19
ரோசைய்யாவை பார்த்து தான் ரோஹிணி அதிர்ச்சி ஆனார், எப்படி மறக்க முடியும் இவரையும், இவரின் துரோகத்தையும், ஆனால் முடிந்து இருக்கிறதே அவரின் கணவனால், எவ்வாறு சாத்தியம் இது…
அந்த துரோகியை பார்க்க பார்க்க , மதுரையை எரித்த கண்ணகியை போல, தன்னால் இவனை எரிக்க முடிந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தான். ஆனால் நாகேந்திரன் அவரை சம்மந்தியாக்கி, அவரின் பெண்ணையே தன் வீட்டில் வாழ அழைத்து வருகிறார் , இது எதனால், யாரையும் நம்பும் மன்னிக்கும் அவரின் குணமா.. இல்லை பிறந்த மண்ணின் உறவினர்கள் என்ற மனமா.. ஏதோ ஒன்று ஆனால் நாசமா போக அது.. என்று தான் ரோஹிணியின் மைண்ட் வாய்ஸ்..
ஏற்கனவே பிடித்தம் இல்லாமல் வந்தவர், இப்போது இவரின் மகள் என்று தெரிந்ததும் அவ்வெண்ணம் வலுப்பெற்றது இன்னும் இன்னும்…
’எதை கொண்டு இவரை நம்பினார் இந்த மனுஷன்… ஏற்கனவே பிடுங்குனது பத்தலையாமா.. இன்னும் மீதம் இருக்கும் சொத்தையும் பிடுங்க பிளான் பண்ணுறான்.. இந்த சொட்டையும் பல்லை ஈனு காண்பிச்சு காண்பிச்சு பேசுது… தனியா மாட்டடும் அப்போ இருக்கு உனக்கு… ’ நாகுவின் மரியாதை அதல பாதாளத்தில் சென்றது…
இன்னும் அம்மா அவரை ஏன் கோபாமாகவே பார்க்கிறார்.. யார் இவர் ஏற்கனவே தெரிந்தவரா என்ன.. எதற்கு இந்த அதிர்ச்சி மற்றும் கோப பார்வை.. ஆனால் அப்பா நட்புடன் தானே பேசி சிரிக்கிறார் என்றவாறு விஷ்ணு..
" ம்மா… என்னாச்சு.. ஏன் இப்படி ஸ்டண்ட் ஆகி நிக்குறீங்க"
" இவனை பார்த்து, ஒன்னும் செய்யாமல், குறைஞ்ச பட்சம் அவனை அடிக்காமல் சும்மா நிக்குறேனு நீயும் உங்க அப்பா சந்தோச படுங்க" என்றார் கண்களில் கனல் கக்க…
சாந்தமான தன் அம்மாவா இது என்று விஷ்ணு ஆச்சர்யமாக பார்க்க …" வொய் மா.. வொய் திஸ் கொலவெறி"
" அவன் தான் டா.. ரோசைய்யா… நம்மல… இல்லைல்லை உங்க அப்பாவா, ஏமாத்தினவன்.. அவர் கூட தான் அந்த மனுஷன் குளைஞ்சு குளைஞ்சி பேசிக்கிட்டு இருக்கிறார்" என்று பல்லை கடித்து பேசினார்.
விஷ்ணுவுக்கு அதை கேட்டவுடன், நரம்புகள் புடைக்க, தசைகள் முறுக்கு ஏற, கண்கள் சிவக்க, தடைகள் இறுக கோபம் வரும் என ரோகிணி எதிர் பார்க்க.. ஏன் நாமும் கூட தான் எதிர் பார்க்க.. ஆனால் அவனோ வெகு கூலாக, அவர்களை நோக்கி சென்று, " ஹாய் அங்கிள் " என்று கை நீட்டினான்.
ரோஹிணி வாய் பிளந்த படி நின்றார்.. ’ இவன் அவனை அடிக்க.. அட் லீஸ்ட் கோபமாவது படுவான் பார்த்த, அப்பனுக்கு தப்பமா , போய் பல்லை இளிக்கிறான்.. இவனுங்க ஜீனே சரி யில்ல’ என்று அப்பாவையும் மகனையும் தாளித்து கொண்டிருந்தார்.
அதற்குள்ளாக அவர்கள் ரோஹிணியை சமீபதித்து இருக்க, சம்பிரதாயத்திற்கு கூட ரோஹிணி சிரிக்கவே இல்லை.. கணவனை கண் கொண்டும் பார்க்கவில்லை.. அதி முக்கியமாக அருகில் இருந்த மரத்தை தான் பார்த்து கொண்டு இருந்தார்.
ரோசைய்யா பேச தயங்க, மனைவியை நெருங்க நாகு பயப்பட, இரு்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து நீ பேசேன்.. ஏன் நீ பேசேன் என்ற ரீதியில்.. விஷ்ணு வெகு சுவாரசியமாக பார்த்து கொண்டு இருந்தான்.
வேறு வழியின்றி ரோசைய்யாவே ஆரம்பித்தார், " தங்கச்சிக்கு என் மேல கோபம் இருக்க தான் செய்யும்… அப்போ ஏதோ புத்தி கேட்டு போய் செஞ்சுட்டேன்… மா.. மன்னிச்சுக்கோ.. இப்போ அது எல்லாத்தையும் சரி செய்திடுறேன்.. இந்த அண்ணனை மன்னிச்சு, என் பொண்ணை உங்க வீட்டு மருமகளா ஏத்துக்கணும்.. தங்கச்சி பத்தி எனக்கு தெரியாதா என்ன.. உன் தங்க மனசுக்கு என் பொண்ணை நல்லாவே பார்த்துப்ப.. " என்று தன் தொப்பையுடன் கஷ்டப்பட்டு குனிந்து , இரு கை கூப்பி பேசினார்.
விஷ்ணு அம்மா அருகில் சென்று, மிக மெதுவாய் " ம்மா.. ஆடே வாலண்டீயரா வந்து பிரியாணி போட சொல்லுது, நீங்க ஏன் இப்போ பிரியாணி பிடிக்காத வெஜ்டெரியன் போல முகத்தை வைச்சு இருக்கீங்க… அவனை வைச்சு செய்யுறதை விட்டு.. அப்புறம் எல்லாம் சான்ஸ் கிடைக்காது…"
மகனின் பேச்சில் அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு, ரோசைய்யா புறம் திரும்பி, மிதப்பாக ஒரு பார்வை பார்த்து, " ம்ம்.. " என்றார்.
இந்த அளவு பேசியதே போதும் என்று நண்பர்கள் மகிழ, இனி தான் இருக்கு இருவரும் என்று தெரியாமல்..
நாகேந்திரன் வீட்டு பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்க.. இவர்கள் அனைவரும் ரோசைய்யா வீட்டிலேயே தங்கி வைக்க பட்டனர்.. திருமணம் முடிந்து அதன் பின், அங்கே செல்லலாம் என்று.
முதல் மாடியில் ரோசைய்யா குடும்பம் மற்றும் உறவினர்கள் தங்க, இரண்டாம் மாடியில் இவர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டது.. விரைந்து தனக்கான அறையில் சென்று புகுந்து அறை கதவை அறைந்து சாய்த்து விட்டார் ரோஹிணி..
பின்னாடி வந்த நாகேந்திரன் திரு திருவென விழித்து கொண்டு, உள்ளே போவதா.. இல்லை இப்படியே எஸ் ஆகுவதா என்ற யோசனையில்..
தந்தையின் நிலை பார்த்து சிரித்த விஷ்ணு, இவருக்கு வேண்டும் தான் என்று விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.
மெதுவாக, கதவை திறந்து கொண்டு தலை மட்டும் உள்ளே நுழைத்து பார்க்க, கட்டில் மேல் உட்கார்ந்து, கால் மேல் கால் போட்டு கொண்டு அவரை தான் உருத்து பார்த்து கொண்டு இருந்தார் ரோஹிணி.. சிக்கியாச்சு, இனி சில்லி சிக்கனா.. இல்லை சிக்கன் வறுவலா எல்லாம் ரோஹினி கையில்.. என்ற தெளிவோடு உள்ளே சென்றார்.
அவரே பேசட்டும் என்று பார்த்து கொண்டே தான் இருந்தார் ரோஹிணி, " ரோஹி... உனக்கு என் மேல கோபம் இருக்கும்.. நான் உன்னை கேட்ககாம இப்படி கல்யாணம் வரை ஏற்பாடு பண்ணியிருக்க கூடாது தான்.. அன்னைக்கு என்ன நடந்து னா……" என்று தொடங்கியவர்….
" என்ன.... டார்டாய்ஸ் காயில் சுத்தி.. ஃபிளாஷ் பேக் சொல்ல போறீங்களா…" என்றார் நக்கலாக.. நாகு தலையை சொரிந்து கொண்டே…ஒரு அசட்டு சிரிப்பு…
"ரொம்ப இழுக்கமா.. டக்குனு சொல்லி முடிங்க"
" அன்னைக்கு நான், நம்ம வீட்டுக்கு இங்க வந்தப்போ.. ரோசைய்யா என்னை பார்க்க வந்தான், எனக்கும் அவனை பார்த்த போது, பயங்கிறமா கோபம் தான் வந்தது…"
ரோஹிணி அவரை சுற்றி வந்து ஒரு முறை அவரை மேலும் கீழும் பார்த்து, " நீங்க… கோபமா… அதுவும் பயங்கர கோபமா.. ம்ம்….சரி.. கண்டினுயூ . கண்டினுயூ"
"நிஜமா ரோஹி்… அப்படியே அவனை செவ்வுலேயே இரண்டு விட்டு ஏன்டா இப்படி பண்ணினே.. கேட்கலாம்னு பார்த்தேன்.. அதுக்குள்ள அவனே என் காலுல விழுந்து, என்னை மன்னிச்சிடு னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டான்"
நீங்க அப்படியே.. மன்னிச்சிடீங்க..
" ஹி.. ஹி.. ஃபர்ஸ்ட் இல்லை ரோஹி்.. அப்புறம் ரொம்ப கெஞ்சினான்.. கூடவே.. அந்த தொழிலில் நமக்கு சேர வேண்டிய பாதி ஷேரை கொடுத்துடுறேன் சொல்லிட்டான்.. அதுவும் 50 பேர்செண்ட் ஷேர்.. அவனுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு தானாம்… அந்த பொண்ணையும் கட்டிக்கிட்டு மொத்த கம்பனி பொறுப்பையும் நம்ம பையனையே பாத்துக்க சொல்லிட்டான்.. அப்புறம் நாமும்.. இந்த ஊருலேயே செட்டில ஆகிடலாம்... நம்ம வீட்டை கூட... இப்போ அவன் தான் மராமரத்து பண்ணித்தறான்.. கூடவே மேல இன்னும் ஒரு மாடி கட்டிகிட்டிருக்கான்.. இவ்வளோ நாள் நாம கஷ்ட பட்டதுக்கு பலன் கிடைச்ச மாதிரி இருந்துச்சு… கோபத்தை பிடித்து தொங்கி கிட்டு இருக்கிறதை விட.. இப்படி ஓத்து ஒண்ணு மன்னா வாழலாம் தான் சரி சொன்னேன்.. " என்ற நீண்ட விளக்கம் கொடுத்தார்..
இன்னும் ரோஹிணி யோசனையுடன்...
" என்ன ரோஹி…இன்னும் யோசனையாவே இருக்க…"
" உங்க நண்பர்… அவ்வளோ எல்லாம் நல்லவர் இல்லையே… அதான் யோய்ச்சிகிட்டு இருக்கேன்.. இதுக்கு பின்னாடி என்ன உள்குத்து இருக்கும்னு" வழக்கமாக பெண்ணின் எச்சரிக்கை புத்தி தலை தூக்க..
" இதுல அவனுக்கு என்ன லாபம் சொல்லு, அவனுக்கு பின்னாடி அவன் பொண்ணை பார்த்துக்க நல்ல குடும்பம் வேணும் தான், இப்படி யோசிச்சு செய்றான்.. "
" ஆனாலும்.. நீங்க எங்களை கேட்காம.. இப்படி வாக்கு கொடுத்து இருக்க கூடாது… அதுவும் விஷ்ணு கிட்ட ஒரு வார்த்தை கேட்காம… அவன் மனசுல வேற யாரும் இருந்தா…"
" போ.. ரோஹி.. காமெடி பண்ணாதே… நம்ம பையனாவுது காதலிக்கிறதாவது… அப்படியே இருந்தாலும்.. நம்மகிட்ட சொல்லி இருப்பான்" என்றவரிடம் பேச்சில் நக்கல் சிரிப்பு ரோஹிணியிடம்..
" எதுக்கும் உன் முன்னாலேயே கேட்கிறேன் வா" என்று மனைவியை அழைத்து கொண்டு மகனின் அறைக்கு சென்றார். அப்போது தான் குளித்து விட்டு வந்திருந்தான் விஷ்ணு.. பெற்றோர்களை பார்த்து, " என்ன பா.. அம்மாவை சமாதானம் செய்த்தாச்சா…"
அசட்டு சிரிப்புடன்…" ஆச்சு.. ஆச்சு.. நாணா.."
" சொல்லுங்க என்ன சொல்லனும்.. இல்லை கேட்கணுமா"
மகனை மெச்சிய பார்வை பார்த்து, " நாணா.. அப்பா உன்னை கேட்காம செய்துட்டேன் … உனக்கு விருப்பம் தானே" என்றார் மெல்லிய குரலில்… சம்மதம் சொல்லிவிடு என்ற தொனியில்…
" அவரை தீர்க்கமாக பார்த்து, எனக்கு எப்படி பொண்ணு பிடிக்கும்னு அம்மாவுக்கு தெரியும்.. அவங்களுக்கு ஓகே நா.. எனக்கும் ஓகே" என்று அம்மாவிடம் பொறுப்பை தள்ளி விட்டு, எஸ் ஆனான்.. பெரும்பான்மையான குடும்பத்தில் நடப்பதை போல…
இப்போ நாகுவின் பார்வை ரோஹிணியை பார்த்து கெஞ்சியது..மகனின் மறைமுக எச்சரிக்கை புரியாதவர என்ன …
" ம்ம்.. வந்து, ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது.. இன்னும் பொண்ணை பெத்தவங்க பொண்ணை என் கண்ணுல காட்டல… அதே போல.. ஒரு வார்த்தை வாங்கனு கூப்பிடல பொண்ணை பெத்த அந்த புண்ணியவதி… இப்படி ஒரு குடும்பம்" என்று தான் பிள்ளை பெற்றவள் என்ற கெத்தை ஆரம்பித்தார் ரோஹிணி..
விஷ்ணு நமட்டு சிரிப்புடன், நாகு.. என்னாகுமோ மனைவியின் இந்த புது பரிமாணம் என்ற தவிப்பில்.. பேசி கொண்டே மாடியில் இருந்து கீழே இறங்கி, நடு ஹால் சோஃபாவில் அமர்ந்து, இந்த கல்யாணம் நடக்கனுமா … வேண்டாமா… என்றார் மிக சத்தமாக…
அங்கே.. தேனியில்… மொத்த குடும்பமும் ஹாலில் ஆஜராக… வழக்கம்போல நரசிம்மரை நாட்டாமையாக வைத்து, பஞ்சாயத்து… " அதுக்கு தான் அப்போவே சொன்னேன்.. வேலையும் வேணாம்.. ஒன்னும் வேணாமுனு... சீக்கிரமா கட்டி கொடுத்திடலாம்.. இப்போ பாருங்க.. இந்த சிருக்கி செஞ்ச வேலைய" என்று சரசு ஒப்பாரி வைக்க.. மல்லி வாயில் முந்தியை வைத்து குலுங்கி குலுங்கி அழ, பாசமலர்கள் எல்லாம்.. விச்சு அருவாள் சகிதம்....அண்ணிகள் குசுகுசு வென்று தங்களுக்குள்.. அது என்ன விசயம்னா… நம்ம விஷ்ணுவும்.. சௌமினியும் அன்னைக்கு பைக் ல போனதா.. ஏதோ ஒரு நல்ல உள்ளம் பார்த்து, கொளுத்தி போட்டுட்டான்.. அவ்வளவு தான்.. இங்கே பத்திகிட்டு எரியுது..
" டேய் வல்லபா.. நீ கம்பபட்டி தரகன வர சொல்லு, டேய்.. ஆம்னிய எடுடா… சென்னைக்கு போகலாம்" நாட்டாமை தீர்ப்பு சொல்லியாச்சு..
விதி வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தது… இப்ப லைட் ஆ ஜெர்க் ஆனது நம்ம கியூபிட்க்கு.. " என்னடா.. எல்லோரும் மொத்தமா கிளம்பிட்டாங்க.."