு ரூமுக்குள்ள போய் இருக்கான். கொஞ்ச நேரம் கழிச்சு காளிங்கன் போய் கதவை தட்டினா.. திறக்கும் மாட்டேங்குறான்! உள்ள ஏதோ பொண்ணோட சத்தம் வேற கேக்குதாம். கல்யாணத்த வச்சுகிட்டு இந்த பைய அடிக்கிற லூட்டிய பாரு.. கலியுகம்" என்றவாறு அவர் சென்று விட..அருகில் அமர்ந்து இருந்த அகிலனிடம் "பார்த்தியா உன் மாமன் மகன் பவுச" என்று எள்ளி நகையாடினார் கதிரேசன்.. அங்கே உள்ளே இருப்பது
தன் மகள் தான் என்று அறியாமல்…
அறிந்தால்…
தொடரும்...
வந்து & காளி தான் மோசம்னா....இவரும் அப்படி தான் இருக்காரு....
இதில், இவளோ நாள் பாதிக்க பட்டது என்னவோ அரசியும் & அன்பும் தான்....
நல்ல வாழ்க்கை துணை கிடைச்சும், தன் ஆசை, சுயநலம், கௌரவம் தான் முக்கியம்னு இதுவரை இருந்துட்டாங்க....
இவளும் என்ன இவளோ லூசா இருக்கா?????
ஒரு பொது இடத்தில் இப்படி தான் செய்வாளா?????
தயா பாடு கஷ்டம் தான்
@gowri ஹா ஹா.. அந்த குடும்பம் ஒரு கலவரம்.. ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு விதம்