2
திருச்சியின் பிரதான மட்டுமல்ல பிரம்மாண்டமான திருமண மண்டபம் அது!!
பட்டில் சரசரக்கும் சீமாட்டிகளும்...
பட்டு வேட்டி, ஃபுல் சூட்டில் உலா வரும் சீமான்களும்… நட்சத்திரங்களென கண்ணைப் பறிக்கும் இளம் பெண்களும்… நட்சத்திரங்களை தழுவி போகும் மேகமென அப்பெண்களை கண்களாலேயே தழுவி செல்லும் இளைஞர்களும்… என கல்யாண மண்டபமே களை கட்டியதிருந்தது.
"தயா.. இன்னும் டெஷர்ட் வரல.. என்னான்னு கொஞ்சம் பாரு.."
//ஃபோன் பண்ணிட்டேன் சர்வன்ட் கொண்டு வந்துட்டே இருக்கான்.. பத்து நிமிஷத்துல வந்துரும் கவலைப்படாதீங்க மாமி..//
"தயா.. தாம்புலத்துல வைக்க வேண்டிய கிஃப்ட் எல்லாம் ரெடி ஆகிட்டா?"
//அதெல்லாம் நேத்து ராத்திரியே ரெடி பண்ணியாச்சு.. கல்யாணம் முடிஞ்சவுடன் கெஸ்டுக்கு கொடுத்துடலாம்..//
"தயா.. சீக்கிரம் இங்க வாயேன் உன் மாமா பண்ற அலப்பறையை பாரு"
//மாமா.. என்னது இது.. முதல்ல வேட்டிய ஒழுங்கா கட்டுங்க.. சம்பந்தி வீட்டு காரங்க என்ன நினைப்பாங்க..
உங்க கட்டிங் தனியா வைச்சியிருக்கேன். ஆனா நைட்டு தான் தருவேன்//
என்றதும் அவர் தன் வேட்டியை தாறுமாறாக கட்டி கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார்.
இப்படியாக… எல்லாத்துக்கும் தயா தயாத்தான்! எதற்கும் தயா தயா தான் அங்கே..
"நாழி ஆகிறது.. சீக்கிரம் மாப்பிள்ளைய அழைச்சிட்டு வாங்கோ.. தாய் மாமா யாரு, அவரை மேடைக்கு கூட்டிட்டு வாங்கோ" என்று ஐயர் உரத்த குரலில் கூற..
"தயா.. தயா.." என்று யாரோ கூப்பிட "என்ன பா.. இதுக்கும் அவரை தான் கூப்பிடனுமா? வேற யாரையாவது கூப்பிடுங்க.. அந்த பையனை நானும் காலைல இருந்து பார்க்கிறேன் ஓடி ஆடி வேலை செஞ்சுக்கிட்டே இருக்கு" என்றார் ஒருவர்.
"அட நீங்க வேற நான் வேற.. அந்த தயா தான் மாப்பிள்ளை!" என்றவர் யாரையோ வரவேற்க கார் அனுப்பி கொண்டிருந்தவனை அவசர அவசரமாக இழுத்துக்கொண்டு மேடை ஏறினார்.
"டேய் மறக்காம வண்டிய அனுப்பிடுடா.. ரொம்ப முக்கியமான ஆளு அவரு.." என்று தன் நண்பனிடம் கூறிக்கொண்டே தன்னை அழைக்க வந்த சித்தப்பாவோடு மேடை ஏறி, அனைவருக்கும் வணக்கம் வைத்தவன், அங்கு அமர.. அவனுக்கு நலுங்கு வைக்கப்பட்டு தாய்மாமன் கைகளால் மாலை அணிவித்த பின், அவனின் மச்சானோடு தன் கைகளில் கல்யாணத்திற்கென்று கொடுக்கப்பட்ட உடைகளை வாங்கினான்.
அவன் தாம்பாளத் தட்டோடு அறைக்குள் நுழையும் அதேசமயம் ஆடலரசியின் குடும்பம் அந்த கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தது.
ஆடலரசியின் அண்ணன் அன்புச்செழியனின் மகனுக்குதான் இன்று திருமணம். அதற்காக பத்திரிக்கை வைக்க என்று தங்கையின் வீட்டுக்கு வந்தார் அன்று.
ஆரம்ப காலத்தில் சோமரசம்பேட்டையிலிருந்த அன்புச்செழியனும், கம்பரசம்பேட்டையிலிருந்த கதிரேசனும் ஒற்றுமையாக தான் வாழ்ந்தார்கள்.
ஒன்றுவிட்ட ஏதோ ஒரு வகையில் இருவரும் உறவுக்காரர்கள். ஆடலரசியை கதிரசனுக்கு திருமணம் செய்து கொடுத்த ஆறு மாதத்தில் அன்புச்செழியனுக்கும் வந்தனாவுக்கும் திருமணம் முடிந்தது.
இங்கே அகிலன் உண்டான அதே நேரத்தில் தான் வந்தனாவுக்கும் தயாளன் உருவாகியிருக்க.. நாத்தனார் முறை உள்ளவர்கள் கர்ப்பகாலத்தில் பார்த்துக்கொள்ள கூடாது என்று கூறிவிட, இங்கே ஆடலரசியின் மாமியார் "முதல் பிரசவம் தாய் வீட்டில் பார்க்காம இங்கே வச்சு பார்க்க வேண்டியதா இருக்கே.. ஒன்னுமத்த வீட்ல பொண்ணை கட்டி இப்போ என் பையனுக்கு தான் ஊர்பட்ட செலவு" என்று குறை குறையாக பேசி தள்ள.. அதில் நொந்து போன அரசி அண்ணனை அழைத்து அழுக ஆரம்பித்து விட்டார். தந்தை இல்லாமல் தந்தையின் ஸ்தானத்தில் வைத்து வளர்த்த தங்கையின் கண்ணீரை காண சகிக்காமல் தன் மனைவியை ஐந்தாவது மாதம் அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு ஏழாவது மாதம் தங்கைக்கு வளைகாப்பு போட்டு வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.
அதில் அவ்வளவு வருத்தம் வந்தனாவுக்கு.. தன்னைவிட தன் வயிற்றில் உள்ள குழந்தையை விட தங்கையும் அவளது குழந்தையும் தான் முக்கியமோ என்று ஆரம்பித்த அவர்களது பனிப்போர் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது ஒவ்வொரு சடங்கிலும் சம்பிரயத்திலும்.. விழாவிலும்..
"வீட்டு மாப்பிள்ளை அந்த கதிரேசனுக்கு கொடுக்கப்படுற முக்கியத்துவம்.. அந்த வீட்டின் மருமகளான உன் அண்ணன் எனக்கு கொடுக்கப்படவில்லை" என்று வந்தனா மனதில் எரிகின்ற நெருப்பில் கொஞ்சம் கொஞ்சமாக பெட்ரோலை ஊற்றினார் காளிங்கன்.
எறும்பு ஊற கல்லும் தேயும் போது.. பெண்ணின் மனது தேயாதா என்ன?
அடுத்தடுத்த குழந்தைகள் காதுகுத்து விழாக்களில் நாத்தனாரை துச்சமாக மதிக்க ஆரம்பித்தார் வந்தனா.. ஆடலரசி அண்ணனுக்கு தெரியாமல் தன்னுள்ளேயே புதைத்து தனிமையில் அழுது, அண்ணன் குடும்பத்தில் பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்டார்.
இப்படியாக நீர் பூத்த நெருப்பாக உள்ளுக்குள் இருந்த பிரச்சனை தாரிகாவின் சடங்கில் பெரிதானது.
விருந்து முடிந்து கேளிக்கை என்று குடித்த உறவினர்களின் வார்த்தை தடித்து போக அங்கே வெட்டும் குத்தும் தான் அரங்கேறியது.
தருணம் பார்த்துக் காத்திருந்த காளிங்கனும் தன் மச்சானுக்கு சப்போர்ட் செய்வதாக பேர் பண்ணிக்கொண்டு கதிரேசனை மேலும் மேலும் அவமானப்படுத்த.. அதில் பொங்கி எழுந்த கதிரேசன் அன்புசெழியனின் சட்டையை கொத்தாக பிடிக்க.. பதிலுக்கு அவரின் சட்டையை காளிங்கன் பிடிக்க… இவ்வளவு நாட்களாக எது நடக்கக்கூடாது என்று ஆடலரசி தனது கஷ்டங்களை தனக்குள் புதைத்தாரோ அதுவே நடந்து விட்டது.
ஆம்.. இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று இரு குடும்பங்களும் இரு வேறு திசையில் பயணித்து.
தொடரும்..
Oh no...தயா தான் தாராக்கு ஹீரோனு நினைச்சேன்....
இல்லையா??????
காளி.....எல்லா உறவுகளையும் காலி பண்ணிட்டு.....
வந்தனா நீயும் உன் வீட்டுக்கு போறது தானே முறை?????
இதில் ஆடல் மேல வன்மம் வளர்க்க என்ன இருக்கு?????
@gowri எல்லாம் குடும்ப அரசியல் தான் டியர்.. தான் தான்.. தனக்கு தான் எல்லாம் என்கிற எண்ணம்..