அத்தியாயம் 8
மகதி பெண்கள் கழிவறையை நோக்கி செல்ல.. யாரும் பார்க்கா வண்ணம் அவள் பின்னே சென்றவன் அவளின் வாயைப் பொத்தி அப்படியே பின்னாலிலிருந்து அலக்காய் தூக்கி ஆண்கள் கழிவறைக்குள் நுழைந்தான்.
அவள் என்ன எதுவென்று உணரும் முன்னே… கழிவறைக்குள் அவளோடு சென்றவன் தாழ்பாள் இட்டவன், அவளை இறக்கி விட பயத்தில் பெரும் மூச்சு வாங்கி நின்றவள், 'யாரு டா நம்மையே தூக்கியது?' என்று திரும்பிப் பார்க்க முயல... மெல்லிடையில் பதிந்த முரட்டு கையை அவளால் ஒரு இன்ச் கூட நகர்த்த முடியவில்லை!!
அவள் திமிற திமிற முதலில் இறுக்கமாக இடையை பற்றியிருந்தவன் சட்டென்று மெல்லிடையாளை அவன் புறம் திருப்பி, அவளது இரு கன்னங்களையும் தன் உள்ளங்கைகளில் அழுத்தமாக தாங்கி இதழ்களை நோக்கி குனிந்தான்.
அவனின் செயலில் அவளது கண்கள் விரிந்து கொள்ள... இவனது கண்களோ மதுவை சுவைக்கும் போதையில் இறுக்கமாக மூடிக்கொண்டது!!
ஒற்றை ஆழ்ந்த முத்தம்!!
உயிரை உறிஞ்சும் அரக்க முத்தம்!!
மெல்ல அவளிடம் இருந்து பிரிந்தவன் "நீ தான சாரி கேட்க சொன்ன? எனக்கு இப்படித்தான் சாரி கேட்க தெரியும்!! இனிமே பார்க்கும் போதெல்லாம் கேட்கிறேன் டி சாரியை.. சில்வண்டு!" என்று வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியே சென்றவனை வெறித்துப் பார்த்தாள் மகதி!!
'இப்போது இங்கு என்ன நடந்தது?' என்று அவளுக்கு புரியவில்லை!! "சாரி கேட்டானா? அட மங்கூஸ் மண்டையா!! உங்க ஊர்ல எல்லாம் இப்படித்தான் சாரி கேட்பாங்களா?" என்று அவன் மீது கோபம் வெறி அதிகமாகியது பெண்ணுக்கு!!
அடுத்த முறை அவன் கிடைத்தால் விழுந்து கடித்து விட வேண்டும் அரக்கியாய் மாறி அவனை..
கழுத்தில் வெம்பையர் மாதிரி கடித்து ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் அவனை…
உடலெல்லாம் பற்தடங்கள் இருக்குமாறு கடித்து துன்புறுத்த வேண்டும் அவனை…
அவனது முதுகு பூராய் பூனைக்குட்டியாய் பிராண்ட வேண்டும்… என்று எக்கத்தப்பா யோசித்தவளின் கற்பனைகள் அனைத்தும் லவ் மேக்கிங்கில் தனது இணைக்கு கொடுப்பவை என்பது அப்போது அவளது ஞாபகத்திலேயே இல்லை!!
வீக் எண்டு நிம்மதியாக சிறிது நேரம் கழித்து வரலாம் என்று சென்றவளோ நிம்மதி இழந்து தான் வீட்டுக்குள் வந்தாள்.
அவன் மீது காட்ட முடியாத கோபத்தையும் ஆத்திரத்தையும் மனம் அமைதியாகும் வரை பொம்மையில் தான் காட்டி இருந்தாள்.
முடிவில் சர்ஜிகல் கத்தி மூன்றாக ருத்ரனின் தலையணை பொம்மையில் பதிந்திருந்தது!!
அதற்கு எதிர் மாறாக அன்று அவள் பேசிய பேச்சும் கடைசியில் அவன் கொடுத்த மொத்தமுமாய் இதழ்கடையில் சிரிப்போடு நிம்மதியாக உறங்கினான் ருத்ரன்!!
அவளிடம் ஏனோ இப்படி சீண்ட பிடித்திருந்தது அவனுக்கு!! அது ஏன் என்று ஆராய அவனுக்கு விருப்பமில்லை!!
சின்ன சின்ன சீண்டலோடு கூடிய தீண்டலில் உள்ளுக்குள் ஒரு உவகை பெருகியதை ஒத்துக் கொள்ள தான் அவனுக்கு விருப்பமில்லை!!
அடுத்த இரண்டு நாள் அவனுக்கு வேலைகள் அவனை ஆக்டோபஸாய் ஆக்கிரமித்தது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் புதிதாக ஓஎம்ஆர் ரோட்டில் சிக்கிக்கொண்ட புதிய போதை பொருள் கேங் அவனுக்கு நிறையவே வேலைகளை வைத்தன.. புதிதாக புதிதாக எங்கிருந்து இவை எல்லாம் வந்தது என்று புரியவில்லை.
ஆனால் சிட்டிக்குள் மெல்ல மெல்ல இவை எல்லாம் வேர் விட்டு பரவி ஆலமரமாய் வளர்ந்து விழுதுகளை கொண்டு விருட்சமாய் பெருகியவதை கண்கூட காண முடிந்தது. ஆனால் இவையெல்லாம் பிம்பங்களாக நிழல் உலகில் மட்டுமே... நிஜத்தில் அமைதி பூங்காவாக காட்சியளித்த சென்னை நிழல் உலகில் அதிபயங்கரமாக தான் இருந்தது. சாதாரண குடிமகன் கண்ணுக்கு அவை தெரியாவிடினும் அதிகாரத்தில் உள்ளவனுக்கு இவை எல்லாம் தெரிந்த போது.. மற்ற இடத்தில் விட இங்கு வேலை அதிகம் தான் என்பதை புரிந்து கொண்டவன், எங்கெங்கு என்று அவற்றை பற்றி எல்லாம் தேடுதல் வேட்டையை நடத்த தீர்மானித்தான்.
அன்று முரளிதரன் போன்ற முக்கிய பதவியில் வகிக்கும் காவல் அதிகாரிகள் அனைவரோடும் அவனுக்கு மீட்டிங் இருந்தது. இப்போதை பொருட்கள் பரவுவது பற்றி!! தடுப்பதை பற்றி!!
அப்பொழுது ஒரு இன்ஸ்பெக்டர், "சார் இப்ப எல்லாம் டான் என்று தனியாக யாரும் இல்லை சார்!! வெளியில் வள்ளல் சமூக சீர்திருத்தவாதி என்ற முகங்களை போட்டுக் கொண்டிருக்கும் அநேகம் பேர் தான் இருள் உலகில் இம்மாதிரி வேலைகள் எல்லாம் செய்றாங்க!! இதுவரைக்கும் நிறைய பேரை பார்த்தாச்சு.. நிறைய கேஸ் புடிச்சாச்சு... ஆனாலும் திடீர்னு பெரிய அளவில் பிரஷர் வரும்!! யார் எதுக்காக கொடுக்கிறார்கள் என்று தெரியாமல்.. அந்த ஆளையும் விடுதலை செய்ய வேண்டியதாய் இருக்கும். போதை பொருளையும் ஒப்படைக்கிற மாதிரி இருக்கும். வெறும் எங்கள் கையில் அதிகாரம் மட்டும் இருந்து என்ன சார் பயன்? உயிரை கொடுத்து கண்டுபிடிச்சுட்டு வந்தவங்கள ஒரு நாள் கூட விசாரிக்க முடியாமல் மேலிடத்திலிருந்து பிரஷர் வந்தா... அதுக்கு எதுக்கு சார் நாங்க இவ்ளோ கஷ்டப்படணும்?" என்று அந்த இன்ஸ்பெக்டர் தன் ஆதங்கத்தை ஆத்திரமாக கேட்பதிலும் இருக்கும் நியாயத்தை புரிந்தவன் முரளிதரனை பார்த்து "சார் இதுக்கெல்லாம் தனியா ஒரு ஸ்குவாடு ஒன்னு ஏற்பாடு பண்ணுங்க!! அவங்க எந்த அதிகாரிகளுக்கும் உட்பட்டவங்களா இருக்க மாட்டாங்க!! நேரடியா என்னுடைய பொறுப்பில் இருந்து என் கட்டளை மட்டுமே கேட்கிற மாதிரி இருக்கணும்!!" என்று அவன் அதிரடியாய் உத்தரவிட முரளிதரனுக்கும் இது பிடித்து விட, "இரண்டு நாளுல ஏற்பாடு செய்கிறேன் சார்" என்றார்.
ஓரளவு இந்த பிரச்சனைகள் பார்ப்பதற்கு வழிவகை செய்தவன் அன்று சீக்கிரமே வீட்டுக்கு வந்தான். முன்னே தெரிந்த அளவு மகளின் முகத்தில் அந்த சோம்பல் தெரியவில்லை. சோர்வு தெரியவில்லை. ஆனாலுமே ஏதோ மெல்லிய சோர்வு இருக்கத்தான் செய்தது.
மீண்டும் மகதியை பார்த்தோம் என்றால் நம்மை மீறி ஏதாவது இதழ்களில் சாரியை சொல்லி விடுவோமோ என்று பயந்து அவன் அவளது சந்திப்பை சற்று தள்ளி போட்டு கொண்டே வந்தான். ஆனால் மகள் என்று பார்க்கும்போது கண்டிப்பா.. மகதியை பார்த்து பேசி விட வேண்டும் என்று முடிவு எடுத்தவன், அன்று இரவு மாதிரி மகதி ஸ்ரீயை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினான்.
காலையில் வழக்கம்போல் விளையாட்டோடு விளையாட்டாக பிள்ளைகள் இல்லை பார்த்துவிட்டு அதன் பின் உள் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தாள் மகதி.
அவளின் அம்மா துர்கா பிரபல கைனகாலஜிஸ்ட் என்பதால் அங்கே பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளின் பீடியாட்ரிஷன் மகதி தான்!! குழந்தை பிறந்தது முதல் அக்குழந்தை டிஸ்சார்ஜ் ஆகி செல்லும் வரை தினமும் பரிசோதனை செய்வாள்.
கூடவே அடுத்தடுத்து போட வேண்டிய தடுப்பூசிகளுக்கான அட்டவணையும் அந்த குழந்தை டிஸ்சார்ஜ் செய்யும் போது பைல் செய்து கொடுத்துவிடுவாள். சில பேர் மீண்டும் இவளிடமே வருவார்கள். சிலர் வேறு யாராவது குழந்தை நல மருத்துவர் பார்த்துக் கொள்வார்கள். அதனால் காலை ஒரு வேளை.. மீண்டும் மாலை வரும்போது ஒரு வேளை என்று உள் நோயாளிகளை பார்த்து விட்டு தான் இவள் ஓபிக்கு வருவது வழக்கம்!!
அன்று அப்பாயின்மென்ட் பற்றி செவிலியர் இடம் கேட்டு தெரிந்து கொண்டு வழக்கம் போல இவள் வர.. ஹாலில் வித்தியாசமாக இருக்கும் இருக்கையில் பிள்ளைகள் மகிழ்வோடு அமர்ந்திருக்க.. ஒவ்வொரிடமும் சென்று அவர்களை பரிசோதித்து அனுப்ப.. ரிசப்ஷனில் இருந்து அழைப்பு வந்ததாக கூறி செவிலியர் இன்டர் காமை கொடுத்தாள்.
"டாக்டர்.. இன்னைக்கு கலெக்டர் உங்க கிட்ட அப்பாயின்மென்ட் கேட்டு இருக்காரு.. எத்தனை மணிக்கு நான் கொடுக்கட்டும்?" என்று அந்த ரிசப்ஷனிஸ்ட் கேட்டவுடன் ஒரு நிமிடம் பக்கென்று ஆனது மகதிக்கு!!
"டாக்டர் அவர் குழந்தை பற்றி ஏதோ கன்சல்ட் பண்ணனுமாம்.. எப்ப டைம் கொடுக்க வேண்டும்?" என்று மறுபடியும் அமைதியாக இருந்ததை கவனித்து மீண்டும் அந்த வரவேற்பு பெண் கேட்க.. "ஒரு ஏழு மணியிருந்து எட்டு மணிக்குள்ள கொடு!" என்று வைத்துவிட்டாள்.
மெல்ல வியர்வை பூ பூத்தது அவளது உதடுகளுக்கு மேல் ஏனோ அவளை அறியாமலேயே!!
"அன்று போல் நேரில் சந்திப்பது சாரி பூரி கேட்க என்று கிட்ட வந்தாய்.. மகனே... இரு இன்னைக்கு எல்லோரும் போல உன்னை ஹாலிலேயே பார்க்கிறேன்!! மீறி வா இதனால் வரை உன் பொம்மைக்கு செய்த கட்டிங் வெட்டிங்க எல்லாம் உனக்கு செய்கிறேன்!!" என்று வீர சூரியாய் மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டு மற்ற குழந்தைகளை கவனித்தாள்.
ஏழு மணிக்குள்ளயே அவளது ஓபி எல்லாம் முடிந்து விட ஏழுக்கு மேல் வருவான். அதுவரை நம் அறையில் போய் இருக்கலாமே என்று இவள் அவளது அறையில் சென்று இருக்கவும் கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது.
செவிலியரா இருக்கும் என்று எண்ணத்தோடு எஸ் கம்மிங் என்றதும்"ஹலோ டாக்டர்!!" என்று ஆளுமையான குரலில்.. நிமிர்ந்து பார்க்க.. இதழ் பிரியா புன்னகையோடு எதிரே ருத்ரன்!! அவன் அருகில் அவனையே உரித்து வைத்தது போல செப்பு சிலையாக ஆதினி!!
"இந்த பொண்ணு தான் இவரோட பொண்ணா?" என்று அதிர்ச்சியோடு பார்த்தவள், அவனிடமிருந்து பார்வையை ஆதினியிடம் திருப்பி, "எஸ் பேபி.. கம் கம்!!" என்றதும், "நானா?" என்றவன் சுட்டு விரலை அவனை நோக்கி திருப்பி…
"பீம் பாய் மாதிரி இருந்திட்டு இதுல பேபியாம்..!!" என்று முணுமுணுத்தவள் "வாங்க சார்.." என்றாள் வெளிப்படையாக!!
வந்த உடனே சீண்ட வேண்டாம் முதலில் பெண்ணை பற்றி பார்ப்போம் என்று நினைத்தவன் இருக்கையில் மகளை அமர்த்தி விட்டு தானும் அமர்ந்தான். அவளிடம் தான் கொண்டு வந்திருந்த ஆதினிப் பற்றிய மெடிக்கல் ஃபைலை நீட்ட அவள் பிறப்பிலிருந்து கடைசியாக அவளுக்கு செய்த வைத்தியம் வரை அனைத்தும் இருக்க.. கடகடவென்று கண்களால் அவற்றையெல்லாம் ஓட்டிப் பார்த்தவள், ஆதினிடம் சென்று அவளை எழுப்பி தன்னருகில் ஒரு குட்டி சேரை போட்டு அதில் அமர வைத்தாள்.
"பேபி பர்பெக்ட்லி ஆல் ரைட்.. பிஸிக்கலி சார்!! இப்போ நீங்க தான் சொல்லணும்! வீட்ல எப்படி இருக்கா? ஸ்கூல்ல எல்லாரும் கூடயும் மிங்கள் ஆகிறாளா? பிரண்ட்ஸ் கூட நல்லா பழகுறாளா? வீட்ல அவளோட ஆட்டிட்யூஸ்…" என்று நிறுத்தி ருத்ரபிரதாப்பை பார்த்தாள்.
"வெல்… பேபி இங்க சென்னை வர முதல் என் மாமா ராமஜெயம் கூட தான் அதிக நேரம் ஸ்பென்ட் பண்ணா.. இங்கு வந்ததும் கேர் டேக்கர் ஏற்பார் பண்ணிட்டேன். ஆனா ஸ்கூல் இப்போ போயிட்டு வரும் போது ரொம்ப சோர்வா இருக்கா. ஏன்னு கேட்டா ஒன்னும் இல்லையேன்னு சொல்றா.. நானும் அவங்க கிளாஸ் டீச்சர் எல்லாம் கேட்டுடேன். கிளாஸ் வைஸ் ஆக்டிவா இருக்கா.. விளையாடுறா.. ஃப்ரெண்ட்ஸ் கூட எல்லாம் சண்டை போடாம நல்லாதான் பழகறான்னு சொல்றாங்க!! ஆனா ஏன் இப்படி ஈவினிங் டைம்ல இருக்கான்னு எனக்கு தெரியல" என்று மகளுக்கு தெரியாத மாதிரி ஆங்கிலத்தில் பேசி மகதியை பார்த்தான்.
அவளும் புரிந்தது என்பது போல தலையாட்டிவிட்டு ஆதினியை பார்த்தவள் "பேபி நான் ஒரு ரவுண்ட்ஸ் போறேன். நீயும் என் கூட வரியா?" என்று கேட்டதும் விழிகள் மின்ன தலையை அசைத்து எஸ் என்றாள் குழந்தை.
"சார்.. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நாங்க ஒரு 10 மினிட்ஸ்ல வந்துடுறோம்!!" என்றவுடன் குழந்தையிடம் தனியாக பேச விரும்புகிறாள் என்று புரிந்தவன் "நான் வேணும்னா வெளியில் வெயிட் பண்ணட்டுமா?" என்று கேட்க..
"இல்லை நீங்க இங்க வெயிட் பண்ணுங்க!! நாங்க வந்துடுறோம்" என்று ஆதினியை அழைத்துக் கொண்டு அப்படியே காரிடரில் நடந்தாள் அங்குள்ள ஒவ்வொரு கார்ட்டூன் இடையே அவளிடம் கேள்வி கேட்டு அவள் மனதில் இருப்பதை எல்லாம் ஒவ்வொன்றாக வரவழைத்தாள்.
அப்படியே இவர்கள் நடந்து செல்லும் பொழுது இன்பேஷன்ட் பகுதி வர.. "இங்க குட்டி குட்டி பேபிஸ் எல்லாம் இருக்கும். நீ பாக்குறியா டாலு பேபி?" என்றதும் அவளும் ஆசையாக தலையாட்ட உள்ளே அழைத்துச் சென்றாள் மகதி.
தொட்டிலில் ஒரு குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க தூர நின்று பார்த்த ஆதினி "இந்த பேபி எவ்வளவு க்யூட் இல்ல டார்லிங்" என்றதும், "ஆமாம் டியர்!!" என்றாள் மகதி!!
அடுத்த அறையை நோக்கி சென்றனர். அங்கு மற்றொரு அறையில் அக்குழந்தையை அவளது தாய் மடியில் வைத்து கொஞ்சி கொண்டிருக்க. அருகில் அக்குழந்தையின் தகப்பன்!! சற்று தள்ளி அவர்களது சொந்தங்கள் அமர்ந்திருக்க.. இவர்களை பார்த்ததும் எழுந்தவர்களை கையசைத்து அமர செய்து விட்டு "பேபி… வா வந்து பாரு" சென்று அக்குழந்தையை காட்ட.. அதுவரை அன்றலர்ந்த மலரை போல மலர்ந்திருந்த ஆதினியின் முகம் இரவு நேர தாமரை போல கூம்பி விட்டது.
அவர்களிடம் தலையாட்டிவிட்டு வெளியே மகதி ஆதினியை அழைத்து வந்தவள், "என்னாச்சுடா.. ஏன் நீங்க இவ்ளோ டல்லா இருக்கீங்க?" என்று கேட்டது முதலில் பேசாமல் இருந்தவள், "அந்தப் பாப்பா சோ லக்கி இல்ல டியர்!" என்றாள் ஆதினி!!
"ஏன் நீங்களும் தான் லக்கி!!" என்றாள் மகதி!!
"இல்லை நான் லக்கி இல்ல.. அந்த பாப்பா தான் லக்கி!! அந்த பாப்பாவுக்கு அம்மா இருக்காங்க.. அப்பா இருக்காங்க.. ஏன் என் ஸ்கூல்ல படிக்கிற நிறைய பிள்ளைகளுக்கும் அம்மா அப்பா ரெண்டு பேருமே இருக்காங்க!! ஆனா எனக்கு அப்பா மட்டும் தான் இருக்காங்க.. அம்மா இல்ல!!"என்று உதட்டை பிதுக்கி கலவையாய் கூறும் ஆதினியை அதிர்ச்சியாய் பார்த்தவளுக்கு அவளது அம்மாவை பற்றி கேட்க தோன்றவே இல்லை.
ஏக்ததோடு நின்ற ஆதினியை அணைத்தாள் மகதி அன்பாக!!
அன்னையாக!!