ஆருயிர் 9
அரிதாக கிடைத்த தனிமையில் தன்னவளது வெற்று மனதினை தன் காதலால் இட்டு நிரப்பி.. முடிந்தால் ஒரு முத்தாடலையும் நடத்தி விடும் முடிவோடு அமர்ந்திருந்தான் அதிரதன்!!
ஆனால் யாழினிக்கு பயங்கர பதற்றம்!! பயம்!! காதல் சொன்னவன் தான், நாம் பதில் சொல்லாததால் அதை விட்டுவிட்டு வேறு வேலையை பார்ப்பான் என்று இவள் நினைத்து இருக்க.. அவனோ 'அப்படியெல்லாம் மறப்பவன் நான் இல்லை!' என்று அவன் இங்கே வருகை தரும் ஒவ்வொரு வேளையிலும் தவறாமல் உணர்த்திக் கொண்டிருந்தான்.
இன்று எதிரிலேயே அமர்ந்து, அவள் கண்களையேப் பார்த்து பார்த்து.. அவன் பேச பேச.. உள்ளுக்குள் மெட்ரோ ரயில் தட தடவென வேகமெடுத்தது யாழினிக்கு.
அதே நேரம் "இன்னும் காணவில்லையே மித்து.. இன்னும் என்ன செய்யுறா?" என்று அரவிந்த் கால் செய்ய.. இருவருக்கும் இடையில் இருந்த ஃபோனை வெறித்து பார்த்தாள் யாழினி.
ஆனால் ஃபோனை சட்டென்று கையில் எடுத்த அதிரதன், அவளைப் பார்த்து லேசாக கண்சிமிட்டி காலை கட் செய்ததோடு மொபைல் சுவிட்ச் ஆஃப் பண்ண.. இவள் பதறி அதிர்ந்து, அவன் கையில் இருந்ததை பிடுங்க போக.. அவனோ தன் கையை உயர்த்தி மேலே தூக்கி பிடித்துக் கொண்டான் ஃபோனை யாழினி கைக்கு கிட்டாமல்!!
"எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரியனும் யாழ்!! இப்படி எத்தனை நாளைக்கு தான் நான் தவிக்கிறது? உன்னை எண்ணியே என்னால் வேலையை கூட ஒழுங்கா செய்ய முடியல யாழ்.. உன் பதில் என்னவாக இருக்கும்? உன் காதலை எப்படி சொல்லுவ? இப்படின்னு நிறைய எக்ஸ்பெக்டேஷன் எனக்குள்!! அதுவும் இந்த ஸ்வீட் லிப்ஸில் இருந்து வர வார்த்தைகளை கேட்க எனக்கு அவ்வளவு ஆர்வமாக இருக்கு!!" என்றான், எப்படியும் அவனது உயரமும், ஆளுமையும், திறமையும், ஆகுறுதியான உடம்பும், கவர்ச்சியும் அவளை தன் பக்கம் இழுக்கும் என்று ஆழமாக நம்பினான் அதிரதன்!!
ஆனால் அவளோ அதுவரை இருந்த மெல்லிய உணர்வுகள் அறுந்துவிட "அச்சோ..சார்.. அர்வி கால் பண்றான். நீங்க கட் பண்ணதோட இல்லாம, மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கீங்க.. என்னமோ ஏதேனும் தேடிட்டு வந்துருவான்! கூட எங்க அப்பாவுக்கு போன் பண்ணி வேற சொல்லிடுவான்! தயவு செய்து கொடுங்க.. அவன்கிட்ட நான் வரேன்னு சொல்லிடுறேன் முதல்ல" என்று அவள் ஃபோனை பிடிக்க எட்டி எட்டி முயன்றவாறே கெஞ்ச..
"ஓகே.. பேசி முடி ஃபர்ஸ்ட்!" என்று ஃபோனை அவளிடம் நீட்டினான் அதிரதன். அரவிந்த் இவர்களுக்கு குறுக்காக கரடி போல் இங்கே வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில்…
அவள் கால் செய்ய "ஏண்டி அறிவு இருக்கா? எருமை.. எருமை.. போன் பண்றேன் கட் பண்ற.. கூடவே சுவிட்ச் ஆஃப்னு வேற வருது?" என்று எதிர்பக்கம் இருந்தவனின் பயம் தொணித்த குரலில் இப்பொழுது அதிரதனை கீழ் கண்ணாக முறைத்தாள் யாழினி.
"அது ஒன்னும் இல்ல அர்வி.. மொபைல் திடீர்னு ஹாங் ஆயிடுச்சி அதான் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு போடலாம்னு போட்டேன்.. இன்னும் ஒரு 15 மினிட்ஸ் தான் வந்துருவேன் இந்த வேலையை முடிச்சிட்டு.. நீ வெயிட் பண்ணி டா.. வந்துடுறேன்" என்றதும்,
"நல்லவேளை நீ ஃபோன் போட்ட.. இல்லன்னா உள்ளார வந்து ஸ்கூலையே ரெண்டுல ஒன்னு ஆக்கி இருப்பேன்! சீக்கிரம் வா டி மித்து" என்றபடி அவன் திரும்பி பழையபடி அவனது பைக்கில் சென்று அமர்ந்து கொண்டான்.
முன்னாடி ஓரப் பார்வையால் முறைத்தவள் இப்பொழுது நேரடியாக முறைத்து "எதுல தான் விளையாடனும் உங்களுக்கு இல்லையா? அவன் உள்ள வந்து சண்டை போட்டு இருந்தால் என்ன ஆகியிருக்கும். நல்ல நாளிலே அவன் ஒரு முரடன்.. நீங்க வேற அவன உசுப்பேத்தி விடுறீங்க?" என்று கோபத்தில் வெடித்தாள்..
"ஓகே.. சில்.. சில்.. ஜூஸ் குடி யாழ்!"
என்றதும், காய்ந்த தொண்டைக்கு அவளுக்கும் அந்த ஜூஸ் தேவைப்பட, அமைதியாக ஜூசை குடிக்க ஆராம்பித்தாள்.
இதுவரை ஒரு ஆளுமையோடு வலம் வந்தவனை, எதிர்த்து கேள்வி கேட்டவர்களும் குறைவு.. கைநீட்டி பேசியவர்களும் குறைவு.. அதைவிட இப்படி முகத்துக்கு நேரே முறைத்துக் கொண்டு நின்றவர்களும் அரிதே!! அப்படிப்பட்டவன் முன் இவளின் அந்த கோபம் உரிமையை எடுத்துரைக்க.. மெல்ல சிரித்துக் கொண்டான் அதிரதன்.
தன் காலை எடுத்து மேசைக்கு கீழே அவள் கால்களுக்கு அருகே வைத்தான். முதலில் தெரியாமல் தான் வைத்தான். அவளின் புடவை அவன் காலில் உரச.. அதனை உணர்ந்தவன், பின் காலை நகர்த்தவில்லை.
யாழினி அவனை பார்க்காமல் கீழே குனிந்து ஸ்ட்ராவை உறிஞ்சினாள். அவன் பார்வை அவளது வெளுப்பான கழுத்து சரிவில்.. புடவை மாராப்பின் மறைத்த செழுமையில்.. அவளது கனிந்த இதழ்களில்.. கூர் நாசியில்.. ஜூல்ஸ் குடிக்கும் போது ஏறி இறங்கிய தொண்டையில்.. என்று இஷ்டத்துக்கு மேய்ந்தது அவளறியாமல்!!
மேய்ந்து கண்கள் வழி சென்று உணர்வுகள் மூளைக்கு கடத்தப்பட.. அவளது மொத்த பெண்மையையும் கொள்ளை கொள்ள ஆசை கொண்டது அவனது ஆண்மை!!
சென்னை வந்து இறங்கியவுடன் இவளை பார்க்க வேண்டுமென்று வழக்கமான சூட்டை தவிர்த்து இலகுவான உடையில் தான் வந்திருந்தான்.
மெல்ல தன் செருப்பை கழட்டியவனின் வலது கால் பெருவிரல் அவளின் காலை தொட்டது. சட்டென சிவந்த உதடுகளுக்கிடையே கவ்வியிருந்த ஸ்ட்ராவை விட்டு நிமிர்ந்து பார்த்தாள் பெண் மெல்லிய பயம் கவ்விய விழிகளோடு...
”விரல்.... ஏங்க.. ப்ளீஸ்??"என்று தடுமாறினாள்.
”நம்மள பத்தி தப்பா எதும் நெனைச்சிக்க மாட்டாங்க யாரும்.. சோ.. அப்படிலாம் பயப்படாத.. !!”
அவளது காலை, தன் விரலை கொண்டு நிமிண்டினான். அவளோ பயந்து காலை விலக்கினாள். அவனுக்கு ஜிவ்வென்று ஏறி விட்டது கோபம் அவளது விலகலில்.. சட்டென அவன் காலை நீட்டி.. அவளது காலை பற்ற.. கொலுசில் அவன் விரல் சிக்கிக் கொண்டது. அவள் கொலுசை விடுவிக்க போராட.. அவனோ அதனை ரசித்தான் விடுபட எண்ணாமல்..
அவன் தன் இரண்டு கால்களுக்கிடையில் அவளது காலை சிக்க வைத்தான். அவளது திரட்சியான கெண்டைக்காலை தன் கால் கட்டை விரலால் வருடிய போது.. அவள் பயந்து பார்த்தாள் அவனது அத்துமீறலை!!
”சார்.. ப்ளீஸ்.. வேணாம் !!” அவளது மறுப்பை விருப்பமாய் சொல்வது போல் இருந்தது யாழினியின் கொஞ்சல் குரல் அவனுக்குள்.
அவளது மெல்லிய இதழ்கள் ஸ்ட்ராவை கவ்விப் பிடித்தப்படி இருக்க.. அவள் கண்கள் கலங்கி விட்டிருந்தன..
அவள் மறுப்பையும் கண்ணீரையும் பொருட்படுத்தாமல்.. தன் வலது கால் விரலால் அவளது முழங்காலின் உள் பக்கத்தில் லேசாக வைத்து சுரண்டினான். அவளிடம் மெல்லிய சிலர்ப்பை உணர்ந்தவன் கர்வம் கொண்டான், அது என்னவோ அவனது தீண்டலால் என்று!! ஆனால்.. அது ஒவ்வாமையால் என்று அவனுக்கு புரியவில்லை!!
இதற்கு மேல் தாக்க பிடிக்க முடியாதவள் "நான் கிளம்புறேன்.. சார்.." என்று அன்று போல இன்றைக்கும் அவசரமாக எழுந்து வெளியே செல்ல, "நான் இன்னும் காத்துகிட்டு இருக்கேன் யாழ்! நீ நாளைக்கு ஈவ்னிங்குள்ள எனக்கு பதில் சொல்லனும்!" என்றவனது குரல் காற்றில் கலந்து அவளது காதில் விழுந்தாலும்.. அதையெல்லாம் நின்று நிதானமாக உள்வாங்கும் மனநிலையில் அவள் இல்லை, அவளது கால்கள் வேகமாக ஓடியது அர்வியிடம் அரணை எதிர்பார்த்து!!
வேகமாக ஓடி வந்தவளை தோளோடு அணைத்தவன், "என்னாச்சு மித்து.. என்னாச்சு டி?" என்று அவள் பதற்றத்தை கண்டு அவன் பதற.. "அது.. அது.. அதி.. அதிரதன்.. " என்று மூச்சு வாங்க திணறியவளை கண்டவனின் நரம்புகள் புடைக்க.. தாடைகள் இறுக… ஐயனாராய் நின்றவனின் கை இறுக.. அதில் நிகழ்வுக்கு வந்தவள், "அது.. அவரு.. மறுபடியும்.. லவ் சொன்னாரு.. வேற ஒன்னுமில்ல…" என்று அவன் கண்களை சந்திக்காமல் கூற.. அவளை கூர்ந்து பார்த்தான் அர்விந்த். அவனின் மித்துவை அறியாதவளா அவன்?
ஆனாலும் வேற எதுவும் கேட்காமல் சரி வா என்று அழைத்து சென்றான், தோளை அணைத்தவாறே!!
இருவரும் ஒன்றாக சென்றதை கண்களில் கனல் கக்க பார்த்தான் அதிரதன்!!
காதல் சொல்லி பார்த்தவன் சற்றே உரிமை எடுத்து வரம்பு மீற.. பயந்து ஓடியவளை கண்டு கொஞ்சம் சிரித்தான் "கிரேசி கேர்ள்.. பட் ஐ லவ் தட் கிரேஸி!!" என்று!
ஏனென்றால் அவன் பார்த்த பெண்களில் யாரும் சிறு தீண்டலுக்கே இப்படி கற்பு போனது போல பதற மாட்டார்கள், உயர்குடி என்றாலும் உயர் பண்புகள் அற்ற பெண்கள்!!
அப்படி பழக்கப்பட்டவனுக்கு அதுவொரு வழக்கமே!! ஆனால் சிறு தீண்டலுக்கே பயப்படுகிறாள் என்றால்.. யாழினி எவ்வளவு அருமையான பெண் என்று நினைத்து சிலாகித்தான்.
அன்பு, அறிவு, அழகு, பண்பு என்று அனைத்தும் ஒருங்கே அமைய பெறுவது வெகு அபூர்வம்!! இவள் அபூர்வத்தின் அபூர்வம் என்று மனதிலே அவளை நினைத்துக் கொண்டு வெளியில் அவளை பார்க்க வந்தவன், அரவிந்த் தோளோடு அவளை அனைத்து செல்வதை பார்த்ததும்.. அத்தனை நேரம் இருந்த இதம் மறைய, கோபம் மூண்டது அரவிந்த் மேல்.. கண்கள் இடுங்க.. கனல் கக்க.. அந்த ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான் அவர்களை..
யாழினியை தோளோடு அணைத்து சென்று கொண்டிருந்த அரவிந்துக்கும் ஏதோ தோன்று சட்டென்று திரும்பி பார்த்தான். அவனில் உள்மனது சொன்னது செல்லும் இவர்களை அதிரதன் பார்க்கிறான் என்று!!
யாழினி ஒன்றும் இல்லை என்று கூறினாலும், ஏதோ நடந்திருக்கிறது என்று அவன் உள்ளுணர்வு உறுத்த.. இவனும் திரும்பி உறுத்து விழித்தான் அங்கே கண்ணாடி வழி தெரிந்த உருவத்தை பார்த்து..
அதில் அதிரதனுக்கு அத்தனை அலட்சியம்!! 'இவன் யாரு? இவன் நிலை என்ன? இவன் என்னை பார்த்து முறைக்கிறான்.. ஹ.. உன் நிலையை கூடிய சீக்கிரம் நீ உணர்வாய் அர்விந்தா!' என்று இகழ்ச்சியாக அவனைப் பார்த்தான் அதிரதன்.
யாரையுமே குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை அங்கே மறந்து போனான் அதிரதன்!!
அர்வியின் பார்வை தூரத்தில் உருவமாய் தெரிந்த அதிரனை உறுத்து விழித்தாலும்.. மனதில் ஏதோ புரியாத கோபத்தோடு பதைபதைத்து உள்ளம்!!
'எதுவோ சில்மிஷன் பண்ணியிருக்கிறான் இவன்? இல்லேன்னா யாழினி இவ்வளவு பயப்பட மாட்டா..! கண்டிப்பாக அதற்கு அவனுக்கு அரவிந்தின் பதிலை கொடுத்தே ஆக வேண்டும்!' என்று எண்ணிக் கொண்டவன், முதலில் யாழினி வீட்டில் விட்டான்.
மல்லிகாவிடம் "அத்த.. மித்து கொஞ்சம் டயர்டா இருக்குறா.. தூங்கி எழட்டும், அப்புறம் சாப்பிட கொடுங்க!" என்று விட்டு பைக்கை மீண்டும் வேகமாக விரட்டினான் யாழினி பள்ளியை நோக்கி…
அதிரதனை நோக்கி..
அதிரதன் வெர்ஸஸ் அரவிந்த் பிரபாகரன்!!
யார் அந்த அரன்??
super 👌👌👌👌👌👌🌺🌺🌺🌺