ஆழி 32

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

32

 

பொன்னான ஆறு வருடங்கள் கழித்து… காது குத்தல் விழாவிற்கு என்று விஷ்ணு குடும்பம் தேனியில் இறங்கியது.

விஷ்ணுவோடு அசிதன் முன்னால் செல்ல, சௌமினியும் ரோஹிணியும் அடுத்து பிறந்த இரட்டையர்களான சுஸ்ரஜித் பிரசாத் & அபிரஜித் பிரசாத் உடன் பின் சென்றார்கள்.. அனைவரையும் எதிர் கொண்டு அழைத்து சென்றார்கள் சௌமினியின் விருமாண்டி குடும்பத்தார்..

அக்குடும்பத்திலும் மினி போன்று ஒரே பெண் வாரிசு மித்ரநிவனிகா.. அருணின் மகள், மற்ற அனைவருக்கும் ஆண் வாரிசு தான் துஷ்யந்த், தன்வந்த், நிவானந்த், லஷ்வந்த் என்று இம்முறை யார் வந்து இந்த தேனி பிரதர்ஸ் கிட்ட மாட்ட போறாங்களோ??!! நம்ம மைண்ட் வாய்ஸ்… 

ரோஹிணி தன் பேரப் பிள்ளைகளை விளையாட விட்டு பார்த்துக்கொண்டிருக்க, சௌமினி மற்ற பெண்களுடன் சேர்ந்து கோவிலுக்கு செல்ல மற்ற ஏற்பாடுகளை பொறுப்பாய் பார்த்து கொண்டிருந்தாள்.

"ஏண்டி சுஜி… நம்பர் டூக்கு ரெடி பண்ணலையா?" சௌமினி கண்ணடித்து கேட்க..

"யாரு.. உங்க அண்ணன வைச்சு கிட்டு, எல்லோரும் எங்க விஷ்ணு அண்ணன் போலயா?" என்று அவள் வார, 

"போடி…" மினி வெட்கத்துடன்.. நாலு அண்ணிமார்கள் இருந்தாலும் சௌமினிக்கு சுஜி தனி ஸ்பெஷல் தான் என்றுமே.. உறவை தாண்டிய நட்பு அது!!

மறுநாள் காலை விடியலில் அனைவரும் ஐய்யனார் கோவிலில் ஆஜர்… ஆமாங்க.. நம்ம சௌமினி ஆஸ்தான ஐய்யனாரே தான். அவர்களின் குலதெய்வம் கூட.. முதல் மொட்டை விஷ்ணு குடும்பத்தார் முறையில் திருப்பதியில் நடத்த முடிவு செய்து.. சேர்த்தே காது குத்தலாம் என்று முடிவு எடுக்கையில்… இம்முறை ஈஸ்வர் பிரதர்ஸ் விட்டு கொடுக்கவில்லை.. 

"எங்க மாப்பிள்ளைகளுக்கு எங்க ஊருல, எங்க மடியில் வைச்சு தான் மொட்டை, காது குத்து எல்லாம்" சிவா ஆரம்பிக்க…

"அதானே.. ஒன்னுக்கு நாலு பேர் இருக்கோம்… விட்டுடுவோமா" ரிஷி ஒத்து ஊத

"கல்யாணம் தான் இங்கன பண்ண விடல, காது குத்து, தாய் மாமன்கள் உரிமை.. நாங்க விட்டு கொடுக்க முடியாது" அருண் கொந்தளிக்க… 

"மாப்பிள்ளை… இங்கனா.. எல்லோருக்கும் ஒரே ஜோலிய போய்டும்.. நீங்க அங்க கோவில்ல மொத மொட்டை மட்டும் போடுங்க… இங்க வைச்சு காது குத்திகலாம்" வழக்கமாக தரணி மாப்பிள்ளைக்கு சப்போர்ட் செய்ய… 

விஷ்ணுவோ, இவனுங்க பண்ணறது கொஞ்சம் கூட சரியில்லையே.. சௌமினியை முறைத்தான்.

அவளோ நீ ஆச்சு! உன் மச்சான்ஸ் ஆச்சு! என்று இவன் பக்கம் திரும்பாமல் கர்ம சிரத்தையாக சுஜியிடம் பேசி கொண்டிருந்தாள்.. 

"மாட்டுவல்ல! அப்போ இருக்குடி உனக்கு.." என்று உதடு அசைவில் தன் மினிம்மாக்கு மினி செய்தியை காட்டமா அனுப்பி, தன் மச்சான்களை யோசனையாக நோக்கினான்.

வல்லபர் குறுக்கிட்டு, "மாப்பிள்ளை.. இப்போதாவது இந்த விசேஷம் நாங்க பண்றோம்.. ஏற்கனவே சௌமி வளைகாப்பு.. பிள்ளைக நாமகரணம் உங்க இஷ்டமா தானே பார்த்தீங்க… இதை மட்டும் தாய் மாமன்களுக்கு விட்டு கொடுத்தே ஆவனும் இது எங்கள் உரிமை" 

"அது எல்லாம் முடியாது.. முடியாது" என்று நாகு ஆரம்பிக்க..

"ஏன் முடியாது… அவங்க எங்களுக்கும் தான் பேர பிள்ளைகள் உரிமை…" வல்லபர் கொதிக்க..

"எங்க குலவாரிசு .. எங்க வீட்டு முறை தான் எல்லாம்" ஆண் பிள்ளை பெற்றவர் என்ற நினைப்பில் அவர் மகன் அவருக்கு அப்பப்போ ஆப்பு வைப்பான் என்பதை மறந்து…

இவர்கள் வழக்கு இப்போதைக்கு முடியாது என்று விட்டு, விஷ்ணு தன் பிக் மாம்ஸ்யைப் பார்த்தான். அவரோ இவனை தான் பார்த்து கொண்டிருந்தார். அவருக்கு தான் தெரியுமே, இவர்கள் என்னதான் அடிச்சு சொன்னாலும், விஷ்ணு நினைத்தை தான் செய்வான் என்று.. அதனால் அவர் அஹிம்சையை கையெடுக்க, இவனுக்கோ அது பெரும் இம்சையாைய் போனது..

" சரி .. காது குத்து விசேஷம் நீங்களே ஏற்பாடு பண்ணுங்க.. ஆனா ஒரு ஆறு மாசம் கழித்து, நாங்க அதுக்கு முன்னால.. எங்க குல தெய்வ கோவில்ல முதமொட்டை போட்டுடுறோம்.. அப்புறம் நீங்க சொல்லும் போது அங்க வரோம்" என்றான் முடிவாக..

அதன் தொடர்ச்சி தான்... அதோ இதோ என்று.. இப்போது காது குத்து விசேஷமும் நல்ல படியாக நடக்க ஆரம்பித்தது..

மீண்டும் ஒரு சலசலப்பு.. மறுபடியுமா? என்று நாம் யோசிக்க… நாகு & வல்லபர் இல்லைபா…

இம்முறை ஈஸ்வர் பிரதர்ஸ் கிட்ட தான்.. பின்னே நான்கு மாமன்கள் இருக்க.. மருமக பிள்ளைகளோ மூவர்.. யாரு மடியில் யாரை வைத்து மொட்டை போட்டு காது குத்த என்று தான்.. 

ஸ்ஸ்ப்ப்ப்பா.. புதுசு புதுசா யோசிக்கீறாய்ங்களே…

அருண் சின்னவன் ஆகையால், மற்ற மூவர் மடியில் அமர வைத்து செய்யலாம் என்று உற்றார் உறவினர் கூடி முடிவு செய்ய… அருணோ கடும் கடுப்பில்.. 

சபை என்றும் பாராமல் விஷ்ணுவை தான் கடிந்தான்.. "நீங்க எனக்கு மட்டும் துரோகம் பண்ணி இருக்க கூடாது மாப்பிள்ளை…" புரியாமல் அனைவரும் விழிக்க..

"பின்ன… இந்த மூன்று தடியன்கள் மட்டும் மாப்பிள்ளை மடியில் வைச்சு மொட்டை காது என்று எல்லாம் பண்ணுறானுங்க… என்னை மட்டும் டீலுல விட்டுடீங்க… எல்லாம் உங்களால் தான்.. ஏன் இந்த ஓர வஞ்சனை? " என்று கத்தினான்.. 

என்னடா உன் லாஜிக்?! என்று அனைவரும் விழித்தனர்..

வழக்கம் போல .. அவனை தனியா கூட்டிட்டு போன விஷ்ணு, " என்னை வேணும்னா மடியில் வச்சுக்கோ மச்சி.. என் காது காலியாத்தான் இருக்கு .. இன்னையிலிருந்து உன்ன நாய் மாமனா தத்து எடுத்துகிறேன்.." விசேஷத்துக்கு இடையில் அதீதபாசத்தை பிடிச்சு வச்சு தொங்கி அழும்பு பண்ணும் அருண் மேலே உள்ள கடுப்பையெல்லாம் காட்டாது சிரிக்காது விஷ்ணு குவிக் சொலுஷன் சொல்ல..

"இடி தாங்கும் இதயம் ஆனா மடி தாங்காதே" அருண் நொடியில் தொடை எலும்புகளின் பாதுகாப்பை எண்ணி சுதாரிச்சு..

"மச்சான் வேற வழி சொல்லுங்க ப்ளீஸ்" என்று கொஞ்ச

"உங்களுக்காக மட்டும் மச்சான்.. அடுத்த சிறப்பு ரிலீஸாக பொண்ணை பெத்து தரேன்.. ஏக உரிமை உங்களுக்கு மட்டுமே..!! இவங்களுக்கு பாவம் ஆம்பள பசங்க தான்.. நீங்க தான் கெத்து" என்று முரட்டு மச்சானுக்கு சளைத்தவன் இல்லை என்று நிரூபித்தான் விஷ்ணு.. 

"மாப்பிள்ளை.. சூப்பர்… என் பொண்ணு உங்க பையனுக்கு தான்" அருண் குதுகலிக்க..

"பின்ன.. தரலன்ன.. தூக்கிடுவோம்ல.. குடும்பத்தோட" என்று கூறி விஷ்ணு சிரித்தான்..

"அடேய் .. மாப்பிள்ளை " என்று அலறினார்கள் அவன் மச்சான்ஸ்…

“’என்ன ஃபேமிலி டா நீங்க.. " என்றது கியூபிட்…

பேர பிள்ளைகளுக்கென தனி ஒரு பெரிய அறை எப்போதும் போல இப்போதும் தயார் செய்யப்பட்டது… ஈஸ்வர் பிரதர்ஸ் வாரிசுகளும், விஷ்ணு வாரிசுகளும் கூடவே தாத்தாமார்கள்… பாட்டிமார்கள்… 

யார் கூட யார் படுக்க? என்று அங்கே ஒரு பெரிய பட்டிமன்றம் நடக்க, இவர்களுக்கும் நரசிம்மரை நாட்டாமையாக வைத்து, இளைய ஜோடிகள் தப்பித்தனர்.. இவர்கள் குறும்புகளை தான் பார்த்து விட்டு தங்கள் ஆஸ்தான இடமான மொட்டை மாடிக்கு வந்தனர் விஷ்ணுவும்.. சௌமினியும்.. 

"மாமா… ஆனாலும் உங்க பெரிய பையன் கேடி "

"ஆமாடி.. இப்போ மட்டும் என் பையனா… அவன் செய்யுற அராத்து எல்லாம் உன்னை மாதிரியே.. கூடவே கூட்டு வேற… அதுவும் உன்னை மாதிரியே… "

"ஹ்ம்ம் ரொம்பத்தான்" என்று நொடித்தவளை… 

"மினி உனக்கு தெரியாம ஒரு வாக்கு கொடுத்திட்டேன்.. என் தியாகத்தில் நீயும் உதவணும் ப்ளீஸ் மா" விஷ்ணு பீடிகை போட..

என்னவோ ஏதோன்னு சீரிஸா கதை கேட்டவள்.. விஷ்ணு அதன் சாராம்சத்தை விளக்கியதும்.. அடுத்த நொடி தலையணையால் கடுமையாக தாக்கப்பட்டான் தேனி ரவுடிப்பெண்ணால்..

இதெல்லாம் எங்களுக்கு வலிக்குமா?!! ரௌத்ர மினியக்காவை அணைத்து மீசையால் கன்னத்தில் கோலம் போட்டவனை, கண்ணை உருட்டி முறைத்தாள் சௌமினி.. பின்னே இப்போது தான் இரட்டையர்கள் பிறந்து ஒரு வருடம் ஆறு மாதங்கள் ஆகிறது … விஷ்ணுக்கு பெண் பிள்ளை அவா வால் மினியை பேமிலி பிளானிங் பண்ணிக்கவிடவேயில்லை , மருத்துவர்கள் குடும்பத்தார் வற்புறுத்தியும்.. இப்போ கிட்டே வர அருண் ஒரு சாக்கு.. ஹுக்கும்.. போயா போ..

மாடி திட்டில் அவனை தள்ளி விட்டு சென்றவளை இவன் சேலை முந்தியை பிடித்து இழுக்க, கால் தடுமாறி அவனை நோக்கி சென்றவள் , விழுந்து இளைப்பாறி நின்றது அவனின் இதழில். கல்யாணத்துக்கு முன்னவே கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் சிக்ஸர் அடிச்சவன்.. இப்போ சும்மா விடுவானா?!! மெல்ல பட்டதை அழுத்தமான இதழ் ஒற்றலாக்கிக்கொண்டான்.

வாய்ப்பு வலுக்க வந்தால் முழுதாக பயன்படுத்திக்கணும்.

நம்ம நியூட்டன் மூன்றாம் விதி..

அப்படியா??!! புதுசா இருக்கே??!!

முத்தத்தை கடந்த பின் மோகத்தில் கலந்து விஷ்ணுவின் காதலும் ஆழி போலவே அவனின் மினியை அதில் மூழ்கி முத்தெடுக்க வைக்க.. சரியாக பத்தாம் மாதம் கை மேல் பலன் ரோஜா கூட்டமாய் பூத்தாற் போல் விஷ்ணுவின் மகள் பிறந்தாள்..

நாலு ட்ரைனில் ஊரின் மொத்த குடி மக்களும் சுந்தர தேசத்துக்கு இளவரசியை காண வந்திருக்க..

"பெண் தேவதை எனக்கே எனக்கு" ஹாஸ்பிட்டலில் ஓல்ட் அண்ட் நியூ மச்சான்ஸ் அடி தடி..

அருண் கையில் வாளெடுக்கா குறைதான்.. "நானே மருமகளுக்கு ஏக போக சொந்தக்காரன் .. மச்சான் கிட்டே கேட்டுக்கோங்க.." பிறந்த பிள்ளையை மடியில் வச்சுக்கிட்டு அட்டகாசம் செய்ய.. மற்ற மாமன்கள் முறைப்புடன்...

இன்னமும் இவங்க அலும்பு தாங்கலையே அடங்கமாட்டுராங்களே.. விஷ்ணுவுக்கு இந்த பாச உரிமை சண்டைகள் எத்தனை வருடங்கள் நீளுமோ? மலைத்து நிற்க..

 

ஹாய் மை ஸ்வீட் ஹீரோ விஷ்ணு பிரசாத்..

கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் அல்லவா? போகும் …போகும் …ஜென்ம ஜென்மமா||

வாழ்க!! சர்வ வளத்துடன் !!!

என்று சொல்லிக்கொண்டு விடை பெறும் ..

ஜியா ஜானவி


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top