12
என்னது புடவை கட்ட கூடாதா? அவன் முத்தம் கொடுத்தது எல்லாம் பின்னுக்கு செல்ல.. 'ஏன் ஏன் புடவை கட்ட கூடாது, இவன் முன்னிலையில்? அப்படி என்ன இவன் பெரிய ஆள்?' என்று அவனை பார்க்க.. அவனோ ஒரிரு நிமிடங்களில் ஓராயிரம் பாவங்களை காட்டும் இவளின் முக பாவனைகளில் தான் கவனத்தை வைத்திருந்தான்.
அவள் அகத்தை படித்தவன், முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டாமல், இன்னும் அவளருகில் உரசி அமர்ந்து "ஏன்னா மாமி.. நீ புடவையில இருக்கிறச்ச என்னால, என்னை கன்ட்ரோல் பண்ண முடியல மாமி. அப்புறம் எக்கு தப்பா... எசகு பிசகா நான் எங்கையாவது கையை வைச்சிடுவேன்" என்றவனின் கண்கள் அவள் பொய்யோ என்ற இடையில் பதிய.. சட்டென்று தன் புடவையை அவள் இடை தெரியா வண்ணம் இழுத்து விட்டுக் கொள்ள, வெடித்து சிரித்தான் வினய்.
"அதெல்லாம் என்னால முடியாது.. நேக்கு புடவை தான் கம்பர்டபுளா இருக்கும்" என்று அவள் முகத்தை திருப்பிக் கொண்டு முணுமுணுக்க..
"என்ன ஒரு ஒற்றுமை பாரு மாமி நமக்குள்ள.. எனக்கும் நீ புடவை கட்டினால் தான் கம்பர்டபுளா இருக்கும்" என்று அவன் அதரங்களை மடித்து கடித்து மீசைக்கு அடியில் சிரிக்க..
என்ன சொல்கிறான் புடவை கட்டு என்று சொல்கிறானோ? காட்டாதே என்று சொல்கிறானா? என்று புரியாமல் அவன் முகத்தை அவள் பார்க்க...
"அதாவது மாமி புடவை கட்டு. ஆனால் எல்லோருக்கும் முன்னாடியும் கட்டாதே.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா இந்த உலகத்திலேயே செக்ஸியான டிரஸ் எது தெரியுமா?" என்று கேட்க..
அவள் இவ்வூரில் காலடி வைத்தது முதல் பார்த்த ஒவ்வொரு உடைகளையும் தன் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி பார்த்தாள். அவளுக்கு அவை அனைத்துமே கொஞ்சம் செக்ஸியான உடைகள் ஆகத்தான் தெரிந்தது ஒரு சிலவற்றை தவிர.. ஆனாலும் அவன் கேட்டதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அவள் தாடையை ஒற்றை விரலால் நிமிர்த்தி அவள் கண்களில் ஊடுருவி பார்த்தவன், "நான் கேட்டா பதில் சொல்லணும் மாமி" என்று சொன்னவனின் குரலில் தான் என்ன ஒரு அழுத்தம்.
அவளுக்கு நா தந்தி அடிக்க "நேக்கு தெரியாது" என்று கூறினாள்.
அவள் தாடையை விடாமலேயே அவள் காது அருகில் நெருங்கியவன் "புடவைதான் இந்த உலகத்திலேயே ரொம்ப செக்ஸியான டிரஸ். காட்ட வேண்டியது எல்லாம் காட்டி, டெம்ட் ஏத்துறத்துல புடவைக்கு மிஞ்சின ஒரு டிரஸ் கிடையவே கிடையாது. சோ இனி நீ புடவையை எல்லோரும் இருக்கும் போது என் முன்னால் கட்டிக்கிட்டு வராத.. அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை" என்று இரு தோள்களையும் அசால்ட்டாக தூக்கி கூறியவன் "நாளைக்கு நீ புடவையில் வரக்கூடாது" என்றவாறு காரை எடுத்தான்.
'திடீர்னு புடவையில் வரக் கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்? இதுக்கே இப்படி சொல்றானே.. நாம மடிசாரு கட்டிண்டு இவன் முன்னால் போனால்? பாய்ஞ்சிட மாட்டான் நம்ம மீது.. பெருமாளே வேண்டாம் வேண்டாம்!!' என்று அவளுக்குள் எண்ணம் தோன்ற அதனை அவன் அறியாமல் முகத்தை திருப்பி மறைத்துக் கொண்டாள்.
ஏற்கனவே அவனுக்கு கையும் வாயும் நீளம் இதுல நீ வேற ஏம்மா!!
அவளை வெங்கடேசன் வீட்டில் இறக்கி விட்டவன், அவள் இறங்கும் போது ஞாபக படுத்த தவறவில்லை. புடவை கட்டிட்டு வராதே என்றுதான்.. வேறு என்ன?!
வீட்டுக்குள் வந்து வர்த்தினிக்கு கொஞ்சம் கூட மனது ஆறவே இல்லை. எப்படி அவன் இப்படி செய்யலாம்? அதுவும் இன்று அத்துமீறிய அவனது கைகள் அவளுக்கு இன்னும் பேரதிர்ச்சியை தான் கொடுத்தது.
அது எல்லாத்துக்கும் முத்தாய்ப்பாக அவன் கூறிய என் முன்னால் இனி சேலை கட்டாதே என்ற வார்த்தை அவளுக்குள் மீதமிருந்த கோபத்தையும் தூண்டி விட..
"நா அப்படித்தான் புடவை கட்டுவேன். நோக்கு என்னடா வந்தது அபிஸ்து.. சண்டாளா.. கிராதகா.. சும்மா சும்மா வந்து தொட்டுண்டு இருக்கான்" என்று வழக்கமான தனது நோட் பேட்டில் அவன் முகத்தை வரைந்து கிறுக்கி.. அந்த முகம் முழுவதும் தன் ஆத்திரம் தீர பேனாவால் குத்தி.. அவளுக்கு தோன்றிய கெட்ட வார்த்தைகளால் திட்டி எழுதி ஒரு வழி ஆக்கினாள் அவனை.. அதாவது வினய்யின் உருவத்தை..
வழக்கமான உதட்டு ஜலக்கிரீடையை இம்முறை உடம்புக்கும் சேர்த்து நடத்தி விட்டு வந்தாள். ஆனால் எத்தனை முறை என்பது எல்லாம் அந்த பெருமாளுக்கே வெளிச்சம்!! குளித்து வந்து வேறு உடை அணிந்தவுடன் தான் அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
ரூமுக்குள்ளேயே அடைந்து கிடக்க பிடிக்காமல் இரவு உணவு தயாரிக்க பத்மாவோடு இவள் இணைந்து கொண்டாள். இவள் தங்குவதற்கு தேவையான பணத்தை முன்கூட்டியே அக்ரிமெண்ட் போட்ட நாளிலேயே வினய் இவர்களுக்கு செட்டில்மெண்ட் செய்திருக்க.. அதனால் பத்மாவிற்கு கொஞ்சம் சந்தோசம் தான் வர்த்தினி இங்கேயே தங்கி இருப்பது.
"ஏண்டிமா வர்த்தினி.. பாட்டு பாடுறது எல்லாம் எப்படி போயிண்டு இருக்கு? ஒன்னும் பிரச்சினை இல்லை தானே? அப்படி எதா இருந்தா என்னாண்ட சொல்லு.. அந்த கம்பெனி முதலாளி வினய் மாமாவுக்கு ரொம்ப வேண்டியவர். அவராண்ட ஒரு வார்த்தை சொன்னா போதும், யாரும் உன்னை ஏதும் சொல்லாம நன்னா பார்த்துப்பா" என்று கூறினார்.
அவனை பத்தி அவனிடமே வா சொல்ல முடியும்? இல்லை இப்படி தன்னிடம் அவன் நடப்பதை சொன்னால் இவர் ஒருத்தரே போதுமே.. லண்டன் முழுக்க ஒலிபரப்பு பண்ண.. அதை காட்டிலும் என் அப்பா அம்மாவுக்கு தெரிந்தால்.. நினைக்கவே அவளுக்கு பயந்து வர.. "அங்க நேக்கு ஒரு பிரச்சினையும் இல்ல மாமி.. நான் நன்னா தான் இருக்கேன்" என்று சமாளித்தாள்.
இரவு உணவை அனைவரும் சேர்ந்து அமர்ந்து உண்ண.. வெங்கடேசன் வழக்கமான கேள்விகளை அவளிடம் கேட்டு அவளது நலத்தை தெரிந்து கொண்டார்.
வெங்கடேசனும் பத்மாவும் விரைந்து சாப்பிட்டு எழுந்து விட, பிரதீபன் அவளிடம் தனியாக பேசும் தருணத்திற்காக சாப்பாட்டை மெதுவாக உள்ளே தள்ளி கொண்டு இருந்தான். வர்த்தினியும் அவன் எண்ணத்தை அறியாமல் வினய்யின் பேச்சிலேயே அவளது எண்ணங்கள் சூழல அவளும் மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
"வரு.." என்று பிரதீபன் அழைக்க..
யாரையோ என்று அவள் சாப்பாட்டில் கவனம் கொள்ள..
"வரு.. உன்னை தான்" என்று சன்னக்குரலில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அழைத்தான் பிரதீபன்..
இப்போ எதுக்கு இவன் என்னை போட்டு வரு வருனு வறுக்குறான் என்று வர்த்தினி அவனை பார்க்க..
"வரு.. நீ ரொம்ப அழகு.. அதுவும் புடவையில் இன்னும் அசத்துற.. நம்மாவ பொண்ணுங்க எல்லாம் அழகு தான். ஆனாலும் நீ தனி தான்" என்று அவன் சாப்பாட்டில் விரலால் அலைந்து கொண்டே.. அவன் குழைந்து குழைந்து பேச..
ஏற்கனவே புடவை பற்றி பேசி கோப தீயை வினய் வளர்த்து விட்டு இருக்க.. இவனும் அதையே பேசியதில் அவன் மீது உள்ள மொத்த கோபமும் இவன் மீது திரும்பியது வர்த்தினிக்கு..
"இப்போ அதுக்கு என்னாங்கிறேள்?" என்று கோபத்துடன் கேட்டாள்.
ஆனால் காதல் மயக்கத்தில் இருந்த பிரதீபனுக்கோ வர்த்தினியின் குரல் பேதம் எதுவும் சரியாக புரியவில்லை.
"அதான்.. வரு.. நேக்கு உன்ன ரொம்ப பிடிச்சுடுத்து.. உன் பாட்டு.. உன் பாங்கு.. உன் குணம்.. உன் அமைதி.. எல்லாத்தையும் விட உன் அமைதியான அழகு.. என்னை நானாக இருக்க விடல. உன் மேல பித்தாக்கிடுத்து" என்று அவன் உளறிக்கொண்டே செல்ல..
"செத்த நிறுத்துறேளா? நீங்க பேசுறதெல்லாம் மாமிக்கு தெரிஞ்சா.. என்னை பத்தி என்ன நினைப்பா? உதவி செஞ்சவாளுக்கு உபத்திரம் இல்லாம இருக்கனும். நீங்க நேக்கு வீணா உபத்திரவத்தை இழுக்குறேள். அதுவுமில்லாம உங்களுக்கும் எங்களுக்கும் எல்லாம் ஏணி வைச்சா கூட எட்டாது. இந்த மாதிரி அசட்டுத்தனமாக பினாத்துறதை விட்டுட்டு சாப்பாட்டில் கவனத்தை பாருங்கோ" என்று அவள் சற்று கடுப்புடன் கூற..
அந்த கூறு கெட்டவனுக்கு எங்கே அது எல்லாம் மண்டையில் ஏற?
வர்த்தினியை பார்த்து இதுவரை ஒன்றும் பழகவே இல்லையே என்ற வருத்தம் ஒருபுறம்.. இம்மாதிரியான சூழ்நிலை விட்டு விட்டால் திரும்ப கிடைக்காது என்கிற பதட்டம் ஒருபுறம்.. அம்மா இல்லாமல் இப்படி தனியாக அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் சுதந்திரம் ஒரு புறம் என்று அவனை தன்னிலை இழக்க வைத்து மனதில் உள்ளதை எல்லாம் உளறிக் கொண்டிருந்தான்.
"அம்மா எதுவும் நினைக்க மாட்டா வரு.. இன்னும் சொல்லப்போனா உன்னை மாதிரி ஒரு மாட்டு பொண்ணு கிடைக்க அவா தான் கொடுத்து வச்சிருக்கணும். பணம் என்ன பெரிய பணம்? இப்போ நீயும் தான் நன்னா பாடி சம்பாதிக் ஆரம்பிச்சுட்ட.. அப்படியே நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிண்டா இன்னும் நிறைய நிறைய வாழ்க்கையில் முன்னேறலாம்.. உனக்கும் இங்கே பாடுவதற்கு நிறைய ஆப்பர்சூனிட்டி கிடைக்கும். கூடவே ஒரு அக்கெடமி ஆரம்பிச்சுட்டா பணத்துக்கும் குறைவிருக்காது.. வளத்துக்கும் குறைவிருக்காது. நீயும் அம்மா போலவே நன்னா சமைக்கிற.. என்னை நன்னா பாத்துக்குவே" என்று கல்யாணத்தை சந்தையில் வாங்கும் வியாபார பொருளைப் போல பண்டமாற்று முறையில் அதுவும் தனக்கு மட்டுமே சாதகமாக அவன் பேசிக்கொண்டே செல்ல செல்ல.. கொஞ்ச நஞ்சம் இருந்த பொறுமையும் பறந்து போனது வர்த்தினிக்கு.
அவள் செய்து வைத்திருந்த பொங்கலையும் கத்தரி கொஸ்துவையும் விரல் சூப்பி சூப்பி சாப்பிட்டுக்கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க இன்னும் வேகம் கொள்ள பட்டென்று எழுந்தவள், "இந்தாங்க சாப்பிடுங்கோ இன்னும் நன்னா சாப்பிடுங்கோ.. நானே செய்ததாகக்கும்" என்று ஹாட் பாக்ஸில் இருந்த பொங்கலை அனைத்தையும் அள்ளி அள்ளி அவனுக்கு வைத்தாள். கத்திரி கொஸ்துவை அப்படியே சட்டியில் இருந்ததை அவன் தட்டில் கொட்டி விட்டு "நன்னா சாப்பிட்டு.. உடம்ப பாத்துக்கோங்க" என்றவள் அருகே அமர்ந்து அவனையே பார்க்க..
பிரதீபனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை. அதற்குமேல் இவ்வளவையும் எப்படி சாப்பிட்டு முடிக்க என்று திக்கி திணறி போனான். அவன் திணறுவதை ஒருவித நிம்மதியுடன் பார்த்துக்கொண்டு இருக்க.. பிரதீபனோ டிபன் சாப்பிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்க.. அதேசமயம் தண்ணீர் குடிக்க வந்த பத்மா அதை பார்த்து "என்னடா அம்பி இவ்வளவு பொங்கலையும் வச்சுண்டு உட்கார்ந்து இருக்கே?" என்று வாய் பிளந்து கேட்டார்.
பிரதீபனோ அன்னையிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்க அது இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டியது வர்த்தினிக்கு.
"அது ஒன்னும் இல்லை மாமி. அவருக்கு நான் செஞ்ச பொங்கலும் கத்தரி கொஸ்து ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் வேணும் என்று சொன்னாரா அதான் வச்சேன்.. ஆசையா சாப்பிட்டுண்டு இருக்கிறார்" என்று கொளுத்திப் போட..
"என்னது பொங்கலும் கத்திரி கொஸ்தும் இவனுக்கு பிடிக்குமா? என்ன இன்னும் வேணும்னு ஆசையா கேட்டானா?" என்று அதிர்ச்சியுடன் மகனை திரும்பிப் பார்க்க.. அவனோ தப்பு செய்து மாட்டிக் கொண்ட பிள்ளையைப் போல பத்மாவிடம் வசமாக மாட்டிக் கொண்டான்.
அவனையும் அவன் தட்டில் உள்ளதையும் மாறி மாறி பார்த்தவர் பின்னர் வர்த்தினியை பார்த்து "நீ போய் தூங்கு மா.. நான் பாத்துக்குறேன் அவனை" என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூற...
"சரிங்க மாமி.. நீங்க சொன்னீங்கனா சரிதான்" என்று அடக்கமாக கூறிவிட்டு அடக்கமுடியாத சிரிப்பு உடன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் வர்த்தினி.
வர்த்தினி தன் அறைக்குள் நுழைந்து அடுத்த கணம் மகனின் தலையில் பட்டு பட்டு பட்டு என்று கொட்டுகளை கொடுத்துவிட்டார் பத்மா மாமி.
"அறிவு இருக்காடா நோக்கு.. கொஞ்சமாவது அறிவு இருக்கா.. நானே அந்த பொண்ணை நோக்கு பார்த்து எப்படியாவது கட்டி வைக்கிறேன் என்று சொன்னேனோ இல்லையா? அத விட்டுட்டு அந்த பொண்ணு முன்னாடியே இப்படி மானத்தை வாங்கி வெச்சு இருக்கியே...
அதுவும் தட்டு நிறைய பொங்கல வைத்துக்கொண்டு அபிஸ்து.. அபிஸ்து. உன்னை எல்லாம் வச்சுண்டு.. போ.. போ தூங்க போ" என்று தலையிலடித்துக் கொண்டவர், பிரதீபன் எழுந்து போக "போகும்போது இதை டஸ்ட் பின்னுல கொட்டி விட்டு போ" என்று மீண்டும் அவன் தலையில் இரண்டு கொட்டுகளை வைத்து விட்டுத்தான் தன் அறைக்கு சென்றார் அவனை வசை பாடிக் கொண்டே....
தன் அறையிலிருந்து இதை லேசாக கதவை திறந்து ஒற்றை கண்ணை மட்டும் வைத்து பார்த்துக் கொண்டிருந்த வர்த்தினிக்கோ சிரிப்போ சிரிப்பு..
வினய்யால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இங்கே பிரதீபனை அதுவும் அவனின் அசட்டு தனத்திற்கு சரியாக வாங்கிக் கொடுத்து விட்டோம் என்ற நிம்மதியில் உறங்கினாள் அவள். அப்படி எல்லாம் உன்னை நிம்மதியாக உறங்க விடமாட்டேன் என்று அவளுக்கான திட்டத்தை அங்கேயே ஒருவன் தீட்டிக் கொண்டு இருப்பதை அறியாமல்!!
மாலை தரணீஸ்வரன் தன் வீட்டிற்குள் நுழையும்போது மஞ்சுளா ஹெட்போனில் சோபாவில் தளர்வாக அமர்ந்து பாட்டு கேட்டுக் கொண்டிருப்பதை ஆச்சரியமாக பார்த்தார் அவர். அவர் முகத்தில் தெரிந்த அந்த அமைதியும் சந்தோசமும் தரணீஸ்வரனை அதற்கு மேல் செல்ல விடாமல் அவர் அருகில் செல்ல வைத்தது.
மெல்ல அவர் தோளை தொட கண்களை திறந்து பார்த்தவர், தன் கணவனைக் கண்டு வசீகரமாக சிரித்தார். இப்போது தரணிக்கு தன் கையை கிள்ளி பார்க்கும் நிலைமை!! நம் மனைவி தானா என்று!!
"ரொம்ப எல்லாம் யோசிக்காதீங்க பாட்டு கேட்டுகிட்டு இருந்தேன். அந்த மூடுல உங்கள பார்த்து சிரிச்சிட்டேன். இதுக்கு எதுக்கு ஏதோ காணததை கண்ட மாதிரி வாய பொலக்கிறீங்க?" என்று கேட்டார் மஞ்சுளா.
ஹாலிலேயே சாதாரணமாக மஞ்சுளா அருகில் அமர்ந்த தரணியும் "இல்ல நீ எவ்வளவு ரிலாக்ஸ்டா என்ன பார்த்து சந்தோஷமா சிரிச்சியே? அதான் கடைசியா என்னை பார்த்து எப்படி அந்த மாதிரி சிரிச்சனு யோசிக்கிறேன்?" என்றார்.
"ம்ஹும்..உங்களைப் பார்த்து சிரிக்கிற மாதிரி நீங்க எப்போ நடந்து இருக்கீங்கனு யோசிச்சா சரியா இருக்கும்" என்று அவர் கேட்க தன் இரண்டு கைகளையும் தூக்கியவர் சரண்டர் என்றார்.
அது என்ற ஒரு வெற்றிப் பார்வையுடன் மீண்டும் ஹெட்போனை காதுக்கு கொடுத்து அவர் பாட்டு கேட்க முயல, அவர் கையை பிடித்து தடுத்து தரணி.. "அப்படி என்ன மஞ்சு டியர் இன்ட்ரஸ்டா கேக்குற? யார் பாட்டு?" என்று கேட்க..
முகம் கொள்ளா புன்னகையுடன் "அந்த பொண்ணு.. அதாங்க வர்த்தினி. அவளோட பாட்டு தாங்க... என்ன வாய்ஸ்.. என்ன சாரீரம்.. என்ன ஸ்ருதி.. நாள் புல்லா கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு" என்றவர் சிலாகித்துக் கூற..
"சிவனேன்னு அந்த பொண்ணை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாமா? மருமகளா?" என்று ஒற்றை கண்ணடித்து தரணி விளையாட்டுக்கு வினவ..
யோசனையுடன் இவர் கணவனை பார்க்க..
"எப்படியும் அந்த பொண்ணோட வாய்ஸ் உனக்கு புடிச்சிருக்கு. அதனால அந்தப் பொண்ணே சண்டை போட்டாலும் அவள் வாய்ஸ்ல மயங்கி நீ திரும்ப சண்டை போட மாட்டா. மாமியார் மருமகள் சண்டை வீட்ல நடக்காது எப்படி என் ஐடியா?" என்று தன் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள...
"ஆனாலும் உங்க பையனோட கேரக்டருக்கு அந்த பொண்ணு போய் எல்லாம் கொண்டு வரலாம் சொல்றீங்க பாத்தீங்களா? பாவம் நல்ல குடும்பத்தை சேர்ந்த பொண்ணு" என்று ஒரு மாதிரியான குரலில் அவர் கூற..
"என்ன மஞ்சு டியர்? நம்ம புள்ள பத்தி நாமே இப்படி பேசலாமா? நம்ம குடும்பம் நல்ல குடும்பம் இல்லையா?" என்று கேட்டார்.
"குடும்பம் மட்டும் நல்லா இருந்து என்ன புண்ணியம்.. கட்டிக்கப் போறவன் நல்லா இருக்கணும். அவன் கேரக்டர் நல்லா இருக்கணும். கொண்டவன் துணை இருந்தால் கூரை மேலே ஏறியும் கூவலாம் அப்படின்னு ஒரு வழக்கு சொல்லுவாங்க. குடும்பத்தில் உள்ளவங்க மட்டும் எப்படி இருந்தாலும் கட்டினவன் ஒருத்தனோட துணை இருந்தால் மட்டும் அந்த பெண்ணுக்கு போதும். ஆனா நம்ம வீட்டுல அப்படியா இருக்கு? முதல்ல உங்க பையன் கல்யாணம் பண்ணிக்கறானான்னு பார்க்கலாம்" என்று அவர் சோகமாக முடிக்க..
"டோன்ட் வொர்ரி மஞ்சு டியர்.. சீக்கிரமே அவனுக்கு ஒரு நல்லா பொண்ணா பார்த்திடலாம்" என்று மனைவியை அணைத்து அவர் ஆறுதல் கூற..
"கல்யாணம் பண்ணி வச்சு..??" என்று அவர் கணவனை பார்த்து கேட்க..
"என்னடி கல்யாணம் பண்ணி வச்சினு இழுக்குற" என்று அவர் குழம்ப....
"ஆமா பொண்ணு இங்க வெச்சிட்டு அவன் போய் கெஸ்ட் ஹவுஸ்ல போய் தங்குவான். அதுக்கு எதுக்கு கல்யாணம்? முதல்ல அவன் திருந்தட்டும் அப்புறம் கல்யாணத்தை பத்தி எல்லாம் யோசிக்கலாம். ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழித்ததா நமக்கு எந்த பேரும் வேணாம்" என்று மகனை மாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் கூறியவர் மீண்டும் தன் பாட்டிலேயே லயித்துவிட்டார்.
ஆனால் இவர் அறிவாரா இதே மகன் ஒரு பெண்ணுக்காக தன்னிடம் வந்து கதறி அழ போகிறான் என்று!!
இம்சைகள் பல நான் கொடுத்தாலும்..
அஹிம்சையாய் நீயும் அதை ஏற்று..
இதயக்கூட்டில் எனை வைத்திருக்கிறாயடி..
கோகிலமே!!
அவ்விதயத்துக்கு முத்தங்கள் கோடியடி!!
என்றவன் மெல்ல அவளது முந்தானையை விலக்கி இதயக் கூட்டில் பல முத்தங்களை வாரி வழங்க.. மலை முகடுகளில் பயணித்த அவனது அதரங்கள் செய்த அட்டூழியங்களில் அவளின் தளிர்மேனி தாபம் மூண்டது.
கட்டுமஸ்து படிக்கட்டு தேகமும்.. அகன்ற தோளும்.. உருண்டு திரண்ட புஜங்களுமாய்.. தன்னவனை அருகில் பார்க்க அவளுக்கு நா வறண்டது. எச்சில் கொண்டு அவற்றை தன்னிலை கொண்டு வர அவள் பிரம்மயத்தனம் செய்ய.. ஏறி இறங்கும் அவள் தொண்டைக்குழியை பார்த்தவன், அவள் சங்கு கழுத்தில் புதைந்து ஏறி இறங்கும் அவற்றை தன் நாவினால் கவ்வி, ரசித்து ருசித்து சமாதானப்படுத்தலில் இறங்கினான்.
அவனின் ஒவ்வொரு தொடுகையில் அவளது தளிர் மேனியெங்கும் நடுங்க... பெண்ணவளுக்கு அவன் மீது பித்தாக..
மோகம் முத்தாக.. உதடு கடித்து.. அவன் கேசத்திற்குள் விரலை நுழைத்து தன்னுடன் இறுக்கிக் கொண்டாள் தன் நெஞ்சோடு.. அவளின் இந்த நெருக்கத்தில் தலை நிமிர்த்தி பார்த்தவன், துடிக்கும் அவளது சிவந்த உதடுகளை இவன் கவ்வி சுவைக்க.. இளந்தாமரை நிறத்தில் இருந்த இளம் பிஞ்சு உதடுகள் கன்
றி சிவந்தன..
சட்டென்று விதிர்விதிர்த்து, அரண்டு புரண்டு எழுந்து அமர்ந்தாள் வர்த்தினி தூக்கத்திலிருந்து..
கனவின் தாக்கம் நாளை தொடருமோ?