தோகை 27

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 27

 

சூர்யப்ரகாஷை கண்டதுமே அல்லு விட்டது ஹர்ஷத்துக்கு!! இவ்வளவு நாட்களாக அவன் வெளிநாட்டில் இருந்ததற்கு எங்கே தனது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயமும் ஒரு காரணம்!!

 

"ஏன்? ஏன் என்னை கைது செய்றிங்க? நான் என்ன தப்பு செஞ்சேன்? முதல அதுக்கு விளக்கத்தை கூறுங்க!!" என்று படபடப்போடு கேட்டான் ஹர்ஷத்.

 

"இது நீங்க நாலு வருஷம் முன்னாடி வேலையை பார்த்து மருத்துவமனையில் இருந்து கொடுக்கப்பட்ட புகார். அங்க நீங்க இன்ஃபெர்டிலிட்டி செக்மெண்ட்ல ஒர்க் பண்ணும் போது நீங்க செஞ்ச பிராடுத்தனம் எல்லாம் இப்போ அம்பலமாகி இருக்கு!! தட் மீன்ஸ்.. டெஸ்ட் பேபிக்குனு வர கப்புள்ஸ் கிட்ட அவங்க ஹஸ்பண்டோட ஸ்பேர்ம் தான் பொய் சொல்லி வேற யாருடையாவது மாற்றி வைத்தது... நிறைய லேடிஸ் கிட்ட அன்அபிஸியலா எக் கலெக்ட் பண்ணி உங்க ஆராய்ச்சிக்காக யூஸ் பண்ணிக்கிட்டது... ப்ராப்பரா ஸ்பேர்ம் டொனேஷன் ஃபார்ம் இல்லாம அவுட் ஆஃப் த ஃபார்ம்ல நிறைய பேர் கிட்ட இருந்து வாங்குனது... என்று ஏகப்பட்ட கம்ப்ளைன்ட்!! டாப் அப் தி மோஸ்ட்... உங்க வைஃப் நந்தினிக்கு கூட, இதே முறையில் நீங்க ருத்ரன் டொனேட் பண்ண ஸ்பேர்ம்யை வைத்து விளையாடிருக்கீங்க.. விளைவு ஆதினி!!" என்று அவனது சகல குற்றங்களையும் ஆளுமையான குரலில் அழுத்தமாக கடகடவென்று கூறியவனை.. அதிர்ச்சி நிறைந்த முகங்களோடு பார்த்தனர் துர்காவும் மகாதேவனும்!!

 

"பொய்!! பொய்!! எல்லாம் பொய்!! அவன் சொல்றதை எதுவும் நம்பாதீங்க அங்கிள்... இந்த கலெக்டர் ஏதோ பிளான் பண்ணி என்ன சிக்க வைக்க என்றே இப்படி பண்றான். ஏற்கனவே போலீஸ வச்சு விரட்டியவன் தானே... இப்போ அதேபோல அவன் அதிகாரத்தை யூஸ் பண்ணி என்னை அடிக்க பார்க்கிறான்!!" என்று ஆர்ப்பாட்டம் பண்ணினான் ஹர்ஷத்!!

 

"ஆமா… நான் தான் பண்ணுனேன்!! பட் ஒரே ஒரு கேஸ் மட்டும்தான் நான் பைல் பண்ண சொன்னேன். ஆதினிக்காக..‌ மீதி எல்லாம் நீ செஞ்ச சித்து விளையாட்டின் விளைவு ஹர்ஷத்!!" என்று அவனிடம் கூறிய ருத்ரன், சூரிய பிரகாஷிடம் திரும்பி "வெரி பாஸ்ட் கூடவே இத்தனை கேஸ் எதிர் பார்க்கல ஏசிபி சார்!!" என்றான் மெச்சுதலாக!!

 

"தோண்ட தோண்ட வந்துகிட்டே இருக்கு சார்!! என்ன பண்றது? இவர பத்தி ஒரு டீடைல்ஸ் தோண்ட போனா.‌. அவ்வளவு விஷயம் வெளிய வருது, அலிபாபா குகை புதையல் போல…" என்று சிரித்தவன் "நடங்க.. நடங்க.. டாக்டர்!!" என்று கூட வந்த காப்ஸை பார்க்க… ஹர்ஷத்தை கதற கதற அள்ளிக்கொண்டு சென்றார்கள் வைத்தியனை வைத்தியம் பார்ப்பதற்கு காவல் துறையினர்.

 

துர்காவு நெஞ்சில் கை வைத்து அமர்ந்து விட்டார். "துர்கா..!!" என்று மகாதேவன் அழைக்க..‌ முறைப்போடு மகாதேவனை பார்க்க..‌‌ அவர் பயந்து துர்காவின் காலடியில் சரணாகதி அடைந்து விட்டார்.

 

"துர்கா சத்தியமா இதெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது!! என் பிரண்டு பையன் டாக்டரா இருக்கானே‌.. அதுவும் எனக்கு அப்புறம் ஹாஸ்பிடல்ல நல்லா பாத்துக்குவானேனு ஒரு எண்ணத்தில் மட்டும் தான் செய்தேன். மற்றபடி இவன் இவ்வளவு தப்பானவன் என்று எனக்கு தெரியவே தெரியாது!!" என்று மனைவியை துணை என்று விழுந்தே விட்டார்.

 

"அந்த ஏசிபி சொன்னதெல்லாம் கேட்டீங்க தானே? அவன் பழைய ஹாஸ்பிடல் அத்தன திகுடுத்தனம் பண்ணி இருக்கான். இங்க இருந்த இவ்ளோ நாள் என்ன என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியலையே? நல்ல வேலை இன்னும் அவனை நம்பி இன்பெர்டிலிட்டி செக்ஷனை முழுசா கொடுக்கல.. ஆனாலும்… அதெல்லாம் சரி வேற பாக்கணும்!!" என்று மருத்துவராய் அதில் கவனத்தை திருப்பினார்.

 

 பின் ருத்ரனிடம் திரும்பி "உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும் மாப்பிள்ளை!! இப்படி ஒரு அயோக்கியனை எங்களுக்கு காட்டிக் கொடுத்ததுக்கு... இப்ப நான் மகதிய என் கூட அழைச்சிட்டு போறேன்... முறையா கல்யாணம் நடத்தி அப்புறம் உரிமையா உங்க கிட்ட கொண்டு வந்து விடுறேன் மாப்பிள்ளை!!" என்றதும் மகதி பாய்ந்து ருத்ரன் பின்னால் ஒளிந்தால் தந்தையை பார்த்தவாரே!!

 

மகளின் அந்த ஒரு ஒதுக்கம்..

ஒரு பயந்த பார்வை... அவரை சின்னாபின்னமாக சிதைத்தது!!

தான் தவறவிட்ட வார்த்தைகளால்… 

 

விட்ட வார்த்தையில் விட்டதுதான்!! எவ்வளவு காலமானாலும் அதன் வலி தழும்பாய் நெஞ்சில் நிலைத்திருக்கும்!!

 

"பேபி.. பேபிமா.. மகதி சத்தியமா அப்பாவும் அந்த அர்த்தத்துல சொல்லல டா!! அது.. அது.. அந்த... ஹர்ஷத் ஏதோ சொல்லி நானும் ஏதோ…" என்று என்ன சொல்லி மகளை சமாதானம் செய்வது? என்ன வார்த்தைகளால் அவளை தேற்றேவது? என்று புரியாமல் தவிப்போடு ருத்ரனின் முன்பக்கமும் பின்பக்கமும் சுற்றி சுற்றி வந்தார் மகளை பார்க்க..

 

அவளோ ருத்ரன் மார்போடு முகத்தை புதைத்துக் கொண்டு தந்தையை திரும்பி பார்க்கவே இல்லை!!

 

"நல்லா வேண்டும் இந்த மனிதருக்கு!! அடுத்தவன் சொன்னா அப்படியே ஆடுவாராமா? யோசிக்க வேண்டாம்? டாக்டருக்கு படிச்சா மட்டும் போதுமா? யோசிக்க வேணா? பகுத்தறிவு இல்லாத பட்டம் கொடுத்த அறிவு என்னத்துக்கு?" என்று கணவனின் காது படவே கோபமாக பொறிந்தார் துர்கா.

 

ருத்ரனுக்கும் அப்போது அவர் பேசியபோது மகா கோபம் இருக்கத்தான் செய்தது. ஆனால் இவர் எடுப்பார் கைபொம்மை!! இப்படி அவர் தவியாய் தவிக்கும் போது.. தந்தையாய் அவர் மனம் புரிய "கொஞ்சம் கேப் விடுங்க சார்!! அவ சரியாக டைம் எடுக்கும்!!" என்றவன் துர்காவின் புறம் திரும்பி "இப்ப மகி அங்க வர்றது அவ்வளவு சரியா இருக்காது அத்தை. நீங்க மத்ததெல்லாம் ஏற்பாடு பண்ணுங்க!! எங்க வீட்ல இருந்து நாங்க கல்யாணத்துக்கு வரோம்" என்றான்.

 

 "அதற்கு முன்னால் சில பல ஏற்பாடுகள் எல்லாம் இருக்கு செய்ய…" என்றவன் "அம்மா கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இரு மகி!! எனக்கு கமிஷனர் ஆபீஸ்ல கொஞ்சம் வேல இருக்கு முடிச்சுட்டு போகும்போது உன்னை கூப்பிட்டுக்கிறேன்" என்றதும் தவிப்போடு அவள் பார்க்க தலையாட்டி துர்காவை காட்டி சமாதானப்படுத்தினான் ருத்ரன்.

 

இவன் சூரிய பிரகாஷ் ஆஃபீஸிற்கு வந்து தனி அறையில் இருந்த ஹர்ஷத்தை பார்த்தான். 

 

காவல்துறை தன் கடமையை செவ்வனே ஆற்றி இருந்தது!!

 

அதாவது வைத்தியனுக்கு நல்லபடியாக வைத்தியம் பார்த்து இருந்தது!!

 

"வாங்க கலெக்டர் சார்!! எப்படி எங்க ட்ரீட்மென்ட்?" என்று எஸ்பி கேட்க.. பிரமாதம் என்று கைகாட்டினான் ருத்ரன்.

 

ஹர்ஷத் முன்னால் அமர்ந்த ருத்ரன் "ஏன் இப்படி எங்க வாழ்க்கையில குளறுபடி பண்ணுன? நந்தினி உனக்கு அப்படி என்ன பாவம் செஞ்சா? அவளை விரும்பி தான கல்யாணம் பண்ணிக்கிட்டே? அப்புறம் ஏன்டா அப்படி படுத்தி எடுத்த அவளை?" என்று அத்தனை நாள் மனக்குமுறல்களை கோபத்தோடு கொட்டி தீர்த்தான் ருத்ரன்.

 

குரோதத்துடன் ருத்ரனை பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷத்தை கண்டவனுக்கு, அவ்வளவு ஒரு கோபம்!! ஆனால் தான் கை வைத்தால் பிரச்சனை வேறு விதமாக மாறும் என்பதால் தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆனால் ஹர்ஷத்திற்கு அதெல்லாம் தேவையில்லை அல்லவா? அவனது வாய் அடங்க மாட்டேன் என்றது!!

 

"அப்படி என்னடா பெருசா தப்பு பண்ணிட்டேன் நான். அவள பாத்து ப்ரொபோஸ் பண்ணனேனா? இல்லை கை பிடித்து இழுத்தேனா? வேற ஏதாவது சில்மிஷன் பண்ணனேனா? நான் கண்டுக்காம என் வேலையில தான் இருந்தேன். இதுக்கு அந்த அடி அடிச்ச... அப்பவே முடிவு பண்ணிட்டேன் அவளை கதற வைக்க வேண்டும் என்று!!" கண்கள் பழிவெறியில் மின்ன... அதை கண்ட ருத்ரனுக்கு பிரச்சனையின் ஆரம்ப புள்ளி புரிந்தது. தவறாக புரிந்து கொண்டிருக்கிறானே என்று கோபமாக வந்தது.

 

"லூசாடா நீ? நம்ம பக்கத்துல ஒரு பிரச்சனை நடக்குதுன்னா அது என்னன்னு கூட திரும்பி பார்க்காத அளவுக்கு படிப்பு என்ன வேண்டி கிடக்கு உனக்கு? படிப்பு கல்வி அறிவு தான் சொல்லி இருக்காங்க அப்படின்னா நம்ம அறிவை மேம்படுத்துவது! ஆனால் நீ எல்லாம் என்னத்த படிச்சு கிழிக்கிறீங்கன்னு தெரியல? அவங்கள தட்டி கேக்கலைன்னாலும் பரவாயில்லை.. வெளில போய் பண்ணனுங்கனு ஊக்கப்படுத்துற?" என்றான் ருத்ரன் ரௌத்திரமாக!!

 

அதற்கு பதில் அளிக்கவில்லை முடியாமல் விரும்பாமல் முகத்தை திருப்பிக் கொண்டான் ஹர்ஷத். ஆனாலும் அவனின் கோபம் அடங்க மறுத்தது.

 

ருத்ரனிடம் சொன்னது போல முதலில் விளையாட்டுக்காக அந்த நேரம் அவன் ப்ரொபோஸ் செய்தாலும், நாளடைவில் அவளது அழகும் குணமும் அவனுக்கு பிடிக்கத்தான் செய்தது. தான் கொண்ட கோபத்தை.. பழி உணர்வை.. மறந்து அவன் அவளிடம் காதலோடு இணைகையில் எல்லாம் ருத்ரனின் பெயர் அடிபடும் போது காதல் மறந்து.. கடமை மறந்து.. கட்டம் கட்டவே நினைத்தான். அதில் பலியாக போவது தன் மனைவியும் தன் காதலும் என்ற எண்ணமே இல்லை அவனுக்கு.

 

"என்னை அடித்து இருக்கலாம்!! இல்லை உன்னால முடியலைன்னா ஆள விட்டாச்சாச்சும் அடிச்சு இருக்கலாமே டா…" என்று கையை முறுக்கி கட்டிகொண்டு அவன் அமர்ந்திருந்த விதமே, ருத்ரன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறான் என்று புரிந்து கொண்டான் அருகில் இருந்த சூரிய பிரகாஷ். ஆனால் இவர்களின் இருவரின் விவாதங்களுக்கு இடையில் அவன் வரவே இல்லை. அவர்களே பேசி முடிக்கட்டும் அவதானித்தபடி இருந்தான்.

 

"அடிச்சா ??? அந்த ஒரு நாளைக்கு மட்டும் நீ வலியில துடிப்ப... ஆனா அந்த வலி உன் வாழ்நாள் ஃபுல்லா இருக்கனும்னு நினைச்சேன். அதுக்கு உங்க ரெண்டு பேரையும் பிரிக்கத்தான் அவளை காதலிப்பது போல் நடிச்சேன்!! ஆனால் அந்த நடிப்பு ஒரு கட்டத்தில் உண்மையா மாறினது!! அப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இடையில் நீ தான் இருந்த... எங்களுக்கான நேரத்தில் கூட அவ உன்னை பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். அதை என்னால் சற்று பொறுத்துக் கொள்ள முடியவில்லை"

 

"அப்படி என்னடா பெரிய ஃபிரண்ட்ஸ் நீங்க ரெண்டு பேரும்? ஊரில் உலகத்தில் இல்லாத பிரண்ட்ஸ்!! அவனவனுக்கு குடும்பம் னு வந்ததுக்கு அப்புறம் பிரண்ட்ஸ் என்ன பெரிய ஃப்ரெண்ட்ஸ் வேண்டி கிடக்கு? ஒவ்வொரு விஷயத்திலும் உன்னை என்னுடன் அவள் கம்பேர் செய்தாள். கணவனோட அன்பும் நண்பனுடன் அன்பும் ஒன்றா டா ஒன்றா?" என்று எகிறி வந்து ருத்ரன் முன்னால் பார்த்து கேட்ட ஹர்ஷத்தை கண்டவனுக்கு, அவனின் மனம் புரிய தான் செய்தது ஒரு ஆணாக!!

 

"கண்டிப்பாக இல்லை தான்!! நண்பனுடைய அன்பு வேற... கணவனின் காதல் வேற வேறு தான்!! ஆனால் அதனை அவளிடம் பேசி இருக்கணும் இல்லை.. என்னிடம் அது ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் உங்கள் இரண்டு பேருக்கு இடையில் வராமல் நான் எங்காவது சென்றிருப்பேனே? ஆனால் அதை எல்லாம் விட்டுட்டு அவளிடம் என் குழந்தையை வளர வைத்திருக்கிறீயேடா… பாவி.. படுபாவி!!" என்று தாங்க முடியாமல் கைகளை டேபிளில் தட்டி தட்டி குமுறினான் ருத்ரன்.

 

"தோழினா என்னனு தெரியுமாடா? அதுவும் நந்தினி எனக்கு எப்பேர்பட்ட தோழி தெரியுமா? அம்மா அப்பா இல்லாமல் மாமாவோட ஆதரவு மட்டும் இருந்த எனக்கு அம்மாவோட அன்பை காட்டியவள்... சகோதரியாய் சண்டையிட்டு உரிமை கொண்டாடியவள்... மகளாய் பாசத்தை காட்டியவள்.. தோழியை அரவணைத்துக் கொண்டவள் இப்படி அனைத்துமாய் இருந்தவளிடம் மனைவியை காண முடியுமா? ஆனால் நீ என்னடா செஞ்சு வச்ச..." என்று அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த ஆத்திரம் தலைக்கேற விட்டு வெளுத்து வாங்கி விட்டான் ஹர்ஷத்தை ருத்ரன்!!

 

சூரிய பிரகாஷூம் அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ருத்ரன் மனதில் இருந்து கோபம் தணிந்தால் தான் அவனால் அவன் வாழ்க்கையில் நிம்மதியாக மனைவியோடு வாழ முடியும். இல்லை இது எல்லாம் அவனை அரித்து அரித்து அவனை அழித்து விடும். ஒரு நல்ல கலெக்டருக்கு தன்னால் முடிந்த உதவி என்று அமைதியாக இருந்தான்.

 

"ஆமாண்டா கடைசி வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ப்ரண்டா தான் இருந்தீங்கன்னு என்னை நம்ப சொல்றியா? ஒரு முறை கூட அவள அப்படி இப்படி பார்க்கல? ரசிக்கல?" என்று ஏளனமாக உதட்டை வளைத்தவன் உதட்டை கிழித்தான் ஒரே குத்தில் ருத்ரன்.

 

"உன்னை மாதிரி நாதாரிக்கலாம் அந்த அன்பு புரியாது!! ஆணும் பெண்ணுக்கும் இடையில் நட்பு தாண்டி வேற எதுவும் இருக்குமோ என்று சந்தேக புத்தி உள்ளவர்களுக்கு புரியாது எங்களின் ஆத்மார்த்தமான நட்பு!!

அதை உன்னிடம் விளக்க எனக்கு தேவையே கிடையாது!! இனி நீ எங்கேயும் பிராக்டிஸ் செய்ய முடியாதபடி செய்து விடுகிறேன் பாரு டா!!" என்று கர்ஜித்தவன் சூரிய பிரகாஷிடம் திரும்பி "எஸ்பி சார் நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கட்டும்!! இனி வெளியே வரக்கூடாது" என்று கண்களால் அவனிடம் பேசி விட்டு சென்று விட்டான்.

 

சூரிய பிரகாஷின் முகத்தில் தெரிந்த அந்த சிரிப்பில் ருத்ரனிடம் கொள்ளாத பயம் குடி கொண்டது ஹர்ஷத்துக்கு!! "அரசு அந்த லத்தியை கொண்டு வாங்க!!" என்றவனின் குரலில் மொத்தமாய் ஆடித்தான் போனான் ஹர்ஷத்!!

 

அவன் சொன்னது போல மருத்துவமனைக்கு சென்று மனைவி அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்குள் நுழையும் முன் "டாடி வெயிட்!! மம்மியோட வெயிட் பண்ணுங்க அங்கேயே!!" என்று குரலில் சந்தோஷ மின்னல்கள் மகதியின் மனதில்…

 

அவர்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள் ஆதினி முகம் கொள்ளா சிரிப்போடு!! அவளுக்கு பின்னே சொர்ணமா ஆரத்தி தட்டோடு வர மூவரையும் சேர்த்தே ஆலம் கரைத்து பொட்டிட்டார்.

 

காலை முதல் அவள் தவித்து தவிப்பு என்ன? ஒற்றை சொல்லில் அதை தவிர்த்து எறிந்த ஆதினியின் அன்பு என்ன? சிலர்த்துப் போனாள் மழலையின் அழைப்பில் மகதி!!

 

 

உள்ளே நுழைந்த மருமகனை ஆதரமாக தழுவிக் கொண்டார் ராமஜெயம். மனைவி மகளோடு அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான் ருத்ர பிரதாப். "இதே போல எப்பவும் கண் நிறைந்த குடும்பத்தோடு முகத்தில் வாடாத புன்னகையோடு வளமோடு வாழனும் பிரதாப்பா.. தீர்க்க சுமங்கலியா சௌபாக்கியவதியா மனமகிழ்ச்சியோடு மனநிறைவோடு உன் கணவனோடு வாழ வேண்டும் மகதிமா!!" என்று மனதார ஆசி கூறினார்.

 

"தாத்தா எனக்கு ஒன்னும் சொல்லவே இல்லையே?" என்று உதட்டை பிதுக்க... ஆதனியை தூக்கி அணைத்தவர் "நீண்ட ஆயுளோடு குறைவில்லாமல் செல்வத்தோடு உன் சிறு கால் தடம் இவ்வுலகில் பெரிய தடங்களை பதிக்க வேண்டுமடா குட்டிமா?!" என்று பேத்திக்கு நெற்றியில் முத்தம் வைத்தார்.

 

அவர் கூறியது புரியாவிடினும் அம்மா அப்பாவுக்கு கூறியது போலவே தனக்கும் ப்ளஸ் பண்ணி இருக்கிறார் தாத்தா என்பது மட்டும் புரிய.. அவளும் தாத்தாவிற்கு கன்னத்தில் தன் அன்பை பதித்தாள்.

 

அனைவரும் அங்கிருந்த சோபாவில் அமர மகதியோ ஆதினியை விடாமல் தன் மடியிலேயே இழுத்து வைத்திருக்க… அவள் முகத்தில் தெரிந்த நெகழ்ச்சியும் பாசத்தையும் கண்டவர் "குட்டிமா உள்ள போய் சொர்ண பாட்டி கிட்ட எங்க எல்லாருக்கும் டிபன் பண்ண சொல்றியா? உனக்கு என்ன பிடிக்குதோ அதையே எங்க எல்லாருக்கும் பண்ண சொல்லு!! ஓகே?" என்று ராமஜெயம் அனுப்ப "ஓகே தாத்தா...!!" என்று அவள் சமையலறை நோக்கி ஓட "என்ன ஆச்சு பிரதாப்!!" என்று கேட்டவரிடம், அவனும் அனைத்தையும் சுருக்கமாக கூறி முடித்தான்.

 

"இப்படி இருக்கும் என்று ஒரு சதவீதம் எனக்கு சந்தேகம் இருந்ததுடா? ஆனா ஹர்ஷத் பற்றி முழுசாக தெரியாததால் அதை நான் பெருசு எடுத்துக்கல... அம்மக்கமாக இருந்து அனைத்தையும் கெடுத்து விட்டானே.. பாதகபய படுபாவி!!" என்று அவனுக்கு சாபமழை பொழிந்தார்.

 

"ஆதினிய எப்படி சமாளிச்சீங்க மாமா?" என்று சிரிப்போடு ருத்ரன் கேட்க…

 

"அதை ஏன் கேக்குற? அவளை கூப்பிட போகும்போது குட்டி அம்மணிக்கு முகமே சரியில்லை!! கேட்டா பேரன்ஸ் யாராவது வந்து பிரண்ட்ஸ கூட்டிட்டு போறாங்களாம். அவளை யாரும் கூப்பிடவில்லை என்று ஒரே சோக கீதம் வாசித்தால் உன் பொண்ணு!! அப்புறம் தான் உனக்கு ஒரு மம்மிய காட் அனுப்பி இருக்கார்னு சொல்லி... விஷயத்தை சொன்னவுடன் அவளுக்கு அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு. ஆதினியின் அந்த சந்தோஷத்தை என்றும் வாடாமல் காப்பதும்... முக்கியமாக அவள் நம்பிக்கை காப்பது... தான் உங்கள் கையில் தான் இருக்கிறது" என்றார் இருவரையும் பார்த்து..

 

"கண்டிப்பா பெரியப்பா!! காலையிலிருந்து நான் ரொம்ப தவிச்சு போயிட்டேன். ஆதினி என்னை எப்படி ஏற்றுக் கொள்வா? இவர் அசால்டா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டார். உங்களை எதிர்கொள்ள கூட நான் இப்படி பயப்படவில்லை அந்த பெரிய மனுஷிய எப்படி எதிர்கொள்ளுவோம் தான் ஆயிரம் குழப்பம்!! ஆனால் எல்லாத்தையும் ஒரு வார்த்தைகள் தகர்த்து எறிஞ்சுட்டா என் பொண்ணு!!" என்று அவள் கூறி முடிக்கும் சமையலறையில் இருந்து ஓடி வந்தவள் மகதியின் மடியில் அமர்த்தலாக அமர்ந்து கொண்டு "டன் தாத்தா!!" என்றாள்.

 

அதன்பின் சிரிப்பும் கும்மாளுமுமாக அவர்களது இரவு உணவு முடிந்தவுடன் "இன்று மட்டும் ஆதினி என்னோடு இருக்கட்டும்!!" என்று ராமஜெயம் கேட்டதும் மகதி மறுத்துவிட்டாள்.

 

"எங்கள் மகள் எப்பொழுதும் எங்களோடு தான் பெரியப்பா!!" என்று அவளை தூக்கிச் செல்ல தோளை குலுக்கியவாறு மனைவியை பின் தொடர்ந்தான் நல்ல கணவனாக ருத்ர பிரதாப்!!

 

தனக்கு சிறுவயதில் நாணி சொன்ன கதைகளை ஞாபகம் வைத்து.. இவளாக சில கதைகள் புனைந்து‌‌ தான் குழந்தைகளிடம் கூறுவாள். அதையே இப்பொழுதும் மகதி ஆதினிக்கு கூற, தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்த ஆதினியும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவுடன் கணவனின் குறுகுறு பார்வையில் திரும்பி பார்த்தாள் மகதி!!

 

அவன் எழுந்து பால்கனி பக்கம் செல்ல‌‌... "இன்னும் என்ன உங்களை குழப்புகிறது ருத்து?" என்று அவன் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள் மகதி.

 

 

"மகி... நான் வாழ்க்கையில் ஜெயிக்க ஒரு உந்துகோள்... என் திறமையை கணித்து உலகிற்கு வெளிக்கொணர முயற்சிக்கும் ஒரு ஜீவன்.. சோர்ந்து போய் தடுமாறினாலும் என்னை தேற்றி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பாசமிகு தோழியாய் இருந்தா நந்து.. அவள போய்...." என்று அவன் உதடு தன் உணர்ச்சிகளை அடக்க படாத பாடு பட... அவனை தன் பக்கம் இழுத்து துடிக்கும் அதரங்களை தான் விழுங்கிக் கொண்டு அவனுக்கு ஆறுதல் அளித்தாள் மனைவியாய் மகதி!!

 

"ருத்து... இனிமே இத பத்தி பேசவே பேசாதீங்க!! நந்தினி இறந்து போயிட்டாங்கனு நினைக்காதீங்க.. இந்த மாதிரி ஒரு சைக்கோ கிட்ட இருந்து அவங்களுக்கு விடுதலை கிடைச்சு நிம்மதியா போய்ட்டாங்க நினைச்சு சந்தோஷப்படுங்க!! சப்போஸ் அவங்க உயிரோடு இருந்திருந்தால் இன்னும் என்னென்ன கஷ்டங்களையோ அவதூறு வார்த்தைகளையோ அவங்க சந்திக்க நேர்ந்திருக்கும்!! அனைத்திற்கும் விடுதலையாய் அவர்களது மரணம்... அத நெனச்சு மனதை தேற்றிங்கோங்க!! நீங்க நிம்மதியா சந்தோஷமா இருந்தா அது அங்கு..." என்று ஒரு நட்சத்திரத்தை காட்டியவள் "அங்கிருந்து நந்தினி உங்களை பார்த்து அவங்களும் சந்தோஷப்படுவாங்க!!" என்றாள்.

 

 

துடுக்காய் விளையாட்டுத்தனமாய் திரிந்த மகதியின் மற்றொரு பொறுப்பான முகத்தை கண்டவனுக்கு அதுவரை இருந்து அழுத்தம் குறைய.. வலி மறைய... குறும்பு கூத்தாட "நான் சந்தோஷமா நிம்மதியா இருக்கணும்னா... அதுக்கு மனைவியாய் நீ தான் உதவனும்?" என்றவன் அவளை இடையோடு இழுத்தணைத்து!!

 

"என்ன செய்யனும் ருத்து? அப்பாவியாக கேட்டவளை.. கண்கள் சிரிக்க பார்த்தவன் காதுகளில் காதல் கவி பேச.. முகம் சிவந்து அறைக்குள் ஓட எத்தனித்தவளின் தோளை பிடித்து நிறுத்தியவன், எப்படி என்று பால் பாடம் ஆரம்பித்தான் கட்டிலில் காரிகையை கிடத்தி...

 

தோளை பற்றி இறுக்கமாக தன்னுடன் அணைத்துக் கொள்ள.. அவளும் அவனை தோளோடு தழுவிக் கொள்ள.. ருத்ரனோ மகதியின் கழுத்து வளைவில் முகம் பொதிக்க.. அவனின் ஈர உதடுகள் சற்று ஆக்ரோஷமாக அவள் அங்கங்களை கடித்து சுவைக்க... திணறித்தான் போனாள் மகதி. ஆனால் அவனோ முரட்டுத்தனமாக அவள் முதுகில் கைகள் கோர்த்து தன்னுடன் இறுக்கி பரவி படர்ந்தான்.

அவனின் இந்த முரட்டுத்தனத்தில் அவளது உதடுகள் சற்று சுளிக்க.. அந்தக் கள்வனோ சுளித்த அந்த உதடுகளையும் கடித்து சுவைத்தான். முகமெங்கும் முத்த ஊர்வலம் நடத்திய அவனது ஈர உதடுகளில் அவளின் தாப உணர்வுகளும்.. அவனின் மோக உணர்வுகளும் இரு ஸ்வரங்களாக மீட்டிக் கொண்டன. 

 

ருத்ரனின் இந்த ஆவேச படையெடுப்பில் அவன் முதுகில் நீவி "ருத்து.‌.. ரிலாக்ஸ்" என்று அவள் கூற அவனோ.. "முடியலடி.. இன்னும் வேண்டும் வேண்டும் என்று தான் தோணுது..!!" என்றவனின் குரல் தாபத்தில் கரகரத்தது.

 

தன்னுடைய மன ரணத்தை ஆற்ற தோகையாய் வருட வந்தவளை நினைத்து அவனுள்‌ காதல் பெருகி இன்னும் இன்னும் அவனின் அணைப்பு இறுகியது. காற்றுக்கு கூட இடம் கொடுக்காமல் இறுக்கமாக அவளை தழுவிக்கொன்டான். பசை இல்லாமல் இருவர் உடலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருந்தன.. ஆனால் அது கூட அந்த கள்வனுக்கு கொஞ்சமும் பத்தவில்லை!! பற்றிக்கொண்டது மோகத் தீ!!

 

மேலும் மேலும் அவளுக்குள் புதைந்து கொள்ள முயற்சித்தான்... அவனுள் பற்றி எரிந்த மோகத்தை இப்போது அவளுக்குள்ளும் பரவ.. மலர் கரங்களால் அவனை தன் மார்பு நடுவில் அடக்கிக் கொண்டாள். தீராத வேட்கை அனைத்தையும் இன்று ஒரே நாளில் தீர்த்துக் கொள்ளுபனைப் போல அவளுடைய இடையை அழுத்தமாக பற்றி தன்னுடைய மோகத்தை தீர்த்துக்கொள்ள தொடங்கினான். 

 

 

காதலும் காமமும் போட்டியிட.. வேட்கை கொண்ட புலி என அந்த புள்ளி மானை புசிக்கத் தொடங்கினான் ருத்ரன். எவ்வளவு புசித்தாலும் அடங்கா அவனின் மோகத்தை மீண்டும் மீண்டும் அவளிடம் சென்று தணிக்க முயன்றான். அந்த கள்வனின் கள்ளியும், அவன் எத்தனை முறை தன் மீது படையெடுத்து வந்தாலும் அத்தனையையும் அவளவனுக்காக ஆதுரமாக தாங்கி, தன்னையே விருந்து அளித்தபடி இருந்தாள்.

 

அவன் மனதில் இருந்த அத்தனை துக்கங்களையும்.. துயரங்களையும் இந்த ராட்சத தனமான கூடலில் அமிழ்ந்து போய் காதல் எட்டிப் பார்க்க.. மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டு அணைத்தபடி விடியும் தருவாயில் உறங்கினான் ருத்ரன்!!

 

பெண் தோகை வருடுதே!!

 

அடுத்து வந்த நல்ல நாளில் ருத்ரன் மகதியின் திருமணம் வடபழனி முருகன் கோயிலில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடந்தது. முரளிதரன் சூரிய பிரகாஷ் அவர்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர். தன் கூட வேலை பார்த்த அனைவரையும் தன் திருமணத்திற்கு அழைத்து இருந்தான் ருத்ரன்.

 

மகதியின் புறமிருந்து அவரது சொந்தங்களும் பந்தங்களும் வந்திருந்தனர். 

 

"ஏற்கனவே குழந்தை பெற்றவனா மாப்பிள்ளை?" என்று கொஞ்சம் அங்கங்கே உறவுகள் கொளுத்தி போட்டாலும் அதையெல்லாம் சமாளிக்க வேண்டிய தார்மீக பொறுப்பை மகாதேவனிடம் கொடுத்து இருந்தார் துர்கா.

 

அவரோ விழிப்பிதுங்கி "நான் எப்படி துர்கா?" என்று பார்க்க..

 

"உங்க மக உங்க கிட்ட பேசணும்னா இதெல்லாம் நீங்க செய்துதான் ஆகணும்!!" என்றதும் மகளின் அன்பை மீண்டும் பெறுவதற்காக எதையும் செய்ய துணிந்தவரானார் மகாதேவன்.

 

*குழந்தை தானே இருந்தா என்ன என் மகளே எவ்வளவு குழந்தையை பார்த்துக்கொள்வா தெரியுமா மச்சான்?"

 

"அட நீங்க வேற சித்தப்பா!! மாப்பிள்ளைக்கு என் பெண் மீது கொள்ளை கொள்ளையாய் காதல் அதைவிட வேற என்ன வேண்டும்?"

 

"பழசை எல்லாம் தோண்டி பார்க்க வேண்டாம் மாமா!! இப்போ நல்லா இருக்காங்களா அதுவே போதும்!!"

 

"நம்ம கண்ணுக்கு தெரிஞ்சதனால கேக்குறீங்க? கண்ணுக்கு தெரியாம எத்தனையோ பேர் அமுக்கமா எல்லாம் செய்துவிட்டு போறாங்களே அவங்கள என்ன செய்ய தம்பி?" என்று உறவுகளை சமாதானப்படுத்தி ஏற்றுக்கொள்ள வைத்துக் கொண்டிருந்தார் மகாதேவன்.. பல பொய்களை அடக்கி மலை முழுங்கி மகாதேவனாய்!!

 

அது எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ருத்ரனுக்கு அவ்வளவு சிரிப்பு!! அதுவும் அவ்வப்போது அவன் அருகே வந்து "மாப்பிள்ளை என்னை மன்னித்து விடுங்க!! எப்படியாவது என் பெண்ணை தாஜா செய்து என்னுடன் பேச வைங்க!!" என்று கெஞ்சி விட்டு செல்லும் அவரை பார்க்கையில் கொஞ்சம் நெகிழ்ந்தது அவனது நெஞ்சம்!!

 

அவன் திரும்பி "மகி..." என்று அழைக்க "வாயை மூடுங்க ருத்து.. ஒன்னும் செல்ல வேண்டாம்!!" என்று அடைத்து விடுவாள் மகதி!! நார்மல் குடும்ப தலைவனாய் அடங்கி விடுவான் ருத்ரன்!!

 

'இன்று மகதி கண்டு கொள்ள வில்லை என்றாலும் இன்னொரு நாளில் அப்பா மகள் என்று உறவு இல்லாமல் ஆகிவிடுமா என்ன? அதுவரை மாமனாரின் இந்த கவனிப்பில் நாமும் சற்று நனைவோமே!' என்று நினைத்து சிரித்துக் கொண்டான் ருத்ரன்.

 

ஒரு வழியாக இரண்டு மாதங்கள் போராடி அன்று ஹர்ஷத்தின் வழக்கில் தீர்ப்பு!! பாஸ்கரன் எத்தனையோ வக்கீல்களை பார்த்து மகனை மீட்க போராடினார். ஆனால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராய் வீணானது!!

 

அந்த மருத்துவமனை பல புகார்களை அவன் மீது கொடுத்திருக்க.. கலெக்டரும் தன் விஷயத்தையும் கூறி அதற்கு ஆதாரங்களை சமர்ப்பித்திருக்க.. மருத்துவனாய் இருந்து கொண்டு மகா பாவங்களை செய்த ஹர்ஷத்துக்கு மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அவன் மருத்துவராய் உலகில் எந்த மூலையிலும் பணியாற்று தடை விதிக்கப்பட்டது!! கடைசியாக நந்தினியின் சாவுக்கு இவன் தான் காரணம் என்று அதனையும் நிரூபித்து இருந்ததால் அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

 

மூன்று ஆண்டுகள் கழித்த நிலையில்…

 

*உங்களோட இதே பொழப்பா போச்சு!! இப்படி ஊருக்கு ஊர் மாறி கொண்டு இருந்தா பிள்ளைகளை நான் எப்படி ஒழுங்கா வளர்க்கிறது.. படிக்க வைக்கிறது? மூணு வருஷத்துல அஞ்சு ஊருக்கு 

 

உங்களோட இதே பொழப்பா போச்சு!! இப்படி ஊருக்கு ஊர் மாறி கொண்டு இருந்தா பிள்ளைகளை நான் எப்படி ஒழுங்கா வளர்க்கிறது.. படிக்க வைக்கிறது? மூணு வருஷத்துல அஞ்சு ஊருக்கு மாற்றல் வந்துட்டு… இப்ப மறுபடியும் சென்னைக்கு போறோம்!! இந்த முறை சென்னையில் இருந்து வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சா என்னால வரவே முடியாது!! ஆமா சொல்லிட்டேன்!!" என்று மகதி தன் ஐந்து மாத சிசு சுமந்த வயிற்றை தாங்கியவாறு சலித்துக் கொண்டு அமர... "ஆமாம்... நாங்க வர மாட்டோம்!!" என்று அவளுடன் சேர்ந்து ஏசப்பா பாட்டு பாடியது அவளின் பிள்ளைகள் கூட்டம்…

 

பெரியவள் ஆதினி அதற்கடுத்து பிறந்த இரட்டையர் நயனியும் நிருதியும்!!

 

மகதி கர்ப்பமாக இருந்த காலத்தில் அவனுக்கு ட்ரான்ஸ்பர் வந்திருக்க.. துர்கா பிரசவம் நெருங்கும் நேரத்துல தெரியாத ஊருக்கு வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சியும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை இருவரும். ருத்ரனால் மகதியை பிரிந்து இருக்க முடியாததை விட.. மகதியால் தான் ஆதினியையும் ருத்ரனையும் விட்டு இருக்க முடியாது என்பது குடும்பமே அறிந்து ரகசியம்!!

 

வேற வழி இன்றி மருத்துவத்தை மூட்டை கட்டு.. வைத்துவிட்டு மொத்தமாக மகா மருத்துவமனையை மகாதேவன் தலையில் கட்டி விட்டு.. பேத்தியோடும் பிறக்கப் போகும் பேரப்பிள்ளைகளுக்காகவும் துர்கா அவர்களோடு சென்று விட.. தனித்து விடப்பட்ட மகாதேவன் தான் மூச்சு விடவே சிரமப்பட்டார்.

 

ஒரு வழியாக இரண்டு குழந்தைகள் பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிவிடலாம் என்று துர்கா ருத்ரனிடம் விண்ணப்ப படிவத்தில் கையொப்பம் வாங்கி விட.. உள்ளே அறுவை சிகிச்சையில் அரை மயக்கத்தில் இருந்த மகதியோ முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாள்.

 

"சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம்!!" என்று அவளை அறையில் விட மயக்கம் ஒருவித போதையை இவளுக்கு ஏற்படுத்த.. "ருத்து மாமா.. எனக்கெல்லாம் ரெண்டு குழந்தை பத்தவே பத்தாது!! நான் தனியா வளர்ந்து எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? அதுபோல எல்லாம் என் பிள்ளைகள் இருக்கக்கூடாது. எனக்கு இன்னும் நாலு பிரவாசமாவது வேண்டும்!!" என்று எட்டு விரல்களை அவள் காட்டினாள். சுற்றி இருந்த அனைவருக்கும் திகில் கலந்த சிரிப்பு…

 

"என்னடி.. நாலு குழந்தை பிரசவம்னு எட்டு விரல காட்டுற? நீ எப்படி மேக்ஸ் படிச்சேனு இப்ப தாண்டி தெரியுது!!" என்று மனைவியின் நெற்றியோடு நெற்றி முட்டி ருத்ரன் சிரிக்க…

 

"யோவ் கலெக்டரே... உனக்கு தான் கணக்கு தெரியல!! நாலு பிரசவம் என்று சொன்னேன்ல.. ஒரு பிரசவத்துக்கு இப்ப மாதிரி ட்வின்ஸ்னு வைச்சா எட்டு குழந்தைகள் சரித்தானே கணக்கு!! நான் போதையில் கூட தெளிவா இருக்கேன் யா!!" என்றவளை பார்த்து குடும்பமே அதிர்ந்தது!! ஆனந்தமாக…

 

 

ஒரு வழியாக முட்டை முடிச்சு எல்லாம் கட்டி விட்டு முகத்தை தூக்கி வைத்து அமர்ந்திருந்த மனைவியையும் அவர்களின் வாரிசுகளையும் பார்த்த ருத்ரன் "இந்த ஒரே ஒருமுறை மட்டும் தான் டா செல்லங்களா!! இதுக்கப்புறம் எந்த வித தப்பு தண்டாவுக்கு போகாமல் நல்ல பிள்ளையாக இருக்கிறேன் சரியா?" என்றவன் இதே டயலாக்கை எப்படியும் ஒரு 100 முறையாவது சொல்லி இருப்பான்!!

 

அவன் சொல்வது பொய் தான் என்று தெரிந்தாலும் நம்புவது போல தலையாட்டியே ருத்ரனின் குடும்பம் சென்னை நோக்கி புறப்பட்டது!!

 

ருத்ரன் முன்பு கலெக்டராக இருந்தபோது அவன் கட்டுப்படுத்தி விட்டு சென்று போதை மருந்து கூட்டத்தை சூரிய பிரகாஷ் முற்றிலுமாக ஒழித்து விட.. இப்போது கமிஷனர் ஆக பொறுப்பேற்று இருக்கிறான்!!

 

மீண்டும் கலெக்டர் ருத்ரனின் அதிரடியை காண தயாராகியது சென்னை மாகாணம்….

 

முன்பு சென்னை என்றாலே ஒருவித அசூசை கொண்டவன் இன்றோ வெகு ஆர்வமாகவே சென்னை நோக்கி பயணித்தான். காரணம் அவனின் மனதின் ரணத்தை ஆற்றிய அவளின் தோகையால்!!

 

இன்றும் என்றும் அத்தோகையாள் அவனை வருடுவாள்!!

 

 

ஆனாலும் நந்தினியின் நட்பும் அவளின் உத்வேகமும் தான் அவனை கடமையை கண்டிப்போடு செய்ய‌ வைக்கிறது!!

 

 

நட்பு…

 

உரிமையாக பேசுவது..

ஒருவரை ஒருவர் கலாய்ப்பது..

 எதிர்பார்ப்புகள் இன்றி பழகுவது..

குற்றம் குறைகள் இருந்தாலும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் அன்பினால் அளவளாவி மகிழ்வது.. 

மனதில் பட்டது எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் வெளிப்படுத்துவது..

உதவி என்று வந்தால் உயிரையே கொடுக்கும் அளவிற்கு ஆதரவு அளிப்பது..

 

என அனைத்தும் இங்கே கிடைக்கப்பெறும் நட்பான உறவில்!! 

 

உறவுகள் அனைவருமே காரியம் ஆவதற்காக நமக்காக போடுவார் வேஷம்!!

 

நட்பு என்ற ஒன்றில் மட்டுமே எதையும் எதிர்பாராமல் உண்மையாக கிடைக்கும் நேசம்!!

அதற்கு ஆண் பெண் பேதம் இல்லை!!

 

எங்கோ ஒரு மூலையில் நம் மனதில் புதைந்திருக்கும் அத்தகைய‌

நட்பிற்கு இக்கதை சமர்ப்பணம்!!

 

சுபம்!!

 

 

 

 

 

 

This thread was modified 2 months ago by Jiya Janavi

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top