தோகை 24

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 24

 

 

 

பல இடையூறுகளுக்கு இடையே இனிதாக முடிந்தது ருத்ரன் மகதி திருமணம்!!

 

ருத்ரன் தன் அறைக்குள் நுழைந்து முப்பது நிமிடங்களுக்கு மேல் கடந்து விட்டது. ருத்ரன் என்ன செய்வது என்று புரியாமல் வெளியே இருந்த ஷோபாவில் சாய்ந்தான். மகதியிடம் நிசப்தம் நிலவ, வெளியில் இருந்து சென்னை எஃப்எம்மில் இளையராஜா பாடல் மெலிதாக கசிந்துக் கொண்டிருந்தது. ருத்ரன் மெதுவாக ஜன்னலைத் தள்ள,

 

“காதல் மன்னனா..

 நீயும் கண்ணனா...

நாளும் ஓர் அலங்காரமா………..”

 

ருத்ரன் மீசைக்கு அடியில் முகிழ்த்த மென் புன்னகையோடு மெதுவாக கண்ணை மூடி இசையில் மூழ்க, சில வினாடிகள் கடந்தோட, கொலுசு சத்தம் கேட்டு கண்ணைத் திறந்தான். மகதி இரண்டு கப் டீயுடன் அறைக்குள் நுழைந்தாள். கூந்தலை அவள் அவிழ்த்து விட்டு இருக்க, அது அவளின் வலது பக்கம் விழுந்திருந்தது. மேக்கப் இல்லாமல் அவளின் முகம் சிவந்து இருக்க, அவளின் புருவத்துக்கிடையே கடுகு போல் கருத்த ஸ்டிக்கர் பொட்டு..

 

ருத்ரன் அவளின் கண்களை பார்க்க, மகதியின் கண்கள் சிவந்து இருந்தது. அவள் அழுதிருக்கிறாள் புரிந்தது அவனுக்கு!! ஆனாலும் அவளை அப்படியே விட்டுவிட மனசில்லை அவனுக்கு… டீ கப்பை அவன் எதிரே நீட்ட, அவளின் கண்ணைப் பார்த்தப்படியே கப்பை பிடிக்க, மகதியின் நுனி விரல்களை ருத்ரன் வன் விரல்கள் தீண்ட, அவள் உடல் சிலிர்த்து விசுக்கென்று கையை டீ கப்பில் இருந்து கையை உருவினாள். அவன் யோசனையோடு அவளை பார்த்தான். அவளின் சிலிர்ப்பு புதுசில்லை!! ஆனால் இந்த விலகல் புதுசு!!

 

ஏதோ அவர்களுக்காவே.. வாலி உருகி உருகி எழுதி இருப்பதை போல் இருந்தது அந்த பாடல் வரிகள்.

 

“மொட்டுத்தான் வந்து

சொட்டு தேன் தந்து

கிட்டதான் ஒட்டத்தான்

கட்டதான் அப்பப்பப்பா……”

 

காதில் விழுந்த பாடல் வரியை கேட்டு அவன் இதழுக்குள் மென் சிரிப்பு. உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்கினான். இல்லை என்றால் அவன் அடக்கம் ஆவது உறுதியல்லவா? மகதியின் நினைவுகள் வேறெங்கோ இருக்க.. ருத்ரனின் எதிரே சுவற்றில் சாய்ந்தாள். ருத்ரன் பார்வையால் அவள் தேகத்தைத் துளைத்தெடுக்க, அவளுக்கோ அவனின் பார்வையை தெரியவில்லை!!

 

ருத்ரன் மெதுவாக எழுந்து அவளை நோக்கி சென்றான். ருத்ரனின் பரந்து விரிந்த மாநிற மார்பில் வெள்ளை ஷர்ட், முட்டி வரை இருந்த ஷார்ட்ஸ்… மேல் சட்டையின் இரண்டு பட்டன்கள் திறந்து விட்டிருக்க சுருள் சுருளாய் கருத்த முடிகள் அவன் நெஞ்சு பரப்பில் அதி கவர்ச்சியாய் தெரிய.. திருமணம் முடிந்த மாப்பிள்ளையின் கோலம் மாதிரி அல்லாமல் ஹனிமூனுக்கு வந்தவன் போலவே தெரிந்தான்!!

 

அவன் மகதியை நெருங்க நெருங்க.. வேற நினைவுகளில் மூழ்கிருந்தவள் அப்போதுதான் அவனை உச்சாதி பாதம் முதல் பார்த்தாள். அவளின் விழிகள் அகண்டு விரிந்தது. அவனின்‌ இந்த கண்கள்.. அது சொல்லும் செய்தி கண்டு இமைத்தட்டாமல் பார்த்திருந்தாள் அவனை.. இதழில் பதித்த டீ கப்பை எடுக்க மறந்தாள். டீ கப்புக்குள் அவளின் மூச்சு காற்று பொசு பொசு என்று பாய, நுரைகள் சிதறி ஒதுங்கியது. 

 

“மகி… ம்ஹும்…. ஸ்டெடி!!” என்று அவளின் ஆழ் மனது பட படக்க, மகதியை நெருங்கிய ருத்ரன் அவளின் கண்ணில் சுருண்டு விழுந்த கூந்தலை தன் விரலால் விலக்க, அவன் தீண்டலில் உடல் சிலிர்க்க கண்களை மூடினாள். அவளின் இரு கைகளுக்கிடையே இருந்த டீ கப்பை ருத்ரன் மெதுவாக பறித்து அருகில் இருந்த டேபிளில் வைத்தான்.

 

மகதியின் இதழ்கள் முழுவதும் டீயில் நனைந்து செவ்விதழாய் மிளிரியது. அவன் அருகாமையின் தாக்கத்தில் எச்சை முழுங்க, அவள் தொண்டைக் குழி சுருங்கி சுருங்கி விரிந்தது. அவன் கண்கள் மோகத்தோடு அத்தொண்டைக் குழியை வட்டமிட்டது!!

 

 

மகதியின் உள்ளங்கையை பற்றிய ருத்ரன் “இச்….” என்று அழுத்தி முத்தமிட, அவன் உதட்டின் சீண்டலில் கற்றை மீசையின் குறுகுறுப்பில் அவள் உடல் கிறுகிறுத்து கிறங்க ஆரம்பித்தது!!

 

“மகி…. ” தாபமாய் அவனது குரல்!!

 

அவள் மென்மைகள் இரண்டும் ஏறி இறங்க, “ம்ம்ம்ம்ம்….” என்று சிணுங்கி தவித்தது அவளது குரல்!!

 

“ப்ளீஸ் டீ…. ” என்று ருத்ரன் அவளின் உள்ளங்கையை மென்மையாக கடித்தான்.

 

“ஆஆஆ……” என்று மகதி வாயைத் திறக்க, ருத்ரன் அவளின் இரு கைகளையும் கொத்தாக சேர்த்து பிடித்து, மின்னல் வேகத்தில் மகதியின் உதட்டைக் அழுத்தி முத்தமிட, மகதி மூச்சை உள் இழுப்பதை நிறுத்தினாள். அவளின் கண்கள் அதிர்ச்சியில் அகண்டு விரிந்தது. இப்போது ருத்ரனின் இதழ்கள் மகதியின் மேல் உதட்டைக் கவ்வியது நிதானமாக...

 

ருத்ரனின் பிடிக்குள் அவள் உடல் திமிற, அவள் உடல் வியர்வையில் நனைய துவங்கியது. விசுக்கென்று ருத்ரனின் பிடியில் இருந்து அவள் நழுவி, கைகளால் முகத்தை மூடி சுவற்று பக்கம் திரும்பி நின்றாள்.

 

ருத்ரனிடம் இருந்து மகதி விலகி விலகி செல்ல, அவன் இரத்த நாளங்கள் காமத்தால் வெடித்து சிதறியது. மகதியின் பாதி கூந்தல் முன் மார்பிலும், மீத கூந்தல் அவள் பின் முதுகிலும் படர்ந்து விரவி இருந்தது!!

 

"மகி…!!!" என்று அவளின் பின்னிருந்து அழைத்தான். இடை மெலிந்து மகதியின் பள்ளம் மேடுகள் ருத்ரனை கிறங்கடித்தது. அவன் மகதியை மீண்டும் நெருங்க, குளத்து மீன் போல் அவள் நழுவி சுவற்றின் மூலையில் மாட்டிக் கொள்ள, ருத்ரன் “மாட்னியா?” என்று மனதிற்குள் சிரித்தப்படி,

 

அவளின் பின்னிருந்து அணைத்தான். அவள் உடல் அதிர்ந்து சிலிர்க்க, ருத்ரன் அவளின் இடையில் கையை நுழைத்து அவளின் நாபிக்குழியை அழுத்திப் பிடித்தான்.

 

“ஸ்ஸ்ஸ்ஸ்… ருத்து…" என்று முனங்கினாள் பெண்!!

 

மகதியின் உதடுகள் முனகித் தவித்தாலும், அவள் உடல் அவன் அணைப்புக்கு ஏங்கித் தவித்தது. மகதியின் ஆலிலை வயிற்றில் ருத்ரனின் பிடி அழுத்தமாக இறுக்க, அவள் சூடான மூச்சை வெளி விட்டு வயிற்றை உள் புறமாக எக்கி அவள் துடி துடிக்க, ருத்ரன் மகதியின் காது மடலை கடித்தான்.

 

மகதியின் தேகமே வியர்வையால் நனைந்தது. மகதி மேல் படர்ந்த ருத்ரன், அவனின் மன்மத விளையாட்டை தொடங்கினான் அவன் ரதியிடம்!! அவளின் இதழில் அழுத்தி அழுத்தி முத்தமிட்டு கீழ் உதட்டைக் கவ்வி சப்பி இழுத்து அவளுக்கு காம வலியை கொடுத்தான்.

 

"வேண்டாம்.. வேண்டாம்…!!" என்றவளை, "வேண்டும்.. வேண்டும்..!!" என உளற வைத்தான் தன் காதல் களியாட்டத்தால்..

 

ருத்ரனின் பிடியில் மகதி கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பித்தாள். ருத்ரனின் வன் உடல் மகதியின் மென் உடலை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

 

ருத்ரனின் இளம் மீசை அவள் மேல் உதட்டில் குத்தி அவளின் உணர்வுகளில் கிளர்ச்சியை ஏற்படுத்த, மகதி கண்கள் சொருகி, ருத்ரனின் மேல் உதட்டைக் கவ்வினாள்.

 

இருவரது உதடுகளும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைய, மகதியின் இளம் செவ்விதழ்கள் ருத்ரனின் தடித்த உதட்டில் கசங்கி கொண்டிருக்க, மகதியின் கை ருத்ரனின் கேசத்துக்குள் நுழைந்தது. மகதியின் உடல் தரையில் நசுங்க, மகதியின் வாய்க்குள் ருத்ரன் நாக்கை நுழைத்து மகதியின் நாக்கைத் தீண்டி, அவளின் இதழ் தேனை பருக ஆரம்பித்தான் ரசித்து ருசித்து...

 

முத்த சத்தங்களும்..

மோக முணங்கல்களும்..

காதல் கிலுக்கு சிரிப்புகளும்..

கொலுசொலியின் மெல்லிய சப்தங்களும்..

வளையல்களின் சன்ன விளையாட்டுகளும்..

அவர்களின் ஆதாமார்த்த அந்நியோனியத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தது!!

 

ருத்ரன் மகதியின் முகம் முழுவதும் சுவைக்க.. அவள் முகத்தில் பல் பட கடிக்க.. மகதியின் முகம் முழுவதும் குங்குமபூப் போல் சிவக்கஆரம்பித்தது!! 

 

மகதிக்கு திக் திக் என்று இருக்க, கண்களை மூடி தரையில் அவன் கைகளில் சுழன்றாள்.. சுழற்றினான் தன் அதி காதலால்..

வன் காமத்தால்..

நனி மோகத்தால்..

பெரும் தாபத்தால்!!

 

இருவரும் மூச்சு காற்றை வேகமாக உள் இழுத்தப்படி சயனிந்திருந்தனர்.

 

“ஏய்.. மகி… ஒன்ஸ் மோர்…” என்றான் ருத்ரன் சரசமாக!!

 

“ச்சீ… ” என்று ருத்ரனை தள்ளி விட்டு தரையில் கிடந்த புடவை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டாள் மகதி. வெட்கம் கலந்த புன்னகை அவள் முகத்தில்!!

 

மகதி மெதுவாக எழ, ருத்ரன் அவளின் கையை புடித்து இழுத்து அவன் மேல் சாய்க்க,

 

“விடுங்க… நான் ஹாஸ்பிடல் கிளம்பனும்….” என்று மகதி சிணுங்கியவள் மீண்டும் எழுந்து நின்றாள்.

 

“ப்ளீஸ் டீ…. ” என்ற ருத்ரன் மகதியின் கால்களை கட்டிக் சிறு பிள்ளையை போல் கெஞ்ச,

 

மகதி மட்டும் என்னவாம்? அவள் மனதும் அவனின் அருகாமைக்கு தவித்தது.

 

“ருத்து.. ஆதினி வந்துருவா… ப்ளீஸ்…” என்று அவளை விலக்க போராடினாள். ஆனால் அவன் விட்டால் தானே!!

 

“ப்ளீஸ்… ருத்து .. நான் குளிக்க போகணும்… விடுங்க…”

 

“நானும் வரேன்..”

 

“அய்யோ… ஆண்டவா..‌ முதல்ல விடுங்க.. நான் போகணும் பா!! அம்மா கிட்ட விளக்கம் கூறனும். இங்கேயே இந்த கலகம் பண்ணினவங்க அங்க என்னென்ன செய்யறாங்களோ தெரியல?" என்றவள் மீண்டும் கவலையில் ஆழ்ந்தாள்.

 

“போடி…. லூசு….” என்று மகதியை திட்டியப்படி "உன்னை விட உங்க அம்மா ஷார்பு தான்!! இவ்வளவு நாள் உங்க அப்பாவ பத்தி தெரியாமலா இருக்கும். கவலையை விடு!!" என்று அவளது கன்னத்தை தட்டினான். அவன் கண்களின் மீண்டும்‌ மோகத்தை கண்டவள், விட்டால் போதுமென்று அவள் புடவையை சரி செய்தப்படி குளியலறைக்குள் நுழைந்தாள்.

 

“ருத்து…" என்று அழைக்க.. படுத்தப்படி திரும்பினான்.

 

“ஆபீஸ்ல இருந்து கிளம்புறப்ப.. போன் பண்ணுங்க…” என்றாள்.

 

“எதுக்கு?”

 

மகதியின் இதழில் பொன் சிரிப்பு. பதில் சொல்லமால் சொல்லாமல் கதவைச் சாத்த,

 

“ஏய்… சொல்லுடி… ரொம்ப பண்ணாத..!" என்று அவன் கத்த...

 

“ஹா.. ஹா.. " என்று சிரித்தவள் பட்டென்று கதவை சாற்றினாள்‌ அவன் நுழையும் முன்!! ஷவரை திறந்து விட, குளிர்ச்சியான தண்ணீரில் அவள் உடல் சிலிர்த்தது.

ஒரே நாளில் மாறிப்போன தன் வாழ்வை நினைத்து சிரித்தபடி குளித்தாள்!!

 

ருத்ரன் இருந்தவன் தன் போனை எடுத்து ராமஜெயத்திற்கு அழைத்தான்.

 

மருமகனின் மறு வாழ்விற்காக அல்ல!! இன்னும் வாழவே ஆரம்பிக்காத தன் மகனாக நினைக்கும் ருத்ரனின் வாழ்வு வளம் பெற வேண்டும் என்று காளிகாம்பாளிடம் வெகு நேரம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார் ராமஜெயம்!! கூடவே சொர்ணாவும் அவரது கணவரும்!!

 

என்ன தோன்றியது அப்பொழுதே அங்குள்ளவர்களுக்கு அன்னதானத்திற்கான செலவை தான் ஏற்றுக் கொள்வதாக கூறி பெருந்தொகை ஒன்றை கொடுத்தார். மருமகனின் திருமணத்தை அறியாமல் விருந்து கொடுத்தார் அனைவருக்கும்!!

 

அவரது கையாலேயே அன்னதானம் செய்ய மனம் சிறிது மகிழ்வுடன் இருந்தது. அவர்களுடன் தானும் உண்டவர், சொர்ணமாவையும் அவரது கணவரையும் உண்ண வைத்தார். பின்பு அமைதியாக அந்த பிரகாரத்தில் அமர்ந்திருந்தார். மனம் என்றும் இல்லாத நிம்மதியை பூண்டு இருந்தது.

 

 

அப்போதுதான் ருத்ர பிரதாப்பிடம் இருந்து அவருக்கு ஃபோன் வந்தது.

 

"என்ன பிரதாப்பா? இன்னைக்கு இந்த நேரத்தில் போன் செய்திருக்க? ஆஃபீஸ் போகலையா?" என்று கேட்டார்.

 

"இல்ல மாமா.. காலையில கொஞ்சம் லேட்டா போகலாம்னு இருந்தேன். அப்போன்னு பார்த்து மகதி வந்தா..!!" என்றவன் குரலில் சந்தோச மின்னல்கள்…

 

"சந்தோசம்!! இரண்டு பேரும் எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டீங்க தானே? எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது உங்க வாழ்க்கையில!!" என்றதும் ருத்ரனின் முகத்தில் கள்ளச் சிரிப்பு ஒன்று குடியேறியது.

 

"அவ மட்டும் இல்ல மாமா... கூடவே அவ அப்பாவும் கொஞ்ச நேரத்தில் வந்தார்!!" என்றதும் அந்த பக்கம் ராமஜெயத்திற்கு அதிர்ச்சி!! 'இப்போது தானே எல்லாம் நல்லபடியாக நடக்குதுன்னு நினைச்சோம்.. அவர் வந்து என்ன செய்தாரோ?' என்று பயத்துடன் "என்னப்பா சொன்னாரு அவங்க அப்பா?" என்று தவிப்போடு கேட்டார்.

 

"என்ன சொல்வாரு? வழக்கம் போல பெண்ணைப் பெத்த அப்பாவா குதிச்சாரு.. புலம்பினாரு.. கத்தினாரு.." என்று அசால்டாக சொன்னான்.

 

"பிரதாப்!!" என்று கண்டிப்போடு கூறியவர் "என்ன இருந்தாலும் அவர் மகதியின் அப்பா!!" என்று அழுத்தமாக கூறினார்.

 

"அதனாலதான் அவர் பேசிய அவ்வளவு பேச்சுக்கும் அமைதியா இருந்தேன் மாமா... எதிர்த்து ஒரு வார்த்தை கூட நான் பேசவே இல்ல மாமா!!" என்றான் நக்கலாக…

 

"பேசல.. ஓகே!! வேற என்ன செய்த?" என்று அவன் நக்கலிலே அவன் ஏதோ செய்திருக்கிறான் என்று உணர்ந்தார்.

 

"கூடவே அந்த ஹர்ஷத் வேற வந்து ரொம்ப துள்ளி குதிச்சானா.. அதான் அவங்க முன்னாடியே தாலிய கட்டி மகதிய மனைவி ஆகிட்டேன்!!" என்றான் சிரிப்போடு!!

 

இங்கே ராமஜெயமோ அதிர்ந்து காளிகாம்பாளை பார்த்தார்.

"என்னடா இப்படி பண்ணிட்ட? நாளைக்கு கலெக்டரே இப்படி பண்ணிட்டாரு எல்லாரும் பேசுவாங்க தெரியுமா?" என்றார்.

 

"கலெக்டரும் மனுஷன் தான் மாமா!! அவனுக்குள்ளும் காதல் இருக்கு!! அன்பு பாசம் எல்லாம் இருக்கு!! சமூகத்துக்காக நான் பார்த்தது போதும்!! இனி என் வாழ்க்கைய நான் பார்த்துக்குவேன். சந்தோஷமா வாழ்வேன்.. நீங்க கவலைப்படாதீங்க" என்று சொன்னவனின் சந்தோஷம் இவருக்கும் தொற்றியது.

 

"சரி இப்ப நான் உடனே வரேன். அந்த ஆளு இனக எந்த பிரச்சனை பண்ணாம இருக்கணும்" என்று அவருக்கு கிளம்ப..

 

"மாமா ஒன்னும் அவசரமில்லை!! நிதானமா வாங்க... வரும்போது அப்படியே உங்க பேத்திய ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்துருங்க" என்றவனின் குரலில் என்ன கண்டாரோ.. சிரிப்போடு "நடத்து.. நடத்து!!" என்று போனை வைத்தார்.

 

அதற்குள் குளித்து ருத்ரனின் டீசர்ட் ட்ராக் பாண்ட்டை போட்டபடி வெளியில் வந்த மகதி தன் உடைகளை மெஷினில் போட்டு உலர்த்தி இருந்தாள்.

 

தன் உடைகளில் அவளைப் பார்த்தவன் விசில் அடித்தபடி அவளை நெருங்க.. தள்ளி விட்டவள் "மாமா கிட்ட பேசினீங்களா? என்ன சொன்னாங்க?" என்று கேட்டதும்..

 

"உடனே வர வேண்டாம் மாமா!! நிதானமா ஆதனியை கூட்டிட்டு சாயந்திரம் போல வாங்க என்று சொன்னேன்!!" என்றவனின் முதுகில் பட்டுப்பட்டு என்று தன் தளிர் விரல்களால் அடித்தவள் சட்டென்று சோகமாக…

 

"இவ ஒருத்தி.. உடனே சோக மூடுக்கு போயிட்டா!! உன்கிட்ட பிடிச்சதே உன்னுடைய சிறுபிள்ளைத்தனமான சிரிப்பும்.. எதையும் கண்டு வருந்தாத பாங்கும் தான் மகி!! அந்த மகி தான் எனக்கு வேண்டும்.. இந்த சோகம் மூஞ்சி சுந்தரி எனக்கு வேண்டாம்!!" என்று அவளை தோளோடு அணைத்து கூறினான்.

 

"இல்ல ருத்தே… ஆதினி.. ஆதினி.. நம்மை புரிஞ்சுக்குவாளா? என்னை அம்மாவா ஏத்துக்குவாளா?" என்றதும் அவளை அணைத்த வாக்கில் தாடையை ஒற்றை விரலால் நிமிர்த்தியவன், அவள் கண்களில் ஆழ்ந்து பார்த்து "உன்னை அம்மாவா ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்.. வேற யாரை ஏற்றுக்கொள்ள போறா? அவ உன்னை உனக்காகவே ஏத்துப்பா டா! டோண்ட் ஃபீல்!!" என்றான் உள்ளார்ந்து உணர்ந்து!!

 

அதற்குள் இவர்களை திருமணத்தை காட்டுத் தீயாக பரவ வி

ட்டிருந்தான் ஹர்ஷத்!!

 

"கலெக்டரின் கட்டாய கல்யாணம்!!

மருத்துவ பெண் பலி!!" என்று!!

 

தொடரும்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top