Share:
Notifications
Clear all

இஞ்சி இடுப்பழகி 28

 

Gowrimathu
(@gowrimathu)
Member Moderator
Joined: 3 months ago
Messages: 33
Thread starter  

பிள்ளைகள் மூன்றுபேரும் அம்மாவின் அருகாமையில் அவரைவிட்டு எங்கும் நகராமல் இருந்தனர் இத்தனைமாதம் இருந்த பிரிவை பாசழையில் நனைந்து சரி கட்டிக்கொண்டிருந்தனர்

அம்மாவை வீட்டுக்கு வரவழிச்சாச்சு மாமா கூட பேசவச்சுட்டா கண்டிப்பா அண்ணாவை ஏத்துப்பாரு

அதுக்கப்புறம் நம்மளுக்கு இங்கே வேலையே இல்ல வந்தவேலையை முடிச்சிட்டு பேசாம போகவேண்டியதுதான் எப்படியாவது அழகர்கிட்ட அருந்ததியை பத்தி பேசிட்டுபோகணும் என்னபண்ணலாம் எப்படிபேசலாம்  யோசித்துக் கொண்டிருந்தாள் மனிஷா 

 

 

விபீஷணன் அம்மாவிடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்து வெகுநேரம்கழித்து அம்மாவின் மடியில்படுத்தான் அவனுக்கு முன்பே சூர்யா மனிஷா இடம் பிடித்திருந்தனர் 

 

 

டாட் நான் ஒன்னு கேட்பேன் திட்டாமல் பதில் சொல்லணும் 

 

 

மைசன்  கொஸ்டீன் ஸ்டைலே  சரியில்ல சரி என்னன்னுகேளு சொல்ல முடிஞ்சா சொல்றேன்

 

 

 

டாடி நமக்கு  லிவிங்ரிலேஷன்ஷிப் சர்வசாதாரணம் வில்லேஜ்பக்கம் அதை எப்படி எடுத்துக்குறாங்க அதைபத்தி பேசினா கோபம் வருமா வைதேகி கோவத்தை புரிந்துகொள்ள அப்பாவிடம் கேட்க 

அத்தனைபேரும் அதிர்ச்சியாக  அவனைபார்த்தனர்

 

 

அழகி பதற்றமாக என்னடாபண்ணி தொலைச்ச யார்கிட்டயாவது எதையாவது சொல்லி தொலைச்சியா அதிர்ச்சியோடு கேட்க 

 

என்னாது இதுக்கே இப்படிரியாக்ஷன் குடுக்குறாங்க வைத்திகிட்ட லிவிங்பத்திபேசுனது தெரிஞ்சா என்னாகும் பயத்தில் எச்சில்விழுங்கினான்

 

 

நோ மம்மி சும்மாதெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன் சிரித்தவாறு அவன் மழுப்பிய பின்புதான் அவருக்கே நிம்மதியானது

 

இதோ பாருடா நம்ம ஊர்ல  எப்படிவேணாலும் பேசிக்கோ கேட்டுக்கோ பிரச்சனையில்ல 

ஆனா வில்லேஜ்பக்கம் இதபத்தி பேசினா செருப்பாலஅடிப்பாங்க அம்மாகூற

 

மாம் சந்தேகம் கேட்கலாம்னா   சும்மா கேட்டேன் மழுப்பலாககூறினான் 

சூர்யா அவனை சந்தேகமாக பார்த்தான்

பாம்பில் கால் பாம்பறியுமே வைதேகிகிட்ட ஏதாவது சொல்லி தொலைச்சிட்டானா 

அவகூடதானே அதிகமா சுத்துவான் யோசனையில் இருந்தான் 

 

ஆரம்பத்தில் இவர்களை கவனித்தவன் மனைவியோடு ஆட்டம்போட்டபடி வேலையையும் கவனிப்பதால் 

விபீஷணனை விட்டுவிட்டான் இப்போதுதான் இருவரை பற்றியும் யோசித்துப்பார்த்தான் 

 

 எப்போதும் இருவரும் சேர்த்து பேசிக்கொண்டிருப்பார்களே இப்போதெல்லாம் வைதேகி முகத்தை உம்மென வைத்துக்கொள்கிறாள் ஒருவேளை இவன் அவகிட்ட இப்படி கேட்டிருப்பானா இருந்தாலும் இருக்கும் தனியாபுடிச்சு நாலு மொத்துமொத்தி கேக்கணும் பாத்துக்கலாம்  

 

 

 

மம்மி பழக்கமில்லாத ஊரு யாராவது மேரேஜ்னு வந்துட்டா என்ன பன்றது அதுக்காகத்தான் கேட்கிறேன்

 

ஹலோ உடன் பிறப்பே என்பொண்டாட்டி முதல்முதலா என்னை சந்திக்கும்போது கூட இதைபத்தி பேசித்தான் அவகிட்ட செருப்படி வாங்குனேன் 

இதனால்தான் சண்டையே ஆரம்பிச்சது 

 என்னைபத்து எப்படி கேக்கலாம்னு கோபத்துல வீடியோவை போட்டுட்டு இங்கவந்துட்டா 

அதுக்கப்புறம்தான் அவளை நான் தேடி வந்தேன் தாலியும் கட்டுனேன்

 

நம்மகலாச்சாரம் வேற இங்கஇருக்கிற கலாச்சாரம்வேற 

 தப்பி தவறி சும்மாகூட வாய்வார்த்தையா சொல்லிடாத யாராஇருந்தாலும் செருப்பால அடிப்பாங்க 

மாமனோட காதுக்குபோனா அந்த வெப்பன்ஸை எடுத்து கழுத்தை சீவிட்டுபோயிருவாரு சூர்யா கூற அழகி சிரித்தார் 

 

ஆமாடா அவன்சொல்றது உண்மைதான் அவங்ககலாச்சாரம் வேற நம்ம கலாச்சாரம் வேற

லிவிங்க் உறவு முறையில கணவன்மனைவியாதான் இங்க இருக்கமுடியும் கல்யாணம் பண்ணிக்காம அந்த வாழ்க்கை வாழ்ந்தா 

அது விபச்சாரம் பண்றதுக்கு சமம் 

ஊருஉலகமும் பேசுறபேச்சுல தூக்குலதொங்கிசாகணும் அது எங்களை பொருத்தவரைக்கும் ரொம்பஅசிங்கமானது அந்தபழக்கமெல்லாம் உங்களுக்கும் வரக்கூடாதுன்னு தான் எங்களோட பாரம்பரியத்தை சொல்லிக்கொடுத்து வளர்த்துட்டு வர்றேன்

அங்க இருக்கிறமாதிரி இங்கஇருக்க முடியாது 

இப்படி பேசுறதையெல்லாம் நிறுத்திக்கோ 

என்ன பழக்கம் இது 

இதையெல்லாம் உங்களுக்கு நான் சொல்லிகுடுக்கலயே அழகி கோபமாக அழகி கேட்க  

 

 

அதனாலதான் செருப்பால் அடிச்சிட்டு போயிட்டாளே 

அப்போ இந்த ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறதுக்காகத்தான் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னாளா 

 இது தெரியாம நான் அப்படி சொல்லிட்டேன்போல அவதப்பா புரிஞ்சுகிட்டு அடிச்சாட்டாபோல 

 யோசித்தவன் மாம் நோ மாம் சும்மா கேட்டேன் தாயை சமாதானபடுத்தினான்

ஆத்தி நல்லவேளை நான் சொன்னதை தாய்குலம் கவனிக்கல நிம்மதி பெருமூச்சு விட்டான் சூர்யா

 

 

இன்னும் என்னடா யோசிக்கிற எதுவா இருந்தாலும் சொல்லு

 

நோ டாட் மேரேஜ் லைஃப் வெறுத்து போய் பிடிக்காதவங்த இங்கேஇருக்கிறவங்க என்ன பன்னுவாங்க 

இவங்களோட கலாச்சாரத்தை பத்தி யோசிச்சா 

இந்த ரிலேஷன்ஷிப்பிலருந்து விலகி போறது ரொம்பகஷ்டமா இருக்கும்போல 

 

 

ரொம்பகஷ்டம் தான் டைவர்ஸ்வாங்கணும் பேபிபொறந்திருந்தா பேபிக்காக தனியா போராடனும் 

மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க பிரிஞ்சபிறகு மறுபடியும் தனித்து வாழ்வது ரொம்பகஷ்டம் அதனால தான் எவ்வளவு கஷ்டமாஇருந்தாலும் அனுசரிச்சு வாழ்ந்துட்டு இருக்காங்க 

இப்படி இருக்கபோய்தான் அவங்களோட லைஃப் நல்லாஇருக்கு 

இல்லாட்டி மன்த்துக்கு ஒரு ஃபேமிலி கோர்ட்டுக்கு போகவேண்டியது இருக்கும்

மைக்கேல் கூற 

 

 

அதுமட்டுமில்ல கண்ணா ஹஸ்பண்ட்ஒய்ஃப்க்குளள என்ன பிரச்சினை இருந்தாலும் ரெட்டு குடும்பத்துக்குள்ள பேசி சரி பண்ணிப்பாங்க 

இல்லாட்டி வயசுல மூத்தவங்க ரெண்டு பேரையும் உக்காரவச்சு பேசி சேத்துவைப்பாங்க

கோர்ட்கேஸ் போற பழக்கம் இங்க கிடையாது

எல்லாத்தையும் கவனமாக கேட்டுக்கொண்டான் 

விபீஷணன்

 

தாரா அவர்களுக்கு உணவுகொண்டு வந்தாள் அப்பா கொடுத்து விட்டதாக சொல்லி வைதேகி அருந்ததியும் கொண்டுவந்து உணவுபரிமாறினார் 

விபீஷணன் உணவு பரிமாறிக்கொண்டிருக்கும் வைதேகிதான் கண்ணிமைக்காமல் பார்த்தான்

நம்மளும் வைத்துவ மேரேஜ் பண்ணிக்கிட்டா 

அம்மா அப்பா மாதிரி லவ்வா ஹாப்பியா வாழலாம்ல 

  கண்டிப்பா ஹாப்பியாஇருக்கமுடியும் 

ம்ம்ம் பேபி செம்மயா இருக்கா லிப்ஸ்டிக் போடுவாளா தெரியல லிப்ஸ் சூப்பர்

இதுக்கு பேர்தான் முக்குத்தியா அதுவும் அழகா இருக்கே 

டைமன்ட் போட்டா இன்னும் அழகா இருக்கும் 

எப்போவும் தாவணிதான் கட்றா 

சுடிதாரெல்லாம் போடுறதில்ல 

மாம்ஸ் திட்டுவார்போல 

ஹிப்பெல்லாம் தெரியுது

இத்தனைநாளும் பார்க்காத வேறுப்பக்கத்தை முதன்முதலாக பார்க்கஆரம்பித்தான் 

 

 

சாப்பிட்டுக்கொண்டிருந்த மனிஷா ஏதோ யோசனையோடு அவனை கண்டுகொண்டாள் 

இவன் எதுக்கு இவளைபாக்குறான் ஏற்கனவே என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு இதுல இவனும் காதல்கீதல்னு தேவையில்லாம வேணாம் டா சாமி 

விபீஷணன் கையைதொட்டு வேணாமென தலையாட்டினாள் 

 

 நாம வந்தவேலை முடிஞ்சதும் கிளம்பி நம்மநாட்டுக்கு போகணும் அம்மாவ மாமா ஏத்துக்கிட்டா அண்ணனோடபிராப்ளம் முடிஞ்சதும்

வைதேகிக்கு மேரேஜ் போகுது அவளையும் ஒருத்தன் விரும்பிட்டு இருக்கான் அந்தஅங்கிள் ரொம்ப நல்லஃபேமிலி 

மாமாவோட உயிர்ப்ரெண்ட் நீயும் காதல்கீதல்னுபோய் அவங்க கல்யாணம் தடைபட்டா மறுபடியும் அம்மா ஓடிபோனமாதிரி 

இவளும்போனா மாமாவை அசிங்கபடுத்துறமாதிரி ஆகிரும் 

அம்மா மாதிரி வைதேகியும் கண்ணீர்விடனும் 

அம்மா ஜென்மத்துக்கும் உன்னை மன்னிக்கமாட்டாங்க

 தயவுசெஞ்சு மனசுல என்னஇருந்தாலும் அதைஅழிச்சுரு 

நம்ம எதுக்காக வந்தோமோ அந்த வேலையை மட்டும் முடிச்சிட்டு போகலாம்

மனிஷா கூறியதும் அவனும் சரியென தலையாட்டினான் 

 

 

அண்ணன் தங்கச்சி ரெண்டுபேரும் குசுகுசுனு என்ன பேசிட்டு இருக்கீங்க தாரா கேட்டதும் ஒன்றுமில்லைசும்மாதான் பாட்டி எழுந்துட்டாங்களா சாப்டாங்களா பேச்சை மாற்ற 

 

 

பாட்டி இப்போதான் சாப்பிட்டாங்க தாத்தா உங்களபத்தி பேசிட்டு இருக்காரு கூறி முடிப்பதற்குள் பாட்டி தள்ளாடிகொண்டு நடந்துவர அவரை தாங்கிபிடித்தவாறு தாத்தாவும் வந்தார்

 

 

ஏண்டி இப்படி செஞ்ச உனக்குஎன்ன குறை வச்சேன் நல்லா வாழவைக்கனும்னு நினைத்தது தப்பா இத்தனைவருஷம் என்னைவந்து பாக்கணும் தோணலையா கல்யாணமானதும் அம்மாஅப்பா மூனாவதுமனுஷாகிட்டோமா ஏண்டி விட்டுட்டு போன

அழுதவரை பார்த்து அழகியும்அழுதார் 

 

 

அவரை சமாதானப்படுத்தி அமரவைத்து தன் கையால் அவருக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு அப்பாவின்காலைபிடித்தும் மன்னிப்பு கேட்டு ஒரு வழியாக அம்மா பிள்ளைகள் பேசிக்கொண்டனர் 

 

மைக்கேல் இருவரையும் பார்த்துவிட்டு ஒதுங்கி செல்ல மாப்பிள்ளை நீங்க எங்களை தேடிவந்ததையும் உங்களை அசிங்கபடுத்துனதை என்மககிட்ட சொல்லவே இல்லையா

 

 

அவளுக்கு அண்ணன்மேல ரொம்ப பாசம் நான் இதை சொல்லபோயி அண்ணனை வெறுத்துட்டா என்ன பண்றது 

எனக்குத்தான் யாருமில்லை என்னிக்காவது மனசு மாறி சேந்து 

அழகியாவது ஃபேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்னதான் இதைபத்தி சொல்லல கூறிய மைக்கேல் கையை பிடித்து மன்னிப்புகேட்டார் 

 

அழகிக்கு பார்த்தமாப்பிள்ளையும் நல்ல பையன்தான் நீங்களும் நல்லவர்தான் உங்க மனசபுரிஞ்சுக்காம உங்களை கஷ்டப்படுத்திட்டேன் என்னைமன்னிச்சிருப்பா என்பொண்ணு ராணிமாதிரி இருக்கானு இப்போதெரிஞ்சுகிட்டேன்

பெத்தவர்களை விட்டுட்டு போனவ இத்தனை வருஷம் எங்களை நினைக்காம இருந்திருக்கான்னா 

அவ புருஷன் அவளுக்கு தாயாக இருந்து நல்லபடியா பார்த்துகிட்டதாலதானு 

 இப்போ தெரிஞ்சுகிட்டேன் என் மகளை நல்லபடியா பார்த்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி மாப்பிள்ளை

 

 

அதெல்லாம் வேணாம் என்னோட மனைவிய நல்லபடியா பார்த்துக்கிறது என்னோட கடமை நீங்கஎதையும் வொரி பன்னிக்காதீங்க சிரித்தவாறுகூறினார் 

 

 

உங்களுக்கு எத்தனைபுள்ளங்க 

 கூட்டிட்டு வந்திருக்கலாமே அவர்கேட்டதும் அருந்ததிக்கு அத்தை பேசியது நினைவுக்கு வந்தது 

 

புள்ளைங்க எப்படி இருப்பாங்கனுகூட பாக்கவிடல அவர் சோகமாக 

மைக்கேல் அருகிலிருக்கும் மூன்று பிள்ளைகளையும் பார்க்க அவர்களோ வேண்டாம் என்று தலையாட்டினர்

 

 

மூணுபசங்க எல்லாம் டாக்டர் வக்கீல்தான் சொந்தமா ஹாஸ்பிடல்வச்சு பாத்துட்டு இருக்காங்க நாங்க இங்கவந்து நிலைமை எப்படிஇருக்குன்னு பாத்துட்டு அதுக்கப்புறமா அவங்கள வரவழைச்சுக்கலாம்னு முடிவுபண்ணிட்டு வந்தோம் உங்க மகன் இன்னும் கோவத்துல இருக்காரு இப்போ கூட்டிட்டு வந்தா எப்படி 

 அவங்க கோவம் போனபிறகு என் புள்ளைங்கள வரவைக்கிறேன் 

 

 

 அவன் எப்போஏத்துக்கிறது நான் எப்போ என் பேரன்பேத்தி பார்க்கிறது 

கண்கலங்கியவரை பார்த்த மனிஷா விபீஷணன் சூர்யா அவர்தோளில் கைவைத்தனர்

 

 

நாங்க உங்களுக்கு பேரன்பேத்தியா இருக்கோம் டோன்ட் வொர்ரி மனிஷா கூற 

 

இந்த புள்ள வந்தபிறகுதான் இந்தவீடே உயிர்ப்போடஇருக்கு தெரியுமா நல்லா கலகலன்னு பேசுறா எங்கள நல்லா பாத்துக்குறா வீராசாமி கூட உங்கள தேடி கண்டுபிடிக்கணும்னு இந்தபொண்ணு கிட்ட தான் வந்து சொன்னான்

வெளியாளுங்கயார்கிட்டயும் பேசாதவன் இப்தபொண்ணுகிட்டபேசுறான் 

 நாளும் தெரிஞ்சபொண்ணு என் பேத்தியா இருக்ககூடாதானு நிறையதடவை நினைச்சேன் அந்தபுள்ள முகஜாடைகூட என் பொண்ணு மாதிரி இருக்கு ம்ம்ம் குடுத்துவைக்கல பரவாயில்லை நீங்களும் என் பேரன்பேத்திதான் சிரித்தவாறு கூறியவரை மூன்றுபேரும் அணைத்துக்கொண்டனர்

 

 

அப்பா வெகு நேரமாகியும் வெளியே வராததால் அவரைதேடி வந்த வீராசாமி உள்ளே நடக்கும் பாசம்மழைகளைப் பார்த்து வெளியே நின்றுவிட்டார்  

அம்மா மகள் பாசபினைப்பு 

மாமன் மருமகன் பாசமழை 

தாத்தா பேரன் பேத்தி காம்போ 

அவரை அசைத்துபார்த்தது 

அப்பா எப்படிதான் மத்தவங்ககூட ஒத்துபோறாரோ தெரியல என்னால்தான் இப்படி ஒத்துமையா இருக்கமுடியல அவர்கள் குடும்பமாக இருப்பதுபோலவும் தான் தனிப்பட்டுநிற்பதுபோலவும் தோன்றியது 

 

 

தமிழு வைதேகி அங்க என்னபண்ணிட்டு இருக்கீங்க நேரமாச்சா இல்லையா வாங்க ஆத்தா பேசியாச்சா தூங்கலயா வீட்டுக்கு வாங்க 

வெளியே நின்று சத்தம்போட 

 

இல்லப்பா நான் என்மககூட இருக்கேன் ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்திருக்கோம்ல்ல எங்களுக்கு பேசுறதுக்கு நிறைய இருக்கும்

 பக்கத்து வீட்டு பூவாயி 

 எப்படியெல்லாம் திட்டிட்டு இருந்தா தெரியுமா என்பொண்ணு வாழ்க்கையிழந்து தெருவுலதான் நிப்பாளாம் 

 பொண்ண கூட்டிட்டுபோனவன் தெருவுலவிட்டுட்டு ஓடிருப்பான் சொல்லிட்டுஇருந்தா அதையெல்லாம் சொல்லி நாளைக்கு அவகிட்டயே கூட்டிட்டு போய்காட்டணும் என்மகள் ராணிமாதிரி இருக்கா நீதான் வக்கத்துபோயி வாழ வழியில்லாம தெருவுல உக்காந்துருக்க சொல்லணும்

இன்னும் என்னென்னபேசினா தெரியுமாடி அழகி 

அவர் அடுத்த பேச்சுக்கு தாவ 

அப்படியா சொன்ன அப்புறம் என்னாச்சும்மா கேட்டவாறு அழகி பார்க்க

 

 

 உனக்கு தூக்கம் வந்தா நீபோய் தூங்குடா மகனிடம் கூறிவிட்டு 

மறுபடியும் ஊர்கதைகளை பேச ஆரம்பிக்க அழகிஅப்படியா இப்படியா திமிரு திமுரு விடியட்டும் பாத்துக்குறேன் அம்மாவுக்கு ஈடு கொடுத்து ஊர் கதைகளை பேசிக் கொண்டிருந்தார்

 

 

தாரா சூர்யாவை ஏக்கமாகபார்த்தாள் ரொம்பநாளாச்சு என்று

அவனும் முறுக்கியமீசையோடு கண்ணடித்து தோட்டத்துக்குபோலாமா வாயசைத்தான் 

அவளும் தலையாட்டிசிரித்துவிட்டு வீட்டுக்கு வாங்க கூறிவிட்டு சென்றாள் 

 

விபீஷணன் வைதேகியிடம் மன்னிப்பு கேட்கநினைத்தான் 

மனிஷா வெள்ளைச்சாமி குடும்பத்தைபற்றிய விவரம் பிள்ளைகள் மனதில் இருக்கும் ஆசைகளையும் கூறி அதற்கு முட்டுக்கட்டை போட்டாள் 

 

நடு இரவு வரை பேசிய அம்மாமகள் ஹாலிலேயே படுத்துக்கொள்ள 

மைக்கேல் உள்ளேபடுத்திருக்க 

சத்தமில்லாமல் எழுந்த சூர்யா 

வெளியேற நாய்கள் பழகிவிட்டதால் குறைக்காமல் இருந்தது திருடன்போல் நுழைந்து மனைவியைஎழுப்பியவன்  சத்தமில்லாமல் குளியலறைக்குள் இழுத்துக்கொண்டுபோய் அவசரதாம்பத்யம் நிகழ்த்திவிட்டு மூச்சு வாங்க அமர்ந்தான்

 

 

நான் உன்னோட ஒரிஜினல்புருஷன் டி ஆனா உங்க வீட்டுக்கு வந்ததிலிருந்து திருட்டுதனம் பன்னவச்சுட்டாங்கதெரியுமா கள்ளபுருஷன் மாதிரி களவாணிதனம் பன்னவச்சுட்டான் உங்கப்பன் 

கடுப்பாக கூற 

 

 

எங்கப்பா வை திட்டுனிங்க கெட்டகோவம் வந்துரும் 

நான்தான் தனியாஇருக்கேனே அப்புறம் எதுக்கு பாத்ரூமுக்கு தூக்கிட்டு வந்தீங்க

 

 

 

உன் தங்கச்சி வந்துட்டா என்னபண்றது அதான் 

 

 

 ரொம்ப விவரம்தான் அவளுக்கு தனிரூம் குடுத்துட்டாங்க கவலைப்படவேணாம் குளிச்சுட்டு வாங்க வெளியேறபோக 

சேர்ந்தே குளிக்கலாமென நடுஇரவில் 

ஒன்றாக குளியல்போட்டனர்

 

 

இவளுக்கு என்னாச்சு தெரியல நல்லா பேசிட்டுஇருந்தவ இப்போல்லாம் பேசுறதேகிடையாது என்னவாஇருக்கும் இரவெல்லாம் யோசித்தவன் பகல்ல பேச வைக்கமுடியாது நாயா அலையவிடுவா அப்பாவை சமாளிக்கமுடிய்து இந்தநேரத்துல பேசினாதான் யாருக்கும்தெரியாது 

நடு இரவில் எழுந்துபோனவன் அன்னநடை நடந்து மனிஷா அறைக்குள் நுழைந்தான் 

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top