21
அமர்த்தலாக அமர்ந்து இந்த கல்யாணம் நடக்கனுமா? வேண்டாமா? என்ற ரோஹிணி சத்தத்தில் முதல் ஆளாக ஓடி வந்தது ரோசைய்யா தான் தன் உடம்பையும் தூக்கி கொண்டு..
ஹால் சோஃபாவில் ரோஹிணி அமர்ந்து இருக்க, அருகே ஒப்புக்கு சப்பாய் நாகு என்ன செய்ய போகிறாளோ என்ற தவிப்பில், இதற்கும் தனக்கும் சம்மதமில்லை என விஷ்ணு மொபைலில் நோண்டி கொண்டிருந்தான். ரோசைய்யா நண்பனிடம் என்ன என்று ஜாடையில் கேட்க.. அவரோ இவன் வேற அவளே நம்மை காயுற.. எண்ணெய் வேற ஊத்துறான்… என்று பல்லை கடித்து கொண்டு, வெளியில் புன்னகை முகமாக, மனைவியைப் ஜாடை காட்டி விட்டு அமைதியாகி விட்டார்.
" என்னம்மா… ஏன் மா.. கல்யாணம் நிக்கும் அது இதுன்னு சொல்லுற"
" பின்னே, எங்களுக்கே தெரியாம எல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டீங்க.. அட் லீஸ்ட் நாங்க வந்த பிறகு ஆவது.. பொண்ணை கண்ணுல கட்டினீங்களா அதுவுமில்லை… பொண்ணோட அம்மா இதுவரை எங்களை வா னு ஒரு வார்த்தை கூப்பிடலை… அதுவும் கல்யாண மாப்பிள்ளை.. அவனுக்கு அவ்வளோ தானா மரியாதை… இப்போவே இப்படி.. இனி எப்படியோ… எல்லாம் இவரை சொல்லணும்.." என்ற கணவரையும் சேர்த்து காய்ச்சியவரை எல்லோரும் ஆ வென பார்க்க..
ரமணன் ஒடி போய் மணப்பெண்ணை அழைத்து வந்தான், பின் தன் ஏஜமானி அம்மாவை பார்த்து, " இன்னும் என்ன .. அப்படியே நிக்கிறீங்க… போங்க போய் வாங்க னு சொல்லுங்க… நீயும் ஏன் பாப்பா நிக்குற… போ.. "
பெண்ணின் தாயார் பர்வதம்மாள், பெண் சைதன்யா ஸ்ரீ இருவரும் ரோஹிணி மற்றும் விஷ்ணுவை கை கூப்பி வரவேற்று, அருகில் நிற்க.. ரோஹிணி பெண்ணிடம் பேச்சு கொடுத்தார்..
" உன் பெயர் என்ன… " அன்றும் இதே கேள்வியை தான் சௌமினியிடம் கேட்டார்.. அதில் இருந்த பிரியம்.. அன்பு.. பாசம் எதுவுமில்லை… ஏதோ விசாரிக்கும் பாவனை மட்டுமே..
அந்த பெண்ணும்… இயந்திரமாக " சைதன்யா ஸ்ரீ" என்றாள்..
" ம்ம்.. என்ன படிச்சு இருக்க… சமைக்க தெரியுமா… பிரியாணி செய்ய தெரியுமா… என் பையனுக்கு பிரியாணி தான் இஷ்டம்.."
ரோஹிணியின் கேள்வியில் வெகுண்ட பர்வதம், "எங்க வீட்டிலேயே மொத்தம் 20 பேர் வேலை பாக்குறாங்க… என் பொண்ணுக்கு வேலை செய்யவே இரண்டு பேரை வைச்சு இருக்கோம்… நீங்க என்னடா னா.. சமைக்க தெரியுமா… துவைக்க தெரியுமா று கேட்குறீங்க" என்று நொடித்து கொண்டார் பெண்ணை பெற்றவர் அல்லவா…
" ஆஹ்ஹ்ஹ்ஹாண்… அப்போ உங்க பொண்ணுக்கு எதுவும் தெரியாது… எல்லாமே வேலைகாரங்க தான் பார்த்துபாங்களா." என்று அவரின் வழக்கமான நூலை விட்டார்..
" பின்னே… ஒத்த பொண்ணை வைச்சு இருக்கோம்.. பொத்தி பொத்தி வளர்க்கிறோம்.." என்று கூறியவாறு மகளின் தலையினை ஆதுரத்துடன் தடவி கொடுத்தார் பர்வதம்..
" டேய் மகனே… அந்த பொண்ணுக்கு எதுவும் தெரியாதாம் டா.. அதுக்கு அந்த வேலைக்கார பெண்ணே பெட்டர் போல.. உங்க அப்பா தேர்வு செம்ம இல்ல" என்று கூறியவரை அனைவரும் என்ன சொல்ல வென்று திரு திரு விழித்தனர்.. ஆம் என்றால் அவர்கள் வீட்டு பெண்ணை தாழ்த்தி சொன்னது போல ஆகும்.. இல்லை என்றால் எங்கள் பெண்ணுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லுவது போல ஆகும்… என்ன சொல்ல… ரோஹிணி உதட்டு ஓரம் நக்கல் சிரிப்பில் வளைந்தது… விஷ்ணு கண்களாலேயே அன்னையை மெச்சினான்..
ஓய்வு எடுக்க போகிறோம் என்று விஷ்ணு குடும்பம் செல்ல, பர்வதம் கண்ணாலே கணவனை அழைத்து சென்றார் தனி அறைக்கு.
அவர் கதவை சாத்தியவுடன்… பர்வதம் துவங்கிவிட்டர் தன் சப்ரபாதத்தை…
" உங்களுக்கு கொஞ்சமாச்சும் கூரு இருக்கா… போய்யும் போய்யும் அந்த குடும்பம் தானா கிடைச்சுது… என்னன்னா பேசுறா… நம்ம வசதிக்கு இவங்க வீட்டுல நம்ம பொண்ணு வாழனுமா… "
" ஏண்டி… அவ்வளோ கூறு கெட்டவன்னு நினைச்சியா என்னை… யாருகிட்ட வசதி பத்தி பேசுற… அவங்க…. " என்று பேசி கொண்டே சென்றவரின் பேச்சை தடை செய்யும் வகையில் கதவு இடை விடாது தட்ட பட… ரோசைய்யா பேச்சை நிறுத்தி… கதவை திறந்து யாரு என்று பார்த்தார்.
ரமணன் தான் தட்டி கொண்டிருந்தான்.. " அடே அறிவு இருக்கா உனக்கு… முக்கியமான விசயம் இடையில வந்து தொந்தரவு பண்ணிகிட்டு" என்று காய்ந்தார்.
" நான் தான் கூப்பிட சொன்னேன்.. என்று விஷ்ணு அவன் பின்னிருந்து வந்தான்.
" அச்சோ .. நீங்களா மாப்பிள்ளை… வாங்க வாங்க…என்று உள்ளே அழைத்தார்..
" ரொம்ப முக்கியமா விசயம் பேசும் போது டிஸ்டர்ப் பண்ணிடேனா…" என்றான் விஷ்ணு மிக இலகுவாக அங்கே அமர்ந்து…
" அது… ஆன்… பொண்ணுக்கு சீர் பொருட்கள் ஏதோ கொஞ்சம் குறையுதுனு சொன்னா என் பொண்டாட்டி… அதான் அதை பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்… வீட்டுக்குள்ள ஆட்கள் சதா அங்கேயும் இங்கேயும் அலைஞ்சு கிட்டு இருக்காங்க அதான்… ரூம்குள்ள…" என்று இழுத்தார் அவர்.
"ஓஹ்ஹ்… அப்போ சரி… நானும் ஏதோ ரொம்ப ரகசியம் போல நினைச்சி போகலாம் என நினைச்சேன்… " என்று சாவகாசமாக அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
ரோசைய்யாவும் அவரின் மனைவியும் நெளிந்து கொண்டே நிற்க, ரமணன் கல்யாண வேலை பார்க்க சென்று விட… இவன் பர்வதத்தை நோக்கி, " ஆண்டி… கொஞ்சம் ஜூஸ் கிடைக்குமா… ஃப்ரெஷ் ஜுஸ் ஆ இருந்தா பெட்டர்…"
கணவனை முறைத்து கொண்டே சென்றார் பர்வதம்… விஷ்ணுவோ இது எதையும் கண்டு கொள்ளாமல் அறையை சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.. அங்கிருந்த ஃபோட்டோக்களை பற்றி விசாரித்து, ரூமில் அலங்காரம் பற்றி சிலாகித்து, அவரின் ரசனை புகழ்ந்து, என்று பேச்சி கொண்டே சென்றான், பர்வதம் கதவை திறந்து உள்ளே வந்து ஜுஸ் கொடுக்க, அவரிடம் ஒரு சிநேக புன்னகையுடன் வாங்கி கொண்டான். ஜுஸ் நல்லா இருக்கு என்ற பாராட்டலுடன் சென்று விட்டான்.. அப்புறம் தான் ரோசைய்யாவுக்கு நியாபகம் வந்தது… இவன் ஏன் வந்தான்… என்ன பேச வந்தான்.. ஒன்றும் புரியாமல் விழித்தார்.
பின் கதவை தாழிட்டு விட்டு, மனைவியிடம் திரும்பி, " இங்க பாரு… இந்த கல்யாணத்துல எந்த இடைஞ்சலும் வரக்கூடாது.. முக்கியமாக உன் வாயை ஜிப்பு போட்டு மூடி வைச்சுகோ… எதாவுது வில்லங்கம் ஆனது, பொண்டாட்டி கூட பார்க்க மாட்டேன்"
" அப்படி என்ன உசத்தியான மாப்பிள்ளை… " என்று தோளில் தாடையை இடித்து கொள்ள ..
பூட்டிய கதவை ஒரு முறை பார்த்து விட்டு, தன் மனைவி யிடம் மெதுவான குரலில், " ஏய்… இவ்வளோ வருசமா நாம நம்முடையது சொல்லிகிட்டு இருக்கிற, நம் கம்பனி முழுவதும் அவனோடது.. அதாவுது அந்த பையன் விஷ்ணு பெயரில் தான் இருக்கு… "
அவர் அதிர்ச்சியின் உச்சியில், " என்ன சொல்லுறீங்க"
" ஆமாம்… நாகு தான் ஃபர்ஸ்ட் அந்த கம்பெனியை ஆரம்பித்தது… அப்புறம் தான் நான் அதில் சேர்ந்தேன்.. என் அரசியல வர பணத்தை போடா தான் அதில் சேர்ந்தேன்… அந்த கம்பனி மதிப்பு தெரிஞ்சா உடன்.. கொஞ்சம் கொஞ்சமா அது நட்டுத்தில ஓடுற மாதிரி நான் , ஆடிட்டர்… வக்கில் மூணு பேரும் சேர்ந்து பிளான் பண்ணி, அவனை ஊர் விட்டு ஓட வச்சோம்… அவனும் போய்ட்டான்.. ஆன அவனோட பையன் பெயரில் தான் அவனுடைய ஷேர்ஸ் இருந்தது .. நம்மது அதில் வெறும் பத்து பெர்செண்ட் தான்.. மீதி விஷ்ணு பெயரில்.. அவன் போன பின்னே… என் பெயரிலோ.. உங்க யாரு பெயரிலோ மாத்தினா பிரச்சனை வரும்.. கேஸ் போட்டா அவனுக்கு சாதகம் ஆகும்னு வக்கீல் சொன்னதால நான் அப்படியே மெயின்டெய்ன் பண்ணிகிட்டு வந்தேன்.. பவர் மட்டும் எனக்கு இருக்கிற மாதிரி… ஆன அதுவும் அந்த விஷ்ணு மேஜர் ஆகுற வரை தான்.. இதுவரை அவர்கள் பாரினில் இருக்காங்க சொல்லி சமாளிச்சாச்சு.. இப்போ அவன் கிட்ட இருக்கிறதை நம்ம பொண்ணு பெயரில் எழுதி வாங்கனும்…"
" அதுக்கு எதுக்கு அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கனும்… மிரட்டி கிரட்டி வாங்க வேண்டியது தானே…"
" போடி… அவன் கோர்ட் போன நாம தான் மாட்டனும் .. இதே பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்து, இவன் பெயரில் உள்ளதை , அவனுக்கே நாம தர போறதா சொல்லி போலி டாகுமெண்ட் பேப்பரில் கையேழுத்து வாங்கும் போது, அப்படியே ஒரிஜினல் டாகுமெண்ட் வைச்சு, அவன் பெயரில் உள்ளதை நம்ம பொண்ணு பேருக்கு மாத்திடலாம்.. அது மட்டும் இல்லை நாளை பின்ன கேஸ் போட்ட கூட.. அவனா தான் கொடுத்தானு நாம ப்ளேட்டை திருப்பி போட்டுடலாம்… எப்படியும் நம்ம பொண்ணுக்கு தானே எல்லாம்.. இதே பொண்ணை வெளியில் கொடுத்தால், இந்த விசயம் எல்லாம் வெளியில் வரும்.. கம்பனியும் நம்ம கை விட்டு போகும்… கூடவே நாகு நமக்கு தலை ஆட்டுவான்.. அதனால்… நம்ம பொண்ணுக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை…"
ரோசைய்யாவின் விளக்கத்தில் வாய் அடைத்து நின்று விட்டார் பர்வதம்… இவ்வளோ இருக்க இதில் என்று ..
இதை எதையும் அறியா நாகு அண்ட் ஃபேமிலி கல்யாண வேலையில் பிஸி… விஷ்ணு அன்னை மற்றும் தந்தையை அழைத்து கொண்டு, கல்யாண பர்சேஸ் செல்வதாக ரோசைய்யாவிடம், கூறி கொண்டு கூடவே துணைக்கு என்று ரமணனையும் அழைத்து சென்று விட்டான்.. அவனின் அடி ஆட்கள் ஐந்து பேர் சகிதம்..
ரமணனனையும் கூட வைத்து தான் கல்யாண பெண்ணிற்கு சேலை.. அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு துணி மணிகள் என்று… தாலி.. பெண்ணிற்கு புகுந்த விட்டு சீராக, ப்ரெயிடல் செட் நகை என்று பார்த்து பார்த்து வாங்கினான் விஷ்ணு.. கூடவே ரமணனும்…. நாகுவோ சந்தோச சிரிப்பில்.. ரோஹிணியோ பயங்கர கடுப்பில்…
ரமணனுக்கு ஏக திருப்தி… மணமகனின் செயலில்.. தன் ஐயா வீட்டு பெண்ணை இவர்கள் நல்லபடியாக பார்த்து கொள்வார்கள் என்று..
விஷ்ணு அதோடு விட வில்லை.. ரமணன் மற்றும் அவனின் ஆட்களுக்கும் புது துணிகள் எடுத்து கொடுத்தான்.. அதுவும் ரமணனுக்கு தனி கவனிப்பு வேற.. எல்லாவற்றையும் பொருமலோடு பார்த்து கொண்டு இருந்தார் ரோஹிணி.. மகனின் இந்த விசித்திர செயலின் அர்த்தம் விளங்காதவராய்..
அன்னையிடம் தாலி மற்றும் நகைகளை காட்டி அபிப்ராயம் கேட்க அவரோ விஷ்ணுவின் மீது கோபா கனலை கொட்டினார் .
அவன் அதையும் ஒரு சிரிப்புடன் கடந்து விட்டான்.. வீடு திரும்பி எல்லாவற்றையும் ரோசைய்யா ஃபேமிலி பார்த்தும் மகிழ்ந்தது… இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்ற நிலையில் அனைத்து செய்தித்தாளில் இவர்கள் திருமணம் பற்றி செய்தி , வாழ்த்துடன் வந்தது.. அனைத்தும் ரோசைய்யாவின் மதியூகம் .
விஷ்ணுவும் எதையும் கண்டு கொள்ளவில்லை.. மறுக்கவும் இல்லை… எல்லாவற்றையும் பார்த்து கொண்டு நாட்களை கடத்தி கொண்டு இருந்தான்.. இடைப்பட்ட நாட்களில் போனை வேற அணைத்து வைத்து இருந்தான்.. தந்தையின் ஃபோன் மூலமே தன் டிபார்ட்மெண்ட் கடை பற்றி கேட்டு கொண்டும், அவர்களுக்கு உத்தரவு வழங்கி கொண்டும் இருந்தான்..
விடிந்தால் திருமணம் என்ற நிலையில் அவனின் இந்த நிதானம் ரோஹிணிக்கு மெல்ல வயிற்றை கலக்கியது.. அன்று இரவு விஷ்ணுவின் அறை கதவை திறந்து கொண்டு சென்றவர், அவன் லப் டாப்பில் பார்த்து கொண்டிருப்பதை பார்த்து அளவில்லா கோபம் வந்தது.. பின்னே அவரோ அவ்வளோ டென்ஷனில் இருக்க.. அவன் டாம் அண்ட் ஜெர்ரி யூ ட்யூப் இல் பார்த்து சிரித்து கொண்டிருக்க.. பின்னால் சென்று அவன் முதுகில் ஒன்று வைத்தார்..
" ஏன் ம்மா… நீங்களுமா… அவளும் அப்படி தான் சும்மா சும்மா அடிப்பா.. " என்று முதுகை நீவி விட்டவாறே
" டேய்.. கொஞ்சமாச்சும் சீரியஸ் இருக்க உனக்கு… நாளைக்கு விடிஞ்சா … அந்த சொட்டையம்.. இந்த தொப்பையும் சேர்ந்து, ரோபோட் மாதிரி இருக்கிற அந்த பொண்ணை உன் தலையில் கட்ட ரெடி ஆகிட்டாங்க… நீ இங்க சின்ன பிள்ளை மாதிரி கார்ட்டூன் பாக்குற"
" அம்மா.. கார்ட்டூன் பாக்குறது ரொம்ப ரொம்ப நல்லது.. சீரியலை விட.. அதுக்கு மேல டென்ஷன் சமயத்தில் இதை பார்த்தா கண்டிப்பா ரீலாக்ஸா ஃபீல் பண்ணலாம்.. நீங்க வேணா பாருங்க.. உங்க டென்ஷன் குறையும்.. அதுக்கு நான் க்யரண்டி…"
" ம்ப்ச் .. தம்புடு… பீ சீரியஸ்…" என்று வருத்தமான குரலில் கூற… அவரை அணைத்து " நான் பார்த்துக்கிறேன்… நீங்க போய் நிம்மதியா தூங்குங்க… நடக்க போறதை என்ஜாய் பண்ணுங்க"
அவர் பையனை பார்த்து, மெல்ல தலை ஆட்டி… " பார்ப்போம்… நீ மட்டும் தாலி கட்ட போன… அப்புறம்…" என்று ஒரு விரல் காட்டி பத்திரம் சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டார் ..
மீண்டும் விஷ்ணு தான் விட்டதை தொடர்ந்தான்.. அதாங்க .. டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பதை… ( நோ.. பேட் வேர்ட்ஸ்… பிளீஸ்)
அங்கே சௌமினியோ.. இவனை தொடர்பு கொள்ள முயன்று முயன்று தோற்று.. பசலை நோய் கண்ட தலைவியேன… அழுது கரைந்து கொண்டிருந்தாள்.
காதல்..
இன்பம் என்ற சொர்க்கத்தையும்
பிரிவு என்ற நரகத்தையும்
ஒருங்கே காட்டும்
விசித்திரமான கண்ணாடி…
மறுநாள் காலை.. அழகாக விடிந்தது…. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில்…
ரோஹிணி படு டென்ஷன் ஆக… ரோசைய்யா குடும்பம் கல்யாணம் நல்ல படியாக நடக்கனும் என்று வேண்டுதலுடன்… நாகு பிள்ளையின் கல்யாணம் அதுவும் அவர் ஊரில் மிக சந்தோசமாக… விஷ்ணுவோ மாப்பிள்ளை கோலத்தில் , அக்னி குண்டத்தின் முன் உட்கார்ந்து, வெகு சிரத்தையாக ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லி கொண்டு…