அத்தியாயம் 14
உறங்கும் மகளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன். அவன் அமர்ந்த வாக்கில் இருக்க.. அவன் மீது படுத்து உறங்கி இருந்தாள் ஆதினி. மகளை தன் மார்பில் தாங்கி, தலையை வருடியவாரே இருந்த ருத்ரனுக்கு பல யோசனைகள் மனதில்..
ராமஜெயத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டான். கூடவே அங்கே சொர்ணமா அவரது கணவன் இருப்பதால் மாமா தனியாக இருப்பார் என்று கவலை இல்லாமல் இங்கே மகளோடு இருந்தான் ருத்ரன். உள் மனதில் மாமா பேசி சென்ற வார்த்தைகளே நங்கூரம் இட்டுக் கொண்டிருந்தன..
மாலை வேலை முடித்து வந்தவனிடம் பொதுவாக சில விஷயங்களை பேசினார். அதன் பின் இரவு மருந்து கொடுப்பதற்கு மகதி வர ஆதினியை அவள் வழக்கம் போல கேள்விகள் கேட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்க.. ருத்ரனின் கண்கள் இமைக்க கூட மறந்து அவளைத்தான் வட்டமிட்டு கொண்டிருந்தது வண்டென... அதை பார்த்து ராமஜெயம் முதலில் மகிழ்ந்தார். நந்தினி நினைத்து மட்டுமே அவன் இப்படி தனித்து இருந்து விட முடியாது அவனுக்கும் வயதிருக்கிறது.. வாழ்வு இருக்கிறது அல்லவா? என்று மருமகனுடன் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
ஆனால் மருமகன் ஆவலோடு பார்க்கும் பெண்ணுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை தயாராக இருப்பதை அவர் அப்பாவே கூறி விட சற்றே நிதானித்தார் ராமஜெயம்.
"மார்னிங் இருந்து நீங்க என்ன சரியாவே பார்க்கவே இல்லை டியர்" என்று சலுகையோடு அவள் தோளில் சாய்ந்து கொண்டாள் ஆதினி..
"இன்னைக்கு கொஞ்சம் நிறைய பேஷண்ட்ஸ் பேபி. சரி மதியத்துக்கு மேல் வரலாம்னு பார்த்தேன் அப்புறம் தான் உங்க தாத்தா வந்திருக்காங்க இல்லையா? ரொம்ப நாள் கழிச்சு உங்க தாத்தாவ மீட் பண்ற.. அதனால நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணல!! ஐ டூ மிஸ் யூ பேபி" என்று இவளும் அவளை தோளோடு கட்டிக்கொள்ள…
"பொய்… பொய்.. என்னை நீங்க மிஸ் பண்ணிருந்தா ஃபர்ஸ்ட் என்னை தான செக் பண்ண வரணும்? ஏன் லாஸ்ட்டா வந்தீங்க?" என்று புருவங்களை சுருக்கி செல்லக் கோபத்தோடு கேட்கும் அவளது கண்களில் ருத்ரனை கண்டு திடுக்கிட்டாள் மகதி.
'அப்படியே அப்பன் மாதிரியே முறைக்கிற பேபி நீ!' என்று மனதுக்குள் சிலாகித்தவள் அவளது இரு கன்னங்களையும் செல்லமாக பிடித்து ஆட்டி "எல்லாரையும் பார்த்துட்டு உன்கிட்ட வந்தா தானே.. நிறைய நேரம் உன் கூட ஸ்பென்ட் பண்ண முடியும் பேபி?" என்று ஒற்றைப்பருவத்தை தூக்க.. "ஆமாமில்ல…" என்று ஆதினியும் சிரிக்க…
இருவரும் மட்டுமே தங்கள் உலகத்திற்குள் பயணித்துக் கொண்டிருந்த அந்த உலகத்துக்குள் தாமும் சேர மாட்டோமா என்று ஏக்கப்பார்வை ருத்ரனிடம்!! தன்னையும் மீறி அவளை ஆவலோடு.. ஆசையோடு.. ஏக்கத்தோடு பார்த்தான். ராமஜெயம் அருகில் இருப்பதை உணர்ந்து கொண்டவன், 'மாமாவை வைத்துக்கொண்டு.. என்னடா பண்ற ருத்ரா?' என்று சிகையை கோதி திரும்பிக் கொண்டான்.
ஆதினியும் மகதியும் பேசிக் கொண்டிருக்க "டாக்டர் ஒரு 10 மினிட்ஸ் நீங்க ஆதினி கூட இருக்க முடியுமா? நான் வீட்டுக்கு கிளம்புறேன்.. கொஞ்சம் என் மாப்பிள்ளை கிட்ட பேசணும்" என்ற கேட்டதும், "மாமாவுக்கு மாப்பிள்ளைக்கும் இடையில நிறைய இருக்குது போல பேச" சிரித்தவாறு தலையாட்டினாள் மகதி.
மாமா தனியாக அழைக்கும் போதே ஏதோ கண்டு கொண்டார் என்று உணர்ந்த ருத்ரன் இடது பெருவிரலால் நெற்றியை நீவி கொண்டவன், "சொல்லுங்க மாமா…" என்றான், அந்த அறையின் வெளியே வந்து காரிடரின் மூலையில் நின்று கொண்டு..
அவனையே சிறிது நேரம் அழுத்தமாக பார்த்தவர் "எனக்கு ரொம்ப சந்தோஷம் ப்ரதாப்பா.. நீ இப்படியே இருந்துடுவியோனு மனசுக்குள்ள கொஞ்சம் இல்ல ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஆனா உன் மனசுக்குள்ளயும் ஒரு பெண் மேல விருப்பம் இருக்குன்னு எனக்கு உன் முகம் காட்டிக் கொடுத்திடுச்சு.." என்ற சொல்ல… "ம்ப்ச்.. மாமா.." என்று அவன் காலை உதற.. சிரித்துக் கொண்டார்.
"உனக்காக கூட இல்ல காலையிலிருந்து ஆதினி வாயிலிருந்து மகதி என்கிற வார்த்தை தான் மந்திரம் போல வந்து கொண்டே இருந்தது. அதனால அந்த பெண்ணை பார்த்து விவரம் கேட்கலாம் போனப்ப... அவங்க அப்பா அந்த பொண்ணுக்கு ஏற்கனவே மாப்பிள பாத்துட்டாரு போல.. அவரை கூட்டிட்டு வந்து எனக்கு இன்ட்ரோ பண்ணி வைக்கிறார்" என்றார் சற்றே வருத்தமான குரலில்…
அதுவரை தன்னை மாமா கண்டு கொண்டாரே என்று இதழ் ஓரம் முகிழ்த்த சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தவன், 'மகதிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்' என்ற வார்த்தையில் அதிர்ச்சியோடு மாமனை பார்த்தான்.
"ஆமாம்!!" என்பது போல தலையாட்டி "எங்கிட்ட வந்து இண்ட்ரடியூஸ் பண்ணாரு.. எதுக்கு கொஞ்சம் விசாரிச்சுக்க பிரதாப்பா…" எங்கே மருமகன் ஆசை வைத்து அது கிடைக்காமல் போய்விடுமோ என்று விஷயம் கூறியவர், "எதா இருந்தாலும் பொண்ணு விஷயம் பார்த்து பக்குவமா ஹாண்டில் பண்ணனும்.. ஏற்கனவே ஒரு முறை பட்டதே போதும்!! கூடவே நாமளும் பொம்பள புள்ளைய வச்சிருக்கோம்" என்று அவன் தோளை தட்டி விட்டு சென்று விட்டார்.
மாமா பேசியதே தான் உரு போட்டுக் கொண்டிருந்தான் மனதில். 'அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் சரி, ஆனால் அவளுக்கு அதில் விருப்பமா இல்லையா என்று தெரியவில்லையே? அதைவிட தன் மேல் அவளுக்கு விருப்பம்.. நாட்டம்.. ஈர்ப்பு.. சலனம்.. இதில் ஏதாவது ஒன்றாக இருக்கிறதா?' என்று யோசித்தவன் தங்களுக்குள்ளான நெருக்கமான நேரங்களை நினைத்துப் பார்த்தான்.
அப்படி நினைக்கும் போதே முதலில் ஞாபகத்துக்கு வந்தது இவன் கொடுத்த அடிதான்!!
"அப்பா ஃபர்ஸ்ட்டே செமையா கொடுத்திருக்கேனே… இல்லையில்லை அடிக்கிற கை தான் அணைக்கும்!!" என்று மீண்டும் அடுத்த அடுத்த சந்திப்பை நினைத்துப் பார்க்க.. இவன் சில சமயம் அத்துமீறி அந்தரமாக நடந்து கொண்டாலும், அவளிடம் பெரிதாக வெறுப்போ விலகலோ இல்லை என்பதை கண்டு கொண்டவனுக்கு அவள் மனதின் மூலையில் எங்கோ ஒரு துளியில் என் மீதான அபிப்ராயம் இருக்கிறது என்பதே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
"இனி எந்த கொம்பன் வந்தால் என்ன? டாக்டர் கலெக்டருக்கு தான்!!" என்று நினைத்தவன், இருப்பினும் வாய்மொழியாக அவளது மனதை தெரிந்து கொண்டாலன்றி.. இதயம் உறுதியாக சொல்ல நினைக்க கூடாது என்று நினைத்தவன் தூங்கும் மகளை மெதுவாக பெட்டில் கிடத்துவிட்டு அங்கே இரவு நேர வேலையில் இருக்கும் செவிலியர்களிடம் மகளை பார்த்துக் கொள்ள செய்தான்.
சில சமயம் இரவில் கூட அவனுக்கு சூரிய பிரகாஷ் போன் செய்து கேஸ் நிலவரங்களை தெரிவிப்பான். அதனால் அவ்வப்போது இப்படி பார்த்துக் கொள்ள சொல்வது வழக்கம் தான்.
மணி பத்தை நெருங்கியிருந்தது. அவள் இருக்கிறாளா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் ஏதோ ஒரு மனம் உந்தியது.. அவளைக் காண இவனை தூண்டியது.
லிப்டை தவிர்த்து போனை கையில் வைத்துக் கொண்டு மெல்ல மாடிப்படிகள் ஏறி இரண்டாம் தளம் வந்தவன் அந்த தளத்தை பார்க்க.. சில இடங்களில் இரவு விளக்குகளும் பல இடங்களில் பளீச்சென்று விளக்குகளும் எரிந்தது. அவ்வப்போது செவிலியர் நடமாட்டமும் இருந்தது. சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக இருக்கும் குழந்தைகளை அவ்வப்போது கண்காணிப்பதும் அவர்களது முக்கியமான வேலை என்பதை அறிந்தவன் மெதுவாக நடந்தான் யாருக்கும் சந்தேகம் வராமல்.
'இருக்காளா? இல்லையான்னு தெரியலையே?' என்று உதடு கடித்தவாறு போனை இரு விரல்களுக்கு இடையே சுற்றிக் கொண்டே வந்தவன், அவளது ஓபி அறையின் கதவில் மெதுவாக கை வைத்து தள்ள.. அதுவும் திறந்தது. உள்ளே தெரிந்த வெளிச்சத்தை கண்டவன் முகத்தில் அத்தனை பிரகாசம்!!
மகதி டேபிள் மீது முழங்கையை ஊன்றி உட்கார்ந்துகொண்டு, கன்னத்தை அதில் தாங்கியவாறு வாயில் பேனாவை வைத்துக் கடித்துக்கொண்டிருந்தாள்!! இல்லை இல்லை வெகுவாக யோசனையில் இருந்தாள்.
எல்லாம் மதியம் போல அவளுக்கு மாப்பிள்ளை என்று பார்த்திருந்த ஹர்ஷத் பற்றி தான்…
ராமஜெயத்துடன் அவர் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அங்கே வந்த தந்தை சில முகமன்களை ராமஜெயத்திடம் முடிந்து விட்டு ஹர்ஷத்தை காட்டி அவர்தான் மாப்பிள்ளை என்க அவர் அதிர்ந்தாரா இல்லையோ மகதி அதிர்ந்தத்திற்கு அளவே இல்லை.
ஏற்கனவே மாப்பிள்ளை மருத்துவனாய் இருக்கக் கூடாது என்று இவள் கட்டளையிட்டிருக்க.. மீறிக்கொண்டு அப்படியே மாப்பிள்ளை பார்த்து இருக்கும் இந்த அப்பாவை என்ன செய்ய என்று ஒரு பக்கம் கோபம்!! மறுபக்கமும் கல்யாணத்தின் நிதர்சனம் உறைக்க. சற்று விதிர் விதித்து போனாள்.
அடித்தவுடன் காதல் வந்தது.. அணைத்தவுடன் மோகம் வந்தது.. என்று பிதற்றும் பெண்ணில்லை மகதி. ஆனாலும் அந்த காட்டான் கலெக்டர் மீது ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மைதான். அதிலும் ஆதினி தன்னை போலே அன்னைக்காக சிறுவயதில் ஏங்கியவள் என்று அறிந்தவள், அந்த அன்பை கொடுக்கும் ஒரு உத்வேகம் பிரவாகம் எடுத்தது மகதியின் பெண்மைக்குள்..
எல்லா பெண்மைக்குள்ளும் ஒரு தாய்மை இருப்பது உண்மை அல்லவா? அந்த தாய்மை ஆதினியை பார்த்ததும் மகதிக்கு ஊற்றெடுக்க.. மற்ற குழந்தைகள் இடமே அவ்வளவு அன்பாக இருப்பவள் ஆதினிடம் கேட்கவும் வேண்டுமா??
இரு கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தாள். கண்டிப்பாக இந்த திருமணத்திற்கு தந்தை ஒத்துக் கொள்ளப் போவதில்லை. வெறும் இரண்டாம் கல்யாணம் என்றாலே எதிர்ப்பவர் அதுவும் மகளோடு இருக்கிறவனுக்கு எந்த தந்தை தான் மனம் உவந்து பெண்ணை கட்டிக் கொடுப்பார்..
அவளுக்கு மேல் நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. அதனால் இன்று நைட் டூட்டி என்று வீட்டிற்கு செல்லாமல் இங்கேயே தங்கிவிட்டாள். அவளது மனம் என்னவென்று தெளிவாக தெரியாமல் தந்தைக்கு பதில் அளிக்க அவள் விரும்பவில்லை.
"வீட்டிற்கு சென்றால் கண்டிப்பாக இரவு தந்தை அந்த அமெரிக்கக்காரனுக்கு மார்க்கெட்டிங் பண்ணுவார் பக்கம் பக்கமாக… கூடவே அம்மாவையும் துணைக்கு அழைத்துக்கொள்வார். சொல்லவும் வேண்டுமா? இரண்டு பேருமே கைனக்காலஜிஸ்ட்.. இவங்க சேர்ந்து தான் இந்த ஹாஸ்பிட்டல தூக்கி நிறுத்துற மாதிரி பேசுவாங்க.." என்று மனதுக்குள் புலம்பினாள்.
"நோ மகதி… நோ!! இது புலம்புவதற்கான நேரம் கிடையாது. நமக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கக்கூடிய நேரம்!! கண்கள் முன்னால் இருக்கும் இரண்டு பாதையில் எந்த பாதையை தெரிவு செய்வது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்" என்று அதைத்தான் மிக மும்முரமாக யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் ருத்ரன் அந்த அறைக்குள் நுழைந்தது.
அவன் அவள் முன் போய் நிற்க.. அவளது அழகான காந்த விழிகளால் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
''டியூட்டி முடியலையா.??'' அவன் இயல்பு போலக் கேட்டேன்.
''நைட் டியூட்டி'' சற்றே முறைப்புடன் கூறினாள், அவள் மனம் அவளுக்கு தெரியும் முன்னே.. இப்படி தன் முன்னே வந்து நிற்பவனை கண்டு சிறு கோபம் அவளுக்குள்.
''என்ன..??'' என்றான் அவளின் முறைப்பை புரிந்து..
''ஒன்னுமில்ல…" என்றாள்.
"பொண்ணுங்க ஒன்னும் இல்லன்னு சொன்னா.. அதுக்கு பின்னாடி ஆயிரம் இருக்குன்னு அர்த்தம்!!" என்ற இலகுவாக அவள் முன் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து அவளை தான் பார்த்தான் அழுத்தமாக.. ஆழமாக… அவள் இதயத்தை ஊடுருவி கண்டுகொள்ளும் வண்ணம்.
அவள் முகத்தை திருப்பிக் கொள்ள..
அவனுக்கு இன்னும் சுவாரசியம் பொங்கியது அவளை சீண்ட..
"இந்நேரம் டூயட் மோட்ல இருப்பீங்கன்னு பார்த்தா… நைட் டூட்டியில் இருக்கீங்க டாக்டர்!!" என்று சீண்டினான்.
சட்டென அவன் முன்னால் குனிந்து வாயிலிருந்த பேனாவை எடுத்து எச்சில் தெறிக்க அவனை அடித்தாள்.
அதை சற்றும் எதிர்பார்க்காத ருத்ரன் தன் முன்னால் நின்றவளின் எழில்கோல அழகில் சற்றே மனம் திக்க.. வார்த்தைகள் விக்க... கண்களை கடினப்பட்டு திருப்பிக் கொண்டான்.
"ஏன் டூயட் பாடலை? இல்ல ஒரே குஜாலா?" என்றான் மீண்டும் அவள் மனதை அறிய சீண்டினான்.
"டூயட்டும் இல்ல… மண்ணும் இல்ல.. சும்மா இருங்க.. கடுப்பை கிளப்பாமா?" என்றாள் ஆத்திரத்தோடு!!
''பொய்.. பொய்யா புளுகறது..!! புளுகு மூட்டை..!!'' என்றான் சிரிப்போடு. அவனின் சிரிப்பை கண்டவளுக்கு இன்னும் பிபி தான் எகிறியது.
''என்ன பொய்...?? நீங்க பாத்தீங்களா நாங்க குஜாலா இருந்தது.. என்ன குஜாலா இருந்தோம்? இன்னிக்கி தான் அந்த ஆள மாப்பிள்ளை என்று எங்கள் அப்பா இழுத்துட்டு வந்து நிக்க வெச்சி இருக்காரு.. உடனே குஜால் மோடுக்கு போய்டுவாங்களா? இல்ல நான் தான் விட்டுடுவேனா? என் சுண்டு விரல் நுனியை கூட அவன் தொட முடியாது!!" சொல்லிக்கொண்டே ஆதங்கத்தில் கத்தினாள்.
மனது அவளது வார்த்தைகளில் ஜிவ்வென்று இருக்க.. மீண்டும் அவளை சீண்ட ''சொல்றது பூரா பொய்.. பொய்" என்றான். அவளை சீண்டி அதன் மூலம் அவளது கோபத்தை பார்க்க அவனுக்கு ரசித்தது ருசித்தது.
''வாட் பொய்யா? ஆமா.. நாங்க லவ்வர்ஸ்...?? அதான் கொஞ்சம் அப்படி.. இப்படினு இருந்தோம்… இப்போ என்ன அதுக்கு?" என்றாள் கோபத்தில் மார்பு விம்ம…
"வாவ்.. அந்த அப்படி இப்படி எப்படின்னு எனக்கு கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்ல டாக்டரே!! நானும் கத்துப்பேன்ல பாவம் ஒத்தையா இருக்கேன். முரட்டு சிங்கிள் வேற.. யார் கூடயாவது மிங்கிள் ஆவான் இல்ல" என்று கண்கள் முழுக்க குறும்போடு கேட்டவனை கண்டவளுக்கு இன்னும் கோபம் தான் மிகுந்தது. தான் இங்கு குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டிருக்க.. இவனோ சாவகாசமாக சாய்ந்து உட்கார்ந்து சீண்டி கொண்டு இருக்கிறானே என்று!!
''எப்படி.. எப்படி..?? நீங்க சிங்கள்? மிங்கிள் ஆகணுமா? போய்யா பூமர் அங்கிள்!!" எழுந்து நின்று அவளது மென்மைகள் அதிர அவனை அடித்தாள். அவளின் அங்க அலங்கார அதிர்வுகளில் ருத்ரனின் இதயம் சிதறியது. முயன்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
"எதே… அங்கிளா?" என்று அதிர்ந்தவன், அவளை அவன் தடுப்பதுபோல அவளது கைகளை பிடித்துக்கொண்டான். அவள் கைகளை விடுவிக்க போராடி தோற்று.. கோபம் மிக.. அவனைக் கடிக்க வந்தாள். அவளது வாய்க்கு அவனின் கையை அகப்பட விடாமல் நகர்த்தி.. நகர்த்தி அவன் விளையாட்டு காண்பிக்க.. அவளின் கோபம் மூர்க்கமாக மாறியது.
அவள் கைகளையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டான். டேபிள் மீது மடங்கி குனிந்தும் அவனை எட்ட முடியாமல்.. இன்னும் இன்னும் அவளின் மூர்க்கமும் சிரித்துக் கொண்டே தன்னை சிறை பிடித்து இருக்கும் அவரின் மீது கோபமும் ஏற.. சட்டென்று அந்த டேபிள் மீது ஏறி அவன் மீது பாய்ந்து விட்டாள்.
சத்தியமாக இப்படி ஒரு வேகத்தை செயலை மகதியிடம் ருத்ரன் எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ந்து விழித்தவன், அவளது கைகளின் இறுக்கத்தை தளர்த்த.. அதை சதுரயமாக பயன்படுத்திக் கொண்டாள் டாடியின் லிட்டில் பிரின்சஸ்!!
அவன் மேல் விழுந்தாள் அவள் மொத்தமாக!!
அவன் வீழ்ந்தான் அவளிடம் முழுவதுமாக!!
அவள் கையை தன் பிடியிலிருந்து விலக்கிக் கொண்டதை அறியாமல்.. அவளின் அதிரடியால் பின்னால் இருக்கையோடு சாய்ந்து கீழே உருண்டு விழுந்ததையும் உணர்வுக்கு புரியாமல்…
ஒரு மோன நிலையிலேயே அவளது செயல்களை கிறக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் கலெக்டர்!!
அவளின் நெருக்கம்..
அவனிடத்தில் கிறக்கம்!!
அம்மயக்கத்தில்..
அவளை அணைத்தான்... இறுக்கமாக!!
அவனின் கன்னத்தைக் கடிக்கத் தொடங்கினாள் மகதி. அவனோ அதை கண்கள் மூடி ரசிக்க… இன்னும் வெறியுடன் கடித்தாள்!!
"அடியேய்.. பிசாசு வலிக்குது டி!! விடுடி!! டிராகுலா மாதிரி இப்படி கடிக்கிறியேடி!!" என்று அவன் போராடினான் அவள் கடியிலிருந்து தப்பிக்க…
"வலிக்கட்டும்.. உனக்கு இன்னும் நல்லா வலிக்கட்டும்!! எனக்கும் இங்கு வலிக்குது தெரியுமா? அதே மாதிரி உனக்கும் வலிக்கட்டும்!! நல்லா வலிக்கட்டும்!!" என்று தன் நெஞ்சை சுட்டிக்காட்ட அவன் பார்வை அங்கு போனதை கண்டவள், "பொறுக்கி.. பொறுக்கி..!!" என்று இன்னும் அவனை வேகமாக கடிக்க முயன்றாள்.
"நான் எங்கடி அங்க பார்த்தேன்? நீ தானே காமிச்ச... வலிக்குது கடிக்காதடி!" என்று மீண்டும் அவள் கைகளை இவன் சிறைபிடிக்க முயல அவளோ சிக்காமல் தப்பித்தாள்.
அவன் முயன்றால் வேகமாக அவளை பிரட்டி கீழே தள்ளிவிட்டு எழ முடியும். ஆனால் ருத்ரனோ இதை ரசித்தான்.
அவளது கோபத்தை..
அவளது அருகாமையை...
அவளின் ஸ்பரிசத்தத்தை..
அவளின் நெருக்கத்தை..
அவளின் அனைத்தையும்!!
முகத்தை திருப்பித் திருப்பி அவன் தப்ப முயல.. அப்போதும் அவள் ஓய்வதாக இல்லை. சாதாரணமாக இருந்திருந்தால் கண்டிப்பாக மகதி இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க மாட்டாள். ஆனால் அவன் மனதில் அழுத்தமும்.. கூடவே இவ்வளவு மன அழுத்தத்தில் அவள் இருக்கும்போது... அவனின் அந்த ரகசிய சிரிப்பும்.. சீண்டலும்.. தான் அவளை அலைக்கழித்து இவ்வளவு கோபம் ஆக்கியது.
"வேண்டாம் மதி.. வேண்டாம் சொன்ன கேளு டிராக் மாறிடும்டி!!" என்று அவன் ஹஸ்கி வாய்ஸில் கூற..
"ட்ராக் மாறிடுமா? ஹா.. இந்த வண்டி ட்ராக்கில் ஓடவே இல்ல. அப்புறம் எங்க அது மாறுறது?" என்று அவள் பேச அதில் தொணித்த இரட்டை அர்த்தத்தை கேட்டு "அடிப்பாவி..!!" என்று வாயை பிளந்தவன் இவள் இப்போது அவளாக இல்லை பயங்கர குழப்பத்திலும் அழுத்தத்திலும் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான்.
"நீ ஸ்ட்ரஸ்சா இருக்க மதி. நாம பேசலாம்" என்று அவனும் மென் குரலில் கூற..
"ஸ்ட்ரெஸ்ல தான் இருக்கேன். ஏன்டா இப்படி இருக்கீங்க? எங்களை தூண்டி விட்டுட்டு ஒன்னும் தெரியாத புள்ள மாதிரி அமுக்கமா உட்கார்ந்து இருக்கீங்க? ஆனா இந்த மகதி சாதாரண பொண்ணு கிடையாது தெரியுமா?" என்று அவள் மீண்டும் அவன் கன்னத்தைக் குறி வைத்து கடிக்க வர... அவன் சட்டென அவளது திறந்த வாயுடன் தன் வாயைப் பொருத்திக் கொண்டான்.
அவளது வெல்வெட் உதடுகள் அவனின் அழுத்தமான உதடுகளில் பொருந்தி அழுந்தியது. அவளோ அதை உணரவேயில்லை… அப்போதும் அவனைக் கடிப்பதிலேயே குறியாக இருந்தாள். அவள் தன் வாயைக் கடிக்க.. ருத்ரன் கையில் பிடித்திருந்த அவள் கைகளை விட்டு இடையை அழுத்தமாக இறுக்கியவன், அவளது உதடுகள் இரண்டையும் தன் வாய்க்குள் இழுத்து உறிஞ்சத்தொடங்கினான்.
அவ்வளவுதான்.. அதற்கு மேலும் அவனால் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை!! அவளை முழுமையாக தன் மார்பில் படர வைத்து, அவளது கால்களை தன் கால்களோடு பின்னி பிணைத்துக் கொண்டான்.
அவளது மெல்லிய இதழ்நீரை உறிஞ்சி சுவைத்துக் கொண்டே தன் அவள் இடையை நெறித்தான் இரு கைகளால்...
மகதியும் அவன் மீது இருந்த கோபம் மறந்து கிறங்கியபடி அவனின் இதழணைப்பில் மூழ்கினாள். அவளின் சிறு அசைவு கூட அவனைப் பெருதாய் பாதிக்க.. அவளை அசைய விடாமல் பிடித்துக்கொண்டு அவளது உதட்டு அமுதம் அருந்தினான் ருத்ரப்ரதாப்!! இருவரும் சிறிது நேரம் தங்களை மறந்து அம்முத்தத்தில் கரைந்து கிறங்க.. மூச்சு முட்டி மெல்ல தன் உதடுகளை பிரித்தாள் மகதி!!
இதழ்கள் தான் பிரிந்ததே தவிர அவர்களின் இணைவுகள் பிரியவில்லை.. இணைந்தே கிடந்தனர்.
வீட்டிற்கு கிளம்பிய மகாதேவனுக்கு இருப்பு கொள்ளவில்லை மகள் இன்னும் பதில் கூறாததால்.. போகும்போது எதற்கும் ஒரு முறை மகளை பார்த்து செல்வோம் என்று அவளது அறையை நோக்கி வந்தார்.
மகள் அறையை திறக்கும் முன்னே நாகரிகம் கருதி "மகதி…!!" என்று அவர் கதவை தட்ட...
சடாரென பாய்ந்து போய் நல்ல பிள்ளையாக அவளது இருக்கையில் உட்கார்ந்து பேனாவை எடுத்துக்கொண்டு தலையைக் குனிந்து எழுதத்தொடங்கினாள் மிக முக்கியமாக பிரிஸ்கிரிப்ஷன் பேடில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து ருத்ர பிரதாப்புக்கு அவ்வளவு சிரிப்பு!! இவள் ஸ்கூல் காலேஜில் எப்படி படித்திருப்பாள் என்பது புரிய… இன்னும் இன்னும் சிரிப்பு பெருகியது அவனுக்கு!!
"அடியே.. இத்தாம் பெரிய உருவம் இங்கே கடக்க.. நீ மட்டும் போய் அங்க உக்காந்து நல்ல பேரு எப்படி வாங்க முடியும்?" என்று அவன் சிரிப்போடு கூறவும் தான்.. 'மண்டையில் மேலிருந்த கொண்டையை மறந்துட்டோமே!' என்று திருத்திரு என்று
விழித்தாள் மகதி ஸ்ரீ!!
அதே நேரம் மகளின் அறையில் இருந்து ஆணின் சிரிப்பு குரல் கேட்டதும், பதறி கதவை திறந்து "மகதிமா..??" என்று உள்ளே வந்தார் மகாதேவன்.