தோகை 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 3

 

சென்னை உங்களை இனிதே வரவேற்கிறது என்ற பதாகை ருத்ரனின் முகத்தில் புன்னகைக்கு பதில் இறுக்கத்தையே கொடுத்தது!!

 

ஏற்கனவே அழுத்தத்தை ஆடையாகக் கொண்டு அலைபவன் இப்பொழுது கவச குண்டலமாக மாற்றி விட்டான்!!

 

ஏன்னென்றால்… சென்னை..

அது அவனுக்கு கொடுத்த ரணங்கள் அப்படி!!

அது அவனுக்கு தெரிவித்த துரோகங்கள் அப்படி!!

அது அவனுக்கு கொடுத்த வலிகள் அப்படி!!

 

அவனுக்கு யார் சொல்வது? இந்த ரணங்கள் துரோகங்கள் வலிகள் எல்லாம் அச்சென்னையில் வாழும் மாந்தர்களால்.. அதுவும் அவனை சுற்றி இருந்த சுற்றங்களால் என்று!!

யாரோ செய்த தவறுகளுக்காக தன் மீது முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு 'அகழ்வாரை தாங்கும் நிலம் போல!' அவனை மென் சாரலாய் மழைப்பூக்களை தூவி வரவேற்றது சென்னை மாநகரம்!!

 

எதற்கும் துணிந்த மனம் என்ற ஒன்று இல்லவே இல்லை.

மேலும் மேலும் துயரடைந்து தோல்வியுற்று விரக்தியின் உச்சத்தில் மரத்துப் போன நிலையே துணிந்த நிலை!! இதுவே இன்றைய ருத்ர ப்ரதாப்.. துணிவின் உச்சியில்!!

 

எவரும் அவதார புருஷர்கள் இங்கு இல்லையே.. வலியையும் துரோகத்தையும் தாங்கி வாழும் சாதாரண.. வெகு சாதாரண மனிதர்களே!! 

 

"உன்னை விட மேலான சக்தி இங்கு எவனுக்கும் இல்லை!! உன்னை நம்பு!! உன்னை மட்டுமே நம்பு!!" என்று எப்பொழுதும் அவன் தனக்குத்தானே சொல்லும் அம்மந்திர வார்த்தைகளை தனக்குள்ளே சொல்லிக்கொண்டு மெல்ல கண்களை திறந்தான் ருத்ர ப்ரதாப்!! இப்போது சற்று ஆசுவாசமாக உணர்ந்தான்.

 

மகளை தூக்கிக் கொண்டு அவன் வர… அதற்குள் அவனை வரவேற்க என்று சென்னை மாநகர காவல் ஆணையர் முரளிதரன் நேரில் வந்திருந்தார். இன்னும் மூன்று வருடத்தில் ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்.. அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கூலை கும்பிடு கும்பிடாதவர்!! தன்னை வரவேற்க நேரில் வந்தவரை சிறு புன்னகையோடு கை கொடுத்தான். அவன் சென்னைக்கு ஜார்ஜ் எடுக்கும் முன்பே இங்கு உள்ள அனைவரையும் பற்றிய தகவல்கள் அவனது விரல் நுனிகளில்!!

 

அப்படி இல்லை என்றால் இவர்களை அவதானிக்கவே அவனுக்கு ஆறு மாதம் கடந்து விடுமே? அதற்குள் அவன் வேலையை எப்படி செய்வது?

அது என்னமோ அந்த ஆறு மாதம்தான் அவனது ஒரு இடத்திற்கான கெடு!!

 

அபிஷியலான பேச்சுகளோடு அவனுடைய கலெக்டர் பங்களா வரை பயணித்தார் முரளிதரன். ருத்ரனின் மடியிலேயே அமர்ந்து அவன் மார்பில் தூங்கியப்படி வந்தாள் ஆதினி!!

 

"குட்டி பேரு என்ன? இவங்க அம்மா வரலையா?" என்று கேட்டார் முரளிதரன்.

 

"மை ஏஞ்சல் ஆதினி!! இவ அம்மா தானே.. அவ பேரு நந்தினி!! இருக்கா.. போட்டோ ஃப்ரேமிலும், எங்களோட நினைவுகளிலும்…!!"

என்றான் விரக்தி சிரிப்போடு!!

 

"ஓ சாரி.. !!" என்றவர் "இந்த ஏஞ்சல் பேரு ஆதினியா? ஆதினி ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டாங்களா?" என்று அவளிடம் கேட்க… இல்லை என்று அவள் தலையாட்ட, அதைப் பற்றிய சில விவாதங்கள் ஓடின.. கடைசியில் முரளிதரனின் மகளின் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்திலே சேர்க்கலாம் என்று முடிவானது. அவர் சொல்வதற்காக எல்லாம் இவன் ஒத்துக் கொள்ளவில்லை. அவன் ஏற்கனவே இரண்டு மூன்று பள்ளிகள் தேர்ந்தெடுத்து வைத்ததில் இதுவும் ஒன்று!! கூடவே அவனது அலுவலகத்திற்கு மிக பக்கத்தில் இருப்பதால் சரி என்று ஒத்துக் கொண்டான்.

 

ஒரு வழியாக நொய்டாவில் அதகளப்படுத்திய சூறாவளி அமைதியாக சென்னையில் கரை ஒதுங்கியது.

 

இங்கே மீண்டும் புயலாக மாற வாய்ப்புகள் இருந்தாலும், அதில் பூமகளின் வரவும் நிச்சயம்!!

 

அடுத்த ஒரு வாரத்தில் ஆதினியை பார்த்துக் கொள்ளவும், வீட்டோடு சமையலுக்கு என்றும் மற்ற வேலைகளுக்கு என்றும் ஒரு தம்பதியரை முரளிதரன் அனுப்பி வைக்க.. ருத்ர பிரதாப்பும் அவர்களை நன்றாக விசாரித்து விட்டே.. வேலைக்கு சேர்த்தான்.

 

ராமஜெயம் அவ்வப்போது மருமகனுக்கு தொலைபேசி வழியே தொல்லை கொடுத்தார். அவர் அங்கு பாதுகாவலராய் அமைச்சருக்கு இருக்கையில்.. அவரால் சட்டென்று இங்கே வர முடியவில்லை. அதனால் கூடிய மட்டும் 'அப்படி நடந்து கொள்!''இப்படி நடந்துக்கொள்!' என்று மருமகனுக்கு அத்தனை தொல்லை கொடுக்க.. அதற்கெல்லாம் ஒரு உம் கூட போட்டு கேட்டுக்கொள்ள மாட்டான் இந்த ஆணவம் பிடித்தவன்.

 

முதலில் ஆர்வமாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆதினி அதன் பிறகு அவளிடம் ஏதோ ஒரு சோர்வு!!

 

"நியூ பேக்... நியூ ட்ரஸ்.. நியூ புக்ஸ் நியூ ஷூ!!" என்று முதல் நாள் ஆர்ப்பாட்டமாக கிளம்பிய பிள்ளை அடுத்தடுத்த நாட்களில் சோர்வாக வந்ததை கவனித்த வீட்டை பார்க்கும் சொர்ணாம்மா அதை ருத்ரனின் காதுக்கு கடத்தினார்.

 

அவனும் புதிதாக சார்ஜ் எடுத்துக் கொண்ட மாவட்டம் என்பதால் அதீத கவனத்தை இங்கே செலுத்த வேண்டி இருந்தது. அதிலும் முதல் சில நாட்கள் பிள்ளையை அவர்கள் எப்படி கவனிக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு தான் பிறகு அவர்களை நம்பி ஒப்படைத்தான். இப்பொழுது இப்படி சொன்னவுடன் மறுநாள் மாலை ஆதினிக்காக இவன் வீட்டில் காத்திருந்தான் அவள் வரும் நேரம்..

 

 இவனே சென்று அழைத்து வரலாம் தான். அது வீணான பப்ளிசிட்டியை ஏற்படுத்தும். அது மகளுக்கு கூட பிற்காலத்தில் வினையாக வர வாய்ப்புகள் உண்டு என்று தவிர்த்தான்.

 

சொர்ணம்மா சொன்னது போலவே பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய ஆதினியின் முகம் அத்தனை வாட்டமாக இருந்தது. 'ஒருவேளை இவ்ளோ நாட்களாக வீட்டில் இருந்த பிள்ளை திடீரென்று பள்ளிக்கு செல்வதால் ஏற்படும் சோர்வோ?' என்று முதலில் நினைத்தவன் அன்று மாலை அவளுடன் பேச்சிக் கொடுத்துக் கொண்டே அவளின் வேலைகளை பார்க்க.. சற்று மகளின் முகம் தெளிந்தது போல் இருந்தது. ஆனாலும் தினமும் மாலை அவனால் வர முடியாது அல்லவா?

 

அதனால் சொர்ணாமாவோடு வீட்டுக்கு அருகில் இருக்கும் பார்க்குக்கு பாதுகாவலரோடு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தான்.

 

முதல் பத்து நிமிடங்கள் அந்த பார்க்கில் விளையாடும் குழந்தைகளை பரவசமாக பார்த்தவள், அடுத்த இருபது நிமிடங்கள் அவர்களோடு குதூகலத்தோடு விளையாடினாள். ஆனால் அவை ரொம்ப நேரம் நீட்டிக்கவில்லை. திரும்பவும் சோர்ந்து வந்து சொர்ணமாவின் அருகில் அமர்ந்து கொண்டவளிடம் எவ்வளவு கேட்டும் வாயை திறக்கவே இல்லை. அந்த ஆணவக்காரனுக்கு பிறந்த குட்டி ராட்சசி!!

 

சுவத்தில் அடித்த பந்து போல திரும்பவும் அவனிடமே சொர்ணாம்மா ஆதினியைப் பற்றி கூற.. என்ன செய்வது என்று தெரியாமல் நெற்றியைப் பிடித்து அமர்ந்து கொண்டான். பலரை ஓட ஓட விரட்டி அடித்தவனை அவனது மகள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அமர வைத்து விட்டாள்!!

 

பின்னே… அவள் ரவுடி கலெக்டரின் வாரிசு அல்லவா?

 

அன்று நேரத்தோடு வீட்டிற்கு சென்று மகளுடனே நேரத்தை கழிக்க எண்ணி அவன் எழ… அவனை பார்க்க வேண்டுமென முரளிதரன் வந்திருப்பதாக உதவியாளர் கூற அமர்ந்து விட்டான்.

 

நாட்டு வேலை அழைக்க.. எங்கிருந்து வீட்டிற்கு செல்ல?

 

வந்தவர் இவனுக்கு சல்யூட் அடிப்பதில் இருந்து ஏதோ அபீஸியலாக பேச வந்திருக்கிறார் என்பதை புரிந்து, அவரை அமரச் சொல்லி "சொல்லுங்க சார்!!" என்றதும்…

 

"சார்.. ஈசிஆரில் நேற்று இரவு எங்க நார்க்கோட்டிக் குரூப் ஒரு கேங்கை கைது பண்ணி இருக்கிறோம். அவங்க கிட்ட இருந்து ட்ரக்ஸ் கைப்பற்றி இருக்கிறோம்…" என்று அதன் பற்றிய டீடைல்ஸ்களை அவர் கூறிக் கொண்டே செல்ல.. இவனும் அந்த கேசில் அப்படியே ஆழ்ந்து விட்டான்.

 

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவர் பேசிவிட்டு சென்றவுடன் தான் மணியை பார்க்க.. அது எட்டை காட்டியது. மீண்டும் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். 

 

"இந்நேரம் பட்டு தூங்கி இருக்கும்.. அங்கே இருக்கிற வரைக்கும் மாமா குழந்தைய பார்த்துகிட்டார். என்னால இங்க வந்து அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியவில்லை. இந்த ஒரு மாசத்துலேயே பட்டு ரொம்ப ஏங்கி போயிட்டா…" என்று யோசனையோடு அமர்ந்திருந்தவனை கலைத்தது முரளிதரனின் குரல்.

 

"சாரி.. ஒரு இன்ஃபர்மேஷன் சொல்லிட்டு போலாம்னு வந்தேன். நீங்க ஏதோ…" என்று அவன் அமர்ந்து இருந்த கோலத்தை பார்த்து தயங்கி அவர் நிற்க…

 

"ப்ளீஸ்.. சார்!!" என்று‌ இருக்கையை அவரிடம் காட்டி விட்டு "டூ செகண்ட்!!" என்று முகத்தை நன்றாக கழுவிட்டு வந்தவனை ஆச்சரியமாக பார்த்தார்

 அவர் கேள்விப்பட்டவரை வேலைக்கு எல்லாம் துவண்டு விடுபவன் ருத்ர பிரதாப் இல்லையே!! அதுவும் வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. 'அதற்குள் என்னவாயிருக்கும்? குடும்ப பிரச்சினையா? இல்லை பர்சனலாக எதுவுமா?' என்று அமைதியாக அவனைப் பார்த்து இருந்தவரிடம் இவனாகவே சொன்னான்.

 

"ஒன்னும் இல்ல சார்… கொஞ்சம் ஆதினி பற்றி தான்..!!" என்று‌ அவரிடம் பகிர்ந்து கொண்டான்.

 

"எனக்கு தெரிஞ்சு உங்க பொண்ணு லோன்லியா ஃபீல் பண்றா.. கூடவே அம்மா இல்லை இல்லையா அந்த ஏக்கம்…." என்றதும் அவன் அமைதியாக அமர்ந்திருந்தான். 

 

ஆனால் மனதுக்குள் அத்தனை போராட்டம்!! "ஏன்டி விட்டுட்டு போன? ஏன் இப்படி எங்க ரெண்டு பேரையும் தவிக்க விட்டுட்டு போன? ராட்சசி டி நீ!! பொல்லா ராட்சசி நீ நந்தினி" என்று உள்ளுக்குள் அத்தனை குமுறல்!!

 

"நான் ஒரு சஜஸென் சொல்லவா சார்?" என்றதும் நிமிர்ந்து பார்த்தவன் சொல்லுங்க என்று தலையசைக்க..

 

"நீங்க ஏன் ஒரு டாக்டர கன்சல்ட் பண்ண கூடாது?" என்றதும் அவன் சட்டென்று புருவங்களை சுருக்கி அவரை பார்த்த பார்வையிலேயே அவனின் எண்ணம் புரிந்தவராய் "இப்பெல்லாம் டாக்டர் பாக்குறது பெரிய விஷயம் இல்லை பிரதாப் சார். நான் சொல்றது சைக்காலஜி டாக்டர் கிடையாது!! என் பேரன் கொஞ்சம் அடமெண்ட்டா இருந்தவன் தான். அவங்க கிட்ட போக ஆரம்பிச்சு தான் இப்போ ரொம்ப ஃப்ரீயா இருக்கான்" என்றதும் அவரிடம் அட்ரஸை கேட்டு வாங்கி வைத்துக் கொண்டான் போக வேண்டும் என்று!!

 

முரளிதரன் சென்ற பின்னரும் அவர் கொடுத்த விசிட்டிங் கார்டை தான் பார்த்துக் கொண்டே இருந்தான். மனதுக்குள் போகலாமா? வேண்டாமா? சின்ன பிள்ளைகளுக்கு கவுன்சிலிங் எல்லாம் தேவையா? என்று ஏகப்பட்ட கேள்விகள்!!

 

"சரி.. போய் தான் பார்ப்போமே!!" என்று விசிட்டிங் கார்ட்டை பார்த்தவன் அதிலிருந்து பெயரை மீண்டும் ஒரு முறை வாசித்தான். மகதி ஸ்ரீ மகாதேவன்!!

 

காலையில் வழக்கம்போல் இவன் கலெக்டர் ஆபீசுக்கு வந்துவிட, சொர்ணம்மாவுடன் மகளை மருத்துவமனைக்கு போக சொல்லி அங்கேயே காத்திருக்க சொன்னான். மதியம் போல இவனும் அங்கு வந்து விடுவதாக சொல்லி இருந்தான்.

 

வழக்கத்திற்கு மாறாக அன்று மதிய நேரத்திலேயே மழை தூரிக் கொண்டிருந்தது. பெரிய மழை இல்லை. வெப்பச் சலனத்தால் உருவான லேசான மழை பூந்தூரலாய்!! இடி.. மின்னல்.. காற்று என பயமுறுத்தாமல்... பூத்தூரல் போடுவது போல நின்று.. நிதானமாக.. மிகவும் அமைதியாக மழை தூறிக் கொண்டிருந்தது!!

 

ஏனோ ருத்ர ப்ரதாப் மனதில் அன்று ஏதேதோ அலைபுறுதல்!!

 

ஏற்கனவே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வைத்து விட்டான். சொர்ணமாவும் ஆதினியோடு அங்கு வந்துவிட்டதாக கூறி இருந்தார். காரில் ஏசி ஆப் பண்ணி விட்டு மெல்லிய சாரலோடு கூடிய மண்வாசத்தை சுவாசித்து தன் இருதயத்தை நிரப்பினான். நுரையீரலில் அல்ல…

 

ஏனென்றால் இப்படி சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் ரசிக்க சொல்லிக் கொடுத்தது அவள் அல்லவா? இன்று அவள் இல்லாவிடினும் அந்த ரசனையை ரசிக்க கற்று பத்திரமாக சேமித்துக் கொண்டிருந்தான் இருதயத்தில்!!

 

இவன் சென்ற அன்று வழக்கமான கேம்ஸ் டே!! 

 

லிட்டில் பிரின்சஸ் டாக்டரின் வித்தியாசமான கேம்களை எப்படி அறிவான் கலெக்டர்?

 

இன்று‌ லாக் அண்ட் கீ கேம்!! அதாவது சீக்கர் யாரை பிடிக்கிறார்களோ அவர்கள் லாக் ஆகி நின்று விட வேண்டும். மற்றவர்கள் சீக்கரை தாண்டி சென்று அவர்களுக்கு கீ கொடுக்க வேண்டும்.

 

அதன்படி சீக்கர் கையில் சிக்காமல்

வேகமாக ஓடி வந்தாள் மகதி அந்த பெரிய ஹாலில்.. சட்டென கால் இடறி கீழே விழப்போனவள், கால் இடறிய வேகத்தில், இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக் கொள்ளும் முயற்சித்தாள். ஆகவே கைகளை அகலமாக விரித்துக் கொண்டு சரியப் போன வேளையில்… எதிரே வந்து கொண்டிருந்த ருத்ரப்ராதாப் மேல மோதினாள்.

 

வேக நடையுடன் மொபைலில் பேசிக்கொண்டே வந்தவன் சத்தியமாக பாய்ந்து வரும் இந்த சூறாவளியை எதிர்பார்க்கவில்லை!!

 

ருத்ரா சுதாரித்துக் கொள்ளும் முன் வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளை போல ஆஆஆஆ என்ற அலறலோடு வந்தவள், அவனது மார்பில் குனிந்த வாக்கில் ஒரே முட்டாக முட்டித் தள்ளி விட...

 

அவன் இடது பக்கத்தில் சரிந்து விழ.. தன்னை சமாளிக்க முடியாமல் தள்ளாடி அவன்‌ மீது போய் மோதி.. தடுமாறி கீழே விழுந்தாள்.

 

அவ்வளவுதான்!! கலெக்டர் கீழே பப்பரப்பவென கிடக்க… அவன் மீது தன்‌ பாடியை பார்க்கிங் செய்திருந்தாள் மருத்துவர்!!

 

அவள் இதழ்களோ சரியாக அவனது

நெஞ்சில்!!  

 

சில்லென்ற அவளது மெல்லிய இதழ்கள்… கருகருவென சுருள் சுருளாக முடிகள் அடர்ந்த அவனது தின் நெஞ்சில் வாகாக முத்தமிட்டு இருந்தது. நச்சென்று!!

 

உடம்பை தான் அவனது உடல் மேல் பார்க் செய்து இருந்தாள் என்று பார்த்தால், இதழ்களும் எக்கத்தப்பாக முத்தமிட்டு இருக்க.. கண்களை மட்டும் உயர்த்தி அவனை பார்த்தவள் கண்கள் தெறித்து விடும் அளவு விரிந்தது!!

 

சில்லென்ற ஸ்பரிசத்தில் தான் அவனுக்குமே அவள் முத்தமிட்டது உணர.. உடலுக்குள் ஒரு மெல்லிய அதிர்வு ஓடி மறைய.. குனிந்து பார்த்தவனது கண்களை முழுதாக நிறைத்தது அவளது விரிந்த கயல்விழி கண்களே!!

 

எங்கு அடிபட்டது என்றுகூட அவள் கவனிக்கவில்லை. சட்டென பதறி எழுந்து நின்றவளுக்கு தன் மீது தான் தவறு என்று தெளிவாக புரிய "சாரி .. சாரி... சாரி.. சாரி.." என்று மன்னிப்பு கேட்டபடி அவன் எழுவதற்கு இவள் கை கொடுக்க…

 

அவளை உச்சாதி பாதம் வரை ஒரு முறை உருத்து பார்த்தவன் வேகமாக எழுந்து தன் போனை தேடினான்.

 

அதற்குள் "கலெக்டர் சார்…!!" என்று யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க "என்னது கலெக்டரா?" என்று மகதி அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

 

எழுந்தவன் பின் தலையை வேகமாக தேய்த்துக் கொண்டான். பின் மூலையில் கிடந்த அவனது மொபைலை குனிந்து எடுத்தவன், அதை தூசி தட்டி சரி பார்த்து விட்டு நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்தான்.

 

அந்த கண்களில் தெரியும் எரிமலை தணலை.. தாங்க முடியாமல் பயத்தில் மகதிக்கு நாக்கு வரள.. அவளை அறியாமல் பின்னுக்கு இரண்டி நகர்ந்தாள்.

 

'சாரி.. சாரி.. !’ என‌ அவளது உதடுகள் இம்முறை கூறியவற்றில் ஒரு எழுத்து கூட அவள் தொண்டையை தாண்டி வெளியே வரவில்லை. வெறும் காத்து தான் வந்தது!!

 

அவனோ எதுவும் பேசவில்லை. ஏனென்றால் அவனது கைகள் தான் பேசியது. நேராக அவள் முன்னால் வந்தவன், விட்டான் கன்னத்தில் ஒன்று… பளீரென்று!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top