அரன் 6

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

ஆருயிர் 6

 

யாழினி "ஐ லவ் யூ!!" என்று மொட்டையாக கூறியதில் அதிர்ந்து கலங்கி விழிகளை மறைத்தபடி ஆர்த்தி அங்கிருந்து சென்றுவிட…

 

அதிரதன் சொன்னதில் அவளே குழம்பி எதை சொல்ல? எதை விடுக்க? என்று புரியாமல் தான் இந்த வார்த்தையை கூறிவிட்டாள். ஆனால் உரைத்த பின் கூட அவள் நினைவில் தான் என்ன சொன்னோம் என்று இல்லாமல் அரவிந்த் கண்களையே பார்த்துக் கொண்டிருக்க.. முதலில் அதிர்ச்சியை காட்டிய அரவிந்த்தின் கண்கள் அடுத்த நொடி சிரிப்பில் விரிந்தது! அதைவிட அவனது அதிரங்களும் வெடித்து சிரிக்க..

 

"நாம என்ன சொன்னோம்? எதுக்கு இந்த பக்கி எப்படி சிரிக்கிறான்?" என்று யோசித்தவள் அதன் பிறகு மொட்டையாக சொல்லிவிட்டோமே, அதிரதன் காதல் சொன்னதை சொல்லலையே…தன் தலையில் அடித்துக் கொண்டு நாக்கை கடித்து ஒற்றை கண்ணால் அவள் பார்க்க…

 

"லூசு.. லூசு.

 இப்படித்தான் வந்து சொல்லுவியா? நானா இருக்க போய் அதுவும் தைரியமான மனசக்காரனா இருக்க போய்.. ஏதோ இருக்கேன்!! இதே ஒரு பூஞ்ச மனசுக்காரனிடம் சொல்லி இருந்தால்.. அவன் பட்டுனு போயிருக்க மாட்டான்?" என்றதும் அவள் இப்போது முறைப்பை தத்தெடுக்க… இன்னும் வெடித்து சிரித்தான் அவன்.

 

அவளுக்கு வெட்கம் வந்து தொலைக்க.. "ப்ளீஸ் அர்வி சிரிக்காத! நான் சொல்றத ஃபர்ஸ்ட் கேளு…!" என்று சிணுங்கினாள்.

 

"ஐயையோ…!" என்று அப்போதுதான் திரும்பி பார்த்தவன் "எங்கடி ஆர்த்திய காணும்?" என்றதும் "ஆமாம்.. இல்லை!" என்று அவளும் தேட.. இன்னுமே சிரிப்பு வந்தது அரவிந்துக்கு.

 

"ஏய்.. அவ என்னமோ நம்ம ரெண்டு பேரையும் தப்பா நினைச்சுட்டு போய்ட்டானு நினைக்கிறேன்" என்றதும் முசுமுசுவென்று கோபம் வந்தது யாழினிக்கு.

 

"அவ ஏன் நம்மள தப்பா நினைச்சுட்டு போகணும்?"

 

"நீ சொன்ன லட்சணம் அப்படி!!"

 

"நான் என்ன சொன்னேன்?"

 

"எரும.. எரும.. நீ என்ன சொன்னனு கொஞ்சம் யோசிச்சு பாரு எரும!" என்று உள்ளங்கையால் அவளது நெற்றியில் வேகமாக தட்ட.. ஒரு நொடி ஜெர்க் ஆகிய பின்னால் விழ இருந்தவள், பின்பு ஸ்திரமாகி அவனை முறைத்துக் கொண்டு யோசித்தவளுக்கு அப்போதுதான் முழுசாக சொல்லாமல் பாதியாக சொல்லி தொலைத்திருக்கிறோம் என்று நினைவு வந்தது.

 

"ஐயோ.. அர்வி!!" என்று முகத்தை மூடிக்கொண்டவள், "அது அந்த அந்த விளங்கா மண்டையன் இல்ல அதுதான் தேர் ஓட்டுறவன்.."

 

"உன் பெயர் வைக்கும் பாங்கு இருக்கு பாரு.." என்று உதட்டை பிதுக்கி சிலாகித்தவன் "உளறாம யாருன்னு சொல்லுடி!" என்று இப்பொழுது அதட்டினான்.

 

*அதாண்டா.. அந்த அதிரதன்! அவன் எனக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டான்" என்று அவன் முன்னால் தவறு செய்த சிறுமி போல உதட்டைப் பிதுக்கி கண்களை பாவமாக வைத்து நின்று தோழியை கண்டவனுக்கு இன்னும் சிரிப்பு தான் வந்தது.

 

இப்பொழுது மட்டும் அல்ல 11-வது தொடங்கியது இந்த பார்வை.. மற்ற நேரத்தில் அவளுக்கு ஆசானாய் அன்னையாய் ஏன் சில சமயம் எதிரியாய் கூட இருப்பவள் இந்த நேரத்தில் மட்டும் சிறுமியாகத் தான் தெரிவாள்.

 

யார் அவளிடம் வந்து ப்ரொபோஸ் என்று லெட்டர் கொடுத்தாலும் சரி.. இல்லை டெக்னாலஜி வளர்ந்த பின் வாட்ஸ் அப் செய்தாலோ இல்லை மெசஞ்சரில் வந்து கவிதை உளறி இருந்தாலோ.. அனைத்தையும் தூக்கிக் கொண்டு அவள் செல்லும் இடம்.. அர்வி இடம் தான்!!

 

அவனும் அதை எல்லாம் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பான். இவளோ அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு நிற்பாள்.. 'இதுக்கு நான் என்ன சொல்ல?' என்று.

 

"உனக்கு பிடித்திருந்தால் எஸ் சொல்லுடி இல்லைன்னா நோ சொல்லு!" என்பான் அவனும்.

 

"எனக்கு யாரையும் புடிக்கல பிக் நோ!" என்று முறைப்புடன் சென்றுவிடுவாள். இன்றும் அதையே தன் அர்வியிடம் எதிர்பார்த்து அவள் நிற்க…

 

வனும் அவரை ஆழ்ந்து பார்த்து "என்ன நடந்ததுனு தெளிவா சொல்லு?" என்றான்.

 

எப்பொழுதும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் நண்பனிடம் கொள்பவள், இன்று சற்று உரிமை காட்டிய அதிரதன் செயல்களை சொல்ல தயக்கம் கொண்டது மனது! அங்கே லேசாக கள்ளத்தனம் புகுந்ததோ? ஆனாலும் மற்றவற்றை அனைத்தையும் கூறி விட அப்போதும் தன்னிடம் ஓடிவந்து தோழியை தோளோடு அணைத்தவன், "ஒருவேளை உன்னோட வொர்க் திறமை அழகு இதெல்லாம் பார்த்தவனுக்கு பிடித்திருக்கலாம்!! அதுல தப்பு ஒன்னும் இல்லடி!! அவன பத்தி எனக்கு எதுவும் தெரியாது நான் விசாரிக்கிறேன்.. அதுக்கப்புறம் உனக்கு பிடிச்சிருந்தா நீயும் சொல்லு" என்றதும்..

 

 "டேய் லூசு டா நீ? லூசா? அவன கண்டாலே எனக்கு இரிடேட் ப்லீங் தான். நல்ல விதமாகவே எனக்கு அவனை நினைக்க தோணல! அவனோட கோர்பார்வையும்.. இறுகியத்தாடையும்.. விரைப்பான உடல்மொழியும்.." கண்களை மூடி சிலிர்த்தவள் "எனக்கு வேணவே வேணாம் பா!" என்று கைகளை உதறி உடலை குலுக்கி கொண்டாள்.

 

"அப்போ இந்த மகாராணிக்கு எப்படிப்பட்ட மகாராஜன் வேணுமாம்?" என்றவன் அவளை இழுத்து வந்து அவன் அமரும் இருக்கையில் அமர வைத்து இவன் மேல ஏறி டேபிளில் அமர்ந்து கொண்டான்.

 

"இது கேட்டியே.. இது நியாயமான கேள்வி!" என்று அவளும் அந்த இருக்கையில் இரு கால்களையும் மடித்து சம்மளம் போட்டு அமர்ந்து ஏதோ சுவாரசியமான கதை சொல்வது போல ஆரம்பித்தாள்.

 

"அவனை நினைக்கும் போதே உடம்பெல்லாம் அப்படியே ஜிவ்வுன்னு இருக்கணும்.. அவன் கண்கள பார்க்கும் போதே அதில் என்‌ மீதான காதல் வழியனும்… 

அவன் அருகே வந்தால் என் உடம்பில் ஒரு படபடப்பு ஏறனும்..

இதயம் தடதடக்கணும்…

வைரமுத்து சொல்ற மாதிரி வயித்துக்கும் தொண்டைக்கும் இடையே ஒன்று உருண்டு ஓடணும்..

அவனுடனான என் வாழ்வு அன்புடனும் நேச்துடனும் காதலிடனும் இருக்கணும்" என்று கண்கள் மின்னல் ஏதோ டிஸ்னி இளவரசி சொல்லும் இளவரன் கதை போலவே சொல்லிக் கொண்டிருந்தவளை கண்டவன்..

அவள் தலையில் நங்கென்று குட்டு வைத்தான். கனவிலிருந்து விழிப்பவள் போல விழித்தவளை பார்த்து "இதெல்லாம் கதையிலையும் நீ படிக்கிற நாவலையும் மட்டும் தான் நடக்கும்!! நிஜத்தில் நடக்காது. ஒழுங்கான புரிதல் போதும் வாழ்க்கை நடத்த.. காதல் கீதல் எல்லாம் பேத்தல்!! ஓவரா கனவு காணாம ஒழுங்கா வேலை பார்க்கிற வேலையை பாரு டி எரும!" 

 

"போடா.. உனக்கு எல்லாம் இத பத்தி என்ன தெரியும்? இந்த உணர்வுகள் எல்லாம் அதுவா வரணும்!! நீ ஒரு கம்ப்யூட்டர் அதுவும் காதல் வைரஸ் தாக்காத கம்ப்யூட்டர் டா. கூட சீக்கிரம் மட்டும் பாரு கரெப்ட் ஆகி நிக்கபோற!"

 

வாழ்க்கைக்கு புரிதல் போதும் என்று இருக்கும் அவன்.. வருங்காலத்தில் தன் இணையிடம் கொள்ளை கொள்ளையாய் காதலை கொட்ட போகிறான் என்று சொன்னால் நம்புவானா?

 

இல்லை காதல் இல்லாத வாழ்க்கையை சாதல் என்று கூறும் இவளோ தன் இணையிடத்தில் புரிதலை மட்டுமே கொண்டு வாழப் போகிறாள் என்று சொன்னால் கேட்டுக் கொள்வாளா?

 

விதி வலியது!!

 

"ஏய் மக்கு மித்து.. நிஜமா உனக்கு அவன புடிச்சிருந்தா.. அவன் கண்ணில் நீ தேடுற அந்த அத்தனையும் இருந்தால்.. ஓகே சொல்லிடு!! ப்ராப்ளம் சால்வ்டு!" என்று சிரித்தான்.

 

"பார்க்கலாம்.. பார்க்கலாம்!" என்று ஓடிவிட்டாள். கீழே கோதாவரி அவளுக்காக காத்திருந்து "என்ன மித்து.. வந்தது பேச கூட இல்லை!" என்றவரிடம் அதிரதன் காதல் இப்படி பைத்தியமாய் ஓடினேன் என்றா சொல்ல முடியும்.

 

*ஸ்கூல்ல ஒரு சம் போட்டேன் அத்த.. அதை பத்தி இவன்கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்! உங்க உபசரிப்புல உக்காந்தா அப்புறம் எல்லாத்தையும் மறந்திருப்பேன்" என்று அவர் கொடுத்த காபியை பருக்கிக் கொண்டிருந்தவளிடம் "ஆர்த்தி பொண்ணு சீக்கிரமா போய்டுச்சு. எப்போதும் சொல்லிட்டு போகும் இன்னைக்கு சொல்ல கூட இல்லை! விடு விடுனு போயிட்டு.. எதாவது திட்டிட்டானா?" என்று புள்ளையை அறிந்தவராய் கேட்க..

 

"இல்ல இல்ல அத்த.. நாங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தோம். அதனால அந்த பொண்ண அனுப்பிட்டான். அது ஏதோ ஞாபகத்துல சொல்லாம போயிருக்கும்" என்ற விளக்கம் கொடுத்தவளுக்கும் அதே யோசனைதான்! எந்த ஞாபகத்தில் அவள் சொல்லாமல் சென்றிருப்பாள் என்று!!

 

"நீ என்னைக்கு அவன விட்டுக் கொடுத்து பேசியிருக்க? இன்னைக்கு பேச!" என்றார் சிரித்துக் கொண்டு..

 

அடுத்த நாள் வந்த ஆர்த்தியின் முகத்தில் புன்னகை இல்லை. சுணக்கமாக இருந்தது. ஆனாலும் அரவிந்த் அதை எதையும் கேட்டுக் கொள்ளாமல் 'நேத்து ஏன் பாதியில் ஓடுன?' என்பதையும் கேட்டுக் கொள்ளாமல் தன் வேலையில் அவன் கவனமாய் இருந்தான்.

 

அவ்வப்போது அவளிடம் கேள்விகள் கேட்டு வேலைகள் கொடுத்துக் கொண்டு இருக்க… கண்ணியவளும் முளைவிட்ட காதல் கருத்தததை எண்ணி கவலை கொள்ள நேரமில்லாமல் கணினியில் மூழ்கினாள்!! 

 

மெல்லிய காதல் சாரல்.. ஆர்த்தியின் மனதில் அரவிந்து மேல் காதல் உண்டானது. ஆனால் தன் குடும்பம் மற்றவற்றை யோசித்தாள். கூடவே யாழினி மற்றும் அரவிந்திடையே இருக்கும் ஒரு நெருக்கம்… "வெறும் சாதாரண பிரண்ட்ஷிப் போல தெரியவில்லையே?" என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று நேற்று அவர்கள் பேசிக் கொண்டதை கேட்டதிலிருந்து மெல்லிய மணம் வீசி பரப்பியது முளையிலேயே கருகிவிட.. இனி அவன் பக்கத்தில் கூட செல்ல கூடாது என்று கவனமாக தவிர்த்தவள் மற்ற வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்.

 

அது என்னவோ அந்த ஆண்களுக்கு பெண்கள் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டால்.. எங்கிருந்து ரோஷம் ஒன்று பாய்ந்து கொண்டு வருமோ? அதுவரை அருகிலே இருப்பவளை இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் என்றாவது ஒருநாள் அவளின் பாராமுகம் இவர்களுக்கு கோபம் முகத்தை தருவிக்கும்.

 

அதேபோலத்தான் அன்று முழுவதும் ஆர்த்தி தன் முகத்தை காட்டாமல், அரவிந்த் சொன்ன வேலைகளை மட்டும் தலை குனிந்து கொண்டு "எஸ் சார்!" "ஓகே சார்!" என்று இரண்டே வார்த்தைகளில் பதில் அளித்துக் கொண்டிருந்தவளை முதலில் வேலைப்பளுவில் கண்டுகொள்ளாமல் விட்டவன் அதன்பின் பார்த்து நெற்றியை சுருக்கினான்.

 

"ஏதும் பர்சனல் ப்ராப்ளமா இருக்கும். கஷ்டப்படும் குடும்பம் என்று மித்து சொன்னாளை அதுல எதாவது குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனையா இருக்கலாம்! அவளால் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் நாமாக கேட்கலாம்!" என்று இவன் அனுமானித்து அவளை அவதானித்துக் கொண்டிருந்தான்.

 

ஆனால் அடுத்து வந்த ஒரு வாரமும் அவள் அப்படியே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க.. ஒரு வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அரவிந்தை நாம் சீண்டி விடுகிறோம் என்று தெரியாமலே…

 

பொறுத்து பொறுத்து பார்த்தவன் ஒரு நிலைக்கு மேல் அவளின் அந்த பாராமுகமும்.. இரண்டு ஒரு வார்த்தை பதிலும் பொறுமையை சுத்தமாக போக்கிவிட…

 

வேண்டுமென்றே அவள் செய்த வேலையை தப்பு என்று இவன் கொடுக்க.. சரி சரி என்று வாங்கிக் கொண்டு சரியாக செய்தவற்றை மீண்டும் தப்பாக செய்து வந்து கொடுத்தாள். அதை வாங்காமல் இருக்கையில் பின்னால் சாய்ந்து கொண்டு வலது கையை தலைக்கு பின்புறம் வைத்துக் கொண்டு அரை வட்டமாக அடித்தவாறு அவளையே பார்த்திருக்க… "என்ன கொடுத்தும் வாங்கிக் கொள்பவன் இவ்வளவு நேரம் வாங்காமல் இருக்கிறானே?" என்று மெல்ல விழிகளை இவள் நிமிர்த்த…

 

அவனோ என்ன என்பது போல ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டான்.

 

அவனின் இறுக்க முகத்திற்கே மயங்கி நிற்பவள் இந்த வசீகரத்தில் மயங்க மாட்டாளா?

அந்த ஒற்றைப்புருவ உயர்வும்.. அவனது தோரணையும்.. அவனின் கவர்ச்சியை மேலும் கூட்ட இன்னும் அழகனாய் தெரிந்தான்!! அவள் மனதில் காதலனாய் பதிந்தான்!!

 

பார்த்த விழி பார்த்தபடி அவனை பார்த்து இருக்க…

 

அவனும் இவளது ஸ்தம்பித்த நிலையை கண்டு யோசனையாக நெற்றி சுருங்க பார்த்தவன் "முடிச்சாச்சா இல்லை நான் வேணா ஒரு கேட்வாக் ஷோ போக வா?" என்று நக்கல் தரித்தது அரவிந்தன் குரலில்.

 

அதில் தன்னிலை மீண்டவள் தலையை தழைத்துக் கொண்டு "இல்லை.. இல்லை சார்!" என்று மீண்டும் அவனை பாராமல் விழியை தாழ்த்திக் கொள்ள…

 

இருவிரலால் சொடிக்கிட்டு அவளை நிமிரச் செய்தவன் "என்ன உன் பிரச்சனை?" என்று கேட்க, அதுக்கும் அமைதியாக இருந்தவளின் கையில் இருந்த பேப்பர்ஸை வாங்கியவன் அவள் முகத்தில் விசிறி அடித்தான் வேகமாய்.. கோபமாய்..

 

அதில் அவள் பயந்து அதிர்ந்து பின்னால் போக.. ஏய்.. என்று மூக்குத்தனத்தோடு வேகமாக எழுந்தவன் அவள் அருகினிலே போய் "என்ன பண்ணிட்டேன்? இல்லை என்ன பண்ணுடுவேனு.. உனக்கு இந்த பயம்?" என்று வினவினான்.

 

அவள் தன் மீது உள்ள பயத்தால் தான் அவனை விட்டு தள்ளி இருக்கிறாள் என்று அவனுக்கு புரியவில்லை. இவளும் புரிய வைக்க எண்ண வில்லை.

 

பயந்தவள் கண்களில் இருந்து கரகர வென்று கண்ணீர் வழிய.. "படுத்துறா!" என்று தலையை தேய்த்துக் கொண்டவன் "இப்ப சொல்லப் போறியா இல்லையா? எதுக்கு இப்படி பண்ற? நானும் ஒரு வாரமா பார்த்துகிட்டு இருக்கேன்.. எஸ் சார்.. நோ சார்.. அதுக்கு மேல எந்த பேச்சு காணும்? அதுக்குன்னு உன்கிட்ட உட்கார்ந்து பேசி சிரிக்க என்கிட்ட டைம் இல்ல. ஆனா ப்ரொபஷனலா ஒரு வேலை செய்யும் போது அதற்கான பேச்சுகள் வார்த்தைகள் உரையாடல்கள் இருக்கும் இல்லையா? அது கூட இல்லாம எதுக்கு நீ? அதுவும் இல்லாம சுத்தமா உன்னோட கவனம் வேலையிலேயே இல்லை!! நீ கொடுத்த பேப்பர்ஸ்.. நீ சரியா பண்ணதை நான் வேணும் தான் தப்புனு சொன்னேன்.. ஆனா நீ திரும்ப போய் அதை மறுபடியும் தப்பா பண்ணிட்டு வந்து கொடுத்து இருக்க! அப்படின்னா உன்னோட நினைவு கவனம் இதில் இல்லைனு தானே அர்த்தம்?" என்றதும் அவள் அவசரமாக அந்த பேப்பரை எல்லாம் எடுத்து பார்த்து அவன் சொன்னது சரி என்று புரிய நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

 

"இன்னும் வேகமா ரெண்டு அடிச்சுக்க.. இல்ல நான் ஏதாவது கட்டை இருந்தா எடுத்து தரவா?" என்று வார்த்தைகளில் விளாசினான் அவளை.

 

"சார்.. ப்ளீஸ்!" என்று மீண்டும் கண்ணீர் கடலானது அவளது கண்கள்.

 

"என்ன ப்ளீஸ்? இதுல எவ்வளவு இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன் தெரியுமா? இந்த ப்ராஜெக்டுக்கு எவ்வளவு செலவாகும்னு உனக்கு தெரியுமா? என் சக்தியை மீறி இதுல நான் இறங்கி இருக்கேன்! எல்லா கவனமும் இதுல இருக்கணாம். இதுல நீ மிஸ்டேக்ஸ் பண்ணா.. இது எனக்கு எத்தனை தூரம் பாதிப்பு ஏற்படுத்தும் தெரியுமா? கொஞ்சமும் கவனம் இல்லாத உன்னோட நடவடிக்கையால் என்னை சுத்தமா வெறுக்க வச்சிடாத. உன்னை விரட்ட வைத்து விடாதே!" என்று அவன் விரல் நீட்டி எச்சரிக்க..

 

தான் செய்த தவறை எண்ணி இன்னுமே அவளுக்கு கண்ணீரை பெருக..

 

"ஜஸ்ட் ஸ்டாப் யுவர் டியர்ஸ் இடியட்!" என்று அவன் கத்த…

 

 இரு கைகளாலும் வாயை பொத்தி விழி விழித்தவாறு நின்றிருந்தவள் மனதை ஏதோ செய்தாள் அரவிந்துக்குள்.

 

"இங்க பாரு ஏதோ கஷ்டப்படுற பொண்ணு நம்மளால ஒரு ஹெல்ப் ஆகட்டும்னு சொல்லி தான் உன்னை இங்க வேலைக்கு வச்சேன்! இப்படியே நீ பண்ணிட்டு இருந்தனு வை நல்லதுக்கு இல்ல! எனக்கு டவுட்டா இருக்கு? நிஜமாவே நீ கஷ்டப்பட்ட ஃபேமில இருந்து வந்தியா இல்ல ஏதோ ஊரை விட்டு ஊரு வந்து ஜாலியா இருக்கலாம்னு வந்தியானு தெரியல!" என்று அவளை பேச வைக்க வேண்டிய கடின வார்த்தைகளை இவன் உபயோகப்படுத்த.. அது தப்பாமல் அவள் நெஞ்சில் நின்று தாக்க.. ஆவேசமாய் நிமிர்ந்தாள் ஆர்த்தி!!

 

"ஆமா ஒதுங்கி ஒதுங்கி போனேன்! மூஞ்ச பாக்கல ஏன் பாக்கல தெரியுமா உங்களுக்கு? சும்மா நினைச்சதெல்லாம் பேசிடாதீங்க!! வார்த்தைகள கவனம் வேணும்" என்று பெருமூச்சு விட்டபடி அவனை பார்த்த ஆர்த்தி அரவிந்துக்கு முற்றும் புதிது!!

 

"ஏன் போன போனனு கேட்டா என்ன சொல்றது? இல்ல ஏன் இப்படி உங்க கிட்ட இருந்து தள்ளி போனேன் கேட்டா என்ன சொல்றது?" என்று தணிந்தவள், "அது ஏன்னு தெரியுமா தெரியுமா?" என்று ஆவேசமாய் அவன் முன்னே நிற்க.. நூலளவு இடைவெளியில் இருவரும் உடல்களும்.. முயன்று ஒரு அடி எடுத்து வைத்தால் தொட்டுக் கொள்ளலாம்! ஆனால் முயலாமல் இருப்பதே நல்லது என்று ஆணின் மனம் எச்சரிக்கை செய்ய.. மெல்ல அவன் இரண்டடி பின்னால் வைக்க.. "சொல்லுங்க!" என்று அவள் முன்னால் ஒரு அடி வைத்தாள்.. அவனை நோக்கி…

 

"என் மனசு முழுக்க‌‌.. நீங்கதான்! நீங்க மட்டும் தான் இருக்கீங்க! எங்கே எனக்கு தெரியாம அதை உங்க கிட்ட சொல்லிடுவேனோன்னு.. என் மனசுல உள்ள காதல கொட்டிருவேனோன்னு.

அதனால… உங்களுக்கும் யாழினி டீச்சருக்கும் இடையில பிரச்சனை வந்துருமோன்னு பயந்து பயந்து தான் ஒதுங்கி போனேன்! ஓரமாய் போனவள. புடிச்சி வச்சி கேள்வி கேட்டா.. இப்படித்தான் பதில் சொல்லுவேன்!" என்று அந்த அறையை அதிர கத்தினாள்

 

"அம்மாடி!! என்ன இவ இப்படி பேசுறா?" என்று அவன் அதிர்ந்து பார்க்க..

 

"எஸ்.. ஐ லவ் யூ! ஐ லவ் யூ!! ஐ லவ் யூ!!!" என்று அவன் அதரங்களை த்ன அதரங்களால் தீண்டி விட்டு தனது ஹேண்ட்பேக் எடுத்துக்கொண்டு வழியும் நீரை புறக்கையால் துடைத்தபடி படி இறங்கி வேகமாக அவள் ஓட… 

 

"என்ன இந்த பொண்ணு இப்படி ஓடுது?" என்று கோதாவரி யோசனையோடு பார்க்க..

 

அறையில் அதிர்

ந்து நின்று இருந்தான் அரவிந்த்!!

 

"எது.. ஐ லவ் யூ வா?? ஐயோ மித்து!!" என்று இம்முறை அவளை நோக்கி ஓடுவது அரவிந்தனின் முறையானது!!


   
Azhagi reacted
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top