மோகங்களில்… 4
காரில் வரும் வழியில் எல்லாம் விவாகரத்து வாங்கி பிரிந்து சென்ற மனைவியை சாரி.. சாரி.. எக்ஸ் மனைவியை திட்டிக் கொண்டு வந்தான் துருவ் வல்லப்!
வாயை இறுக்க மூடுவது போல இரு காதுகளையும் மானசீகமாக இறுக்கி மூடிக்கொண்டான் சுகன். ஆனால் பாவம் அந்த டிரைவர்! இதெல்லாம் அனுபவப்படாதவர் போல.. ஒரு கையால் ஒரு காதை பொத்திக்கொண்டு வண்டியை ஓட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.
துருவ்வின் அழகிய அக்மார்க் பச்சை பச்சை வார்த்தைகள் எல்லாம் அந்த டிரைவரின் மற்றொரு காது வழியாக உள்ளே போக.. "ஐயையோ.. என்ன சுகன் சார், பாஸ் வாயிலிருந்து இப்படி எல்லாம் க்ரீஞ்சியா பேச்சு வருது" என்று விழித்துக் கொண்டு அருகில் இருப்பவனிடம் மெல்லக் கேட்டான்.
"அங்க என்ன பேச்சு வேலன்? நேரா ரோட்ட பாத்து வண்டிய ஓட்டு.. ஓட்டு மொத்தமா எல்லாரையும் பரலோகத்துக்கு கொண்டு போயிடாத" என்று அவரிடம் சீறினான்.
இனறு துருவ்விடம் சிக்கியவர்கள், அவன் வாரத்தைகளிலேயே சின்னாபின்னம் ஆவார்கள் என்பதை அறிந்துதான் சுகன் அமைதியாக இருந்தான்.
இதற்காவது உதவிக்கு வருவானா என்று வேலன் பார்க்க சுகனோ ஐம்புலன்களையும் அடக்கியாளும் சித்தர் போலவே நேரே ரோட்டைப் பார்த்து அமர்ந்திருந்தான்.
ஒரு வழியாக வீடு வந்ததும், காரிலிருந்து இறங்கி வேக நடையோடு உள்ளே நுழைந்தவன், சத்தமாக "ஏய்.. ஏய்.. எழுந்திரு.." அனு தூங்குகிறாள் என்று எண்ணி கத்தினான்.
அவளோ பசி மயக்கத்தில் அல்லவா சயனித்திருந்தாள்.
"ஏய் கேர்ள்… ஏய் எழுந்திரு.. சொல்றேன்ல" என்று துருவ் கத்தினான். அவனுக்கு இன்னும் அனுவின் பெயர் தெரியாது என்பது வேறு விஷயம்.
அனு விழித்திருந்தாலே இவன் பேச்சைக் கேட்க மாட்டாள் என்பது நிதர்சனம்! இதில் மயக்கத்தில் வேறு இருக்கிறாள் எங்கனம் கேட்பாள்?
மயக்கத்தில் இருந்தவளோ கண்களை திறக்க முடியாமல், அவன் கூப்பிடுவது காதல் மெலிதாக விழுந்தாலும் பதில் அளிக்க முடியாத நிலையில் இருந்தாள். அவளுக்குமே இது முதல் கர்ப்பம் அல்லவா? அனுபவமின்மை.. ஆலோசனை கூற பெரியவர்கள் அற்ற நிலை! ஏதோ கர்ப்பம் குழந்தை எல்லாம் விளையாட்டு போல என்று ஆரம்பித்தது இப்பொழுது புலிவால் பிடித்த கதையாக போய்விட்டது அனுவுக்கு.
இன்னும் அவளை நெருங்கி நின்று "ஏய் கேர்ள்.. ஏய் பொண்ணே.." என்று அவன் மீண்டும் கத்த.. அவளால் விழிக்க முடியாமல் போக.. அவளை நெருங்கி கன்னத்தை தட்ட நெருங்கி விட்ட கையை கண்டவன் சரலென்று பின்னால் இழுத்துக் கொண்டான்.
இவன் அவளை எழுப்ப முடியாமல் தவிப்பதையும் அவள் உறக்கம் இல்லாத ஏதோ ஒரு மயக்கத்தில் இருப்பதையும் கண்ட சுகன் தான், மெல்ல துருவை நெருங்கி "பாஸ்.. ஒரு வேளை அவங்க மயக்கம் ஆயிட்டாங்களோ என்னவோ?" என்றதும் துருவுக்கு தூக்கி வாரி போட்டது.
"என்ன மேன்னு சொல்ற நீ?" என்று அவனிடம் கடுப்படித்தான்.
"பாஸ்.. அவங்க ஏற்கனவே பிரக்னண்டா இருக்காங்க. அதோட சாப்பிடாம அதுவும் காலையில இருந்து சாப்பிடாம இருக்காங்க மயக்கம் வருவதற்கு சான்ஸ் இருக்கு பாஸ்" என்றான்.
சுகனின் வேலையே விஐபிகளுக்கு முழுநேர செக்யூரிட்டி போன்றது. இதுபோல் விஐபிகளுக்கு பவுன்சர்களாய் வருபவர்களுக்கு இம்மாதிரியான இக்கட்டான நேரத்தில் முதல் உதவி பற்றிய விழிப்புணர்வை பிரத்யேகமாக கொடுத்தே அனுப்புவார்கள் அவர்கள் பயிற்சி பெற்ற இடத்தில்.
நிறைய நேரத்தில் அதை கண்கூட பார்த்திருக்கிறான் துருவ். அதனால் சுகனின் வார்த்தையை தட்ட முடியாமல் "இந்த பொண்ணு இப்படி இருக்கா? இப்ப என்ன செய்றது மேன்?" என்று அவனிடமே கேட்டான்.
சுகனோ "பாஸ்.. இதுவே மத்த யாரும்னா நாமே கேர் பண்ணிக்கலாம். குளுக்கோஸ் கொடுக்கலாம். இல்ல வேற ஏதாவது நம்ம மெடிசின் ஆர் ப்ரோசிஜர்ல இறங்கலாம். பட்.. இவங்க பிரக்னண்டா இருக்காங்க பாஸ். மேடம்.. மேடமுக்கு.. ட்வின்ஸ் வேற" என்று அவன் சொன்ன விதமே துருவுக்குள் ஏதோ தப்பு செய்தது போல உணர்வை கொடுத்தது.
அந்த உணர்வு அவனுக்கு பிடிக்கவே இல்லை!
"நான் தவறிழைப்பவனா? நோ.. நெவர்!
எல்லாம் அந்த அப்சரா இடியட்யால் வந்தது!"
அதுவும் இவளை இங்கே அழைத்து வந்தது இவன்தான்.. உணவுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றவன், இப்போது தான் வருகிறான் அதெல்லாம் அந்த நேரத்தில் ஞாபகத்தில் இல்லை துருவுக்கு.
"சாப்பாடு…" வீட்டில் உணவு என்று யோசித்தவன் வேகமாக சென்று கிட்சனை பார்த்தான். அவ்வளவு சுத்தமாக இருந்தது. பின்னே கொடுக்கிற வேலைக்கு வேலையாட்கள் சுத்தமாக தானே துடைத்து விட்டு செல்வார்கள்? அதுமட்டுமா அங்கு ஏதாவது இருந்தால் தானே? தலையில் அடித்துக் கொண்டான்.
வேகமாக ஃப்ரிட்ஜை திறக்க, அதிலிருந்த விதவிதமான சரக்கு பாட்டில்களை எல்லாம் அவனை பார்த்து பல் இளித்தது.. "வா ராசா.. வா.. ஜல்சா பண்ணுவோம்! என்று!!
"ஷிட்..!" என்று அந்த ஃப்ரிட்ஜ் அதிர கதவை மூடியவன், வேறு வழி இன்றி தாரதியை அழைத்தான். உடனே வீட்டுக்கு வருமாறு அதிலும் இவளின் நிலையை சொல்லியே அழைத்தான். அப்போதுதான் தாரதி அதற்குத் தக்க மருந்துகள் சலைன் போன்ற ஏற்பாட்டோடு வருவாள் என்று!
அதற்குள் சுகனை அழைத்து இவள் சாப்பிடுவதற்கு தகுந்த மாதிரியான உணவுகளை வாங்கி வர பணித்தான்.
"ஆனால்.. பாஸ்.. அவங்களால் சாப்பிட முடியுமா?" யோசனையானான் சுகன்.
"டாக்டர் தாரதிய வரச் சொல்லியிருக்கேன். அவங்க கேர் பண்ணிப்பாங்க.. நீ வாங்கிட்டு வா.. கூடவே.. ரெடிமேடா குயிக்கா செஞ்சு சாப்பிடுற மாதிரி கொஞ்சம் ப்ரோசஸ்டு ஃபுட் எல்லாம் வாங்கிட்டு வா.. மேன்"
"நோ பாஸ்.. இப்ப மேடமுக்கு பிராசஸ்டு ஃபுட் எல்லாம் கொடுக்கக்கூடாது. அதுல கெடாமயிருக்க பிரசர்வேட்டிவ் எல்லாம் கலந்திருப்பாங்க. அது எந்த அளவுக்கு குழந்தைக்கு உடம்புக்கு நல்லதனு நம்மளால சொல்ல முடியாது!"
"என்ன மேன்.. எது சொன்னாலும் பதிலுக்கு ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே இருக்க.. இதுக்கு இப்ப என்ன தான் பண்றது நான்" என்று அனு படுத்திருந்த சோபாவுக்கு எதிர் சோபாவில் தளர்ந்து அமர்ந்தவன், அனுழை பார்த்துக் கொண்டே தன் கழுத்தில் கட்டி இருந்த டையை தளர விட்டு கோட்டை கழட்டி அருகில் வீசினான்.
"என் மூஞ்ச என்ன பாத்திட்டு நிக்குற.. இங்க என்ன ஐயிட்டம் டான்ஸா ஆடுறேன். போ.. போய் இந்த பொண்ணுக்கு சாப்பாடு வாங்கிட்டு வா.. அடுத்த பிரச்சினைய வந்து பேசுவோம்" என்றான்.
சுகனும் விரைந்து சென்று இரவு நேரத்திற்கு இதமாக இருக்கும் உணவுகளை அனுவுக்கும் கூடவே துருவ் சாப்பிடுவதற்கு தோதாக அவனுக்கும் தனித்தனியாக வாங்கி வந்தான். கொஞ்சம் பழ வகைகளையும் வாங்கி கொண்டு அவன் வரும் போதுதான் தாரதியும் உள்ளே வந்தாள்.
நீண்ட சோபாவில் ஒருக்களித்து படுத்திருக்கும் அனுவையும் அவளுக்கு எதிரே தளர்வாக அமர்ந்து விழிகளால் தன்னை குத்தி கிழிக்கும் துருவையும் கண்டவளுக்கு கொஞ்சம் நெஞ்சம் உலரத்தான் செய்தது.
வேகமாக சென்று அனுவை பரிசோதித்தாள். "காலையிலிருந்து சாப்பிடாம பல்சு கொஞ்சம் இறங்கி இருக்க.. பிரஷரும் குறைவாகத்தான் இருக்கு" என்று துருவ்விடம் கூறியவள், வேகமாக தன்னுடன் அழைத்து வந்த செவிலியரை அழைத்து அவளுக்கு சலைன் போட ஏற்பாடுகள் செய்தாள்.
கூடவே துருவைப் பார்த்து "கிட்சன்?" என்று மென்று விழுங்கி கேட்க அவன் கண்களால் காட்ட.. செவிலியரை இங்கு பார்க்க சொல்லிவிட்டு அவளை சென்று சுடுதண்ணீர் எடுத்து வர, அதை செவிலியர் வித்தியாசமாக பார்த்தாள்.
சுடுநீரில் உடனடி சத்துக்கான எலக்ட்ரான் பவுடர் கலந்து ஸ்பூனால் மெல்ல மெல்ல அனுவின் வாயில் ஊட்டினாள்.
ஒரு பக்கம் ட்ரிப்ஸ் இறங்கிக் கொண்டிருக்க.. மறுபக்கம் தாரதி எலக்ட்ரான் கலந்த நீரை கொடுக்க.. கால்மணி நேரம் சென்றே அனுவிடம் அசைவு தெரிந்தது. அதற்குள் துயுவ் முன் அமர முடியாமல் தவித்தவாறு அனுவையே பார்த்துக் கொண்டிருந்தாள் தாரதி. அவன் தான் விடாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தானே..
அவன் கண்களில் அத்தனை கோபம் 'இப்படி ஒருத்தியை கொண்டு வந்து என் தலையில் கட்டி வைத்து விட்டாயே? நான் எப்படி சமாளிப்பேன் என்று யோசித்தாயா? இவளுக்கு பக்குவம் பார்க்க எனக்கு தெரியுமா?' என்று அநேக கேள்விகள் அவன் முகத்தில் தாண்டவம் ஆட.. அவன் கண்களோ ஏகக் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
மருந்துக்கு கூட இந்த மருத்துவச்சி தாரதி அவன் பக்கம் திரும்பவே இல்லை. திரும்பினால்.. கொத்துக்கறி ஆவது உறுதி.
மெல்ல எழுந்த அனு கண்களை சுழற்றி பார்த்தவள், வேகமாக ஈழப் பார்க்க "மெதுவா எழுந்திரு.." என்று தாரதி அவளை பிடித்து மெதுவாக அமர வைத்தவள், சோபாவின் ஓரத்தில் அவளது கையை வைத்தாள் சலைன் ஓடிக் கொண்டிருந்ததால்…
"என்னங்கடா வீட்டிலேயே ஹாஸ்பிடல் செட்டப் போட்டு வச்சிருக்கீங்க?" என்ற யோசனையோடு கையை பார்த்தாள். மயக்கத்தில் கலங்கலாக இருந்த கண்கள் அப்போது தான் கொஞ்சம் தெளிவாக தெரிந்தது.
விழி நிமிர்த்தி துருவை பார்த்ததும் முசுமுசுவென்று கோபம் பெருக சட்டென்று அவனை திட்டுவதற்கு எழுந்தவள் தலை சுற்ற அப்படியே அமர்ந்து விட்டாள். ஆனால் கண்களில் அத்தனை ரௌத்திரம் அதற்கு சற்றும் குறையாமல் பார்த்தான் துருவ் அவளை.
'இவர்கள் இரண்டு பேரும் பேசினால் நிலைமை இன்னும் தீவிரமாகும்.. இந்தியா பாகிஸ்தான் போல தான்!' என்பதை உணர்ந்த சுகன் "டாக்டர் இப்ப என்ன ஃபுட் மேடமுக்கு கொடுக்கலாம்?" என்று கேட்டான்.
"லைட்டா ஏதாவது கொடுங்க.. இட்லி இடியாப்பம் இந்த மாதிரி* என்றதும் தான் வாங்கி வைத்த உணவு பொருட்களில் அதை எடுத்து ஒரு பவுலில் போட்டு ஸ்பூனுடன் கொண்டு வந்து அனுவிடம் கொடுத்தான் சுகன்.
சுகன் கொடுத்த உணவையும் எதிரே அமர்ந்த துருவையும் பார்த்தவள் உணவை தொடாமல் அவனை தீவிரமாக பார்க்க.. அவனோ அதி தீர்க்கமாக அவளை தான் பார்த்தான்.
பின்பு என்ன நினைத்தானோ ஒரு பெரு மூச்சுடன் தலையை இடவலமாக ஆட்டிக் கொண்டவன் "சாப்பிடு..!" என்று கண்களால் மிரட்டினான் அவளிடம்.
அவளோ செல்ல கோபம் போல முகத்தை திருப்பிக் கொண்டாள், சாப்பிட முடியாது என்று!
"ம்ப்ச்… ஏன் கையில கொடுத்தா சாப்பிட மாட்டீங்களோ? மேடமுக்கு வந்து ஊட்டி விடவேண்டுமோ?" என்று அருகில் கேட்ட அவன் குரலில் விசுக்கென்று அவள் எதிரே பார்க்க.. முன்னே இரு கைகளையும் பாக்கெட்டில் விட்டபடி விரைப்போடு நின்றிருந்தான் துருவ்.
"சாப்பிடு.. சாப்பிடுனா.. எப்படி சாப்பிடுறது? ஒரு பச்ச பிள்ளை சாப்பிடும் போது வெறிக்க வெறிக்க பாத்துக்கிட்டே இருந்தா எப்படி சாப்பிட முடியும்? இல்ல சாப்டுற சாப்பாடு தான் எப்படி ஜீரணம் ஆகும்? ஜீரணமாகாம எப்படி சக்தி கிடைக்கும்? ஏற்கனவே சாப்பாடு போடுறேன்னு கூட்டிட்டு வந்து ஒரு நாள் முழுக்க பட்டினி போட்டுட்டீங்க.. இதுல எதிர்க்கவே உட்கார்ந்து குறுகுறுன்னு பார்த்துட்டு இருந்தா…" என்று சலைன் ஏறிய தெம்பில் அவள் நிறுத்தாமல் பேசிக் கொண்டே செல்ல..
"ஜஸ்ட்.. ஸ்டாப் இட்…!" கர்ஜித்தான் துருவ்!
"அப்போ… சாப்பாடு.." விழித்தாள் அனு!
"காட்…!! ஐ அம் எக்ஸ்ஹாஸ்டட்!" சோர்வுடன் துருவ்.
"எதே? எக்ஸ்ட்ரா காசு கேப்பிங்களா?" அதிர்வுடன் அனு.
"அதெல்லாம் தர முடியாது! மொதல்ல என் கிட்ட காசே இல்லையாம்" என்றதும் அவன் முறைத்தான்.
"பிள்ளைய கொடுப்பாராம் ஆனா சோறு போட மாட்டாராம்!" என்று அவள் மெல்ல முணுமுணுத்தது அருகில் நின்ற அவனுக்கு தெளிவாய் கேட்டது.
"ஏய்… இப்ப நீ வாய மூடல… ஓவரா பேசுற இந்த வாயை கடிச்சு வைச்சிடுவேன்.. காட் இட்?" என்று அவள் முன் குனிந்து அவன் பேச…
"ஏதே.. கடிச்சிடுவாரா?" என்று அவள் திகைத்து பார்க்க.. அவளை கூர்ந்து பார்த்தவான் கண்களோ சொன்னதை செவ்வனே செய்வேன் என்றது. அதன் பின் அனு வாய்க்கு வேற வேலைக் கொடுத்தாள்.
"தாரதி… இட்ஸ் ஆல் யூ…" என்று அவன் பல்லை கடிக்க.. இவர்கள் இரண்டு பேரும் விவாதித்தை ஒரு சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டது தாரதி "நோ.. நோ.. டென்ஷன் துருவ். நான் அவளை ஹேண்டில் பண்ணிக்கிறேன் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க" என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு அனுவை பார்க்க..
"நான் முதல்ல சாப்பிட்டு எனக்கு எனர்ஜி ஏத்திக்கிறேன். அதுக்கப்புறம் உங்க அட்வைஸை ஆரம்பிங்க.." என்றவள் வெகு நிதானமாக பவுலில் இருந்த மூன்று இட்லியையும் காலி செய்தாள்.
இவள் உணவு உண்பதையே பார்த்துக் கொண்டிருந்த சுகன் தண்ணீர் கொண்டு வந்து தர சிரித்த முகத்துடன் "நன்றி அண்ணா சார்" என்று வாங்கிக் கொண்டாள்.
அங்கே சற்றே பையில் இருந்த பழங்களை இவள் பார்த்துவிட்டு "அது என்ன ஃப்ரூட் அண்ணா சார்? ஒரு ஆப்பிள் மட்டும் எடுத்துட்டு வாங்க… நல்ல கழுவி எடுத்துட்டு வாங்க.." என்று ஆர்டர் போட அவள் சொன்னதை அப்படியே செய்தான் சுகன்.
ஆப்பிளை கடித்துக்கொண்டு அருகில் அமர்ந்த தாரதியை பார்த்து "ஸ்டார்ட் தி மியூசிக்!" என்றாள்.
கர்ப்பிணி பெண் இந்த நேரத்தில் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும்? என்னென்ன சாப்பிட வேண்டும்? அதிகம் கோபம் கொள்ளக்கூடாது! உணர்ச்சிவசப்படக்கூடாது! அதனால் ரத்த அழுத்தம் உயர்வதோடு அதன் பின் விளைவுகள் என்ன என்று அவர் சொற்பொழிவு ஆற்ற… இவளோ கருத்து கண்ணாயினார் போல வாயிலிருந்த ஆப்பிளை சாப்பிட்டுக் கொண்டாருந்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் அமர முடியாமல் "மீதி லக்சரர நாளைக்கு கண்டினியூ பண்ணுங்களேன் டாக்டரே" என்று கொட்டாவி விட்டுக் கொண்டே கூற..
"இவ கிட்ட சொல்லி பிரயோஜனம் இல்லை" என்றவர் செவிலியரோடு அவளை அவளது அறைக்கு அனுப்பி வைத்து சில மாத்திரைகளையும் கொடுத்து அனுப்பினாள் அவள் உடல்நிலை தேறுவதற்காக..
உணவை வாங்கி வந்திருந்தவன் துருவ் அழைத்துக் கூற, அவனுக்குமே பசி வேகமாக இறங்கி வந்தான் கீழே.
"ப்ளீஸ் துருவ்.. உங்களை புரிந்து கொள்ள முடியுது! உங்க வேலை டென்ஷன்ல இவளை பார்த்துக்கொள்வது ரொம்ப கஷ்டம் தான் எனக்கு புரியுது. ஆனா மூணு உயிர் துருவ்.. எவ்வளவோ பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்காமல் கஷ்டப்படுறாங்க தெரியுமா? ப்ளீஸ்.. ஹேண்டில் ஹர் கேர்ஃபுல்லி" என்று அதற்கு மேல் என்ன கூறுவது என்று புரியாமல் தாரதி பார்க்க.. திரும்பி சுகனை ஒரு பார்வை பார்த்தவன் "நாளைக்கு ஒரு லேடி கண்டிப்பா நீ அழைச்சிட்டு வந்தே ஆகணும்? அதோட அவங்க வரவரைக்கும் இந்த பொண்ணுக்கு சாப்பாடு என்னன்னு பாக்குறது உன்னுடைய வேலை. அதற்கு அப்புறம் நீ எனக்கு கூட ஆபீஸ் வந்தா போதும்" என்றவன் "ஓகே பை டாக்டர்" என்று தாரதியை பார்த்து கூறினான்.
அவனிடம் கேட்க சொல்ல ஏக விஷயங்கள் இருந்தாலும், இப்போதைக்கு எதுவும் முடியாமல் மெல்ல தலையாட்டியவள் அமைதியாக செவிலியரோடு சென்று விட்டாள்.
"குடும்பம் குழந்தை.. எவன் டா இதெல்லாம் கண்டுபிடிச்சான். ச்ச.. இரிட்டேட்டிங்!! நமக்கு இதெல்லாம் ஒத்து வராதுன்னு சொன்ன கேக்குறாங்களா? இவளை எப்படி இங்கே இருந்து துரத்துவதுனு தெரியல.. என் பக்கமும் தவறு இருக்கிறது எல்லாம் அந்த அப்சராவால்!" என்று பல்லை கடித்தவன், "முதலில் குழந்தை பிறக்கட்டும் அதற்கு அப்புறம் இருக்கு இவளுக்கு!" என்று பல்லை கடித்தவாறே தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
இதே… துருவ் தான் குழந்தைகளுக்காவும்.. அதனை சுமப்பவளுக்காகவும் விடிய விடிய தவிக்க போகிறான் என்று பாவம் அப்போதைக்கு தெரியவில்லை!!
இப்ப, துருவை நினைச்ச கொஞ்சம் பாவம் போல தான் இருக்கு ரைட்டர்....
இவன் வளர்ப்பு அப்படி இருக்கும் போது இவனும் தான் என்ன செய்வான்????
அது தான் தெரியுமே ரைட்டர்....
Oru vazhiya sappadu problem solved Anuku, aduththu enna waiting eagerly Writerji
@goms இன்னும் நிறைய ஷாக்கிங் சர்ப்ரைஸ் இருக்கும். ஆனா எல்லாமே கலாட்டா வா தான் இருக்கும்டா
- Pavam Anu😢. But she must annoy n disturb the Dhuruv and sugan🤣😂🥳