அசுரன் 15
அந்த மகப்பேறு மருத்துவர் ஆரூஷிக்கு அருகில் அமர்ந்திருக்கும் இருவரையும் மாறி மாறி பார்த்தார் அதிர்ச்சி விலகாமல்..!
பின்னே.. ஒருவன் குழந்தைக்கு உரிமைக் கொண்டாடி நான் தான் அப்பா என்கிறான்…
மற்றொருவனோ அந்த பெண்ணுக்கே உரிமை கொண்டாடி நான் தான் அவளை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்கிறான்..!
இன்னும் இம்மாதிரி அதி நாகரீக பழக்க வழக்கங்கள் பரவாத மும்பையின் அந்த ஒதுக்குப்புற மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த மருத்துவரோ விழி பிதுங்கித் தான் அமர்ந்து இருந்தார்.
என்ன பேச? என்ன சொல்ல? என்று வார்த்தைகள் முதலில் அவருக்கு தொண்டையை விட்டு வரவில்லை தான். ஆனாலும் தொண்டையை கணைத்துக் கொண்டு “யார்கிட்ட இந்த பொண்ணு பத்தின டீடைல்ஸ் பேசணும்?” என்று இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே பெண் மருத்துவர் ஆங்கிலத்தில் கேட்க..
உடனே அருகில் இருந்த ராவண்னை முறைத்து விட்டு “என்கிட்ட தான் பேசணும்” என்றான் சுக்ரேஷ்.
உடனே ராவண்னும் “குழந்தை என்னோட உரிமை டாக்டர்..! குழந்தை பத்தி பேசணும்னா நீங்க கண்டிப்பா என்கிட்ட தான் பேசணும். குழந்தையோட வளர்ச்சி பத்தி, அவங்க அம்மா என்னென்ன சாப்பிடணும், எதை தவிர்க்கணும் என்னென்ன உடற்பயிற்சி செய்யணும்.. இப்படி எது இருந்தாலும் நீங்க என்னிடம் தான் பேச முடியும். வேணும்னா இந்த பொண்ண பத்தி பேசணும்னா அந்த பொண்ணோட ஃபியான்ஸ் கிட்ட பேசிக்கலாம் டாக்டர்” என்றான் ஓரக்கண்ணால் ஆருஷியை பார்த்தவாறு..!
அவளோ இன்னும் முதல் கட்ட அதிர்ச்சியில் இருந்தே வெளிவராமல் இருந்தாள் இருவரும் இருபக்கம் நின்று கொண்டுயிருப்பதை.. ஆனால் அவர்களோ மாற்றி மாற்றி குழந்தையையும் அவளையும் பங்கு போட அவளால் பேச முடியாத ஸ்தம்பித்த நிலைக்கு சென்று விட்டாள்..!
‘மாப்ள அவர்தான்..! ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது..!’ என்பது போல..
“இவ அவனோட ஃபியான்சி தான். ஆனா அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை என்னுடையது..!” என்று சொல்லும் ராவண் செய்த அதிரடியை அவள் துளியும் எதிர்பார்க்கவில்லை.
காலையில் ஆருஷியை கீழே விழாமல் காப்பாற்றும் போதே அவள் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருக்க தான் செய்தது..!
இத்தனை நாட்களாக இல்லை மாதங்களாக கண்ணில் படாதவன் இன்று அதிசயமாக கண்ணில் பட்டது ஏன்?
அவனும் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதால் இம்மருத்துவமனைக்கு அவன் வந்திருக்கலாம் என்று அவள் மனது சமாதானம் கூறினாலும் அறிவு ஏற்கவில்லை..!
ஏனென்றால் இவள் வந்திருப்பது மும்பையின் பிரபல பகுதிகளை எல்லாம் தவிர்த்து மூலை முடுக்கில் இருக்கும் ஒரு மருத்துவமனை..!
அதுவும் அந்த மருத்துவர் கைராசி ஆனவர் என்று பெயர் எடுத்ததால் அவளின் நண்பி வர்ஷா இங்கே அழைத்து வந்திருந்தாள்.
இவளும் அம்மருத்துவரிடம் பேசி அவளுக்கும் அவரின் அணுகுமுறை பிடித்து போகவே தான் இங்கு தனது வைத்தியத்தை தொடர்கிறாள்.
அப்படி இருக்க..??
இவனும் மகப்பேறு மருத்துவன் என்ற ஒரே காரணத்தினால் இந்த மருத்துவமனைக்கு வந்திருப்பதாக அவள் மனம் எண்ணிக் கொண்டதை அறிவு நிதர்சனமாக மறுத்தது..!
அவன் வெளிநாட்டில் வேலை பார்த்தவன், அப்படியே மும்பைக்கு டாக்டராக ஏதோ காரணத்திற்காக வந்திருந்தாலும் இம்மாதிரியான மருத்துவமனைக்கு கண்டிப்பாக வந்திருக்க மாட்டான்..!
இவன் கண்டிப்பாக உன்னை தேடியே தான் வந்திருக்கிறான் என்று அடித்துக் கூறியது அறிவு..!
அவனைப் பார்த்த கணத்திலிருந்து ஒருமுறை பிளேஷ்பேக்குக்கு ஓடி சென்று வந்து விட்ட மனமோ, இப்படி அவனால் உறவுகளை தவிர்த்து அனாதையாய் தனித்து வாழ்கிறேனே என்று குற்ற உணர்வில் தனிமையில் குமைந்து கொண்டிருக்க..
அவளுக்கே அவளுக்காக தான் அவன் தேடி வந்திருக்கிறான் என்ற அறிவின் உண்மையின் கனம் தாங்காமல் சோர்ந்து போயிருந்தாள் ஆருஷி ஏற்கனவே..!!
இந்நிலையில்.. இப்போது அதை உண்மை என்று நிரூபிப்பது போலவே.. “குழந்தை என்னோடது..!” என்று உரிமையுடன் தன் தோள் மீது அழுத்தமாக கை போட்டபடி நின்றிருக்கும் அவனை சற்று பயத்தோடு பார்த்தாள் ஆருஷி.
‘இத்தனை மாதங்களாக இல்லாமல் திடீர்னு இவன் எதற்காக குழந்தை என்னோடையது என்று வந்து நிற்கின்றான்? ஒரு வேளை குழந்தையை என்னிடமிருந்து பிரித்து விடுவானோ?’ என்று மனது படப்படக்க, கண்களில் பயத்தை தேக்கி அவனைப் பார்த்தாள் ஆருஷி.
அவனோ அவள் கண்ணில் பயத்தை கண்டவன் கருத்தை புரிந்து மெல்ல அவள் காதருகே குனிந்து அவனின் கற்றை மீசையின் முடிகள் ஊசிகளால் அவள் கன்னத்தை பதம் பார்க்கும் நெருக்கத்தில் நின்றவன்,
“கவலைப்படாதே பாப்பா..! குழந்தையை உன்னிடம் இருந்து தூக்கிட்டு எல்லாம் போயிட மாட்டேன். ஆனா குழந்தையோட அப்பா நான்..! எதற்காகவும் யாருக்காகவும் அந்த உரிமையை விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்..! குழந்தைக்கு ஒரு தேவை ஏற்படும் போது அங்கே என்னோட ப்ரெசென்ட் கண்டிப்பாக இருக்கும்.. அதேபோல பர்த் சர்ட்டிபிகேட்டுல என்னுடைய இனிஷியல் தான் இருக்கணும்..! இருக்கும்..! அதை நீ அவாய்ட் பண்ண முடியாது. நீ என்ன எந்த கொம்பனாலும் என்னை தடுக்க முடியாது..!” என்றவன் தமிழில் கிசுகிசுத்தாலும் அது அருகே இருந்த சுக்ரேஷுக்கு நன்றாக காதில் விழுந்தது.
‘இவனை..!! பெத்து குடுக்குறவ வேணாமாம்..! ஆனா புள்ள மட்டும் வேணுமாம்..! இவனெல்லாம்.. அவனை சொல்லி என்ன பிரயோஜனம்? அவன் பேசுவதற்கெல்லாம் அமைதியாக இருக்கும் இவளை சொல்லணும்..!’ என்று ஆருஷியை தான் கடிந்து கொண்டான் சுக்ரேஷ்.
இப்பொழுது இன்னும் குழம்பிப் போனார் அந்த மருத்துவர். ஏனென்றால் இது குழந்தையின் ஆரோக்கியம் அன்னையின் ஆரோக்கியத்தை பொறுத்ததே அல்லவா?
குழந்தை பற்றி கூற வேண்டும் என்றால்.. அது ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்றால் இவளது ஆரோக்கியத்தை பேண வேண்டும்? இப்போது இவளின் ஆரோக்கியம் எதனை சார்ந்தது? இதை இவர் இருவரில் யாரிடம் செல்வது என்று அவர் விழித்திருக்க..
“ப்ளீஸ்..! தயவு செய்து இங்கு பிரச்சனை பண்ணுங்க.. எந்த சீனும் பண்ணாம போயிடுங்க. இவ்வளவு நாள் எப்படி இருந்தீர்களோ அப்படி இருங்க..!” என்றவள் வார்த்தைகளில் இருந்த தண்மை அவள் கண்களில் இல்லை..!
ஆனால் அவனோ ஒரு கையால் அவளது தோளை அணைத்தப்படி அப்படியே நின்றிருந்தவன் இப்பொழுது அந்த மருத்துவரை பார்த்து,
“நான் டாக்டர் ராவண் திரேந்திரன் மாறவேல் கைனகாலஜிஸ்ட்..!” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.
ஓ என்றவரின் கண்களில் இப்பொழுது கொஞ்சம் மதிப்பு தெரிந்தது அவன் பால்..
“போச்சு.. போச்சு.. அவன் ஸ்பின் பால் போட்டு அந்த விக்கெட் அவுட் ஆகிட்டான்” என்று ஆருஷியின் அருகே குசுகுசுத்தான் சுக்ரேஷ்…
“சும்மா இரு மாமா..!” என்று அவள் கடுகடுக்க….
“நீ படிக்க போன இடத்துல சும்மா இருந்திருந்தா.. நான் ஏன் நீ போ இப்படி அவஸ்தைப்பட்டு உட்கார்ந்து இருக்க போறேன்..!” என்று அவன் புலம்ப..
“மாமா..!” அவள் பல்லை கடித்துக் கொண்டு முறைக்க..
“என்ன முறைச்சு என்ன பிரயோஜனம்? அங்க பாரு அந்த டாக்டர் கிட்ட அவன் என்னமோ மெடிக்கல் லாங்குவேஜ்லயே பேசிட்டு இருக்கான்.. இரண்டு பேரும் இங்கிலிஷ்ல பேசுறாங்க தான் எனக்கு புரியுது. பாதி வார்த்தைக்கு மேல மெடிக்கல் டேம்ஸ். எனக்கு ஒன்னுமே புரியல.. அவன் வேணும்னே பேசுறான்னு என்னான்னு கேளு” என்று ஆருஷியின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பினான் சுக்ரேஷ்.
அதற்குள் இருவரும் நிறைய பேசி வைத்திருக்க கடைசியாக ராவண் சொன்ன “நோ ப்ராப்ளம் டாக்டர்.. ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹர்” என்றது தான் கேட்டது இருவருக்கும்.
“என்ன?? இவன் என்னை டேக் அப் பண்ண போறானா? என்னடா சொல்லிட்டு இருக்கான் இவன் அவர்கிட்ட?” என்று அருகில் இருந்த சுக்ரேஷிடம் படபடத்தாள் ஆருஷி.
“ம்க்கும்.. அப்போத்துலே இருந்து நான் அதை தான் சொல்லிட்டு இருக்கேன்.. என்கிட்ட படபடத்து என்ன பிரயோஜனம்? அந்த டாக்டர் கிட்ட பேசு..” என்றதும் அவள் என்ன பேசுவது என்று புரியாமல் தடுமாற..
“இவளை நம்பி பிரயோஜனம் இல்லை..!” என்ற தலையை இடவலமாக ஆட்டிக் கொண்டவன்
“டாக்டர் எதுவாக இருந்தாலும் நீங்க எங்க கிட்ட சொல்லுங்க..!” என்று இவனும் ஆங்கிலத்திலேயே அவரிடம் கதைக்க..
அவரோ திகைத்து “நான் ஏற்கனவே எல்லாத்தையும் டாக்டர் ராவண்கிட்ட சொல்லி இருக்கேன் உங்களுக்கு ஏதாவது புரியலன்னு அவர்கிட்ட கேட்டுக்கோங்க..! அது மட்டும் இல்லாம இந்த மாதிரி டயத்துல பெண்களுக்கு ஹார்மோன்ஸ் சேஞ்சஸ் வரும்.. மூடு ஸ்விங் வரும்.. ஒரு சமயம் ஹஸ்பண்ட் மேல கோவம் வரும்.. இன்னொரு சமயம் அதிக காதல் வரும்.. அதனால பெட்டர் அவர் கூட அவங்க இருக்கிறது இட்ஸ் மை சஜஷன்..! உங்களோட பர்சனல் லைஃப் குள்ள நான் தலையிடவில்லை. ஆனா குழந்தையோட வளர்ச்சிக்கு பெத்தவங்க ரெண்டு பேருமே சேர்ந்து இருக்கிறது தான் நல்லது” என்றவர்,
“இந்த மாத்திரை எல்லாம் கண்டினியூ பண்ணுங்க..!” என்று பிரிஸ்கிரிப்ஸனை அவன் புறம் நீட்ட அதை சட்டென்று மருத்துவரிடம் இருந்து பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டாள் ஆருஷி.
அவனும் ஒரு தோள் குலுக்களுடன் “தேங்க்யூ டாக்டர்..!” என்று விடை பெற்று முன்னே செல்ல,
ஆனால் சுக்ரேஷ் விடாமல் மருத்துவரிடம் அவனது கேள்விகளுக்கு எல்லாம் பதில் வாங்கி கொண்டுதான் விடேன் என்பது போல் அமர்ந்து இருக்க..
அவரோ ‘இப்பதான்யா எல்லாத்தையும் அந்த ஆளு கிட்ட சொன்னேன் அதையே ரிப்பீட் மூடுல இவன் கிட்டயும் சொல்லனுமா? என்னமா இது?’ என்றவாறு ஆருஷியை தான் பார்த்தார் அவர்.
அவரின் இந்த பார்வை ஏனோ ஒருவித அசௌகிரியத்தை ஏற்படுத்தியது ஆருஷிக்கு.
எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும் இப்படி இரு ஆண்கள் அமர்ந்து அவளின் உரிமையை இருவரும் பங்கு போட நினைக்கும் போது?
அந்த இரு ஆண்களும் கணவனும் தந்தையுமாக இருந்தால் பரவாயில்லை..!
இல்லை சகோதரனும் கணவனுமாக ஆக இருந்தால் பரவாயில்லை..!
அட.. தந்தையும் சகோதரனுமாக இருந்தால் கூட பரவாயில்லை..!
ஆனால் இங்கு ஒருத்தனோ பியான்சி என்கிறான்.. மற்றவனும் குழந்தைக்கு தகப்பன் என்கிறான்.. இப்படிப்பட்ட சூழ்நிலை எந்த பெண்ணுக்கும் வந்து விடக்கூடாது ஆண்டவா..! அதுவும் மற்றொரு முன்னிலை.. என்று தன்னைத்தானே தாழ்வாக எண்ணிக்கொண்டவள், சுக்ரேஷின் கையை பிடித்து “போதும் மாமா.. போலாம் வா” என்றபடி டாக்டரிடம் தலையசைத்தா விட்டு அவள் வெளியே வந்தாள்.
“நீயே அவங்க கிட்ட பாதியில் இருந்து இப்படி என் கைய புடிச்சு இழுத்துட்டு வந்துட்டா எனக்கு எவ்ளோ டவுட்ஸ் இருக்கு தெரியுமா? அது எல்லாம் நான் கேட்க வேண்டாமா? நீ திடீர்னு ஃபோன் பண்ணி அங்க வலிக்குது இங்க வலிக்குதுனு அழுவ.. அந்த டயத்துல எல்லாம் நான் என்ன பண்றது சொல்லு? டாக்டர் கிட்ட கேட்டு வச்சா தானே எனக்கு எல்லாம் தெளிவா புரிஞ்சுக்க முடியும். டவுட்டுனு அம்மா கிட்ட கூட என்னால கேட்க முடியாது.. ஆச்சி கிட்டேயும் கேட்க முடியாது…” என்று அவன் நெற்றியில் கை வைத்து புலம்ப..
“உனக்கு தான் புரியல.. அந்த டாக்டரோட பார்வையை சரியில்ல..! எப்படி பார்க்கிறாங்க தெரியுமா?/ என்னனை? நீங்க ரெண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி பேசுறத வெச்சு.. எனக்கு ஒரு மாதிரி அவமானமா இருக்கு.. ஒரு மாதிரி ஷையா இருக்கு..” என்று அவள் கூனி குறுகி போக..
“தப்பு செஞ்சவனே தில்லா திமிரா நான் தான் குழந்தைக்கு அப்பான்னு சொல்லிட்டு வந்து இன்ட்ரோ பண்ணிட்டு பேசிட்டு போறான். நீ என்ன தப்பு பண்ணுன? நீ எதுக்கு கூனிக்குறுகி இருக்கணும்? இதெல்லாம் கடந்து வரணும் ஆரு.. இல்லன்னா நீ கெளம்பு நம்ம சென்னைக்கே போலாம். ஆச்சியும் அம்மாவும் திட்டினாலும் பரவாயில்லை நாம் பார்த்துக்கொள்கிறேன் உன்ன” என்றான்.
அவளோ பதறி “இல்ல.. இல்ல.. வேணாம்.. வேணாம்..! என்னால அவங்களுக்கு அவமானமும் மன உளைச்சலும் வருத்தம் எதுவுமே வேண்டாம். எங்க ஆச்சி இதுவரைக்கும் பட்டு துன்பமே போதும். இனி எந்த ஒரு காரணத்துக்காகவும் என்னால் அவங்க துன்பப்பட கூடாது. நான் பாத்துக்குறேன்.. இனிமே இருந்தாலும் டைரக்ட்டா இந்த டாக்டருக்கே ஃபோன் அடிச்சு கேட்கிறேன்.. போதுமா..? அவங்க என்ன இப்படி பார்த்ததுனால என்ன போன்லயே அவங்கள டார்ச்சர் பண்ற ஓகேவா?” என்றதும்,
அவனோ “தட்ஸ் குட்..! இதுதான் எங்க ஆருஷி..! எப்பொழுதும் இது தைரியத்தோடு இருக்கணும்” என்றவன், அவள் கையில் வைத்திருந்த டிஸ்கிரிப்ஷனில் உள்ள மாத்திரைகளை எல்லாம் வாங்கி அவளிடம் கொடுத்தான்.
திரும்பவும் அவளை அழைத்துக் கொண்டு வரும் பொழுது அவளோ ராவண்னை நினைத்து யோசனையாக சோகமாக இருக்க..
“இந்த மாதிரி மூஞ்ச தூக்கி வெச்சிட்டு இருக்க கூடாது..! அப்புறம் பொறக்குற குழந்தையும் உன்னை மாதிரி உம்னா மூஞ்சாதான் பொறக்கும்” என்று அவன் கூற அவளோ கோபப்படும் அவனை அடிக்க..
“ரௌடி.. ரௌடி.. அப்போது இருந்து இப்ப வரும் ஒரு ரவுடித்தனம் மாறவே இல்ல..” என்று சிறு வயதில் அவள் செய்த சேட்டையெல்லாம் சொல்லி பேசி சிரித்துக்கொண்டே அவர்கள் வர அவளின் மனநிலை சற்றே சகஜமானது.
வர்ஷாவும் வந்திருக்க அவளிடம் சிறிது நேரம் பேசியவன், டாக்டர் சொன்னவற்றை தனக்கு தெரிந்தவற்றையெல்லாம் கூறி “கொஞ்சம் பார்த்துக்கோங்க வர்ஷா உங்கள நம்பி தான் விட்டுட்டு போறேன்” என்றான் கவலையோடு ஆருஷியின் தலையை வருடியவாறே..!!
“அதெல்லாம் ஒன்னும் பயப்படாதீங்க நான் பாத்துக்குறேன்” என்றாள்.
“தேங்க்யூ சோ மச்..! நீங்க செய்ற உதவியை என்னைக்கும் நான் மறக்க மாட்டேன்” என்றவன் சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு,
“உன் அக்கவுண்ட்ல பணம் இருக்கு தானே?” என்று அவளை அக்கவுண்ட் ஒரு முறை சரி பார்க்க..
“லூசு போல பேசாத மாமா.. ஷேர் அமௌண்ட் என் அக்கவுண்டுக்கு வரும் தானே? நான் பாத்துக்குறேன் எதுனா தேவை இருந்தா உன்ன கூப்பிடுறேன்” என்றாள் ஆருஷி.
“ஷேர் பண்ணா வரும் இல்லைன்னு சொல்லல.. ஆனா ஏதாவது தேவைனா சொல்றேன் இதுவரைக்கும் என்கிட்ட நீ எதுவுமே சொல்ல மாட்டேங்குற.. இந்த ஹாஸ்பிடல்ல வந்துட்டு போறத தவிர..! ஆனாலும் உன்னை ரொம்ப நாள் விட்டு வைக்க மாட்டேன் பாத்துக்கோ.. எதுனாலும் மறக்காம ஃபோன் பண்ணு.. இன்னொன்னு..” என்று ஏதோ கூற வந்தவன்
“என்ன மாமா..” என்று அவள் சற்று கவலையோடு பார்க்க..
“ஒன்னும் இல்ல.. டேக் கேர்..” என்று அவள் கன்னத்தை தட்டு விட்டு சென்றான்.
அவன் சொல்ல வந்தது என்னவோ “கண்டிப்பாக ராவண் அவளௌ தேடி வருவான், பார்த்து இருந்துக்கோ” என்று தான்..!
ஆனால் அதை இப்பொழுது சொல்லி அவளை இன்னும் கலவரப்படுத்த விரும்பாமல் அமைதியாக சென்றுவிட்டான். அவன் மனமோ நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருந்தது ராவண் வருகை..!
சுக்ரேஷ் நினைத்தது போல தான் நடந்தது. மறுநாள் காலை காலிங் பெல் அடிக்க.. இரவு முழுவதும் தூங்காமல் இருந்த ஆருஷியோ அப்பொழுது நன்றாக உறங்கிக் கொண்டிருக்க.. வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்த வர்ஷா “கோன்?” என்றபடி வந்து கதவு திறக்க..
அங்கே வசீகர புன்னகையோடு நின்று கொண்டிருந்த ராவண்னோ..
“ஐ அம் ஆருஷி’ஸ் பாய்ப்ரண்ட்..! எனக்கு அவளை பார்க்கணும்” என்று உரிமையோடு அவளின் அறைக்குள் நுழைந்திருந்தான்.
ஆவென்று வாயை பிளந்து பார்த்திருந்த வர்ஷாவை கண்டுகொள்ளாமல்..!
தொடரும்..
super 👌👌👌👌👌👌💕💕💕💕💕🌺🌺🌺🌺