23
ரோசைய்யா ரெட்டி இப்போ வெறும் வெட்டியாகி விட்டார் விஷ்ணுவின் அதிரடியால்.. கல்யாண மண்டபத்தில் ரமணன் மற்றும் சைதன்யாவை வழி அனுப்பி வைக்க வந்தனர் விஷ்ணு குடும்பத்தார்.
ரமணன் கை பிடித்து குலுக்கி, " ரமணா.. நீ நல்ல விசுவாசி.. ஆனால் அந்த விசுவாசம் சரியான ஆள் கிட்ட இல்லை.. நீ அவனை மறந்திடு.. இந்த ஊரும் வேண்டாம்.. பல்லு பிடுங்கன பாம்பு மாதிரி தான் ஆந்த ரோசைய்யா.. ஆனாலும் குடைச்சல் கொடுத்து கிட்டே இருப்பான். நீயும் சைதன்யாவும் சந்தோசமா வாழனும். உன் மேல அளவில்லா காதலோட, பெற்றவர்கள் வேணாம்னு வந்து இருக்கா… நீ அவளை நல்லா பார்த்துக்கணும்.. அண்ணன் ஸ்தானத்தில் இருந்து தான் அவளுக்கு நான் எல்லாம் வாங்கினேன்.. உனக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும், என்னை தயங்காம கண்டாக்ட் பண்ணு…" என்றான் விஷ்ணு..
ரமணனால் பதில் சொல்ல முடியவில்லை, விஷ்ணுனை அணைத்து, " ரொம்ப ரொம்ப நன்றி சர்.. எனக்கு எல்லாம் கல்யாணம் நடக்கிறதே பெருசு.. அதுவும் பாப்பா மாதிரி பொண்ணு.. சான்ஸ் இல்ல… நீங்க சொன்னதுக்காக மட்டும் இல்லை.. என் மேல பாப்பா வைச்ச நம்பிக்கை, அன்புக்காகவும் கண்டிப்பா நான் நல்ல பார்த்துகுவேன் சர்.. எப்போவும் உங்களுக்கு இங்க ஒரு நண்பன் இருக்கானு நியாபகம் வைச்சு கோங்க.. அப்புறம் நான் வேற ஊரு எல்லாம் போக மாட்டேன்.. இதே ஊரில் அவங்க முன்ன நல்ல வாழ்ந்து காட்டுவேன் என் பா.. இல்லைல்ல பொண்டாட்டி கூட…"
இப்போது இடம் பொருள் அனைத்தையும் மறந்து சந்தோச மிகுதியில், ரமணனை அணைத்து கொண்டாள் சைதன்யா.. முதன் முதல் பெண் ஸ்பரிசம், பலவித ஹார்மன்ககள் எக்கு தப்பாய் சுரந்தது ரமணனுக்கு..
சிரிப்புடன் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு, தன் காரில் சொந்த ஊரில் உள்ள அவர்கள் வீட்டுக்கு வந்தனர் விஷ்ணுவும் அவன் பெற்றோர்களும்..
அப்போது தான் அணைத்து வைத்து இருந்த ஃபோனை உயிர்ப்பிக்க , எண்ணிலடங்கா மிஸ்ட் கால் மற்றும் மெசேஜ் வந்து குவிந்து இருந்தது.. மெசேஜ் வரும் சத்தமமே ஏதோ கால் வருவது போலவே இசைத்தது.. அவ்வளவும் அவனின் மினியிடமிருந்து… கால்களின் எண்ணிக்கை பார்த்ததுமே என்னவா இருக்கும் இவ்வளோ வந்திருக்கு என்று யோசனையுடன் பார்த்திருந்தான்..
நாகு மகன் அருகில் வந்து, " மருமகளா காட்டு நாணா.. " என்றார். அவனும் சிரிப்புனுடன் அன்று வெளியில் சென்ற போது இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோவை காண்பித்தான்.
சௌமினியைய் பார்த்து " அழகா இருக்கா… தன் மனைவியிடம் காண்பித்து, " ரோஹி... பாரு மருமக அழகா இருக்கா.." என்று மனைவி இன்னும் சௌமினியை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் காண்பிக்க.. அவரோ " அதெல்லாம் பார்த்தாச்சு.. பார்த்தாச்சு… கோவில்ல வைச்சு.." என்று நாகுவிற்கு திருப்பி கொடுக்க.. அவர் "உனக்கு முன்னாடியே தெரியுமா… கல்யாணம் நடந்ததும்மா… " என்றார் அதிர்ச்சியுடன் , தன் குடும்பம் தன்னை ஒதுக்கி விட்டனரா என்ற பரிதவிப்புடன்..
" அப்பா.. கல்யாணம் எல்லாம் நடக்கல.. அங்க பொய் சொன்னேன்… அம்மா எங்களை பார்த்ததே ஆக்ஸிடென்ட் மாதிரி தான்" என்று அன்று நடந்ததை கூற… நாகு விழுந்து விழுந்து சிரித்தார் சௌமினி விஷ்ணுவை மாட்டிவிட்டதை நினைத்து… மகனோ தந்தையை முறைத்தவாறு அமர்ந்து இருந்தான்.. ," நாணா.. உங்க அம்மாவுக்கு ஏன், சௌமியை பிடித்து விட்டது தெரியுமா..??" என்று வினவ, மகனோ தெரியாது என்று தலை அசைக்க.. ரோஹிணி அமைதியாக பார்த்து கொண்டிருந்தார்.
பின் ஒரு நமட்டு சிரிப்புடன், " ஏன்னா , சௌமி ரோஹிணி வெர்சன் 2 .. இனி நீயும் என்னை போல, பேப்பருக்குள் அதிக நேரம் தலை கொடுக்க வேண்டி இருக்கும்" என்று கூற, மகன் முகத்தில் வெட்கம் கலந்த அசட்டு சிரிப்பு.. தொப்பு என்ற சத்தத்தில் இருவரும் திரும்பி பார்க்க.. " கையில் இருந்த பேக்கை தூக்கி எறிந்து விட்டு ரோஹிணி கோபத்துடன் செல்ல.. " ரோஹி ரோஹிம்மா… என்று மனைவியை சமாதானப்படுத்த பின் தொடர்ந்தார் நாகு..
அறைக்குள் வந்து, தன்னவள் அனுப்பிய மெசேஜ் படிக்க ஆரம்பித்தவன் உச்ச கட்ட அதிர்ச்சியில்…. நானே பல பேருக்கு அதிர்ச்சி கொடுத்தா.. இவ எனக்கே கொடுக்கிறா… என்றவன் அவசர அவசரமாக பெற்றோரை அழைத்து தான் தேனி போவதாக சொன்னவன்.. அவர்களை சென்னை போக பணித்து விட்டு, தான் கூப்பிடும் போது தேனிக்கு வாங்க என்று விட்டு, பாய்ந்தோடி காருக்குள் புகுந்து, விமான நிலையம் நோக்கி பறந்தான்…
" மாமா.. என்னைய எங்க ஊருக்கு கூட்டி வந்துட்டாங்க..…ஃபோன் எடுங்க... முக்கியமா பேசணும்" என்று கொஞ்சம் பதட்டமாக பேசியவள், அடுத்த அடுத்த மெசேஜ்களில், இவன் போனை எடுக்க வில்லை என்ற கோபத்திலும் ஆற்றாமையிலும் , அழுது திட்டி போனை எடுக்க சொல்லியும்… கடைசியாக " டேய் மாமா.. ஒழுங்கா ஃபோன் எடுக்க மாட்டியா இல்லையா நீ… ஒருத்தி எவ்வளோ பிரச்சனையில் இருக்கேனு தெரியுமா உனக்கு.. என்னை பொண்டாட்டி பொண்டாட்டினு சொல்லுவ, என்னை இப்போ வேற ஒருத்தனுக்கு பொண்டாட்டியாக்க எங்க வீட்டுல வேலை செம்ம ஜோரா நடந்துக்கிட்டு இருக்கு.. ஒழுங்கா வந்து உன் பொண்டாட்டிய கூப்பிட்டு போற வழிய பாரு" என்று கோபமாக பேசி அனுப்பி இருந்தாள். இதை கேட்டு விட்டு தான், தேனி நோக்கி விஷ்ணு பறந்து கொண்டிருக்கிறான்..
அன்று, சௌமினி வீட்டுக்குள் நுழையும் போதே சரசு பிடி பிடியென்று பிடித்து விட்டார்." ஏண்டி வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு ஊரு சுத்திக்கிட்டு இருந்திருக்க அதுவும் கண்டவனோட… உன்னைய …" என்று ஆரம்பித்தவர் அவள் இடையிட்டும் நிறுத்தவே இல்லை.. இரண்டு மூன்று முறை முயன்று விட்டு, அமைதியாகி விட்டாள்… நீ பேசி முடி என்ற பாவனையில்…
" இவ்வளோ பேசிறேனே கொஞ்சமாச்சும் பதில் சொல்லுறாளா பாரு.. திமிரு திமிரு உடம்பு முழுக்க திமிரு… "என்று அடுத்த ரவுண்ட் ஆரம்பித்தார்..
இவள் பாவமாக தன் வீட்டாரை பார்க்க, அதற்குள் விசயம் என்ன வென்று அங்கே வல்லபருக்கு மற்றவர்களுக்கும் நரசிம்மர் சொன்னவுடன் தான் அனைவருக்கும் சற்று ஆசுவாசம்.. இப்போது பெண் திட்டு வாங்குவதை பார்க்க முடியாமல், நரசிம்மர் இடையீட்டு, " சரசு… கொஞ்சம் நிப்பாட்டு.. விசயம் என்னனு தெரிஞ்சுகிட்டு பேசு , மல்லி அங்க என்ன அவ வாயை பார்த்துகிட்டு நிக்குறவ… பிள்ளையை கூட்டிட்டு உள்ள போ …" திரும்பி மருமகளைகளை பார்த்து, உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா…." என்றவுடன் அதுவரை ஏதேனும் சுவாரசியமாய் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள் ஒன்றும் நடக்கவில்லை என்றவுடன் தத்தம் அறைக்குள் புகுந்து விட்டனர்.
" அண்ணனே அப்போ.. கல்யாண ஏற்பாடு எல்லாம்…" என்று இழுத்த, தம்பியை " முடிச்சிடலாம் சீக்கிரமே… நாம முடிவு பண்ண மாதிரி தான்"
" சிவா, அந்த தரகனை பார்த்து மாப்பிள்ளை விசயம் முடிக்க வேண்டியது ஒன் பொறுப்பு"
" தரணி.. நீயும் உன் பொண்டாட்டியும் பத்திரிக்கை, அப்புறம் சொந்தங்களை அழைக்க வேண்டியது உன் பொறுப்பு,.. முக்கியமானவர்கள் நானும் வல்லபனும் பார்த்துகிறோம்"
" அருண்ணு, நீயு சாப்பாடு, வெளியில பந்தல் டெக்ரேசன் , பாட்டு கச்சேரி எல்லாம் உன் பொறுப்பு"
" ரிஷி… பெண்டுகள் வெளிய தெருவ, கல்யாணம் ஜவுளி.. நகை நட்டுனு வாங்க போவாங்க.. நீ அவங்க கூட போய்ட்டு வா.."
" வல்லபா நீயும் நானும், மாப்பிள்ளை முடிவு ஆனவுடன்… அடுத்த குல தெய்வ கோவிலுக்கும், இங்கன நம்ம ஊருல உள்ள கோவிலுக்கும் நெந்து செய்யணும்.. போய் பூசாரி பார்த்திட்டு வரலாம்". என்று ஆள்ளாளுக்கு ஒவ்வொரு வேலை பிரித்து கொடுக்க, கல்யாண வேலை ஜருறாய் ஆரம்பமானது.
இரவு எல்லாம் பயணம் செய்து வந்தது, சௌமினிக்கு களைப்பாக இருக்க, வந்தவுடன் மாடியில் இருக்கும் தன் அறைக்கு ஓய்வு எடுக்க சென்று விட்டாள்.. இங்கே நடக்கும் கல்யாண வேலை பற்றி தெரியாமல்…
நன்றாக தூங்கி எழுந்து, குளித்து கீழே வந்தவள், அண்ணிகள் , அம்மாமார்கள் புடவை பார்த்து கொண்டிருக்க… " ஐ.. பட்டு புடவை பார்க்குறீங்களா… அம்மா எனக்கு எடுத்தீயா.. காட்டு பார்ப்போம்.. "
சரசு, காலையில் திட்டியதை எல்லாம் மறந்து தன் பெண் ஆசையாய் கேட்ட உடனே, தான் தேர்வு செய்து வைத்திருந்ததை அவளுக்கு எடுத்து காட்ட, இது டிசைன் சரியில்லை.. இது கலர் காம்பினேஷன் சரியில்லை.. இது ரொம்ப பழைய மாடல்.. என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறை சொல்லி, சரசுவின் கோபத்தை அக்னி வெளியில் போல ஏத்தி கொண்டிருந்தாள்.
அவள் தலையில் இரண்டு குட்டு குட்டி, " ஒழுங்கா போய் அங்கிட்டு உட்காரு, வந்துட்டா.. உனக்கு எப்படி எடுக்கணும் எங்களுக்கு தெரியும்… கல்யாணம் வேலை ஆயிரம் கிடக்கு.. புடவை எடுக்குறதையே முழு வேலை ஆக்கிடுவா போல.. "
" என்ன கல்யாணம்.. யாருக்கு கல்யாணம்.. எப்போ கல்யாண… " என்றாள் புரியாமல்.. ரிஷிக்கு தான் பொண்ணு பார்த்து விட்டார்களா..
சுஜிக்கு என்ன பதில் சொல்வது, என்று பரிதவித்து போனாள் சுஜியின் காதலுக்காக. இவர்கள் கிடா வெட்டுவது தன் காதலுக்கு என்று தெரியாமல்..
அவளை ஏற இறங்க பார்த்து, " உனக்கு தான்டா கண்ணு. அப்பாவும் பெரியப்பாவும் அண்ணன்களும் அந்த வேலையா தான் போயிருக்காக…" என்று மல்லி வைத்த திரி வெடித்தது அவள் மனதில்.. என்னது ஆப்பு எனக்கே வா..
" மாப்பிள்ளை பார்த்தச்சா…" என்றாள் குரல் எழும்பாமல், "இன்னும் இரண்டு நாள பார்த்து, பத்து நாட்களுல கல்யாணம் வைச்சுடுவாங்க.."
" என்ன பத்து நாளா… நீங்களுமா… இப்போ என்ன செய்ய.," என்று மனதில் நினைத்தவாறு தன் அறைக்கு சுரத்தையே இல்லாமால் நடந்து சென்றாள்.
அறையை அடைந்தவளுக்கு, அழுகை பொங்கி வந்தது.. ஆனால் இது அழுவதற்கான நேரமில்லை என்று உணர்ந்து, தன்னை சமாதானப்படுத்தி கொண்டு, விஷ்ணுவிற்கு அழைத்தால், அவனோ தொடர்பு எல்லைக்கு அப்பால் என்றது கணினி..
மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ள, மீண்டும் மீண்டும் அதே குரல்.. கடுப்பாகி, போனை தூக்கி போட்டு, அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்… என்ன செய்வது என செய்வது என்ற ஒரே யோசனை… துணைக்கு ஐய்யனாரை அழைத்து கொண்டே…
அன்று நட் கண்டாக்ட் பண்ண சொல்லி நம்பர் கொடுத்துயிருக்க, முகம் பளிச்சிட அவனுக்கு அழைத்தாள், அவனும் எடுக்கவில்லை.. அவன் தான் ஹாஸ்டலில் அட்மிஷன் இல் இருக்கின்றானே…
இதுவே, நித்தமும் நிகழ்வாக… விஷ்ணுக்கு கால் செய்வதும், கணனி குரல் கேட்டு அழுவதும் தொடர்கதையாகி… தரகர் ஒரு வழியாக, இவர்கள் அருகில் உள்ள ஊரை சேர்ந்த, வெளியூரில் வேலை பார்க்கும் கரவீரநாதனை அவளுக்கு பார்த்து பேசி முடித்து விட்டனர்… வீர என்ற பெயரே அவர்களுக்கு பையன் படு தைரியமானவன் என்று எடுத்துக்கூற… வசதி, சமூகம், அந்தஸ்து என்று அனைத்திலும் அவர்களுக்கு சமமாக இருக்க, இன்னும் ஒரே வாரத்தில் திருமண என்று நிச்சியிக்கப்பட்டது..
இதை கேட்டு சௌமினி மிக மனம் ஒடிந்து போனாள் என்றால், திருமண செய்தி கேட்டு அதிர்ச்சியாகி சௌமினியைப் பார்க்க வந்த சுஜி இவளின் வேதனை பார்த்து வருத்தம் அடைந்தாள்..
" வி.பி. சர் கிட்ட சொன்னீயா.. இல்லையா டி"
" நானும் ஒரு வாரமா, முயற்சி செய்யுறேன்.. அவர் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் வருது டி.. பத்து நாள் ஊருல இருக்க மாட்டேன் என்கிட்ட சொல்லிட்டு போனாரு .. என்ன பிரச்சனைனு வேற தெரியலை.. இங்க இப்படி..… " என்று கண்ணீரில் கரைந்தவளை எவ்வாறு தேற்றுவது என புரியாமல் சுஜி..
ஒரு வழியாக தைரியம் தனக்கு சொல்லி கொண்டு, ரிஷியை காண சென்றாள்.. அவன் தோப்பில் இருக்க, அங்கே சென்றவள் மிக தயங்கி தயங்கே அவன் அருகே சென்றாள்... இவள் வருவதை முன்னமே அவன் பார்த்து விட்டான்.. ஆனாலும் கண்டு கொள்ளாத மாதிரியே நின்று கொண்டு, ஆட்களை ஏவி கொண்டு இருந்தான்.
எப்படி அழைக்க என்று குழம்பி , தொண்டையை கணைத்து., " உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…"
அவன் அவளை திரும்பி பார்த்து, என்ன என்று கண்களால் வினவ, பேசினா வாயிலுள்ள முத்து உதிர்ந்திடும் போல, " வந்து.. வந்து…சௌமினிக்கு மாப்பிள்ளையை பிடிகச்சிருக்கானு கேட்டீங்களா... இவ்வளோ அவசரமாக கல்யாணம் பண்ணனுமா… " திக்கி திணறி ஒரு வழியாக சொல்ல, அவளை பார்த்து, " எங்க வீட்டு விவகாரம் பேச.. உனக்கு எந்த உரிமையும் இருப்பதாக எனக்கு நியாபகம் இல்லையே… " என்று தாடையை தடவியவாறு சொல்ல, சுஜி மனம் வெகுவாக அடிப்பட்டது…
" அதை சொல்ல, உங்களுக்கு உறவா இருக்கணும் அவசியம் இல்லை.. சௌமிக்கு நல்ல ப்ரெண்ட் ஆ.. அவளுக்கு நல்லது நினைக்கிற உள்ளமா இருந்தா போதும்.. உங்களுக்கு எங்க அது எல்லாம் தெரிய போகுது"
" எனக்கு எந்த உள்ளம் பத்தியும் தெரிய வேண்டாம்.. நீ கிளம்பு… சும்மா சும்மா… இப்படி என் கண் முன்னே வந்து நிக்காதே…ஒரு நாள் போல ஒரு நாளு இருக்க மாட்டேன்.. பொலேருனு ஒன்னு கொடுத்திடுவேன்" என்று அவன் வார்த்தையை கடித்து துப்ப…
அவள் கண்கள் கலங்கி, முகம் வேதனையை காட்டியது.. அவனை பார்த்தவாறே சென்றாள்.. அவளின் அந்த கலங்கிய முகம் அடிக்கடி ரிஷியை இம்சித்ததை அவன் மட்டுமே அறிவான்..
சௌமினி தினமும் விஷ்ணுவிற்கு ஃபோன் செய்வது, வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதுமாய் இருக்க.. சாப்பாடு சரியாக செல்லாமல், பசலை நோய் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன அவளிடம்.
வீட்டில் உள்ளோவர்களோ மகள் தங்களை பிரிய போவதால் இப்படி இருக்கிறாள் என்று எண்ணியவாறு.. அவளும் அடிக்கடி பெரியம்மா மற்றும் அப்பூ என்று அழைத்து பெரியப்பா மடியில் தஞ்சம் புகுந்தாள்..
மதுரை வரை விமானத்தில் வந்து, அங்கிருந்து தேனி வந்தடைந்தான் விஷ்ணு.. வந்து சேரவே அவனுக்கு மாலை ஆனது, தேனியிலேயே அறை எடுத்து தங்கி, சௌமினிக்கு எங்கே எப்போது யாரோடு திருமணம் பேசி இருக்கிறார்கள் என்று விசாரித்து தெரிந்து கொண்டு, தேனியை நோக்கி புறப்பட்டான்.
நாளை மறுநாள் விடிந்தால், திருமணம் என்ற நிலையில் சௌமினியின் வீடு உறவினர்கள் நண்பர்கள் என்று நிறைந்து இருந்தது.. எவரிடமும் பேச பிரியபடமால் சௌமினி ஒதுங்கியே இருந்தாள். சுஜியும் மாலை வரை அவளுடன் இருந்து விட்டு, வீட்டுக்கு சென்று விட்டாள்.. மீண்டும் போனை எடுத்து பார்த்து, விஷ்ணுவிற்கு டயல் செய்ய நினைத்தவள்… "ஆமாம்.. இப்போ மட்டும் அப்படியே எடுக்க போறான்.. உன் மேசசேஜ் கூட பார்த்திருக்க மாட்டான்.. போடி.." என்ற மனசாட்சியை " ஒழுங்கா ஓடி போய்டு, இருக்குற கடுப்புல உன்னை அடுப்புல போட்டு ஆஃப் பாயில் ஆக்கிடுவேன்" என்று திட்டு விட்டு, கட்டிலில் எறிந்த போனையே பார்த்து கொண்டிருந்தாள்.
இது வேலைக்கு ஆகாது என்று நினைத்து, மொட்டை மாடியில் உலாத்தினாள்.. மேலிருந்து கீழே பார்க்க ஒரு புறம் பந்தல் போட்டு அலங்கரித்து இருக்க.. ஒரு புறம் அங்காங்கே நாற்காலிகள் போட்டு வைத்து ஆண்களும் பெண்களும் கூட்டமாக அமர்ந்து பேசி சிரித்து கொண்டிருந்தார்கள்… வேலையாட்கள் மூட்டை மூட்டையாய் சமையலுக்கு தேவையான பொருட்கள், காய்கறிகள் என்று தூக்கி கொண்டு செல்வதும்.. சத்தமாக அண்ணன்கள் குரல் கேட்டு கொண்டும்.. மொத்தத்தில் களை கட்டியது சௌமினி திருமணம்..
தன்னால் ஒன்றும் செய்ய இயலாத தன்மையை நினைத்து மருகி கொண்டிருக்க, அவள் இடை பற்றி இழுக்கபட, இடையோடு சேர்த்து அவளும் முட்டி நின்றது வல்லிய பனியன் அணிந்த ஒரு ஆணின் மார்பில், எதிர்பார்ப்போடு அவள் நிமிர, ஆனால் அங்கே தலையில் முண்டாசோடு வேர்த்து விருவிருத்து, வேர்வை துளிகள் மின்ன, பெரிய மீசையோடு அசல் கிராமத்தான் போல இருந்தான் விஷ்ணு..
விஷ்ணுவின் இந்த புது அவதாரம் தனக்காக தான் என்பதில், பெண்ணவளுக்கு காதலும் பெருமிதமும் வெள்ளம் என கரை புரண்டு ஓடிட… அன்று கனவில் அவள் கண்ட , பனியன் அணிந்த வன் மார்பு தன்னவன் தான் என்பதும் சேர்ந்து காதலோடு கூடிய மோகத்தையும் தூண்ட.. இவ்வளோ நாட்களாக விஷ்ணு மட்டுமே எடுக்கும் முதல் முத்த அடியை என்று சௌமினி தனதாக்கி, வன் இதழ்களை மிக வன்மையாக சிறை செய்தாள். ஆச்சர்யத்தில் விழி விரிய, தன் கிராமத்து பைங்கிளி யின், வன்மையில் விரும்பியே தன்னை தொலை
த்து கொண்டிருந்தான் முண்டாசு மன்னவன்…