அரன் 19

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

ஆருயிர் 19

“இந்த பொண்ண எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு யாழினி? எங்க பார்த்திருப்பேன்??” என்று மல்லிகா கேட்க..

 

அப்பொழுதுதான் கவனித்தார் கணவனும் மகளும் எழுந்து நிற்பதை.. “நீங்க ரெண்டு பேரும் இப்படி ஏன் பேய் அறைஞ்ச மாதிரி நிக்கிறீங்க?” என்று கேட்டார்.

 

“ஒன்னுமில்ல மா” என்றப்படி அமர்ந்த யாழினி அப்பாவையும் கண்ணை காட்டி அமர சொல்ல.. அவருக்கு இன்னும் பதட்டம் கூடியது.

 

கண்டிப்பாக அவன் யாழினியை விட மாட்டான் என்று அவர் சொன்ன வார்த்தை இப்பொழுது நிஜமாய் ஒவ்வொரு விஷயத்தில் நடந்துக் கொண்டிருப்பதை பார்த்து மகளை கலக்கத்தோடு பார்த்தார் சொக்கலிங்கம். 

 

அந்த பயம் எல்லாம் இல்லை யாழினிடத்தில். ‘இங்கே ஒருவனிடம் காதல் சொல்லி அது முறிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அடுத்து அங்கே இன்னொரு நபருடனான திருமணம்!! அதுவும் என் அண்ணனையா? இது எனக்காக விரித்திருக்கும் வலை என்று கூட தெரியாத அளவு முட்டாளா நான்?’ என்று இகழ்ச்சியாக வளைந்தது அவளது அதரங்கள் அதிரதனை கண்டு. இப்பொழுது கேமரா முழுக்க முழுக்க அவனையே சுற்றி சுற்றி காட்ட அவளுக்கு எல்லாம் தெளிவாகியது.

 

முதலில் சுப்ரமணியத்தை காட்டியதும்.. அதற்குப்பின் ஆரத்தியாவின் ஒவ்வொரு அசைவாக காட்டி சுப்பிரமணியத்துடன் கைகோர்க்கும் நிலையில் இருவரையும் காட்டியது.. அதன் பின் நிறுத்தி நிதானமாக அதிரதனை காட்டியது எல்லாமே அவனின் செயல் என்று கண்டிப்பாக

புரிந்தது யாழினிக்கு.

 

வீட்டில் உள்ளவர்கள் சுப்பிரமணியம் அனுப்பிய லிங்கை பார்ப்பார்கள் என்று தெரிந்தே தான் செய்திருக்கிறான் என்று நினைத்தவளுக்கு சிரிப்புதான் வந்தது. ‘அண்ணனை வைத்து என்னை என்ன செய்ய முடியும் உன்னால்?’ என்று நினைத்தவள், அதற்கு மேல் எதுவும் பேசாமல் எழுந்து சென்றுவிட…

 

“யாழினி நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்ல.. இந்த பொண்ண நான் எங்கேயோ பார்த்து இருக்கேன் டி?” என்றதும் வெளியில் கிளம்பி ஆயத்தமாக வந்தவள் நிறுத்தி நிதானமாக அன்னையைப் பார்த்து “பார்த்திருப்ப மா.. என்கூட ஒரு தடவை நம்ம வீட்டுக்கு கூட வந்து இருக்கா.. ஆர்த்தி என்கிற பேர்ல” என்றதும் “ஆமா இல்ல.. அந்த பொண்ணு எப்படி நம்ம சுப்பு கூட? அதுவும் கம்பெனி முதலாளி என்றானே?” என்று அவர் யோசிக்க…

 

அம்மாவை கூர்மையாக பார்த்தவள் ஏதும் கூறாமல் அப்பாவிடம் கண்ணை காட்டி விட்டு எழுந்து சென்று விட்டாள்.

 

இப்பொழுது மொத்தமாக பாரம் கூடிய நிலையில் தான் சொக்கலிங்கம்.

 

நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் அதிரதனை நோக்கி தங்கள் குடும்பம் இழுக்கப்படுகிறது முக்கியமாக தன் மகள் இழுக்கப்படுகிறாள் என்பது இத்தனை வருட உலக வாழ்வியல் அனுபவத்தில் நன்றாகவே புரிந்தது அவருக்கு.

 

அதுவும் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இவர்கள் உண்டு இவர்கள் வாழ்க்கை உண்டு என்று இருக்கும் இந்த நேரத்தில்.. யார் இவன்? எதற்கு இவ்வளவு பிரச்சனைகளை கூட்டுகிறான்? என்று மனதில் அத்தனை கவலை அவருக்கு!

 

அந்த கவலைக்கு எண்ணெய் ஊற்றி இன்னும் அதிகரிப்பது போலவே அடுத்த இரண்டாம் நாளே வந்து சேர்ந்தான் சுப்ரமணியன் கையில் அடங்காத பரிசு பொருட்களோடு.

 

சொல்லாமல் கொள்ளாமல் காலையில் வந்து நின்ற மகனைப் பார்த்ததும்.. முதலில் கோபம் தான் மல்லிகாவுக்கு. ஆனால் பெற்ற மனமாயிற்றே? அத்தனை கல் நெஞ்சம் இல்லையே பிள்ளையை போல.. அதனால் “சுப்பு..” என்று கண்கள் கலங்க மகனை அணைத்துக் கொள்ள.. அவனும் “எப்படி இருக்கீங்க மா.. ரொம்ப இளைச்சிட்டுங்க!”’என்றபடி அவரை அணைத்து விடுவித்து பாசமாக பேச மல்லிகாவின் இளகிய மனம் மகனின் இந்த அன்பில் நெக்குறுகி போனது.

 

அவன் வந்த வேளையில் சொக்கலிங்கம் பக்கத்தில் இருக்கும் டுடோரியல் சென்டருக்கு சென்று இருந்தார். யாழினியும் அரவிந்தை பார்க்க சென்றிருந்தாள். அரவிந்தன் இப்பொழுது வேறொரு சாப்ட்வேரை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்க.. அவளும் தனது வேலையை விட்டு விட்டதால் தனக்கு தெரிந்த வகையில் அவனுக்கு உதவி கொண்டு இருந்தாள்.

 

”என்னடா அர்வி.. நீ சாப்ட்வேர் புலினு தெரியும்! என்ன எத்தனை நாள் எடுக்கிற?” என்று கேட்டாள்.

 

“ம்ம்.. முதல்ல செஞ்சதுல எரர்ஸ் நிறைய வருது.. பிரண்ட்லி அப்ரோச் இல்ல.. இப்படி ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் அதனாலதான் கொஞ்சம் மாடிஃபை பண்ணி பண்ணலான்னு பார்த்தேன்.. ஆனா அதைவிட புதுசா ஒன்னுனா இன்னும் நல்லா இருக்கும்ல” என்றான்.

 

“கரெக்ட்..! நீ சொல்றதும் சரிதான். ஏற்கனவே பழுதாகி போனதை திரும்பத் திரும்ப ரிப்பேர் பண்றததை விட.. இந்த மாதிரி குறையே இல்லாம புதுசா ஒன்னு பண்றது நல்லது தானே!” என்று அவனை கூர்ந்து பார்த்து கூற அவள் தலையில் தட்டிய அரவிந்த் “ஓய்.. டபுள் மீனிங்ல அட்வைஸ் கொடுக்குறீங்களோ? அதெல்லாம் மனதில் எந்த ஓரத்திலும் கூட அவ இல்ல.. நீ சும்மா சும்மா அவளை ஞாபகப்படுத்தாதே! மறந்தவனு இல்லை அப்படி ஒருத்தி என் வாழ்விலே வரவேயில்லை புரியுதா? அதுவுமில்லாம அவ இப்ப உனக்கு அண்ணி!” என்று நமட்டு சிரிப்போடு அரவிந்த் கூற..

 

“போடாங்க..!! ஏதாவது நல்லா சொல்லிட போறேன்” என்று இவர்கள் இருவரும் இங்கே பேசி சிரித்து வேலை கொண்டிருக்கும் வேளையில் தான் மல்லிகாவிடமிருந்து ஃபோன் வந்தது சுப்பிரமணி வீட்டிற்கு வந்திருக்கிறான் என்று..!!

 

யாழினி ஃபோனை எடுத்தது அரவிந்த் தான். மல்லிகா பேசியதும் யாழினியை யோசனையோடு பார்த்துக் கொண்டே அவன் ஃபோன் வைக்க.. “என்னடா.. அம்மா என்ன சொன்னாங்க?” என்றதும் “உன் அண்ணன் வந்திருக்கானாம்!” என்றான்.

 

“ம்ம்..” தவிர அவளிடமிருந்து எந்தவித வேற பதிலும் வரவில்லை. அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“என்னடி.. உங்க அண்ணன் வந்து இருக்கான்னு சொல்றேன். நீ பாட்டுக்கு அமைதியா இருக்க?”

 

தான் செய்து கொண்டிருந்த வேலையை கணினியில் சேவ் செய்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து “அதுக்கு என்ன பண்ணனும் இப்ப? தாரை தப்பட்டை செண்ட மேளம் முழங்க ஒரு பெரிய வரவேற்பு கொடுத்திடலாமா?” என்று நக்கலாக அவனைக் கேட்டாள்.

 

“அவன் இப்ப பெரிய வீட்டு மாப்பிள்ளை டி! செஞ்சாலும் தப்பில்லை” என்று சிரித்தான் அரவிந்த்.

 

“அர்வி.. நிஜமா என்கிட்ட நீ வாங்க தான் போற” என்று டேபிளில் இருந்தவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அவனை நோக்கி எறிய அதிலிருந்து லாவகமாக தப்பி கொண்டே “உண்மை தானே சொன்னேன்! உங்க அண்ணன் பெரிய கம்பெனியோட சிஇஓ.. அதோடு பெரிய இடத்து மாப்பிள்ளை.. அடுத்தடுத்து என்னென்ன போஸ்ட் வரப்போகுதோ அவனுக்கு மட்டுமா இல்லை…” என்று அவன் இழுக்க..

 

இப்பொழுது அருகில் இருக்கும் பென்சில் சீவும் சிறு கத்தியை எடுத்தவள் அவன் நோக்கி நீட்டி “இன்னும் ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்தது.. ஒரே கிழி வாய.. உன் புத்தி எங்க போகுதுனு எனக்கு தெரியும்.. என்ன சொல்ல வருதுன்னு எனக்கு தெரியும்..! மூச்..!” என்றாள். அவன் அப்போதும் சிரிக்க..

 

அவனை முறைத்து விட்டு “என் பார்ட் பாதி தான் முடிச்சிருக்கேன். மீதிய நீயே முடி. என் மூட அப்செட் பண்ணல..” என்றவள் கிளம்ப..

 

“அண்ணன பாக்க போறேன் டைரக்டா சொல்லிட்டு போ டி பக்கி.. அதுக்கு எதுக்கு இப்படி கோவமா போற மாதிரி டிராமா போட்டுட்டு போற.. டிராமா குவின்” என்றதும் அவனை முறைத்துக் கொண்டு கீழே சென்றவள், கோதாவரியிடம் சென்று “அத்தை உங்க புள்ள என்ன ரொம்ப வெறுப்பேத்திட்டே இருக்கான். நான் ரொம்ப கோவமா இருக்கேன்” என்று புகார் வாசித்தாள்.

 

அவர்களுக்கும் சுப்பிரமணியன் நிச்சயம் செய்து கொண்டது தெரியும். ஆனால் பெண் யார் என்று கூறவில்லை அரவிந்த் கோதாவரியிடம்..

 

“அவன் கிடக்கிறான்.. நீ வா அத்தை இன்னைக்கு மட்டன் பிரியாணி செஞ்சு இருக்கேன். நீ டெஸ்ட் பண்ணி பாரு..” என்றதும் “அத்தை ஒத்த பீஸ் கூட நீங்க அவனுக்கு கொடுக்க கூடாது!” என்றவள் அவர் செய்த பாத்திரத்தில் இருந்து ஒரு பெரிய தட்டில் பிரியாணியும் பீஸூம் ரைதாவையும் அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்க.. மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன் இவளை பார்த்து “அதானே நான் கூட நீ ரோசப்பட்டு வீட்டுக்கு போயிடியோனு நெனச்சேன் டி” என்று எதிரில் அமர்ந்தவன் பிரியாணி வாசத்தை இழுத்து “ம்ம்ம்.. செம.. அம்மா எனக்கும் தட்டு குடுங்க” என்றான். கோதாவரியோ யாழினியை பார்க்க… அவளோ கொடுக்க கூடாது என்று தலையசைத்தாள்.

 

“ம்மாஆஆ.. என்னம்மா நான் தட்டு கேட்டா நீ அவளை பாக்குற” என்றான்.

 

“அவ தான்டா உனக்கு கொடுக்க கூடாதுன்னு சொல்லி இருக்கா” என்று அவர் சிரிக்க..

 

“மா இதெல்லாம் நல்லா இல்ல! இவ நாளைக்கு கல்யாணம் ஆகி ஓடி போறவ.. சொல்லப்போனால் விருந்தாளி! அவ பேச்ச கேட்டு பிள்ளையை பகைச்சுக்காதம்மா” என்று கூறியவனை கண்டு வவ்வளம் காட்டியவள் “எந்த ஊருக்கு கல்யாணம் ஆகி போனாலும் நான் இந்த வீட்டு பொண்ணு தான்! அதாவது செல்ல பொண்ணு.. சொல்வது தான் கேட்கணும்! அத்தை அவனுக்கு நீங்க வைக்காதீங்க.. இல்ல மாமாக்கு ஃபோன் போட்டு சொல்லிடுவேன்” என்று மிரட்டினாள்.

 

“நீயாச்சு அவனாச்சு என்ன ஆள விடுங்க.. உங்கள் மாமாக்கு சாப்பாடு கொண்டு வரேன்னு சொல்லி இருக்கேன். எடுத்துட்டு போக போறேன்” என்றபடி அவர் கேரியரில் எடுத்துக் கொண்டு விஸ்வநாதன் வைத்திருக்கும் பிரின்டிங் பிரஸ்சுக்கு சென்றார்.

 

எதிரில் அமர்ந்து இருந்த அரவிந்த் சாப்பிடும் அவளையே இருக்கையில் சாய்ந்து கையை கட்டிக்கொண்டு பார்த்திருந்தான். இவளும் அவனை வெறுப்பேத்தவென்று “அத்தைக்கு மட்டும் தனியா எடுத்து வச்சிருவோம்” என்று கோதாவரிக்கு சாப்பாடு தனியாக ஹாட் பாக்ஸ் எடுத்துவிட்டு.. மீதியை குண்டானோடு வைத்துக்கொண்டு பீஸா தேடி தேடி எடுத்து அவனைப் பார்த்துக் கொண்டே சப்பு கொட்டி சாப்பிட.. அவன் ஒன்றுமே கூறாமல் அமைதியாக பார்த்திருந்தான்.

 

“என்ன குண்டன் அமைதியா பாக்குறான்?” என்றபடி சாப்பிட்டவளுக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை.

 

பிடித்த உணவாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவு தானே! அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு அல்லவா?

 

அவனை ஓர கண்ணால் பார்த்துக் கொண்டு சாப்பிட முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக உள்ள போக.. அரவிந்த் முகத்தில் இப்பொழுது புன்னகை அது கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து வெடித்து சிரித்தான் அவன்.

 

“அடியே முடியலன்னா வை! நீ எவ்வளவு சாப்பிடுவனு எனக்கு தெரியாது? இதுல என்ன இவ வெறுப்பேத்துறளாம்.. மிஞ்சி போனா அரை ப்ளேட்டு பிரியாணி கூட உன்னால ஒரே நேரத்தில் திங்க முடியாது டி! பிரியாணி சாப்பிடணும்னா என்னை பாத்து கத்துக்கோ” என்றவன் நொடிக்கும் குறைவான நேரத்தில் அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தன் பக்கம் இழுத்து மளமளவென்று அவன் சாப்பிட.. இப்போது அதிர்ந்து பார்ப்பது யாழினி முறையாயிற்று!!

 

அரவிந்த் சாப்பிடுவதை முதலில் கோபமாக பார்த்தவள் பின் சிரித்துக் கொண்ட “கொஞ்சம் கூட பேஸிக் சென்ஸ் இல்ல டா உனக்கு. நான் சாப்பிடுறத புடுங்கி சாப்பிடுகிற?” என்று அவள் திட்ட.. 

 

“அப்படியே அந்த விரலை உன் பக்கம் திரும்பி சொல்லிக்கோடி! எத்தனை தடவை நான் சாப்பிடும் போது புடுங்கி தின்னு இருக்க.. சாக்லெட்.. ஜஸ்கிரீம்னு.. போடி பக்கி.. நமக்குள்ள என்ன பார்மாலிட்டிஸ்.. நீ வேற நான் வேற இல்ல.. உனக்கு பிடிக்கும்னு நான் தான் அம்மாவை இன்னைக்கு செய்ய சொன்னேன்” என்று அவன் பிரியாணியை காலி செய்துவிட்டு வர அதற்குள் யாழினி அங்கிருந்து அவற்றை சுத்தம் செய்து வைக்க…

 

“நீ வீட்டுக்கு கிளம்பு.. அத்தை அதுக்கு தானே ஃபோன் பண்ணாங்க.. அவன பார்க்குறதை தள்ளி போட்டு இங்கேயே எவ்வளவு நேரம் உன்னால இருக்க முடியும்? எப்படியும் அவனை நேரில் சந்தித்து தானே ஆகணும்” என்றதும் தன்னை கண்டு கொண்டான் என்று சிரித்த யாழினி “ஃபேஸ் பண்ண வேண்டாம்னு இல்ல டா.. ஆனா டக்குனு போனா ஏதாவது சூடான வார்த்தைகள் வந்துருமோ தான் இன்னும் கொஞ்சம் என்னை நானே ரிலாக்ஸ் பண்ணிட்டு போகலாம்னு” என்றதும் அவள் கழுத்தில் கை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன், 

 

“எதா இருந்தாலும் ஃபேஸ் பார்த்து பேஸ் பண்ணனும். வார்த்தைகளும் பார்த்து தான் வெளியிடனும்.. என்ன இருந்தாலும் அவன் உன் அண்ணன்! விட்டு போற உறவு கிடையாது!” என்றதும் “பக்கி.. கழுத்திலிருந்து கையை எடு டா.. மூச்சு முட்டுது! எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கான்.. உடம்ப பாரு..” என்று அவன் புஜத்தை தள்ளும் போது தான் அங்கிருந்து சில காயங்கள் கன்னிப்போய் இருந்தது அவள் கண்களில் பட.. கண்கள் கலங்க அதனை மெல்ல வருடி விட்டவளின் கையை தட்டி விட்டான் அரவிந்த்.

 

“ஓவர் எமோஷனாகாத டி.. டிராமா குவின்.. கிளம்பு கிளம்பு வீட்டுக்கு” தன் ஹேண்ட் பேக் எடுத்து வந்தவள் அதாலேயே அவன் முதுகில் மொத்தி விட்டு வெளியேறினாள்.

 

“எங்க அப்பா பிரம்பால அடிச்சே எனக்கெல்லாம் வலிக்காது. இவ ஹேண்ட்பாகால அடிக்குறா.. ஒத்தடம் கொடுத்துட போறா” என்று சிரிக்க.. அரவிந்தை நினைத்தவுடனே முகத்தில் புன்னகை பூத்தது யாழினி முகத்தில். அந்த புன்னகை முகமாகவே வீட்டிற்கு சென்றவளை ஆரவாரமாக வரவேற்றான் சுப்ரமணி.

 

‘என்னடா எலி ஏரோப்ளேன் ஓட்டும் பார்த்தா இது ஏரோப்பளேனுல நம்மளையும் சேர்த்துக்கிட்டு கூட்டிட்டு போக பாக்குதே?’ என்று சிரித்த முகத்தோடு அண்ணனை வரவேற்று வாழ்த்து சொல்லியவளை கண்டவனுக்கு இன்னும் உற்சாகம் பொங்கியது. 

 

ஊருக்கு வரும்போதே ஒரு வித பதட்டத்தில் தான் வந்தான். தன் திருமணத்தை ஒத்துக் கொள்ளாமல் எதுவும் பேசினால் என்ன செய்வது? அம்மாவை கூட பாசத்தைக் காட்டி வீழ்த்தி விடலாம்.. அப்பாவையும் அம்மாவைக் கொண்டு சமாளித்து விடலாம். ஆனால் யாழினியை எப்படி எதிர்கொள்வது? அதிலும் அவன் வந்த நோக்கம் தெரிந்தால் அவள் என்ன சொல்வாளோ? இது ஒரு புறம் பயமாக இருந்தாலும் மறுபுறம் யாருக்கும் கிட்டாத வாழ்வு இது!! அத்தனை சொத்துக்கள்.. சுகபோக வாழ்க்கை.. இதற்கு போய் ஏன் கோபப்பட போகிறாள் என்று இரு மனமாக யாழினி வரும் வரை தவித்துக் கொண்டுதான் இருந்தான் சுப்ரமணி.

 

அதுவும் அவள் வந்ததும் புன்னகை முகம் ஆகவே அண்ணனை வரவேற்று வாழ்த்து சொல்லியதுதான் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன் தந்தையை பற்றி கேட்க “இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க வரும் நேரம் தான்” என்றபடி அம்மாவோடு அமர்ந்தாள்.

 

“நீ என்ன ஸ்கூலுக்கு போலயா லீவா இன்னைக்கு?” என்றதும் “இல்ல நான் அந்த ஜாபை ரிசைன் பண்ணிட்டேன். எனக்கு செட் ஆகல.. இப்போ அர்வியோடு சேர்ந்து ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்” என்றதும் அரவிந்த் பெயரை கேட்டது முகம் சுழித்தான் சுப்ரமணி.

 

“இன்னும் அந்த பய பொறுப்பா வேலைக்கு போகாம ஊர் சுத்திட்டு தான் இருக்கானா? ஆமா அவனுக்கு என்ன போய் நீ ஹெல்ப் பண்ண போற?” என்று நக்கலாக கேட்டதும் கோபம் பெருகியது யாழினிக்கு. 

 

அரவிந்தை பேசியதும் அமைதியாக அவனைப் பார்த்தவள் “பொறுப்பற்று ஊரை சுற்றினாலும் அம்மா அப்பாவோட தான் இருக்கான்.. குடும்பத்தை பார்த்துக்கிறான்.. சொந்தமாக பிசினஸ் தொடங்குறான்.. அடுத்தவங்க சொத்துக்கு அலையல.. தன் சொந்த கால நிக்கணும் தான் முயற்சி செஞ்சிட்டு இருக்கான்” என்றதும் தங்கையின் வித்தியாச பேச்சில் உடனே சுதாரித்துக் கொண்டான் சுப்பிரமணி.

 

 யாழினிக்கும் அரவிந்துக்கும் இருக்கும் நட்பும் அந்த புரிந்துணர்வும் அன்பும் தான் அவனுக்கு தெரியுமே! தவறுதலாக வாய்விட்ட தன் மடத்தனத்தை எண்ணி மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

 

அதற்குள் சொக்கலிங்கமும் வந்துவிட அப்பா என்று மரியாதையாக அவன் நிற்க.. ஏற்கனவே இதற்கு பழகிவிட்டாரே “வாப்பா நல்லா இருக்கியா?” என்று பொதுவாக விசாரிக்க “என்ன மா.. சாப்பாடு ரெடியா? சாப்பிடலாம் வாங்க பா.. நீயும் வா யாழினி” என்று அழைத்தான்.

 

“ஊர்ல இருக்கும்போதே நம்மள கண்டுக்க மாட்டான் இப்ப என்ன வாண்ட்டடா வந்து அழைக்கிறான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் “இல்லை ணா.. நீ சாப்பிடு நான் அர்வி வீட்டுல சாப்பிட்டேன். அத்த மட்டன் பிரியாணி செஞ்சிருந்தாங்க சாப்பிட்டு போகணும் ஒரே கம்பெல்.. அதனால ஃபுல் கட்டு கட்டி தான் வந்தேன் நீங்க சாப்பிடுங்க” என்றாள்.

 

‘எங்க சுத்தினாலும் எதில் கண்டாலும் அவனது பெயர் தானா?’ என்று மனதில் நினைத்துக் கொண்டே இவர்கள் மூவரும் சாப்பிட அமர.. 

 

“ஏங்க கரண்ட் பில் இன்றைக்கு லாஸ்ட் டேட் கட்டிடீங்களா?”

 

“இல்லை மல்லி.. நான் அரவிந்த் கிட்ட சொல்லிட்டேன் அவன் ஆன்லைன்ல கட்டிட்டான்” என்றார்.

 

“அப்புறம் எனக்கு இந்த ப்ரஷர் மாத்திரை எல்லாம் முடிஞ்சிட்டு” 

 

“அடுத்த மாசம் தானே செக் அப் போகணும். இப்போ வாங்கிடலாம்” என்றார்.

 

“இல்லிங்க.. நேத்தே பாப்பா சொல்ல அரவிந்த் வாங்கிட்டு வந்துட்டான் அப்பாயின்மென்ட் அடுத்த மாசம் தான்.. ஆனா இப்பவே என் பேர பதிஞ்சு வச்சுட்டான்” என்றார் மல்லிகா.

 

“அந்த டாக்டர் சொல்ற மாதிரி ஒழுங்கா எல்லாம் பாலோ பண்ணு மல்லி. நமக்கு உடம்பு தான் சொத்து” என்று அன்னையும் தந்தையும் தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டாலும் ஒவ்வொரு பேச்சிலும் அரவிந்த் யாழினி மட்டுமே அவர்கள் உலகத்தில் கலந்திருப்பதை சற்று ஆத்திரத்தோடு பார்த்திருந்தான் சுப்ரமணி.

 

“அரவிந்த்.. பெரிய அரவிந்த்.. காசு கொடுத்தா எவன் தான் வேலை செய்ய மாட்டான்? என்ன சும்மா நல்லாவனா நடிக்கிறான்?” என்று பற்றிக் கொண்டு வர, சுப்பு சீக்கிரம் உணவை முடித்தான்.

 

அன்னை அவனுக்காக பார்த்து பார்த்து செய்தவற்றையெல்லாம் தொடக்கூட இல்ல. “இதை சாப்பிட்டால் எனக்கு சுகரு ஏறிடும்.. வெயிட் போட்டுடும்.. முகத்துல பிம்பிள்ஸ் வரும்.. நான் இப்ப டயட்ல இருக்கேன்.. கல்யாண வேலை சீக்கிரம் வருது” என்று ஏகப்பட்ட காரணங்களை அடுக்க வெறுத்தே போனது மல்லிகாவுக்கு..

 

“இலை தழைய மட்டும் அப்படியே வைத்திருந்திருக்கலாம்.. அவனே தின்னு ஓடி செரிச்சு இருந்திருக்கும் தேவையில்லாம ஏன் இவ்வளவு சமைச்ச மா நீ” என்று அன்னையை திட்டிக் கொண்டு அண்ணனை முறைத்து விட்டு சென்றாள்.

 

புலி வருகிறது புலி வருகிறது என்பது போல அன்று இரவே அவன் பேச வந்ததை பேசி விட்டான் சுப்பிரமணி.

 

அதாவது இன்னும் ஒரு வாரத்தில் இவர்களது கல்யாணம் இங்கே சென்னையில் மிகப்பெரிய மண்டபத்தில் நடக்க இருக்கிறது. கல்யாண வேலை முழுவதையும் பெண்ணின் வீட்டாரே பார்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் போய் கல்யாணத்தில் நின்று ஆசீர்வதிப்பதை தவிர வேறு எந்த வேலையும் இல்லை. கூடவே கல்யாணத்திற்கு மட்டுமே உறவினர்களுக்கு அனுமதி..! ரிசப்ஷனுக்கு மிகப்பெரிய தொழிலதிபர்கள் சினிமா உலகத்தை சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகள் வருவதால் குடும்பத்தாரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை! 

 

“மணமகளுக்கு தேவையானவற்றை அவர்களே எடுத்துக் கொள்கிறார்களாம். எனக்கும் அவர்கள் தான் எடுக்கிறார்கள். உங்களுக்கான பரிசுகளையும் கொடுத்துள்ளார்கள்” என்று ஒரு சிறு பெட்டியை காண்பித்து “இதில் உங்க ரெண்டு பேருக்கும் மா” என்றவன் ஒரு பெரும் பெட்டியை காண்பித்து யாழினி “இதில் உள்ளது எல்லாமே உனக்கு தான்” என்றதும் மல்லிகா தான் கண்களில் ஆச்சரியத்தோடு பார்த்தார்.

 

“பரவால்ல பொண்ணு குடும்பம் மரியாதை தெரிஞ்சது தான் இருக்கு” என்று அவர் சொல்ல..

 

“மரியாதை மட்டுமல்ல வியாபார தந்திரமும் ஜாஸ்திதான் போல” என்ற சொக்கலிங்கம் அமைதியாக மகனை பார்த்தார்.

 

“அது மட்டும் இல்ல.. இன்னொரு விஷயம் எங்க எங்கேஜ்மென்ட் போது தான் நான் யாழினிவோட போட்டோவை ஆராவோட அண்ணன் கிட்ட காமிச்சேன்”

 

“அது யாருடா ஆரா?” என்று மல்லித் கேட்டதும்..

 

“அதான் உன் மருமக பேரு மா.. ஆராத்யா” என்று சிரித்து போட்டோவை காட்டினான்.

 

“அவ பேரு ஆர்த்தி இல்ல?” என்று மகளை பார்க்க “சும்மா இரு மா நீ சொல்லு அண்ணா” என்றாள்.

 

“அவளுடைய அண்ணன் அதிரதன் பெரிய பிசினஸ்மேன். இந்தியா மட்டுமல்ல நிறைய இடத்துல அவருக்கு கம்பெனிகள் இருக்கு. ஆராவுக்கு வந்திருக்கிறது 40% தான் மீதி 60% ஷேர் அவர்கிட்ட தான் இருக்கு. அவருக்கு நம்ம யாழினிய ரொம்ப பிடிச்சு போச்சுமா.. கல்யாணத்தின் போது எங்கேஜ்மென்ட் செஞ்சிக்கலாமான்னு கேட்கிறார்” என்று அனைத்தையும் போட்டு உடைத்து விட மல்லிகா அதிர்ச்சியோடு கணவனை பார்க்க “இதை நான் எதிர்பார்த்தேன்!” என்பது போலவே இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

 

“நீ என்ன சொல்ற யாழினி.. அவரை கட்டி கிட்டா நீ சின்ன ஸ்கூல் டீச்சர் இல்ல ஸ்கூலுக்கு வைத்து நடத்துற அளவுக்கு நீ பெரிய ஆள் ஆகலாம். அது மட்டும் அல்ல உலகம் முழுக்க பார்க்கலாம்..” என்று அந்த வசதி வாய்ப்புகளை பற்றி பேசி தங்கையின் மனதை கரைக்க முயன்றான்.

 

அதாவது வார்த்தைகள் அனைத்தும் அதிரதனது வாய் மட்டும் சுப்பிரமணியன் உடையது..

 

“அண்ணா.. உன்னோட லைஃப் உன் விருப்பம் அதில் குறுக்கே வர எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.. ஆனால் என் லைஃபை முடிவெடுக்கும் அதிகாரம் உனக்கு கிடையாது! உன்னோட மச்சான் அதான் அந்த அதிரதனுக்கும் கிடையாது. என் வாழ்க்கையை எடுக்கும் உரிமை முதலில் என் அப்பா அம்மாவுக்கு தான். அதனால இந்த சம்பந்தத்தில் எனக்கு விருப்பமில்லை.. என்னப்பா?” என்றதும் அவரும் தலையாட்ட அம்மாவும் அதை ஆமோதித்தார். 

 

“மகன வேணும்னா விட்டுக் கொடுத்து இருக்கலாம் ஆனால் அவ்வளவு பெரிய இடத்தில் மகளைக் கட்டிக் கொடுத்து அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் எப்படி இருக்க முடியும்?” என்று பரிதவிப்பும் பயமும் அவர்களை ஆட்கொள்ள வேண்டாம் என்றார் மல்லிகாவும்.

 

இதை சற்றும் எதிர்பார்க்காத சுப்பிரமணி மீண்டும் தனது வாய்ஜாலத்தை ஆரம்பிக்க “போதும் ணா..! உன்னை இங்க பேச அனுப்பிய அந்த பெரிய மனுஷன் கிட்ட போய் சொல்லு.. எனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்க துளி அளவு விருப்பம் இல்லைனு” என்று அழுத்திக் கூறிவிட்டு இவர் சென்று விட்டாள

 

இப்படித்தான் இந்த விஷயம் வரும் என்று அதிரதனுக்கு தெரியும் அல்லவா? அப்படியே விட்டால் அவன் அதிரதன் இல்லையே.. அதனால் “உன் தங்கையோடு என் திருமணம் நடந்தால் தான் அல்லது அட்லீஸ்ட் நிச்சயதார்த்தமாவது நடந்தால் தான் என் தங்கையுடன் உன் திருமணம் நடக்கும்! உன் வாழ்வும் சிறக்கும்!” என்றதும் இப்பொழுது தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள எதுவும் செய்ய துணிந்தான் சுப்பிரமணி, தங்கை என்றும் பாராது அவளை தூக்கி கொடுக்க தயாரானான்!!

 

சுப்ரமணி சொன்ன விஷயத்தை அரவிந்திடம் யாழினி பகிர்ந்து கொள்ள.. அவனோ அமைதியாக அந்த நிலவை வெறித்தான்.

 

“அங்க என்ன தெரியுது ஆஃபிஸர்?” அவள் கிண்டலாய்‌ கேட்க… அவளை திரும்பி பார்த்துவிட்டு பின்பு நிலவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“என்னடா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ ஒண்ணுமே சொல்லாம இருக்க..” 

 

“இன்னும் உன் மனசுல அவன் இருக்கானா? அப்படி இருந்தா எனக்காக பார்க்க வேண்டாம் மித்து.. இவ்வளவு தூரம் அவன் இறங்குறானானா.. உன்மேல அதீத காதல் போல.. தாராளமா அவனை கல்யாணம் பண்ணிக்கோ மித்து” என்றதும் தான் தாமதம்.

 

யாழினியோ “போடா…” டேஷ் டேஷ் என்று அவள் திட்ட இவனும் காதுகளை பொத்திக்கொண்டு அவளை பாவமாக பார்த்தான்.

 

“இல்லடி.. நெஜமாதான் சொல்றேன்! சில பேர் வந்து கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி இருக்கலாம்.. தான் மட்டும் தான்.. ஆணவமா கர்வமாக இருக்கலாம். ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட அன்புனால கண்டிப்பா மாறலாம் யார் கண்டா மித்து?” என்று அரவிந்த் இயல்பாக கூற..

 

“எனக்கு ஏதாவது

வாயில நல்லா வந்துடும் பார்த்துக்கோ.. இவன கல்யாணம் பண்ணி இவன மாத்திரத்துக்கு தான் என்ன பெத்து போட்டாங்களா?” என்று அவள் சீறவும் வாயடைத்து நின்றான் அரவிந்த்..!!


   
Azhagi reacted
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top