8
"நீ கண்ட கனவை நனவாக்க போறேன் பேப்" என்று கூறியவனை கண்டு அவள் மெல்ல மெல்ல பின்னோக்கி செல்ல... இவனோ அவளிடம் முன்னோக்கிச் செல்ல..
அந்த அறையின் அலங்காரமும்.. அறை முழுவதும் ரூம் ஸ்ப்ரேயர் நறுமணத்தினால் வந்த மிதமான வாசனை என்று அந்த சூழ்நிலையே ஒருவித மன மயக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. அத்தோடு கூடிய வர்த்தினியிடம் இருந்து மெல்ல வந்த கஸ்தூரி மஞ்சளின் வாசமும் புது விதமாக அவனை இழுக்க, மெல்ல முன் எட்டுக்கள் எடுத்து வைத்து அவன் முன்னே முன்னேற, அவளோ பின் எட்டுக்கள் எடுத்து வைத்து பின் நோக்கிச் சென்றாள் முகம் கொள்ளா பயத்துடன்...
ஒரு கட்டத்தில் வர்த்தினி பின்னால் இருந்த சுவற்றில் தட்டி நிற்க முன்னே சென்றவனோ ஒருவித மயக்கும் சிரிப்புடன் அவளை நெருங்கி, அவள் இரு தோள்களிலும் கைபடாமல் அதே நேரம் ஒரு இன்ச் கூட அவளை அசையவிடாமல் இருபக்கமும் தனது கைகளை வைத்து அவளை சிறை பிடித்தான்.
ஏகாந்த தனிமை.. அவ்வறையின் அலங்காரம்.. எதிரெதிர் இருக்கும் இருவரின் இளமை... கூடவே எப்பெண்ணையும் மயக்கும் புன்னகையுடன் நிற்கும் இந்த மாயவன் என ரம்யமாக இருந்தது அந்த சூழ்நிலை. காதல் கொண்ட இரு மனங்கள் இருந்தால் கூடல் கொண்டிருக்கும் இந்நேரம்.. ஆனால் அந்த சூழ்நிலையே திகலடித்தது வர்த்தினிக்கு.
முதலில் இரண்டு முறை தன்னை அவன் முத்தம் கொடுத்த அந்த தருணம் அனிச்சையாக அவளுக்கு ஞாபகம் வர.. இன்றும் எங்கேயாவது அதுபோல் செய்து விடுவானோ என்று பயந்தாள் அவள். கூடவே அவள் கண்ட கனவின் தாக்கம் வேறு.. அதற்கு மேல் தான் கண்ட கனவை சொல்லாமலேயே அதனை நனவாக்க போகிறேன் என்று கூறி எதிரில் நிற்கும் அவனைக் கண்டதும் இன்னும் வெடவெடத்தது அவளுக்கு.
மெல்ல தன் மனதை திடப்படுத்திக் கொண்டவள் செப்பு வாயை திறந்து "தள்ளி நில்லுங்கோ" என்றாள்.
"வொய் பேப்" என்றான் ஒற்றை புருவத்தை உயர்த்தி லேசான புன்னகையுடன்..
"நான் தான் அப்பவே சொன்னேனோ இல்லையோ? நா அந்த மாதிரி பொண்ணு கிடையாதுனு.. பின்ன நீங்க ஏன் இப்படி எல்லாம் பிஹேவ் பண்றேள்.. இதெல்லாம் கொஞ்சம் கூட நன்னாவே இல்ல" என்று அவள் மெதுவாக கூறினாள்.
"ஆனா பேப்.. எனக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு" என்றான் அவளை வம்பிழுக்கும் பொருட்டு..
"நேக்குச் சுத்தமா இதெல்லாம் பிடிக்கல" அவன் கண்களைப் பார்க்காமல் கீழே பார்த்துக்கொண்டு, அவள் மெதுவாக அதே நேரம் அழுத்தமாக கூறினாள்.
அதுவரை சற்று அவளிடம் சீண்டி வம்பு வளர்க்கலாம் என்று நினைத்து இருந்தவன், அவளில் அழுத்தமான கூற்றில் தன்னை நிதானித்து கூர்மையாக அவளை பார்த்தான்.
"எது பிடிக்கல நானா?" என்றான்.
"ஆமாம் நீங்க.. இந்த சூழ்நிலை எதுவுமே நேக்கு பிடிக்கலை.. என்னை விட்டுடுங்கோ" என்று அவள் கூற..
அந்த ஏசி குளுமையிலும் அவளுக்கு வியர்க்க, அவை வைர துளிகள் என மின்ன.. ஆங்காங்கே சிறு சிறு முடிக்கற்றைகள் பின்னலோடு சேராமல் சிலுப்பிக் கொண்டு நிற்க.. நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் சிறிய பொட்டு அதன் மேல் இருக்கும் குங்கும தீற்றல்.. அடிக்கடி அவள் நீள கண்கள் காட்டும் ஜாலம்.. மெல்ல அவன் பார்வை கீழே இறங்க, அம்சமான புடவையில் அதுவும் கொடி போன்ற இடையில் சற்று நிதானித்தது அவனின் பார்வை. சிக்கென்ற சிற்றிடை.. பருப்பும் நெய்யும் தின்று வளர்ந்த மாமிக்கு இவ்வளவு சிறிய இடையா? என்றுதான் அவனுக்கு தோன்றியது. முதலில் அவனுக்கு தெரியாத அவளின் சந்தன நிறமும் கொடி போன்ற உடலமைப்பும் கயல்விழிகளும் இப்போது அவளை பார்க்க பார்க்க கொள்ளை கொண்டாள் பாவை அவள் அவனை..
மீண்டும் அவளே தொடர்ந்தாள், "நீங்க என்னை அழைச்சிண்டு வரும்போது என்னை.. என்னை.. தொட மாட்டேன், முத்தம் கொடுக்க மாட்டேன் என்று தானே சொன்னேள்" என்று கேட்க..
இன்னும் அவளை நெருங்கியவன் மெல்லிய நூலிழை இடைவெளி விட்டு நின்று கொண்டு அவள் கண்களைப் பார்த்து "இப்ப கூட உன்னை நான் தொடல.. நீயே நல்லா பாரு" என்று நக்கலாக கூற.. எங்கே இருந்து அவள் பார்க்க சற்று அசைந்தால் கூட அவள் உடல் அவன் தேகத்தோடு உரசும் அளவிற்கு தான் அவன் நின்று கொண்டு இருக்கிறானே.. அவளால் பெருமாளே!!! என்று அந்த பாற்கடலில் பள்ளி கொண்டவனை துணைக்கு அழைக்க தான் முடிந்தது.
இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் நெருக்கத்தில் நின்றவன்.. "இதுவரைக்கும் எந்த பொண்ணுங்களும் 'என்னை தொடாதே நீனு' என்கிட்ட வந்து சொன்னதே கிடையாது. முதல் முறை நீ சொல்லி நான் கேட்கிறேன்" என்று அவன் தற்பெருமையாக கூற..
என்னது பெண்களா வந்து இவரிடம் கேட்பார்களா என்று நினைக்கவே அவளுக்கு கூசியது உடலை.. 'இவன் என்ன நினைத்துக் கொண்டு இருக்கான் என்னையும் அதுபோல பெண் என்றா? வெகு இயல்பாக எவ்வாறு மற்ற பெண்களை பற்றி கூறுகிறான்' என்று அருவுறுப்பாக இருந்ததுஅவளுக்கு உள்ளுக்குள், அதையும் மீறி சற்றே கோபம் ஏறிட்டு பார்க்க..
"எந்தப் பெண்ணையும் இதுவரை நானாக முத்தமிட்டது இல்லை. ஆனால் இந்த மாமியோட லிப்ஸ்தான் என்னை கிஸ் பண்ண சொல்லி கூப்பிட்டு கிட்டே இருக்கு" என்றவன் தன் ஆள்காட்டி விரலால் அவளது இதழ்களை மெல்ல வருடினான்.
எங்கே தான் கையை அசைத்தால் கூட அவனது தேகத்தோடு ஒட்டி விடுவோமோ என்று பயந்தவள், அமைதியாக அதே நேரம் முறைப்புடனே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன மாமி பண்ணட்டுமா?" என்று ஒற்றை கண்ணடித்து அவன் கேட்க..
கண்கள் மருள இருபக்கமும் தலையை மெதுவாக ஆட்டி வேண்டாம் என்று அவள் கூறினாள்.
"ஆனா நேக்கு வேணுமே மாமி" என்று அவன் அவளைப் போல குறும்புடன் கேட்க..
"இங்கே பாருங்கோ.. நான் இங்கே அந்த நிகழ்ச்சில பாட மட்டும்தான் வந்தேன் உங்க கூட குடும்பம் நடத்த இல்லை. இஷ்டம் இல்லாத பொண்ணா இந்த மாதிரி எல்லாம் கட்டாயப்படுத்தாதீங்கோ" என்று அவள் கண்களை உருட்டி உருட்டி பேச..
ஒவ்வொரு வினாடியும் அவள் கண்கள் காட்டும் ஜாலமும்.. ஓராயிரம் உணர்வுகளை காட்டும் அவள் முகத்தையும் பார்த்தவனுக்கு இன்னும் சுவாரசியம் பிறந்தது. அவற்றை அணுஅணுவாய் ரசித்தான்.
"குடும்பமா? இதுவரை நம்ம லிஸ்டிலேயே அது இல்லையே.. ஆகா நடத்திடவோமா?" என்று அவன் கூற..
"என்னை என்ன உங்களை சுற்றும் மற்ற பெண்கள் போல நினைச்சேளா? முன்பின் தெரியாத பெண்ணிடம் பேசுவது போல இல்ல உங்க பேச்சு எல்லாம்" என்று அவளுக்கு ஆத்திரம் மிகுத்து வர கிட்டத்தட்ட சண்டையிட்டாள்.
அவளின் இந்த பேச்சில் அதுவரை சுவற்றில் வைத்திருந்த ஒரு கையை எடுத்து தன் காதை குடைந்து கொண்டவன், "ஸ்ஸ்ஸ் எதுக்கு இப்படி கத்துற.. இஷ்டம் இல்லையா?
முன்னே என்ன சொன்ன பிடிக்கல.. இப்போ இஷ்டம் இல்லை அதெல்லாம் சரி இல்லையே" என்று தன் தாடையை தடவியவாறு யோசித்தவன் அடுத்த கணம் இன்னும் வேகமாக அவள் புறம் திரும்பி மீண்டும் சிறை செய்தவன், "வாட்ச் மை வேர்ட் மாமி.. இந்த ஊரை விட்டு நீ போறதுக்கு முன்னாடி.. நீயே உன் வாயால என்மேல இஷ்டம்.. நான் மட்டும்தான் உன் இஷ்டம்.. என்னை புடிச்சிருக்கு.. என்னை மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு புடிச்சிருக்குன்னு இந்த ரோஸி லிப்ஸால சொல்லுவ" என்று அவள் கீழ் உதட்டை பிடித்து அவன் கூறினான் சற்று அதிகாரமாகவே..
"அப்படி எல்லாம் கனவு காணாதீங்கோ.. ஒரு காலும் அதெல்லாம் நடக்காது. இந்த உலகத்தில இருக்கிற கடைசி ஆண் நீங்க தான் என்ற நிலை வந்தால் கூட உங்கள புடிச்சிருக்கு நான் சொல்ல மாட்டேன்" என்றவள் தனது உதடுகளை அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ள முயல..
"சொல்ல மாமி கண்டிப்பா சொல்லுவ.. இந்த வாயால, முழுமனதாக என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லுவ.. சொல்ல வைப்பேன்.. அப்புறம் என்ன சொன்ன கனவு" என்று சொல்லி கடகடவென்று சிரித்தான்.
அவனது அந்த சிரிப்பு வர்த்தினிக்கு உள்ளுக்குள் கிலியை ஏற்படுத்தியது. என்ன மாதிரியான சிரிப்பு இது?
"அந்தக் கனவை என்னவோ நீதான் காண போற மாமி.. இனி உன் கனவை நனவாக்குவது மட்டும் தான் என்னுடைய வேலை. நீ உன் இஷ்டத்துக்கு எந்தக் கனவு கண்டாலும் அந்த கனவின் நாயகன் நானே!! அந்தக் கனவை நனவாக்கும் நாயகனும் நானே!!" என்று கூறியவன்.. பிடித்திருந்த அவளது கீழ் அதரத்தை தன் அதரத்தத்திற்குள் வைத்து, பிடித்ததால் சிவந்திருந்த அவ் அதரத்தை மென்மையாக தனது நாவினால் வருடியவன்.. அழுத்தமாக ஒரு முத்தத்தை அவளது மேல் உதட்டில் வைத்து விட்டு "போகலாம் வா" என்று அழைத்து சென்றான்.
அவன் அவளை இங்கு அழைத்து வரும்போது இருந்த மனநிலையை சுத்தமாக மாறி இருந்தது தற்போது அவனுக்கு. தனக்கு ஒவ்வாமை ஏற்படுத்தாத அவளது உதட்டையும் அவளைப் பற்றியும் அறியவே அவன் இங்கு அழைத்து வந்தான். ஆனால் அவள் எதோ பேச.. இவனும் பதிலுக்கு பேச இப்பொழுது அவளிடம் சவால்விட்டு வந்துவிட்டான்.
அவளும் அமைதியாக அவன் உடனே வர.. அழைத்து சென்றவன் மீண்டும் அதே இடத்தில் நிறுத்த.. அவன் ஏற்பாடு செய்திருந்த மற்றுமொரு வாடகை வண்டியில் மீது பயணத்தைத் தொடர்ந்தாள் வர்த்தினி. தன் அறைக்குச் சென்றவள் மாதுரியிடம் சரியாக பேச முயலவில்லை. மனதில் அவன் சொன்ன அந்த விஷயமே ஓடிக்கொண்டிருக்க அமைதியாக இருந்தாள்.
"என்ன வர்த்தினி.. நிதர்சனம் எல்லாம் நல்ல ஆச்சா?" என்று மாதுரி திரும்பவும் கேட்க..
"ஆங்.. என்ன கேட்டீங்க கா?" அவள் திரும்பவும் கேட்க..
"என்ன ஆச்சு ஏதும் ப்ராப்ளமா?" என்று அக்கறையாக வினவிய மாதுரியிடம் கூட தன் விஷயத்தை சொல்ல முடியாமல் தவித்தாள். "ஒன்னுமில்லை அக்கா.. ஜஸ்ட் ட்ராவல் பண்ணது ஒரு மாதிரியா இருக்கு" என்று அவள் கூற..
"சரி சரி அப்பா ரெஸ்ட் எடுத்துக்கோ" என்று விட்டு மாதுரி அவளை தொந்தரவு செய்யவில்லை.
அதன்பின் இரண்டு நாட்கள் மற்ற இருவரோடு சேர்ந்து இவர்கள் நால்வரும் லண்டனில் உள்ள முக்கியமான தளங்கள் மால்கள் என்று ஒரு சுற்றிப்பார்க்க, அவர்கள் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது.
மாதுரியை இவள் அணைத்துக் கொள்ள..
"வர்த்தினி உனக்கு இப்போ கிடைத்து இருக்கிறது ரொம்ப பெரிய, யாருக்கும் அவ்வளவு எளிதில்.. சீக்கிரத்துல கிடைக்காத ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு. இதையே நல்லபடியா பயன்படுத்தி வாழ்க்கையில் நீ இன்னும் நல்லா பிரபலமான வரனும். இது என்னோட ஆசை மட்டும் கிடையாது, உன் மீது அக்கறையும் பாசமும் உள்ளவர்கள் எல்லோரோடதும்" என்று கூறி அவள் நெற்றியில் முத்தம் வைத்தவர், மற்ற இருவருடன் சேர்ந்து இந்தியாவை நோக்கி பயணித்தார்.
வெங்கடேசன் தன் மனைவியுடன் ஹோட்டலுக்கே வந்து, வர்த்தினியை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் வீட்டில் அவளுக்கென்று ஒரு அறையை ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்க, அதில் அவளை தங்கி கொள்ள செய்தனர்.
"வர்த்தினி மூணு மாசம் இது தான் உன்னோட ரூம்.. எந்த தயக்கமும் இல்லாமல் எது வேணும்னாலும் எங்ககிட்ட நீ கேட்கலாம் சரியா?" என்று பத்மா கேட்க..
"சரி மாமி" என்று அவளும் மென்மையாக தலையாட்டினாள்.
"சரிடி குழந்தை.. நீ ஷத்த ஓய்வெடுத்துகோ" என்ற விட்டு தம்பதியர் இருவரும் சென்று விட.. கதவைத் தாளிட்டு மெத்தையில் அமர்ந்தவளுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
யாரும் இல்லாத தனி ஒரு தீவில் தான் மட்டும் இருப்பதாக அவளுக்குத் தோன்ற கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.
தனது அன்னைக்கு போன் செய்து சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அச்சமயத்தில் கல்லூரியிலிருந்து ஹரிப்பிரியா வந்துவிட அவளிடம் பேசிக் கொண்டிருந்தாள் வர்த்தினி. வரும் பொழுது தனக்கு வேண்டியதை லிஸ்ட் சொல்ல.. மென் சிரிப்புடன் கேட்டவள் அனைத்தையும் வாங்கி தருவதாக உறுதியளித்தாள்.
பெரும்பாலும் வெங்கடேசன் வீட்டில் அதிகமாக இவள் வெளியே வருவதில்லை. அவர்கள் இருவருடைய குணத்தையும் இவளால் சரியாக கணிக்க முடியவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் பத்மா மாமி நன்றாக பேசுவது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு பொடி வைத்து அவர் பேசுவது போலவே அவளுக்கு தோன்றும்.
எதற்காக வீணாக பேசி வம்பு சண்டையை இழுத்துக் கொள்வானேன், இருக்கும்வரை அமைதியாக இருந்துவிட்டு சென்றுவிடலாம் என்றவாறு அறைக்குள்ளேயே அடைந்திருப்பாள்.
வியாழக்கிழமை இவ்வாறு ஓடிவிட அழகாக விடிந்தது வெள்ளிக்கிழமை..
அன்று அவளை அழைத்துக் கொண்டு தன் அலுவலகத்திற்கு வர சொல்லியிருந்தான் வினய் விஸ்வேஸ்வரன். அதனால் முதலில் வெங்கடேசன் அவளை அழைத்துச் செல்வதாக இருந்தார். ஆனால் அவருக்கு அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காத நிலையில் வேறு வழியின்றி பிரதீபனை அழைத்துச் செல்ல சொல்ல.. கரும்பு தின்ன கூலியா வேண்டும் அவனுக்கு!!
அவள் வந்ததும் முதலில் அவளிடம் பேசி பழக எத்தனை முறை எத்தனிக்க.. அன்னையின் தீப் பார்வையில் தங்கிவிட்டான் அறைக்குள்ளேயே.. பின்பு எப்படி இருந்தாலும் மூன்று மாதம் இங்கேதான் இருக்கப் போகிறா.. மெதுவாக பேசிப் பழகிக் கொள்ளலாம் என்று எண்ணத்தோடு, அன்னையின் பேச்சுக்கு கட்டுப்படுவது போலவே வெளிக் காட்டிக் கொண்டிருந்தான்.
"டேய் அசமந்து.. நீயே அவ கிட்ட எதையாவது பேசி உளறி வைக்காதே.. சரியா? கேட்டியா? அவ முதல்ல இந்த ஆல்பம் ரிலீஸ் பண்ணி நன்னா சம்பாதிக்கட்டும். அதற்கு பின்ன நானே அவளை நோக்கு பொண்ணு கேட்டு கட்டி வைக்கிறேன்" என்று கூறினார் பத்மா. எங்கே பிள்ளை தன்னைவிட்டு அவளிடம் மயங்கி விடுவானோ என்ற பயத்தில்..
அன்னை கூறியதில் அவனுக்கும் ஏக சந்தோஷம்..
ஏற்கனவே ஒருத்தன் இவளுக்கு கட்டம் கட்டி விட்டதை அறியாமல் இவர்கள் இருவரும் இங்கே திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.
மறுநாள் வெள்ளிக்கிழமையன்று தயாராகி வந்தவள் பத்மாவிடம் சென்று.. "மாமி கிளம்பிவிட்டேன். சாமி சேவிச்சிட்டு, மாமா கூட போயிட்டு வந்துடுறேன்" என்று சொல்ல..
"நல்லபடியா போய்ட்டு வாமா" என்று அவளுக்கு ஆசை கூறியவர், "ஆனால் மாமாவுக்கு லீவ் போட முடியல.. அதனால நீ நம்ம பிரதீபனோட போயிட்டு வா" என்று கூறினார்.
பிரதீபன் கூட வா? என்று மனதில் குறுகுறுக்க தொடங்கினாலும், வேறு வழியில்லாமல் அவன் உடனே வினய் கூறிய அந்த முகவரிக்கு சென்று இறங்கினாள் அவள்.
"ஈஸ்வர் குரூப்ஸ்" என்று தங்க நிற நிக்கான் எழுத்தில் மின்னிய அந்த எட்டு மாடி கட்டிடத்தை அன்னார்ந்து பார்த்தவாறு பிரமிப்புடன் இவர்கள் நின்றிருக்க..
அங்கே வேலை செய்யும் பாதுகாப்பு ஊழியர்கள் இருவர் அருகே வந்து "நீங்கள் யார்? எதற்காக இங்கே நின்று அந்த கட்டிடத்தை இவ்வாறு பார்க்கிறீர்கள்?" என்று ஆங்கிலத்தில் வினவ..
அதில் சற்று பயந்துதான் போனான் பிரதீபன். ஒருவாறு தட்டுத் தடுமாறி திக்கித் திணறி தாங்கள் விஸ்வேஸ்வரனை பார்க்க வந்திருப்பதாக கூறி தன் கையிலிருக்கும் விசிட்டிங் கார்டை எடுத்துக் காட்ட..
அவனை மேலும் கீழும் பார்த்தவர்கள் விசிட்டிங் கார்டில் நம்பகத்தன்மையை சோதித்து அதன்பிறகு உள்ளே விட்டனர்.
வர்த்தனிக்கு மிக ஆச்சரியம், "விசிட்டிங் கார்டை கூடவா ஒருத்தர் சோதிப்பா?" என்று தன் அருகில் இருக்கும் பிரதீபனை அவள் கேட்க..
"அது வந்து வர்த்தினி இங்கே இதெல்லாம் சகஜம்.. அதுவும் விவிஐபிஸ்னா இன்னும் செக்யூரிட்டி ஜாஸ்தியாக இருக்கும். போலியான விசிட்டிங் கார்டை காட்டி உள்ளே நுழைந்து டேட்டாஸ் அவங்களுக்கு தேவையானவற்றை திருடிடுவா. நிறைய பேர் அந்த மாதிரி செய்றா.. அதனால் இந்த மாதிரி கட்டுப்பாடெல்லாம் இப்போ உள்ள ஆபிஸ்ல நிறைய பேர் வச்சிருக்கா" என்று தனக்கு தெரிந்த வரையில் அவற்றையெல்லாம் பற்றி அவளுக்கு விளக்கி கூறி, தன்னை பற்றிய நல்ல அபிப்ராயம் அவருக்கு வர வேண்டுமென்று நினைத்தான்.
அவளுக்கும் இவையெல்லாம் புதிது. அதுவும் வினய்யின் இந்த உயரம் அவளுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது, கூடவே பயத்தையும்.. அதே சமயம் ஆவலுடன் பிரதீபன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு விழி விரித்தவாறு அவனை பார்க்க..
அவளின் விரிந்த விழிகளை தனது சிஸ்டமின் வழியே பார்த்தான் வினய் விஸ்வேஸ்வரன். அதை பெரிதுபடுத்தி அந்த விழிகளை உற்று நோக்கினான்.
இவர்கள் வந்தது முதல் தற்போது அவர்கள் பேசிக்கொண்டது அனைத்தும் சிசிடிவி மூலமாக தன் அறையிலிருந்து அமர்த்தலாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு நாற்காலியில் நன்றாக பின்புறம் சாய்ந்து அமர்ந்தவாறு பார்த்துக்கொண்டிருந்தான் வினய்.
அதற்கு பின் தன் காரியதரிசியான வில்லியம்சை அவர்களிடம் அனுப்பி வைத்து, தேவையான டாக்குமெண்ட் அனைத்திலும் வர்த்தினியின் கையொப்பத்தை வாங்க பணித்தான். இதில் எதிலும் அவன் நேரடியாக தலையிடவில்லை ஆட்கள் மூலமாகவே தான் செய்ய வேண்டிய வேலை அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்.
மூளை அவனாக.. செயல் அவர்களாக..
அன்றைய பகல் நேரம் முழுவதும் டாக்குமெண்ட்டில் கையெழுத்து இடுவதும், அதை சரி பார்ப்பதுமாக சென்று விடவே மதிய உணவை அவர்களுக்கு வரவழைத்துக் கொடுத்தான் வினய். அவளுக்கு அந்த உணவு எதுவும் பிடிக்கவே இல்லை ஏதோ பேருக்கு கொறித்தவாறு அவள் அமர்ந்திருக்க.. காலையிலும் இங்கே வரும் அவசரத்திலும் பதற்றத்திலும் அவள் சரியாக உண்ணாமல் வந்து இருக்க.. இப்போதும் இந்த உணவு பிடிக்காமல் அவள் அதை ஒதுக்கி விட.. சோர்வு அப்பட்டமாக தெரிந்தது அவளது கண்களில்..
வந்தது முதல் அவளைத் தான் அவன் அவதானித்துக் கொண்டு இருக்கிறானே.. சின்ன அசைவையும் விழி மூடலையும் கண்டுபிடிப்பவன் அவளது சோர்வை கண்டுபிடிக்காமல் இருப்பானா என்ன!!
வில்லியம்சை அழைத்து.. பிரதீபனை அங்கிருந்து அப்புறப்படுத்த சொன்னான் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு..
முதலில் புரியாமல் பார்த்த வில்லியம்ஸ் பின்பு தன் முதலாளிக்கு அந்தப் பெண்ணின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது அவளுடன் தனியாக நேரம் செலவிட எண்ணுகிறார் மற்ற பெண்களை போல என்று நினைத்தவன் ஒரு நமுட்டு சிரிப்புடன் "சரி பாஸ்" என்றுவிட்டு பிரதீபனை அங்கிருந்தும் வெளியேற்றும் முயற்சியில் இறங்கினான்.
பிரதீபனிடம் வந்தவன் "நீங்கள் இந்த பேப்பரில் எல்லாம் லீகல் அட்வைசர் யாரிடமாவது உங்க தரப்பில் இருந்து சைன்வாங்கி விட்டு வர வேண்டும்" என்று கூற.
சாதாரண இன்ஷூரன்ஸ் வேலையில் இருக்கும் அவனுக்கு சட்ட வல்லுனர்கள் இடமெல்லாம் தொடர்பு ஏது? அதிலும் இவர்கள் தரப்பிலிருந்து லீகல் ஒப்பீனியன் வாங்கிவிட்டு வரச்சொல்ல.. அவனுக்கு குழம்பிய நிலை என்ன செய்வது.. ஏது செய்வது என்று புரியாமல், வேறு வழியின்றி தன் தந்தைக்கு அழைத்து விஷயத்தைக் கூற, அவரோ அவருக்கு தெரிந்த மற்றும் நண்பர்களிடம் கேட்டு அவர்கள் நண்பர்களில் ஒருவர் மூலம் அதற்கு ஏற்பாடு செய்தார்.
உடனே வர்த்தனியை அழைத்து கொண்டு அவன் செல்ல முயல.. வில்லியம்ஸ் அதை தடுத்து "அவர்களுக்கு இங்கே இன்னும் சைன் செய்ய வேண்டிய நிறைய வேலை இருக்கிறது. நீங்கள் மட்டும் சென்று வாங்கி வாங்க" என்று கூறி அவனை மட்டும் தனியே அனுப்பி வைத்தான்.
பணம் பத்தும் செய்யும்!! ஆனால் அதையும் தாண்டி வினய்யின் ஆளுமை பிரதீபன் அவ்விடம் விட்டு நகர வைக்க முடியாதா என்ன!
அவனை அனுப்பி வைத்து விட்டு அவளை தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான் வில்லியம்ஸ். ஏற்கனவே சோர்ந்து இருந்தவள் தனியறைக்கு செல்லவும் மிரண்டு அவனை பார்க்க..
"ஜஸ்ட் ஃபார் லான்ச் மேம்" என்று அவன் கூற திரும்பி பார்த்தவளின் கண்களில் ஒரு கேரியர் தெரிந்தது.
"ஹேவ் இட்" என்றவாறு வில்லியம்ஸ் நகர்ந்துவிட..
மெல்ல அந்த கேரியரை திறந்தவளுக்கு தென்னிந்திய உணவு அதுவும் சரவணபவன் உணவு அவளை சாப்பிட அழைக்க.. அவசர அவசரமாக கேரியரை திறந்து அதில் உள்ள உணவினை தட்டில் பரிமாறி நிம்மதியாக உண்டு முடித்தாள் வர்த்தினி.
அவள் சாப்பிட்டு முடித்தவுடன் தான் அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
அதையும் தன் சிசிடிவி உதவியுடன் பார்த்துக்கொண்டே மென் சிரிப்புடன் அமர்ந்திருந்தான்.
சாப்பிட்டு முடித்தவள் அனைத்தையும் மூடி வைத்துவிட்டு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தவள் என் கண்கள் தானாக அந்த ஏசி குளுமைக்கு சொக்கியது.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு..
வர்த்தினிக்கு இருக்காதா..
வழக்கம் போல அவளுக்கு கனவு வர ஆனால் இன்றைய கனவில் அவள் அதிர்ந்தாள் தான் போனாள். ஏனென்றால் ஒவ்வொரு முறை கனவிலும் அவனாக வந்து இவளுக்கு முத்தம் கொடுக்க இம்முறை முத்தம் கொடுத்தது இவளல்லவா!!
ஆணுக்கு இலக்கணமாம் மீசை..
என்றும் அதன் மீது தணியாத ஆசை..
என் முதல் முத்தம் அதற்கே!!
என்று கவி பாடியவள் அடுத்த நிமிடம்.. அவன் இதழ்களில் கவி பாடிக் கொண்டிருந்தாள் காதலுடன்..
ரைட் ரா....ஒரு முடிவோட தான் இருக்கீங்க🤣🤣🤣🤣🤣🤣
வினய் நீ நடத்து பா