தோகை 7

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 7

"கண்ணை மூடினாலே கருத்தில் அவன் தானே!!" என்று ஏதோ படத்தில் வருவது போல.. கண்ணாடி முன்னாடி நின்று அவள் இதழ்களை பார்த்தாலே அவ்விதழில் புதைந்த வன் இதழ்கள் அவ்வப்போது ஞாபகம் வர.. அதை விரட்டும் அறியாது தவித்தாள் பேதை!!

சிறுவயதில் இருந்து எதையும் சட்டென்று தாய் தந்தையிடம் பகிர்ந்து விட முடியாது இவளால். காரணம் இருவரும் மருத்துவர்களின் என்பதாலும் புதிதாக கட்டிய மருத்துவமனை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதாலும் அதிகமாக தங்கள் உழைப்பை கொடுத்து மருத்துவமனைலேயே பாதி வாழ்நாளை கழித்துக் கொண்டிருந்தனர் மகாதேவனும் துர்காவும்.

அதற்காக மகளை விட்டு விட்டார்கள் என்று பொருள் இல்லை. இப்போது உள்ள கால தந்தையரை போல மகள் கேட்பதை விரும்பியதை வாங்கி கொடுத்தாலே அதுவே பாசம் என்று எண்ணி மகாதேவனும் அதே தப்பை சரியா செய்ய.. சற்று பிடிவாதத்துடன் குழந்தைத்தனத்தோடு துடுக்கான பெண்ணாகத்தான் வளர்ந்தாள் மகதி.

பெரும்பாலும் இம்மாதிரி வார இறுதிகளை எல்லாம் படிக்கும் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து கழித்தாலும் பெரிதாக பப் சோசியல் டிரிங்கில் எல்லாம் ஆர்வம் கிடையாது. தனியாக இருப்பதற்கு அவர்களுடன் சில நேரம் ஜாலியாக இருக்கலாம் என்று தான் செல்வாள். வெகு நாளைக்கு பிறகு இன்று லீனா அவளை வெளியில் அழைக்க ஒரு மாறுதலுக்காக அவளும் கிளம்பி விட்டாள். ருத்ரன் சென்றிருந்த அதே பப்பிற்கு!!

சொக்கும் மதுவிலே...
சொர்க்கம் கையிலே.. என்று அன்றைய பாடலை இன்றைய தாளத்தில் விஜே போட.. பாடலோடு குடியும் கும்மாளமுமாக குதூகலித்தார்கள் இளைஞர்களும் இளைஞிகளும்!!

இவளுக்கு சட்டென்று ஒட்ட முடியாமல் எப்பொழுதும் போல கையில் ஒரு ஆரஞ்சு மொக்டோலை எடுத்துக்கொண்டு மெது மெதுவாக சப்பி கொண்டிருந்தவளுக்கு அந்நேரம் இன்னொரு தோழி போன் செய்து தனக்கு துரோகம் செய்த பாய் பிரண்டை பற்றி அழுது புலம்ப… நம் நாயகி அவளை சமாதானப்படுத்துவதற்காக வீர வசனம் பேச.. ருத்ரன் என்று தெரியாமலேயே எதிரில் அமர்ந்து பேசினாள்.

ஆனால் அவள் பேசியது எல்லாம் அவனுக்கு என்றே பேசியது போல அச்சுர சுத்தமாய் அவன் காதுகளில் விழ.. "எங்க போனாலும் இந்த சில்வண்டு நம்மையே சுத்திக்கிட்டே இருக்கே!!" என்று இடது பெருவிரலால் நெற்றியை தேய்த்துக் கொண்டான் ருத்ரன்.

போனை பிடிங்கியவனை முதலில் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. மங்கிய ஒளியில் வித்தியாசமான உடையில் அவன் இருக்க… "ஏன் சார் என்கிட்ட இருந்து ஃபோன புடுங்குனிங்க.. கொடுங்க சார் மொதல்ல.. அவளே பாவம், பாய் பிரண்டு ஏமாத்திட்டான்னு ஃபீலிங்ல இருக்கா!!" என்று இவள் பீல் செய்ய… அவனோ கண்டுக்கொள்ளாமல் குப்பியில் கவனமாக இருக்க...

அவளோ நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தாள். கிடைத்தான் ஒருவன் கேட்பதற்கு என்று!! அதிலும் இவளோடு செலவிடும் நண்பர்களில் பெரும்பாலும் பப்பை கண்டவுடன் இவளை மறந்து அவர்கள் தங்களுக்குள் உற்சாகத்தில் திளைக்க... இவ்வளவு ஓரமாக உட்கார்ந்து அவர்களை பார்த்துக் கொண்டிருப்பாள். வித்தியாசமான மனிதர்கள்.. அவர்கள் உள்ளிருக்கும் அந்த வித்தியாசமான செயல்களை கண்டு களிப்பாள்!!

பெண்ணியம் அது இது என்று பேசும் பெண்கள் கூட இங்கே குடிபோதையில் ஆடுவதையும்…

வெளியில் ஒழுக்கசீலன்களாக காட்டிக்கொள்ளும் பெரிய மனிதர்கள் இங்கு சிறு பெண்களை கம்பெனிக்கு அழைத்து வந்து கும்மாளம் இடுவதையும்…

இப்படி ஏகப்பட்ட மனிதர்கள் வெளியில் ஒரு முகத்தோடு உலா வந்தாலும் இங்கு வேறு முகத்தோடு குதூகலிப்பதை கண்டு சிரித்துக் கொள்வாள்.

இன்று கிடைத்தது இரண்டு காதுகள் என்று அனைத்தையும் இவள் புலம்பி தள்ள... அந்த பாட்டு சத்தத்தில் எதுவுமே மற்றவர்களுக்கு கேட்கவில்லை. ஆனால் சிப்பி இதழ்களை திறந்து அவள் பேசும்போது கொற்கை முத்துக்கள் பளிச்சிடும்!! அவ்வப்போது அம்முத்துக்களுக்கு இடையே நசுங்கும் மாதுளை இதழ்களை விழிகளால் விழுங்கிக் கொண்டே வோட்காவை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தான் ருத்ரன்!!

கள்ளத்தனமாக தான்.. ரசிப்பதில் தவறில்லை என்று!!
அந்த அளவிற்கு கம்பீரமும் தோரணையும் ஆட்களை விழிகளாலே கட்டுப்படுத்தும் வசியமும் நன்கு அறிந்தவன் இவன்!!
ஆனால் இன்று சிறு பெண்ணின் சிறு பிள்ளைத்தனமான பேச்சை தனை மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்.

அவளது பேச்சில் இவனுக்கு சில சமயங்களில் சிரிப்பு பீறிடும்!! அவன் இதழ்கள் விரிந்தால் அல்லவா சிரிப்பை கண்டுபிடிக்க? அதை தான்
அவனின் கற்றை மீசை மறைத்து இருக்க.. அங்கே நெளிந்த புன்னகை மீசைக்கு அடியில் புதைந்து போனது!!

கொஞ்ச கொஞ்சமாக அவளது பேச்சிலும் அருகாமையிலும் அவன் உள்ளே புதைக்க முயன்ற அரக்கன் இரண்டு பற்களை காட்டி டிராகுலாவாய் மாறி ரத்தம் குடிக்க காத்துக் கிடந்தான்!! அதுவும் அச்செவ்விதழ்களில்...

சலசலக்கும் ஓடையாய் வளவளத்துக் கொண்டிருந்தவள் சட்டென்று தனது பேச்சை நிறுத்தி அவனை கூர்ந்து பார்த்தாள்.
அவனும் அவளை ஆழ்ந்து பார்க்க… அவளோ "அது.. அது.. நீங்க.. இங்க.." என்று அவனை கண்டுக் கொண்டவள், முதலில் திக்கித் திணறியவள், 'ஆமா நாம ஏன் பயப்படணும்?' என்று அதற்கு பின்னே தைரியம் கூட்டி 'ஃபோனை குடுங்க!' என்றாள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு…

ருத்ரன் அவள் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்தான். "இப்போ சொல்லு??? என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தியே?" என்று தனது கையை டேபிளில் மீது வைத்தவன், வலது கையால் அவளது ஃபோனை ஆட்டிக் கொண்டே கேட்டான். கண்களில் அதே கூலர்!!

பக்கம் பக்கமா இவ்வளவு நேரம் பேசிய வசனங்கள் எல்லாம் இவனை கண்டதும்.. அதுவும் நேருக்கு நேர் பார்த்ததும்.. அவளுக்கு தட்டு தடுமாறியது!!

"அது.. ப்ரண்டு கிட்ட.. அவ பாய்ஃப்ரண்ட் பத்தி…!!" என்று அவள்‌ இழுக்க...

''ஆமா.. பொம்பளைங்க மட்டும் தியாகிகளா? ஒவ்வொரு காரியத்துக்கும் எவனாவது ஒருத்தன் வேணும். இப்போ உள்ள பொண்ணுங்களை.. கேட்டா க்ரஷ்ம்பீங்க.. அதுவும்‌ ப்ரண்டுக்கு மேல.. லவ்வருக்கு கீழவாம்!! இது என்னங்கடி லாஜிக்!! இல்ல தெரியாம தான் கேட்குறேன்… ப்ரண்டு ஓகே.. லவ்வர் ஓகே.. அது என்ன இரண்டும் கலந்து ஒருத்தன்? இல்ல இரண்டு கேட்டகரிலையும் இல்லாமல் எதுக்கு ஒருத்தன்? இதுல
நீங்க ஆசைப் பட்டு கேட்டா அதை நாங்க செஞ்சுடனும்.. அதே அவனுங்களா செஞ்சா இல்லாத ஊரு பட்ட சீன போடுவீங்க? ஆனா.. ஆம்பளைங்க மட்டும் சுயநலவாதி!! பொம்பளைங்க தியாக செம்மல்களா?" என்று மகதிக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாக பேச பதில் அளிக்க முடியாமல் அமர்ந்திருந்தாள்!!

"நான் உங்களை என் க்ரெஷ்னு சொல்லவே இல்லையே? அதுவும் பிரெஷ்ஷா நீங்க? உங்களை நான் க்ரஷ்ஷா வச்சுக்க? செகண்ட் ஹாண்ட் பீஸூ.. ஓஎல்எக்ஸ்ல கூட விக்க முடியாத பீஸூ நீங்க!!" என்றதும்‌ அவளை அவன் முறைக்க…

"பாசமா முறைக்காதீங்க சார்..‌ அன்னைக்கு நடந்த இன்ஸ்டென்ட்டுக்கு ஒரு சாரியாவது நீங்க கேட்டீங்களா? இதுவரைக்கும் ஒரு சாரி சொல்லல.. இதுல நீங்க எல்லாம் கலெக்டர்!! என்னத்த படிச்சு… என்னத்தனு பாஸ் பண்ணீங்களோ?" என்று உதட்டை சுழித்துக் கொண்டவளின் உதடுகளில் சாரி சொன்னால் என்ன என்று ட்ராகுலாவாய் இரண்டு பற்கள் முளைக்க... தலையை உலுக்கி தன்னை சமன்படுத்திக் கொண்டவன், "இங்க பாரு எவ்வளவு தூரம் என்கிட்ட இருந்து ஓட முடியுமோ.. தயவு செய்து ஓடிப்போய்விடு!! இல்ல…" என்று அசால்ட்டாக தோளை குலுக்கிக் கொண்டவன், மீண்டும் ஒரு குப்பியை வாயில் சரித்தான்.

"ஏன்.. ஏன்‌.. நான் ஏன் ஓட வேண்டும்?" என்று பிடரியில்லா சிங்கமாய் சிலிர்த்தவள், எழுந்து டேபிளை பிடித்தவாறு அவன் முன் குனிந்த வாக்கில் கேட்க..

அவளின் அந்த நிலையை பார்த்தவன், சட்டென்று திரும்பிக் கொண்டான். இடது பெருவிரலால் நெற்றியை நீவிக் கொண்டவன்,
"ஏன்னா? ஏன்னா… உன்னையும் செகண்ட் ஹாண்ட் பீஸாய் மாத்திடுவேன்!!" என்றான் ரகசியமாய்.. அர்த்தம் புரியாமல் முழித்தவள் புரிந்தவுடன் அதிர்ந்து வாயை பிளக்க..

"சும்மா சும்மா இப்படி வாய பொளந்து பாத்துகிட்டு நிக்காத டி.. . அப்புறம் கடிச்சிட்டான்.. தின்னுட்டானு என்னை சொல்ல கூடாது!!" என்றவன் அவளை திரும்பி பாராமல், அவன் அமர்ந்த இருக்கையில் ஃபோனை போட்டுவிட்டு விறுவிறு சென்றவனைத்தான் குழப்ப முகத்தோடு பார்த்து இருந்தாள் மகதி!!

"இவனுக்கெல்லாம் அறிவே இல்லை என்ன பேச்சு பேசுறான்? அப்போ பேசுனதுக்கே என்கிட்ட சாரி கேக்கல இப்போ இங்க வந்து இவ்வளவு பேச்சு…" என்று முணுமுணுத்துக் கொண்டே இவள் பெண்கள் கழிப்பறை நோக்கி செல்ல.. யாரும் பார்க்கா வண்ணம் அவள் பின்னே சென்றவன் அவளின் வாயைப் பொத்தி அப்படியே பின்னாலிலிருந்து அலக்காய் தூக்கி ஆண்கள் கழிவறைக்குள் நுழைந்தான்.

திடுமென அவளது மெல்லிடை இறுக்கப் பற்றப்பட்டு திருப்பப்பட, அவள் சுதாரிக்கும் முன்னே அவள் இதழ்களை கொள்ளையிட்டு இருந்தான் ருத்ரன்!!

அழுத்தமான ஆழ்ந்த முத்தம்!!
ஒற்றை முத்தத்தில் வன்மையும் மென்மையும் ஒருங்கே காட்ட முடியுமா என்ன? காட்டிக் கொண்டுருந்தான் கலெக்டர்!!
மருத்துவரை மயக்கத்தில் ஆழ்த்தி!!
இதழ் மயக்கத்தில்...

"எனக்கு இப்படித்தான் சாரி கேட்க தெரியும்!! இனிமே உன்னை பார்க்கும் போதெல்லாம் விதவிதமாய் இப்படியே சாரி கேட்கிறேன்!! சரியா??" என்று உறைந்து நின்றவளின் கன்னத்தில் லேசாக தட்டி விட்டு வெளியேறியவனை வெறித்துப் பார்வையோடு மகதி!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top