30
காலையில் ரிஷி காஃபி போட்டு அதை ருசி பார்த்து, ருசி பார்த்து தயார் செய்து கொண்டிக்கும் போதே, விஷ்ணு தன் லேப்டாபில் அதை பார்த்து சிரிக்க தொடங்க… சிறிது நேரத்தில் தரணியின் சமையலை பார்த்து இன்னும் இன்னும் சிரிக்க, அவை அனைத்தும் மாடி ஹாலில் அமர்ந்த வண்ணமே, இவனின் சிரிப்பை பார்த்து என்ன தனியாக சிரிக்கிறான் என யோசித்து, சௌமினி அவன் பின்னே வந்து நின்று என்ன பார்க்கிறான் என்று பார்க்க, தங்கள் அண்ணன்களின் சமையலை தான் இவன் பார்த்துக்கொண்டு சிரிக்கிறான் என புரிந்து, ஜிவ்வு என்று கோபம் ஏற, பின்னிருந்து அவனின் மீசையை இழுக்க, முதுகில் முட்டிய அவளின் மென்மைகளில் அவன் மனம் சிக்கினாலும், மாடி ஹாலில் இருப்பதனால், அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. அவஸ்தையோடு நெளிய, அவனின் அவஸ்தைகள் எல்லாம் அவள் அறியவில்லை, அண்ணன்களின் சாப்பாட்டு பெரிய பிரச்சனையா தெரிய, ஆத்திரம் கொண்டு அவனின் மீசையை இழுத்து அதை காண்பிக்க, அவனோ உணர்ச்சிகளின் பிடியில்..
"விடுடி… விடுடு… " அவன் அலற..
" எங்க அண்ணன்கள் அங்க கஷ்டபடுறாங்க… நீங்க அவகள பார்த்து சிரிக்கிறீங்க" என்று குறைப்பட..
பின் பக்கம் கை தூக்கி, அவளை சட்டென்று முன்னுக்கு இழுக்க, அவளோ அதை எதிர் பார்க்காமல், அவன் மீதே விழ, இறுக அவளை அணைத்து விழா வண்ணம் பிடித்து கொண்டே, "ஏண்டி… உங்க அண்ணங்கள ஒன்னும் நான் கொடுமை படுத்தல.. "
அவள் கோபம் கொண்டு, முகம் திருப்ப, அவன் மீசை கொண்டு அவளை குறுகுறுப்பூட்டி அவளை சகஜ நிலைக்கு திருப்ப முனைந்தான். அவளுக்கு இன்னும் கோபம் ஏறி, அவன் முகம் நோக்கி குனிய, அவனோ மந்தகாச சிரிப்பில், சௌமினியோ அவனின் கன்னத்தில் இதழ் பதிக்க, அவன் கிறக்கமாக கண்களை மூட, தருணம் பார்த்து நறுக்கென்று கடித்து விட்டாள்.. " அடியேய்" அலறி.. அவன் வலியில் துள்ளி, அவளை விடுவிக்க.. லப் டாப்பை எடுத்து கொண்டு, ரோஹிணியிடம் ஓடி விட்டாள்.
ரோஹிணியும் முதலில் கோபத்துடன் பார்த்தவர், பின் சிவாவின் பேச்சில் அவரும் சிரிக்க, அருகில் இருந்த தர்சினியும், வாசவியும் சேர்ந்து சிரிக்க இப்போது அனைவரையும் சௌமினி முறைத்தாள்.
விஷ்ணு அதை பிடிங்கி, தொலைகாட்சியோடு தொடர்பு கொடுக்க, இப்போது அருண் பேந்த பேந்த முழித்து, சிவாவை அடிப்பது வர, அனைவரும் அதிர்ச்சியோடு பார்க்க சண்டையோ என்று, ஆனால் அப்படியில்லை என்று அவர்கள் காண்பிக்க, இவர்களும் ஆசுவாசதோடு சிரித்தனர்..
நாகு, " என்ன நாணா இது எல்லாம்.. பாவம் இப்படி எல்லாம் செய்யலாமா… " என்று கேட்ட.. சிரித்தாலும் மல்லி மற்றும் சரசு மனதிலும் அதே எண்ணம் தான்.
" நாணா… அது எல்லாம் ஒன்னும் இல்லை.. நேத்து மதியம் தலை ஒண்ணு ஒண்ணுக்கும் தலைப்பாகட்டி பிரியாணியும் மட்டன் வருவல், எல்லாம் வாங்கி கொடுத்து, நல்லா தான் கவனிச்சேன். இன்னைக்கு தான் இந்த மாதிரி கொண்டு வந்தேன், அதுக்குள்ள இவ பார்த்திட்டா… ரொம்ப எல்லாம் பவா படாதீங்க, அவங்களும் நம்மை இப்படி தான் குடும்பத்தோட தூக்கிறதுக்கு பிளான் எல்லாம் போட்டாங்க.. நானாவது அவங்களை மட்டும் தான், அவங்க தூக்கி இருந்த அம்மாவையும் சேர்த்து தான்.." இப்போது மல்லி மற்றும் சரசு தலை தானாக தலை கவிழ்ந்தது, அவர்கள் கணவனை பற்றி அறிந்தது தானே..
" வேணும்னா பாருங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில அவங்களே, பேசி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுங்க.. இரண்டு நாளாக பிக் மாம்ஸ் முகம் ஒரே தின்கிங் தான்"
இப்போது எல்லோரும் முகத்திலும் பல்ப் போட்ட பிரகாசம்... அதற்குள் ரோஹிணி அவர்களுக்கு சாப்பாடு செய்து எடுத்து வந்து, அவன் கையிலே கொடுத்து, " முதல் கொண்டு போய் கொடுத்து, அவர்களை சாப்பிட சொல்லு.. அவங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னா கூட பரவாயில்லை… இப்படி எல்லாம் நாம செய்ய வேண்டாம்.. பாவம் வயசானவங்க வேற" சௌமினி அத்தையை கட்டி கொண்டு கண்கள் கலங்கி விட்டாள்.
விஷ்ணு ஒரு பெரு மூச்சோடு கிளம்ப, சௌமினி நானும் வரேன் என்று ஒட்டி கொள்ள, அவளை முறைத்தான். அவளோ கண்களால் அவனை கெஞ்ச… தலையில் அடித்து கொண்டு வாடி என்று கூறி முன்னே சென்றான்.. இவன் கிளம்பவும், நரசிம்மர் எல்லோரிடமும் அபிப்ராயம் கேட்கவும் சரியாக இருக்க, ஆனந்த அதிர்ச்சி அனைவரிடமும்…
விஷ்ணு சொல்லி முடிக்கவும்.. சிவா.. " போச்சு.. போச்சு… இதை சொல்லியே என் பொண்டாட்டி இனி என்னைய ஓட்டுவாளே.." என்று புலம்ப..
சம்மதமில்லாமல் ரிஷி சிரிக்க, எல்லோரும் அவனை புரியாமல் பார்த்தனர் .. " இல்ல… பரிமாறுன உனக்கே இப்படினா.. சாப்பாடு செஞ்ச தரணி அண்ணா நிலமைய நினைச்சேன் சிரிப்பு வந்திடீச்சு…" என்று மேலும் சிரித்தான்..
தரணியோ அய்யோ என்ற மனநிலை முகத்தில்… விஷ்ணுவோ " காலையில காபி போட்டது கூட… எல்லோருக்கும் தெரியும்" என்றான் எல்லோருமில் அழுத்தம் கொடுத்து.. ரிஷிக்கு புரியாத என்ன, விஷ்ணு யாரை குறிப்பிடுகிறான் என்று.. அதனால் இப்போ அவனும் கப் சிப் சிப் சப்…
அனைவரும் உண்டு முடிக்கவும், மீண்டும் ஒரு அசாத்திய அமைதி அனைவரிடமும், ரிஷியும் விஷ்ணுவும் கூட ஏதும் காட்டிக்கொள்ளவில்லை. சௌமினி மட்டும் அனைவரையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தாள். இவர்கள் சகஜ நிலை திரும்ப அய்யனாரிடம் வேண்டுதல் வைத்தபடி..
அனைவரையும் ஒரு முறை பார்த்த விஷ்ணு , சௌமினியை பார்க்க, அவளின் வேண்டுதலை சரியாக படித்தவன், ஒரு புன் முறுவலுடன் முதல் அடியை அவனே எடுத்து வைத்தான்.
நரசிம்மரை நோக்கி சென்றவன், " பிக் மாம்ஸ், வீட்டுக்கு போகலாம் வாங்க"
அவர் அமைதியாக இருக்க, ஒரு பெரு மூச்சை விட்டவன், " ரொம்ப எல்லாம் முறுக்கீகாதீங்க.. மாம்ஸ்.. உங்க ரீல் அந்து போய் ரொம்ப நேரமாச்சு" என்று அருகில் சென்று அவர் முழங்கையோடு தன் கையை சேர்த்து கோர்த்து கொண்டான்.
ஈஸ்வர் பிரதர்ஸ் பயங்கர அதிச்சியில், நாட்டாமையிடம் இவ்வளோ நெருக்கம் சௌமினியை தவிர யாரும் இப்படி இருந்ததில்லை..
அவர் அப்போதும் அசைந்தார் இல்லை, அவனும் அவன் அலப்பறைகளை விட்டானில்லை..
" மாம்ஸ்… நான் செய்ததுக்கு நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்பேன் எல்லாம் எதிர் பார்க்காதீங்க.. நிச்சியமாக மாட்டேன்.. உங்களை மரியாதை குறைவாக நடத்தலை, அசிங்கமா பேசலை, அடித்து துன்புறுத்தல…சோ நோ மன்னிப்பு.. நான் தூக்கலைனா நீங்க செஞ்சி இருப்பீங்க.. அது இன்னும் மன கஷ்டத்தையும் பிரச்சனையும் தான் நம் இரு குடும்பத்துக்கும் கொடுத்திருக்கும் அதான்.. உங்களுக்கு மட்டும் இல்லை, எனக்கும் மினி சந்தோசம் தான் முக்கியம், என்னால் அவளை எங்கையும் விட்டு கொடுக்க முடியாது, விட்டுட்டு போகவும் முடியாது… " என்ற விஷ்ணுவின் பேச்சை கேட்டுகோங்க என்று மற்றவர்களை பார்த்து கண்களால் கூற, அவர்களும் சிரிப்புடன் தங்கள் தலைகளை ஆட்டி தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர்.
அடுத்த பத்து நிமிடங்களில் ரோஹிணியும், நாகுவும் வந்து இவர்களை முறைப்படி தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
எதிர் கொண்டு அழைத்த தங்களது வீட்டு பெண்களின் முக மலர்ச்சியே சொன்னது, அவர்கள் இங்கே சந்தோசமாக இருந்தார்கள் என்று.
" அப்போ… கல்யாணம் எப்போ வைச்சிக்கலாம் சம்மந்தி.." என்று நாகு ஆரம்பிக்க…
" ஊருல.. எங்களுக்கும் நிறைய கல்யாண வேலை எல்லாம் இருக்கு.. எப்படியும் ஒரு மாதம் வேணும்… அதற்கு எல்லாம்" என்று நரசிம்மர் இழுக்க…
" பின்ன.. எங்க வீட்டு பெண் கல்யாணம்… ஊரே மெச்ச செய்ய வேணாம்.." வல்லவர் துணை பேச
" என்னது … இன்னும் ஒரு மாசமா" விஷ்ணுவின் மைண்ட் வாய்ஸ், சரியாக யூகித்த ரிஷி நமட்டு சிரிப்பு உடன் அவனை பார்த்தான்..
நாகுவும், ரோஹிணியும் ஒன்றும் பேச முடியாமல் தங்கள் மகனை பார்க்க, அவனோ தன் அம்மாவிற்கு கோவில் என கை காட்டிவிட்டு சமத்தாய் நின்று கொண்டான்.
ரோஹிணியும் சரியாக கண்டு கொண்டு, " அது.. அண்ணே.. இவன் கல்யாணம் நல்லா நடக்கணும்ன்னு இங்க கோவில்ல திருக்கல்யாணம் செய்யுறதுன்னு வேண்டிகிட்டேன்… அதோட சேர்த்து இவன் கல்யாணம் பண்றதா…. அதான்…"
" அதெப்படி… எங்க ஜன கட்டு எல்லாம் ஜாஸ்தி, அவ்வளோ பேரையும் இங்கன கூட்டிகிட்டு எல்லாம் வர போக முடியாது… எங்க ஊருலேயே கல்யாணம் வைச்சுகிறது தான் சரியா வரும்" என்றார் வல்லவர் அவர் பங்குக்கு...
" அப்போ… எங்களுக்கு மட்டும் கொஞ்சமா என்ன… ஒரு ஃபோன் போட்டா… ஒரு ஊரே வரும்" இப்போது நாகு சிலிர்த்து எழ…
" எத்தனை பேர் வந்தாலும்.. அவங்களை நல்லபடியா கவனிக்க எங்களால் முடியும்" மீண்டும் வல்லபர்…
" அப்போ.. எங்களால் முடியாதுன்னு சொல்லறீங்களா" மீண்டும் நாகு..
இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டே போக, நரசிம்மர் தம்பியை கட்டுப்படுத்தலாம்.. எப்படி நாகுவை அடக்க என்று பார்க்க..
அனைவரும் அச்சோ.. என்ன டா இது புது குழப்பம் என்று பார்த்தனர்..
" நிருத்திறீங்களா இரண்டு பேரும்" என்ற விஷ்ணு அதட்டலில் தான் இருவரும் பேச்சை நிறுத்தினர்.
" இப்போ என்ன.. இரண்டு பேரும் அவங்கவங்க ஜன கட்டு எல்லாமும், பெருமை காட்டணுமா.." என்று அழுத்தமாக கேட்க.. இருவரும் இப்போது என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தபடி…
" கல்யாணம்.. பாலாஜி கோவில்ல தான்" என்றவுடன் நாகு கர்வமாக பார்க்க, வல்லபர் முறைப்புடன்..
" ஆனா.. சிம்பிளா தான் நடக்கும் எங்க கல்யாணம்.. இரண்டு வீட்டு ஆட்கள் மட்டும் தான்.." நாகு இடை புக, தன் கரம் நீட்டி தடுத்தவன், " நான் இன்னும் பேசி முடிக்கல… என்று விட்டு தொடர்ந்தான்.
" கல்யாணம் பாலாஜி கோவில்ல தான்.. ரிசப்ஷன் சென்னையில ஒண்ணும், தேனி ஒண்ணும் உங்க இஷ்டப்படி நடத்திக்கோங்க… இதுல எந்த மாற்றமும் இல்லை.. கல்யாணம் தேதி.. ரொம்ப எல்லாம் இழுக்காதீங்க" என்றான் முடிவாய்..
இரு வீட்டாருக்கும் விஷ்ணு பேசியதில் சற்று சங்கடம் தான்.. நம் பிள்ளைகளுக்கு நாம் விரும்பும் படி திருமணம் நடக்கவில்லை என.. ஆனா இதை கொண்டு மேலும் மேலும் பிரச்சனை வளர்க்க விருப்பமில்லை..
நல்ல தேதி இன்னும் பத்து நாட்களில் பார்க்கப்பட்டு, அடுத்த இரண்டு நாட்களில் தேனியில் ரிசப்ஷன் என்றும், அது முடிந்து ஒரு வாரத்தில் சென்னையில் ரிசப்ஷன் என்று ஏக மனதாய் நாட்டாமை முன்னிலையில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு முடிக்கப்பட்டது.. பின், தட புடலான விருந்து முடிந்து, சௌமினி குடும்பம் தேனி நோக்கி பயன்பட்டது , ஆம்னி பஸ்ஸில் தான்..
கோவிலில் கல்யாணம் என்பதால், பெரிதாக ஒன்றும் கல்யாண வேலை எல்லாம் இல்லை விஷ்ணு குடும்த்தாருக்கு.. பத்திரிக்கையும் கொஞ்சம் தான், அழைப்பும் கொஞ்சம் தான்.. எனவே இவனுக்கு தான் பெரிய நெடிய நாட்களாக இருத்து அந்த பத்து நாட்களும்..
கல்யாண இருநாள் என்கிற நிலையில் விஷ்ணு குடும்பம் தேனி நோக்கி சென்றனர், முதல் நாள் இரவு அங்கே தங்கி விட்டு, மறுநாள் காலையிலே இவர்களுக்கு அவர்கள் முறைப்படி பரிசம் போட பட்டது. தாமரை நிற பட்டில், செந்தாமரை என வந்தவளை தான் விஷ்ணு விழி எடுக்காமல் பார்க்க, அருகே இருந்த ரிஷயோ மாப்பிள்ளை என்று கூறி அவன் கையில் கைக்குட்டையை வைத்து விட்டு நகர்ந்தான்.
அதை கூட வெட்க சிரிப்புடன் வாங்கியவனை பார்த்து ரிஷி தான் முழித்தான்... அவன் பார்வை சௌமினி அருகில் நீல பட்டில் மின்னிய சுஜியை தீண்டியது.... அவளோ இவனை திரும்பி கூட பார்க்கவில்லை. சௌமினிக்கு விசயம் விஷ்ணு மூலம் தெரிந்தாலும், அவளும் சொல்லவில்லை.. அண்ணனே முட்டி மோதி வரட்டும் அப்போது தான் சுஜியின் இவ்வளோ நாள் காத்திருப்புக்கு பலன் என்று விட்டாலும் அவர்களை கவனிக்க தவறவில்லை.
பரிசம் முடிந்து, மதிய விருந்து களை கட்டி கொண்டிருந்தது.. ஈஸ்வர் பிரதர்ஸ் உறவுகளை வரவேற்கவும், அவர்களை கவனிக்கவும், பந்தியில் சரியா நடக்கிறதா என பார்க்கவும், விருந்துண்டு செல்பவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கவும் சுற்றி சுழன்று கொண்டிருந்தார்கள் வாடாத புன்னகையுடன்.
மாலை பெண் அழைப்பு, மரகதம் நிற பட்டில் மிளிர்ந்தாள் சௌமினி, கூடவே பெண் தோழியாக சுஜி..
வீட்டில் சொல்லி கொண்டு அவளை வழி அனுப்பி வைக்க அனைவரும் ஒரு ரவுண்ட் கண்ணீரில் கரைந்திருந்தனர்.. அடுத்த ரவுண்ட் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தெரிய, ரோஹிணியிடம் விஷ்ணு ஜாடை காட்ட, அவர் சென்று பெண்ணை தன்னுடன் அழைத்து கொண்டார்.
சௌமினி, சுஜி, சிவா அவன் மனைவி தர்ஷினி ஒரு காரிலும், விஷ்ணு மற்றும் அவன் பெற்றோர் ஒரு காரிலும் ஏறி கொள்ள, மற்றவர்கள் வழக்கம் போல ஆம்னி பஸ்ஸில்.. ஒன்றல்ல.. மூன்று பஸ் இம்முறை..
பெண்ணை முறையாக அழைத்து, மணமக்களை வைத்து அவர்களின் ஆடைகள் புது தாலி என்று பூஜை செய்யப்பட்டது.. வழக்கம்போல விஷ்ணு பார்வையாளராக நிற்க.. சௌமினி தன் முழங்கையால் அவன் இடையை ஒரு இடி இடித்து , கண்களால் ஒரு மிரட்டு மிரட்டி கை குவித்து சாமி கும்பிட சொல்ல, அவனோ ஒரு அழுத்த பார்வை பார்த்தான். அவளோ விடா கண்டியாக மீண்டும் முறைத்து பார்க்க, ஒரு ம்ப்ச் உடன் கை குவித்து வைத்தான் விஷ்ணு.. கும்பிட்டனா இல்லையா என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.. தீபம் காட்டி ஆரத்தி எடுத்து வந்த ரோஹிணி விஷ்ணுவை பார்த்து வெளிப்படையாக அதிர, அவனோ ம்மா… என்றான் சலுகையாக.. இவனை அறிந்ததால், மெச்சுதலாக மருமகளை பார்த்து கும்குமம் இட்டு விட, அன்றைய நினைவில் இவர்களுக்குள் ஒரு ரகிசிய சிரிப்பு..
இரவு விருந்துக்கு பின் நரசிம்மர் குடும்பம், அவர்கள் ஏற்கனவே தங்கி இருந்த வீட்டிலேயே தங்க வைக்க பட ,அவர்கள் தேவையை பார்க்க அதே ரமணன் ஆட்கள் தான்.. கொஞ்சம் ஜெர்க் ஆனாலும் விஷ்ணுவின் குறும்பை நினைத்து சிரிப்புடன் கடந்து விட்டனர்..
சூரியன் தன் கதிர்களை பூமிக்கு அனுப்ப தயாராகி கொண்டிருக்கும் அழகிய தருணம்.. இளம் மஞ்சள் கதிர்கள் சூழ ரம்மியமான காலை பொழுது, இள மஞ்சள் நிற பட்டில் அழகு ஓவியமாக விஷ்ணு எதிரில் வந்து அமர்ந்தாள் சௌமினி.. அவர்கள் முறையில் தலை பாகையுடன் விஷ்ணு நெற்றி பட்டம் கட்டி கம்பீரமாக அமர்ந்து இருந்தான். ஐயரின் மாங்கல்யம் தானம் பண்ணுகோ என்று சொல்லில், மங்கள வாத்தியங்கள் முழங்க, இருவரின் பெற்றோர்கள், ஊற்றாரின் ஆசீர்வாதங்களோடு மங்கள நாணை பூட்டி, தன் மினியை தன் சகதர்மிணியாய் ஆக்கி கொண்டான் விஷ்ணு.. கல்யாணத்தில் இரு விட்டார் சங்கியங்களும் இருக்கும் படி பார்த்து கொண்டான் அவன். இரு வீட்டாருக்கும் வெகு திருப்தியாய் இனிதே முடிந்தது அவர்கள் திருமணம்.
கண்கள் கலங்க.. இரு பெற்றோரிடமும் ஆசிர்வாதங்கள் பெற்று கொண்டனர்.. மச்சான்கள் கட்டி அணைத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர் .. மாப்பிள்ளை தோழனாக விஷ்ணு கூடவே சுத்தி கொண்டு இருந்தான் ரிஷி.. காரணம் மணப்பெண் தோழி சுஜி அல்லவா…
விருந்து மாப்பிள்ளை வீட்டிலேயே பெரிய ஹோட்டலில் ஆர்டர் செய்து வரவழைத்து இருக்க.. இனிமையாக கழிந்தது நேரம்..
இரவு சாங்கியதிற்கு, அனைத்து ஏற்பாடும் நடை பெற்று கொண்டிருக்க, திரும்பவும் அங்கே ஒரு குழப்பம்.. அதுவரை சிவா, ரிஷி உடன் பேசி கொண்டிருந்த விஷ்ணுவும் என்ன என்று பார்க்க செல்ல, வழக்கம் போல நாகுவும் வல்லபரும் தான்.. யார் வீட்டில் முதல் இரவு ஏற்பாடு செய்வது என்று விவாதம்.. என்னடா விஷ்ணுவிற்கு வந்த சோதனை..
ரிஷி விஷ்ணுவின் முகத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க, " மச்சான் ரொம்ப சிரிக்க வேணாம்.. இப்போ எனக்கு.. நாளைக்கு உனக்கு யா" என்றான் கடுப்பாக… அதற்கு மேல் அவன் ஏன் வாயை திறக்க போகிறான்..
இம்முறை பெண்கள் தான் தலையிட்டு, இருவரையும் பிரித்து, இதற்கு மேல் அவர்களை பிரித்து வைத்திருக்க வேண்டாம் என்று கொஞ்சம் கடுமையாகவே தன் கணவன்மார்களிடம் பேசினர். பெண்ணை கூப்பிட்டு அலங்காரம் செய்யுங்க அண்ணி என்று ரோஹிணி மகனை காண சென்று விட்டார்.
மல்லி சரசு சௌமினி இருந்த அறை நோக்கி சென்று பார்க்க, அங்கே அவள் இல்லை.. அன்று போல மாடியில் இருப்பார்கள் என்று நினைத்து ரோஹிணியிடம் செல்ல சென்றார்கள். அவரும் விஷ்ணுவை காணாமல் திரும்பி வர, " அண்ணி சௌமினி ரூம்ல இல்ல.. மேல மாடியில இருக்காங்களா பாருங்க.." என்க.. அவரும் சென்று பார்க்க.. அங்கேயும் இல்லை இருவரும்.. அன்று சொன்னது போல, அவன் ரூம்க்கு கூட்டி போட்டானா என்று அவன் ரூமில் தேட அங்கேயும் இல்லை.. பதறி போய் அவர் கணவரிடம் சொல்ல, சற்று நேரத்தில் வீடே அல்லோலகலப்பட்டது இவர்களை காணாமல்.. நரசிம்மர் ஃபோன் அடிக்க , விஷ்ணு தான்…" பிக் மாம்ஸ்… என்ன எங்களை தேடிக்கிட்டு இருக்கீங்களா… வெரி சாரி.. நாங்க வீட்டுலேயே இல்ல… உங்க விவாதம் எல்லாம் இப்போ முடியுற மாதிரி இல்லை , அதான் என் பொண்டாட்டிய நான் இப்போ தூக்கிட்டேன்.. எல்லோருக்கும் பை..இரண்டு நாளுக்கு நோ கால்ஸ்.. நோ மெசேஜ்… ரிசப்ஷன் முன்ன வந்திடுவோம்" என்று
போனை அணைக்க.. அனைவரும் இப்போ வாய் பிளந்தபடி….