இதோ மைக்கேல் அழகியும் சொந்தஊருக்கு வந்துவிட்டனர் பல வருடங்கள் கழித்து சொந்தஊரை பார்க்கவும் அழகிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது
ஆறுதோட்டம் சுற்றிய இடங்கள் பற்றியும் கூறிக்கொண்டுவந்தார் இதோ வீட்டுக்கு முன்னால் ரோட்டில் கார் நிற்க
உள்ளுக்குள் பயத்தோடு காரைவிட்டு இறங்கவில்லை
கார் சத்தம் கேட்டதும் மனிஷா வெளியே வந்து ரோட்டிலிருக்கும் காரை பார்த்தவள் உள்ளேபோய் அண்ணன்களிடம் கூறி அவர்களை அழைத்துக்கொண்டு செல்ல வீராசாமி வந்துவிட்டார்
சார் உங்க சிஸ்டர் வந்துட்டாங்க போல கண்கள் மின்ன கூறுவும் அலட்சியமாக பார்த்தார்
அம்மாவோட உடம்பு சரியாகனும் அவங்களோட ஆசைக்காகதான் இங்க வரவச்சிருக்கேன் அதை தெளிவா அவங்ககிட்ட சொல்லிரு அண்ணா தம்பினு பாசம் மயிறு படம் ஓட்றதா இருந்தா வந்த வழியேபோகசொல்லிரு கூறிவிட்டு அவர் செல்லஅண்ணன் தம்பி இருவரும் மாமாவை கடுப்பாக பார்த்துவிட்டு கார் இருக்கும் பக்கம் சென்றனர்
தாரா வைதேகி கூட அவர்களோடு சென்றனர் பலமிதம் கழித்து தன் பிள்ளைகளை பார்த்த அழகிக்கு கண்ணீர் முட்டிகொண்டு வர அணைத்துகூட இரண்டுவார்த்தை பேச முடியவில்லை ஆசையோடு மகளைஅணைக்க ஓடி வந்தவரை கண்களால் தடுத்து நிறுத்தினாள் மனிஷா
தாரா வைதேகி அவர் கையைபிடித்து எப்படிஇருக்கீங்க அத்தை என்னை மன்னிச்சிருங்க சொல்லாம் வந்துட்டேன் சத்தமில்லாமல் கூற
தமிழு அங்க என்ன பேச்சுவேண்டி கிடக்கு உன்னை யார் அங்க க்ஷபோகசொன்னது வைதேகி வாங்க வீராசாமி சத்தம்போடவும் பார்வையால் மன்னிப்பு கேட்டு அந்த இடத்தை விட்டு சென்றனர்
என் அண்ணனுக்கு இன்னும் என்மேல இருக்கிற கோபமே போகல அவரு கூப்பிட்டதும் என்னை ஏத்துக்கிட்டாரு நினைச்சு வந்தேன் மறுபடியும் கண்ணீர் விட்டார்
அம்மா இப்பதானே கொஞ்சம்கொஞ்சமா மாறியிருக்காரு கூடிய சீக்கிரம் எல்லாம மாறிடும் பீல்பன்னாதிங்க
ஆங்கிலத்தில் பேசும் மனிஷா தமிழ் பேச ஆரம்பித்தனர்
ரொம்ப தூரத்திலிருந்து வந்திருப்பீங்க ரெஸ்ட் எடுங்க அவர்கள் முன்னே நடக்க தோட்டத்தையும் பார்த்து கண்கள கலங்கியவாறு அவர்களை தொடர்ந்தார் அழகி
அம்மா
தோட்டத்துக்கு போறேன்மா சத்தமாக கூறிக்கொண்டு அழகர் வேட்டியைமடித்து கட்டிக்கொண்டு வெளியே வர அழகு ஆச்சரியமாக அவனை பார்த்தார்
கட்டிடம் காளையாக முறுக்கும்சை வைத்து வெள்ளைவேட்டி சட்டை சகிதம் அழகாக இருந்தான் அண்ணன்மவன் எவ்வளவு பெரியவனாக வந்துட்டான் ஆளு அசத்தலா இருக்கான் மனிஷாவுக்கும் இவனுக்கும் ஜோடைபொருத்தம் அழகா இருக்கும்ல
மனிஷா அழகரும் மனக்கவலத்தில் நிற்பதுபோல் கனவு காண ஆரம்பித்தார்
மனிஷாதான் இரண்டு மூன்று முறை அவரை உலுக்கி வர சொன்னாள்
மணி
கொஞ்சம் இருடி அது என் அண்ணன்மகன்தானே அடேங்கப்பா எவ்வளவு அழகாஇருக்கான் பாரு இவன்தான் உன்ன ஊருக்கு வர சொல்லிருந்தா பையன் உன்னை விரும்புறான . உனக்கு புடிச்சுருக்கா மனசுலஇருக்குறதை சொல்லுடி எப்படியாவது ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணிவைக்கிறேன்
ம்மா நீ பொறந்தவீட்லயே உன்னால உரிமையா வரமுடியல நாங்கவந்துகஷ்டப்பட்டு உன்னை வரவைச்சுருக்கோம் இந்த லட்சணத்துல
அவனுக்கு கல்யாணம்வேறற பண்ணி வைப்பியோ உங்கண்ணன் பார்த்துட்டு சும்மா இருந்திருவாரு நீவேற ஏம்மா வாயவச்சுட்டு சும்மாஇரும்மா கடுப்பாக அவள் நடக்க அழகியால் அமைதியாக இருக்கமுடியவில்லை யாரையும் எதிர்பார்க்காமல் அழகர்சாமி முன்னாடி பார்த்தார் அவர் கையைபிடித்து என் அண்ணன் மகன்தானே நீ
நான்யாருனு உனக்குதெரியுதா நான்உன்னோட அத்தை அழகம்மா என்பேருஉன்பேர்கூட அழகுலதான் ஆரம்பிக்குது சிரித்தவாறுகூறியதும் அப்பாபார்த்தால் திட்டுவாரே
அப்பாவை அசிங்கப்படுத்தி ஓடிபோனவர் என்று கோபம் அவனுக்கு இன்னும் இருந்தது
ஆனால் முகத்திற்கு நேராக தூக்கியெறிந்து பேசவில்லை நல்லா இருக்கியா பா பாசத்தோடு கேட்கவும் நல்லாஇருக்கேன் ஒற்றைவார்த்தையோடு முடித்துவிட்டு கிளம்பிவிட்டான்
அழகம்மா முகம் வாடிபோனது
ஒரு ரெண்டு வார்த்தை அதிகமாபேசினா என்னவாம் நல்லா இருக்கேன் அத்தைனு ஒரு வார்த்தை சொல்லகூடாதா என் அண்ணன் இவன்கிட்டயும் என்னை தப்பா சொல்லி அவன் மனசையும் கெடுத்துவச்சிருக்கார் போல அவர் மறுபடியும் கண்ணீர் விட மைக்கேல் அவரை தேற்றி அழைத்துக்கொண்டு போனார்
கண்ணகி நம்ம வீட்டுக்கு வந்தவங்க எதிரியாஇருந்தாலும் உபசரிச்சு அனுப்புறதுதான் நம்மளோட பழக்கம் இருக்கபோற வரைக்கும் சாப்பாடுல எந்த குறையும் வைக்காமல் பார்த்து அனுப்பு
சூர்யா இவங்களை நீங்க தங்ககயிருக்குற வீட்ல தங்கவச்சுக்கோங்க
வீராசாமி கூறிவிட்டு போக தலையாட்டினான் சூர்யா
முறுக்கிகொண்டு போகும் அண்ணனை கண்ணிமைக்காமல் பார்த்தார்
என் அண்ணன் கொஞ்சம் கூட மாறவேஇல்ல தலையில அங்கங்க வெள்ளமுடி மட்டும்தான்
மத்தபடி என் அண்ணன் அப்படியேதான் இருக்காரு நடந்துபோனவரை பார்த்து அழகி கூறியது மாமாவையும் அம்மாவையும் பார்த்த சூர்யா
ஆமா வசீகரமா வாலிபத்தோடு இருக்கணும்னு
வரம் வாங்கிட்டு வந்தவர்பாருங்க அப்படியே இருக்காறாம் நீ வேற ஏமா உருட்டிட்டு இருக்க
பேசாம வாமா
அந்த மனுஷன் கொஞ்சம் கூட மதிக்கமாட்றாரு நீதான் பாசத்தை கொட்டிட்டு இருக்க கடுப்பாக கூறிய சூர்யா வாயைமூடினாள் மனிஷா
வாயவெச்சுட்டு சும்மா இருங்கணணே
வீட்ல ஆளுங்க வேற இருக்காங்க யாராவது மாமாகிட்ட போட்டுகொடுத்துட்டா போட்டதிட்டமெல்லாமே நாசமாயிரும் மெதுவாககூறியவாறு அவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு அழைத்துசென்றனர்
என்னடி இது அவ்வளவு பெரியவீடு இருக்கும்போது நீங்க எதுக்கு இங்க இருக்கீங்க இந்த வீட்ல வெளியாளுங்க வேலைக்காரங்கதான் தங்குவாங்க
நீங்க எதுக்கு தங்கிருக்கீங்க அதிர்ச்சியோடு அழகி கேட்க
வெளியாளாதான் நாங்க வந்திருக்க்கோம்
அப்போ எங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும் மனிஷாகேட்டதும் அழகி கண்கலங்கி விட்டாள்
தன் பிள்ளைகளை படித்தபடிப்பை பார்த்தாவது தன் பிள்ளைகளுக்கு மரியாதை கொடுத்து வீட்டில்தங்க வைப்பார் என்று நினைத்திருந்தார்
ஆனால் வேலைக்காரர்கள் தங்கும் இந்த வீட்டில் தங்கவைத்ததை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை மறுபடியும் கண்ணீர்தான் வந்தது
ஏசி இல்லாத வீடு வீட்டிற்குள் தண்ணீர் வசதி இல்லை
வெளியே இருந்து சுமந்துகொண்டு செல்லவேண்டும் டைனிங்டேபிள் இல்லை
கீழே அமர்ந்து சாப்பிடவேண்டும்
வந்தவர்களை அமரவைத்து பேச ஒரு சோபா மட்டுமே
தன்னுடைய சுயநலத்துக்காக தன் பிள்ளைகளை மரியாதை குறைவாக நடத்துகிறோம் என்று அழகிக்கு கண்ணீர்வந்தது
தனக்கு ஒன்று என்றால் மனம்எதையும் நினைக்காது இதுவே தன் பிள்ளைகள் தன்கணவனுக்கு மரியாதை குறைவு ஏற்பட்டால் தாங்கிக்கொள்ள முடியுமா என்ன மூன்றுபிள்ளைகளையும் பார்த்து கண்ணீர் வடித்தார்
அம்மா சும்மா அழுகாதீங்க இங்க எதுக்குவந்தமோ அந்தவேலையை பார்க்கவேண்டாமா உங்கம்மா அப்பாவ
அழுதமுகத்தோட போய்பார்த்தா டாடி உங்களை கொடுமைபடுத்திட்டார்னு தானே நினைப்பாங்க எங்களை அசிங்கப்படுத்தாம சிரிச்ச முகத்தோட இருங்களேன்
ஆமா நீ சொல்றது சரிதான் இப்படி அழுதுட்டு இருந்தான் சந்தேகம் வந்து மறுபடியும் என் பொண்டாட்டிய இங்கே இருக்கவச்சுருவாங்க
கொஞ்சம் சிரிச்ச முகத்தோடுஇரும்மா மைக்கேல் கூற
மாமா சொல்றதுதான் சரி அத்தை அழுதா உங்ககூட அனுப்பமாடடோம் சிரித்துகொண்டே வந்த வைதேகி பழச்சாறை கொடுத்தாள்
ஏண்டி உங்கம்மா ஒன்னும் சொல்லலையா அழகி கேட்டதும்
அவங்க என்ன சொல்லபோறாங்க
அப்பா சொல்றதுதான் வேதவாக்கு அவங்க அப்பாவமீறி எதுவும்பண்ணமாட்டாங்க கவலைப்படாதீங்க குளிச்சிட்டு உங்கம்மா அப்பாவை பாருங்க கூறிய வைதேகியை நெட்டிமுறித்தார்
அழகி
நீயும் அழகா இருக்கா உன்னோட அக்கா என்மூத்தமகனை கட்டிக்கிட்டா நீ என் இளைய மகனை கட்டிக்கிட்டு என் மருமகளா வர்றியா
உன்னை தங்கத்தட்டுல வச்சு தாங்குறேன் அழகி கூற
வைதேகி சிரித்துக்கொண்டிருந்தவள் முகம் அமைதியானது
ம்மா சும்மாவே இருக்கமாட்டீங்களா
வைதேகிக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க அத்தைஇருக்காங்களே அவங்களோட அண்ணன் மகனுக்கும் மேரேஜ் பிக்ஸ்பண்ணிட்டாங்க உங்கஅண்ணன் மகனுக்கும் அத்தையோட அண்ணன் மகளுக்கும் அதே நாள்லதான் மேரேஜ் இனிமே அவங்களோட மேரேஜ்பத்தி எதுவும் பேசி அவங்களை சங்கடப்படுத்தகூடாது மனிஷா கூறியதும் மறுபடியும்சோகமானார்
பெரிய வீட்டில் சமையலறையில் இருந்த கண்ணகிக்கு அழகி அவர்பிள்ளைகளை அழைத்து வராததால் நிம்மதி
எங்கே குடும்பத்தோடு வந்து தன் கணவர் மனம்மாறி தங்கை பிள்ளைகளுக்கு தன்பிள்ளைகளை கொடுத்து விடுவாரோ என்று உள்ளுக்குள் பயமாக இருந்தது
பெரும்பாலும் எல்லாமருமகள்களுக்கும் தன் நாத்தனார் பிள்ளைகளை விட தன் அண்ணன் பிள்ளைகள்தான் மருமகளாக வரவேண்டும் பலரும்நினைப்பார்கள்
நாத்தனார் குடும்பத்தில் பெண்எடுக்கவோ பெண்கொடுக்கவோ யாருக்கும் விருப்பமிருக்காது
அதே ஆசைதான் கண்ணகிக்கும் இருந்தது
அண்ணன் பிள்ளைகள் தனக்கு மருமகனாக மருமகளாக வரவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கதானே செய்யும் கண்ணகிக்கும் அதேஆசைதான்
நாத்தனார் பிள்ளைகளால் அண்ணன் சொந்தம் தூரமாகிவிடுமா என்று உள்ளுக்குள் கலக்கமாகஇருந்தது
நல்லாவே இல்ல அவங்க தனியா வந்துருக்காங்க நிம்மதியோடு வாய்விட்டு கூற அவருக்கு துணையாக இருந்த அருந்ததி
எதுக்கு இப்படி சொல்றீங்க உங்க நாத்தனார் பிள்ளைங்கவர்றதுல உங்களுக்கு இஷ்டமில்லயா மாமா மாதிரி நீங்களும் இருக்கிறீர்களா
நான் எதுக்குடி அவங்களை வெறுக்கபோறேன்
என்கிட்ட நல்லா விதமாத்தான் நடந்துக்குவா எனக்கும்
அவளுக்கும் சண்டைசச்சரவு எதுவும் வராது ஆனா எனக்குமருமகள்னு முடிவாகும்போது என் அண்ணன் பிள்ளைங்கதான் எனக்கு வரணும்னு நான் ஆசைப்படுவேன் நான்மட்டும்இல்லை
எந்த பொண்ணா இருந்தாலும் தன்னோட அண்ணன் பிள்ளைங்கதான் தனக்கு மருமகனா மருமகளா வரணும்னு நினைப்பாங்க நாத்தனார் புள்ளைங்க மருமகளா வரணும்னா யாரும் விரும்பமாட்டாங்க
அதேமாதிரி நீ வந்துட்ட ஆனா கல்யாணத்துக்குள்ள அவங்கபிள்ளைங்க வந்து கல்யாணத்தை நடக்க விடாம பன்னிருவாஙகளோனு பயமாஇருக்கு அதனாலதான
அத்தை நீங்க பண்றது ரொம்பதப்பு அவளுக்கும் தாத்தா பாட்டிய பாக்கணும் தாய்மாமாவை பாக்கனும்னு ஆசை வராதா
வரும் நான் இல்லைன்னு சொல்லல திடீரென அவங்கபிள்ளைங்க வந்து என்பிள்ளைங்க அவங்களும் மனசு ஒத்துபோய்
உங்களை மறுத்துட்டா நான்என்ன பண்ணுவேன்
அவரு அக்கா தங்கச்சிங்க வரட்டும் போகட்டும் நான்எதுவும் சொல்லமாட்டேன் ஆனால் எனக்கு மருமகளா என்பிறந்தவிட்டு சொந்தம்தான் வரனும்
அவங்களுக்கு தாத்தாவை பார்க்க ஆசை இருந்தா உங்ககல்யாணத்துக்கு வந்துபாக்கட்டுமே கல்யாணம்முடிஞ்சதும்
கூட இருக்கட்டும் நான் எதுவும் சொல்லமாட்டேன் வயசுவந்த புள்ளங்களை வச்சுட்டு நாத்தனார் பிள்ளைகளையும் தங்கவச்சுட்டு ....
வேணாம்ப்பா
பயமாயிருக்கு ஏதாவதுகுளறுபடி நடந்து கல்யாணம் நின்னுட்டா என்னபண்றது
அவர் பயம் அவருக்கு
இப்போதுதான் அருந்ததி நிதானமாக யோசித்தாள் அழகர் இதுதான்வரை சமைத்துவைத்ததை மட்டுமே சாப்பிட்டுபோவான்
அத்தை மகளாக நினைத்து நாள்கூட சிரித்துபேசியதில்லை நலம்விசாரித்ததில்லை
முதல்முதலாக பார்த்தது பேசியதுதான்
அதன்பிறகு முகத்தை கூட பார்ப்பதில்லை நிஜமாகவே அவருக்கு இந்தகல்யாணத்தில் இஷ்டமா
அழகம்மா குடும்பத்தை பத்தி தெரிஞ்சு அத்தைமகளை விரும்புறாரா அவர் மனசுல என்ன இருக்கும் குழப்பத்தோடு சமையலறையை விட்டு வெளியேவந்தாள்
அவன் குழப்பமான முகத்தை பார்த்த மனிஷா டம்ளரை உள்ளேவைத்துவிட்டு வெளியே வந்தவள்
என்னாச்சுக்கா ரொம்பகுழப்பத்தோடு இருக்க மனிஷா கேக்கவும்
தனக்கு தோன்றிய சந்தேகத்தை அவளிடம் கூற
இதுக்கு என்ன பதில்சொல்றது தெரியல என்கிட்ட சொல்றத விட நேரடியா அவர்கிட்டயே போய்கேட்டு அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமே
பயமா இருக்கு சின்னவயசுலயே இவர்தான் உனக்கு மாப்பிள்ளைன்னு சொல்லிட்டாங்க கல்யாணபேச்சு ஆரம்பிச்சதுல இருந்து அவரை மனசில நெனச்சிட்டு இருக்கேன் இப்பபோய் கேட்டு அவர்மனசுல நான் இல்லன்னு சொல்லிட்டா நான்என்னபண்ணுவேன் கண்ணீரோடு கேட்க
மனிஷா மனம் ஊமையாக அழுதது
அருந்ததி நல்ல பெண்தான் அழகர் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக்கொள்வாள் தேவையில்லாமல் நான்உள்ளே வந்து இவர்களின்உறவுகளை வெட்டிவிடகூடாது அழகரிடம் இதைபற்றி தீர்மானமாக பேசிமுடிக்க வேண்டும் என்று நினைத்தவள்
கவலைப்படாத அழகரோட மனசுல நீதான் இருப்ப உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பாரு
அவரே நேர்ல வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்வாரு போதுமா
உறுதியாக கூற
அவள் கையை பிடித்து கண்ணீர் விட்டாள்
நிஜமாகவே சொல்வாரா மாமா என்னைத்தான் நினைச்சுட்டு இருக்காரா
அவரு வாயால கேக்குற வரை மனசே ஆறாது எனக்கு கண்ணீரை துடைத்தவாறு கூற
கண்டிப்பா சொல்வாரு கவலைபடாத ஆறுதல் கூறியவளோ அழகரை மனதிலிருந்து அகற்ற முடிவுசெய்தாள்