ஆருயிர் 5
"சார்.. நீங்க சொன்னதை முடிச்சிட்டேன்! சரியா பாருங்க?" என்று நடுங்கிய குரலோடு கேட்கும் ஆர்த்தியை முறைத்து பார்த்தான் அரவிந்த்.
"எதற்கு இவ இப்படி நடுங்குறா? என்னை பார்த்தால் அரக்கன் போலவா இல்லை அசுரன் போலவா இருக்கு? அட்லீஸ்ட் இந்த ஆன்டி ஹீரோ போல இருக்கேனா? பின்ன இந்த பொண்ணு ஏன் எப்படி பயப்படுது?" என்று கோபம் அவனுக்கு. அவளோ அவன் முறைத்ததில் இன்னும் பயந்தவாறே தான் அவன் கொடுத்த வேலையை காட்டினாள்.
முதலில் சாப்ட்வேர் வேலையை தயாரிக்கும் அதே வேளையில் சிறிய சிறிய ஆப் களையும் இவன் தயாரித்து வெளியிட்டு வந்தான் கூடவே "ஹாய் காய்ஸ் நான் உங்கள் அர்வி…" என்று ஆர்பாட்டமாக ஆரம்பித்து சிறு சிறு வாட்ஸ்அப் அப்டேட் யூடியூப் ஜிமெயில் என்று அவன் கொடுக்கும் குறிப்புகளுக்கு இப்பொழுது ஏக பாலோவர்ஸ். அதிலும் அவ்வப்போது அவனுக்கு ஒரு நல்ல தொகை கிடைத்தது.
அதில் தான் ஆர்த்திக்கு சம்பளம் கொடுத்தான். ஆம் ஆர்த்தி வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது அவனிடம் வேலைக்கு சேர்ந்தது. முதல் மாதம் சம்பளத்தை அவள் கையில் கொடுத்ததுமே அவள் முகம் கனிந்து பணிந்து போனது. கொஞ்சம் எமோஷனலாகவே "ரொம்ப நன்றி சார்… இது சின்ன தொகையாக இருந்தாலும்.. இதோட மதிப்பு எங்க வீட்ல ரொம்ப அதிகம் சார்!" என்று கண்களில் நீரின் பளப்பளப்போடு கூறியவளின் முகம் அவன் மனதில் ஆழப் பதிந்தது.
அவள் தலையில் பின்புறமாக தட்டி "போ.. போ.. போய் வேலையை பாரு" என்று மென்மையாக பேசி சென்று விட்டான். அவ்வப்போது அவன் இது போல அவளிடம் அனுசரணையாக நடந்தாலும், அவனின் அந்த கூர் பார்வையிலும் அழுத்தமான தாடைகளிலும் எப்போதும் ஒரு பயம் உண்டு ஆரத்திக்கு! முதலில் எல்லாம் அப்படி இல்லை என்று அவளிடம் நிரூபிக்க விழைந்தவன் இப்பொழுது அப்படியே விட்டு விட்டான்.
இவனோ அவளை ஏதோ விளையாட்டு பொம்மை போலவே அவ்வப்போது பாவிப்பான். சில சமயம் இவன் சொன்ன வேலையை அவள் வெகு கச்சிதமாகவே முடித்து இருந்தாலும், சிறு குறை சொல்லி அவள் கண்களில் காணும் அந்த பயத்தை இப்போது ரசிக்க ஆரம்பித்து இருந்தான்.
'என்ன வரவர நாமும் அவளோட பயத்தை ரசிக்கிறோம்! அவளை இப்படி ஆட்டுவிக்கிறோம்! ஒருவேளை நாமும் ஆன்டி ஹீரோவா ஆயிட்டோமோ? ச்சச்…. நம்ம ரைட்டருக்கு தான் அப்படி எழுதவே வராதே!! இது எதுவோ புது வியாதி போல…' என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனாலும் இன்னும் இஎம்ஐ கட்டும் அளவிற்கு முழுமையாக அவனிடம் பணம் சேர்வதில்லை. இப்படியும் அப்படி இப்படி என்று அவனுக்கு வரும் வருமானத்தில் முக்கால்வாசி கொண்டு போய் யாழினியின் கையில் கொடுத்து விடுவான். அதுவும் அடுத்தடுத்த இரண்டு மாதங்களில் அவன் கொடுத்ததை பார்த்து அவளுக்கு ஆச்சரியமே!!
எப்படியும் குறைந்தது ஆறு மாதத்திற்கு தான் தான் கட்ட வேண்டியது இருக்கும் என்று அவள் நினைத்திருந்தாள். அடுத்த இரண்டாவது மாதமே இவன் வந்து கொடுத்து விடவும்.. இனி நண்பன் முன்னேறி விடுவான் என்று அவ்வளவு சந்தோசம் யாழினிக்கு.
முகம் சந்தோசத்தில் பூரிக்க.. அப்படியே அதை தன் தந்தையிடமும் தாயிடமும் சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டாள். கூடவே விசுவநாதனிடமும் "மாமா எனக்கு இஎம்ஐ கட்ட பணம் கொடுத்துட்டான் அர்வி.." என்று கூற மனதில் நிம்மதி பிறந்தது விஸ்வநாதனுக்கு.
ஆனால் அவன் கொடுத்த பணத்தை இவள் தொடவில்லை. அவள் நினைத்து இதுபோல முதல் ஆறு மாதத்திற்கு அவளே இஎம்ஐ கட்டினாள். அவனிடம் அது பற்றி எதுவும் கூறவில்லை. அர்விந்த் இவ்வளவு கொடுத்திருக்கிறான் என்று கணக்கு மட்டும் வைத்திருந்தாள் யாழினி.
அதிரதன் மூன்று மாதங்களாக இங்கே இந்தியாவிலேயே இல்லை செவி வழி செய்தியாக அவனின் சர்வதேச கம்பெனிகளின் எதோ புது முயற்சியாய் சில பல வேலைகள் செய்வதால், அவன் முழுமூச்சாக அங்கே இருப்பதாக தகவல் தான் வந்தது.
"அப்போ விருட்சத்தை எதற்கு ஆரம்பித்தான்? சரியான லூசு பயல்! இந்த பணக்காரன்களே இப்படித்தான்.. ஒரு தொழில் ஆகாது ஆக்டோபஸ் மாதிரி எங்க பாத்தாலும் கையை விரித்து எல்லாத்தையும் கைய வைக்க வேண்டியது. அதை ஒழுங்காக பண்ண வேண்டியதுதானே? எதுக்கு எங்க உழைப்பையும் சேர்த்து வீணடிக்கிறான்!! இதற்காக நான் எவ்வளவு ரெபர் செய்தேன்" என்று திட்டிக் கொண்டே அவ்வப்போது அவன் மெயிலில் அனுப்பும் வேலைகளுக்கு செய்து கொண்டிருந்தாள்.
அன்றும் அதுபோல தான் இவர்கள் விருட்சம் டீமுக்கு என்று இருக்கும் தனி அலுவலக அறையில் அமர்ந்து புலம்பியவாறு கணினியில் வேலை செய்து கொண்டிருந்தாள். இடைவெளியில் கொடுத்த டீக்கு தொட்டுக்கொள்ள அதிரதனை தான் கடித்தும் நின்று கொண்டிருந்தாள் யாழினி. இன்று சரண் வரவில்லை. ஆக இவள் தனியாக வேலை செய்து கொண்டிருக்க..
"திட்டி முடித்து விட்டாயா? இல்லை மிச்சம் இது எதுவும் வைத்திருக்கிறாயா?" என்று அருகில் கேட்ட குரலில் யாழினி அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க..
நிமிர முடியாமல் அவள் பின்னால் இருந்து டேபிளை பிடித்துக்கொண்டு முன்னே இருந்த கணினியில் இருப்பவற்றை பார்ப்பது போல மிக அருகில் இருந்தான் அதிரதன்!!
அவனின் இந்த அருகாமையும்.. கூடவே இவ்வளவு நேரம் அவனைத் திட்டிக் கொண்டிருந்ததை கேட்டிருக்கிறான் என்பது தெரிந்ததுமே.. குப்பென்று வியர்த்து விட்டது பெண்ணவளுக்கு!!
"அது… அது…" என்று அவள் நாக்கு தந்தி அடிக்க…
"ம்ம்… அது இல்லை… அதி! மை நேம்" என்றான் இன்னும் நெருக்கமாக அவள் கண்களில் பார்த்து!
மயிலிறகு போன்று மென்மையான அவனது குரலில் அதிர்ந்து அவனை பார்த்தாள் யாழினி. இதுவரை இவனிடம் இல்லாத பாவம் இது!!
'எப்போதும் அதிரடியாக தன் கண்களாலேயே மிரட்டி எடுப்பவன் இன்று என்ன அதிசயமாக இப்படி குலைகிறானே?' என்று அவள் பார்க்க…அவனும் அவளது கண்களை தான் பார்த்து இருந்தான். இல்லை இல்லை ரசித்துக்கொண்டிருந்தான்.
அவன் கண்களில் தெரிந்த ரசிப்பு பாவனையில் சட்டென்று அதிர்ந்து எழுந்தவள், அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள் படபடப்பு கூடியது அவளுக்கு. "ஏன் இவன் இப்படி பார்க்கிறான்?" என்று!! அதே சமயம் "எப்படி இவன் இப்படி பார்க்கலாம்?" என்றும் கோபத்தில் சிவந்தது அவளது அழகிய வதனம்!!
தூக்கி போட்ட கொண்டையும் பாவ வடிவ நெக்கில்ல் திரட் கட்டி இருக்க.. இவளது பதட்டத்தினால் வியர்த்திருக்க.. அவளது பின்னழகை தான் ரசித்து இருந்தவன், கழுத்திலிருந்து வழிந்த வந்து ஒற்றைத் துளி வியர்வை அவளது முதுகு பரப்பை தாண்டி ஓடுவதை கண்டவன் கைகள் பரப்பரத்தன அதனை தடுத்து நிறுத்த… ஆனாலும் அடக்கிக் கொண்டான்.
அவனுக்கு முதுகு காட்டி நின்றவளின் காதோரம் சென்றவன் "எந்த பக்கம் திரும்பி நின்றாலும் நீ அழகு தான் யாழு!" என்றான் அதி மென்மையான குரலில்.
அவள் காதுக்கு அருகில் கேட்ட அவனின் குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க.. மிக அருகில் நின்றவனை கண்டதும் இன்னும் பயந்து இரண்டடி பின்னால் செல்ல.. ஆனால் அங்கே கணினியை தாங்கி இருந்த டேபிளோ இவள் வரவை தடுத்து நிறுத்த.. சற்றென்று இடித்துக் கொண்டு இஸ் என்று வலியை அவள் கண்கள் காண்பிக்க.. அதையும் ரசனையோடு ருசித்தன அதிரதன் கண்கள்!!
"சோ க்யூட் யுவர் ஐஸ் யாழு… எப்படி பார்த்தாலும் நீ ரொம்ப அழகு!! என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற.. அதிலும் இந்த மூக்குத்தி.. ம்ம்!!" என்று அவளின் இடது புறம் இருந்த மூக்குத்தியை ஒற்றை விரலால் தொட எத்தனிக்க.. சட்டென்று அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"இப்போ இன்னும் க்யூட்!" குறும்பு குரலில் கூறியவனின் குரலில் ரசனையைத் தாண்டி வேறொரு உணர்வும் கலந்து வந்தது. அது உரிமையா? இல்லை விகற்பமா? என்று புரியவில்லை யாழினிக்கு அவள் இருந்த பதட்டத்தில்!!
"சார் நீங்க இந்த ஸ்கூலோட கரஸ்!! நான் இங்க வேலை பாக்குற டீச்சர்.. நீங்க இப்படி பாக்குறது பேசுறது எதுவும் எனக்கு பிடிக்கல. கீப் டிஸ்டன்ஸ்!!" என்று அவன் கூர் பார்வையை தவிர்த்தபடி திணறலோடு கூறி முடித்தாள் யாழினி. ஏனோ அவனின் இந்த கண் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.
"எஸ்!! கரஸ் தான்.. பட் உன் மேல க்ரஷ்!! இந்த த்ரீ மன்த் டைம் உன்னை எனக்கு ரொம்பவே உணர்த்திட்டு!! பார்த்தவுடனே நீ என்னை ஆக்கிரமித்த.. அதும் பழக ஆரம்பித்தவுடன் உன்னை என்னால் விலக்கி வைக்க முடியவில்லை. ஆனால் இப்போதோ முற்றும் முதலா நீ இங்கே…!!" என்று இதயத்தை தொட்டு காட்டியவனை அவள் அதிர்ச்சியோடு பார்த்து இருந்தாள்.
'என்ன இவன் இப்படி பேசுகிறான்? இவனா இப்படி பேசுவது? இருக்காது! இவனுக்கு மண்டையில் ஏதும் அடிபட்டு விட்டதா? ஏதும் மூளை குழம்பி விட்டதா? இல்ல ஏதோ வேலை என்று வெளிநாட்டுக்கு சென்றானே அங்கு ஓவர் வேலையில் மூளை ஓவர் ஃப்லோ ஆகிவிட்டதோ?' என்று அவன் உணர்ந்து கூறும் வார்த்தைகளை இவள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.
கிட்டத்தட்ட அவள் ஆராய்ச்சி இவன் பைத்தியமா என்றுதான்!!
"ஐ அண்டர்ஸ்டேண்ட்! நீனும் நானும் இருக்கும் இந்த பொசிஷன் ரொம்ப கௌர்வமான பொசிஷன். அதுலயும் இல்லாம பல பேருக்கு வழி காட்ட வேண்டிய பொசிஷன் தான். ஆனாலும் என்னால் உன்னை பார்த்த பிறகு.. நான்.. நானாக இருக்க முடியல" அவன் பேசுவதை புரியாத மொழி போலவே இவள் பார்த்தாள்.
"ஐ அண்டர்ஸ்டேண்ட்!! உடனே உன்னால் ஒத்துக்க முடியாது தான். யூ நீட் டைம்! ஆனா… மொத்தத்துக்கும் தடை போட வேண்டாம் ஆனால் இந்த ஒற்றை பார்வை.. வார்த்தைக்கு எல்லாம் தடா போடாத யாழு! ரொம்பவே உன்னால ஏங்கி போயிட்டேன்!" என்றவன் அவளது மூச்சுக்காற்று அவள் முகத்தில் அறையும்படி இன்னும் நெருங்கி வந்து நின்றான்.
அவனது அருகாமையிலோ அல்லது அவனது பேச்சிலா ஏதோ ஒன்று இதுவரை தக்கி திணறி வந்து கொண்டிருந்த யாழினி மூச்சுக்காற்று அவனது கடைசி வார்த்தையில் ஸ்தம்பித்து நின்று விட்டது. அதிர்ந்த அவளது முகத்தையும்.. விரிந்த அவளது கண்களையும்.. பிளந்த அவளது இதழ்களையும் கண்டவனுக்கு இன்னும் காதல் பெருக்கெடுக்க…
"இப்படி எல்லாம் என்னை பார்க்காத பேபி!! ஏற்கனவே உன்னை விட்டு தள்ளி இருக்க முடியாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். எப்படி நீ பார்த்தால் நான் பிளாட்டு தான்!! முதலிலேயே உன்னை விட்டு என்னால் விலகி இருக்க முடியாது. அவ்வப்போது உன்னை என் கண்களில் நிரப்பிக் கொண்டே இருப்பேன். ஆனால் இப்போது உன்னை எங்கே சுமக்கிறேன்.. இனி எப்படி விட்டு தள்ளி இருக்க?" என்று இன்னும் இடைவெளியை அவன் குறைக்க…
'இவன் வந்ததிலிருந்து உளறிக் கொண்டே இருக்கிறானே என்னதான் சொல்கிறான்?' என்று நினைத்தவள், "எதையும் சுருக்கமாக தெளிவாக உங்களுக்கு பேசத் தெரியாதா?" என்று கேட்டாள்.
"அடிப்பாவி!! இவ்வளவு நேரம் என் மனதை உருகி உருகி உன்னிடம் கூறிக் கொண்டிருந்தேன். இப்படி சொல்றாயே? அவ்வளவு மக்கா நீ!! நீயெல்லாம் எப்படி மேக்ஸ் டீச்சர் ஆனாய்? இல்லை இந்த மாதிரி விஷயத்தில் லேட் பிக்கப் ஆக இருக்கிறவர்கள் தான் படிப்பில் முதலாவதாக இருப்பார்களாம்" என்று அவன் கேலியாக கூற.. இப்பொழுது அவளது கண்கள் அவனை முறைக்க அதையும் ரசித்துப் பார்த்தான் அதிரதன்!!
"உனக்கு புரியிற மாதிரி சிம்பிளா ஷார்ட்டா சொல்லணும்…" என்று நொடி தமாதித்தவன், "ஐ லவ் யூ!" என்றான் அதிரடியாக.. அதிரதன்!!
"வாட்??!!" என்றதும்.. முகத்தை திருப்பி சிரித்துக் கொண்டவன் "ஹே பேபி… நான் ஒரு பிசினஸ் மேன். சும்மா சும்மா இந்த வார்த்தை சொல்ல எனக்கே ஒரு மாதிரியா.. டீன் ஏஜ்ட் ஃபீலா இருக்கு. ஆனாலும் இந்த பீல் நல்லாத்தான் இருக்கு" என்றவன் அவள் கண்களை நேராக பார்த்து "ஐ லவ் யூ யாழினி. இனி இந்த யாழு எனக்கு மட்டும்தான்!!" என்றவன் கண்களில் இருந்த ஒன்றை யாழினியால் அப்போது படிக்க முடியவில்லை
"ஓஹ்…நோ.. நோ.. நோ.. நோ!" என்று கத்தியவள் இரு கைகளாலும் அவன் திண்ணிய மார்பில் வைத்து தள்ளி விட்டு "அர்வி..!!" என்றபடி பேகை தூக்கிக் கொண்டு ஓடியே விட்டாள் அந்த அறையை விட்டு…
எப்படி வண்டியை எடுத்தாள்? எப்படி வீட்டிற்கு வந்தாள்? என்று கேட்டால் அவளுக்கு தெரியாது. நேரா அவள் வீட்டுக்கு வரவில்லை. வந்தது விஸ்வநாதனின் வீட்டுக்குத்தான்!! அவசரமாக ஓடி வந்தவளை கோதாவரி என்ன என்று கேட்கும் முன்.. "அத்த மேல் அர்வி இருக்கானா?" என்று கேட்டு அதற்கு பதில் பெறாமல்.. அப்படியே இரண்டு இரண்டு படிகளாக தாவி சென்றாள்.
உள்ளே ஏதோ ஒரு வேலையில் ஆர்த்தியும் அரவிந்தம் இருக்க ஓடி வந்து அவனை எழுப்பி தள்ளி அழைத்து வந்தவள், அவனது புஜத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டு அதில் நெற்றியை மூட்டிக்கொண்டு நின்றாள். அவளது உடல் படபடப்பாய் தெரிய.. ஏதோ பயந்திருக்கிறாள் என்று நினைத்தான். அவளின் பயங்கள் எதற்கு என்று அவனுக்கு தெரியும்.
ஒன்றும் பேசாமல் அவளது தலையை ஆதூரமாக தடவி தோளை தட்டிக் கொடுத்து "ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ் மித்து!" என்றான். அவர்கள் இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் ஆர்த்தி
"எதுக்குடி.. இப்படி பேய் அடிச்ச மாதிரி ஓடி வந்த? என்ன ஆச்சு ஏன் இந்த படப்படப்பு?" என்று அவள் முகத்தை நிமிர்த்தி இவன் கேட்க…
இவளோ எதை சொல்ல? எதை விடுக்க? என்று புரியாமல் குழம்பி போய்…" ஐ லவ் யூ!" என்றாள் அரவிந்தை பார்த்து மொட்டையாக..
அதில் அரவிந்த் அதிர்ந்தானோ இல்லையோ அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்த ஆர்த்தி விரைவாக அவ்விடம் விட்டு விரைந்து சென்றாள்.