22
வர்த்தினி அவள் பெற்றோருடன் சென்றவுடன் தஞ்சாவூரிலேயே ஹோட்டலில் தங்கினான் வினய். அப்போதும் அவனது மனம் ஏதோ விரும்பத்தகாத நிகழ்வு நடக்க போவது போலவே குறுகுறுத்து கொண்டிருக்க அந்த உறுத்தல் தாங்க முடியாதவன், இதுநாள் வரை தஞ்சமடையாத இறைவனை நாடி தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று அந்த மகாதேவனை வழிபட்டு பிராகாரத்தில் அமர்ந்தவனுக்கு மனம் சற்று அமைதியானது. அவன் மனதில் ஒரு ஸ்பார்க் அன்று பத்மா பேசிய 'எங்க ஆத்து பொண்ணு' இப்போது நெருட.. உடனே வில்லியம்ஸூக்கு போன் செய்து, வெங்கடேசன் வீட்டில் உள்ளோரை கண்காணிக்கச் சொன்னான்.
அவர்கள் இந்தியா வருவதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக வில்லியம்ஸ் மூலம் அறிந்தவனுக்கு, நொடியில் புரிந்து விட்டது வர்த்தினியை பெண்கேட்டு தான் வருகிறார்கள் என்று..
அதன்பின் பிரதீபனை பற்றிய விவரங்களை எல்லாம் தோண்டித் துருவ ஆரம்பித்தான். அப்போதுதான் அவனது காலேஜ் மேட்டான கேத்திரி என்ற பெண்ணை அவன் காதலித்த விவரம் தெரிய வந்தது. ஆனால் அன்னைக்கு பயந்து அந்த காதலை வெளியே தெரியாமலேயே பார்த்துக்கொண்டான். மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்ததை தோண்டித் துருவி கண்டுபிடித்து வினய்யிடம் வில்லியம்ஸ் சொல்ல.. அந்த ஒரு புள்ளியில் இவன் ரோடே போட்டான்.
இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் மொத்தமாக கேத்தரின் குடும்பத்தையே அவனது தனி சாட்டர்ட் விமானத்தின் மூலம் அள்ளி வர செய்தவனுக்கு, கேத்திரினை பார்த்து சற்று அதிர்ச்சிதான்..
அவளிடம் கேட்க இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத கேத்திரினோ பிரதீபன் தான் காரணம் என்று சொல்லி, ஆனால் நாங்கள் பிரிந்து விட்டோம் என்று கேஷுவலாக கூற.. அடுத்து வினய் செய்த மூளை சலவையில் கேத்தரினை விட அவளது அம்மாதான் வெகு தீவிரமாக இருந்தார் பிரதீபனை கேத்தரினுக்கு திருமணம் செய்து வைக்க..
அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்து, அவனின் திட்டப்படியே நடததி முடிக்க..
அடுத்ததாக சுப்பு மற்றும் மீனாட்சி குடும்பத்தை மடக்க.. அவனின் அடுத்த ப்ளான் பியை எக்ஸிகியூட் செய்தான்..
திருவையாற்றில் அவர்கள் பகுதிக்கு பெரிய தலையான நாராயணனை அவரது வீட்டில் தனது பெற்றோருடன் சந்தித்தான்.
அதுவும் இங்கே தான் பேசினால் அது அவனின் காதல் தீவிரத்தை வெளியில் காட்டி விடும் என்று எண்ணி, அன்னையும் தந்தையும் முன்னிறுத்தி அவன் பேச வைக்க.. தரணீஸ்வரன் தன் பேச்சில் வல்லவர் என்பதை தொழிலில் மட்டுமல்ல நாராயணனிமும் நிரூபித்தார்.
மஞ்சுளாவும் தன் பங்குக்கு கனகா மாமியை காக்கா பிடிக்க.. உச்சி குளிர்ந்து தான் போனார் அவர்.
நாராயணனோ, பெரிய தொழிலதிபர் தன் வீட்டில் அதுவும் தனது மகனுக்காக.. தங்கள் ஊர் பெண்ணை மணக்க.. தன்னிடம் வந்து உதவி கேட்கிறார் என்பதே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதுவுமில்லாமல் பத்மா மீது இருந்து கடுப்பு.. மஞ்சுளாவின் அலட்டல் இல்லாத பேச்சு கனகா மாமிக்கு அவர்களை பிடித்து விட ஏற்கனவே யோசனையில் இருந்த நாராயணனை இவர் பேசி பேசியே வழிக்கு கொண்டு வந்து விட்டார்.
அதன்பின் தான் நாராயணன் அவர்களை அழைத்துக் கொண்டு வர்த்தினியின் வீடு நோக்கி வந்தது..
ஒருவழியாக அங்குள்ள மற்றவர்களை எல்லாம் பத்மா மற்றும் பிரதீபனின் நடவடிக்கை காட்டி, வினய்யை அவர்கள் வீட்டு மாப்பிள்ளையாக சம்மதிக்க வைக்கும் நிலையில், சுப்புவும் மீனாட்சியும் தனியாக பேசி விட்டு வந்தவர்கள், தங்கள் பெண்ணின் வாழ்க்கைக்காக ஒரு கண்டிஷன் வைக்க அதிர்ந்துதான் போனார்கள் அங்குள்ள மொத்த பேரும்.. மஞ்சுளாவை தவிர்த்து...
"என்ன சுப்பு.. மீனாட்சி கிட்ட பேசிட்டு வந்தியே நோக்கு சம்மதம் தானே?" என்று நாராயணன் கேட்க..
"எங்களுக்கு பூரண சம்மதம் மாமா.. ஆனால் ஒரு கண்டிஷன் இருக்கு.. அதுவும் கொஞ்ச நேரம் முன்னாடி நல்ல குடும்பம்னு நினைச்ச நமக்கு தெரிஞ்ச பிள்ளாயான்டானே இப்படி இருக்கிறச்ச.. தெரியாத வேற ஊர்ல வளர்ந்தவாளை நம்பி நம்ம பொண்ண கொடுக்கும்போது இந்த கண்டிஷன் எல்லாம் ஒன்னும் தப்பு இல்லைன்னு எனக்கு தோன்றது" பீடிகையுடன் சுப்பு ஆரம்பிக்க அதை ஆமோதிப்பது போலவே மீனாட்சியின் முகபாவனையும்...
'அப்படி என்ன பெரிதாக இருக்கும் இவர்கள் முறையில் திருமணம் செய்ய நினைப்பார்களோ? அப்படி இருந்தால் ஒத்துக் கொள்ள வேண்டியதுதான்' என்று தரணீஸ்வரன் நினைக்க...
'நம்மையும் நான்வெஜ் சாப்பிடக்கூடாது வெஜிடேரியனா மாற சொல்லிவிடுவார்களோ?' என்று அதிதீவிர யோசனையில் வினய்...
மஞ்சுளாவோ மற்ற யாரையும் பார்க்காமல் மீனாட்சியின் முகபாவனைகளை மட்டுமே அவதானித்தவாறு அமர்ந்து இருந்தார்.
"அது வந்து..." என்று எப்படி சொல்ல என்று அனைவரும் முகத்தையும் தயக்கத்தோடு பார்த்தபடி அந்த சிவா பட்டாசியார் முழித்துக் கொண்டே இருக்க.. மீனாட்சி தான் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறேன் என்பதை காட்ட அவர் கையை பிடித்து ஒரு அழுத்தம் கொடுக்க.. மனைவியைப் பார்த்து புன்னகைத்தவர் திரும்பி அனைவரையும் நோக்கி கரம் கூப்பினார்.
"இதை நான் சொல்றதுனால நீங்க யாரும் என்னை தப்பா நினைச்சா கூட நேக்கு பரவாயில்ல. ஆனா எங்க பொண்ணோட வாழ்க்கை நன்னா இருக்கனும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் இதை சொல்றோம். அது என்ன கண்டிஷனா.. மாப்பிள்ளை இந்தியாவுக்கே வந்திடனும் மொத்தமாக" என்று கூற..
அங்குள்ள மொத்த பெரும் அதிர்ந்து போய் எழுந்து நின்றுவிட்டனர் மஞ்சுளாவை தவிர..
காரணம் அவனின் தொழில்கள்.. பல நாடுகளில் பரவி இருந்தாலும் அவனின் ஆணி வேர் என்பது லண்டனே..
அதனை எப்படி வேரோடு பிடுங்கி வந்து வேறு இடத்தில் நட முடியும். சிறு செடியை வேரோடு பிடுங்கி புதிய இடத்தில் நட்டால் சில காலத்தில் அது பிடித்து தழைத்து விடும். ஆனால் மிகப்பெரிய ஆலமரம்.. விழுதுகள் பல விட்டு ஒரு நூற்றாண்டாக வாழ்ந்ததை மொத்தமாக பெயர்த்து எவ்வாறு வேறு இடத்தில் நடுவது என்று அதிர்ச்சியில் தரணீஸ்வரன் இருக்க...
லண்டன் என்பது அவனின் தாயகம் போன்றது.. பல தலைமுறைகளாக அங்கேயே வாழ்ந்து வரும் அவனுக்கு அதை விட்டு எப்படி இந்தியா வருவது என்று பெரும் குழப்பம்.
மஞ்சுளாவோ.. என்னதான் நாம் வெளிநாட்டில் வாழ்ந்து வந்தாலும் நமது பூர்வீகம் இங்கே தான்.. அதனால் இது போன்ற பெரும் அதிர்ச்சி எல்லாம் அவர் அடையவில்லை.
தரணி குடும்பம் அமைதியாக நின்றிருக்க சுப்புவை கேள்வி கேட்டது என்னவோ அவரது உறவினர்களே!!
"என்ன சுப்பு.. இப்படி ஒரு கண்டிஷன போடுற?" அதிர்ந்து முதலில் வாயைத் திறந்தார் நாராயணன்..
"அதானே அவா அந்த ஊர்ல காலம் தொட்டு வாழ்ந்து வரவா.. திடீர்னு வந்து இந்தியால தான் இருக்குன்னு சொன்னினா எப்படி?" என்று கனகா மாமியும் கேட்க..
"இப்ப ஷத்த நாழிக்கு முன்னாடி பத்மா வெங்கடேசன் தம்பதி பிள்ளையான்டானுக்கு கல்யாணம் பேசி இருந்தேள்... அப்படி செய்தியிருந்தேள்னா இந்த பொண்ணை அங்க அனுப்பி வச்சு இருப்பேளேன்னோ.. இப்போ இவா கிட்ட மட்டும் ஏன் இந்த கண்டிஷன் நீங்க போடுறேள்?" என்று உறவினர்களில் ஒருவர் கேள்வி கேட்க..
இவர்கள் மூவரும் கேட்ட அதே கேள்வி தான் மற்றவர்களின் மனதிலும்.. அதன் பிரதிபலிப்பாய் அவர்கள் அனைவரும் சுப்புவையும் மீனாட்சியையும் பார்க்க..
"உண்மைதான்.. பெரியவா நீங்க சொல்றதெல்லாம் நான் ஒத்துக்குறேன்.. என்ன தான் லண்டனில் காலங்காலமாக வளர்ந்தாலும் அவங்களோட பூர்வீகம் தமிழ்நாடு தானே.. அங்க தானே வர சொல்றேன்.. அதுமட்டுமில்லாம நான் சூடு கண்ட பூனை நிலைல இருக்கேன். நன்னா தெரிஞ்ச குடும்பத்து பிள்ளான்யான்டான் சரியில்ல.. இதுல கண்காணாத தேசத்தில் வளர்ந்த இவரைப் பத்தி நான் என்ன நினைக்கிறது. கூடவே பொண்ணு அவா கூட அனுப்பி வச்சுட்டா.. அவ எப்படி இருக்கான்னு எங்களால சட்டுனு கூட போய் பார்க்க முடியாது. ஒன்னு அவங்க மொத்தமா இங்க தமிழ்நாட்டுக்கு வரட்டும்.. இல்லேன்னா... எங்களை மன்னிச்சிடுங்கோ" என்று தன் இரு கைகளையும் கூப்பி கூறினார்.
தரணீஸ்வரனுக்கு கோபம் சுறுசுறுவென ஏற "நீங்க சொல்றது வெறும் குடுத்தனத்தை மாத்த இல்லங்க.. ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையே.. என் தாத்தா பாட்டன் எல்லாம் கட்டிய ஆண்ட தொழில் அது.. அப்படி என்ன நாங்க உங்க பொண்ணுக்கு பண்ணிடுவோம்னு நீங்க நினைக்கிறீங்க? விரும்பித்தானே நாங்க வந்து உங்க பொண்ணை கேட்கிறோம். நீங்க எப்போ நினைக்கிறீங்களோ சொல்லுங்க.. ஒன்னு வர்த்தினியை நாங்க அனுப்பி வைக்கிறோம் எங்க பையனோட.. இல்லைன்னா நீங்க வரதுக்கு நாங்க அரேஞ்ச் பண்றோம்" என்று இது முடியவே முடியாது என்பதாக தரணீஸ்வரன் கூற..
மஞ்சுளாவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார்.
வினய் இந்த சூழ்நிலையை எவ்வாறு கடந்து வரப் போகிறோம் என்ற குழப்பத்துடனே தன்னவளை பார்க்க.. அவளோ தந்தை இவ்வாறு பேசுவார் என்று சிறிதும் அறியாததால், அதற்கு தரணீஸ்வரனின் கோபத்தை பார்த்து மிரண்டு போய் நின்று கொண்டிருந்தாள். கூடவே அவளது கண்கள் வினய்யை விட்டு சற்றும் நகர்த்தவே இல்லை.. அவனின் பதில் என்னவாக இருக்கும் என்று கைகளை பிசைந்தவாரே தவிப்புடன் அவனை பார்த்தாள்.
கண்களெல்லாம் கலங்கி.. உதடுகள் துடிக்க.. முகத்தில் தவிப்பு.. ஏமாற்றம்.. அழுகை என பலவித பாவங்களையும் காட்டியவாறு நின்றவள் கோலத்தை பார்த்தவன் தாவி சென்று அணைத்துக்கொள்ள மனம் துடித்தது.
அவள் காதல் சொல்லும் போது நினைத்திருந்தான். இந்த தேவதை பெண்ணின் காதலுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது!! என்று நினைத்து தருணம் இப்போது வர.. அவனவன் காதலுக்காக தன் உயிரைக் கொடுக்க சித்தமாக இருக்கும் போது.. நான் வெறும் தொழிலை மட்டும் ஏன் விட்டு கொடுக்க கூடாது தன்னவளுக்காக?' என்று நொடியில் முடிவு எடுத்தவன் வர்த்தினியின் தந்தையை பார்த்து "எனக்கு சம்மதம்" என்றான் இரு கைகளையும் பாக்கெட்டில் விட்டபடி தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து..
இதை அங்கு உள்ளவர்கள் யாரும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. தரணியும் அதிர்ச்சியில் "வினய்.. வாட் இஸ் திஸ்?" என்று உறும..
நாராயணன் முதல் சுப்பு, மீனாட்சி, வர்த்தினி, பிரியா கனகா மாமி என்று அங்கிருந்த சொந்தங்கள் அனைவரும் இவனின் இந்த பதிலில் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றனர்.
மஞ்சுளா மட்டுமே முகத்தில் புன்னகை தவழ தன் மகனை பார்த்திருந்தார் அவருக்குத்தான் தெரியுமே தன் மகனின் காதல் தீவிரத்தை..
"டாட்" என்று தரணீஸ்வரனின் கையை அவன் பிடிக்க.. அவரோ அவனை முறைத்தபடியே கையை தட்டி விட்டார்.
"எங்க அப்பா கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்று அனைவர் முன்னாலும் கூறியவன், அவரது கையை பிடித்துக் கொண்டு அங்குள்ள அறைக்கு அழைத்து சென்றான்.
ரூமுக்குள் வந்ததும் தன்னை கேட்காமல்.. கலந்து ஆலோசிக்காமல் முடிவை அறிவித்து விட்ட மகன் மீது கோபித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார் தரணி.
"டாட்.. இங்க பாருங்க நான் இதுக்கு முன்னால எப்படி இருந்தேன்னு உங்களுக்கு தெரியும். இப்போ என்னோட பாஸ்ட் எல்லாம் தூக்கி போட்டு என்னை எனக்காகவே ஒருத்தி காதலிக்கிறா.. அவள நான் எப்படி விட? அவ காதல சொன்னபோது நான் கூட நினைச்சேன் இவளுக்காக இந்த உலகத்துல என்ன வேணா செய்யலாம்னு.. ஆனா அதற்கான தருணம் எனக்கு கிடைச்சிருக்கு.. அப்படி என்ன கேட்டார் என் மாமனார்? அவர் பொண்ண அவரு பக்கத்துல இருக்கனும்னு விருப்பப்படுறாரு.. எல்லா அப்பாவுக்கும் உள்ள ஆசை தானே"
தரணி ஏதோ சொல்ல வாயை எடுக்க "நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியுது டாட்.. அதுக்காக பாட்டன் முப்பாட்டன் சேர்த்து வைத்த தொழிலை தியாகம் பண்ணிட்டு இங்க வந்து புதுசா வேரூன்ற முடியுமான்னு கேக்குறீங்க.. அவங்க ஆரம்பிச்சு இருந்தாலும் நம்முடைய நாடு அது இல்லையே டாட்.. ஏதோ ஒரு நாட்டுக்கு தானே நாம சம்பாதித்து தரோம். அங்கே பிறந்த நாம வளர்ந்து இருந்தாலும், நம்ம மனசுக்குள்ள நாம தமிழன் என்ற உணர்வு இருக்கு.. மறந்து கூட நீங்களும் தாத்தாவும் அங்கு வாழ்ந்த வேறு ஒரு வெளிநாட்டு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலையே.. தேடி தேடி கண்டுபிடிச்சு தமிழ்நாட்டிலிருந்து தானே கல்யாணம் பண்ணிக்கிட்டு போனீங்க..
அதுலேயே தெரியலையா நம்ம மனசால.. பழக்கவழக்கத்தால.. சம்பிரதாயத்தால தமிழனா மட்டும் தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம்னு. இவ்ளோ நாளா மாம் என்கிட்ட சரியாக பேசாததுக்கு காரணம் கூட என்னோட பாஸ்ட் தானே..
காரணம் அவங்களால அதை அக்செப்ட் பண்ண முடியல.. இப்ப கூட பாருங்க என் மாமனார் சொன்ன கண்டிஷனை கேட்டு இங்குள்ள ஒட்டுமொத்த பேருமே அதிர்ச்சியில் ஸ்தம்பித்தோம்.. ஆனா மாம்.. ஒரு சின்னப் புன்னகையோட உட்கார்ந்து இருக்காங்க.." என்று வினய் கூற அப்போதுதான் தரணிக்கும் நியாபகம் வந்தது, மஞ்சுளா அமைதியாகவே அமர்ந்திருந்தார் என்பது..
"என் ஆளுக்கு மட்டும் இல்ல டாட்.. உங்க ஆளுக்கும் தமிழ்நாடுதான் பிடிச்சிருக்கு.. என்ன டாட் சொல்றீங்க?" என்று கேட்க.. ஏற்கனவே தன் மனைவியோடு சரியான வாழ்க்கை வாழவில்லை என்று ஒருவித உறுத்தலுடன் தான் சமீப காலமாக இருந்தார் தரணி.. அதை இப்போது நிவர்த்தி செய்து விட அவரும் மறுப்பாரா என்ன? ஆனாலும் தொழிலதிபராக அவரின் மனதுக்குள் ஒரு வலி இருக்கத்தான் செய்தது...
"ஆனாலும் வினய்.. தொழில்.." என்ற குரலே எழும்பாமல் அவர் கேட்க.. "நான் யோசிச்சிட்டேன் எல்லாம்.. வாங்க போலாம்" என்று வெளியில் அவரை அழைத்து வந்தவன்..
"எங்க வீட்ல எல்லாருக்கும் இதில் சம்மதம்" என்று அன்னையை பார்த்துக் கொண்டே இவன் கூற, மஞ்சுளாவின் சிறு புன்னகை அழகாக விரிந்தது..
வர்த்தினி அதிர்ச்சியில் வாய் பிளந்து நிற்க.. அந்த கூட்டத்திலும் அவளின் இதழ்களை ரசனையோடு பார்த்தவன், ஒற்றைக்கண் அடித்து, இதழ் குவித்து முத்தத்தை பறக்க விட்டான்... வர்த்தினிக்கோ வெட்கப் புன்னகை பூச...
மற்றவர்கள் எல்லாம் தங்களுக்குள் பேச.. இதை பிரியா கவனித்துவிட.. அதுவரை அவர்கள் மட்டுமே விரும்பி பெண் கேட்டு வந்திருப்பதாக நினைத்து இருந்தவளுக்கு, அக்காவின் எதிர்வினையை பார்க்கும் பொழுது, "அட இந்த பூனையும் லவ் பண்ணி இருக்கும் போலையே?" என்றுதான் நினைத்துக் கொண்டாள்.
"ஆனால் எங்களுக்கு கொஞ்சம் டைம் வேணும் ஒரேடியா இந்தியாவுக்கு எல்லாத்தையும் ஷிப்ட் பண்ணுவதற்கு.. மொத்தமா குடும்பம்.. தொழில் எல்லாம் மாத்துவதற்கு ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ் இருக்கு... சென்னையில இருந்தாலும் எங்களோட தொழில் அங்கேயும் கொஞ்சம் நடந்து கொண்டுதான் இருக்கும் இரண்டையும் பார்க்கிற மாதிரி தான் இருக்கும்" என்று வினய் கூற..
உறவினர்களோ வினய்யின் பேச்சை கேட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் பாராட்டி தள்ளிவிட்டனர். இன்னும் சிலர் சுப்புவிடம் சென்று "இப்படிப்பட்ட ஒரு மாப்பிள்ளை கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் டா அம்பி".. "அவாவா பொண்ணு கிட்ட இருந்து என்ன பேரும் தான் பார்க்கிறா.. ஆனால் இந்த பிள்ளையோ ஒட்டுமொத்தமா எல்லாத்தையுமே உன் பொண்ணுக்காக மாத்துறாருன்னா பாரு.. உன் பொண்ணு யோகக்காரி தான்" என்று கூற சுப்புவுக்கும் மீனாட்சிக்கும் நெகழ்ச்சியாக மனம் நிம்மதியாக இருந்தது. தங்கள் நன்றியை அவர்கள் வினய் பெற்றோருக்கு கூறினர்.
அதன்பின் என்ன.. கடகடவென்று அன்றே நிச்சயதாம்பூலம் மாற்றிக்கொண்டு அடுத்த மூன்று மாதத்தில் திருமணம் என்று பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது.
இரண்டு நாள் தவிப்பு எல்லாம் ஒரு முடிவுக்கு வர தன்னவளை ஆசையுடன் பார்த்தான் வினய். அவளோ குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருக்க.. அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாக எழுந்தவன், "நான் வர்த்தினி கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்" என்று கூறினான். அவன் கேட்கவில்லை.. ஆணையாக கூற.. அனைவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.
நமட்டு சிரிப்புடன் நாராயணன் சுப்புவை பார்த்து.. "மாப்பிள்ளைக்கு பொண்ணு கிட்ட பேசுறதுக்கு விஷயம் இருக்கும் இல்லையா? அனுப்பி வை" என்று கூற..
சங்கடத்துடன் சுப்பு தலையாட்ட.. வர்த்தினி தன் அறைக்கு வினய் பின்தொடர சென்றாள். அவளின் பின்னழகை ரசித்தவாறு பின் தொடர்ந்தான் காதல் கள்வன்..
பின்னிருந்து அவள் காதின் ஓரம் குனிந்து "கதவை சாத்தட்டுமா?" என்றவனின் கேள்வியில், அவள் அரண்டு போனவளாய்.. "அச்சோ வேண்டாம்.. பெரியவா எல்லாம் வெளியே இருக்கா" என்று பதற..
அவளின் ஒவ்வொரு செய்கையையும் அதில் தெரிந்த அச்சமும்.. தவிப்பும்.. இயலாமையும்.. நாணமும் வந்தது முதல் பார்த்து கொண்டு தானே இருந்தான் வினய். கள்ளச்சிரிப்புடன் அவளிடம் "ரெஸ்ட் ரூம் ப்ளீஸ்" என்க..
அவள் அந்த அறையை காட்ட.. உள்ளே நுழைந்தவன் அவள் சுதாரிக்கும் முன்.. மெல்லிடையில் கையை கொடுத்து தன்னை நோக்கி இழுக்க.. அவனின் அதிரடியில்
திகைத்து போனவளாய் வெட்கத்துடன் குனிந்து கொள்ள.. இளம் முறுவலை சிந்தியவன், அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்த.. அவனின் எண்ணம் புரிந்து துடிக்கும் உதடுகளை கடித்தப்படி நாணத்தோடு நின்றவளின் விழிகளை ஆழ்ந்து நோக்கியவன், விரல்களால் அவள் உதட்டை விடுவித்து, அடுத்த கணம் அவளின் மெல்லிய அதரங்களை கவ்வினான் வன் அதரங்கள் கொண்டு..
முதல் உரிமையான முத்தம்!!
மென்மையாக ஆரம்பித்து ஆழ்ந்து வெகு அழுத்தமாக அந்த மென் இதழ்களில் தேன் பருகி கொண்டிருந்தான் வண்டென... அவனது இறுகிய உதடுகளில் பொதிந்து இருக்கும் அவளின் உதடுகள் நடுங்கத் தொடங்க.. தன்னவனின் முதுகை அழுந்தப் பற்ற.. மெல்ல விடுவித்தவன், இன்னும் தன் முத்தத்தில் கிறங்கி நின்றவளின் முன்
காற்றை ஊத.. அதிர்ந்து விழித்தவளை பார்த்து கண் சிமிட்டி விட்டு ஹாலுக்கு சென்று விட்டான்.
அதன்பின் அவர்களிடம் விடை பெற்று சென்றவன் அடுத்த மூன்று மாதங்களுக்கு மிகவும் பிஸி.. முதலில் தாயையும் தந்தையும் லண்டனில் விட்டுவிட்டு, சென்னையில் தங்களுக்கு என்று ஒரு வீட்டை வாங்கி அதில் குடி பெயர்ந்தான். பின் அங்கு இருக்கும் அவர்களின் தொழில்களை இங்கேயும் மாற்ற.. நலிந்த நிறுவனங்களாக பார்த்து அதனை வாங்கி அவனது தொழில்களை விரிவாக்கினான். இனி புதிதாய் ஒரு நிறுவனத்தை கட்டமைப்பது கடினமே.. அதைவிட ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் தொழிலை கையகப்படுத்தி அவனின் தொழில் திறமை.. ஆளுமை கூடவே அவர்களின் ஈஸ்வர் குழுமம் என்ற பெயர் பெரும் வரவேற்பை பெற.. இரண்டு மாதங்களிலேயே வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்ததான் வினய் விஸ்வேஸ்வரன்!!
அதன்பின் அவன் செய்து வந்த ஒவ்வொரு தொழிலையும் இம்மாதிரியாகவே மாற்ற.. மூன்று மாதங்கள் என்கிற நிலைமை ஆறு மாதங்களாக ஆனது. மாதத்திற்கு ஒரு முறை திருவையாறு சென்று வர்த்தினியை பார்த்து விட்டு வருவான். அவளுக்கும் அவனுக்கு தெரிந்த சபாக்களில் வாய்ப்பு வாங்கி தர.. இப்போது வர்த்தினி முன்னேறி வரும் இளம் பாடகர்களில் ஒருத்தி...
கிட்டத்தட்ட சரியாக எட்டு மாதங்களுக்குப் பிறகு.. அவனின் பெரும்பான்மையான தொழில்களின் தலைமையகம் சென்னை என்று மாறி இருக்க.. லண்டனில் இருந்தவற்றை வில்லியம்ஸின் உதவியோடு கையாண்டான். அவ்வப்போது நேரில் சென்று பார்ப்பதோடு சரி..
தரணீஸ்வரன் மஞ்சுளாவும் வினய்யோடு சென்னையிலேயே வந்து தங்கிவிட..
முதலில் சிறிது நாள் இங்கு உள்ள போக்குவரத்து தட்பவெப்ப நிலைக்கு மிகவும் கஷ்டப்பட்டார் தரணீஸ்வரன். மனைவியின் மகிழ்ச்சியை கண்டவர் தானுமே ஓரளவு பொருந்தி கொண்டார்.
அதன் பின் கல்யாணம் தேதி குறிக்கப்பட..
கல்யாணம் திருவையாறிலும், அதன்பின் ஒரு ரிசப்ஷன் சென்னையிலும் என்று முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு நகைகள் புடவைகள் என்று எடுப்பதற்கு பெண் வீட்டாரை அழைத்தவர் தன் செல்ல மருமகளுக்கு வாங்கி குவித்து விட்டார் மஞ்சுளா.. கூடவே ப்ரியாவிற்கும் வாங்க மறக்கவில்லை...
பிரம்ம முகூர்த்தத்தில்.. வர்த்தினிக்கு என்றே பிரத்யேகமாக நெய்யப்பட்ட பட்டுப் புடவையில்.. அதற்கு தோதாக மஞ்சுளாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டிக் நகைகளோடு சித்திர பாவை எழுந்து வந்ததது போல, அன்ன நடையிட்டு வந்த தன்னவளைத்தான் கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வினய். சுற்று இருப்போரின் கிண்டல்களை எல்லாம் சற்றும் காதில் வாங்காமல்.. அவனவளின் பேரழகை வைத்த கண் எடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வினய். திருமணம் வர்த்தனி முறைப்படி நடைபெற.. பெண்ணை அழைத்து வந்தவர்கள் சுப்புவின் மடியில் அமர வைக்க.. கன்னியாதானம் முடிந்து..
மங்கல வாத்தியங்கள் எங்கும் முழங்க..
மஞ்சள் அரிசியும் பூக்களும் அட்சதையாய் தூவப்பட.. அங்குள்ளவர்கள் அனைவருமே கல்யாண மந்திரத்தை ஓத... தன் முன்னே அழகு பதுமை என தந்தையின் மடியில் அமர்ந்து காதல் பொங்க தன்னை பார்க்கும் அந்த அழகு தேவதையின் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து மூன்று முடிச்சு போட்டான் வினய் விஸ்வேஸ்வரன்.
அன்று அவர்களுக்கான இரவு...
அறைக்குள் நுழைந்தவளின் பின்னாலிருந்து அணைத்தவன், அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க.. தன்னவனின் காதல் சரசத்தில் இன்ப சாரலாய் காதல் வீச.. அதில் அவள் பொன்னிற தேகம் செங்காந்தள் நிறம் பூசிக் கொண்டது.
இதற்கு முன் பல முறை அவளை அணைத்து இருக்கிறான் தான். அப்போதெல்லாம் தோன்றாத அந்த சொந்தம்.. தன் கணவன் என்ற அந்த உரிமை இப்போது பெண்ணவளுக்கு தோன்ற.. அவனின் ஒவ்வொரு அழுத்தமான தீண்டலும் காரிகைக்கு காமத்தில் காளை அவனுடன் சேர்ந்து ஊஞ்சல் ஆட மனம் விழைந்தது.
அவள் எண்ணத்தை படித்தவனாக சட்டென்று அவளை இரு கைகளில் ஏந்தியவன்.. மஞ்சத்தை தஞ்சம் அடைய செல்ல..
கூச்சமுற்றவள் சங்கடத்துடன் அவனின் விழிகளை பார்க்க.. அங்கே அவன் விழிகள் சொன்ன செய்தியில் நாணமுற்று அவனை மார்போடு அனைத்துக் கொண்டாள்.
மெல்ல மஞ்சத்தில் அவளை விட.. அவளது கண்களோ காதலிலும் தன்னவன் மேல் தாபத்திலும் கலந்து பொங்க.. சட்டென்று அவனது முகத்தை தன்னை நோக்கி இழுத்தவள்.. அவளவன் அதரங்களில் மென்மையாக முத்தமிட..
முதன்முறையாக அவளாக கொடுக்கும் முத்தம்.. முதல் முத்தம்.. உயிர் வரை இனித்தது அவனுக்கு.. அதில் அவனது உணர்வுகளை தட்டி எழுப்பி மோகம் கொள்ள செய்ய.. மெல்ல மெல்ல ஆடைகள் விடுதலை வாங்க.. பல்லவன் சிற்பமென தன் முன்னால் இருந்த மனைவியின் அழகை ரசித்தான் அவன்.
ஆனால் அவனுக்கு தன் மனைவியின் ரகசியங்களை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை.. உதடுகளில் காதலின் விளைவால் வந்த சிவப்பு.. அவள் முகத்திலோ மன்னவனின் செயலால் மோக புன்னகை.. இளஞ்சிவப்பு சங்கு கழுத்தில் தேனாய் வியர்வை துளிகள் ஓட.. அவை சென்று விழுந்த இடத்தினை பார்த்தவனின் இதழ்களை நா வருட.. நிமிர்ந்த ஆலய கோபுரமாக நின்ற மென்மைகளின் மென்மைகளை அவன் கைகள் சோதனையிட.. ஆலிலை வயிற்றில் இருக்கும் நாபி சுழியை, கைகளோடு இதழ்கள் பின் தொடர.. அவனின் சரசங்கள் எண்ணிலடங்காமல் செல்ல பாவையவள் சுகத்தில் முனகினாள்.
ஆடவன் தன் உதடுகளால் அவள் பெண்மை எனும் பக்கங்களில் கவி எழுத.. கவிக்கு அணி சேர்க்க கைகளும்.. நாவும் துணக்கு செல்ல.. இந்த முப்படைகளின் தாக்குதலில் மலரினியின் தேகம் செங்காந்தள் என மலர.. உதடினால் தீட்டிய பக்கங்களை நாவினால் சரி பார்க்க.. தகித்து துடித்து போனாள் பெண்ணவள். மன்னவன் செயலில் கொலுசு சிணுங்கலுக்கு போட்டியாக பாவையின் செல்ல சிணுங்கல் கேட்க.. அதற்கு ஆடவன் அந்தரங்கமாக பதிலளிக்க.. காதலும் காமமும் மோகமும் அங்கே ஆட்கொண்டது.
அவனது திண்மையான உடல் அவன் வெண் பஞ்சு உடலில் அழுந்த அவள் மீது படர்ந்தான்.. அங்கே மென்மை.. வன்மை என ஒவ்வோரு உணர்வுகளும் கிளர்ந்தெழ அவற்றை தன் மனையாளிடம் காட்டி தன்னவளை கொண்டாடி தீர்த்தான் விடிய விடிய.. இந்த காதல் தீவிரவாதி..
கொள்ளையிட வருவாள்...