அசுரன் 16
“ஐ அம் ஆருஷி’ஸ் பாய்பிரண்ட்” என்று ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்தவனை அதிர்ச்சியாக வர்ஷா பார்த்துக் கொண்டே இருக்க..
“இது தானே ஆரு ரூம்?” என்று கேள்வி கேட்டவன் அவள் பதில் கூறும் முன்னே கதவை லேசாக திறந்து பார்த்து,
“யா.. கரெக்டா தான் திறந்து இருக்கேன், ஓகே மிஸ் தேங்க்யூ..!’ என்றபடி அவன் உள்ளே நுழைந்து கதவை சாய்த்துக்கொள்ள வர்ஷாவோ பதறி அவன் கதவை சாற்றும் முன் கதவின் பிடியை பிடித்து,
“எக்ஸ்க்யூஸ் மீ.. யார் நீங்க? நீங்க பாட்டுக்கு உள்ள வந்தீங்க.. இப்போ அவ ரூம்குள்ள போய் கதழ சாத்துறீங்க? முதல்ல வெளியில வாங்க.. வெளில வாங்க சார்..! ரெண்டு பொண்ணு தனியா இருக்குற இடத்துல இப்படி நீங்க பாட்டுக்கு உள்ள வர்றீங்க.. ஐ கால் போலீஸ்..!” என்று அவளும் விடாமல் தம் கட்டி அவனை கதவை சாத்த விடாதவாறு அழுத்தி பிடித்து இருந்தாள் வர்ஷா.
அவனோ தலையை சாய்த்து அவளை பார்த்தவன் “ஷி இஸ் ஸ்லீப்பிங்..!” என்று உள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஆருஷியை காண்பிக்க..
அவளோ இப்பொழுது சத்தத்தை குறைத்து “முதல்ல நீங்க வெளியில வாங்க சார்” என்று அழுத்தமாக கூற…
வெளியில் வந்தவன், கதவை சாற்றி அதிலே சாய்ந்து கைகளை மார்பு குறுக்காக கட்டிக்கொண்டு அவரைப் பார்த்து நின்றான்.
“இங்க பாருங்க சார்.. நீங்க யாரு என்னன்னு எனக்கு தெரியாது. நீங்க ஆருவோட பாய் ஃபிரண்ட்னு நான் எப்படி நம்புறது? நாங்க ரெண்டு பொண்ணுங்க மட்டும் இங்க தனியா இருக்கோம். அதுவும் அவ இப்ப கேரிங்கா இருக்கா.. அதனால உங்களை எல்லாம் அப்படி உள்ள விட முடியாது. தயவு செய்து நீங்க போயிட்டு அப்புறம் வாங்க..” என்றாள் பொறுமையாகவே...
“அவ கேரிங்க்கு காரணமே நான் தான் மிஸ்..!” என்று அவன் ஏதோ அதை பெருமிதமாக கூற, அவனை மேல் இருந்து கீழ் வரை பார்த்தாள் வர்ஷா.
ஆருஷி அவளிடம் அதிகமாக எதையும் பகிரவில்லை. இருவரும் பள்ளி தோழிகள். பள்ளி படிப்பு முடிந்தவுடன் மீடியாவில் தனது படிப்பை தொடர்ந்தாள் வர்ஷா.
படிப்பு முடித்தவுடன் மும்பைக்கு மாறி அங்கே ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.
அவ்வப்போது இருவரும் whatsapp மூலம் பேசிக் கொள்வார்கள் தான். அது அவள் வெளிநாடு சென்ற பின்பும் அவ்வப்போது தொடர்ந்தது.
தான் கர்ப்பம் என்று தெரிந்து அது ராவண்னுக்கும் தெரிந்தவுடன் கண்டிப்பாக இங்கே இருந்தால் தன்னை வைத்து தன் குடும்பத்தை பழிவாங்க அவன் என்ன வேணுமானாலும் செய்வான் என்று புரிந்த ஆருஷி, முதலில் தன்னை இங்கிருந்து மறைத்துக் கொள்ள விரும்பி வர்ஷாவை தான் தொடர்பு கொண்டு பேசினாள்.
ஆனால் அவளிடம் முழு விவரத்தையும் கூறவில்லை. “காதலித்தோம் சரிவரல.. பிரிந்து விட்டோம். இப்போ நான் கர்ப்பம். இதை வீட்டுக்கு சொல்ல முடியாது. இந்த குழந்தை எனக்கு ரொம்ப முக்கியம். குழந்தை பிறக்கும் வரைக்கும் எனக்கு கொஞ்சம் உன் ஹெல்ப் வேண்டும்” என்ற கேட்டாள்.
முதலில் நண்பி மனதால் மிகவும் சோர்ந்து இருக்கிறாள் என்பதை உணர்ந்து அவளை பாதுகாப்போடு தங்க வைத்தவள், “எப்படி நீ வீட்டுக்கு தெரியாமல் இப்படி செய்யலாம்?” என்று அவளை ஒரு பிரைட் எடுத்து தான் விட்டாள்.
இப்படி ஒருத்தனை நம்பி ஏமாந்து விட்டாளே என்று தோழியின் மீது வருத்தம் கோபம் இருந்தாலும் தன்னை நம்பி வந்தவளுக்கு அத்தனை உதவியும் செய்தாள் வர்ஷா.
இப்பொழுது அவளது பாய் ப்ரெண்ட் என்று வந்தவனை கண்டு அவளுக்கு பயம் பீடித்தது.
ஏனென்றால் அவள் வெளிநாட்டில் இருக்கும் போது அல்லவா ஒருவனை காதலித்தேன் என்றாள்? அப்படி என்றால் அது கண்டிப்பாக வெளிநாட்டுகாரனாகத்தான் இருக்க வேண்டும். இப்போது வந்திருப்பவனோ இந்தியனாக தெரிகிறானே?
எங்கனம் இது சாத்தியம்? கண்டிப்பாக இல்லை..! இவன் பொய் சொல்லி வந்திருக்கிறான். ப்ராடு பய.. யார் இவன் என்று தெரியவில்லையே..! பிராடாக கூட இருக்கலாம். நாங்கள் இரு பெண்கள் தனியாக இருப்பதை உணர்ந்து கொண்டு எங்களிடம் அத்துமீற கூட முயற்சிக்கலாம். முதலில் இவனை இங்கிருந்து கிளப்ப வேண்டும்’ என்று எண்ணியவள் அவனை முறைத்து பார்த்து,
“இப்ப நீங்க வெளியில போகலைனா நான் செக்யூரிட்டியை கூப்பிடுவேன்” என்று மிரட்டினாள்.
அவனும் ஆழ்ந்த ஒரு மூச்சை எடுத்தவன் “சீ வர்ஷா.. நானும் ஆருவும் அப்ராட்ல இருந்தபோது லிவிங்ல இருந்தோம். எங்களுக்குள்ள ஒரு சின்ன மனஸ்தாபம். அவ இங்க வந்துட்டா.. அவளை தேடித்தான் நான் இந்தியா வந்தேன். அதுவும் அவளது ஹாஸ்பிடல் டாக்டரா ஒர்க் பண்ணி அவளை சமாதானப்படுத்த நினைத்தேன். பட்.. ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மை ஃபிலீங்ஸ்..” என்று அவன்உம் பொறுமையாய் அவனது நிலையை எடுத்துக்கூற,
“அதெல்லாம் முடியாது சார்..! உங்கள எல்லாம் என்னால நம்பவே முடியாது. நீங்க யாரா வேணா இருங்க.. ஆனா இப்போதைக்கு அவ தூங்கிட்டு இருக்கா, நீங்க யாருன்னு தெரியாம அவள் இருக்கும் ரூம்ல உங்களை நான் அலோ பண்ண முடியாது” என்று அவனை தள்ளிவிட்டு இப்பொழுது தோழிக்கு அரணாய் அறைவாசலில் அவள் நின்றுக்கொள்ள..
அவளின் இந்த எச்சரிக்கை உணர்வில் சிரித்துக் கொண்டான் ராவண்.
‘ஒரு தள்ளு தள்ளுனா காத்திலேயே பறந்து போய் பொத்துன்னு விழுந்துருவா.. அப்படி உடம்பு வச்சுகிட்டு இவ பாதுகாப்பா இருக்களாமாம்’ என்று நினைத்து சிரித்தாலும் தோழியின் மீது வர்ஷா கொண்ட அந்த அதீத அன்பிற்கு கட்டுப்பட்டவனாய்,
“இங்க பாருங்க வர்ஷா.. என் வாழ்க்கையில இவ்வளவு எல்லாம் யாருக்கும் நான் விளக்கம் கொடுத்ததே இல்லை” என்றவன் “ஒரு நிமிஷம்” என்று அவனுடைய ஃபோனை எடுத்து அதில் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை காட்டினான்.
அவளோ நம்பாத மாதிரி “இப்போ இதெல்லாம் ரொம்ப சிம்பிள் சார். மெட்டா சேட்ஜிபிடி கிட்ட கொடுத்தா அதுவே இந்த மாதிரி நிறைய விதவிதமா மார்பிங் பண்ணி தரும், அதுவே கிரியேட் பண்ணி கூட தரும், நானே மீடியால தான் இருக்கேன் எனக்கே போட்டு காட்றீங்களா?” என்று அவள் இகழ்ச்சியாக சிரித்தாள்.
“ஓ.. ஷிட்..!” என்று தலையை தேய்த்துக் கொண்டவன் எப்படி தன்னை நிரூபிப்பது என்று அவளை பார்த்தவன்,
“எங்க ரெண்டு பேருக்குள்ள இன்டிமேட் போட்டோஸ் இருக்கு அத வேணா காட்டவா?” என்றதும் சீ என்று முகத்தை மூடிக்கொண்டவள்
‘ஏன் இந்த ஆண்களோட வக்கரத்தனம் எவ்வளவு எல்லை எட்டி இருக்கு..’ என்று நினைத்தவள்,
“இதுவே உங்க அக்கா தங்கச்சி என்றால் இப்படி தான் பேசுவீங்களா?” என்றதும்,
“என் அக்கா தங்கச்சியா இருந்தா என்னை நம்பி இருப்பாங்க இவ்வளவு விளக்கம் நான் கொடுக்கணும்னு அவசியம் இல்லை” என்றான்.
அவளோ இன்னும் வழி விடாமல் முறைத்தப்படி தான் நின்று இருந்தாள்.
ராவண்னுக்கு தான் இவளை எப்படி சமாளிப்பது என்று புரியாமல்,
“வேற என்ன சொல்லித்தான் உங்ககிட்ட நான் அவளோட பாய் பிரண்டு நிரூபிக்கிறது சொல்லுங்க மிஸ்?” என்று அவன் கேட்க..
“நீங்க ஏன் நிரூபிக்கணும்? அவளே எழுந்து வந்து நீங்க அவ பாய் பிரண்டுன்னு சொன்னா பிரச்சனை சால்வுட்..!” என்று அவள் இப்பொழுது கைக்கட்டி அவனை ஒற்றை புருவத்தை உயர்த்திப் பார்க்க..
“சோ அவ வாயால நான் அவ பாய் பிரண்டு சொன்னா நீங்க ஒத்துக்குவீங்க அவ்வளவுதானே?”
“அப் கோர்ஸ்..!” என்று அவள் தோளை குலுக்கினாள்.
“ஓகே.. கம் வித் மீ” என்று அவளை முறைத்துக் கொண்டு ஆருஷி அறைக்குள் நுழைய, அவளோ சிறுபிள்ளை போல அயர்ந்து தன் பெரிய வயிற்றை ஒரு கையால் பாதுகாப்பாக பிடித்துக் கொண்டே உறங்கிக் கொண்டிருந்தாள்.
“என்னமோ நிரூபிக்க போறேன்னு சொன்னீங்க?”
“கொஞ்சம் ஷையா இருக்கு.. ஃபாரின்ல இருக்கும்போதெல்லாம் தெரியல.. இப்ப இந்தியாவில் வந்து இந்தியனாவே பழகிட்டேனா.. அதான் இப்படி பக்கத்துல ஒருத்தர் வச்சிக்கிட்டு கிஸ் பண்ண ஷையா இருக்கு” என்றதும் அவளை சீ என்று சொல்லி அவனை தடுக்கும் முன்..
“பாப்பா..” என்று மெதுவாக அவளது கன்னங்களைப் பற்றியவன் நெற்றியில் மெலிதாக முத்தமிட செல்ல..
“யோவ் மிஸ்டர்.. என்னய்யா பண்ற?” என்று சட்டென்று அவனைப் பிடித்து நிறுத்தினாள் வர்ஷா.
“நீதானே நிரூபிக்க சொன்ன அதுதான் நிரூபிக்க போறேன்? அவ்ளோ தூங்கிட்டு இருக்கா எழுப்பினாலும் பாதி தூக்கத்துல என்னை அடையாளம் கண்டு கொண்டு போடானு தான் சொல்லுவா.. ஆனா பாரு தூக்கத்துல இருக்கும்போது என்ன கரெக்டா கண்டு பிடிப்பா” என்றதும் அவள் முறைக்க..
“மிஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. நீங்க எதிர்பார்க்கிற அளவு எல்லாம் இன்டிமேட் சீன் எதுவும் நடக்காது..!” என்றவன், மெல்ல குனிந்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவள் அழகிய கனவில் லயித்திருப்பாள் போலலும், அதிலும் அவள் மாறாவோடு தான் கொஞ்சு குழாவிக் கொண்டுயிருந்து இருப்பாள் போலும்..
ராவண் பாப்பா என்று அழைத்த நெற்றியில் முத்தமிட்ட மறுகணம், அவன் ஸ்பரிசத்தை சுவாசத்தை வாசத்தை உண்ரந்தவளும் அவன் கையைப் பிடித்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு “மாறா..” என்று அழகாக முறுவலித்தாள்.
“இப்போ நம்புறீங்களா?” என்பது போல அவன் பார்க்க..
அதற்கு மேல் அங்கே நில்லாமல் வெளியே வந்துவிட்டாள் வர்ஷா.
“போகும்போது அந்த கதவை சாத்திட்டு போங்க” என்ற ராவண் குரலில் வேகமாக அவள் கதவை அடைத்து சாத்த..
அவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் கையைப் பிடித்தவாறு ஒருக்களித்து உறங்கும் தன்னவளை தான் ரசித்துக் கொண்டிருந்தான்.
அவளின் பின்புறமாக படுத்து அவளைக் கட்டியணைத்தான். அவளின் பின்கழுத்தில் கூந்தலை விலக்கி முத்தமிட ஆரம்பித்தான்.
தன் நாவால் வருடி கொடுத்தான்.
அவள் கழுத்தை செல்லமாக அங்கங்கே கடித்தான். அப்படியே அவளின் டீசர்ட்டினை மேலே தூக்கி அவளது வயிற்றில் தனது சுடான கைகளால் வருடினான்.
எத்தனை மாத ஏக்கம் தன் பிள்ளையை உணர வேண்டும் என்று..!
“ராட்சசி.. விடமாட்டேன் என்று விட்டாளே.. நல்லவேளை தூக்கத்தில் இருக்கிறா இல்லைன்னா என்னை விரட்டி அடித்து இருப்பா.. ராட்சசி என் செல்ல ராட்சசி..” என்று சிரித்துக்கொண்டே முகத்தை அவள் பின் கழுத்தில் புதைத்துக் கொண்டு மெல்ல விரல்களால் அவர்களின் மகவை தாங்கி இருக்கும் அவளது வயிற்றை ஆசையாக வருடினான்.
கண்கள் கலங்கியது அவனுக்கு.
“சாரி பேபி.. உன் அப்பா ரொம்ப நாள் காக்க வச்சுட்டேனா? என்ன பண்றது உங்க அப்பா ஒரு பிடிவாத காரன்..! உங்க அம்மா அதுக்கு மேல ஒரு பிடிவாதக்காரி..! நான் இறங்கி வந்தாலும் அவ இறங்கி வர மாட்டேங்குறா.. எல்லாம் நம்ம ஃபேமிலி ஜீன் போல..” என்று லேசாக சிரித்துக் கொண்டவன்,
“எப்படி இருக்கீங்க மை ஜூனியர்?” என்றதும் மெல்லிய அசைவு தெரிந்தது அதில் புலங்கிதம் அடைந்தவன்,
“ஹே.. ஹே.. மை ஜூனியர் என்னை உணருறிங்களா? இந்த அப்பாவை உணருறிங்களா? பேபி.. நிஜமா டா.. நான் பேசுறது கேக்குதா? உங்களுக்கு புரியுதா? பேபி.. பேபி..” என்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டே அவன் அவள் வயிற்றை வருட வருட அங்கே பிள்ளையும் தன் சிறு கொழுக்கு மொழுக்கு கை கால்களால் ஆங்காங்கே முட்ட அகமகிழ்ந்து போனான் அப்பாவாய் இராவண்.
அவன் வருட வருட தூக்கத்திலேயே அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்தவளோ கூடவே குழந்தையின் அசைவுகளையும் உணர்ந்து மாறாஆஆ என முணங்கினாள்.
அவளது டீசர்ட்டை நன்றாக மேலே உயர்த்தி கையால் வருடிக்கொண்டே முத்தத்தால் கொஞ்ச ஆரம்பித்தான் தன் மகவை..!
அவள் கண் விழிக்க முடியாத ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் அவனின் ஸ்பரிசம், அவளை ஏதோ செய்தது. அவனின் பழக்கப்பட்ட உணர்வும், குழந்தையின் முட்டும் புது உணர்வும் சேர்ந்து அவளை உணர்வு குவியலுக்குள் தள்ளியது.
அவளின் மனம் ஏனோ நிலையழிந்து தவிப்பதை உணர்ந்தாள். கூண்டுக்குள் அடைபட்ட சிறு குருவி போல அவள் மனசு முட்டி மோதியது.
சில நொடிகளில் அவள் மனதில் எழுந்த அந்த தவிப்பின் உள்ளாழத்தை உணர்ந்த போது அவளுக்குள்ளேயே ஒரு திடுக்கிடல் எழுந்தது. உடல் விதிர்த்து கை கால்கள் மெல்ல நடுங்கியதைப் போலிருந்தது.
ராவண்னால் எழுப்பப்பட்ட அந்த புது உணர்வுக்குவியல்கள் அவள் உடல் முழுவதும் பரவி வரவி அவளை ஒரு வழியாக்க, சட்டென்று கண்விழித்து எதிரே இருந்தவனை பார்த்தாள்.
அவளால் நம்ப முடியவில்லை அவன் தானா என்று இன்னும் விழி விரித்து பார்த்தாள்.
அவனிடமிருந்து பிரிந்து எழ முடியாமல் எழுந்து கட்டிலின் அந்தப் பக்கம் நின்றாள். தூக்கத்திலிருந்து இவ்வாறு சட்டென்று எழுந்ததும் அவளது கால்கள் நிலை கொள்ளாமல் ஆட..
கைகளை இறுக்கி கால்களை அழுத்தி பலமாக்கி நின்றாள். உதடுகளை வாய்க்குள் இழுத்து அழுத்திப் புதைத்து மீண்டும் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து மென்மைகள் விம்மியெழ சீற்றத்துடன் பெருமூச்சு விட்டாள்.
அந்த பெருமூச்சின் உளத் தவிப்பை அவளே உணர்ந்தாள். உணரப் பட்டதும் அவளின் தவிப்பு மெல்லத் தளர்வது போலிருந்தது. உடலின் இறுக்கத்தை தளர்த்தி தன் எதிரில் இருப்பவனை அர்த்தமின்றி ஒரு பார்வை பார்த்தாள்.
காற்றில் அவள் கூந்தல் அவள் முகத்தை, கண்களை மறைக்க அவள் தனது விரல்களால் அவற்றை ஒதுக்கி அவள் கண்களுக்கு விடுதலை செய்தாள்.
ஒரு நிமிடம் அவனை பார்த்து அவள் உறைந்து போனாள்.
அவளுக்கு பேச்சு ஏதும் வரவில்லை அவள் கண்களை அவன் கண்கள் காந்த சக்தியால் ஈர்த்துக்கொண்டிருந்த தருணம்.
அவனோ “ஹாய் டி பாப்பா..” என்று அவள் முகம் பார்த்துச் சிரித்தான். அந்த சிரிப்பு எப்போதும் போல கவர்ச்சியாய் தோன்றியது. அவளை வசியப்படுத்திய இன்னும் வசியப்படுத்தும் அழகிய சிரிப்பு..!
அவன் சிரிப்பில் வெளிப்படும் ஆண்மையின் திண்மையை உணர்ந்து அவள் மனம் மீண்டும் அவனிடம் சரணடைய துணிந்தது உண்மையே..!
இந்த வசீகரமான சிரிப்பும் அவனின் பண்பும் தானே அவளை அவன்பால் விழ வைத்ததே..!
அவனிடம் ‘கர்வம், ஆணவம், தலைக் கனம்’ என்ற ஒன்று இருப்பதாய் அவள் உணர்ந்ததே இல்லை.
எதை சொன்னாலும் எப்படி சொன்னாலும் சகஜமாய் ஏற்றுக்கொண்டு
எப்போதுமே சிரித்து பேசும் ஒரு ஆணை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது?
பிடித்ததே..!
அவனை அத்தனை பிடித்ததே..! இன்னும் பிடிக்குதே..!
மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்து நின்றாள். அவள் மனம் அவளை மீறிப் போய் அவனுடன் காதலாட தூண்டியது..!
அவனை மார்புறத் தழுவி முத்தமிட்டு கொஞ்ச சொல்லியது..!.
அவனின் கற்றை மீசையை நீவி உதட்டை முத்தமிட்டு உமிழ் நீர் உறிஞ்சி சுவைக்க ஆசை பெருகியது..!
அவன் முகம் பற்றி இழுத்து தன் மென்மைகளுக்குள் அழுத்தமாக புதைத்துக் கொள்ள கைகள் துடித்தது..!
அவன் மூச்சுக் காற்றில் சிவந்து மெல்ல தன் மூச்சு காற்றை அவனோடு கலந்து சுவாசிக்க உந்தியது..!
சட்டென அவள் பெண்மை கிளர்ந்து அவனை முத்தமிட வேண்டும் என்கிற ஆசையை அவள் உள்ளத்தில் எழுப்பியது. உளக் கற்பனையில் உடனே அவனை நெருங்க சென்றவள் அடுத்த கணம் தன்னை நிதானித்து தலையை உலுக்கி தன் காதல் கனவு உலகத்தில் இருந்து நிதர்சன உலகிற்கு வந்தாள்.
“என்னடி? என்னடி பாப்பா? என்ன பாத்துகிட்டே இருக்க?” என்று கேட்டவன் மெல்ல எழுந்து அவளை நெருங்கி நின்றான்.
அவன் எழுந்து வரும்போது அவளுக்கு படபடப்பு அதிகமாகியது. ‘நேற்று நினைத்தது சரிதான் போல தேடியே வந்து விட்டானே..! அதுவும் வீட்டுக்கே.. அதிலும் என் அறைக்கே.!’ என்று அவள் படபடப்பாக உணர அவளையும் மீறி கைகள் லேசாக நடுங்கியது.
“என்ன டி பாப்பா குளிருதா?” என்றவன், அவளது தலையை தன் நெஞ்சோடு சாய்த்து வைத்தான். “ஹியர் மை ஹார்ட் பீட், இட் வுட் மேக் யூ வாரம்” என்றவன், அவள் குழந்தையைப்போல் தன் நெஞ்சில் சாய்ந்து கொண்டான். தனது சூடான கையை அவளின் இடுப்பில் வைத்து மெல்ல வயிறு முட்டாதவாறு அணைத்துக் கொண்டான்.
அவளுக்கு அக்கணம் எதுவுமே ஞாபகம் இல்லை. அவனின் பழிவெறி.. அவனின் நடத்தை.. அவன் மேல் இவள் கொண்ட கோபம்.. அவனைப் பிரிந்து வந்தது.. எதுவும் ஞாபகத்தில் இல்லை..!
இந்த உலகத்தில் ஒரு புள்ளியாய் காதல் இருக்க.. அந்த காதல் உலகில் அவனும் அவளும் மட்டும் என்ற நிலையில் தலை மறந்து “மாறாஆஆ” என மெதுவாக முனங்கினாள். அப்படியே அவன் தனது கையை அவளின் வயிற்றில் வருட,
அவளோ இந்த கணம்.. இந்த கணம்.. அப்படியே உறைந்து விடாதா? உறைந்து விடக் கூடாதா? என்று நினைத்தவாறு, அவள் ஹாஹா… என தனது சூடான மூச்சுக்காற்றை அவன் நெஞ்சில் பட செய்தாள்.
இந்த அழகிய தருணம் எல்லாம் நீடித்தது ஐந்தே ஐந்து நிமிடங்கள் தான்..!!
அடுத்த நிமிடம் அவனை தள்ளி “யூ சீட்டர்.. லையர்..!” என்று வேகமாக தள்ளியவள் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல முயல அவளை அக்கதவிலேயே சிறை வைத்தவன்,
“நான் சீட்டரா? என்னமோ நான் உன்னை ரேப் பண்ணி இந்த புள்ள வந்த மாதிரி பேசுற? நீயும் என்கூட விரும்பி தானே..” அடுத்து அவன் பேசும் முன் அவ
ள் அவனது வாயை தன் கைகளால் மூட..
“அப்படி.. இல்லடி பாப்பா..! இப்படி..!” என்று வன்மையாக தனது இதழ்களை அவள் இதழ்களுக்குள் புதைத்தான் இராவண் திரேந்திரன் மாறவேல்.
தொடரும்..