ஆருயிர் 7
அமைதியான ஆர்த்தி அதிரடியாக தன் காதலை சொல்லிவிட்டு செல்ல… அதிரடிக்காரனோ அமைதியாக செய்வது அறியாது திகைத்து நின்றான்.
அன்று யாழினி மொட்டையாக 'ஐ லவ் யூ!' என்று சொன்னபோது இவள் தப்பாக நினைத்திருக்கிறாள் என்று மட்டுமே அவன் நினைத்து, அவளிடம் வார்த்தை வாங்க நினைக்க.. இப்படி ஒன்று அவள் மனதில் இருக்கும் என்று அவன் கொஞ்சம் கூட கற்பனை செய்யவே இல்லை!!
அதற்காக ருஷ்யசிங்கரோ கண்களாலேயே கனலை கக்கும் கொங்கணவரோ அரவிந்த் கிடையாது!! பெண்களை பார்ப்பான்! ரசிப்பான்!! ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. அதுவும் யாழினி அருகில் இருந்தால் பெண்கள் பக்கமே திரும்ப மாட்டான். அவளை யாரும் எதுவும் பார்க்கிறார்களா? என்று மொத்த கவனமும் யாழினியை சுற்றி மட்டும் தான் இருக்கும்.
காதல் எல்லாம் அவனைப் பொறுத்தவரை சுத்த பேத்தல்!!
அதற்காக காதலிக்கிறவர்கள் எல்லாம் காஜி என்றோ பைத்தியம் என்றோ சொல்ல மாட்டான்.
அவரவர் விருப்பம் அவரவருக்கு என்று கடந்த செல்லும் சாமானியன்.
கல்யாணத்துக்குப் பிறகு அவனின் மனைவியை மட்டும் காதலித்தால் போதும் என்று எண்ணம் கொண்ட சராசரி ஆண்மகன்!!
இதுவரை சிங்கிளாய் வெறும் பெண்களை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு பெண்ணின் இதழ் ருசியை காட்டி விட்டு சென்றாள் ஆர்த்தி!!
சில நொடி இதழ் ஸ்பரிசம் தான்!! ஆனால் அதுவே அவனுக்குள் ஷாக் அடித்தது!! அவனது ஆண்மையை லேசாக தட்டி விட்டு சென்றது!!
அன்று இவனை தேடி யாழினி வந்தது போல.. இன்று யாழினியை தேடி இவன் ஓடினான்.. "ஐயோ!! மித்து..!!" என்று, அறையில் இருந்து.. வீட்டை விட்டு எப்படி வந்தான்? வண்டியில் எப்படி ஏறினான்? சாலையைப் பார்த்து எப்படி ஓட்டினான்? யாரையும் இடித்து தள்ளினானா? என்று கேட்டால்.. எதுவுமே தெரியாது அவனுக்கு!! குருட்டாம்போக்காக ஓட்டி வந்து அவள் பள்ளியில் நிறுத்தினான் வண்டியை.
மற்றவர் ஆசிரியர்கள் சென்றிருக்க பத்தாவது பன்னிரெண்டாவது மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மட்டுமே அங்கு!!
சில நாட்களாக இவ்வாறு நடப்பது அரவிந்துக்கு தெரியும். ரொம்பவே இருட்டிவிட்டால் இவனுக்கு போன் செய்து விடுவாள். இவன் வந்தவுடன் இருவரும் ஒன்றாகத்தான் செல்வார்கள். எப்பொழுதும் அவளுக்காக வெளியில் காத்திருப்பவன் இன்று வேகமாக பள்ளி உள்ளே ஓடி.. வெளியில் மாட்டி இருக்கும் வகுப்பு பெயர் பலகையை பார்த்துக் கொண்டே வந்தவன் பிளஸ் டூ வந்ததும் "மித்து..!!" என்று அலறினான்.
வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரான யாழினி முதல் மாலை நேர வகுப்பில் கூட கவனமாக இருந்த மாணவர்கள் வரை அனைவரும் அதிர்ந்து திரும்பி பார்க்க.. வேரக்க விறுவிறுக்க நின்றிருந்தவனின் கோலம்.. என்னவோ? யாருக்கோ எதுவோ? என்று அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது!!
"எக்ஸ்கியூஸ் மீ!!" என்று மாணவர்களை பார்த்து சொல்லியவள், அவனிடம் வேக நடையுடன் "என்னாச்சுடா அர்வி? யாருக்காவது எதாவுதா? ஏன் இப்படி இருக்க? உனக்கு என்னாச்சு?" என்று பயந்து கொண்டே வந்தாள்.
அப்பொழுதுதான் அவனுக்கு அந்த சூழ்நிலை புரிய.. 'இப்படி வந்து புள்ளைங்க முன்னாடி கத்திட்டோமே!' என்று வருந்தியவன், "இல்ல ஒரு முக்கியமான விஷயம் பேசணும்! நீ.. நீ.. சீக்கிரம் வா!!" என்றவன் அங்கிருந்த வராண்டா தூணில் சாய்ந்து நின்றுக் கொண்டான்.
"என்னாச்சு இவனுக்கு?" என்றபடி யோசித்தபடி அதை திரும்பி திரும்பி பார்த்தபடியே உள்ளே வந்தவள், மீண்டும் மாணவர்களிடம் அந்த கணக்கை முழுவதுமாக முடித்துவிட்டு "மீதியை நாளைக்கு பார்க்கலாம் ஸ்டூடண்ட்!!" என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.
அன்று கரஸ்பாண்டிற்காக இறங்காத சிதறாத அவளது கவனம்.. இன்று நண்பனுக்காக சிதறியது!
வெளியில் வந்தவுடன் "போலாம்.. போலாம் வா !!"என்று இவன் அவசரபடுத்து..
"எப்பொழுதுமே எருமைக்கு பிறந்தவன் போல பொறுமையாய் இருப்பவன்.. அவசரப்படாதவன் ஏன் இப்படி அவசரப்படுத்துகிறான்?" என்றபடி அவள் வண்டியை எடுக்க போக..
"வேணாம்.. வேணாம்! உன் வண்டி இங்கே இருக்கட்டும்! நாளைக்கு காலைல நானே உன்னை வந்து டிராப் பண்றேன்" என்றான். பிறகு அங்கே இருக்கும் செக்யூரிட்டி இடம் சொல்லி விட்டு அவளது வண்டியை விடுத்து அவனுடன் பின்னால் ஏறிக் கொண்டாள்.
அதிரதன்… அன்று காதல் சொன்னவன் தான்!! அதன்பின் யாழினியை பார்க்க கூட வரவில்லை அதிரதன். வேலை அவனை இழுத்துக்கொள்ள.. சுற்றுச்சூழன்றவன் இன்று தான் ஒரு வழியாக யாழினியை பார்ப்பதற்காக பள்ளிக்கு வந்தான். எப்படியும் இன்று சிறப்பு வாய்ப்பு இருக்கும் என்று அவனுக்கு தெரியும். டைம்டேபிள் போட்டு கொடுப்பவனே அவன் தானே!!
ஆனால் இவன் வரும்போது அவள் அரவிந்தோடு வெளியே போக "அதுக்குள்ள கிளாஸ் முடிஞ்சுட்டா? முடிந்து இருக்கலாம்!! கொஞ்சம் சீக்கிரமா வந்து இருக்கலாமோ?" என்று கேட் அருகே காரினை நிறுத்திவிட்டு யோசித்தவன், அடுத்த நொடி யோசிக்காமல் அவர்கள் பாலோ செய்தான். எப்படியும் தன்னவளின் தரிசனத்தை இன்று கண்டுவிட..
சென்னை டிராபிக் அதிரதனுக்கு புதிது!! தொடரவே முடியவில்லை அவர்களை.. ஆனால் அரவிந்துக்கு அதெல்லாம் தனிப்பட்ட பாடு!! கிடைத்த கேப்பில் எல்லாம் புகுந்து வளைந்து நெளிந்து வேகம் எடுத்து ஊர்ந்து என்று ஒரு வழியாக யாழினியை அழைத்துக் கொண்டு சீக்கிரமே அவளது வீட்டிற்கு வந்து விட்டான். வந்தவன் அவள் ஹாண்ட் பேக்கை இவனே பிடுங்கி ஹாலில் போட்டுவிட்டு… "அத்த.. நீங்க டீ போடுங்க!! எனக்கு கொஞ்சம் பேசணும் இவகிட்ட.. நாங்க மாடியில இருக்கோம்!" என்றப்படி இவளை கைபிடித்து இழுத்து செல்ல..
"டேய் அரவிந்தா… புள்ள இப்பதாண்டா வந்திருக்கா!! ஒரு வாய் காபிய குடிக்க விடுடா!!" என்று அவரது புலம்பல் எல்லாம் அவனது காதில் விழவே இல்லை!!
மூச்சிரைக்க மாடி வந்த நின்றவன் சற்றே குனிந்து தொடை மீது இரு கைகளையும் வைத்துக்கொண்டு குனிந்தவாறு நின்றிருந்தான். அவளுக்குமே மூச்சு இறைத்ததுதான்.
"என்னடா ஆச்சு? ஏன்டா இப்படி ஏதோ பேய் துரத்துவது மாதிரி என்னை புடிச்சி இழுத்துக்கிட்டு வந்து இருக்க.. ஸ்கூல் முடித்துவிட்டு வந்தது கசகசன்னு இருக்கு! குளிக்க கூட விடல.. அட்லீஸ்ட் ஒரு காஃபியாவது குடிக்க விட்டியா டா பக்கி? என்னான்னு சொல்லி தொலைடா!! பக்கபக்குன்னு வேற இருக்கு!!" என்றவளை, தலை மட்டும் நிமிர்த்தி பார்த்தவன் அவள் சொன்ன அதே 'ஐ லவ் யூ' சொன்னான் மூச்சுரைக்க!!
"வாட்??!!!" என்று அவள் அதிர்ந்தாலும் அன்று அவள் சொன்னது ஞாபகத்துக்கு வர இப்போது சிரிப்பது யாழினி முறையானது.
"அச்சோ…அர்வி.. ஹா..ஹா…" என்று
அவள் மாடி தரையில் அமர்ந்து அவள் சிரிக்க.. அவனோ முறைக்க.. வாயை ஜிப்பு போட்டுக் கொண்டது போல் சைகை செய்தவளின் கண்கள் வெடித்து சிரித்தது மத்தாப்பை போல!!
"சரி சொல்லு... யாரு உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணா?" என்று அவள் கரெக்டாக கேட்டுவிட.. சிரிக்கும் அவளைத்தான் கூர்ந்து பார்த்தான் அதுவும் கண்களில் நீர் பெருக புடவை முந்தையால் வாயை துடைத்துக் கொண்டே சிரிப்பதும்.. பின்பு சிரிக்கி அடக்கி அதை முந்தானையால் வாயை பொத்திக் கொள்வதுமாய் அவள் இருக்க.. அவள் முதுகில் ஒன்று போட அவன் வர.. அதற்குள் அவனை கண்டு கொண்டவள் மாடியிலேயே அவன் கைக்கு சிக்காமல் மானென துள்ளித்துள்ளி வளைந்து நெளிந்து ஓடினாள்.
சாதாரண நாளாக இருந்தால் இரண்டே எட்டில் அவளை எட்டிப் பிடித்திருப்பான். ஆனால் இன்று உடலும் உள்ளம் ஒரு படபடப்பு நிலையில் இருக்க.. சட்டென்று அவளை பிடிக்க முடியாமல் இவனும் திணற.. அது அவளுக்குள் இன்னும் உற்சாகத்தை தர.. "எங்கே முடிந்தால் பிடி பாப்போம்?" என்று கட்டைவிரலை அவனுக்கு காண்பித்து கேலி சிரித்து அவள் ஓட.. இவனும் துரத்த.. சிறிது நேரம் இருவரும் விளையாடி களைத்து,
பின்பு மாடிப்படி கட்டையிலேயே ஏறி அவள் அமர்ந்து கொள்ள.. அருகே மூச்சறைஙழஜ மவழஙளவஸளக்க வந்த நின்றவன் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.
"தாங்க்ஸ் டி… இப்போ ரிலாக்ஸா இருக்கு!" என்றான் ஆத்மார்த்தமாக!!
"அந்த தாங்க்ஸ் ஓரமா இருக்கட்டும்!! சொல்லு.. சொல்லு.. காதல் எல்லாம் சுத்த பேத்தல் அப்படின்னு சுத்திக்கிட்டு இருந்த உனக்கே ஒருத்தி காதல் சொல்லி இருக்கா இல்லையா? அவ எவ? அந்த அப்பாவி யாருன்னு தெரிஞ்சுக்கணும் ரொம்ப ஆவலா இருக்கேன் அர்வி! என்னை ஏமாற்றாமல் சொல்.." என்று செந்தமிழில் அவனிடம் நையாண்டி பேச…
"சீ!! போ பக்கி!!" என்று அவள் முதுகில் தட்டியவன் முகத்தில் இலையோட மெல்லிய வெட்கத்தை கண்டு கொண்டாள் யாழினி!!
"அட என்னடா அதிசயம்?? உனக்கெல்லாம் வெக்கம் வருதே??" என்று அவள் விழி விரித்து பார்க்க "கண்ண நோண்டி காக்காவுக்கு போட்டுள்ளனர்! ஓவர் நக்கல் பண்ணாத டி!" என்றான்.
"காதோடு சொல்..
காதோடு சொல்..
யாரென்று சொல்?
யாரென்று சொல்?
பேரழகியா சொல்..
பெரிய மூக்கியா சொல்
மா அழகியா சொல்
வாயாடியா சொல்
ஓடாதே சொல்..
ஓர் வார்த்தை சொல்…" என்று பொன்னியின் செல்வன் பாடலை இவள் இஷ்டத்துக்கு மாற்றி பாட.. அரவிந்த்க்கோ சிரிப்பு பீறிட.. அவள் அருகே மாடி கட்டையில் அவளைப் பார்த்த வண்ணம் அமர்ந்தவன் "கொழுப்பு டி உனக்கு!! ஓவர் கொழுப்பு!!" என்று வாய்விட்டு சிரித்தான்.
"ஓகே.. ஓகோ.. பீ சீரியஸ்!! அந்த ஆர்த்தி பொண்ணு தான் என்கிட்ட ஐ லவ் யூ சொன்னா.. இதெல்லாம் சரி வருமானு எனக்கு தெரியல? அதனால அந்த பொண்ண நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லாம்னு இருக்கேன்!" என்றவன் முகபாவனை சீரியஸாக இருக்க..
"டேய் லூசு!! அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதடா.. பாவம் வெளியூரிலிருந்து வந்திருக்கா.. தெரியாத இடத்துல எங்கேயும் போய் மாட்டிக்க கூடாதுனு நான் தான் அவளை உன்கிட்ட சேர்த்து விட்டேன். இப்போ திருப்பி அவள அனுப்புனா என்ன பண்ணுவா? வேற ஏதாவது ஒரு அரேஞ்ச் பண்ணிவோம். அது வரை இருக்கட்டும்! அவ ஏதோ ஒரு இன்ஃபாக்ஸ்வேக்ஷன்ல சொன்னளா இல்லை நிஜமா சென்னாளானு பார்க்கலாம்!! என்று அவள் கண்கள் சிரிக்க சொல்ல..
"அடிங்க.. குணடோதரி!! நானே காதல் வேணாம்னு சொல்லிட்டு இருக்கேன்.. இவ வந்து வெயிட் பண்ணு பார்க்கலாம் என்கிறா... என்னை முதல்ல உருப்பட விடுங்கடி!! இந்த காதல் ஒருத்தனையும் உருப்புட விடாது! பிழைக்க விடாது! தலைநிமிர விடாது!! ஏற்கனவே எங்க அப்பா என்னை வைச்சு செய்வார். இதுல இது தெரிஞ்சுச்சு… அவ்வளவுதான்.. நான் மர்க்கையா தான்! பெரிய கும்பிடு உனக்கும் அந்த காதலுக்கும்!!" என்று அவன் கையெழுத்து கும்பிட..
அவன் கையை பிடித்து கீழே இறக்கியவள் தன் கைகளில் அவன் கையை பொதித்துக் கொண்டு *காதல் என்கிற ஃபீலிங்ஸ் எல்லாம் நீயா தேடி போனா வராது அர்வி.. அதுவா வரும்போது வாங்கிக்கொள்!! அது ஒரு வரம் மாதிரி!! எப்பொழுதும் காதல் யாரையும் வஞ்சிக்காது!! உன்னை தலை நிமிர வைக்கும்!! உன்னையே தேட வைக்கும்!! உன் சுயத்தை தொலைத்து சுயநலமில்லா மனத்தை தரும்!!" என்று அவள் சொன்னதை கேட்டவன் மனசில் சில்லென்று பாய தான் செய்தது அந்த உணர்வு!!
ஆனாலும் அவனது கனவும் அதற்காக யாழினி செய்த தியாகமும் கண்முன்னே வர.. சற்று காதலை ஓரம் தள்ளி வைப்போம் என்று நினைத்தவன் "அவ்வளவு பெரிய
வரத்துக்கு முதலில் என்னை தகுதியானவனாக மாற்றிக் கொள்கிறேன் மித்து!! அப்புறம் வாங்கிக்கலாம் வரம்!!
எனக்கே எங்க அப்பா தான் சோறு போடுறாரு.. இதுல இதெல்லாம் தேவையில்லை.." என்று இலகுவாக முடித்து வைத்தான்.
"சரி.. சரி போ!! உன்னை எல்லாம் திருத்த முடியாது.. உனக்கு எல்லாம் மாமா பார்க்குற முனியம்மா.. கருத்தம்மா.. தங்கம்மா தான்!!" என்று கேலி செய்ய..
அவளது பாம்பு சடையை பற்றி இழுத்தவன் "இருக்கட்டும் டி.. அருக்காணியே வந்தாலும் என் பொண்டாட்டிய தான் நான் லவ்வுவேன்!! அந்த அதிரதன் உனக்கு காதல் சொல்ல கொழுப்பு.. அவனுக்கு பதில் சொல்லிட்டியா?"
'இல்லை' என்ற தலையசைத்தவள் "நீதானடா அவன பத்தி விசாரிக்கிறேனு சொன்ன? ஒன்னுமே சொல்லல!! நீ சொல்லாம நான் எப்படி சொல்ல முடியும்? என்றவளை ஆதூரமாக பார்த்தவன் "விசாரிக்கிறேன்!! பொறுமையாக அவனைப் பத்தி யோசி.. அவனை கவனி!" என்றான் நண்பனாய் அரனாய்!!
சரி சரி என்றவள் அதன்பின் எப்பொழுது நண்பர்களுக்குள்ளான பேச்சு அவர்கள் பேச.. இரவும் நீண்டு கொண்டே போனது!! அவர்களது பேச்சும் நீண்டு கொண்டே போனது!
ஆனால் அதை எல்லாம் மேலே உள்ள நிலவு மகளும் நட்சத்திரங்களும் பொறுமையாக பார்த்தாலும்.. அந்த தெருவின் ஓரத்தில் நின்று இருளின் மறைவில் அவர்களைப் பார்த்து இருந்தவனுக்கு அத்தனை பொறுமை இல்லை!!
வேறு யார் அதிரதனுக்கு தான்!! இவர்களை ஃபாலோ செய்து வந்தவன், ஒரு இடத்தில் தவற விட்டுவிடு பின்பு யாரிடமோ கேட்டு யாழினியின் அட்ரசை வாங்கியவன் அவர்கள் தெருவில் சற்று தள்ளி காரை நிறுத்தி விட்டு.. அவர்கள் வீட்டை கண்காணிக்க.. மொட்டை மாடியில் தெரிந்த உருவங்களை பார்த்தான்.
இன்னும் கூர்ந்து பார்த்தால் அது அரவிந்தும் யாழினியும் என்று தெரிந்ததும்.. சிறு முணுமுணுப்பு அவன் மனதில்!! அது பெரும் பொறாமையை கனன்றது அவர்கள் இருவரின் நெருக்கத்தில்!! அன்பில்!!
ஏனோ யாழினியிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளும் அரவிந்தை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை!! எதிரியை பார்ப்பது போலவே பார்த்தான். விட்டால் இப்பொழுதே சென்று அவனை அடித்து நொறுக்கி "ஷி இஸ் மைன்! மைன் ஒன்லி!!" அரவிந்தை பார்த்து கத்த வேண்டும் போல வெறி உண்டானது அதிரதனுக்கு.
ஆனால்.. முடியாதே!! யாழினிக்கு அவன் எவ்வளவு முக்கியம் என்று தெரியுமே!! அதற்காக வேணும் அவனிடம் இப்பொழுது பொறுமை காக்க வேண்டியது அவசியம்! ஆனால் என்று அவனின் கைத்தாலி யாழினி கழுத்தில் ஏறுகிறதோ அன்று இவர்கள் இருவருக்கும் உள்ள நட்
பை முறித்து விட வேண்டும் என்று தீவிரமாக இருந்தான் அதிரதன்!! அதி தீவிரமாக அதிரதன்!!
ஜெயிப்பது நட்பா? காதலா?