கோகிலமே 7

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 

 7

"என்னது டேட்டிங் ஆ?" என்று அதிர்ந்து அவனை பார்த்தவளின் அழகிய கண்களின் கருவிழிகள் இரண்டும் வெளியே விழும் அளவுக்கு விரிந்தது.

 

அவனோ அவள் அளவுக்கு அதிர்ந்து எல்லாம் போக வில்லை. வாக்கிங் ஜாக்கிங் மாதிரி அவனுக்கு டேட்டிங்.. ஜஸ் பார்ட் ஆஃப் தி லைஃப்.. அவன் வாழும் அந்த மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு குறிப்பிட்ட வயது வந்த ஆண் மகன் தான் விரும்பும் பெண்ணுடன் டேட்டிங் செல்வதெல்லாம் மிக இயல்பாக நடக்கும் ஒரு வாழ்வியல் நிகழ்ச்சி. அதற்கு அவளின் இந்த அதிர்ச்சி அவனுக்கே அதிர்ச்சி அளித்தது.

 

 

"எஸ் ஜஸ்ட் டேட்டிங்" என்று ஒற்றைக் கண்ணை சிமிட்டி கூறியவன், பின்பு காரில் சூழலுக்கு ஏற்ப மேற்கத்திய இசையை தவழவிட்டு அதை ரசித்துக்கொண்டே இவன் வண்டி ஓட்ட...

 

இன்னும் சற்று வளர்ந்த சென்னை போன்ற மாநகரங்களிலே டேட்டிங் என்ற வார்த்தையை கேட்டாலே நம் மக்கள் அலறுவார்கள். என்னதான் நாமும் மேற்கத்திய பாணியை கடைப்பிடித்தாலும் இன்னும் நம்முள் உறங்கும் அந்த தமிழன பாரம்பரியம் அவ்வப்போது விழித்தெழுந்து நம்மையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

ஆனால் திருவையாறு போன்ற ஆன்மீகமும் இசையும் பாரம்பரியமும் கூடவே சிவாச்சாரியாரின் வீட்டில் பிறந்து வளர்ந்த வர்த்தினிக்கு இந்த வார்த்தை ஏதோ ரேப்பிங் போலவே கேட்டது.

"டேட்டிங் ஆ யார் கூட?" என்றவள் அதிர..

"யார் இருக்கா என்கூட" என்றான் கூலாக..

"நானும்.. நீங்களும்..." என்று வார்த்தைகள் அவளுக்கு தந்தி அடிக்க..

"ஸோ.. நைஸ்" என்றான் குறும்புடன்..

"என்னாண்ட வா?!" என்றவளின் குரல் வெளி வர மறுக்க..

"ஸோ.. ஸ்வீட்..." என்று பாராட்டு பத்திரம் வேறு..

 

அவள் அதிர்ச்சியில் எகிறி குதிக்க காத்திருக்கும் தன் இதயத்தை இடது கையால் அழுத்தமாக பிடித்துக் கொண்டு, "டேட்டிங் எல்லாம் நா வர மாட்டேன். என்னை இறக்கி விடுங்கோ இங்கையே. நான் திரும்ப என்னோட ரூமுக்கு போறேன். நேக்கு பயமாயிருக்கு" என்று அவள் உடைந்த குரலில் எப்ப வேணாலும் நான் அழுதுவிடுவேன் என்ற தொணியில் கூற..

 

"பேப்.. ஜஸ்ட் டேட்டிங்.. என்னவோ ரேப்பிங் மாதிரியே நீ பிகேவ் பண்ற.. இஸ்ட் நாட் ஃபேர்" என்று குறும்பு மின்ன அவன் கூற..

 

"நேக்கு இரண்டுமே ஒன்னா தான் படறது.. என்னாண்ட கேட்டா இரண்டுமே ஒன்னுன்னு சொல்லுவேன்" என்று வார்த்தைகள் வெளி வர கஷ்டப்பட்டது வர்த்தினிக்கு..

 

"அப்படியா? எப்படி?" என்று காரை திருப்பிக் கொண்டே அவன் கேட்க.. 

 

"அது.. அது.. வந்து" என்று எவ்வாறு பட்டவர்த்தனமாக இவனுக்கு விளக்குவது என்று புரியாமல் அவள் தயங்கி முகம் சிவந்து கீழே குனிந்து கொண்டாள்.

 

அந்த விடாக்கண்டனும் அவளை விடாமல் பக்கவாட்டில் திரும்பி சிவந்திருந்த அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.. "யூ ஆர் ப்ளஸ்ஷிங் பேப்.. ஸோ.. கார்ஜியஸ்" என்று ஏதோ காணாததை கண்டது போலவே ஆச்சரியமாக கூறினான்.

 

 

'ஆண்டவா.. பெருமாளே!! உன்னை சேவிக்க போற நேரத்துல எனக்கு இதெல்லாம் தேவையா? என்னை இவரிடமிருந்து காப்பாத்து" என்று புலம்பிக்கொண்டே..

அவள் அந்த பெருமாளிடம் கோரிக்கை வைக்க..

 

வினய்யும் திரும்பி நன்றாக அமர்ந்து அவளை பார்த்து.. "எக்ஸ்பிளைன் பேப்.. ரெண்டும் ஒன்னு தான் சொன்னல்ல" சொல்லியே ஆகணும் என்று வண்டியை ஓரமாக நிறுத்தி நன்றாக திரும்பி அவளை பார்த்தவாறு அமர்ந்தான்.

 

 

ஒரு கை ஸ்டியரிங்கில் தாளம் போட மறு கையோ அவளுக்கு பின்புறம் சீட்டில் வைத்தவாறு அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் இந்த கோபியர் கண்ணன். அவனின் அருகாமை.. கூடவே தன்னையே உள்வாங்கி கொள்பவன் போல பார்க்கும் அவனின் பார்வை.. மீசைக்கு அடியில் துடிக்கும் உதட்டின் சிரிப்பு.. என்று அவளை இம்சை செய்தான் வினய்.

 

 

நீ சொல்லாமல் நான் காரை எடுக்கப் போவதுமில்லை.. பார்வையைத் திருப்ப போவதும் இல்லை.. என்று சொல்லாமல் சொன்ன அவனது உடல் மொழியை கண்டு வேறுவழியின்றி தன் செவ்விதழ்களை திறந்தாள் பாவை அவள்.

 

"ரேப்பிங் னா.. அந்த பொண்ணு விருப்பம் இல்லாமல் செய்கிறது..

டேட்டிங் னா.. அந்த பொண்ணு விருப்பத்தோடு செய்றது..

அதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்" என்று தன் புடவை நுனியை ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொள்வதும் பின் அவிழ்பதுமாக அவள் கூற..

 

அதை கேட்டவுடன் முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை வந்து சென்றது. வழக்கம் போல தனது உதடு மடித்து கடித்து அச்சிரிப்பை தன் மீசைக்குள் மறைத்தான் மாயவன்.

 

"செய்யுறதுன்னா.. என்ன பேப்?" என்று அடக்கமாட்டா சிரிப்புடன் கேட்டவனை பார்த்து, அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தாள்.

 

"அது.. அது.. வந்து.. வந்து..." அவனைப் பார்க்க முடியாமல் சாலையையும் அவன் காரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

"பரவால்ல பேப்.. உனக்கு ஒண்ணும் தெரியாது. நான்தான் டேட்டிங் பத்தி எல்லாம் உனக்கு விளக்கனும் என்று நினைத்தேன். நீ இவ்வளவு தூரம் தெரிஞ்சு வெச்சிருக்கியே.. 

நவ் இட்ஸ் சோ ஈஸி பார் மீ டூ ஹேண்டில் யூ!"

என்றவன் நேராக தன் இருக்கைக்கு திரும்பி வண்டியை எடுத்தான்.

 

"அச்சோ பெருமாளே ப்ளீஸ் என்னை விட்டுடுங்கோ... நான் அந்த மாதிரி பொண்ணு எல்லாம் இல்லை" என்று அவள் அழுக ஆரம்பிக்க..

 

"நீதான சொன்ன டேட்டிங்கு விளக்கம்" என்று அவளைக் கூர்ந்தவன் பின்பு "நீ நினைக்கிறது போல எல்லாம் டேட்டிங் இல்ல.. என்னன்னு நீயே தெரிஞ்சுக்குவ பேப்" என்றவன் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

 

"அப்பாடா நாம் நினைத்தது போல தவறாக எதுவும் கிடையாது டேட்டிங்கில்" என்று மட்டும் அவள் மனம் தெளிவுற்றது.

 

ஆனால் அவன் சொன்ன அந்த வரைமுறை எல்லாம்.. வர்த்தினி என்ற நிலையில் செல்லுபடியாகுமா என்ன!!

 

அவளோ இப்போ எங்கே இவன் நம்மை அழைத்துக் கொண்டு போகிறான் என்று புரியாமல் "நேக்கு கோவிலுக்கு போகணும்? பெருமாளை சேவிக்க வேணும்" என்று சிறு குழந்தை போல சொல்ல.. திரும்பி அவளைப் பார்த்தவனின் கண்கள் பேசும் பாஷையின் அர்த்தத்தை அவளால் படிக்க இயலவில்லை. மெதுவாக "போகலாம். அடுத்து நாம போற இடத்துக்கு போக இன்னும் டூ ஹவர் ஆகும். அங்க போனதும் நீயே தெரிஞ்சுக்குவ என்ன இடம்னு" என்று அவன் சொல்ல..

 

இதற்கு என்ன பதில் சொல்ல என்று நினைத்தவள் பின் அமைதியாக ஜன்னலோரம் நகர்ந்து ஜன்னல் கதவிலே தலைசாய்த்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள் தன்னை அறியாமலே உறங்கி விட்டாள்.

நேற்று இவன் செய்த செயலின் வீரியத்தில் இரவு ரொம்ப நேரம் தூங்காமல் விழித்திருந்தால் கண்கள் தூக்கத்திற்கு கெஞ்சியது.. சொகுசான கார் பயணம் கூடவே இதமான காற்று எல்லாம் சேர்த்து அவளை தூக்கத்திற்கு தள்ள மெல்ல கண்ணயர்ந்து விட்டாள் வர்த்தினி.

 

அவனின் கண்கள் அவ்வப்போது தன்னை இழுக்கும் சற்று பெருத்த செப்பு இதழ்களையும் அதன் மகுடமாக மின்னும் அக்கரு மச்சத்தையும் சுவைக்கத் தூண்ட...

தன் ஆள்காட்டி விரலால் மென்மையாக அவளது இதழை வருடினான் அவன்.

அவள் இதழ்களின் மென்மையை அவன் விரல்கள் அறிய.. அம் மென்மையை இதழ்கள் கொண்டு உணர்ந்திட ஆசைகொண்ட மனதை அடக்கியவன் திரும்பி காரை எடுத்தான் முன்பை விட வேகமாக...

 

 

அவன் காரை வேகமாக ஓட்ட சீட் பெல்ட் போடாத அவளது தேகமும் அவ்வேகத்தில் தள்ளாட..தூங்கும் அவளை சிறிது நேரம் பார்த்தவன் பிறகு வண்டியை ஓரமாக நிறுத்தி, இருக்கையை அவளுக்கு தோதாக பின் பக்கம் சாய்வாக வைத்து அவளை படுக்க வைத்தான். அவனை அறியாமலேயே அவளின் சுகத்தை செய்து கொண்டிருந்தான்.

 

அவளை சரியாக அமர்த்தி சீட் பெல்ட் போட்டு விட்டவனின் கண்கள் மீண்டும் அவள் இதழ்களை சுற்றிவர.. மெல்ல அவள் இதழ்களை சுவைக்க நெருங்கினான். சட்டென்று தூக்கத்தில் முகத்தை அவள் திருப்பிக் கொண்டாள். பச்சை நரம்புகள் ஓடிய அவ்வழகிய கழுத்தில் அவனது உதட்டை அழுத்தமாக பதித்தான். அவளிடமிருந்து விலகி சாலையில் கவனத்தை வைத்து காரை ஓட்டியவனின் கைகள் என்னவோ ஸ்டேரிங்கில் இருக்க.. கண்கள் அவளைத் தான் தொட்டு தொட்டு மீண்டு வந்தது.

 

ஓட்டும்போது தூங்கும் அவளை பார்த்து "யு மேக் மீ க்ரேசி பேப்.. எஸ்பெஷலி யுவர் லிப்ஸ்" என்று தன் தலையை கோதிக் கொண்டவனின் ஞாபகம் நேற்று இரவுக்கு சென்றது.

 

நேற்று இரவு வெங்கடேசன் பத்மாவும் அவளை அழைத்துக் கொண்டு அவர்களிடம் பேச வர.. தன் தாய் தந்தை இருப்பதினால் அவளை கண்டுகொள்ளாத பாவனை உடன் நின்று கொண்டிருந்தான். இல்லை என்றால் அவளின் கோபத்தையும் வேண்டா வெறுப்பாக நின்று கொண்டிருந்த அவளது தோரணையும் கண்டு மேலும் வம்பு இழுத்து இருப்பான். ஏதோ ஒரு சுவாரசியம் அவளை இவ்வாறு சீண்டுவதில் அவனுக்கு.. அதன்பின் தலை ஆட்டலுடன், தன் இருப்பிடத்திற்கு சென்றவனின் மனமோ இவளை எப்படி தன் அருகிலேயே வைத்துக் கொள்வது என்று திட்டம் தீட்ட துவங்கியது.

 

அதன் முதல் அடியாக மறுநாள் அவள் தன் குழுவுடன் வெளியே செல்ல இருப்பதை தெரிந்து கொண்டான்.. முதலில் நால்வரும் குழுவாக செல்வதாக தான் இருந்தது. அதில் இரண்டு ஆண்களை அவன் தன் சாதுர்யத்தால் வேறு இடத்திற்கு, அவன் செலவிலேயே சுற்றிப்பார்க்க ஸ்பான்ஸர் செய்ய அவர்களும் வந்தவரை லாபம் என்று சென்று விட்டனர்.

 

 

ஆனால் மாதுரியை தான் அவனால் வர்த்தினி இடமிருந்து பிரிக்க முடியவில்லை. சரி அவர்கள் செல்லும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தவனுக்கு சந்தர்ப்ப சூழ்நிலையும் சாதகமாகி விட, தனியாக கிளம்பிய வர்த்தினி பற்றி அறிந்தவன் பின்னோடு வந்துவிட்டான்.

அதுவும் அந்த வண்டியும் இவர்களுக்காக அவன் ஸ்பான்சர் செய்தது தான். அதனால் வண்டியை நிறுத்தச் சொன்ன இடத்தில் நிறுத்திவிட்டு டிரைவரும் தான் வாங்கிய பணத்திற்கு நம்பிக்கையாக நடந்து விட்டு சென்று விட்டான்.

 

எவ்வாறு தான் இப்படி மாறினோம் என்று அவனுக்கு பெரும் ஆச்சரியம்தான். பார்த்த முதல் நாளில் இவளிடம் கோபம் கொண்டு.. மறுநாளே அவளுக்கு முத்தம் கொடுத்து.. இப்போது டேட்டிங்க்காக இவளை அழைத்துச் செல்லும் தன்னையே அவன் வியந்து கொண்டான். ஆனால் இதில் துளி கூட அவள் மீது காதலோ ஈர்ப்போ எதுவும் இல்லை அவனுக்கு. அப்படியென்றால் எதற்காக இந்த டேட்டிங்? அதை அறிந்து கொள்ளத்தான்!! எதற்காக அவள் மீது மீண்டும் மீண்டும் ஒரு ஈர்ப்பு புள்ளியாக.. அவளை நோக்கி இழுப்படும் தன்னை குறித்தே.. 

 

அன்று அவள் பேசிய பேச்சுக்கு தண்டனை கொடுக்க கிளம்பியவன் இன்று டேட்டிங்கில் வந்து நிற்கிறான். மனதின் ஓரத்தில் அந்த கோபமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது அவனுக்கு. அவன் நினைத்து இருந்தால் அவனின் தண்டனை வேறு மாதிரியாக இருந்திருக்கும் வர்த்தினிக்கு. ஆனால் இம்மாதிரியான தண்டனை அவளுக்கு கொடுக்க தான் அவனது மனம் விழைகிறது. 

 

 

ஒவ்வொருமுறையும் இவனிடம் சிக்கித் தவிக்கும் போது அவள் கண்கள் ஆடும் நர்த்தனங்களும், முகம் பேசும் வார்த்தைகளும் என அவனுக்கு சுவாரசியம் கூடிக் கொண்டேதான் இருக்கிறது. அந்த சுவாரசியத்தின் ஈர்ப்புப் புள்ளி அறியவே இப்போது இந்தப் பயணம்..

 

அந்த ஈர்ப்பு புள்ளி எதனால் என்று? மற்ற பெண்களை போல் வரையறை இல்லாமல் அவளுடன் பழக முடியாது என்று அவனும் அறிந்துதான் இருந்தான். ஆம் அக்மார்க் அக்ரஹாரத்து மாமி என்று அவளை பார்த்து சிரித்துக் கொண்டான்.

 

"மாமி.. நீ ப்யூர் வெஜ்.. உன்ன வச்சு நான் என்ன செய்ய?" என்று தூங்கும் அவளைப் பார்த்து கேட்டான்.

 

இவனோ மனதில் பல்வேறு எண்ணங்களில் சுழன்று கொண்டே அவளைப் பார்த்துக் கொண்டு வண்டியை ஓட்ட.. நம் வர்தினி மாமியோ சுகமான கனவில் திளைத்துக் கொண்டிருந்தாள்..

 

 

டுலிப் மலர்களால் ஆன நந்தவனம் அது..

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பல பல வண்ணங்களில்.. மனதை கிறங்கடிக்கும் கொள்ளை அழகுடன் பூத்திருந்த அந்தப் பூங்குவியல்களுக்குள்.. மெல்ல அன்ன நடையிட்டு நடந்து கொண்டிருந்தாள் மாது. தன் தளிர் விரல்களால் அப்பூக்களை மென்மையாக வருட.. தூர இருந்து பார்ப்பவர்களுக்கு அந்தப் பூஞ்சோலையில் ஒரு பூவே எழுந்து நடமாடுவது போலவே தோன்றும்.

 

 

மெல்ல அந்த மலர்களை வருடியவாறே பூக்களை ரசித்துக்கொண்டே வர்த்தனி மெல்ல நடந்து சென்று கொண்டிருக்க.. சட்டென்று அவளது தலைக்கு மேல் இருந்து மலர் இதழ்கள் மழைபோல பொழிய இரு கைகளையும் விரித்து தலையை சற்றே உயர்த்தி அந்த இதழ்களின் மென்மையும், பூங்குவியல்களின் சிதறல்களையும் ரசித்தாள் அவள்.

 

 

ஆனால் வேற இரு கண்களோ இவளைத்தான் ரசித்துக் கொண்டிருந்தது அங்குல அங்குலமாக அவளது அழகினை..

அக்கண்களுக்கு சொந்தக்காரனான அந்த நெடிய மாயவன்.. ஆளுமையான நடையுடன் அருகே நடந்து வந்து அவளைப் பார்க்க.. அந்த அஞ்சனை விழியாளோ நாணத்தில் நிலம் பார்க்க.. ஒற்றை விரலால் அவள் தாடையை உயர்த்தி கண்களுக்குள் ஊடுருவினான். அவளது சிறகு போன்ற இமைகள் அவனை காண வெட்கமுற்று அவளது கயல் விழிகளில் மீது கவிழ்ந்து கிடக்க.. மெல்ல அவள் புறம் குனிந்து அவள் அழகை வர்ணிக்கலானான் அவன். அதில் அவள் லஜ்ஜையுற்று செங்காந்தள் ஒத்த அவளது முகத்தை மன்னவன் மார்பினிலே மறைத்துக் கொண்டாள்.

 

அவனோ தன் மீசை முடி அவளது காது மடலில் காதல் செய்ய.. அவன் உதடுகளோ 

 

கவி என நான் பிதற்றும் அனைத்தையும்... 

சிரமேற் கொண்டு கேட்கும் 

காது மடல்களுக்கு.. 

மெல்லியதாய் ஒரு 

உயிர் முத்தம்!!

இரண்டாம் முத்தம் இது!!

என்று கூறி.. அவளது காது மடல்களை கவ்வி பிடித்து சுவைத்தது.

உன் காதுமடல்களை விட , உன் இதழ்கள் தான் என்னை கவர்ந்து இழுக்குதடி மோகனமே!! என்றவன் அடுத்த நொடி..

 

அவனை வாய் பிளந்து பார்த்திருந்தவளின்... பிளந்திருந்த அவளது பவள இதழ்களை அவனது இதழ்கள் கொண்டு மூடினான்.

பெருத்த அவளது மேல் உதட்டை தன் உதடுகளுக்குள் வைத்து உறிஞ்ச.. அவளது இதழ் நீர்துளிகள் எல்லாம் பனித் துளிகளாக அவனுள் இறங்க.. அந்த இதழ் ரசத்தின் சுவையில் கிறங்கினான். அந்த பனித்துளி மேலும் மேலும் வேண்டுமென அவனின் தாகம் அதிகரிக்க.. அவன் உறிஞ்சலின் வேகமும் அதிகரித்தது. நீண்ட நெடிய முத்த சஞ்சாரத்தில்.. இவ்வுலகை மறந்து திளைத்திருந்தான் அவன். அவளோ கண்களை இறுக்க மூடி இருக்க.. மெல்ல திறந்த அவள் கண்களுக்கு எதிரே மாயம் செய்யும் அந்த கண்ணனின் கபட சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான் அவளையே பார்த்துக்கொண்டு வினய் விஸ்வேஸ்வரன்.

 

 

என்னது இவனா அவன்? அல்லது அவன் தான் இவனா? என்று தன்னை கனவில் முதன்முதலில் முத்தமிட்டதும் இவன்தானா இல்லை அது வேறு யாரோ என்று அவள் குழம்பி அவனை பார்க்க..

 

"சொன்னேன் அல்லவா? சீக்கிரம் கண்டு கொள்வாய் என.. உன்னை கொள்ளை கொள்பவனை" என்றவன் மீண்டும் அவளது பிறை போன்ற அழகிய நெற்றியில் முத்தம் பதித்து விட்டு மறைந்து விட்டான்.

 

கனவில் கண்ட அந்த முகம் வினய்யின் முகமாக இருக்க அதிர்ச்சியுடன் சட்டென்று விழித்து பார்த்தாள் வர்த்தினி. முதலில் தாம் எங்கு இருக்கும் என்று புரியாமல் விழிக்க.. எதோ கனவு கண்டு வைத்திருக்கிறோம் என்பதை மட்டும் புரிந்து கொண்டாள் பெண்ணவள். 

"பேப்.. என்னாச்சு" என்று அவன் கேட்க..

அப்போதுதான் அவளுக்கு அவனுடன் தான் தனித்து சொல்லிக் கொண்டிருப்பதும் கனவில் தந்த முத்தமும் சேர.. தன் அதரங்களை கைகளால் மூடிக்கொண்டு ஒன்றும் இல்லை என்று இரு பக்கமும் வேகமாக தலையாட்டி சொன்னாள்.

 

அவள் தன் உதடுகளை மூடிக் கொண்டதை ஒருவித சந்தேகத்துடன் அவளை பார்த்தவாறு காரை செலுத்தி கொண்டிருந்தான் வினய்.

 

மீண்டும் அவளைப் பார்த்து "என்ன ஆச்சு?" என்று அழுத்தமாக கேட்க...

 

காரில் அருகில் இருந்த அந்த தண்ணீர் பாட்டிலை பார்த்தவள் வண்டியை நிறுத்துமாறு சைகை செய்ய.. ஒருவேளை அவளுக்கு ஏதேனும் வாந்தி வருகிறதோ என்ற பயந்த அவனும் ஓரமாக வண்டியை நிறுத்தி தன் வண்டியிலிருந்த பேப்பர் பாக்கை அவளிடம் கொடுத்து "வாந்தி வந்தால் இதில் எடு" என்று கொடுக்க அவளோ அதை தள்ளிவிட்டு வாட்டர் பாட்டிலை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கியவள், ஒரு ஓரமாக சென்று தன் உதட்டை தண்ணீர் கொண்டு வேகவேகமாக கழுவினாள்.

 

ஒருமுறை இருமுறை அல்ல அந்த பாட்டிலில் உள்ள தண்ணீர் காலியாகும் வரை அவள் அதையே தான் செய்து கொண்டிருந்தாள்.

காரில் அமர்ந்து இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த வினய்க்கு அவளின் இந்த வித்தியாசமான நடவடிக்கை புரியாமல் குழம்ப.. 

 

 

திரும்பி வந்தவள் அவனிடம் இன்னொரு வாட்டர் பாட்டில் இருக்கா என்று கேட்க எதற்கு என்று தெரியாவிடினும் அவனிடமிருந்த இன்னொன்றையும் எடுத்துக்கொடுக்க, அதையும் வாங்கி கொண்டு அவள் கழுவச் செல்ல.. அவள் கை பிடித்து தடுத்தவன் "முதலில் எதுக்கு இப்படி லிப்ஸ் போட்டு கழுவுற.. எனக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் இதை எடுத்துட்டு போய் நல்லா தேய்ச்சு கழுவு" என்று கூர்மையாக அவளை பார்த்து கொண்டே சொன்னான்.

 

 

உடனே அதில் அவளுக்கு சற்று ஆத்திரமாக மிக.. "என்னது? எதுக்கு நான் கழுவுறேன்னு நோக்கு தெரியாதா? பாவி!! கிராதகா!! எல்லாம் உன்னால் தான். நீங்க பாட்டுக்கு என் உதட்ட புடிச்சி கடிச்சி வைக்கிறேள் எப்போ பார்த்தாலும்.. அதை போக்க தான் இவ்ளோ நேரம் தேச்சு தேச்சு நல்ல ஜலத்தை போட்டு அலம்பிண்டு வந்தேன். இனியொரு முறை இந்த மாதிரி நேக்கு முத்தம் கொடுத்தேள்.. அப்புறம் இருக்கு நோக்கு" என்றுவிட்டு காருக்குள் அமர்ந்து வேகமாக கதவை சாத்திக்கொண்டவள் வேகவேகமாக பெரு மூச்சை இழுத்து விட்டு தனது கோபத்தை சமன்படுத்தினாள்.

 

 

அவளின் இந்த வினோதமான நடவடிக்கையை பார்த்தவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்பு ஒரு வழியாக தான் நேத்து கொடுத்த முத்தத்தின் தாக்கம் தான் அவள் இப்போது தூங்கும்போது கனவாக வந்து இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவன்.

 

 

"ஆஹ்ஹா... ஹா.. என்று பெருங்குரலெடுத்து சிரித்தான்.

 

"நேத்து கொடுத்ததோடு தாக்கம் இப்ப வரைக்கும் உன்னை தொடருதா பேப்?" என்று கேட்டவனின் பார்வை அவளை துளைக்க.. 

 

அப்பொழுது அவளுக்கு ஒன்று புரியவில்லை. நேற்று அவன் நேரில் கொடுத்ததால் அதுவே தனக்கு கனவாக வருகிறதா? இல்லை கனவில் கொடுப்பது நிஜத்தில் பலிதமாகிறதா? இல்லையே அன்று விமானத்தில் வரும் பொழுது தான் கனவு காண அதுதானே பின்னாளில் பலித்தது அவளுக்கு. "அச்சோ பெருமாளே!! இந்த மாதிரி கனவுகள் கூடவா பலிக்கும்? அப்போ இப்போ கண்டது?"என்று மனதுக்குள் பேசுவதாக நினைத்து அவள் வாய்விட்டுச் சொல்ல.. 

 

"ஐ கேட்ச் யுவர் மைண்ட் வாய்ஸ்" என்றவனின் மீசையின் அடியில் உதடு சிரிப்பில் துடித்தது.

 

அடுத்து அவள் விரும்பியது போலவே சுவாமி நாராயணன் கோவிலுக்கு அழைத்து சென்றான். இவனும் உள்ளே செல்ல அங்குள்ள பெருமாளை உருகி உருகி வணங்கினாள் இவள். கண்டிப்பாக அவளது வேண்டுதலில் ஒரு பகுதியாக இவனிடமிருந்து சீக்கிரமே விடுபட்டு தன் தாய் தந்தையுடன் போக வேண்டும் என்பது இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?

 

இவர்கள் அதிகாலையிலேயே கிளம்பி விட்டதால் அவர்கள் காலை உணவு எதுவும் எடுக்கவில்லை. எனவே அருகில் இருக்கும் உணவகத்திற்கு அவளை அழைத்துச் சென்றவன்.. அவளுக்கு பிடித்த மாதிரியே தென்னிந்திய உணவுகளை வரவழைத்து சாப்பிட சொல்ல.. அவளும் அமைதியாகவே சாப்பிட்டு முடித்தாள். பின் இவர்கள் இருவரும் வண்டியில் ஏற.. கார் வேகம் எடுத்தது..

 

 

மீண்டும் ஒரு இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்பு அவன் அவளை அழைத்து சென்ற இடம் ஒரு ரிசார்ட்..

 

அதைப் பார்த்ததும் அவளுக்கு மீண்டும் மனதில் திகிலடிக்க.. மெல்லத் திரும்பி அவனை பார்த்தாள். 

 

காரில் வாகாக சாய்ந்து இரு கைகளையும் அதன் மேல் விரித்து வைத்து அவளை கூர்ந்து பார்த்தவன், பின் வேக நடையுடன் அவன் முன்னே செல்ல தான் இங்கே நிற்பதா இல்லை.. இவனை தொடர்வதா என்று குழப்பத்துடன் நின்றவளின் கைபிடித்து அழைத்துச் சென்றவன்.. சென்று நின்றது அழகிய குடில் போன்ற அமைப்பிடம். அதைச் சுற்றியும் அழகிய கொடிகள் பின்னிப் பிணைந்து ஒரு வனம் போல காட்சியளிக்க.. அதன் அழகை பார்த்து பிரமித்து அதையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

 

"உள்ளேயும் அழகாக இருக்கும் போய் பாரு" என்று அவன் தன் ஃபோனை நோண்டிக்கொண்டிருக்க, அந்த தைரியத்தில் அவள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே பார்க்க.. அவன் சொன்னது போலவே ஒரு இயற்கையான சூழலில் அந்த குடிலின் உள்ளே அமைக்கப் பட்டிருந்தது. அதையெல்லாம் ஒருவித ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் அதிர்ச்சியில் நிலைகுத்தி நின்றது ஹார்ட்டின் வடிவ ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மெத்தையின் மீது... ஏனென்றால் அது ஒரு ஹனிமூன் சூட்..

 

 

"இங்கே எதற்கு என்னை கூட்டிண்டு வந்தேள்?" என்று கூறியவளின் கைகள் எல்லாம் வெடவெடக்க.. மனம் தடதடக்க.. கண் இமைகள் இரண்டும் சிறகு போல் படப்படக்க... 

 

உண்மையில் அவ்வறை ஒரு தேனிலவு ஜோடிகளுக்காக அலங்கரிக்கப்பட்டது.. அவர்கள் அதை கேன்சல் செய்துவிட.. ரெகுலராக வரும் வினய்க்கு அந்த சூட்டை அவர்கள் அளித்துவிட.. அதைக் கண்டவனின் கண்களில் இன்னும் குறும்பு கூத்தாட விஷமப் புன்னகையுடன்.. அவளை நெருங்கினான்.

 

 

"நீ கண்ட கனவை நனவாக்க" என்றான் வினய் விஸ்வேஸ்வரன்.

 

நம்ம வினய் மோசம் தான் பா...

ஆனால் அந்த அளவு மோசமில்லை...

நம்பனும்.. நம்பிக்கை அதானே எல்லாம்!!


   
Quote
(@gowri)
Member
Joined: 6 months ago
Messages: 48
 

எதே இவனை நம்பனுமா????

அது எப்படி இவனுக்கு favour ஆ எல்லாம் நடக்குது????

இது எல்லாம் ரைட்டர் ஓட சதி தான்🤣🤣🤣🤣🤣


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top