அத்தியாயம் 11
ஆதினியின் உடம்பில் எம்டிஎம்ஏ அவள் வயதுக்கு ஹெவி டோஸாக இருக்கிறது என்பதைக் கேட்டதும் அதிர்ச்சியாகி அமர்ந்து விட்டான் ருத்ரன்.
சின்ன பிள்ளை அவள்!! அவளது உடம்பில் ஹைடோஸ் போதை மருந்து!! எப்படி? எங்கிருந்து? என்று ஒன்றும் புரியாமல் அவன் அமர்ந்திருக்க... மகதி தான் அவன் அருகில் வந்து "பேபி இன்னைக்கு எங்கயும் வெளியில சாப்பிட்டாளா சார்?" என்று மெதுவாக கேட்க சட்டென்று நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் அதிர்ச்சியில் நிலை குத்தியது!! ஆம் என்று தலையசைத்தவன் "பார்க்… பார்க்கில் ஐஸ்கிரீம் சாப்பிட்டா…" என்றான் ஜீவனே இல்லாமல்…
"மறுபடி வீட்டுக்கு வந்து சாப்பிடுவதற்கு முன்னாடியே அவ மயங்கிட்டா... அப்போ... அப்போ…" என்றவன், "அந்த ஐஸ்கிரீம் தான் இல்ல…" என்று எழுந்து தன் பாக்கெட்டில் இருந்த கர்சிப்பை எடுக்க... அதில் ஆதினிக்கு வாய் துடைத்த ஐஸ்கிரீம் கறைகள் இருக்க "இத லேபுக்கு கொடுத்து நீங்க டெஸ்ட் பண்ணுங்க… இதுனு மட்டும் உறுதியாகட்டும்.. அவனுங்க குடலை உருவிடுறேன்!!" என்றான் ரௌத்திரமாய் மீண்டு விட்ட கலெக்டராக…
நம் கையாலேயே நம் பெண்ணுக்கு போதை வஸ்துவை வாங்கி கொடுத்து விட்டோமே என்று தகப்பனாய் பெரும் வருத்தம்!! அதே நேரம் இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது என்று ஆட்சியராய் பெரும் கோபம்!!
அவள் மகள் மட்டுமில்லையே?? அவளோடு சேர்த்து நிறைய குழந்தைகள் சாப்பிட்டதே என்று எண்ணம் தோன்ற... அப்ப அந்த குழந்தைகள் நிலை?? என்று மற்ற குழந்தைகளை நினைத்து பதறியவன், லேபுக்கு செல்ல திரும்பிய மகதியின் கையை பிடித்து திருப்பினான்.
"இத.. இத.. உன்கிட்ட எப்படி எந்த உரிமையில கேட்கிறதுனு தெரியவில்லை… ஆனால் இப்பொழுது உன்னை விட்டா எனக்கு வேற ஆளும் இல்லை!! என் பொண்ண பார்த்துக்க மகதி எதுவும் ஆகிடாம.." என்று இதுவரை யாருக்காகவும் எதுக்காகவும் கெஞ்சாதவன், மகளுக்காக மகதியின் முன்னே தயங்கி கெஞ்சி நின்றான்.
அவள் வாய் திறக்கும் முன் அவள் இதழ்களை தன் உள்ளங்கையால் மூடி "இல்ல எதுவும் சொல்லாத... அவளுக்கு டாக்டர் விட ஒரு அன்பான கேர் பண்ற பெர்ஷன் தேவைப்படுது!! நான் இப்ப போன எப்ப வருவேனு தெரியாது. கேர் டேக்கர் வந்தாலும் இந்த சூழ்நிலையில் எனக்கு யாரிடமும் நம்பிக்கை இல்ல!! கொஞ்சம் தயக்கமாகவும் ரொம்ப பயமாகவும் இருக்கு... கேன் யூ ப்ளீஸ்?" என்று ஆறடி ஆண்மகன் நிலைகுலைந்து தன் முன் கண்களால் கெஞ்சி நிற்கும் அந்த கோலத்தை கண்டவளுக்கும் மனதில் ஏதோ பிசைந்தது.
அது என்ன மாதிரி உணர்வு? ஏன் நமக்கு இப்படி வருகிறது? என்றெல்லாம் அந்த நேரம் அவளுக்கு ஆராய தோன்றவில்லை!! அவளுக்கு பிள்ளைகள் என்றால் பிடிக்கும்!! அதிலும் அம்மா இல்லை... தன்னைப்போல சிறு வயதிலேயே அன்பு பாராட்ட.. கண்டிப்பு காட்டா.. அரவணைத்து செல்ல.. அன்னை இல்லாது பட்ட கஷ்டத்தை அறிந்தவள் தானே.. அதனாலேயே முன்வந்து ஒப்புக்கொண்டாள். ஆனால் அது மட்டும் தான் காரணமா? என்ற மனதின் கேள்விக்கு பதில் இல்லை பெண்ணிடம்!!
"யூ டோன்ட் வொர்ரி பிரதாப் சார்!! எனக்கும் பேபினா ரொம்ப பிடிக்கும். நான் பாத்துக்கிறேன் பேபிய…" என்றதும் தான் அவனுக்கு மூச்சு சற்று சீராக வந்தது.
அதற்குள் சொர்ணமாவும் அவரது கணவரும் இங்கே வந்துவிட, இருவரிடமும் சிறிது நிமிடங்கள் பேசியவன் "பார்த்துக்கோங்க!!" என்று விட்டு மகதியிடம் கண்களாலேயே விடை பெற்று சென்றான்.
"அது என்ன கண்ணால போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போறாரு? வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருக்காரு? வாய திறந்து சொன்னா குறைஞ்சு போயிடுவாரா? என்னமோ பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு போற மாதிரி கண்ணால சொல்லிட்டு போறாரு" என்று அதற்கும் அவனை வறுத்தெடுத்தவாறு தான் இவள் ஐசியூ அறைக்குள் சென்றாள்.
மகாதேவன் மற்றும் மகதியின் ஒரு சீனியர் மருத்துவரும் ஆதினி அருகிலே தான் இருந்தார்கள். ஏனென்றால் சிறு குழந்தைக்கு இவ்வளவு ஹெவி டோஸ்.. எந்த அளவு என்ன பாதிப்புகள் வரும் என்று அவர்களுக்கு தெரியவில்லை!! அனுமானம் மட்டுமே!! அனுபவம் அனுமானம் இரண்டுக்குமே முதல் என்று ஒன்று வேண்டும் அல்லவா?
எதற்கும் தயாராக இருப்போம் என்று அவர்களது கண்காணிப்பில்... மருத்துவமனை படுக்கையில்.. துவண்டு கிடந்தாள் ஆதினி, ருத்ரனின் அழகு மகள்!!
உள்ளே வந்து மகளைப் பார்த்த மகாதேவன் "கலெக்டர் சார் கிட்ட இன்பார்ம் பண்ணிட்டியா மகா ஆதினி பத்தி?" என்று கேட்டார்.
"சொல்லிட்டேன் பா… ஆனா விஷயம் இன்னும் பெருசு போல பா? என்றதும், என்ன என்று மகாதேவன் கேட்க "பேபி வெளியில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு இருக்கா... அதனாலதான் இவளுக்கு இவ்வளவு ஹெவி டோஸ் ஆகியிருக்கு!! இன்னும் நிறைய பேர் ஐஸ்கிரீம் சாப்பிட்டு இருக்காங்க.. பேபி போல... அதை என்னன்னு பார்க்க தான் கலெக்டர் சார் போயிருக்காரு" என்றாள் வருத்தத்தோடு!!
"என்னது?? இன்னும் நிறைய குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா??" என்று அருகில் அமர்ந்திருந்த மகதியின் சீனியர் ரீவா கேட்க, ஆமா என்ற தலையசைத்தாள் மகதி.
"ஓ மை காட்!! இது எவ்வளவு பெரிய விஷயம்!! டாக்டர் கண்டிப்பா அவரு அந்த குழந்தைகளை இங்க தான் கூட்டிட்டு வருவாரு. நீங்க அந்த குழந்தைகளுக்கும் ட்ரீட்மென்ட்டுக்கு ரெடி பண்ணுங்க" என்றதும் தான் மகதிக்குமே சீனியர் சொல்வது சரி என்று பட.. இன்னும் தன் நண்பர்களுக்கு அழைத்தாள். மகாதேவன் எமர்ஜென்சி வார்டை சற்று பெரியதாக ஏற்பாடு செய்து கூடவே செவிலியர்களையும் இங்கே வரவழைத்தார்.
தன் வண்டியிலேயே சைரனை அலற விட்டப்படி அதி வேகமாக அந்த பார்க் சென்றான் ருத்ரன். "என்னோட கெஸ் அவன் கண்டிப்பாக அங்கே இருக்க மாட்டான். ஆனாலும் அவனை கண்டுபிடிக்கணும்" என்று யோசித்தான் இதற்கு யாரை அழைக்கலாம் என்று!!
ஏற்கனவே இதே சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவதை திறமையாக கண்டுபிடித்த அசிஸ்டன்ட் கமிஷனர் சூர்யபிரகாஷை தான் பிடித்தான் ருத்ரன்.
சூரிய பிரகாஷின் எல்லைக்குள் இந்த பகுதி வராததால் உடனடியாக அவனை இந்த இடத்துக்கு மாற்றம் செய்து அதிரடி ஆணை பிறப்பித்தவன், அந்த பார்க்கை சுற்றி இருந்த கடைகளில் எல்லாம் சிசிடிவி புட்டேஜை சேகரிக்க உத்தரவிட்டான்.
அந்த ஏரியாவில் இருக்கும் பிள்ளைகளைப் பற்றி விசாரிக்க சொல்ல.. ஆதினியோடு ஐஸ்கிரீம் சாப்பிட்டு நான்கு குழந்தைகளும் வேறு வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவனுக்கு தகவல் வந்தது. உடனடியாக அனைவரையும் மகா மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டான்.
ஒரு சில பெற்றோர் அவனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு மாற்றினர். ஒரு சில தற்குறிகளோ "அதெப்படி எங்க புள்ளைய நீங்க மாத்த சொல்லலாம்? எங்க வைத்தியம் செய்யலாம்னு அஸ் அ பேரண்ட் நாங்க தான் முடிவு செய்யனும். நாங்க அட்மிட் பண்ணி இருக்கிறது பெஸ்ட் ஹாஸ்பிட்டல் இன் சென்னை!! அப்படியெல்லாம் நாங்க மாற்ற ஒத்துக்க மாட்டோம்!! நீங்க கலெக்டராக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு ஆர்டர் போட முடியாது!!"
என்று அந்நேரத்திலும் வாக்குவாதம் செய்தவர்களை கண்டு கடுப்புதான் வந்தது அவனுக்கு.
"எந்த நேரத்தில் உங்கள் பாசத்தை காட்ட வேண்டும் என்று ஒரு அளவும் இல்லை!! தெளிவும் இல்லை!!" என்று கடுப்பிடித்தான்.
"உங்க பிள்ளைகளுக்கு வந்திருக்கிறது சாதாரண தலைவலியோ காய்ச்சலோ ஜுரமோ ஏன் கொரோனா கூட இல்லை!! அதைவிட மோசமான போதை!! அதுவும் ஹெவி டோஸ்!! தெரியுமா? அது என்னன்னு இவங்க கண்டுபிடிக்கறதுக்குள்ளவே அதோட பாதிப்பு ஆரம்பிச்சுடும். ஏற்கனவே என் பொண்ணுக்கும் இதே பாதிப்பு தான். அவளுக்கு அந்த ஹாஸ்பிட்டல ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு" என்று கலெக்டராக மட்டுமல்லாமல் தந்தையாகவும் மாறி தன் குழந்தை நிலைமையை சொல்லவும், மற்றவர்களும் தங்கள் குழந்தைகளை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்பது குறியாக இருக்க அவர்களும் பதறி துடித்து மகா மருத்துவமனைக்கு பிள்ளைகளை மாற்றினர்.
அப்படியும் ஒருவன் "நீங்க என்ன அந்த ஹாஸ்பிடலுக்கு மார்க்கெட்டிங் பண்றீங்களா? அதை விட இங்கே பெட்டர் ட்ரீட்மென்ட் என் பொண்ணுக்கு கிடைக்கும்" என்று இன்னும் முறுக்கிக் கொண்டு நிற்க…
அருகில் நின்ற காவலர்களை பார்த்த ருத்ரன் "அரெஸ்ட் ஹிம்!! இவர் பொண்ணு ஹெவி டோஸ் போதை மருந்து எடுத்திருக்கா… இவர் வீட்டிலேயும் செக் பண்ணுங்க!! எதுவும் போதை மருந்து பதுக்கி வைத்திருக்கிறாரா என்று?" என்று அவன் மீது குற்றத்தை திருப்பி போட நடுநடுங்கி போனான் அதுவரை வீராப்பு பேசிக்கொண்டு இருந்தவன்.
"நோ... நோ சார்!! அங்கேயே ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம்" என்று தட்டு தடுமாறி அவன் ஒத்துக்கொள்ள.. அது என்று லுக்கோடு பார்த்தவன் விரைந்து குழந்தைகளை மகா மருத்துவமனைக்கு மாற்றினான்.
பிள்ளைகளை மாற்றுவதற்கான காரணம்.. ஒன்று.. இம்மருத்துவமனையில் ஏற்கனவே தன் மகளுக்கு வைத்தியம் பார்த்து என்ன என்று சொல்லி இருக்கிறார்கள் அதுதான் சிகிச்சை எளிது. இரண்டு.. ஒருவேளை இதற்கு பின்னால் வேறு பெருங்கும்பல் இருந்தால் மருத்துவர்களை விலைக்கு வாங்க வாய்ப்புகள் இருக்கு. இந்த பிள்ளைகளுக்கு வேறு எதனாலோ இந்த பாதிப்பு என்று கூறினால்.. இவனால் சரியாக நிரூபிக்க முடியாது. அதற்காகவே எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
இவன் பேசிக் கொண்டிருக்கும் போதே வந்த சூரிய பிரகாஷ் ருத்ரனுக்கு சலியூட் அடிக்க "எஸ்எஸ் கம் மிஸ்டர் சூர்ய பிரகாஷ்'" என்று அவன் தோள் மீது கை போட்டுக் கொண்டு ரகசியமாக பேசிய இந்த கலெக்டர் சற்று வித்தியாசமானவன் என்று உணர்ந்து கொண்டான் நம் எஸ்பி!!
ஏற்கனவே முரளிதரன் சொன்ன விஷயங்களை.. ஓஎம்ஆரில் பிடிபட்ட போதை கேங் பற்றிய விவரங்களை கூறி, பார்க் சுற்றி இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி புட்டேஜையும் அவனிடம் கொடுத்தான்.
"எல்லாத்தையும் என் கைல ஒப்படைச்சிடீங்களே சார்.. நான் இதுல ஏதாவது காசு வாங்கிட்டு வேலை பார்த்தா?" என்று கலெக்டரை ஆழம் பார்த்தான் நம் காவலன்.
"உங்க கடமை உணர்ச்சி எனக்கு தெரியும் எஸ்பி!! ஏற்கனவே கடத்தப்பிட்ட பிள்ளைகளை நீங்கள் கண்டுபிடித்த முறையை நான் அறிவேன். அதை எல்லாம் விட மூணு குழந்தைகளுக்கு தகப்பனான உங்களால் இப்ப இந்த பிள்ளைகளுக்கு நேர்ந்த அநீதியை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது!! இருக்கவும் மாட்டீங்க!!" என்று அவன் தோளை தட்டி சிரித்துக்கொண்டே சொன்ன கலெக்டரை வெகுவாக பிடித்தது எஸ்பிக்கு.
எப்போதுமே ஒத்த அலைவரிசையில் நண்பர்களோ இல்லை வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோ ஏன் நம் இணையே கிடைப்பது அரிதிலும் அரிது!! அவ்வாறு ஒரு இணையோ.. துணையோ நம் வாழ்விலோ வேலையிலோ கிடைத்துவிட்டால், அதைவிட வேறு அதிர்ஷ்டம் கிடையாது!! ஏற்கனவே எஸ்பிக்கு ரதி கிடைத்தது அதிர்ஷ்டம் என்றால்.. இப்பொழுது இம்மாதிரி ஒரு கலெக்டருக்கு கீழே வேலை பார்ப்பதை பெருமையாக நினைத்துக் கொண்டான்.
அதுவும் அவன் மூளைக்கு வேலை கொடுக்கின்ற விறுவிறுப்பான ஒரு கேசை கையில் கொடுத்த கலெக்டரை பிடிக்காமல் போகுமா என்ன? விரைப்பாக ஒரு சல்யூட் அடித்த எஸ்பி "இந்த கேஸை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக முடிக்கிறேன் சார்!!" என்றான்.
"அது தெரிந்து தானே இதை உங்களிடம் கொடுத்தது!!" என்று கார் கதவை திறந்தவன் திறந்தபடியே திரும்பி "எஸ்பி... பார்த்து அவனுங்க உயிரோடு இருக்கட்டும். அப்புறம் கேஸ்ல துப்பு கிடைக்காமல் போய்விடும்" என்று எஸ்பிஐ அறிந்தவன் போல் கூறியவன், கிளம்பிவிட்டான்.
ருத்ரன் யாரை சொல்கிறான்? எதற்காக சொல்கிறான்? என்று புரிந்த எஸ்பிக்கும் அவனின் அழுந்த அதிரங்கள் லேசாக விரிந்தது.
கேஸ் பற்றி அனைத்து விவரங்களை முரளிதரன் மற்றும் சூரிய பிரகாஷிடம் ஒப்படைத்தவுடன் ஒரு பெரும் நிம்மதி குடிக்கொண்டது ருத்ரனிடம்!! இதை அவன் அப்படியே விட்டு விடப் போவதில்லை... அவன் குழந்தை என்பதை தாண்டி சிறு பிள்ளைகளின் உடல் நலத்தை பாதிக்கும் அளவு.. அதுவும் அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் இம்மாதிரி விஷத்தை கலந்த விஷ கிருமிகளை அப்படியே விட்டுவிட ருத்ரன் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லையே?? அவர்கள் கைகள் கிடைக்கும் அன்னைக்கு தான் இவனுக்கு தீபாவளி.. அவர்களுக்கு பொங்கல்… அதுவும் சாதாரண பொங்கல் அல்ல பட்டாசு கொளுத்திக் கொண்டாடப்படும் பொங்கல்!!
முகம் இறுக உள்ளங்கையில் இறுக்க முடி கொண்டு அவ்வப்போது ஸ்டேரிங்ல குத்திக்கொண்டு தன் மன காயத்தை வெளி காட்ட முடியாமல் தவித்தவன், ஒரு வழியாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.
அதற்குள் மற்ற நாலு குழந்தைகளும் இங்கே அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சை தொடங்கப்பட்டிருந்தது.
இவன் எமர்ஜென்சி வார்டை நோக்கி செல்லும் போது மகாதேவனும் மகதியும் இவனை நெருங்கி வந்தவர்கள் "குழந்தைகளோட வைட்டல்ஸ் எல்லாம் ஸ்டேபிளா இருக்கு சார். இப்போதைக்கு எந்த பிராப்ளம் இல்ல.. ஆனா இப்படியே இருக்கும்னு சொல்ல முடியாது. இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து தான் சொல்ல முடியும்" என்றதும் மனதுக்குள் சொல்ல முடியா வருத்தம் அழுத்தியது ருத்ரனை… இப்போது மாவட்ட கலெக்டராக அல்ல… தன் மகளின் தகப்பனாக!!
ஒவ்வொரு குழந்தையாக பார்வையிட்டபடி வந்தவன் கடைசியில் ஆதினியிடம் வந்ததும் வெடித்து வர இருந்த கேவலை உதடு மடித்துக் கடித்து அடக்கினான். ஆனால் வாய்க்கு பூட்டு போட முடிந்த அவனால் கண்களுக்கு அணை போட முடியவில்லை!! அவை தாரதாரையாக தண்ணீரை பொழிந்து கொண்டிருந்தது தன் மகளின் நிலையை நினைத்து…
"நாம இன்னும் கொஞ்சம் நல்லா அவளை பார்த்து இருந்து இருக்கலாம். கண்டிப்பாக நாம் பக்கத்தில் போயிருந்தால் அந்த ஐஸ் வண்டிக்காரன் தப்பிச்சு ஓடி இருக்கலாம் இல்லை நமக்கு பயந்து வேற ஏதாவது ஐஸ்கிரீமையாவது கொடுத்து இருக்கலாம்…" இப்படி நிறைய லாம்கள் அவனை ஆட்டிப் படைத்தாலும்.. இப்போதைக்கு தன்னைத்தானே ஆனால் மன்னித்துக் கொள்ள முடியவில்லை மானசிகமாக நந்தினியிடம் மன்னிப்பு கேட்டான்.
எந்த நிலையில் குழந்தையை அவள் விட்டுச் சென்றாள்.. தன் கண்ணின் மணி போல பத்திரமாக காப்பேன் என்று உறுதி கொடுத்தவன் இன்று வதங்கிய கொடியாக, அதுவும் இந்நிலையில் என்னவேனாலும் நடக்கலாம் என்று 24 மணி நேர கெடுவில் இருப்பவளை கண்டதும் உள்ளம் நொறுங்கியது. குழந்தையை இப்படி ஆக்கியவன் இக்கணம் ருத்ரனின் கையில் கிடைத்தால்.. அவன் கைகளாலே அவனை பிச்சி பிச்சி போட்டிருப்பான்.
அத்துணை ஆவேசம்...
அத்துணை ஆத்திரம்…
அத்துணை ஆற்றாமை…
அதற்குள் அங்கே கூட்டமும் கூடியது. கூடவே என்ன செய்தி என்று மைக்கை பிடித்துக் கொண்டு அலையும் பிரஸ் கூட்டமும்… போனிலேயே அனைத்தையும் பதிவேற்றி காசை பார்க்கத் துடிக்கும் வம்பர்கள் கூட்டமும் வந்து சேர்ந்தது!!
அதற்குள் முரளிதரன் இவனை பார்க்க வந்திருந்தவர் "இந்த நிலையில் நீங்க ஏதும் பேட்டி கொடுக்க வேண்டாம் சார். நீங்க உள்ள ஏதாவது ரூம் இருந்தா அங்க போய் வெயிட் பண்ணுங்க!! நான் அவங்களை ஹேண்டில் பண்ணிக்கிறேன்" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மகாதேவன் வந்தவர்.. மகதியிடம் அவனை அழைத்துக் கொண்டு செல்லுமாறு கூறினார்.
ஏதோ நல்ல மன நிலையில் இருந்த டாடியின் லிட்டில் ப்ரின்சஸூம் இம்முறை அனைவர் முன்னும் அப்பாவின் பேச்சை கேட்டு அவனை தனது அறைக்கே அழைத்துச் சென்றாள்.
ஆத்திரத்தில் கத்தவில்லை ஆனாலும் அவனது மனம் கதறி கொண்டுதான் இருந்தது!!
ஆவேசத்தில் கொந்தளிக்கவில்லை ஆனாலும் அவனும் கொள்ளை கொள்ளையாய் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது!!
ஆழ்கடல் அமைதி போல மகதியின் இருக்கைக்கு எதிரில் அமர்ந்திருந்தவனை தான் பார்த்திருந்தாள், அவனது அடக்கப்பட்ட கோபம் வலி அனைத்தையும் அவன் கண்கள் பிரதிபலிக்க.. அதை அவள் காணாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பி அமர்ந்திருந்தான்.
அந்நிலையில் அவன் கலெக்டர் என்ற எண்ணமோ… ஒரு குழந்தைக்கு தகப்பன் என்று அவளுக்கு எண்ணமோ அவளுக்கு இல்லை!! தன் கோபத்தை.. வலியை.. ஏமாற்றப்பட்டதை மறைத்துக் கொண்டு முறுக்கிக் கொண்டு அமர்ந்திருக்கும் சிறு பிள்ளை போலவே தான் மகதியின் கண்களுக்கு தெரிந்தான் ருத்ரன்!!
அது அவ்வப்போது துடிக்கும் உதட்டை மேற்பற்களால் கடித்து உதட்டை உள்ளுக்குள் அதை ஆற்றுப்படுத்துவதையும்… விரல்களை உள்ளங்கைக்குள் இருக்க மூட.. நகக்கண்களால் உள்ளங்கையை சேதப்படுத்துவதையும்.. கண்டவளுக்கு அவனை இப்போது சமாதானப்படுத்தும் எண்ணம் மேலோங்கியது!!
அவனை மாற்றானாக பார்த்தால் தானே அவளது மனம்? அவளை அறியாமல் ஏதோ ஒரு விதத்தில் அவனை உரிமை பாராட்டிக் கொண்டிருந்தது போலும்… அதனால் அவனை நெருங்கினாள்.
வலது புறமாக முகம் திருப்பி அமர்ந்திருந்தவனின் இடது பக்கம் இவள் நிற்க… அவளின் அருகாமையை அவன் உணர்ந்தாலும் மனது என்னவோ மகளில் தான் நிலைத்திருந்தது.
"சார்... பிரதாப் சார்!!" என்று மெதுவாக அவனது இடது தோளை தொட…
"ம்ப்ச்…!!" என்று கையை தள்ளி விட்டான்.
"ப்ளீஸ்… காம் டவுன் யுவர் செல்ஃப்!!" என்று மீண்டும் ஆறுதலாக இம்முறை அவனது தாடையை பற்றி திருப்ப…
"ம்ப்ச்.. போ… டோண்ட் டிஸ்டர்ப் மீ!!" என்று அவளது கையை மீண்டும் தள்ளி விட்டான்.
அவனின் இந்த சிறு பிள்ளைத்தனமான நடவடிக்கை... அவளுக்கு வீம்பு பிடித்து, மருந்து குடிக்க மறுத்து முகத்தை திருப்பிக் கொள்ளும் குழந்தையையே காட்டியது. உள்ளுக்குள் முகிழ்த்த சிரிப்பை மறைத்துக் கொண்டு...
"சார்…!!" என்று சற்று அதட்டலுடன் அழைக்க..
அவனிடம் பதில் இல்லை.
"பேபி நல்லா ஆயிடுவா சார்.. ப்ளீஸ் இவ்ளோ டென்ஷன் எடுத்துக்காதீங்க!! உங்க உடம்புக்கு நல்லது இல்லை" என்று ஆறுதலான வார்த்தை வெகு நாளைக்கு பின்பு... ஒரு மூன்றாம் நபரிடமிருந்து ருத்ரனுக்கு...
ஆச்சரிய பாவனையில் புருவங்கள் சுருங்க அவளை திரும்பி ஒருமுறை முறைத்தவன் மீண்டும் முகத்தை திரும்பிக் கொண்டான். அப்படி அவன் திரும்புகையில் வெடிக்க துடித்த உதட்டை அவன் மீசைக்குள் அனைத்தும் மேற்பற்களால் கடித்தும் மறைக்க.. அதை கண்டு கொண்டவள் அடுத்த நிமிடம் அவன் முகத்தை சடாரென்று திருப்பி தன் இடையோடு இறுக்கிக் கொண்டாள்.
முதலில் திமிறினான் அவன்!! ஆனால் மெலிதான அவள் கைகள் வஜ்ரமாய் வலுக் கொண்டு அவனது வலியை போக்க தன் வயிற்றோடு அழுத்திக் கொள்ள… முதலில் தன் விருப்பமின்மையை காட்ட திமிறி திமிறி முகத்தை திரும்பியவன், ஒரு கட்டத்தில் அவனாகவே அவளது இடையே இருகைகளாலும் சுற்றி வளைத்து ஆலிலை வயிற்றில் அழுந்த முகம் புதைத்துக் கொண்டான்.
லேசாக அவனது தோள்களின் குலுங்கலும்… அவளது உடையை தாண்டி வயிற்றில் உணர்ந்த ஈரமும் அவன் அழுவதை மௌனமாக உரைத்துக் கொண்டிருந்தது.
ஆண்கள் அழக்கூடாது என்று யார் சொன்னது? இல்லை அவர்கள் அழ மாட்டார்கள் என்று யார் சொல்வது?
அன்னையின் பிரிவில்…
மனைவியின் பிரசவ அறையில்..
மகளின் திருமணத்தில்…
மகனின் சாதிப்பில்…
பேரக்குழந்தைகளின் அன்பில்…
துளிர்விடும் ஒவ்வொரு ஆண்களின் கண்ணீரும் அழகுதான்!!
அது எ
ல்லாம் தாண்டி தன் உயிர் அங்கே போராட.. இங்கே நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த ஆணின் ஒற்றைத் துளி கண்ணீரும் வைரங்கள் தாம்!!