ஆழி 17

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

17

 

பரபரப்புக்கு கொஞ்சம் குறைவில்லாத திங்கள் கிழமை காலை.. எப்போதும் நிதானமாக கிளம்பும் விஷ்ணு இன்று வித்தியாசமாய்.. விஷ்ணுவா என்று ஆச்சரியப்படும் வண்ணம்.. அவன் அறையில் பாட்டு அலற, பாட்டுக்கு ஏற்ற நடன அசைவுடன் உற்சாகத்துடன் ஆடி கொண்டே கிளம்பினான்.. 

 

மிஸ்டர். ப்ரபொக்சனாய் இருக்கும் அவனின் அறை, இன்று அக்மார்க் பேச்சுலர் அறை போல, பொருட்கள் சிதறி கிடக்க, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல, கிளம்பியவன் தன் லேப் டாப் பேக்கை எடுத்து மாட்டியவன் அசடு வழிய அப்படியே நின்றான்.

இவ்வளவு நேரமும் இவன் செய்த அலப்பறைகளை மேவாயில் கையை வைத்து, பார்த்து கொண்டு இருந்தார் ரோஹிணி… அன்னையை பார்த்ததும் தான் இந்த அசடு வழிதல்.. 

" என்ன டா… பயங்கர குஷியா கிளம்புற… " 

தன் அன்னையின் இரு கைகளையும் பற்றி ஒரு சுற்று சுற்றி விட்டவன், " சும்மா ம்மா" என்றுவாறு கீழே இறங்கி சென்றான்.

மகனின் இந்த புது அவதாரம் அவருக்கும் மனதில் மகிழ்ச்சியை கொடுத்தது.. அவனுடன் இறங்கி சென்று, மகனுக்கு சாப்பாடு பரிமாறியவாறு அவனை பார்த்து கொண்டு இருந்தார். " போதும் போதும் மா.. உங்க மகனை ரசிச்சது… இன்னக்கு என்ன புதுசா.. இரண்டு கை.. இரண்டு கால் முளைச்சு இருக்கா.. என்ன" என்று அம்மாவின் சமையலை ரசித்து ருசித்து கொண்டே கேட்டான்.

" இரண்டு கை.. இரண்டு கால் இருந்தா கூட இப்படி பார்க்க மாட்டேன்… ஆனா.. எப்போதும் இறுக்கமாக இருக்கிற உன் முகம் இப்போ தான் ..சிரிப்போட .. நல்லா களையா … கம்பீரமாக… அவ்வளோ மேன்லியா இருக்க… எப்போதும் இப்படியே நிறைஞ்ச சந்தோஷசதோட இருக்கணும்" என்று இந்த சந்தோஷத்துக்கு ஆயுசு அற்பம் என அறியாது மகனின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்.

விஷ்ணுவும் மென்னகையோடு, " அப்பா எப்போ வராங்க… போய் மூணு நாள் ஆச்சு"

" ஆமாம் தம்புடு… அங்க எல்லாம் சரியா தான் இருக்குனு சொல்கிறார்.. ஆனாலும் எனக்கு அப்பா ஊருக்கு போனதில் இருந்தே மனசு கலக்கமாவே இருக்கு…"

" அது ஒண்ணும் இல்லை மா… நீங்க இரண்டு பெரும் ஜோடி கிளியா சுற்றி கிட்டு இருந்தீங்களா… அதான். அம்மா நீங்க வேணும்னா இன்னைக்கு ரெஸ்ட் எடுங்க.. நான் கொஞ்சம் ஆபீஸ் இருந்து சீக்கிரம் வந்து கடைக்கு போய் பார்க்கிக்கிறேன்.." 

" யாரு.. நீ.. ஆபீஸ் இருந்து சீக்கிரம்… போடா… என் மருமகளுக்கு செக்யூரிட்டி வேலை பார்த்துட்டு தான் நீ வீட்டுக்கே வர… இதுல சீக்கிரம் வரனாமாம்… " என்று அவனை வாரியவரை வெட்க சிரிப்புடன் பார்த்தான்.

மகனது சந்தோசத்தை கண்டு மகிழ்வுடன், அவர் சிரித்து கொண்டே…" எனக்கு ஒரு ஐடியா தோணுது, பேசாம.. சௌமியை ஒரு டிபார்ட்மெண்ட் கடை பார்த்துக்க சொன்னா என்ன.." என்று கேட்டவரை " தாயே.. என் காதலுக்கு ஆப்பு வைக்காதீங்க… ஏதோ இப்போ தான் கொஞ்சம் ஸ்மூத் ஆ போகுது" என்றவாறே அவன் ஆபிஸ் கிளம்பினான்.

ஆஃபிஸ் போகும் மகனின் இந்த உயிர்ப்பு நிலைக்க வேண்டுமென ஆண்டவனிடம் பிராத்தனை செய்தார் ரோஹிணி..

விஷ்ணுவின் புது புராஜக்ட் அவன் எதிர்பார்த்ததை விட மிக நன்றாகவே சென்றது. புராஜக்டை தான் அனாலிசிஸ் செய்து கொண்டிருந்தான். பிறகு ஒவ்வொருவரின் கோட் பற்றிய விபரங்கள், அவற்றின் குவாலிட்டி இவற்றை பார்த்து தன்னுடைய குறிப்புகளையும் சேர்த்து அவனுடைய சீனியருக்கு மெயில் செய்தான்.

பிறகு, இன்றைய வேலைகளில் பார்த்து கொண்டு வந்தவனுக்கு.. சௌமினியின் போல்டரில் இருந்த ஃபைல் எல்லாம் எரர் காண்பித்தது. யோசனையுடன் திரும்பவும் பார்க்க, அதே தான் ’ஏன்... இப்படி தப்பு தப்பா செய்யுறா…. ’ என்று நெற்றி சுருங்க யோசித்தான்.

பின் இண்டர்காமில் பிரணவை அழைத்து, சௌமினி பற்றி கேட்க அவர்கள் சிக் ரூமில் என்ற செய்தியில், ’ என்னாச்சு..’ உடனே சுஜிதவை வர சொன்னான்.

" என்னாச்சு மினிக்கு.. நேற்று நல்லா தானே இருந்தா… திடீரென்று என்ன??" சுஜிதாவிடம் கேள்விகளாக துளைத்து எடுத்தான்.

" அது.. அன்னிக்கு வெளியில் போன போது, கடல்ல நினைச்சிட்டா போல.. அது ஒத்துகலை.. இரண்டு நாளாக இருமல்.. சளி.. கொஞ்சம் இருந்தது.. இன்னைக்கு கொஞ்சம் ஜாஸ்தி ஆகிடுச்சு.. கூடவே அதுக்காக சிரப் குடிச்சா... அதிலிந்து தூங்கி தூங்கி.. வழியுற.. அதான் பிரணவ் சர் அவளை சிக் ரூம் போக சொல்லிட்டாங்க.." என்று விவரம் சொன்னவளை கையசைத்து போக சொன்னான்.

’ அப்பவே.. சொன்னேன்.. கேட்க மட்டேனுட்டா... இப்போ எப்படி அவளை பார்க்க.. சிக் ரூம் போனா.. ரூமர் கிளப்பி விட்டுவாங்க.. இவ என்கிட்ட சொல்லாம ஏன் அவன் கிட்ட போய் சொன்ன.. இடியட்.. இடியட்" என்று அவளை தாளித்து கொண்டிருந்தவன். பிறகு அவளோட ஐடியில் நுழைந்து, அவளுக்கு ஒதுக்கப்பட்ட கோட் களை மிக விரைவாக முடித்தான். ஹேக் செய்வது எல்லாம் விஷ்ணுவிற்கு கை வந்த கலை.. 

சௌமினி வந்தவுடன் தன்னை வந்து பார்க்குமாறு பிரணவுக்குக் கட்டளை இடவும் மறக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து சிக் ரூமில் இருந்து வந்தவள், தன் பணியை செய்ய போல்டரில் பார்க்க, ஆச்சர்யத்தில் கண்ணை விரித்தாள்.. அவளுடைய அனைத்து கோட்களும் செய்து முடிக்க பட்டு இருந்தது. அவளுக்கு தெரியும் தானே, அது தன்னவன் வேலை என்று.. 

சிறிது நேரம் கீபோர்ட்டை தட்டி கொண்டிருந்தாள் வேலை செய்வது போல....நோடிபிகேஷன் வர என்ன என்று திறந்து பார்க்க, " வேலை செய்யுறது போல..நடிச்சது போதும் டி" விஷ்ணு தான்..

இவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, ’ நம்மை நோட் பண்ணரதே இவன் வேலை’ 

” எனக்காக வேலை செய்ய .. என் மாமா.. என் புருசன்.. என் பி.எம் இருக்குற போ.. நான் ஏன் வேலை செய்யணும்" இவள் பதில்..

" என்னடி… இத்தனை பேர சொல்லுற" அவன் வம்பு இழுக்க..

குத்து வதை போல ஸ்மைலிகளை இவள் தட்டி விட... பதிலுக்கு முத்த ஸ்மைலிகளை அவன் அனுப்ப…சௌமினி உடல் நிலை விசாரிக்க வந்த சுஜி, இவர்களின் இந்த ஸ்மைலி விளையாட்டை பார்த்து தலையில் அடித்து கொண்டு சென்றாள்.

சிறிது நேரம் வேலை செய்வதை போலவே இருந்தவளை, பிரணவ் அழைக்க..

" மிஸ் சௌம்னி .. ஆர் யூ ஓகே நோவ்?

" எஸ் சர்.."

" உங்க ஒர்க் முடிச்ச உடன்.. வி.பி சர் வர சொல்லி இருக்கார்.." "இன்னும் கொஞ்சம் இருக்கு சர்.. முடிச்சிட்டு போய் பார்க்கிறேன் சர்" என்று பவ்யமாக கூறி விட்டு தன் இடத்திற்க்கு சென்று மீண்டும் வெறும் கீபோர்ட்டை தட்டி கொண்டே இருந்தாள் வேலை செய்வது போல…

சுஜி இவளின் இந்த நடிப்பை ஆவென பார்க்க.. சௌமினி அவள் வாயை மூடி, " வேலையை பாருங்க.. அண்ணியாரே "" என்றாள்.

பிரணவ் அவள் சொன்னதை அப்படியே விஷ்ணுவிடம் சொல்ல.. ’ கொழுப்பை பாரு இவளுக்கு’ என்று சிரித்து கொண்டான்.

ஒரு வழியாக அவள் தன் வேலை முடிந்ததை போல காட்டி கொண்டு விஷ்ணுவின் அறை நோக்கி சென்றாள். தன் இருக்கையில் ஆடி கொண்டே, அவள் வருவதை பார்த்தவன்.. " வேலை ஜாஸ்தியா .. " என்றான் சிரிப்பை அடக்கி கொண்டு..

அவளும் மிதப்பாகவே, தன் விரலை எல்லாம் நெட்டி முறித்து.. " ஆமாம் வி.பி. சர்… நிறைய கோட் செய்ய வேண்டி இருந்தது" 

இருக்கையில் இருந்து எழுந்தவன், " அடிங்க… " என்று அவள் அருகில் வர, " அச்சோ .. " என்று ஓடினாள். இரண்டே எட்டில் அவளை பிடித்தவன், முகம் நோக்கி குனிய , தள்ளினாள்.. " ஏண்டி.." என்று கையில் கிடைத்த தின்பண்டத்தை பிடிங்கிய பிள்ளை போல அவன் சிடுசிடுக்க..

" எனக்கு.. சளி.. இருமல்.. அப்புறம் உங்களுக்கு தொதிக்கும்.."

" உனக்கு கொரோணாவே இருந்தாலும், எனக்கு நோ அப்ஜெக்சன்" என்று மீண்டும் முன்னேற..

" பிளீஸ்.. வேண்டாம் மாமா" என்ற அவளின் கெஞ்சலில், " போடி" என்று விட்டு தன் இருக்கைக்கு சென்று அமர்ந்து விட்டான்.

அவனின் அந்த செல்ல கோபத்தில், அவனிடம் நெருங்கியவளை அவன் கண்டு கொள்ளாமல், தன் லேப் டாப் பில் தலையை கொடுக்க, சௌமினி இரு கையையும் இடுப்பில் வைத்து அவனை முறைத்தாள்.

 பின் அவன் மடியில் உட்கார, அதை எதிர் பார்க்க விஷ்ணு ஆச்சரியத்தில் விழி விரிக்க, " ஷாக் குறைங்க… மாமா" என்ற அவள் குழைவில், அவனுள் புது ரத்தம் பாய்ந்தது போல இருந்தது.

அவனிடம் நெருங்கி அமர்ந்து, மெல்ல தன் ஒற்றை விரலால் அவனின் முகம் அளக்க, விஷ்ணுவின் இதயம் தரிகிட.. தரிகிட.. தான். இப்போது அந்த விரல் அவன் நெற்றியை வருடி, மூக்கை அளந்து, மீசையை ஆராய்ந்து, அவன் உதட்டில் பயணம் செய்து, அங்கேயே விளையாட.. அதற்கு மேல் அவள் விரல் செய்த வேலையை தனதாக்கியது அவன் உதடு…

 இருவரும் காதல் கடந்து, மோகத்தில் மூழ்கி, தங்களை மறந்து இருந்த நிலையில், இம்முறை கரடியாக அவனின் ஃபோன் இசைத்தது..

அதில் கலையதவனாக மீண்டும் மீண்டும் அவன் சௌமினியிடம் புதைய, மீண்டும் மீண்டும் அவன் ஃபோன் அலற, " ச்சை… நம்மை சுற்றி கரடியாவே இருக்குதுங்க…" போனை பார்க்க.. அவன் அன்னையிடம் இருந்து வந்தது. இப்படி இடையில் எல்லாம் அழைப்பர் இல்லை அவர்.. சௌமினியை எழுப்பி அருகில் உள்ள இருக்கையில் அமர வைத்தவன்.. 

என்னவா இருக்கும் என்ற யோசனையுடன் போனை அட்டெண்ட் செய்தான். " ம்மா என்று இவன் அழைக்கும் முன், " தம்புடு… தம்புடு… " அதற்கு மேல் பேச முடியாமல் அவர் திணற, " அம்மா .. ரீலாக்ஸ்.. ரீலாக்ஸ்… என்னாச்சு உடம்பு எதுவும் சரியில்லையா??"

விஷ்ணு அம்மா என்னாச்சு என்றவுடன் சௌமினி எழுந்து வந்து, அவன் அருகில் நின்று என்ன வென்று பார்க்க... அவன் ஃபோனில் தொடர்ந்தான்.

" இல்லை.. இல்லை.. அப்பா… அப்பா…"

இருக்கையில் இருந்து எழுந்தே விட்டான் விஷ்ணு.." அப்பாவிற்கு என்னாச்சு மா.." என்றான் பதட்டத்துடன்.. 

" அது.. அவருக்கு. ஒன்னும் இல்லை.. " அவர் குழப்ப… 

" ம்ம்மா.. தெளிவா சொல்லுங்க… எனக்கு டென்ஷன் ஆகுது"

" நீ உடனே.. வீட்டுக்கு கிளம்பி வா.. தம்புடு… இட்ஸ் எமர்ஜென்ஸி…" என்று விட்டு போனை வைத்து விட்டார்.

என்ன வென்று கேள்வி உடன் நோக்கிய சௌமினிடம், யோசனையாக அவளை பார்த்து, " என்னனு தெரியல… மினி.. அம்மா ரொம்ப டென்ஷன் ஆ பேசுறாங்க.. உடனே வீட்டுக்கு வா. சொல்லுறாங்க.. சம்திங் ஃபிஸ்ஸி… இப்படி அம்மா எப்போதும் நடந்து கொண்டதே இல்லை.."

" மாமா.. நல்லா இருக்காங்க தானே…"

" .ம்ம் .. அது தான் புரியல.. அப்பானு ஏதோ சொல்ல வராங்க..ஆனா சொல்ல முடியாம திணறுராங்க…"

" இப்போ.. என்ன செய்ய போறீங்க"

" நான் உடனே இப்போ கிளம்பியாகனும்.. வீட்டுக்கு"

" நானும் வரவா…"

" வேண்டாம் டா.. தேவை இல்லா பேச்சு வரும் இங்க ஆஃபிஸில்… எனக்குனா கூட பரவாயில்லை.. உனக்கு உன் கேரியர் பத்தி எதுனா பேசினா… வேண்டாம் டா"

ஓகே.. நீ கிளம்பு… என்றவன்.. அவளை இறுக்கி அணைத்து விடுவித்தான்… " கவனம்.. மினி.. "அவனிடம் தலை ஆட்டி விட்டு, அவனை திரும்பி திரும்பி பார்த்தவாரே சென்றாள். இது தான் அவனை கடைசியாக பார்க்கிறோம் என்று அறியாமல்.

வீட்டுக்கு தன் ஆடியில் பறந்து சென்றவன், பார்த்தது, அழுதழுது முகம் கண்கள் எல்லாம் வீங்க… அமர்ந்திருந்த அன்னையை தான்.

" ம்மா.. என்னாச்சு…" என்று கூறி கொண்டே சென்றவனை ஓடி வந்து அடைத்து கொண்டு அழுதார் ரோஹிணி..

"ம்மா… காம் டவுன்… ஃபர்ஸ்ட் உட்காருங்க… என்னாச்சு சொல்லுங்க"

தலை குனிந்து அமர்ந்து இருத்தவர், " தம்புடு .. உங்க அப்பா… " என்று திக்கி திணறியவரை பார்த்து.. " ம்மா.. சொல்லுங்க அப்பாவிற்கு என்ன"

" உங்க அப்பா… இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு.. உனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணி இருக்கார்.. பொண்ணு அவர் ப்ரெண்டோட பொண்ணாம்" என்ற இடியை அவன் தலையில் இறக்கினார்.

காலையில் இருந்து இருந்த அந்த இலகு முகம் மறைந்து, இறுக்கம் வந்து குடி கொண்டது விஷ்ணுவிடம்.

விதி.." நான் என்னுடைய கேம் ஸ்டார்ட் பண்ணிட்டேன் " என்றது கியூபிட்டை பார்த்து.. கியூபிட் உன்னால் முடிந்ததை செய் என்று அலட்சியமாக தன் கையில் இருந்த வில்லை ஆட்டி கொண்டே சிரித்தது.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top