ஆழி 20

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

20

 

போடிநாயக்கனூரே இரண்டு ஆகுமாறு சௌமினி வீடு செம ரணகளமாக இருந்தது, சௌமினி விஷ்ணுவின் வண்டியில் செல்லும் போது இவர்கள் ஊரை சேர்ந்த ஏதோ ஒரு நல்ல இதயம், பற்ற வைக்க.. இங்க பத்தி எரிகிறது.. ஊருக்குள் எவனாவது காதல் என்றாலே, கட்டை கொண்டு அவர்களை பிளக்கும் இந்த ஈஸ்வர் பிரதர்ஸ், தங்கள் வீட்டுகுள்ளே என்றால்.. சும்மாவா இருப்பார்கள் அதுவும் தங்கள் பாசமலரையே ஒருவன் வளைத்திருக்கிறான் அவனின் நிலைமை சொல்லவும் வேண்டுமா… வீச்சு அருவா சகிதம் நடு ஹாலில் உலாத்தி கொண்டிருந்தனர் ஆம்னி பேருந்துக்காக… வேற எங்கே.. சென்னை செல்லத்தான்.. நாட்டாமை தீர்ப்பில்.. நால்வரும் வீருகொண்டு விட்டனர்..

மூர்த்தி பிரதர்ஸ் சோஃபாவில் அமர்ந்து இருக்க, அவர்கள் முன்னே மிக பவ்யமாக கைகட்டி நின்று கொண்டிருந்தார் ஒருவர்.. நெற்றி நிறைய விபூதி பட்டை, கழுத்தில் உத்திராட்சம், கையில் ஒரு மஞ்ச பை என பார்த்த உடன் தரகர் என அடையாளம் கண்டு கொள்ளுமாறு இருந்தது அவருடைய கெட் அப்.. கம்பபட்டு தரகரே தான்..

" நல்லா கேட்டுக்கோ தரகரே.. ஒரு வாரம் தான் உனக்கு கெடு, அதுக்குள்ள நல்ல இடமா பார்த்து சொல்லனும், நம்ம இனமா.. படிச்ச பையனா.. வசதி உள்ளவனா இருக்கணும்.. புரிஞ்சுதா .. அதை விட்டு புட்டு உனக்கு தோதான ஆளை பார்த்து, நீயே பத்து பன்னிரண்டு பொய் சொல்லி இங்கன அழச்சிகிட்டு வந்த… அப்புறம் நாங்க பேச மாட்டோம்.. என்ன " என்ற நரசிம்மர் பேச்சை மீசை முறுக்கி கண்களில் பிரதிபலித்தார் வல்லவர்…

" ஐயா.. உங்ககிட்ட அப்படி எல்லாம் சொல்லிட முடியுமா.. ஒரு வாரம் என்னய்யா… மூணு நாளுல சூப்பர் ஆன சம்மந்தத்த கூட்டிகிட்டு வாறேனுங்க" என்று கூறி புறப்பட்டு விட்டார் தரகர் விஷ்ணு காதலில் விளையாட தான் எத்தனை எத்தனை பேர்… 

" அண்ணே… நீங்க பசங்க கூட போய், நம்ம பொண்ணை கூட்டி வந்துருங்க… நான் இங்கன மத்த வேலையை எல்லாம் பார்த்துக்கிறேன்"

தம்பியின் பேச்சை ஆமோதித்து, அவர் பிள்ளைகளுடன் கிளம்பினார். வல்லபர் வீட்டு பெண்களுடன் சேர்ந்து மகளுக்கு தேவையான பொருட்களை பட்டியலிட்டு கொண்டிருந்தார்.. மாப்பிள்ளை தவிர அனைத்தும் ரெடி ஆக்கினர் சௌமினி குடும்பத்தினர்.

சென்னை ஆபீஸ் இல்.. சௌமினியின் முக வருத்தத்தை நேற்று முதல் தான் பார்த்து கொண்டு இருக்கிறாளே சுஜி.. காரணமும் தெரியும் தான் அவளுக்கு.. ஆனாலும் தோழியை தேற்ற முடியவில்லை அவளால்.. 

" ஹாய் கைஸ்… " என்ற நட்டுவின் குரலில் இவர்கள் அனைவரும் அவனை பார்க்க, " கைஸ்.. உங்க ஹெட் ஒரு பத்து நாள் லீவ் ல இருக்கார்.. அது வரை நான் தான் தற்காலிக ஹெட்.. நீங்க உங்க ப்ராஜெக்ட் கோட் எல்லாம் ஆதர்ஷ், பிரணவ் கிட்ட ரிபோட் பண்ணுங்க.. அவங்க என்கிட்ட பண்ணுவாங்க.. இஃப் யூ எனி டவுட் ஆர் எனி கிளாரிபிகேஷன் கண்டாக்ட் மீ அட் எனி டைம்.." 

" இந்த மூஞ்சை பத்து நாள் சகிக்கணுமா டி… அச்சோ தெய்வமே" சுஜி புலம்ப.. மெல்ல சௌமினி வதனம் புன்னகை பூண்டது..

" இந்த கொசு தொல்லை ஜாஸ்தி ஆச்சு னா.. நாம மருந்து அடிச்சி விரட்டிடலாம்.. டி" என்று சௌமினி வழி கூற இருவரும் ரகசியமாக சிரித்து கொண்டனர்..

விஷ்ணு இல்லாமல் வெறுமையாகவே சென்றது அந்த நாள் அவளுக்கு மாலை வரை..சாப்பாட்டையும் அளந்து கொண்டே இருந்தவளை சுஜி தான் தேற்றினாள்.., " சௌமி.. இதுக்கே துவண்டா எப்படி.. இனி தான் நீ நிறைய எதிர் கொள்ள வேண்டியது இருக்கு… உங்க வீட்டுக்கு தெரிஞ்சா இல்லை அவங்க எதிர்த்தாலோ அதை எல்லாம் தைரியமா ஃபேஸ் பண்ண வேண்டி இருக்கும்…. இந்த மாதிரி சாப்பாட்டை அளக்காம ஒழுங்கா சாப்பிட்டு உடம்பை தேத்தி வைச்சுக்கோ" என்றாள் அது தான் நடக்க போவது என்று தெரியாமல்..

மாலை நேர விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருந்த அவர்களின் ஆபீஸ், திடீரென்று களேபரமானது… தேனி ஈஸ்வர் பிரதர்ஸ் வந்தாச்சு பா…

இவர்களின் மடித்து கட்டிய வேட்டியும், பின் பக்கம் இழுத்து விட்ட சட்டையும், அதற்குள் எந்நேரமும் வெளி வர தயாராக இருந்த அருவாளும் அங்கே இருந்த அனைவரையும் பீதி கொள்ள செய்தது.. என்ன வம்பு என்று கேட்பவர்களை விட.. ஏன் வம்பு என்று ஒதுங்குபவர்கள் தான் இங்கே ஜாஸ்தி… 

இவர்களுக்கு போட்டு கொடுத்த அந்த நல்ல உள்ளமும் வந்திருக்க… இவர்கள் யார் யார் என கேட்டு அலசினார்கள், ஒரு வழியாக அது சௌமினி மேனேஜர் என்று கண்டுபிடித்து ஆபீஸில் நுழைந்தனர்..

நுழைந்த உடன், சௌமினியின் ஹெட் பற்றி வரவேற்பு பெண்களிடம் கேட்ட, அவர்களோ தற்போதைய ஹெட் நட்டு தானே, அவனை கூறி, அவன் கேபினை காட்டினார்கள் இவர்களால் முன்னமே பாதிக்கப்பட்டு, நொந்து நூடுல்ஸ் ஆன அதே வரவேற்பு பெண்கள் .. அச்சோ நட்டுடூ…..

சுகியிடம் வாங்க பழகலாம் என்ற ஆரம்பித்த நட் இப்போது தான் படிப்படியாக முன்னேறி, இருவரும் தனியாக சந்தித்து பேசி, கொஞ்சம் டீ.. சமோசா.. பப்ஸ்.. கூடவே கொஞ்சம் கடலை என்று ஒரு வழியாக சுகியை கரெக்ட் பண்ணி இருந்தான்.. ஆனாலும் இன்னும் லவ் சொல்லவில்லை… சுகிக்கும் நல்ல வேலையில் இருக்கிறான், பார்க்கவும் ஓகே.. சம்பாத்தியமும் ஓகே.. அதனால் இவனை கன்சிடர் பண்ணலாம் என்ற ஐடியாவில்..

இன்று தன் கேபினுக்கு அழைத்து இருந்தான் நட்.. சுகியை…வேலை முடிந்தவுடன் வெளியில் செல்லலாம், இப்படியும் இன்னைக்கு காதலை சொல்லிவிட வேண்டும் என்ற நினைப்புடன்.. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…. 

இவர்கள் கிளம்ப ஆயத்தமாக…சடாரென்று சருக்கிய சுகியை இவன் தாங்க.. இருவரும் கண்களும் ஒன்றை ஒன்று கலக்க.. இவர்கள் ஒருவருக்குள் ஒருவர் மூழ்க.. கதவு படேன்று திறக்க… அம்முபுட்டு தான் ஜோலி முடிஞ்சுது…

ஏற்கனவே கோபத்தில் வந்த ஈஸ்வர் பிரதர்ஸ் இப்போது இவனின் இந்த லீலையை நேரில் பார்த்து ரெளத்திரம் ஆனார்கள்.. அவர்களை பார்த்து அனைத்தும் மறந்து.. பறந்து போனது நட்டுவுக்கு அப்படியே சிலை போல நின்றான்.

" ஏண்டா.. அங்க இங்க வீட்டு பொண்ண ஊரு பூரா வண்டியில வைச்சு சுத்தி புட்டு, இங்கன வேற ஒருத்தி கூட ரொமான்ஸ் பண்ணிறீயா ரொமான்ஸ்" என்று தரணி ஆரம்பிக்க..

" ஏண்டா.. அண்ணே… நீயேன் நொய் நொய்னு பேசிக்கிட்டு இருக்கே… ஒரே போடா போடுறதை விட்டுட்டு" என்று அருண் எகிற, 

" டேய் முதல அந்த நாயை, பிரிங்கடே… இன்னும் கட்டிகிட்டு இருக்கான் பாரு.." சிவா கொந்தளிக்க..

" இது நம்ம ஊரு இல்ல , கொஞ்சம் அடக்கியே வாசிங்கடே" என்று ரிஷி சமாதானப்படுத்த…

இவர்கள் அலப்பரையில், சுகியும் நட்டுவும் அரண்டு பிரிந்து நிற்க.. அதற்கு மேல் அங்கே பேச்சுக்கே வேலை இல்லாமல் போனது.. என் வீடு பொண்ணை .. தொடுவியா… வைச்சு ஊரு சுத்திவியா.. இனி பேசுவியா… பார்ப்பியா என்று ஒவ்வொரு அடிக்கும் ஒரு வார்த்தையா. . இல்ல ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அடியா என்று பிரித்து அறிய வண்ணம் நொய்ய புடைத்து கொண்டு இருந்தனர் நட்டுவை.. இவர்களின் இந்த அடியில் சுகியும் காதலும் பறந்து போனது நட்டுவுக்கு..

இந்த தகவல் ஆபீஸ் முழுக்க பரவ… அது தங்கள் அண்ணன் தான் என்று புரிந்து, விரைந்து வந்தாள் சௌமினி.. வந்தவள் அனைவரையும் ஒதுக்கி விட்டு, " அண்ணே நிப்பாட்டுங்க ...என்ன நடக்குது இங்கன.. ஏன் இவரை போட்டு அடிக்கிறீங்க" 

அடியை நிறுத்தி ஒரு நிமிடம் அவளை பார்த்த, தரணி இவள் அருகில் நெருங்கி வந்து, " அன்னைக்கு இவன் தான் உன்னை வைச்சு வண்டியில சுத்துணானாமே… வண்டியோடோ மட்டும் தானா.. அதுக்கு மேல லவ் கிவ்வு உண்டா.. உன் மேனேஜரு தான் அவன் சொன்னான்" என்றான் கோபமாக.

அப்போது தான் அவளுக்கு மட்டுமில்லை நட்டுவுக்கும் விவரம் புரிந்தது.. தன்னை விஷ்ணு என்று நினைத்து வெளுக்கிறார்கள் என்று… " ஒரு நாள் தான் டா.. உன் போஸ்ட்க்கு வந்தேன்.. அதற்கே இப்படியா… நீயெல்லாம் நல்லா வருவடா" என்று மனதுக்குள் அவனை மிக மிக நல்விதமாக பாராட்டினான்.

" ஐய்யோ… அது இவரு இல்லை.. முதல இவரை விடுங்க.. என்ன நடந்து நான் சொல்லுறேன்"

"ஆமா அண்ணே… அது இவரு இல்லை.. " ப்ரெண்ட்ஸ் படத்தில் சார்லி சொல்லுவாரே… அதே மாடுலேஷனில் சொன்னான் அந்த போட்டுக்கொடுத்த நல்ல உள்ளம்…

நட்டு அவனை கொலவெறி கொண்டு பார்க்க… ஈஸ்வர் பிரதர்ஸ்.. இங்கே ஒருத்தன் அடிவாங்கியதை பொருட் படுத்தாமல், ," அடிச்ச அடி வேஸ்ட் ஆ போச்சே" என்ற ரீதியில் வருந்தினர்..

" அண்ணே... இந்த நாதிரி பேச்சை கேட்டு தான் .. என்னை சந்தேகப்பட்டு வந்தீங்களா.. அன்னைக்கு பந்து, எனக்கு சளி பிடிச்சி.. மூச்சு விட கஷ்டமா இருந்தது.. ஒரு பஸ்.. ஆட்டோ கூட ஓடல… " அங்கிருந்த பெரியப்பா பக்கம் திரும்பி… சின்ன பிள்ளை கொஞ்சும் குரலில், " அப்பூ… நீங்க தானே.. என் ஆபிசர் கிட்ட சொல்லிட்டு போனீங்க.. என்னைய பார்த்துக்க சொல்லி.. அது தான் அவருக்கு போன் பண்ணி சுஜி எனக்கு உடம்பு முடியல சொன்னா… அவரு வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாரு… அதை தான் இவன் பார்த்து உங்க கிட்ட போட்டு கொடுத்துட்டான்… அவன் கிட்டேயே கேளுங்க.. அன்னைக்கு பந்தா.. இல்லையானு" என்று பாலை அவன் பக்கமே திருப்பி விட்டாள் சௌமினி..

,இப்போது ஈஸ்வர் பிரதர்ஸ் அவனை ரவுண்ட் கட்ட… அவன் அதிர்ச்சியின் உச்சியில் என்றால் அது கொஞ்சமே…

" சொல்லுடா… என்ற சிவா கர்ஜனையில்..

"ஆமா.. அண்ணே.. அன்னைக்கு பந்துதேன்"

இப்போது அவன் டேர்ன் வாங்குவது…

அழும் தங்கையை சரி செய்து, அப்போ வந்தது வேஸ்ட் போல என்று அவர்கள் நினைக்க… ரிஷி முந்தி கொண்டு, " வந்தது வந்தாச்சு… இனி இவ இங்கன வேலை பார்க்க வேணாம்... பார்த்த வரை போதும்… ஊருக்கே கூட்டிட்டு போய்டுவோம்" என்று ஆரம்பிக்க.. மற்றவர்களும் ஆமா போட… நரசிம்மரும் சம்மதித்து விட்டு… வேலை விட என்ன பண்ணனும் என்று நட்டுவை விசாரித்தார்.... 

அவன் கை எடுத்து கும்பிட்டு, " நீங்க கிளம்புறதே போதும்" என்று முடித்து விட்டான்.. கூடவே சுஜியும்...

இவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து கையெழுத்து வாங்கி அனுப்புமாறு ஆதர்ஷ் இடம் சொல்லிவிட்டு, பொடி நடையாய் நடந்தான் நட்.. வேற எங்க ஹாஸ்டலுக்கு தான்… "அன்னைக்கே உன் ப்ரெண்ட் ஷிப் கட் பண்ணி இருக்கணும் டா.. இப்போ காலும் போச்சு… காதலும் போச்சு "என்று புலம்பியவாறு.. அக்மார்க் 90ஸ் பரிதாபமாக..

உள்ளே சென்று இவர்கள் கை எழுத்து இட்டு திரும்ப , இவர்களை பிடித்து கொண்டது கோபியர் கூட்டம்…" அன்று என்ன நடந்தது… ஏன் சளி பிடிச்சது… நீ ஏன் வி.பி க்கு ஃபோன் செய்தே… வண்டியில் எப்படி போன… எவ்வளவு நாளா ஃபோன் பேசிக்கிட்டு இருக்க…" எப்படி ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு துளைத்தனர் சுற்றி நின்று கொண்டு…

இவர்கள் ஒவ்வொருவரையும் திரும்பி திரும்பி பார்த்து கழுத்து வலி கண்டது சௌமினிக்கு.. 

பொறுமை பறந்து போக…" நிறுத்துங்கடி… என்னங்கடி.. நினைச்சு கிட்டு இருக்கீங்க… உங்க இஷ்டத்துக்கு கேள்வி கேட்கிறீங்க .. ஒங்களுக்கு பதில் சொல்ல முடியாது… பார்த்தீங்க தானே இங்கன நடந்ததை.. அடுத்து உங்களுக்கு நடக்குனுமா .." என்று மிரட்டியவளை பயந்து அவர்கள் பார்க்க..

அது என்று விட்டு நடந்தவள்…திரும்பி போய்.." இனிமே வி.பி வரும் போதும், போகும் போது.. வாய் பொளந்து கிட்டு… பார்த்தீங்க.. அப்புறம் பாக்குற கண்ணும்… பேசுற வாய்யும் இருக்காது" என்று மிரட்டியவளை பார்த்து.. " இவங்க இரண்டு பேரும் லவ் பண்றாங்களா… இல்லையா " என்ற பெரும் குழப்பத்தில் கோபியர் கூட்டம்..

தன் குடும்பத்துடன் ஆம்னியில் கிளம்பினாள் சௌமினி… இன்னும் வீட்டில் அவளுக்கு இருக்கும் ஆப்பு தெரியாமல்…

அங்கே ஆந்திராவில் விஷ்ணு குடும்பத்திற்கு எதிராக சதி திட்டத்தில் ரோசைய்யா‌வும் அவர் மனைவியும்… சிறுத்தை ஒரு போதும் தன் புள்ளிகளை மாற்றிக் கொள்வதில்லை என்பது போல…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top