கோகிலமே 17

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

17

 

இரண்டு நாட்களாக வினய் கண்ணில் மட்டும் இல்லை கருத்திலும் படவே இல்லை

வர்த்தினிக்கு.. அதுவும் அடிக்கடி தன்னை துளைக்கும் அந்த கருந்துளை பார்வையை அவள் காணவில்லை என்றாலும் அவளின் உள்ளுணர்வால் கண்டு கொள்ளுவாள். ஆனால் இரண்டு நாட்களாக அவ்வாறு இல்லாமல் இருப்பது அவளுக்கு ஒரு வித வெறுமையை தூண்டியது. அவன் கண்ணில் தென்படுகிறானா என்று அவ்வப்போது தன் கண்களால் துலாவ.. வினய் இருந்தால் அல்லவா கண்ணில் பட..

 

பெண்ணின் மனது சில சமயங்களில் தனக்கு என்ன வேண்டும் என்பதை சரிவர உணருவது இல்லை.. பெரும்பாலும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பார்வைக்கும் பேச்சுக்கும் பயந்து தன்னுள் துளிர்விடும் ஆசைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் தைரியம் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை.. அதிலும் ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்த வர்த்தினிக்கு வினய்யின் மீதுள்ள அந்த ஒரு புள்ளி அது விருப்பா? வெறுப்பா? வெறும் ஈர்ப்பா? என்று எதுவும் உணராமல், அதை உணர்ந்து கொள்ளவும் விருப்பம் இல்லாமல் இருந்தாள்.

 

ஆனால் இந்த இரண்டு நாள் பிரிவே அவளுக்கு புரியாத பல உணர்வுகளை புரிய வைப்பதாய்.. அதை புரிந்து கொள்ளும் தருணத்தில் அவனில்லாது தவித்து தான் போனாள் வர்த்தினி..

 

அன்று கடைசி நாள் படப்பிடிப்பு.. இரண்டு நாட்கள் லேசாக சுணங்கி இருந்த வர்த்தினியின் முகமோ.. கடைசி நாளன்று அவன் வருவான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசியில் அவன் வரவில்லை என்றதும் சுருங்கி கலங்கி தான் போனது.

மதியம் போலவே அன்றைய படப்பிடிப்பு எல்லாம் முடிந்து விட, மாலையில் அனைவரும் வழக்கம்போல உணவு இடத்தில் சந்திப்போம் என்றவாறு அனைவரும் தத்தம் குடிலுக்கு ஓய்வெடுக்க சென்று விட்டனர்.

 

ஆனால் வர்த்தினிக்கு குடிலிலுக்கு செல்ல மனமில்லை. அங்கேயும் போய் தனியாக இருப்பது அவளுக்கு தன்னை சுற்றிய ஒரு வெறுமையை தர கால்கள் போன போக்கில் மெல்ல நடந்து சென்றாள் வர்த்தினி..

 

எங்கெங்கு காணினும் கண்ணனின் பிம்பமே!!

 

காதல் கொண்ட ராதையின் கண்களுக்கு அவள் காணும் யாவிலும் அவளின் காதலன் அந்த மாயக் கண்ணன் உருவமே தெரிந்ததாம். மரங்கள் பூக்கள் பறவைகள் தன்னை சுற்றி இருக்கும் தோழிகள் அவளைச் சுற்றிலும் மாயவனே மாயா லீலைகள் நடத்திக் கொண்டிருக்க.. அருகே சென்றால் மறைந்து போகும் அவனை தேடி தேடி அலுத்து கண்களை மூடி அதில் கண்ணனின் காதலில் லயித்து அமர்ந்திருந்தாளாம் ராதை..

அந்த ராதையின் மனநிலையில்தான் இந்த கோதையும்..

 

சற்று தூரத்தில் வசீகரிக்கும் சிரிப்புடன் தன்னையே பார்ப்பவனை பார்த்த வர்த்தினி விரைந்து அவனிடம் செல்ல.. 

ஆளை விழுங்கும் பார்வையுடன் நின்ற ஆடவன், பெண்ணவள் நெருங்கி வந்து தன்னை தொட எத்தனிக்கும் நேரம் மாயமானான் மாயவன்..

கனவா? காட்சி பிழையா? என்று பகுத்து அறிய முடியாமல் கண்ணியவள் கவலை கொண்டு காண.. களையவனோ அவள் கருத்தில் நுழைந்து மனதில் இரண்டற கலந்து இருந்தான் அவளே அறியாமல்...

 

மீண்டும் மனம் நிலை இல்லாமல் தவிக்க.. கடற்கரையில் அவள் காலாட நடக்க..

மன்னவன் நினைவில் அவள் துகிக்க.. 

இது காதலா என்று அறியாமல் மனம் தகிக்க.. அங்கேயே தொய்ந்து அமர்ந்து விட்டாள் வர்த்தினி..

 

அவளை காணாமல் அப்போது அங்கே தேடி வந்த லீனா, வர்த்தினியின் நிலையை பார்த்து பயந்து அவளருகே ஓடி வந்தாள்.

 

"ஹே.. வரு என்னாச்சு.. ஏன்‌ இங்க உட்கார்ந்து இருக்கே?" என்று கேட்க..

 

ஒன்னுமில்லை என்பதாய் வர்த்தினி தலை அசைத்தாள்.

 

அவளையே கூர்ந்து பார்த்த லீனா.. "காதல் புகுந்தால் கள்ளமும் சேர்ந்து புகுந்து விடும் வரு" என்று கூற.. சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தாள் வர்த்தினி.

 

மென்னகையுடன் அவளை அணைத்த லீனா.. "உன்னை விட உன் கண் தான் உன்னவரை தேடுது.. நீ சொல்லாத மொத்த சங்கதியும் அது சொல்லுது" என்று கூறி சிரிக்க..

 

தானே அறியாமல் இருந்த ஒன்றை இவள் எவ்வாறு அறிந்தாள் என்று அவளை வர்த்தினி யோசனை உடன்‌ பார்க்க..

 

ஆல் ட்டெயில்ஸ் ஐ நோ என்பதாய் தன் டீசெர்ட்டில் இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்ட லீனா.. பின் வர்த்தினியை பார்த்து "ஏன்னா.. ஐ லவ் மை ஜேம்ஸ்" என்று கண்களில் காதலோடு கூறினாள்.

 

"அவ்வளோ லவ்வா அவர் மேல?" என்று கேட்ட வர்த்தினியை பார்த்து..

 

"எஸ்.. ஃபைவ் இயர்ஸ் ஆ லவ் பண்றோம். என் ஜேம்ஸ் தான் எனக்கு ஃபர்ஸ்ட் ப்ரோபோஸ் பண்ணினான். நானும் முதல்ல ஒத்துக்கல.. இரண்டு வருஷம் என் பின்னாலே சுத்தி என்னை சம்மதிக்க வைத்தான். என்னை விட்டு அவனால் கொஞ்சமும் இருக்க முடியாது. இந்த பத்து நாளும் நைட் வீடியோ காலில் தான் நாங்க லவ் பண்றோம். பத்து நாள் என்ன பத்து வருஷம் ஆனாலும் என்னை தவிர யாரையும் திரும்பி கூட பார்க்க மாட்டான்" என்றாள் காதலில் கரைகண்ட கர்வத்தோடு..

 

அதை கேட்ட வர்த்தினிக்கு முகம் கூம்பி போனது. இதுபோல் அவளால் சொல்ல முடியுமா? அவனின்‌ காதல் தான் மட்டும் தான் என்று? அவனின் பல பழக்க வழக்கங்களை அவள் கேள்வி பட்டு இருக்கிறாள்.. கூடவே அவன் வாயாலும் கேட்டு இருக்க.. இப்போது லீனா சொன்னவுடன் மனம் பதைத்து பதைத்தது வினய்யின் செயல்களை எண்ணி.. தன் காதலை எண்ணி.. வருங்காலத்தில் அவனின் செய்கை தொடர்ந்தால் அதை எண்ணி.. எவ்வாறு இவ்வாறு ஒருவனிடம் தன் மனம் சென்றதை எண்ணி...

 

அவளின் முகத்தை வைத்தே ஓரளவு வர்த்தினியின் எண்ண போக்கை கணித்தாள் லீனா..

 

"இங்கே பாரு வர்த்தினி.. பாஸ் வளர்ந்த கல்ச்சர் வேற.. நீ வளர்ந்து கல்சர் வேற.. உன்னால இந்த பழக்கவழக்கங்களை எல்லாம் ஜீரணிக்க முடியாது எனக்கு புரியுது.. ஆனால் உன் நிலைமையில் இருந்து கொஞ்சம் இறங்கி பாஸ் நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசி.. அவர் செய்ததை நான் உன்கிட்ட சரி என்று சொல்ல வரல.. அதேநேரம் இங்கு உள்ள பழக்கவழக்கங்கள் அவரோட பணம் இதெல்லாம் சேர்த்துதான் அவரை அந்த வழியில் கொண்டு போய் இருக்கணும். அதுக்காக இந்த கல்ச்சர்ல வளர்ந்த எல்லாரும் இப்படிதான் சொல்ல மாட்டேன். என் ஜேம்ஸ் போல இந்த நாட்டு சிட்டிசன்ல ஒழுக்கமா இருக்கிறவங்களும் இருக்காங்க.. ஏன் உன் இந்தியாவில கூட நிறைய பேர் லிவ்விங் டு கெதர் ஆகவும்.. முதல் மனைவி இருக்கும் போதே சைட்ல விடுவதாகவும்.. இரண்டு மூன்று முறை டிவ்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிற ஆண்-பெண் இருக்காங்க.. அதனால பழசு டெலிட் பண்ணிட்டு.. பிரசெண்ட் லைஃப் ரெப்ரஸ் பண்ணினா.. யுவர் ஃபியூச்சர் லைஃப் ஸ்மூத்தா இருக்கும். உன்மேல நிஜமாவே பிரியம் இருக்கிறவங்க கண்டிப்பா வேற ஒரு வழியில் போகமாட்டாங்க" என்று அன்று அர்ஜுனனுக்கு உபதேசம் செய்த பார்த்தசாரதியாய்.. லீனா வர்த்தினிக்கு நிதர்சன வாழ்வின் உண்மைகளை புரியவைக்க..

 

அதுவரை வினய்யின் கடந்தகாலத்தை மனதில் குழப்பிக் கொண்டு இருந்தவள் இனி அவனின் நிகழ்காலமும் எதிர்காலமும் நானே என்று தெளிவான முடிவுடன் லீனாவை பார்த்து சிரித்தவள்.. அவளை கட்டிக்கொண்டு "தேங்க்ஸ் லீனா.. என் மனசுல உள்ளவற்றை தெளிவா விளக்கி எனக்கு என்னையே புரிய வச்சுட்ட.. தேங்க்யூ சோ மச்" என்று சந்தோஷ மிகுதியில் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் வர்த்தினி.

 

லீனாவுக்கும் சந்தோஷம்தான், தன்னுடைய தோழியின் துயரை துடைத்து அவளுக்கான வாழ்வை புரிய வைத்ததில் மகிழ்ந்தவள் தானும் அணைத்து..‌ "ஆனாலும் வரு டியர்.. பாஸ் இந்த மாதிரி என்னை பார்த்தா முதல்ல என்னை டெர்மினேட் பண்ணிடுவார் போலவே" என்று தங்களின் நிலையை சுட்டிக்காட்டி அவள் கூற..

 

"போ லீனா" என்று அழகான வெட்கப் புன்னகையுடன் எழுந்து ஓடினாள் வர்த்தனி. அவள் பின்னே லீனாவும் துரத்திக் கொண்டு வந்தாள். 

 

தன் மனம் புரிந்த தெரிந்த மகிழ்ச்சியில அத்தனையும் தோழியிடம் சந்தோசத்துடன் பகிர்ந்தவாறு வர்த்தினி லீனாவுடன் வந்துகொண்டிருக்கும் போது எதிர்ப்பட்டான் வில்லியம்ஸ்.

 

அப்போது லீனாவிடம் சைகை செய்து வினய்யை பற்றி கேட்க சொன்னாள் வர்த்தினி.

 

"ஹாய் வில்.. எங்க பாஸ் ஒரு ரெண்டு நாளா கண்ணலே காணோம். சூட்டிங் முடியும் வரைக்கும் கூட இருப்பார் என்று நினைச்சேன் அதுக்குள்ள கிளம்பிட்டாரா" என்று லீனா கொக்கியை போட..

 

அந்தக் கொக்கியில் தன் தோழியே மாட்டி காயம் பட போகிறாள் என்று அந்த கணம் அவள் அறியவில்லை.

 

"ஆமாம் லீனா.. சாருக்கு இங்கே கொஞ்சம் ரொம்ப டென்ஷன். அந்த மாதிரி டென்ஷன் இருக்கிற சமயத்துல பக்கத்துல ஒரு குட்டி ஐலேண்ட இருக்கு. அங்க போயிடுவாரு வித் பேரோட" என்று கண்ணடித்து விட்டு அவன் சென்று விட.. 

 

சாதாரண சமயம் என்றால் லீனாவும் இதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டாள். ஆனால் இப்போதுதான் தன் தோழியை தேற்றி வினய்யின் செயல் அவ்வாறு இருக்காது என்று தேற்றி கொண்டு வர.. அணுகுண்டு போல வினய்யின் செயலை இவர்கள் தலையில் போட்டு உடைத்தான் வில்லியம்ஸ்.

 

 

சட்டென்று திரும்பி லீனா வர்த்தினியின் முகம் பார்க்க.. அவள் எதிர்பார்த்த சோகம் அழுகைக்கு பதிலாக சுறுசுறு என்று கோபத்தில் சிவந்திருந்தது வர்த்தினியின் முகம்.

 

லீனா மெதுவாக வரு என்று அவளை தொட..

 

அவ்வளோ தான் அணிந்திருந்த புடவை முந்தானையை ஒரு உதறு உதறி இடுப்பில் சொருகியவள்.. லீனாவை பார்த்து "என்ன நான் அழுது ஒப்பாரி வைப்பேன் நெனச்சியா.. அந்த சீன் எல்லாம் கிடையவே கிடையாது. அந்த ஆள் வரட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு கச்சேரி. இது வரைக்கும் நான் நடத்துனது எல்லாம் கச்சேரி இல்ல.. இன்னைக்கு நடக்க போறது தான் ஒரிஜினல் திருவையாறு கச்சேரி" என்று ஏக மரியாதையில் அவனை திட்டிக் கொண்டே சென்ற வர்த்தினியைப் பார்த்து இப்பொழுது வினய்க்காக வேண்டிக்கொண்டாள் லீனா..

 

"ஓஹோ ஜீசஸ்.. சேவ் வினய்" என்று அந்த பரமாத்மாவிடம் வேண்டிக்கொண்டு சிலுவை குறி இட்டவாறே வர்த்தினியை பின்தொடர்ந்தாள் லீனா...

 

அங்கே ஒருத்தி உருட்டுக்கட்டையுடன் காதலையும் கலந்து அவனிடம் காட்டுவதற்காக காத்திருக்க...

 

தாய் சொன்ன வார்த்தையை கேட்ட தனயனாக, வர்த்தினியை மறக்கும் முயற்சியில் இரண்டு நாளாக முயன்று கொண்டிருந்தான் வினய்...

வெறும் முயற்சி மட்டுமே தான்..

 

மஞ்சுளா பேசியதிலிருந்து வர்த்தினியை மேலும் வற்புறுத்த வேண்டாம் என்று நினைத்தவன், மறுநாள் காலையில் வில்லியம்ஸும் கூறிவிட்டு இவர்கள் ரெசார்ட் அருகிலிருந்த கடற்கரையின் ஒரு தீவில் தஞ்சம் அடைந்து விட்டான்.

 

தன்னந்தனி தீவில் போட் எடுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றவன் ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு அலைகளின் நடுவே நீந்தி தனது எண்ணங்களின் நாயகியை தொலைக்க முயன்று முயன்று தோற்றான்.

 

 

காதல் என்பதை உடல் சார்ந்ததாக மட்டுமே பார்க்கிற கண்ணுக்கும், நெஞ்சுக்கும் அதன் உள்ளார்ந்த அழகும் அர்த்தமும் புலப்படுவதில்லை. உடல்கடந்து உள்ளத்திற்குள் புகுந்து காதலைக் கொண்டாடுவோரின் வாழ்வில் இறுதி மூச்சுவரை இன்பத்திற்குப் பஞ்சமில்லை.

காதல் என்பது கண்களின் தேடல் அல்ல; உள்ளத்தின் தேடல், உயிரின் தேடல்.

இவ்வளவு நாளாக அந்த தேடலை தேடாமல் இருந்தவனின் கண்களுக்கு வர்த்தினி விழ.. அவன் கண்கள் வழி நுழைந்தவள் இதயத்தில் நுழைந்து சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்ள.. அவளை அவ்விடம் விட்டு நகர்த்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தான் எதிலும் வெற்றியை மட்டுமே பெறும் இந்த பிசினஸ் மேக்னட்...

 

காதல் சுகமானது தான்.. 

காதல் சுவையானது தான்..

காதல் சுமையானது தான்..

 

ஆனால் எந்த சுமை கூட சுவையாகவும் சுகமானதாக காதலில் மட்டுமே இருக்கும். காதலிப்பவரின் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை கொடுக்கும் அபார சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு..

 

அதனாலதான் மீசை கவி பாரதி கூட...

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம் கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம்

காதல் செய்வீர் உலகத்தீரே!! என்று பாடினான்...

 

தன் மனதை அறிந்தது முதல் சுகமாக இருந்த காதல்.. வர்த்தினியின் செயல்களினாலும் அன்னையின் பேச்சினாலும் சுமையானதாக மாற அந்த சுமையை இறக்கி வைக்க வழி தெரியாது நடுக்கடலில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தான் வினய்.

 

இரண்டு நாட்களாக அவளை சிந்திக்க கூடாது என்று அவளைப் பற்றி மட்டுமே மனம் சிந்தித்துக் கொண்டிருக்க.. அதிலிருந்து விடுபடும் வழி தெரியாது முழித்தவன் கடைசி நாளன்று வில்லியம்ஸ் அழைத்து இன்று கிளம்ப போவதாக சொல்ல.. கடைசியாக ஒருமுறை தன்னவளை பார்த்துவிடும் வேகத்திலேயே யாருக்கும் அறிவிக்காமல் அன்றிரவு அவர்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தான் வினய்.. தன் இணையின் மனது அறியாமல்..

 

மாலையில் அனைவரும் உணவு ஹாலில் அமர்ந்து விருந்து கொண்டிருக்க அப்போது அங்கு வந்த வில்லியம்ஸ்..

 

"ஹாய் கைஸ்.. ஷூட்டிங் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுச்சு. தேங்க்ஸ் ஃபார் ஆல்.. இந்த ஆல்பம் இன்னும் கொஞ்ச நாள்ல வெளியிடுவோம். லான்சிங் அன்னைக்கு நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும். இந்த ஆல்பம் சக்சஸா முடிஞ்சதுக்காக இன்னைக்கு நைட் டின்னர் வித் பார்ட்டி.. ரைட் எல்லாரும் பார்ட்டியில் சந்திக்கலாம். சீ யூ கைஸ்" என்று அவன் சொல்லி முடிக்கும் பார்ட்டி என்றதுமே அனைவரும் கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

 

இரவு பாட்டுக்கு தன்னை தயார் செய்த லீனா.. வர்த்தினியின் குடிலுக்கு வந்து பார்க்க அவளோ தயாராகாமல் பால்கனியில் இருளை வெறித்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

 

"என்ன வரு.. பாட்டிக்கு ரெடியாகலையா?" என்றவாறு லீனா வர..

 

"ம்ப்ச்" என்று சலித்துக்கொண்டாள் வர்தினி..

 

அவளை தன் புறமாக திருப்ப கண்கள் கலங்கி நின்றவளைப் பார்த்து அணைத்தவள்.. "சீ வரு.. கண்டிப்பா பாஸ் பார்ட்டிக்கு வருவாரு. நீ இப்படி அழுது மூஞ்சியோட போய் அவர்கிட்ட ப்ரொபோஸ் பண்ண போறியா? சேம் சேம் பப்பி சேம்" என்று அவள் கலாய்க்க..

 

வினய் வருவான் என்றதிலேயே முகம் பூவாக மலர்ந்தது வர்த்தினிக்கு. அவளின் பப்பி சேம் இல் செல்லமாக முறைத்துப் பார்த்தாள் லீனாவை..

 

"போ.. போ சீக்கிரம் ரெடி ஆகு" என்று கூற..

 

தன் பெட்டியில் இருந்த அனைத்தையும் கண்ணாடி முன்வைத்து பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக தூக்கி எறிந்தாள்.. இது கலர் சரியில்லை.. இது டிசைன் சரியில்லை என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணங்கள் கூறி..

 

கடைசியாக ஒரு புடவை அவளுக்கு பிடித்திருக்க அதில் முகம் சந்தோஷமடைய க திரும்பியவள், லீனாவை பார்த்து "இந்த ட்ரஸ் ஓகேவா இருக்குமா லீனா?" என்று கேட்க அங்கே லீனாவை காணவில்லை..

 

பின்ன இவள் போட்ட அனைத்து உடைகளும் அவள் மேல தானே..  

 

"லீனா.. லீனா.."என்று இவள் தேட..

 

தன்மேல் வர்த்தினி போட்ட அனைத்து உடைகளையும் களைந்து விட்டு வெளியில் வந்துவள் இரு கைகளையும் இடுப்பில் வைத்து அவளை பார்த்து முறைத்தாள்.

 

"ஹீஹீ ஹீ.. சாரி லீனா" என்று அசட்டு சிரிப்புடன் வர்த்தினி அவளைப் பார்க்க..

 

"யார் கூட வேணாலும் பிரண்டா இருக்கலாம்.

புதுசா லவ் பண்றாங்க கூட மட்டும் பிரெண்டாவே இருக்க கூடாது.. பூனைக்குட்டி மாதிரி நம்மள போட்டு பிராண்டி எடுப்பாங்க.. சீக்கிரம் ரெடியாகு வரு" என்றவாறு அவளை முறைத்துக் கொண்டே வெளியில் சென்றாள் லீனா..

 

லீனா சென்றவுடன் சிரித்துக்கொண்டே கதவடைத்தவள், அன்று தன்னை வெகு நேர்த்தியாக அலங்காரம் செய்து கொண்டாள். சாதாரணமாகவே கண்ணைப் பறிக்கும் கொள்ளை அழகு.. இன்றோ பேரழகாக தெரிய.. கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்தவள்.. இன்னைக்கு "செத்தடா வினய் நீ" என்றாள்.

 

நைட் பார்ட்டி களைகட்டியது. முதலில் அனைவரும் பஃவே முறையில் இருந்த உணவை உண்டவாறு பேசிக் கொண்டிருக்க.. வர்த்தினி தான் தன் கண்களை சுழல விட்டவாறு வினய்யை தேடிக் கொண்டு உணவில் கவனம் இல்லாமல் கைகளால் அளைந்து கொண்டே இருந்தாள்.

 

"முதல்ல சாப்பிடு வரு பாஸ், கண்டிப்பாக வருவார்" என்று லீனாவின் தேற்றுதலில் தலையை அசைத்தவாறு இரண்டு வாய் உண்டவள், அடுத்த கணம் மீண்டும் தன் கண்களை சுழல விட்டு தன்னவனையே தேடிக்கொண்டிருந்தாள்...

 

 

தேடலின் நாயகன் இவர்கள் எல்லாம் உணவருந்தி முடித்து லிக்கர் பார்ட்டி ஆரம்பிக்கும் சமயத்தில் வந்து சேர்ந்தான்.

 

 

ஏற்கனவே வர்த்தினியை தவிர்க்க வேண்டும் அவள் புறமே பார்வை திருப்பக்கூடாது என்று தன் மனதில் திரும்பத் திரும்ப உரு போட்டுக்கொண்டே வந்தவனின் கண்களில் அழகு ஓவியமாக அவள் தெரிய, விழிகளை அவளிடம் இருந்து மீட்க முடியாமல் தத்தளித்தான் இந்த புதுக் காதலன்.

 

 

ஆனாலும் இரண்டு நாட்களாக மனதில் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின் விளைவாக சிகையை கோதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் மிகக் கடினப்பட்டு பார்வை அவளிடமிருந்து விலகி மற்றவர்களை பார்த்து சிரித்து அவர்களுடைய பேசிக்கொண்டே நின்றிருந்தான்.

 

வந்தது முதல் தன்னவனின் தரிசனத்திற்காக அவனையே பார்த்துக் கொண்டிருக்க வினய்யோ சிறுதும் இவள் புறம் திரும்பாமல் இருக்க.. காதல் கொண்ட மனது கோபம் கொண்டது.

 

அவளின் கோபத்தில் எண்ணையை ஊற்ற அங்கு வந்து சேர்ந்தாள் ஸ்ரேயல்.. அன்று போல அல்ட்ரா மாடல் கவர்ச்சி உடையில் அதீத ஒப்பனையில் வந்திருக்க அவளைப் பார்த்த வர்த்தினிக்கு நெற்றிக்கண் மட்டும் இருந்தால் அப்போதே அவளை பொசுக்கி இருப்பாள்.

 

ஸ்ரேயலோ வைத்த கண் வாங்காமல் வினய்யே பார்த்திருந்தவள் பின்பு அவனிடம் சென்று ஒட்டி உரசி பேச ஆரம்பித்தாள். 

முதலில் அதை தவிர்க்க நினைத்த வினய், அவளிடமிருந்து விலகி விலகிச் செல்ல.. அதேநேரம் ஏதோ தோன்ற நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில், கண்களில் கனல் கக்கியபடி நின்றிருந்த வர்த்தினி தெரிய..

 

ஏற்கனவே அவன் மனதில் நினைத்த திட்டத்தை செயல்படுத்த எண்ணியவன் அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே ஸ்ரேயலிடம் ஒட்டிக் கொண்டே நின்றான்.

 

வர்த்தினியும் தன் கண் இமைகளை கூட சிமிட்டாமல் வினய்யை பார்த்துக்கொண்டே இருக்க.. அவனோ அவளின் அந்த கனல் கக்கும் விழிகளை பார்த்து வழக்கம்போல உதட்டை மடித்து சிரிப்பை மீசைக்குள் அடக்கியவாறு இன்னும் ஸ்ரேயலுடன் நெருங்கி பேசிக்கொண்டே இருந்தான்.

 

அங்குள்ளவர்கள் பெரும்பாலோனர் லிக்கர் பார்ட்டியை ஆனந்தமாக அனுபவிக்க தொடங்கியிருந்த நேரம்... லீனாவும் வர்த்தினியின் குணத்தை அறிந்தவள் அவளிடம் தலையாட்டிவிட்டு, அவளும் சிறு பீர் டின்னை கையில் எடுத்துக்கொண்டு குடித்துக்கொண்டே அங்குள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள். வர்த்தினி யாரிடமும் ஒட்ட முடியாமல்.. அதேநேரம் தன்னவனிடமும் நெருங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க.. ஸ்ரேயலின் குழைவு நெளிவு அவளை இன்னும் ஏகத்துக்கும் வெறியேற்றிக் கொண்டிருந்தது.

 

 

அவர்களைப் பார்த்தவாறு மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தவள், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். சற்று முன் தான் அந்த இருக்கையிலிருந்து குடித்துக் கொண்டிருந்த ராபர்ட் சைட் டிஷ்காக எழுந்து சென்றிருக்க.. மேசையிலிருந்து ஓட்கா இவளுக்கு தண்ணீர் மாதிரியே தெரிய.. உள்ளே கனன்று கொண்டிருந்த நெருப்புக்கு அதை ஊற்றி அணைக்க இவள் எண்ண.. அதுவோ அந்தக் கோபத்தை இன்னும் கிளறி விட்டது.

 

 

ஒரு பெரிய கிளாஸ் நிறைய இருந்த ஓட்காவையும் ஒரே மடக்கில் குடித்து முடித்த பிறகுதான் அவளுக்கு ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. ஆனாலும் அவற்றை புறந்தள்ளியவளின் கண்கள் வினய்யையே பார்க்க.. அவனோ அங்கிருந்தவர்களிடம் கையை ஆட்டி விட்டு, விடைபெற்று தன் குடில் நோக்கி சென்றான். அவன் பின்னே ஸ்ரேயலும் தள்ளாடிக் கொண்டே நடந்து செல்ல..

 

 

பார்த்துக்கொண்டிருந்த வர்த்தினிக்கு இன்னும் கோபம் ஏறியது. பின்னோடு வேகமாக சென்றவள் ஓட்டமும் நடையுமாக அவர்களை அடைந்து.. ஸ்ரேயலின் கையை பிடித்து இழுத்தாள், மறு கையால் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்து இருந்தாள்.

 

இடியென இறங்கிய அறையில் ஒத்து மட்டும் யூனிட்டும் திருவிளையாடல் படத்தில் வரும் பாடலில் ஒரு நொடி ஸ்தம்பித்து நிற்குமே இவ்வுலகம் அதுபோலவே நிற்க...

 

முதலில் அசைந்தது என்னவோ வர்த்தினிதான். 

'நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே' என்பதைப் போலவே அதற்கு பின் தான் அனைவருக்கும் உணர்வு வர.. இழுத்து வைத்திருந்த மூச்சை வெளி விட்டவாறு அவர்களை பார்த்தனர்.

 

"நானும் அப்போதிலிருந்து பாக்குறேனு சும்மா சும்மா என்ன டி அவர்கூட ஒட்டிகிட்டே நிற்கிற.. ஒழுங்கா ஓடிப் போயிடு.. அடுத்த அறைக்கு நீ தாங்க மாட்ட" என்று அனல் தெறிக்க பேசியவளை கண்டு ஸ்ரேயலுக்கு சர்வமும் ஒடுங்க.. திரும்பி வினய்யை பார்த்தாள்.

 

அவனும் தன் மாமியின் இந்த புது அவதாரத்தில் ஸ்தம்பித்து நின்றிருந்தான்.

இதுவரை மென்மையானவள் அமைதியானவன் என யூனிட்டே அவளைப் பற்றி நினைத்து இருக்க.. இந்த ஒற்றை அடியே அவளின் வேகத்தை கோபத்தைக் காட்ட அனைவரும் பேச்சு இழந்த நிலையில்... 

 

அமர் சிங்கோ ஏஞ்சலின் இந்த சொர்ணாக்கா அவதாரத்தில் ஜெர்க் ஆகி நின்று கொண்டிருந்தான். லீனா மட்டுமே சிறு புன்னகையுடன் அங்கே நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

ஒரே தள்ளாக ஸ்ரேயலை அந்தப் பக்கம் தள்ளியவள், பின்னால் இருந்த முந்தானையை தூக்கி இடுப்பில் சொருகியவள் இரண்டே எட்டில் வினய்யை அடைந்தாள். வினய்யோ அப்போதும் அதிர்ச்சி அகலாமல் விழி விரித்து அவளையே பார்த்திருக்க..

 

அவனை நெருங்கியவள் சட்டையின் காலரை இருபுறமும் தன் இரு கைகளால் பிடித்து அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தவள்.. "நோக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா ஒருத்தி இங்கே உன்னால மூணு நாளா தூக்கமில்லாம சாப்பாடு இறங்காமல் தவிச்சுகிட்டு இருக்கிறச்ச.. நீ ஜாலியா ரிலாக்ஸ் பண்ண போயிருப்ப தனி தீவுக்கு.. போதாக்குறைக்கு இந்த சிலுக்கு சிங்காரி கூட சேர்ந்துக்கிட்டு ஜல்சா பண்றியா நீனு" என்று குளறலாக.. லோக்கலாக இறங்கி வர்த்தினி பேச பேச.. கன்னியவளின் புதுப் பரிமாணத்தில் கிறங்கி போனான் காளையவன்..

 

"இன்னொரு முறை வேற பொண்ணு பக்கம் உன் கண்ணு போகட்டும்.. கண்ணு முழி இரண்டும் பிடிங்கிக் காக்கா கிட்ட போட்டுடுவேன்னு" என்றவள் நுனி காலால் எக்கி அவன் காதில் கிசுகிசுக்க...

 

அவனோ அதிர்ச்சியில் இரு கைகளாலும் வாயை பொத்தி அவளைப் பார்த்து.. "என்னடி மம்மீமீ.. எப்படி எல்லாம் பேசுற" என்றான்.

 

"பேசுறது என்ன செஞ்சிடுவேன்" என்று இரு கைகளால் கத்திரி போல சைகை காட்ட... அடிப்பாவி என வாயை பிளந்தான் அந்த காதலன்.

 

"இதுக்கு மேல உன்னை பேச விடறது தப்பு" என்றவன், அடுத்த அவளின் வார்த்தைகள் அவனின் உதடுகள் சென்று மறைந்தது.

 

மொத்த யூனிட்டும் கைதட்டி ஆராவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்க.. அந்த சத்தத்தில் தான் சுற்றும் முற்றும் பார்த்தவள் வெட்கம் கொண்டு மன்னவன் மார்பில் முகம் புதைத்தாள்.

 

அனைவரிடமும் கையாட்டியவன், தன்னவளை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு கடற்கரை நோக்கி சென்றான்.

 

மெல்ல அவளை இறக்கி விட்டு அவன் நெருங்கி நின்று இரு கைகளையும் இடை வழியாக எடுத்துச் சென்று அவளை இறுக்க அணைத்து இருந்தான்.

 

அந்த தருணத்தை ஆழ்ந்து அனுப்பிவன் போல, அவள் தோள் வளைவில் தனது தாடையை பதித்து கண்மூடி லயித்திருந்தான். இரவின் கருமை அவர்கள் தனிமைக்கு இனிமை சேர்க்க...

இருவரும் அணைத்த நிலையில் தங்களை மறந்த நிலையில் இருந்தனர்.

 

மெல்ல நிமிர்ந்து இரு கைகளாலும் அவளது தாடைகளை பிடித்து "மாமீமீ.." என்றான் மையலோடு..

 

வர்த்தினியிடம் பதில் இல்லை.. மயக்கத்தில் இருப்பவள் போல கண்களை மூடி முகம் செம்மையுற.. மேல் பற்களால் உதட்டை கடித்து கொண்டிருந்தாள். அவள் கூந்தலில் விரல்களை நுழைத்தவன் தன்னை நோக்கி இழுத்து மூடியிருந்த அவள் கண்களில் மெதுவாக முத்தம் வைத்தான். மன்னவனின் அதரங்கள் காரிகையின் நுனி மூக்கில் மென்மையாக முத்தமிட.. அப்போதும் அவள் விழி திறந்தாளில்லை..

 

அவளின் கன்னக் கதுப்புகளில் செல்லமாக அவன் கடிக்க.. உணர்வு மிகுதியில் "ஸ்ஸ்ஸ்" என்று சத்தமிட்டாள். கன்னத்தில் இருந்து அவளது காது மடலுக்கு பயணித்த அவனது அதரங்கள் மெதுவாக காது மடலை கவ்விப் பிடித்து இழுக்க.. உணர்ச்சி மிகுதியில் அவனை இறுக அணைத்தாள் வர்த்தினி.

 

ஆணவனின் கைகளோ மெல்ல கீழே இறங்கி, பெண்ணவள் இடை வளைவை இறுக்கமாக இறுக்க.. மென் பந்துகள் வன் மார்பில் மோத அவனை நெருங்கி நின்றாள் அவள். மெல்லிடையின் மென்மைகளை ஆராய்ந்த அவனது கைகளை இறுகப் பிடித்து அவள் தடுக்க.. அவள் கைகளுடன் தன் கைகளை கோர்த்தவன்.. மெல்ல அவளது ஒவ்வொரு விரலுக்கும் முத்தங்கள் வைக்க, கூசி சிலிர்த்தாள் அவள்..

 

வெட்கத்தில் அவள் அவனை தள்ளி திரும்பி நிற்க.. இடையோடு பின்னிருந்து சேர்த்து அவளை தன்னோடு இறுக்கி அணைத்தான்.

அவள் கூந்தலை ஒதுக்கி அவளின் பொன்னிற முதுகில், உதடுகளாலும் பற்களாலும் கவ்வி பிடித்து கடிக்க.. அவளின் வெண்ணிற மேனியில் இவனின் பற்தடம் பட்டு சிவக்க ஆரம்பித்தது... உடலில் மின்சாரம் பாய அவன் மார்பில் இவள் சாய..

முன்புறமாக சற்று தலையை எக்கி அவளது மெல்லிய அதரங்களை தன் அதரங்களுக்குள் வைத்து சுவைக்க ஆரம்பித்தான்.

 

வர்த்தினியின் இருக்கரங்கள் அவனது கேசத்தில் அலைய விட.. உணர்ச்சிப் பெருக்கில் இன்னும் இன்னும் அவள் இதழ்ளை தன் இதழ்களுக்குள் அதைக்கி சுவைத்துக் கொண்டிருந்தான்.

 

வெள்ளி நிலா வெளிச்சம்.. 

உடலை துளைக்கும் குளிர்ந்த கடல் காற்று..

ரம்யமான இரவு வேளையில்..

தங்கள் முத்த களியாட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர் இந்


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top