காலையில் எழுந்தபிறகுதான் வைதேகிக்கு தெரிந்தது இரவுபோன அக்கா வீட்டுக்கு வரவில்லையென
சூர்யா போகும்போதே தோட்டவீட்டுக்கு போவதாக கூறிவிட்டு போனான் அழகருக்கும் அதிகாலையில் தோட்டம்பக்கம் போகும் பழக்கமிருப்பதால்
பாட்டி கரைத்துகொடுத்த கம்மங்கூலை குடித்துவிட்டு கிளம்பிவிட்டான் தோட்டத்திற்கு
வைதேகி என்னவோ பேசி அவனை நிறுத்தி முயற்சிக்க அவனோ அடிக்கவே வந்துவிட்டான்
வேலைக்கு போகும் போது வாய மூடிட்டு இருக்கமாட்டியா போகும்போது நிறுத்துறது எனக்கு சுத்தமாபிடிக்காது போறவேலை உருப்புடாது இனிமே இப்படி செஞ்ச மூஞ்சிமொகரையும் பேத்துவிட்ருவேன்
அவளை திட்டி விட்டுபோனார் இவனை எப்படி சமாளிப்பது அக்கா மாமாவை பார்த்தால் மறுபடியும் சண்டைஆரம்பித்துவிடுமே
அறிவுகெட்ட மாமா கூப்பிட்டுபோனா திரும்பிகூட்டிட்டு வரமாட்டாரா இப்படியா என்னை சிக்க வச்சு சாவடிப்பார் இப்பநான் என்னபண்ணுவேன் யோசித்து விபீஷணனை தேடிபோனாள்
பாவம் பையன் ஏசியில் தூங்கிபழகியவனுக்கு இந்த
பேன்காற்று போதவில்லை
தூங்கமுடியாமல்உருண்டு புரண்டுகொண்டிருந்தவன் கனவிலீ டூயட் பாடிக்கொண்டிருந்தான்
மாமா சீக்கிரம் எந்திரி மாமா ஐயோ என்ன இவரு கனவிலே சிரிச்சிட்டு இருக்காரு அய்யோபாவி மாமா எந்திருச்சு ஏழரை ஆரம்பிக்கபோகுது அவனைத் தட்டி எழுப்ப அவனோ கண் விழிப்பதுபோல் தெரியவில்லை இன்னும் புரண்டுகொண்டு தான் இருந்தான்
எருமமாடு எந்திரிச்சுதொல தலைக்குமேல வெள்ளம்போகபோகுது உனக்கு தூக்கமா வருது அவனை கண்டபடி திட்டிவிட்டு முதுகில்அடிக்க
புரண்டு படுத்து தூங்கியவன் முதுகில் அடித்தவள் கையைபிடித்து இழுத்து தனக்கு கீழே கொண்டுவந்து இறுக்கி அனைத்துகொண்டு படுத்து விட அவளோ பயந்துபோனாள்
சட்டை போடாமல் பனியன்மட்டும் போட்டிருந்தான்போல அவளை தலையணையென நினைத்து அவள் நெஞ்சில் தலைவைத்து படுத்திருக்க வைதேகிக்கு சொல்லமுடியாத உணர்வு ஆட்கொண்டது அப்படியே இறுக்கிபிடித்துக்கொண்டு படுக்கலாம் என்று தான் தோன்றியது இருந்தாலும் அந்த பக்கம் அக்காவும் மாமாவும் சிக்கிக்கொள்வார்களே பயம்வர எப்படியோ அவனை அடித்துதிட்டி எழுப்ப வைத்து அவனிடம் நடந்ததை கூற அதுவரை தூக்ககலக்கத்தில் அமர்ந்திருந்தவன் சூர்யாமனைவியோடு இரவுதோட்டத்திற்கு போனதை கூறியதும் பட்டென அவளைபார்த்தான்
அடப்பாவி இத முன்னாடியே சொல்லிருக்கலாம்ல்ல எப்போவந்து சொல்லிருக்க உங்கப்பனுக்கு தெரிஞ்சா என்னாகுறது நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு பிளான்போட்டு இங்க வந்திருக்கோம் இந்தநாயி எல்லாத்தையும் கெடுத்துருவான் போல அண்ணனையும் திட்டி விட்டு பதறிப்போய் எழுந்துவெளியே வர
மனிஷாவும் தூக்கம் விட்டு எழுந்து வெளியே வந்தாள்
அண்ணன் வைதேகி இருவரும பதட்டமாக வர இருவரையும் பார்த்தவள் இங்கஎன்ன நடக்குது அதட்டலாக கேட்டதும் ஒன்னும்நடக்கல
இன்னும் கொஞ்ச நேரத்துல ஏழரை நடக்க போகுது அதைதடுத்து நிறுத்தனும் வைதேகி கூறியதும்
என்னாச்சுமனிஷா விசாரிக்க வைதேகி நடந்ததைகூற
வைதேகியிடம் கார்சாவியை எடுத்தக்கொண்டு வருமாறு கூற
சாவியை வாங்கியவள் யாரையும் எதிர்பார்க்காமல் காரையெடுத்துக்கொண்டு செல்ல
பின்னால் ஓடிவந்த அண்ணனை பார்த்து நான் பாத்துக்குறேன் பின்னாடிவராத கூறிவிட்டு சென்றாள்
என்னடி இவங்கப்பன் வீட்டுவண்டிமாதிரி அவ இஷ்டத்துக்கு கார் எடுத்து போயிட்டு இருக்கா எங்க போற கேட்டவாறே அவள் அம்மா வர
ஒண்ணுமில்லம்மா முக்கியமான அவசரவேலையாம் வந்துருவேன் சொல்லிட்டு போயிருக்காங்க நீ அப்பாகிட்ட எதுவும் சொல்லிறாத வந்துருவாங்க அம்மாவிடம்சமாளித்தாள்
அழகர் தோட்டத்திற்கு போகும்வழியில் அங்கேங்கே நின்று எதிர்பட்ட நண்பர்களை பார்த்து பேசி விட்டு அதற்குப்பிறகு தோட்டத்திற்கு கிளம்பினான் இவன் தோட்டத்திற்கு போவதற்குள் மனீஷா அவனுக்கு முன்பேசென்றுவிட்டாள்
காரை நிறுத்திவிட்டு உள்ளேபோவதற்குள் தூரத்தில் பைக் சத்தம் கேட்க வேகமாக ஓடியவள் வெளியே காய போட்டிருக்கும் உடைகளை பார்த்து ஒச்சில் விழுங்கினாள்
உள்ளே எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளமுடிந்தது
வேகமாக அண்ணன் வேட்டிசட்டையை தேடி எடுத்து பின்பக்கம் ஓடிப்போய் ஜன்னல் வழியாக போட்டுவிட்டு அண்ணியின் உள்ளாடைகளையும் தேடியெடுக்க புடவையோ சிக்கிக்கொண்டு வருவேனா என்ற அடம்பிடிக்க இருக்கும்உள்ளடைகளை ஜன்னல் வழியாக போட்டுவிட்டு திரும்பும்போது உள்ளே வந்துவிட்டான்
வேகமாகதொட்டிக்குள் இறங்கிவிட்டாள்
கட்டில் ஜன்னலுக்கு அருகிலேயே இருந்ததால் இவள் போட்ட துணிகள் படுத்திருந்தத ஜோடிகள் மீதுதான் விழுந்தது சூர்யாபார்த்துவிட்டு கதவைத்திறக்கபோனவன் ஜன்னலைதிறந்து பார்த்துவிட்டு தாராவை எழுப்ப அவளும் அண்ணனை பார்த்து பயந்துபோனாள்
அவன் வேட்டியைகட்டிக்கொண்டு அவன் சட்டையை அவளுக்கு கொடுக்க
உள்ளாடைகளை அணிந்துகொண்டவள் அவன்சட்டையை மேலேபோட்டுகொள்ள இந்தஇடத்தை விட்டு எப்படி வெளியே போவதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தனர்
ஏய் லூசு காலங்காத்தால எதுக்கு பச்சதண்ணீல குளிச்சிட்டு இருக்க
சளிகாச்ச வந்துட்டா என்னபண்றது உன்னை யாரு தனியாதோட்டத்துக்கு வரசொன்னது
தொட்டிக்கு அருகில் நின்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவளை திட்டிக்கொண்டிருக்க
நைசாக கதவை திறந்த தாரா மனிஷாவை பார்க்க அவளும் அவனுக்கு பின்னால் பார்த்துவிட்டு தண்ணீரை கையில்அள்ளி ஊற்றுவதுபோல் அவர்களை வெளியே போக சொல்ல
என் சிஸ்டர் இருக்கா
அவளை எப்படி விட்டுட்டுவர்றது கூறிய சூர்யாவின் கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுபோனாள்
அந்த இடத்தை விட்டு கார் அருகே வர வந்தபிறகுதான் பேச ஆரம்பித்தாள்
உன் தங்கச்சி உங்கள மாதிரி லூசு இல்ல அதுரொம்பதெளிவு எப்படி பிளான்போட்டு எத்தனைபேரை ஏமாத்தி எங்கஊருக்கு வந்திருக்கா அதுக்கு ஒன்னும் தெரியாதுனு நெனச்சீங்களா நீங்கவாயமூடிட்டு இருங்க எல்லாம் அவளே பாத்துப்பா வாங்க போகலாம்
இதோ பாருடி உங்கண்ணன்கூட
எந்தங்கச்சி கோர்த்து விடலாம் நினைச்சுட்டு இருக்காத
இது உன் குடும்பம் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் உனக்கு தாலியே கட்டிருக்கமாட்டேன்
நான்தான் இப்படி ஆயிட்டேன் பார்த்தா என் தங்கச்சிய உங்கண்ணன் கூட வேற கோர்த்துவிட பாக்குறீங்களா ஏதோ அவன் பொண்டாட்டிமாதிரி என்கிட்டவந்து அவகிட்டபேசாத சிரிக்காதன்னு என்னை மிரட்டிட்டு போறான் எவ்வளவு தைரியம்
அதைசொல்ல அவன் யாருடி அவன் ரொம்ப ஆடிட்டுஇருக்கான் பார்த்துவச்சுக்கோ எப்பவும்சும்மாசொல்லிட்டு இருக்கமாட்டேன்
அடிச்சு பரலோதத்துக்கு அனுப்பிருவேன் கோவமாககூற அவளுக்கும் கோபம் வந்துவிட்டது
இந்த இடத்தில் அவள் என்னைபேசினாலும் அவன் போடும் சத்தம் தோட்டத்திற்குள் கேட்கும் எதுவும் சொல்லாமல் ஏறி அமர்ந்தவள்
உங்க தங்கச்சிக்கு எல்லாமே தெரியும் உங்கவேலையமட்டும் பாருங்க
ஏடாகூடமாபேசக்கூடாதுனு பார்க்கிறேன்
என்னை பேசவச்சு சண்டையஆரம்பிக்காதீங்க அவ்வளவுதான் சொல்லுவேன் உங்க தங்கச்சிக்கு ஒன்னும் ஆகாது
எத எப்போ எப்படிசெய்யணும்னு அவளுக்கு நல்லாதரியும் உங்களை மாதிரி அவசரகுடுக்கை இல்ல உக்காருங்க இல்லாட்டி விட்டுட்டு போயிருவேன் அவள் மிரட்டலாக கூறியதும் முறைத்தவாறு ஏறினான்
நான் எங்க போகணும் வரணும்னா உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்ல அதைக்கேட்க நீங்கயாரு உங்க குடும்பம் என்னைக்கும் என்னை ஏத்துக்கபோறதில்லை ஒருமாசம்தான் அப்புறம் எங்க வேலைய பாத்துட்டு போயிட்டே இருப்போம் உங்ககிட்ட எதுக்கு நான் சொல்லிட்டு வரணும் எதுக்கு சொல்லிட்டு போகணும் கூறியவாறே தொட்டியில் இருந்து மேலேறிவந்தவள் புடவை எடுத்துகொண்டு அந்த இடத்தை விட்டு நகரபோக அவளை இழுத்துபிடித்தான்
ரொம்ப ஓவரா பேசுற இதுநல்லதுக்கு இல்லை என்னை உன் இஷ்டத்துக்கு ஆட்டி படைக்கலாம்னு நினைச்சுட்டு இருக்கியா வரவர கொஞ்சம் கூட பயமே இல்லாம மிரட்டிட்டு இருக்க என்னடி நெனச்சிட்டு இருக்க நீசொன்னா எல்லாத்தையும் நான் கேட்கணுமா
நீ சொல்ற எதையும் நான் பண்ணமுடியாது அதுக்காக உன்னையும் நான்விட்டுடுவேனு நினைக்காத
ஏன்னா ஐலவ்யூ
நீயே விட்டுட்டு போனாலும் உன்னை நான் விடமாட்டேன்
ஓஓஓஓ லவ்வா அப்போ உங்கப்பா பார்க்கிற பொண்ணுக்கு தாலிக்கட்டி அவளை பொண்டாட்டி என்னையாருக்கு தெரியாமா வப்பாட்டியா வச்சுக்கலாம் நெனச்சிட்டு இருக்கியா
நீ எனக்காக மாறனும்னு அவசியமில்லை நான் உன்கிட்ட கெஞ்சவேண்டிய அவசியமும் இல்லை இன்னும் கொஞ்சநாள் தான்
டூரிஸ்ட் விசாவுல வந்துருக்கேன் அதுமுடிஞ்சதும் நான் போயிருவேன் உனக்கும் உன்னோட குடும்பத்துக்கும் பை சொல்லிட்டு என்வேலைய பாத்துட்டு போயிட்டேஇருப்பேன் நீ எவளைவேணாலும் கட்டிக்கலாம் எவளைவேணாலும் வச்சுக்கலாம் உன்னை யார் கேட்கப்போறது
உனக்கும் எனக்கும் எதுவுமில்ல இப்படி தொட்டு பேசற வேலையெல்லாம் வச்சுக்காத
என் கைய புடிக்க நீ யாருடா அவள் கோபமாக
அழகருக்கு வந்த கோபத்தில் பளாரென்று கன்னத்தில் அறைவிட்டு அவள் தலையைமுடியை பிடித்தவன் அவள் இதழைசிறைபிடித்தான்
ரத்தம் வரும்ளவுக்கு கடித்துவைத்தான்
அவள் கண்ணீரை சுவை அறிந்து அவளை விலக்கிவிட்டான்
இந்த வாயிலிருந்து நான் யாரு எனக்கு என்ன உரிமை இருக்குனு கேள்விகேக்குற வேலை வெச்சுகிட்ட இப்படித்தான் தண்டனை கொடுப்பேன்
என்னை மாத்துறதுக்கு முயற்சி பண்ணாத என்னைவிட்டுட்டு போகணும்னு நினைக்காத நீஎங்க போனாலும் இழுத்துட்டு வர முடியும்
ஓஓஓ அப்படியே இழுத்துட்டுவந்து உங்கப்பாவுக்கு முன்னாடியே மேரேஜ் பன்னு பார்க்கலாம மீசைவெச்ச ஆம்பளையா இருந்தா உங்கப்பா முன்னாடி தாலி கட்டு உன்னோட தைரியத்தை ஒத்துக்குறேன் அதுவரைக்கும் என்னை சீண்டிபாக்காத வார்த்தை வரைமுறை இல்லாமல் வரும்
பெரிய சண்டியர் மாதிரி பேசினா ஆகாது யாருக்கும் பயப்படாம துணிஞ்சு எதிர்த்து நிற்க்கனும்
நேத்து பாட்டி கூட பழமொழி சொன்னாங்க
ஆத்துல ஒரு கால் சேத்துல ஒருகால்னு எந்த பக்கமும் போகமுடியாம தவிச்சுபோககூடாதுனு
அதுமாதிரி பண்ணிட்டு இருக்காத
வாய்ஙிழிய வசனம் பேசுற உன்னால உங்கப்பாவை எதிர்க்கமுடியாது எனக்குதாலிகட்டவும் முடியாது அப்புறம் எதுக்கு தேவையில்லாம வீராப்பா பேசிட்டு இருக்க போய்வேலையை பாரு முகத்திலடிப்பதுபோல் கூறிவிட்டு சென்றாள்
விபீஷணன் அந்த ஊருக்குள் போய் தன்னை அறிமுகப்படுத்தியவன் யாருக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் யாருக்கும்பயப்படாம போலீஸ்ல கம்ளைண்ட் குடுங்க
அதுவும் வீராசாமி குடும்பத்தால உங்கபுள்ளைங்க கல்யாணத்துல எந்தபிரச்சனை வந்தாலும் தாராளமா கம்ப்ளைன்ட் பண்ணுங்க போலீஸ் கேஸ் எடுக்காட்டி கோர்ட்டுவரைக்கும் நான்போய் வாதடி உங்களுக்கு நியாயம் வாங்கி கொடுக்கிறேன் நீங்க ஒருபைசா கூட கொடுக்கவேண்டாம் தைரியமா எதிர்த்து நில்லுங்க அதுவேபோதும் உங்களுக்கு நான் இருக்கேன் என்று தைரியம் கொடுக்க சற்றியிருந்த கூட்டம் மொத்தமும் அவன் கையைபிடித்து நன்றிகூறியது
மறுநாளிருந்து அந்த ஊர் சுத்தமாக மாறிபோனது கலப்புதிருமணங்கள் சம்பந்தப்பட்ட வீட்டில் பேசி முடிக்கப்பட்டு உள்ளூருக்குள்ளேயே நடத்தப்பட வீராசாமி பொங்கிவிட்டார்
விபீஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் கிராமத்தில் நடக்கும் அட்டுல்யாங்களை கூறி
கலப்புதிருமணத்தில் பிரச்சனை செய்பவர்களை கைதுசெய்யவேண்டுமன அந்த ஊர் காவ்ல்நிலையத்துக்கும் ஆர்டர்போட்டது
வீராசாமி ஆட்கள் திருமணத்தை நிறுத்த வர அவர்களை போலீஸ் தூக்கி லாக்கப்பில் போட்டது
வீராசாமி இது சம்பந்தமாக வீபீஷிடம் பேச அவனோ கோர்ட் ஆர்டரை அவரிடம் நீட்டினான்
இனிமே நாம எதுவும் சொல்லமுடியாது எதுவும்பேசமுடியாது நீங்க செய்யறதுல மக்களுக்கு உடன்பாடு இல்லை
அவங்களே புள்ளைங்களோட மனசுறிஞ்சு கல்யாணம் பண்ணி வைக்கும்போது தேவையில்லாம நீங்க பிரச்சனை பன்றதா கோர்ட் உங்களுக்கு வார்னிங்க குடுத்துருக்காங்க
உங்களுக்கு புடிக்காட்டி உங்ககுடும்பத்தோட இருந்துக்கணும் மத்தவங்களோட வாழ்க்கையில உங்களோட கருத்துக்களை திணிக்ககூடாதுன்னு சொல்லிருக்காங்க சார்
நானே போனாலும் எதுவும்செய்ய முடியாது
உங்க மதிக்காத அந்தமக்களுக்காக நீங்க எதுக்கு துடிக்கணும் விட்டுதள்ளுங்க சார் விபீஷணன் கூற
சரிதான் என்னை மதிக்காதவங்க எப்படி போனா எனக்கென்ன ஆனா இந்தபழக்கத்தை என் குடும்பத்துக்குள்ள கொண்டுவர விடமாட்டேன்
என் குடும்பத்தில கலப்புதிருமணம் செய்ய யாருநெனச்சாலும் வெட்டிபொலிபோட்ருவேன்
கோபமாக கூற
விபீஷணன் மனிஷாவையும் சூர்யாவையும் பார்த்தான்
ஊருக்குள்ள பிரச்சனை முடிஞ்சுருச்சு
இனி குடும்பத்துக்குள் இருக்கிறதை தீக்கணும்