மயக்கம் 5
“ம்மா.. இது என்ன பணம்? இங்க சாமியறையில இருக்கு?” சாமியறையில் இருந்தே தன் அறையில் வாடிக்காளர் ஒருவருக்கு தைத்துக் கொண்டு இருந்த சிவகாமிக்கு குரல் கொடுத்தாள் கிருத்தி.
“ஓஓ… அதுவா? மேல இருக்குல வாகீஸன் தம்பி.. அதுதான் இந்த மாசம் வாடகை பணம் கொடுக்க வந்திருந்துச்சு வீட்டுக்கு.. அந்த புள்ளை கிட்ட பேசிகிட்டே இருந்தானா.. காபி கேட்டுச்சு போட்டு கொடுத்தேன்.. அப்படியே பணத்தை மறந்தாப்ல அந்த சாமியறையில வச்சிட்டேன் போல.. எடுத்து வந்து பீரோவில் வை கிருத்தி” என்றாள் சிவகாமி.
“என்ன வீட்டுக்கு வந்தானா? அதுவும் அவனுக்கு மூணு கண்ணு இருந்தால் மூணு கண்ணிலும் கோபத்தை காட்டும் அந்த கொங்கணவ மகரிஷியா?” என்பது போல யோசித்தவள்..
“ஏய் கிருத்தி.. அன்னைக்கு நீ சோகமா உட்கார்ந்திருக்கும் போது உனக்கு துணையா உன் பக்கத்துல வந்து அமைதியா தான் அட்கார்ந்திருந்தான்.. அப்போ எல்லாம் அவன் முகத்தில் கோபம் இல்லையே..!” என்று அவள் மனதாக அவனுக்காக வாதாட..
“அதானே?? அவனின் இந்த ரெண்டு முகத்தில் எது உண்மை?”
யோசித்துக் கொண்டிருந்தவளை சிவகாமியின் குரல் கலைத்தது.
“பணத்தை பீரோல கொண்டு வந்து வைன்னு சொன்னா? என்ன பண்ணிட்டு இருக்க நீனு? கனவுல மிதந்துட்டு நிக்கிறியா?” என்றதும் இதோ மா என்றவள், அன்னை அறையில் இருந்து பீரோவில் சென்று பணத்தை வைத்து விட்டு அவர் டேபிள் டிராயர் இருக்கும் நோட்டை எடுத்து வரவில் வாகீஸ திரிபுரபவனன் கொடுத்த வாடகை பணத்தை எழுதினாள்.
சிவகாமியின் ஒரு பழக்கம், வரவு செலவு நோட்டில் எழுதுவது. அது சின்ன விஷயமா இருந்தாலும் பெரிய விஷயம் ஆயிருந்தாலும் ஒத்த ரூபாய் இருந்தாலும் மறக்காமல் எழுதி வைத்துவிடுவார்.
“ஏம்மா இந்த கம்ப்யூட்டர் உலகத்துல இன்னும் கையில் எழுதிட்டு இருக்கே மா.. இதெல்லாம் அப்படியே டேப்ல நோட் பண்ணி வச்சிடலாம் இல்ல?” என்று மகள் கேட்டால்…
“இந்த டேப்போட ஆயுட்காலம் அஞ்சு வருசம் வருமா? அப்புறம்? அழிஞ்சு போயிடும் தானே? ஆனா எத்தனை வருஷம் ஆனாலும் இந்த புக்ல நான் எழுதினது அழியாது.. மறையாது..! இங்க பாரு.. இந்த புக்கு இதெல்லாம் நீ சின்ன வயசுல எழுதினது எல்லாத்தையுமே இன்னும் நான் பத்திரமா வச்சிருக்கேன். இந்த மாதிரி உன்னோட மெமரி கார்டுல காட்ட முடியுமா?” என்று அவர் காட்ட..
“வாஸ்தவம் தான்..! ஆனா நம்ம பத்திரமா சேவ் பண்ணனும் நினைச்சேன் பத்திரமா வச்சுக்கலாம் தெரியுமா மா?”
“எனக்கு இதுதான் ஈஸி டி” என்றவர் அந்த பழக்க வழக்கத்தை பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்திருந்தார்.
பணத்தை வைத்துவிட்டு வந்தாலும் இன்னமும் அவள் எண்ண நினைவுகளில் பவனன் தான் சுழன்று கொண்டிருந்தான்.
“என்ன அதிசயம் எப்பொழுதும் வீட்டு வாசலில் பணத்தை கொடுத்துட்டு போறவரு.. வீடு வரைக்கும் வந்திருக்காருன்னு சொல்றீங்க?” என்று சாதாரணமாக கேட்பது போல கேட்டுவிட்டு அவள் அறைவிட்டு வெளியே செல்ல..
“அந்த புள்ளய ஏதாவது குத்தும் சொல்லல உனக்கு தூக்கமே வராதா? வாகீஸன் எவ்ளோ நல்ல புள்ள தெரியுமா? அன்னைக்கு நீ நைட்டு மாடியில் உட்கார்ந்து இருந்தது பார்த்துட்டு இப்படி என்னமோ ஏதுனு மறந்துட்டு போல.. உன்னை தனியா விடாதீங்க காலம் கெட்டு கடக்குன்னு வந்து எனக்கு அட்வைஸ் வேற சொல்லிட்டு போச்சு” என்று அவர் தையலில் கவனமாக இருக்க..
அன்னையின் அறையை விட்டு வெளியே சென்றவள், கதவை பிடித்து தலையை மட்டும் உள்ளே சாய்த்து பார்த்து “அப்படியா? அவ்வளவு நல்லவரா?” என்று கேலியாக சிரித்து அன்னையின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டாள்.
வாகீஸ திரிபுரபவன் வந்து அன்னையிடம் பேசி சென்றது எல்லாம் அவள் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை. அவளுக்கு இன்று பார்த்த அப்பாவின் அந்த குடும்பம் தான் மனதை பெரிதாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
அதிலிருந்து வெளியே வந்து விட்டாலும், எப்படி ஒருவருக்கு குடும்பம் பிள்ளைகள் இருந்தும் அடுத்த பெண்மேல் ஆசை வர முடியும்?
முன்னலாம் இது ஆண்களுக்கு மட்டுமேயான விதி என்று இருக்க.. இப்பொழுது பெண்களும் அதில் அடக்கமாய் இருக்க.. கலிக்காலம்.. கலிக்காலம் என்று புலம்பிக் கொண்டாள்.
“ஆனா எனக்குனு வரவன் இப்படி செஞ்சா.. எங்க அம்மா மாதிரி அமைதியா போக மாட்டேன். நான் இங்கே வேதனையில் இருப்பேனாம்.. வன் ரெண்டாவது குடும்பத்தோட பரம சுகமா குஜலா இருப்பானாமா.. மகனே ஒரே சீவு தான்டா..” என்று புலம்பியவாறு அவள் தங்கள் வீட்டு காரிடரில் நடந்து கொண்டு மென் குரலில் பேசிக்கொண்டே இருந்தாள்.
ஜன்னல் வழியாக மகள் வீட்டு வராண்டாவில் நடந்து கொண்டிருப்பதை பார்த்த சிவகாமி “சும்மா இங்கு அங்கு ஆலவட்டம் போடறதுக்கு அப்படியே நடந்து போய் துணி காய போட்டு இருக்கிறத எடுத்துட்டு வந்து மடிச்சு வைக்கலாம்ல” என்றதும் திரும்பி அன்னையே ஒரு முறை பார்த்தவள்
“நான் கொஞ்ச நேரம் வேலை செய்யாம சும்மா இருந்தா உனக்கு மூக்கு வேராத்திடுமே.. நீ எனக்கு அம்மாவா இல்ல மாமியாரான்னு தெரியல?” என்றதும்..
“அடியு.. வந்தேன்னு பாத்துக்க..” என்று அவர் குரல் உயர்ந்ததும்,
அவர் கிட்ட ஒன்னும் சொல்லல “ஏதோ போய் துணி எடுத்துட்டு வரேன் தான் போறேன்” என்று வேகமாக அவர்கள் வீட்டு முன்னணியில் இருந்த இடத்தில் சிவகாமி காயப்பட்டிருந்த துணிகளை எடுக்கச் சென்றாள்.!
முன்னெல்லாம் மாடிக்கு சென்று தான் காயப்போட்டு வருவார். இப்பொழுது அடிக்கடி மாடி ஏற முடியவில்லை அவரால்.. அதனால் வாசலிலேயே கொடி கட்டி அதிலேயே துணிகளை காயப் போட்டி இருக்க…
“இந்த அம்மாவுக்கு என் மேல கொஞ்சமாவது இரக்கம் இருக்கா? ரெஸ்டாரண்ட்லயும் வேலை செஞ்சுட்டு இங்க வந்து வேலை செய்ய வேண்டி தான் இருக்கு. இந்த பொண்ணுங்க பொழப்பே இதுதான் போல..! இதே பசங்கனா ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்ததும், டீ காஃபிய குடிச்சிட்டு ஜம்முன்னு ரெஸ்ட் எடுக்குறானுங்க கேட்டா.. ஆபீஸ்ல வேலை செய்தேன்பானுங்க.. ஆனா நமக்கு.. ம்ஹீம்..!” என்று பொறுமியப்படியே தான் துணிகளை பொறுமையாக எடுத்து கையோடு அப்படியே மடித்துக் கொண்டிருந்தாள்.
“இது எல்லாத்தையும் வீட்டுக்கு கொண்டு போய் போட்டா ட்ரஸ் கசங்கிடும்.. திரும்ப உக்காந்து நம்மள தான் மடிக்க சொல்லும் இந்த சிவகாமி ஆத்தா.. அதுக்கு மடிச்சு கையோட எடுத்துட்டு போயிடலாம்.. என்ன அறிவு டி உனக்கு கிருத்திக்குட்டி..!” என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டே துணிகளை அவள் மடித்துக் கொண்டிருக்க.. அப்பொழுது சாரல் மழை அவள் மீது பொழிந்தது.
“என்ன திடீர்னு மழை பெய்யுது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே நம்ம சூரியனை பார்த்தோம்?” என்று அவள் அண்ணார்ந்து பார்க்க..
மாலை நேர சூரியன், நகரின் கட்டடங்களுக்கு நடுவே மந்தமாக மறைந்துகொண்டிருந்தான்.
அந்தி சிவுப்பு நிறம் நிறைந்த வானம் அத்தனை அழகாக காட்சியளித்தது.
“என்னடா சூரியன் இப்போ தான் மறையுறான்.. வானம் கூட கருக்கலையே? பின்ன மழை எங்கிருந்து பொழியுது? என்று இவள் அன்னார்ந்து பார்க்க இன்னும் அவள் முகத்தில் நன்றாக மழை பொழிய மடித்து வைத்திருந்த துணிகளும் நனைந்தன..?
அப்பொழுது தான் தெரிந்தது மாடியிலிருந்து தான் தண்ணீர் இவளுக்கு மட்டுமே ஸ்பெஷலாய் பொழிகின்றது என்று..!!
பவனன் தான் வளர்த்து வரும்
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க.. அப்பொழுது அபிசியல் ஆக அவனுக்கு ஃபோன் வர.. அவனோ போனை அட்டென்ட் செய்து கொண்டு நீர் பாக்கியவான் அதிகமாக தண்ணீரை குழாயை கீழே பிடிப்பதற்காக நினைத்துக் கொண்டு சற்று உயர்த்தி படிக்க அதுதான் மாடி தாண்டி வந்து மழையாக மங்கையின் மீது பொழிந்து கொண்டிருந்தது..
கிருத்தியோ கோபமாக மேலே பார்த்து.. “ஏய்.. யாரது மேல? கீழ் ஆள் இருக்குறது தெரியலையா?” என்று கத்த..
பவனனும் மிக முக்கியமான காலில் இருந்ததால்.. அவனது கவனம் இங்கே சிதறவில்லை. எப்பொழுதும் போல கீழே சத்தம் என்று அவன் தன்னுடைய ஃபோனில் ஆழ்ந்து விட்டான்.
துணி மடித்து வைத்ததெல்லாம் ஈரமாகவிட, “போச்சு.. போச்சு எல்லாம் போச்சு..” அப்படியே அள்ளிக் கொண்டு வந்து காரிடரில் இருக்கும் சோபாவில் போட்டுவிட்டு வேக வேகமாக அவன் முன் மூச்சிரைக்க வந்து நின்றாள் காரிகை.
அவனோ ஒரு கையில் பைப் பிடித்த படியே மறு கையால் ஃபோனை வைத்துக் கொண்டு பேச.. அவன் உன் மண்டை ஓடு இல்லாத காலியாக வந்த நின்றவளை நெற்றியை சுருக்கி பார்த்தான் பவனன்.
அவளோ தன் ஆடையை அவன் முன்னே காட்டி ஒற்றை புருவத்தை ஒயிலாக உயர்த்தி ‘ஹான்.. என்ன இது?’ என்று கோவை சரளா போல கேட்க..
என்ன என்ன என்று புரியாமல் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் கண்களோ பட்டென்று விரிந்துக் கொண்டது, அவளின் கோலத்தைக் கண்டு..!
காரணம் ஈரத்தில் குளித்த டைட்டான அவளது குர்தியோ தண்ணீரில் நனைந்து அவளது உள் அழகு பெட்டகங்களை மறக்காமல் அவனுக்கு வரி வடிவாக அத்தனை கரிசனத்தோடு காண்பித்துக் கொண்டிருந்தது.
“இது என்னங்க? என்ன பண்ணி வச்சிருக்கீங்க பாருங்க..” என்று மீண்டும் அவள் குரலை உயர்த்தி தன்னை காட்ட.. சட்டென்று ஃபோனை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டவன் நிலைதான் சற்று பரிதாபமாக இருந்தது.
எச்சிலை விழுங்கிக் கொண்டவனோ அவளை அந்த நிலையில் பார்க்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொள்ள.. அதை தனக்கு அவமானமாக எடுத்துக் கொண்டாள் பெண்.
‘இவன்கிட்ட பேச வந்தா மூஞ்ச இப்படித்தான் பட்டுன்னு திருப்பிக்குவானா? அவ்வளவு இளக்காரமா போயிட்டாளா இந்த கிருத்தி?’
கிருத்திக்கு தன் நிலை பற்றி புரியவே இல்லை. எப்படி அவன் என்னை இப்படி நினைத்து விடலாம் என்று கோபம் தான் முதலில் குதித்துக் கொண்டு வர..
அவன் முகம் திருப்பிய பக்கம் வந்து நின்றவள் “பார்த்தீங்களா எப்படி நனைச்சு வச்சிருக்கீங்கன்னு.. இது மட்டும் இல்ல கீழ காஞ்ச துணி எல்லாத்தையும் சேர்த்து நனைச்சு வச்சிருக்கீங்க..” என்று நீதி கேட்கும் கண்ணகியாய் நின்று இருந்தாள் அவன் முன்னே..!
“லூசி.. லூசி.. சில்லா…! கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே மாட்டேங்குறா..! அவள் இருக்கிற நிலையேம் உணர மாட்டேங்குறா..! இவளை எல்லாம்…” இன்று பல்லை கிடைக்க மட்டுமே முடிந்தது பவனனால்..!
ஏனென்றால் அவள் குர்தியின் முன் கழுத்து கொஞ்சம் கீழே இறங்கி லோ நெக்காக இருக்க.. அதன் கீழே விம்மி நிற்கும் அவளின் இளமை பொக்கிஷங்கள் வேறு எடுப்பாய் தெரிய.. டாப்ஸ் நெக் விளிம்பில் அவளின் அழகுகள் அபாயகரமாகத் தெரிந்தது.. !!
மெல்லிய வெளிச்சத்தில் ஈரத்தில் நனைந்த அவளை மழைமோகனியாய் ரசிக்கும் அளவுக்கு மிகவும் அழகாய் தெரிந்தாள்..!
ஆனால் அவளின் அழகு அவனுக்கு அவஸ்தையை கொடுத்தது அவள் மீது கோபத்தை ஏற்படுத்தியது..!
‘நான் முகத்தை திருப்பி இருக்கும்போதே இவ புரிந்து கொண்டிருக்க வேண்டும்.. இப்போ மூஞ்சிக்கு நேரே வந்த நின்னு திரும்பவும் பேசுறா?’ என்று நினைத்தவன் அவளிடம் சண்டை இட்டு நேரத்தை இழுக்க விரும்பாமல்…
“சாரி…முக்கியமான கால் அதனால சரியா கவனிக்கல” என்றான்.
“முக்கியமான கால்னா.. சுற்றியுள்ளது ஏதும் உங்களுக்கு கண்ணுக்கு தெரியாதா?” என்றாள் மீண்டும் சண்டையை வழித்துக் கொண்டு..
“ஓஹ் காட்..! சாரி சொன்னாலும் விடமாட்டேங்கிறாளே?” என்று உள்ளுக்குள் புகைந்தவன்,
“ப்ளேம்(blame)மை மழைக்கு போட்டுறேன்… போதுமா..!” என்றான் இலகுவாக..! இந்த பேச்சுவார்த்தையை முடிக்க.!
கிருத்தியோ “மழையா? மழைக்காலம் இன்னும் வரலையே?” என்று முறைத்தாள்.
“அப்போ… நானே தவறுன்னு ஒத்துக்கிட்டாலும் விட மாட்டேங்குற.. வேற என்ன தான் நான் பண்ண? இந்த கான்வர்ஷேஸனை முடிக்க நானும் அவ்வளவு ட்ரை பண்றேன். நீ இன்னும் இழுத்துக்கிட்டே இருக்க.. முதலில் போய் உன்னை நீயே கண்ணாடில பாரு..” என்றவன், விடுவிடு என்று அருகில் இருந்த குழாயை மூடி தன் வீட்டுக்கு சென்று விட்டான்.
இவளோ எதற்கு இப்படி சொன்னான் என்று புரியாமல் அவசரமாக சென்று தன் அறையில் இருந்து
ஆள் உயர கண்ணாடியில் அவளைப் பார்க்க…
இப்போது அவளுள்
மழைக்காலம் இல்லாமலே இடியும்.. மின்னலும்.. புயலும் மழையுமாக பூகம்பம் ஒன்று நிகழந்தது..!!
தொடரும்..