அத்தியாயம் 19
கலெக்டர் அலுவலகம்..
மணி ஏழுக்கு மேல் ஆகி இருந்தது.
பெரும்பாலானவர்கள் வீட்டுக்கு கிளம்பி இருக்க.. ஒரு சிலர் மட்டுமே அங்கே இருந்தனர். இவளை அனைவரும் ஆராய்ச்சியாக பார்க்க.. "என்ன வேண்டும் மேடம்?" என்று கேட்டவனிடம், கலெக்டரை பார்க்க வேண்டும் என்றாள்.
"அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?" என்று கேட்க இல்லை என்ற தலையசைத்தாள்.
"ரவி இந்த பொண்ணு கலெக்டர் சாரை பார்க்க வந்திருக்க.. ஆனா அப்பாயின்மென்ட் இல்ல!! நீயே என்னன்னு பார்த்துக்கோ!" என்று அங்கிருந்த பெரியவர் கிளம்பி சென்றுவிட, அந்த ரவி ஆகப்பட்டவன் வேகமாக இவளிடம் விரைந்து வந்தான்.
"இங்க பாருங்க மேடம்.. அப்பாயிண்ட்மெண்ட் வேறு இல்லை என்கிறீர்கள். சார் முக்கியமான மீட்டிங்ல இருக்காரு!! இப்போதைக்கு யாரையும் பார்த்து பேச மாட்டார்!! டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு வேற சொல்லிட்டு போயிருக்காரு.. மீறி எங்களால் எதுவும் பண்ண முடியாது. போயிட்டு நாளைக்கு காலையில வாங்க.. அவர் ஃப்ரீயா இருந்தா பாக்கலாம்" என்று அவன் கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டே பதில் அளித்தான். அவனுக்கு எப்படியாவது சீக்கிரம் வீட்டுக்கு போனால் போதும் என்று இருந்தது.
முதலில் தவியாய் தவித்தவள் இவர்களிடம் எல்லாம் கெஞ்சினால் சரிபட்டு வராது என்று முடிவெடுத்து, "இங்க பாருங்க சார்.. ஒரு முக்கியமான விஷயம் உங்க கலெக்டரை பார்த்து பேசணும்!! அதுவும் இப்போ அவர் டீல் பண்ணிட்டு இருக்காரு இல்லையா ட்ரக் கேஸ் அதை பத்தின இன்ஃபர்மேஷன் சொல்லணும்!! ஒரு ஹாஃப்அனவர் வெயிட் பண்ணுவேன் அதுக்குள்ள உங்க கலெக்டர் பார்க்க முடியுமான்னு கேட்டு சொல்லுங்க? அப்புறம் எனக்கு என்ன வந்தது.. நான் போறேன்.. நானும் சும்மா கிடையாது ஒரு பிசியான டாக்டர்!!" என்ற அவள் அமைதியாக அமர்ந்து விட்டாள்.
கேட்டவனுக்கு தான் பக் என்றானது. இப்பொழுது சென்று கொண்டிருக்கும் கேஸின் தீவிரம் அவனுக்கும் தெரியும் என்பதால், இவளை அனுப்பினால் நாளைக்கு நிச்சயம் கலெக்டரிடம் நாமதான் கைமா!! அவனின் கோபம் அறிந்தது தானே?
"நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க மேடம்.. இப்பவே சார் கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்" என்று அவன் வேகமாக ருத்ரனின் அறையை தட்டிக் கொண்டு அனுமதி பெற்று உள்ளே சென்றான்.
மதியம் போல வந்தான் கோபத்தோடு இல்லையில்லை மகாகோபத்தோடு!!
ஹர்ஷத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவன் வெளிநாடு சென்றதாக இவனுக்கு தெரியும். அப்படியே போய் தொலையட்டும் என்று எண்ணி இருக்க.. சென்னையில், அதுவும் மகதியின் மருத்துவமனையில் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை!! அதைவிட பேரதிர்ச்சி அவன்தான் மகதிக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை என்பதுதான்!!
இந்நிலையில் நாம் என்ன சொன்னாலும் மகதியின் காதுக்கு ஏறுமா? என் நியாயங்கள் புரியுமா? என் மேல் தப்பில்லை என்று உணர்வாளா? இல்லை நான் சொல்லும் விளக்கங்களை மறுப்பாளா? என்று அநேக கேள்விகள் அவனின் மனதை அலைகழிக்க.. வேலையில் கவனம் செலுத்த முடியாமல் மாலை வரை யாரையும் அனுமதிக்கவே இல்லை.
'நான் சென்றவுடன் என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் மகதி அமைதியாக இருக்கிறாள் என்றால்.. ஹர்ஷத்தின் கூற்றை நம்பி விட்டாள் போல!!' என்று அது வேறு மகதி மேல் அவனுக்கு கோபம் வந்தது. காலையில் நடந்த சம்பவத்திற்கு மாலை ஆறு மணிக்கு மேல் தான் அவளிடம் இருந்து போன் வர எரிச்சலோடு அதை தவிர்த்தான்.
அதன் பின்னே தான் சூரிய பிரகாஷ் கலெக்டரை பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டு வர.. தன் பர்சனல் வாழ்க்கை எமோஷனலுக்கு இடம் கொடுத்து கடமையை தவறவிடக்கூடாது என்ன ருத்ரன் என்ற தனக்கு தானே திட்டுக் கொண்டு எஸ்பியை வர சொல்லி பேசிக் கொண்டிருந்தான்.
கலெக்டரின் உதவியாள் "சார் ஒரு லேடி வந்து இருக்காங்க.. அவங்களுக்கு ஏதோ ஒரு இன்ஃபர்மேஷன் இந்த கேஸ் பத்தி தெரியுமாம். உடனே உங்களை பார்த்து சொல்லனும்னு சொல்றாங்க" என்று பதட்டத்தோடு கூறினான்.
"லேடியா?" என்று யோசித்தவன் கெஞ்சித்தும் மகதி தன்னை தேடி வருவாள் என்று எண்ணமில்லை. போன் செய்து பார்த்து நான் எடுக்கவில்லை என்றதும் விட்டுவிட்டாள், அவ்வளவுதான் அவளது காதல் என்று அவன் நினைத்திருக்க.. அவளோ உன்னை விடேன் என்று துரத்தி வந்திருந்தாள்.
"அப்படி என்ன இன்ஃபர்மேஷன் கொண்டு வந்திருப்பாங்க?" என்று யோசித்தவாறு சூரிய பிரகாஷ்ஷை பார்க்க... அவனும் தோளௌ குலுக்கி "அவங்களயே நேரா பார்த்து கேட்டுருவோமே சார்" என்றான்.
"யூ ஆர் ரைட் எஸ்பி!!" என்றவன், "ஜஸ்ட் அ மினிட்!!" என்று சிசிடிவி ஃபுட்டேஜை பார்த்தவன் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது. அங்கே அமர்த்தலாக கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாள் மகதி.
இவன் பார்த்த அதே நேரம் சட்டென்று நிமிர்ந்து தன் முன் இருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்தவள், பின்பு இருக்கையில் சாய்ந்து ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவனை முறைக்க…
"இவளை…!!" என்று கடுக்கடுத்தவன் "இப்ப டைம் இல்ல நாளைக்கு பார்க்கிறேன் என்று சொல்லி அனுப்புங்க!" என்றான் உதவியாளனிடம்.
"வாட்??" கலெக்டர் பேசியது புரியாத பாஷையை என்பது மாதிரி அவன் விழித்துக் கொண்டே இருக்க.. "போங்க ரவி.. போய் நான் சொன்னதை போய் அவங்க கிட்ட சொல்லுங்க!!" என்றான் அழுத்தமாக..
சூரிய பிரகாஷூம் நம்ப மாட்டாமல் ருத்ரனை பார்த்தான். தகவலோ அல்லது விவரம் கிடைக்குது என்றால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் ருத்ரன் என்று தெரிந்திருக்க.. இன்று என்ன ஆனது இவருக்கு? ஏன் இப்படி சொல்கிறார்? என்று புரியாமல் அவனும் பார்க்க.. சூரிய பிரகாஷின் விழிகளை நேருக்கு நேர் பார்க்காமல் தவிர்த்தவன் மீண்டும் கண்களை சிசிடிவியில் சுழல விட்டான்.
அவர்கள் பேசிக் கொள்வது புரியவில்லை என்றாலும் அங்கே இவனின் உதவியாளர் சென்று சொன்னவுடன் "ஓ அப்படியா?" என்றவள் திரும்பி அவளுக்கு நேரே இருந்து சிசிடிவி பார்த்தாள். கண்டிப்பாக ருத்ரன் பார்த்துக் கொண்டிருப்பான் என்று உணர்ந்தாள்.
இதழ்களை குவித்து பறக்கும் முத்தத்தை ஒன்றை பறக்க விட்டவள், ரவியை பார்த்து "நான் இங்கேதான் வெயிட் பண்ணுவேன். நான் சொன்னா ஹாப்னவர் நேரம் முடிய இன்னும் 10 மினிட்ஸ் இருக்கு அதுக்குள்ள உங்க கலெக்டர் என்னை கூப்பிட்டு பேசணும்!! இல்லேன்னா... என்று நிறுத்தி அந்த உதவியாளரின் பிபியை எகிற வைத்து, "நானே வருவேன் அங்கனு அவர் கிட்ட சொல்லுங்க!!" என்று பதில் கூறி அனுப்பினாள்.
"என்ன இவங்க இப்படி சொல்றாங்க? ஒருவேளை சாருக்கு தெரிந்தவங்களோ?" என்று தலைமை சொரிந்து கொண்டே திருப்பி திருப்பி அவளை பார்த்தவாறே அறைக்குள் நுழைந்த ரவியை, ருத்ரன் முறைக்க.. "சார் அவங்க…" என்று இழுக்க..
"பார்க்க முடியாதுன்னு போய் சொல்லு!!" என்று வார்த்தைகளை பற்களுக்கிடையே கடித்து துப்பினான் ருத்ரன்.
அவள் வரும் முறை எப்படி அவளுக்கு விளக்குவது? என்னை நம்புவாளா மாட்டாளா?என்று தவித்தவன், அவள் வந்தவுடன் முறுக்கி கொண்டான். இவ்வளவு நேரம் என்னை தவிக்க விட்டல கொஞ்ச நேரம் இருடி என்று!!
அதற்குள் மணி 7:30 கடந்திருக்க பெரும்பாலனவர்கள் சென்று இருந்தனர் அலுவலகத்திலிருந்து…
சூரிய பிரகாஷுக்கு எதுவோ புரிவது போல இருந்தது. அவனும் சுவாரசியமாக கலெக்டரின் இந்த கண்ணாமூச்சி விளையாட்டை பார்த்தபடி மௌனமாகவே அவதானித்துக் கொண்டிருந்தான்.
ரவி சென்றதும் அங்கிருந்த பைல்களை எல்லாம் மாற்றி மாற்றி அடுக்கி வைத்தான். கையில் இருந்த பேனாவை விரல்களுக்கு இடையே சுழற்றினான். மீண்டும் அவனது பார்வை சிசிடிவி ஃபுட்டேஜ் சென்று தழுவியது. எதிரில் ஒருத்தன் இருப்பதையே மறந்து விட்டான். ஒரு மாதிரி பதட்ட நிலையில் இருந்தவனை பார்த்த எஸ்பி "சார் நான் வேணா போயிட்டு நாளைக்கு வரவா?" என்று கேட்க..
"இல்லை.. இல்லை.. நீங்க ப்ரோசீட் பண்ணுங்க!!" என்றான் ருத்ரன்.
எப்பொழுதும் ருத்ரன் பேசும்போது அவன் குரலில் ஒரு ஆளுமையும் அதிகாரமும் கலந்து இருக்கும். அதே நேரம் கட்டளையாக பேச வேண்டிய இடத்தில் கட்டளையாகவும்.. தட்டிக் கொடுத்து பேச வேண்டிய நேரத்தில் தட்டிக் கொடுத்தும் பேசும் அவனின் பாங்கு ரொம்பவே பிடிக்கும் சூரிய பிரகாஷூக்கு.
இன்று இவனின் இந்த பதட்டமான உடல் மொழியும் அவன் கண்களின் அலைப்புருதலும், கூடவே அவனின் திணறிய பேச்சும் கூறியது கலெக்டர் கவுந்து விட்டான் என்று!!
பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா? காதலித்து மணந்து கொண்ட சூரிய பிரகாசுக்கு காதலின் அறிகுறியோடு தன் முன்னே இருப்பவனை கண்டு கொள்ள முடியாதா என்ன? அதுவும் காவல்துறை ஆணையர் வேறு அவன்!!
மகதி கொடுத்த கேடு அரை மணி நேரம் தாண்டி ஐந்து நிமிடங்கள் சென்றிருக்க.. அதற்கு மேல் பொறுக்கமாட்டால் எழுந்து விறுவிறு என்று சென்றாள். ரவி தடுக்க தடுக்க புயலென சென்று படார் என கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் அங்கிருந்து எஸ்பிஐ பார்த்து அதிரலாம் இல்லை. சின்ன தலையசைப்பை கொடுத்துவிட்டு அவனுக்கு எதிரே இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள் வாகாக…
எஸ்பி இருவரையும் மாத்தி மாத்தி பார்த்தவன் மெதுவாக தன்னுடைய வேலைகளைப் பற்றி சொல்லலாமா வேண்டாமா என்று தயக்கத்தோடு இருக்க..
"நீங்க கண்டியூனி பண்ணுங்க சார்!!" என்றவளோ எதையும் கண்டுகொள்ளாமல் கையில் போனை எடுத்து கேண்டி க்ரஷ் விளையாடிக் கொண்டிருந்தாள்.
ஆனால் ருத்ரனின் கவனம் சூரிய பிரகாஷிடம் இல்லவே இல்லை. அவனைப் பார்ப்பதும் அடுத்த நொடி அவளை பார்ப்பதற்காக இருக்க.. "ஓகே சார் நம்ம நாளைக்கு மீட் பண்ணலாம்!!" என்று எழ… "எஸ்பி.." என்று ருத்ரன் எப்படி விளக்கம் கொடுக்க என்று தவிக்க.. "ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் சார். நானும் லவ் மேரேஜ் தான்!!" என்றான் சிரிப்போடு..
"தேங்க்யூ சார்!!" என்று விடை கொடுத்தது ருத்ரன் அல்ல மகதி!!
எஸ்பி சென்றதும் இவள் மீண்டும் கேண்டி கிரஷ் விளையாடி கொண்டிருக்க.. இவன் எழுந்தவன் "கிளம்பு..!!" என்று அவள் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தான்.
"அறிவு இருக்கா உனக்கு? ஆபீஸ்ல இப்ப யாரும் இல்ல அதனால ஒன்னும் இல்லாம போச்சு!! இதே பட்ட பகல நீ வந்திருந்தால் என்ன பேச்சு நடந்து இருக்கும் தெரியுமா? வரவர உன்னோட விளையாட்டு தனத்துக்கு அளவேயில்லை.. உனக்கு அறிவேயில்லை!! எது எதுல விளையாடனும்னு கொஞ்சம் கூட மண்டைல மசாலா இல்லை" என்று அவளை திட்டிக் கொண்டே வந்தவனின் கையைப் பார்த்தாள்.
"இப்படி கையை மட்டும் புடிச்சு இழுத்துட்டு போறதை பார்த்தா யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க ஆபீசர்?" என்றாள் அடக்கிக் கொண்டு..
சட்டென்று அவள் கையை விட்டவன் அவள் கூறிய வார்த்தையில் யாரும் இருக்கிறார்களா என்று அவசரமாக சுற்றிப் பார்க்க ரவியும் இன்னும் சில பேர் மட்டுமே இருந்தனர்.
ரவியை அழைத்தவன் தான் புறப்படுவதாக சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
"உங்க கிட்ட பேசணும்!! எங்க பேசலாம்னு நீங்களே முடிவு எடுங்க.. அது உங்க வீடா இருந்தாலும் சரி இல்லை எங்க வீடாக இருந்தாலும் சரி!!" என்றதிலிருந்து எதுக்கும் துணிந்து வந்திருக்கிறாள் என்று அறிந்தவன் நேராக தன் வீட்டுக்கே அழைத்து சென்றான்.
போகும்போது ராமஜெயத்திற்கு போன் செய்து விஷயத்தை கூறி ஆதனி சொர்ணமா மற்றும் அவரையும் வெளியே செல்ல பணித்திருந்தான்.
"வா.." என்று உறுமியப்படி மாடியில் இருக்கும் அவனது அறைக்கு அழைத்து சென்றவன்…
"என்ன? அந்த ஹர்ஷத் சொன்னானா நான் துரோகி. கள்ளத்தொடர் வச்சிருந்தேனு? அதுவும் பிரண்டு கூட அப்படி இப்படின்னு கதை விட்டிருப்பானே? எல்லாத்தையும் கேட்டுட்டு இங்க எதுக்குடி வந்த? போ.. போய் அவனையே கட்டிக்க… நம்பிக்கை இல்லாத எந்த பந்தமும் கடைசியா இப்படித்தான் முடியும்!! எனக்கு அப்படிப்பட்ட எவளும் வேண்டாம்! போடி போ.." என்று அவளை கதவருகே தள்ளி விட்டான் கோபத்தோடு!!
அவளும் விருவிருவென்று கதவு நோக்கி செல்ல "போயிட்டா ஒரு வார்த்தை சொன்னதுமே போயிட்டா... ருத்ரா உனக்கு விதிச்சது இதுதான் போல!!" என்று ஜன்னல் அருகே நின்று இடது பெரு விரலால் நெற்றியை நீவிக் கொண்டான்.
அறைக்கதவு சாத்தும் சத்தம் கேட்டவுடன் இன்னும் உடைந்தே விட்டான். "என்னை விட்டு மொத்தமா போய் விட்டாள்!!" என்று கலங்கி தவித்தவனின் நெஞ்சில் மெல்லிய கரங்களின் ஸ்பரிசம்!! அவனை அதிர்ந்து பேசற்று நிற்க… அவனை பின்னிருந்து அணைத்திருந்தாள் மகதி!!
ருத்ரனின் மகி!!
"ருத்து…" என்று அவள் இன்னும் நெருங்கி நெருக்கமாக அணைக்க… ருத்ரனோ அதற்கு பதில் மொழி கூறாமல் விரைப்பாக அப்படியே நின்றான்.
"ப்ளீஸ் ருத்து.. அவன் ஆயிரம் சொல்லட்டும்.. அதை எல்லாம் நான் நம்புவேணா? எனக்கு உங்களை பற்றி தெரியாதா?" முகத்தை அவனது முதுகின் பின்னால் அழுத்தியவாறு கூற..
"என்னை பற்றி தெரிந்தவள் தான் நான் போன ஆறு மணி நேரம் கழிச்சு போன் பண்ணுனியாக்கும்!!" என்றான் காட்டத்தோடு!!
ஆக, அவளாக புரிந்து வர வேண்டும் என்று எதிர்பார்த்து இருக்கிறான் என்று நினைப்பே.. அவளுக்கு மேலும் அவன் மீது கனிவை கொடுக்க அவனை திருப்பி முகம் பார்த்தாள்.
"என்ன டி?" என்றவனின் முகத்தைத்தான் கசிந்துருக்க பார்த்தாள் மகதி.
அருமையான முகம் வசீகரமான தோற்றம் ஒற்றைப் பருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டு மனதை கொள்ளை கொள்ளும் மாயவன் ஆனாலும் அவன் நெஞ்சுக்குள் அனேக காயங்கள் இருக்கின்றனவே? அனைத்தையும் தனக்குள்ளாக மட்டும் மறைத்து புதைத்து வைத்து தன்னிடமும் ஆதனிடமும் அன்பை மட்டுமே ஒழிய தெரிந்தவன்!! அவனின் மனக்கயத்தை ஆற்றாமல் விட்டால் நான் என்ன அவனின் மனைவி?
ஆம்.. மனைவி தான்!! இந்த திமிர் பிடித்த ருத்ரனின் மனைவியே தான்!!
என்று மனதில் பலவாறு எண்ணங்களால் அவள் ஊர்வலம் போக… விழியோரம் கசியும் நீர்த்துளியோடு அவன் முகம் பற்றிய இழுத்து நெற்றி முத்தம் கொடுத்தாள் அழுத்தமாக.. ஆத்மார்த்தமாக!!
இத்தனை நாள் கொடுத்த முத்தத்தை போன்று இல்லாமல் ஆத்மார்த்தத்தோடு கூடிய அந்நியோன்னியத்தையும் உணர்ந்தான் ருத்ரன். அவளின் ஒற்றை இதழ் முத்தத்தில்!!
மேகத்திலிருந்து விழுகின்ற ஒற்றை நீர்த்துளிக்காக காத்திருக்கும் சாதகப்பட்சி போல அவளின் உள்ளார்ந்த அன்புக்காக காத்திருந்தவன், அந்த ஒற்றை முத்தத்தில் தன்னிலை இழந்தான் ருத்ரன்!!
ருத்து!! என்றவள் அவன் கேசத்துக்குள் தன் விரல்களை விட்டு
கோதியவள், அக்கேசத்தை பற்றி சற்றே வன்மையாக தன்னை நோக்கி இழுக்க, மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல் அவளின் இழுப்பிற்கு சென்றவன் மன கவலையை ஆற்றினாள் தன் இதழ் என்னும் மருந்தினால்!!
சும்மாவே அவள் அருகாமையில் அனலாக தவிப்பவன்.. தகிப்பவன்.
இன்று அவளின் காதலில் உணர்வுகளின் பிடியில் பிழம்பானான் அவன்!!
"என்னடி புதுசா.. புதுசா.. ஏதோ செய்கிற?" என்றவன் மொத்தமாக அவளுள் கரையவே விருப்பம் கொண்டு.. அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டு.. கழுத்து வளைவில் அழுத்தமாக முகம் புதைத்தான்!!
அவன் உடலின் நடுக்கத்தையும்.. கைகளில் இறுக்கத்தையும் கொண்டு அவன் மனதினை படித்தவள் "ருத்து ப்ளீஸ்... கண்ட்ரோல் யுவர் செல்ஃப்!!" என்று முதுகை நீவி விட. இன்னும் இன்னும் அவனின் அணைப்பு இறுக்கமானது.
"ருத்து.. ப்ளீஸ் என்னை பாருங்க!!" என்று அவளின் எந்த கெஞ்சலுக்கும் அவனிடம் பதிலே இல்லை..
"என்னை பார்க்க மாட்டீங்களா?" என்று கெஞ்சலாக கேட்டுக் கொண்டிருந்தவளின் கைகள் என்னமோ அவளின் பிடறிக்கேசத்தை கொஞ்சிக் கொண்டு இருந்தது.. கொஞ்சம் வேணும் அவனது மன காயத்தை ஆற்ற…
நெடுநாள் காயம் அல்லவா? உடனே ஆறாமல்.. ஆறவிடாமல் இடையில் பல மன போராட்டங்கள் அவனுள். அதை எல்லாம் அவளின் அருகாமையில் அணைப்பில் கரைத்துக் கொண்டு இருந்தான்.
"கொஞ்சம் என்னை பாருங்களேன்?" என்றவளுக்கு இறுகிய அணைப்பையே பதிலாக தந்தான்.
சற்றே தன்னை நிதானித்தவன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து, அவளை தன் மடி மீது அமர்ந்து கொண்டான்.
"நந்தினி… வெறும் தோழி இல்ல டி!!"
என்று எதிரே இருந்த நந்தனியின் போட்டோவை பார்த்துக் கொண்டே அவன் பேச ஆரம்பிக்க.. கடந்த காலத்திற்குள் சென்று விட்டான் என்பதை அறிந்தவள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
"பசிக்கும்போது சாப்பாடும் அன்பும் கொடுக்கிறவங்க அம்மான்னா.. அவன் எனக்கு அம்மா!!
கண்டிக்க நேரத்தில் கண்டித்து அரவணைக்கும் நேரத்தில் அரவணைப்பது அப்பா என்றால் அவள் எனக்கு அப்பா!!
என்னதான் சண்டை இட்டாலும் தாங்கி பிடித்து செல்லும் போது அவள் எனக்கு சகோதரன்!!
இப்படி எனக்கு எல்லாமுமாக இருந்தவளைத்தான்.. அவளுக்கும் எனக்கும்.. உள்ள உறவை கொச்சைப்படுத்தி பேசினான் அந்த ஹர்ஷத்!!" என்றான் பற்களை கடித்துக் கொண்டே…
அவனின் வலியை குறைக்க தன் இதழ்களை இறையாக்கினாள் அவன் கடித்த பற்களிடையே மகதி!!
இருவரது உதடுகளும் ஒ
ன்றோடு ஒன்று பின்னி பிணைய, மகதியின் இளம் செவ்விதழ்கள் ருத்ரனின் தடித்த உதட்டில் கசங்கி கொண்டிருக்க, மகதியின் கை ருத்ரனின் கேசத்துக்குள் நுழைந்தது!