கோகிலமே 16

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 

16

கண்ணெதிரில் தான் கண்ட நினைவை கனவின் தாக்கும் என்று ஒதுக்க முடியாமல் கோபத்துடன் விடு விடு என்று தன் அறைக்கு திரும்பினாள் வர்த்தினி. இப்போதும் நள்ளிரவு தான்.. ஆனால் போகும் போது இருந்த அந்த பயம் நடுக்கம் எல்லாம் இப்போது இல்லை. கோபம்.. கோபம்.. மட்டுமே!! ஏன் கோபம்? எதனால் கோபம்? என்று புரியாவிட்டாலும் மொத்த கோபமும் வினய்யை விட ஸ்ரேயல் மீதே அவளுக்கு திரும்பியிருந்தது.

 

இதுநாள்வரை கண்ட கனவின் தாக்கத்தில் வினய்யை தான் ஒரு வழி செய்து வைப்பாள் தனது நோட்பேடில் அவனது உருவத்தை வரைந்து வைத்து.. ஆனால் இன்று இதுவரை வினய்க்கு வழங்கிய வெகுமதியை ஸ்ரேயலின் உருவத்திற்கும் வழங்கினாள்.

அதான் முகம் முழுவதும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வைப்பது...

அவ்வ்.. உருவத்துக்கு இந்த நிலைமை என்றால் நிஜத்திற்கு என்ன செய்வாளோ?!

மறுநாள்..

அழகான விடியலை ஆழ்ந்து அனுபவித்துவாரே துயில் எழுந்தான் வினய்.. என்றும் இல்லாமல் நேற்று ஆழ்ந்த அமைதியான தூக்கம் அவனுக்கு..

எப்பொழுதும் செய்யும் அவனுடைய ஜாகிங்கோ உடற்பயிற்சியோ இல்லாமலே புத்துணர்வாக உணர்ந்தான் வினய். 

குளித்து வந்தவன் தன் சிகையை துடைத்துக் கொண்டே கண்ணாடி முன்னாடி நின்று பார்க்க.. அங்கே அவன் முகத்திற்கு பதில் அவனவள் முகமே தெரிய, கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தை வழித்து முத்தம் கொடுத்தான், "யூ டிரைவ் மீ கிரேசி மாமீமீ" என்றவாறு...

காலையில் புது உற்சாகத்துடன் வினய் ஷூட்டிங் ஸ்பாட் செல்ல.. வர்த்தினி இரவு கண்ட தாக்கத்தின் விளைவாய் வினய்யை கண்டுக் கொண்டாள் இல்லை..

அன்று மட்டும் இல்லை.. அடுத்த இரண்டு நாட்களும் அவள் வினய்யை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. முதல் நாள் இதை வினய் கவனத்தில் கொள்ளவில்லை.. இரவில் அவளிடம் நெருங்கியதால் தன்னை பார்க்க தயங்குகிறாள் என்று நினைத்தான். ஆனால் எவ்வளோ முறை முத்தம் கொடுத்தப் போதும் கூட அவள் இவ்வாறு நடக்கவில்லை என்பதை அக்கணம் மறந்து போனான். அடுத்த நாளும் அவளின் பாரா முகம் தொடர.. புருவங்கள் முடிச்சிட அவளையே தான் பார்த்திருந்தான் வினய் யோசனையோடு..

பெண்களின் ஆழ் மன ரகசியங்கள் அறிவது அவ்வளவு சுலபமா என்ன!!

 

ஆனாலும் கூட தன்னவளின் அகத்தினை படித்திட ஆன மட்டும் முயன்று அவளின் பளிங்கு முகத்தினையே ஆராய்ச்சியாக இவன் பார்த்திருக்க... வர்த்தினியோ கருமமே கண்யென படப்பிடிப்பில் நடிப்பது பாடுவது நண்பர்களோடு அளவளாவது என்று இருக்க.. குழம்பி தான் போனான் இந்த பிசினஸ் மேக்னட்..

 

அன்று புடவை தான் வர்த்தினியின் காஸ்ட்யூம்.. அதுவும் ஜார்ஜெட் பிங்க் புடவையில் குட்டை கை தங்க ப்ளவுசில், முடியை பன் கொண்டையிட்டு கலைந்தும் கலையாமலும் இருக்குமாறு சிகை அலங்காரமும்.. அதற்கு தோதான அணிகலன்களில் அவள் தேவதையென மின்ன.. சித்தம் கலங்கி அவளில் பித்தனானான் வினய்.

 

கண்களால் அவளை கபளீகரம் செய்திக்கொண்டே வினய் இருக்க.. வர்த்தினி லீனாவுடனே சுற்றி கொண்டு இருந்தாள். அன்று இரவு வரை படப்பிடிப்பு தொடர்ந்தது. அனைவரும் சோர்ந்து தான் போயினர். ஒரேயடியாக இரவு உணவை முடித்துக் கொண்டே குடிலிக்குள் சென்று ஓய்வெடுக்கலாம் என்று அனைவரும் ‌உணவு உண்ண சென்றனர். 

 

பஃபே முறையில் அவரவர் உணவை அவரவர் எடுத்துக் கொள்ள, வர்த்தினியை உரசியபடி வந்து நின்றான் வினய். கண்கள் என்னவோ உணவிலும்.. வாய் என்னவோ அருகிலுள்ள நபரிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் அவனின் முழங்கை வர்த்தினியின் மென்மையான மெல்லிடையை உரசியபடியே இருந்தது. அவளோ ஒரு கையில் தட்டுடன், மறுகையில் கரண்டியுடன் நின்றிருக்க... வினய்யோ அவளின் இடையை முழங்கையால் உரச.. ரோமங்களோடிய அவனின் முரட்டு கையின் ஸ்பரிசத்தில் அவளுள் உணர்வுகள் தூண்ட.. ஒன்றும் செய்ய முடியா நிலையை எண்ணி அவள் தவித்து அவ்விடத்தை விட்டு அகல முயல.. "மாமி எனக்கும் கொஞ்சம் பரிமாறுங்கோ" என்று இன்னும் அவளை நெருங்கி நின்றான் தட்டை அவள் புறம் நீட்டியவாறு.. மேலும் மேலும் அவன் உரச.. அவளுக்கு நிலைமை சரிசெய்ய முடியாமல் அவசரமாக அவனுக்கு பரிமாறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள். செல்லும் அவளை தான் நமட்டு சிரிப்புடன் பார்த்தான் வினய்.

 

"நாம ஒதுங்கினாலும் இவன் விட மாட்டான் போலையே" என்று மேசையில் உணவை வைத்து விட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டு அவள் யோசிக்க.. அவள் எண்ணத்தின் நாயகனே அவளருகே வந்து அமர்ந்தான். 

 

"என்ன மாமி இரண்டு நாளாக ஒரே ஓட்டமா இருக்கு.. என்ன விஷயம்? சொன்னா நானும் சேர்ந்து உன்கூடவே ஓடி வருவேன்ல" என்று அவன் நக்கலாக கேட்க..

 

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் எப்போதும் போல தான் இருக்கேன்" என்று அவள் அவன் முகத்தை பார்க்காமல் கூற..

 

"அது என் முகத்தை பார்த்துக் கொண்டே சொல்லலாமே" என்று ஒரு மாதிரி குரலில் அவன் கூட சட்டென்று திரும்பிப் பார்த்தாள் வர்த்தினி.

 

அவளின் மொத்த அழகையும் ஒற்றை பார்வையாலே சுவீகரித்துவிடுமாறு அவன் பார்க்க.. அவன் கண்கள் கூறிய அர்த்தத்தில் வர்த்தினிக்கு மூச்சு அடைத்தது. அவன் பார்வை வீச்சில் இருந்து தப்ப, அவள் திரும்பி அமர்ந்து கொள்ள.. சரிந்த புடவையில் அவளது அங்க லவயங்கள் வினய்யின் கண்களுக்கு விருந்தாக.. மெதுவாக அவளை அங்கங்கமாக பார்த்தான்.

 

புடவை மறைக்காத அவளின் அழகின் கோளங்களும், ப்ளவுஸூக்கும் புடவைக்கும் இடையில் பளீரிடும் வழவழத்த மெல்லிடையும் அவனுக்கு மோகம் தலைக்கு ஏறியது. சிகையை கோதி தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.

அவனை சோதிக்கவென்றே காற்றும் அவள் சேலையில் விளையாட.. வர்த்தினியின் அழகு ஓவியங்கள் அவனை இம்சித்தது. 

திரும்பி அங்குள்ளவர்களை ஒரு பார்வை பார்த்தான். அனைவரும் தத்தம் வேலையில் இருக்க.. அக்கணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தவன், பளபளக்கும் மெல்லிடையை தன் விரல்களால் அழுத்தமாக அவன் கிள்ளிவிட.. விதிர்விதிர்த்து எழுந்த வர்த்தினி வினய்யை முறைத்தாள்.

 

அவனோ உதட்டை குவித்து பறக்கும் முத்தத்தை விட.. திடுக்கிட்டவளாய் தங்களை சுற்றியுள்ளவர்களை அவள் நோக்க.. மற்றவர்களோ இவர்கள் இரண்டு பேரை சற்றும் கண்டுகொள்ளாமல் தங்கள் உணவினை உட்கொண்டவாரே தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருக்க... 

 

"நம்மை யாரும் கவனிக்கல மாமி" என்று சிரிப்புடன் கூறியவனை, முறைத்து பார்த்தவள் பக்கத்தில் சாப்பிட வைத்திருக்கும் ஸ்பூன் மற்றும் முள்கரண்டியை அவன் மீது எறிந்தாள். 

 

அவனோ அதை சற்றும், அவளின் இந்த தாக்குதலை எதிர்பார்த்தானில்லை. அவன்‌ சுதாரிக்கும் முன், முள்கரண்டி அவன் நெற்றியில் கீறி விட.. அவுச் என்று அவன் சத்தமிட.. தன் செயலை கண்டு பயந்த வர்த்தினி விரைந்து அவனிடம் நெருங்கி நின்றாள்.

 

அவனோ வலியில் தனது வலது கையால் நெற்றியை பிடித்துக்கொண்டிருக்க.. என்ன செய்வது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டே அவன் அருகில் நின்றவள் "சாரி.. சாரி" என்றாள்.

 

"சாரி.. சாரி... கையை எடுங்கோ நான் பாக்குறேன். ரொம்ப கிழிச்சுடுத்தா" என்று வருத்தமான குரலில் அவள், அவன் மீதுள்ள அக்கறையை அவளை அறியாமலேயே வெளிப்படுத்த...

 

 

அவனோ கையை எடுக்காமல் அமைதியாக அமர்ந்து இருக்க.. அவன் செய்த செயலின் வீரியத்தை மறந்து தன்னால் அவனுக்கு காயம் பட்டு விட்டதை எண்ணி மருகியவள், அவன் எதிர்பார்க்காத தருணம் சட்டென்று அவன் கைகளை நெற்றியில் இருந்து நகர்த்தி காயத்தை கூர்ந்து பார்த்தாள்.

 

வெளியே லேசாக தோல் வலண்டு அங்கே இரத்தத் திட்டுகள் காட்சி தர.. பயந்துதான் போனாள் பெண்ணவள். மெதுவாக தனது புடவையால் அவனின் ரத்தத்தை அவள் துடைக்க.. அவனுக்கு அது எரிச்சலை தர.. ஸ்ஸ்ஸ் என்று சத்தமிட்டான்.

 

 

"அச்சச்சோ.. எறியுதா.. சாரி சாரி மன்னிச்சிடுங்கோ" என்றவள் சற்றும் யோசிக்காமல் முன்புறம் எக்கி காயத்தின் மீது ஊத.. அவள் அதரங்கள் இருந்து வீசிய குளிர்ந்த காற்று அவனுக்குள் பல மாயங்களை செய்தது.

 

ஆலிழை வயிறும் அதில் மரகத கல்லாய் நாபி சுழியும் அவன் கண்கள் எதிரே ஒயிலாட, அதில் கிறங்கியவன் தன் முன் நின்றவளின் இடையினை தனது வலது கையால் அழுத்தி பிடிக்க.. இடது கையோ இடை மறைத்திருக்கும் புடவையை விலக்கி சுழிந்த நாபியில் கோலம் போட... அவனது கைகள் நடத்திய நர்த்தனங்களில் துடிதுடித்துப் போனவள் சட்டென்று திரும்பி அவன் முகத்தை பார்க்க... அவனோ அவள் சுதாரிக்கும் முன் இரு பக்க இடை விளைவுகளையும் அழுந்தப் பற்றி தன் முன்னே இழுத்து அவளது நாபிக்கமலத்தில் தன் முத்திரையை அழுத்தமாக பதித்தான்.

 

வர்த்தினியோ அவனது இந்த அதிரடி முத்த தாக்குதலில் சுவாசிக்கவும் மறந்து அவனது தலைமுடியை இறுக்கப் பற்ற... அதில் மன்னவன் உணர்வுகள் கிளர்ந்தெழ.. மீண்டும் மீண்டும் அந்த சுரங்கத்தின் நீள அகலங்களை தனது நாவினால் அளந்து கொண்டே இருந்தான். 

 

பக்கத்தில் எங்கேயோ கலீர் என்று கண்ணாடி டம்ளர் உடையும் சத்தத்தில் தன்நிலை மீண்டவள் அவன் தலையை தனது வயிற்றிலிருந்து சட்டென்று பிரித்தெடுத்தாள். 

 

வினய்யின் இந்த திடீர் தாக்குதலில் அவள் பேச்சற்று சிலையென நிற்க.. வினய் மெல்ல நிமிர்ந்து அவனை பார்க்க.. விழிகளில் சுரந்த நீர் கன்னங்களை தாண்டி வழியே.. நீளக் கண்களை மேலும் அகல விரித்து வலியுடன் தன்னை பார்த்தவளின் அந்த பார்வை ஏனோ அவனுக்கும் மனது வலித்தது.

 

இருக்கையிலிருந்து எழுந்துவன் "மாமீமீ.. அது" என்று மெதுவாக அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைக்க கைகளை நீட்ட..

சட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டவள் அடுத்த நிமிடம் தன் குடிலை நோக்கி ஓடினாள்.

 

"ம்ப்ச்" என்று தன் சிகையை அழுந்த கோதியவன், "இவ என்னை புரிஞ்சுக்கவே மாட்டாளா?" என்றவாறு கால்களை தரையில் ஓங்கி உதைத்தான்.

 

இதுவரை தன் மனதில் எழுந்த எண்ணங்களையும் அவள் மீது உண்டான உணர்வுகளையும் வினய் அவளிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை மறந்தவன் அவளை கடிந்து கொண்டான். மனதினால் அவளை தீண்டுவதை விட, உடலினால் அவளை தீண்டியது தான் இவன் அதிகம். இதில் எங்கனம் ஆடவனின் மனதினை பாவையவள் அறிய... 

 

அவள் கண்களில் துளிர்ந்த நீர் அவனின் இதயம் வரை தாக்கியது. மேலும் காலையிலிருந்து படபிடிப்பில் அயராது தன்னை ஈடுபடுத்தி சோர்ந்திருந்தவள் சாப்பிடாமல் சென்றது வேறு அவனை வருத்தியது. சிறுது நேரம் உணவினை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் வினய்.

 

 

அப்போது வில்லியம்ஸ் அவன் அருகில் வந்தவன்.. "பாஸ் எல்லோரும் ரெஸ்ட் எடுக்க போயிட்டாங்க" என்று கூறியவனின் வார்த்தையில் அவன் மட்டும் தனித்து இருப்பதை உணர்ந்தவன்.. 

 

 

"எஸ் போகணும்" என்று மெல்ல எழுந்தவன் தன் குடிலை நோக்கி மெதுவாக நடந்து சென்றான். இதுவரை வினய்யை இவ்வாறு சோர்ந்த நடையுடனோ.. குழப்பம் மிகுந்த முகத்துடனோ வில்லியம்ஸ் கண்டதே இல்லை. யோசனையுடனே செல்லும் வினய்யை பார்த்திருந்தான் வில்லியம்ஸ்.

 

தன் அறைக்குள் நுழைந்த வினய் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு மெத்தையில் விழுந்து கிடக்க அந்நேரம் கதவு தட்டப்பட்டது.

வெளியே சென்று பார்க்க வில்லியம்ஸ் தான் கையில் பிளாஸ்க்கும் ஹாட் பாக்ஸூம் வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

 

வினய் அவனை கேள்வியாக பார்க்க.. 

"நீங்க சாப்பிடலனு எனக்கு தெரியும் பாஸ்" என்றவாறு உள்ளே கொண்டுவந்து அதை வைத்து விட்டு அவன் திரும்ப.. தன்னவளும் சாப்பிடாமல் தானே இருப்பாள் என்று எண்ணியவன், அவளுக்கும் உணவு கொடுக்க சொல்லி வில்லியம்ஸ் இடம் கேட்க எண்ணி வாய் திறக்க.. வில்.. என்று அழைத்தான் வினய்.

 

"வர்த்தினி மேடம்க்கும் சாப்பாடு எடுத்திட்டு போறேன் பாஸ்" என்று அவனின் மனது அறிந்து செயல்படும் வில்லியம்ஸை தோளில் தட்டி சிரித்தவாறே அனுப்பி வைத்தவன், பின் என்ன நினைத்தானோ.. "வில்.. நானே கொண்டு போறேன் சாப்பாட்டை" என்று புன்முறுவலுடன் லேசான வெட்க சிரிப்புடன் கேட்கும் தனது முதலாளியை வில்லியம்ஸ் அதிசயமாக பார்க்க, "கோ.. மேன்" என்று அவனை அனுப்பி வைத்த வினய், வர்த்தினியின் குடிலை நோக்கி சென்றான்.

 

 

குடிலுக்கு வந்த வர்த்தினிக்கு வினய்யின் செயலை கொஞ்சம் கூட ஏற்கவில்லை மனம். 

'எப்படி.. எப்படி.. அவன் செய்யலாம்?' என்று தனக்குள் கேட்டுக் கொண்டே நடை பயின்றவள், அவசரமாக தனது சேலையை கழட்டி வீசி எறிந்தாள். குளியல் அறைக்குள் நுழைந்தவள், அவன் இதழ் பட்ட இடத்தை எல்லாம் தண்ணீரைக் கொண்டு கழுவ.. அக்குளிர் நீரின் குளிர்ச்சியால் கூட வினய் அதரங்கள் கொடுத்த குளிர்ச்சியை போக முடியவில்லை. வேறு உடை அணிந்தவள் கண்ணாடி முன் நின்று மெல்ல தனது சுடிதார் டாப்ஸை ஒதுக்கி கண்ணாடியில் தனது வயிற்றை பார்த்தாள்.

அதில் மீண்டும் அவன் இதழ் செய்த ஊர்வலங்கள் தெரிய சட்டென்று டாப்ஸை இழுத்து விட்டுக் கொண்டு மெத்தையில் சுருண்டு படுத்து விட்டாள். 

 

 

கதவு தட்டும் சத்தத்தில் திறந்து பார்த்தவள் அங்கே கையில் பிளாஸ்க் மற்றும் ஹாட் பாக்ஸோடு நின்றிருந்த வினய்யை கிஞ்சித்தும் எதிர்பார்க்கவே இல்லை.

 

"என்னை சைட் அடித்தது போதும்.. கொஞ்சம் வழியை விடு மாமீமீ" என்று அவனின் கேலி குரலில், இன்னும் நன்றாக வழியை மறைத்துக் கொண்டு அவள் நிற்க.. 

 

அதைப் பார்த்ததவன் "எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. உன்னை அப்படியே தள்ளிக்கிட்டு உள்ள போயிடுவேன். உனக்கு வசதி எப்படி?" என்று கேட்க.. அவனை முறைத்து கொண்டே ஒதுங்கி வழிவிட்டாள் வர்த்தினி.

 

உள்ளே வந்தவன் அங்கு இருந்த டேபிளில் உணவினை வைத்து விட்டு இரு தட்டை எடுத்து பரிமாற தொடங்கினான். அவனின் உயரத்தையும், தொழிலில் அவனின் ஆளுமையும் ஏற்கனவே பார்த்தவள் தனக்காக உணவினை கொண்டுவந்து பரிமாறுபவனை நம்பமுடியாமல் விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

"என்னை கண்ணால் சாப்பிட்டது போதும். வயித்துக்கும் கொஞ்சம் சாப்பாடு கொடுக்கலாம். வாங்கோ மாமி. எனக்கும் பசிக்கிறது" என்றவாறு இருக்கையில் அமர்ந்து அவன் அழைக்க..

 

அவளோ நின்ற இடத்திலிருந்து ஒரு இன்ச் கூட நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள் முகத்தில் கோபத்தை காட்டி.. 

 

"சாப்பாடும் நானே ஊட்டி விடவா மாமீமீ?" என்று தட்டை எடுத்துக்கொண்டு அவள் புறம் அவன் திரும்ப எத்தனிக்க.. 

 

கால்களை சிறுபிள்ளை போல் தரையில் வேகமாக உதைத்துக் கொண்டே வந்து

 இருக்கையில் அமர்ந்தவள், அவனிடம் எதுவும் பேசாமல் உணவை எடுத்து அவசர அவசரமாக உண்ணலானாள். அவளின் இந்த அவசரம் அவளின் பசியின் அளவை காட்ட மென்மையாக அவளை பார்த்துக் கொண்டே தனது உணவினை உண்டான் வினய் விஸ்வேஸ்வரன்.

 

சாப்பிட்டு முடித்து அவன் தட்டிலேயே கையைக் கழுவ, இருவரும் சாப்பிட்டதை ஓரமாக எடுத்து வைத்தாள் வர்த்தினி.

எதிரிலிருந்த இருக்கையை காட்டி அதில் அமருமாறு சொன்னவன், இரு கைகளை கட்டிக்கொண்டு தீர்க்கமாக அவளைப் பார்த்தான். 

 

"சொல்லு மாமி.. எதற்காக இந்த ஓடல் ஒளியல் எல்லாம்" என்று அழுத்தமாக கேட்ட தொனியே நீ பதில் சொல்ல வேண்டும் என்று இருந்தது.

 

"நான் எதுக்கு உங்கள பாத்திட்டு ஓடணும்" என்று வீம்பாகவே அவள் பதில் கூற..

 

"குட்.. இனியும் ஓடாத. என்னை விட்டு உன்னால் போக முடியாது எங்கேயும் எப்போதும்" என்று அவன் அழுத்தமாக கூற..

 

"இன்னும் ஒரு வாரம் தான். இந்தப் பாட்டு ஷூட்டிங் எல்லாம் முடிந்ததும் நான் எங்க ஊருக்கு போய் விடுவேன்" என்று அவனை பார்த்து இவள் கெத்தாக கூற..

 

தன் தாடையை தடவியவாறு யோசனையுடன் அவளைப் பார்த்தவன்.. பின் இருக்கையில் இருந்து மெதுவாக எழுந்து தீர்க்கமாக அவளைப் பார்த்து "இனி காலத்துக்கும் நீ லண்டன் வாசித்தான் மாமி" என்று தன்‌ மனதினை உணர்த்தி விட்டு கிளம்பினான்.

 

அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து, "ஒரு காலத்துக்கும் அதெல்லாம் நடக்கவே நடக்காது" என்று அவள் கூற, சற்றென்று அவள் புறம் குனிந்தவன் இருக்கையின் இருபுறமும் கைகளால் அவளை சிறை செய்து அவள் கண்களை ஆழ்ந்து நோக்கினான். 

 

"ஏன் மாமீமீ" என்று அவன் கேட்க..

 

"நேக்கு உங்களை பிடிக்கல" என்க..

 

"உன் வாய் தான்டி அப்படி சொல்லுது ஆனால் உன் கண்ணு வேற பாஷை பேசிது மாமீ" என்று அவன் கூற..

 

"நெஜமாவே நேக்கு உங்கள பிடிக்கல.. உங்களோட பணத்திமிர்.. நினைத்ததை சாதிக்க எதையும் செய்யும் உங்க குணம்.. என்னதான் தப்பு செய்தாலும் அது கொஞ்சம்கூட தப்பே இல்லைன்னு சொல்லுற உங்களோட ஆளுமை... நீங்க சொல்றது மட்டுமே அடுத்தவங்க கேக்கனும்னு சொல்ற உங்களோட ஆணவம்.. உங்களோட கோபம் இது எல்லாத்தையும் தாங்கியிருக்க உங்க கர்வம்.. இது எதுவுமே நேக்கு பிடிக்கல.. இது எல்லாத்துக்கும் மேல..." என்று அவள் இழுக்க..

 

அதுவரை தன்னை பற்றி துல்லியமாக அவள் சொன்னதை ஒரு சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவன் "மேல என்ன சொல்லு? எல்லாத்தையும் சொல்லி மூடி" என்று அவன் கூற..

 

"நேக்கு வர ஆம்படையான் ராமன் மாதிரி ஒருத்திய மட்டுமே நினைக்கிறவனா இருக்கனும். கிருஷ்ணர் மாதிரி வேண்டாம்" என்று அவள் கூற..

 

அவளை அடிப்பட்ட பார்வை பார்த்தவன், 

"அது எப்படிடி சாமி கும்பிடும் போது மட்டும் கிருஷ்ணன் விழுந்து விழுந்து கும்பிட்டுறீங்க ஆனால் கணவன் மட்டும் ராமனா கேக்குறீங்க.. உங்க கணக்கு எனக்கு புரியவே இல்லை" என்றான் கோபத்தோடு..

 

"என்னை நிஜமா உனக்கு பிடிக்கல?" என்று அவளைக் கூர்ந்து பார்த்து இவன் கேட்க அவளும் பிடிக்கல என்று தலையசைத்தாள்.

 

"அப்ப நான் கொடுத்த முத்தத்தை எல்லாம் எனக்கு திருப்பி கொடு மாமீமீ" என்று அவன் கேட்க..

 

"ஆஹாங்.." விழி விரிய வாயை பிளந்து அவனை பார்த்தாள் வர்த்தினி.

 

"இதுவரைக்கும் நான் கொடுத்த எல்லா முத்தத்தையும் ஒன்று கூட விடாமல் எனக்கு திருப்பிக் கொடுத்திட்டு, அதுக்கப்புறம் என்னை பிடிக்கலனு சொல்லுடி" என்றவன் விடு விடு என்று வாயிலை நோக்கி சென்று கதவை திறந்து, திரும்பி அவளை பார்த்து "ஐ அம் வெயிட்டிங்.. நாளைக்கு எல்லாத்தையும் கொடுத்திடனும்" என்றவாறு சென்றுவிட்டான்.

 

அவனின் இந்த லாஜிக்கை கண்டு "இவன் கிட்டையா வந்து நாம மாட்டனும்.. ஏன் நாம வாயை இவங்கிட்ட விட்டோம்" என்று தன்னையே நொந்தவாறு அமர்ந்திருந்தாள் வர்த்தினி.

 

தன் குடிலுக்கு வந்தவனுக்கு வர்த்தினியின் பேச்சு கோபம் கோபம் மட்டுமே.. தன் கையில் கிடைத்தவற்றை எல்லாம் வீசி எறிந்து அறையை ஒரு வழியாக்கினான்.

ஆனால் அவளின் அந்தப் பிடிக்கல என்ற‌ வார்த்தை அவன் காதுக்குள் நீங்காத ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

"விடமாட்டேன் டி மாமீ உன்னை" என்று அந்த குடிலே அதிரும் வண்ணம் கத்தினான்.

 

மறுநாள் காலை மஞ்சுளாவிடமிருந்து இவனுக்கு போன் வந்தது. பொதுவாக இவன் இந்த மாதிரி வெளியூர் சென்றால், அவனே எப்போதாவது ஒருமுறை வீட்டிற்கு அழைத்து தாய் தந்தையரின் சுக நலன்களை தெரிந்து கொள்வான். ஆனால் அவர்களால் இவனை தொடர்பு கொள்ள முடியாது ஏதேனும் அவசரமாக இருந்தால் ஒழிய..

 

இன்று மனது சோர்ந்து இருக்கும் வேளையில், அதுவும் அன்னையிடமிருந்து காலையிலேயே போன் வந்திருக்க.. ஏதும் தந்தைக்கு உடல்நிலை சரியில்லையோ என்று அவசரமாக எண்ணியவன், "டாட்.. நல்லா தான இருக்காரு மாம்" என்று பதட்டத்துடன் இவன் வினவ..

 

"ரிலாக்ஸ் கண்ணா.. அப்பா நல்லா இருக்காரு. எனக்கு தான் உன்கிட்ட ரெண்டு நாளா பேசினும்னு தோனிக்கிட்டே இருந்துச்சு. அதனால தான் கால் பண்ணினேன்" என்று கூறினார்.

 

"என்ன மாம்.. என்ன விஷயம்?" என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து தலையணையை மடியில் வைத்தவாறு அவன் கேட்க..

 

"கண்ணா.. இதனை நீ எப்படி எடுத்துக் கொள்ளுவனு எனக்கு தெரியல. ஆனாலும் சொல்ல வேண்டியது என்னோட கடமை. இந்த திடீர் சூட்டிங் அரஞ்மெண்ட்டு எதுக்குனு என்னால் கொஞ்சம் யூகிக்க முடியுது. அந்த பொண்ணு உன்னை திரும்பிப் பார்க்க வைக்க நீ ஏதோ பிளான் பண்ற சரியா?" என்று அவர் கேட்க..

 

வினய் அமைதியாக இருந்தான்.

 

"வேண்டாம் வினய்.. கடல் கடந்து சொந்தங்களை எல்லாம் விட்டுட்டு தன்னோட எதிர்காலத்திற்காக வந்திருக்கா அந்த பொண்ணு.. அவளை கஷ்டப் படுத்தாத.. விருப்பமில்லாத பெண்ணை சீண்டாத. நீ வளர்ந்த கல்ச்சர் வேற.. அந்த பொண்ணு வளர்ந்த, வாழுற விதம் வேற கண்ணா.. உன்னை வேண்டாம்னு சொல்லுற பொண்ணு உனக்கு வேண்டாம். அவள் உன்னை உன்னோட இயல்போட காதலோட ஏத்துக்கிட்டா தான் அந்த வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். இல்லைன்னா இரண்டு பேரும் இரண்டு நாள் கூட சேர்ந்து இருக்க முடியாது.. இதுல மட்டும் அம்மா சொல்லுறத கேளு கண்ணா" என்று அவர் கூற.. 

 

அவரின் அந்த கண்ணா என்ற அழைப்பு அவனை கரைக்க, "சரி மாம்" என்று ஒற்றை வார்த்தையில் அன்னையின் கூற்றை அவர் ஏற்றுக் கொள்ள.. மஞ்சுளாவிற்கு அதிசயமாகத்தான் இருந்தது நம் மகனா இது என்று!!

 

மேலும் தந்தை தாயை பற்றி நலன்களை கேட்டு விட்டு போனை வைத்தவன், இரு கைகளாலும் தலையை தாங்கியவாறு சிறிது நேரம் அமர்ந்து இருந்தான். பின்னே ஒரு முடிவு எடுத்தவனாக குளியல் அறை நோக்கி சென்றான்.

 

அடுத்த நடந்த மூன்று நாட்களும் வினய் வரத்தினியின் கண்களுக்கு தெரியவே இல்லை. முதல் இரண்டு நாட்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவள், மூன்றாம் நாள், மெதுவாக லீனாவிடம் வர்த்தினி விசாரிக்க, "சார் பக்கத்துல இருக்குற தீவுக்கு ரிலாக்ஸேனுக்காக போய் இருக்கிறார்" என்று வில்லியம்ஸ் மூலம் லீனா வழியாக அவளுக்கு தகவல் கிடைத்தது.

 

உண்மையில் வினய் சென்றது இரண்டு நாள் தனிமையில் இருந்து வரத்தினி நினைவுகளை முழுவதுமாக மூழ்கடித்து வர..

ஆனால் இங்கே வர்த்தினியோ 'தன்னிடம் அன்று இரவு அவ்வாறெல்லாம் பேசியவன் தான் பிடிக்க வில்லை என்றதும், இன்று வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டான்' என்று எண்ணிக்கொண்டாள். அவ் எண்ணமே அவளுக்கு மேலும் மேலும் வினய்யின் மீது கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியது.

 

யார் சொல்வது இவளுக்கு விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் ஒரு நூலிழை தான் என்று!!

 

வெறுப்பு விருப்பாக எந்த ஒரு புள்ளியிலும் மாறலாம் என்று!!

 

அந்த புள்ளியும் வந்து சேர்ந்தது அவர்கள் ஷூட்டிங் முடித்த கடைசி நாளன்று!!

 

அன்று இரவு குடிபோதையில் தன்னவனின் சட்டை காலரை இறுக்கப் பிடித்து, கோபமாக தனது காதலை சொன்னாள் ஹம்சவர்த்தினி!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top