16
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
காதலித்து பார்!!!
ரோஹிணிக்கு அன்று ஏனோ மனது சரியில்லை.. கணவரின் இந்த பயணம் என்ன செய்ய இருக்கிறது அவர்களது வாழ்வில்..அவரின் மனது பலவாறு அவரை குழப்பியது. கலங்கிய மனதுடன் நின்றவரை பார்த்து, " ரோஹி.. என்னாச்சு… உன் முகமே சரியில்லை… "
" பாவா… என்னமோ மனசு சரியில்லை.. என்னனு எனக்கு சொல்ல தெரியில்லை.. ஆனா மனசு கலக்கமா இருக்கு"
" வேற ஒன்னும் இல்லை டா ரோஹி.. நான் ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு போறது உனக்கு மனசு கலக்கமா இருக்கலாம்.. நான் அங்க நம்ம வீட்டை பார்த்திட்டு உடனே வந்துடுவேன்.. டா.."
கணவனின் மார்பில் சாய்ந்து , " தெரியல பாவா.. உங்களை போக மனசு விட மாட்டேங்குது"
" இப்படி.. இருந்தா.. எனக்கும் தான் போக மனசு வர மாட்டேங்குது.. நாம வேணா ஒரு யூ டர்ன் போட்டு போகலாமா? " என்றவரது பேச்சு புரியாமல் ரோஹினி பார்க்க, அவர்கள் அறையை கண்ணால் காண்பிக்கவும், அவர் மார்பில் பொய்யாக ஒரு குத்து குத்தி, " நீங்க சிக்ஸ்டி போடா போறீங்க பாவா…"
" அறுபதிலும் ஆசை வரும்… ரோஹி"
தன் கணவர் தன்னை சமாதானப்படுத்த தான் இவ்வாறு இலகுவாகப் பேசுகிறார் எனப் புரிந்து, வெளியூர் செல்லும் அவரை சஞ்சலப்படுத்த விரும்பாமல், மலர்ந்த முகத்துடன் விடை கொடுத்தார் ரோஹிணி. விதி என்ன வைத்து காத்து இருக்கோ…
ஆனாலும் கலங்கும் மனதை கட்டுபடுத்த முடியாமல் தான் கடவுளே தஞ்சம் என அவரின் விருப்பமான பெருமாள் கோவிலுக்கு புறப்பட்டார்.
தன் மகன் வேறு தனக்கு வைத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்..
சௌமினியின் அந்த பிள்ளை விளையாட்டு தனக்கு ஆப்பு ஆக முடியும் என தெரியாத விஷ்ணு, பிடித்தமே இல்லாமல் தான் குங்குமத்தை அவள் நெற்றியில் இட்டான். ஆனால் அன்னையின் குரலில் ஜெர்க் ஆகி , திரும்பியவன் தப்பிக்கும் வழி இன்றி மொத்தமாக மாட்டினான் அம்மாவிடம்..
மாயா கண்ணன் வெண்ணெய் திருடி உண்டு.. அம்மாவிடம் மாட்டியதை போல, விஷ்ணுவும் தன் திருட்டுத்தனம் வெளிப்பட்டு காதலியுடன் மாட்டிகொண்டான் திரு திரு விழியுடன்…
"ம்மா.. " என்ற வார்த்தை தொண்டை குழி தாண்டி வெளி வரவில்லை அவனுக்கு..
இது ஏதும் அறியாத சௌமினி, அவனை மாட்டி விட்ட தோடு மட்டுமின்றி போட்டு தள்ளவும் வகை செய்தாள்.
" அம்மா.. குங்குமம் வைச்சிட்டார்.. அதுவும் தாயார் பிரசாதம் வேற, வைச்சே ஆகனும்னு ரொம்ப பிடிவாதம்.. என் மேலே அவ்வளோ அன்பு.. காதல்.. பியார் எல்லாம்.." என்றாள் வெட்கத்துடன்..
" குங்குமம் அவரே வச்சு விட்டாரா…" என்ற நூல் விட்டார் ரோஹிணி..
" பின்னே… அம்மா, சொன்னா நம்பமாட்டீங்க.. என் வீட்டுகாரருக்கு தெய்வ பக்தி ரொம்ப அதிகம்.. எவ்வளோ டைட் ஒர்க் இருந்தாலும் என்னை வார வாரம் கோவிலுக்கு கண்டிப்பா அழைச்சிட்டு வந்துடுவார்" என்று ரோஹிணி விட்ட நூலில் விஷ்ணுவை நன்றாக கோர்த்து விட்டாள்.. அவள் அறியாமலேயே…
’டோட்டல் அஹ் பத்த வைச்சிட்டா… ஆஸ்திரேலியா காடு மாதிரி அம்ம்பூட்டும் அவுட்..’ என்ற மனதில் மினியை திட்டி கொண்டே அன்னையை நிமிர்ந்து பார்க்க, அவரோ கழுத்தில் மண்டை ஓடு இல்லாத பத்து கை பத்திர காளி போல நின்று கொண்டிருந்தார்..
’ இப்படியா வந்து மாட்டனும்.. அப்போவே கோவிலுக்கு கூப்பிட்டா.. ஒரு எட்டு போய்ட்டு வந்து இருக்கலாம்… மிஸ்டர் . பாலாஜி நல்லா வச்சு செய்யுறீங்க.. பல நாள் ஆசை போல உங்களுக்கு ’ என்று பெருமாளுக்கு ஷாட் கொடுத்தான்…
மெல்ல நிமிர்ந்து அன்னையையும் மினியையும் மாறி மாறி பார்த்தான். ரோஹிணி கண்கள் கங்குகள் போல மின்ன, எங்கம்மா பார்வையே சரியில்லையே.. என்று அம்மாவை கண்களால் கெஞ்ச, அவரோ யாரு டா நீ அற்ப மானிடா எனும் விதமாக பார்க்க..
சௌமினியை பார்க்க அவளோ அடுத்த பிட் போட ஆயித்தமாகி, அவனிடம் நெருங்கி நின்று, கிசு கிசுப்பாக " மாமா.. நான் உங்களை பத்தி சொன்னதும், அந்த அம்மா அப்படியே ஷாக் ஆகிட்டாங்க போல… இன்னும் உங்களை பற்றி இரண்டு மூணு பிட்டு சேர்த்து போடவா" என்றவளை பார்த்து கை எடுத்து கும்பிட்டு, " அம்மா.. போதும் மா.. இதுவரை நீ போட்ட பிட்டே இந்த ஜென்மத்துக்கும் தாங்கும்.. கொஞ்சம் வாயை முடுடி.."
" இல்ல மாமா…." என்றவளின் வாயை மூடியவன், அன்னையை பார்க்க, அவர் அதே சேம் பொசிஷனில்..
பின் ஒருவாறு என்றைக்கு இருந்தாலும் எதிர் கொள்ள வேண்டியது தானே என்று மனதில் கூறி கொண்டு, சௌமினி கையை பிடித்து அன்னை அருகில் சென்று, " ம்மா… இவள் சௌமினி .. உன் மருமகள்" என்று அவன் அறிமுகத்தில் ’ என்னது அம்மா வா ’ இம்முறை ஜெர்க் ஆகுவது சௌமினி முறை..
சட்டென்று அவனின் பின் சென்று மறைந்து கொண்டாள்.. " மருமகள மட்டும் தான் கூப்பிட்டு வந்தியா.. பிள்ளைகள் எல்லாம் கூப்பிட்டு வரலையா?" என்ற அவரின் கேள்வியில் அவரின் மன வேதனை புரிய, தன் அன்னையை அணைத்து கொண்டான்.
அவனை தள்ளிய வாரே, " போ டா.. போ.. போ…" என்று விலக்கியவரை இன்னும் இறுக தோள் வளைவில் அணைத்தவன், " ம்ம்மா… நீ எனக்கு தாங்க்ஸ் தான் சொல்லணும், பாரு உனக்கு பெண் பார்க்கிற வேலையை மிச்சம் பண்ணிட்டேன்.."
" அது மட்டும் தானா…" என்று இழுத்தவரை.. " ம்மா" என்று கொஞ்சல் குரலில் கூறி தாஜா செய்தான்.
அவனை தள்ளியவர், சௌமினி அருகில் சென்று, அவள் கை பிடித்து, " நானும் சராசரி அம்மா போல தான், கொஞ்சம் கோவம் இருக்க தான் செய்யுது, ஆனா.. இவன் மனசையும் மாத்தி இருக்க பாத்தியா, அதனாலேயே உன்னை எனக்கு புடிச்சிருக்கு…" அவரின் இந்த வெளிப்படையான பேச்சு சௌமினியை கவர்ந்தது.
எல்லா அம்மாக்களையும் போல தான் ரோஹிணியும், சட்டென்று மகனின் காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. என்னை விட பொண்ணு அவனுக்கு யார் நல்லா பார்த்திட முடியும் என்கிற சராசரி இந்திய தாயின் எண்ணம்…
" அய்த்த… நீங்க யாருனு தெரியாம.. உங்கன கிட்டவே அவரை புருசன்.. அப்படினு…" என்று வார்த்தை வராமல் திக்கியவளை பார்த்து மென்னகை ஒன்று புரிந்தார் ரோஹிணி. சகஜ நிலைக்கு பேச்சை மாற்ற , " உன் பெயர் என்ன மா"?"
விஷ்ணு முந்தி கொண்டு , " சௌடாம்பிகை அலைஸ் மினி" என்று கூற , அவனை பார்த்து வாயில் விரல் வைத்து காட்டி விட்டு, மீண்டும் சௌமினியிடம் தொடர்ந்தார்.
" அம்மா அப்பா எல்லாம் எங்க இருக்காங்க.. " என்று அவளை பற்றி விசாரிக்க.. தன் பற்றி எல்லாம் சொன்னாள் சௌமினி.
பின் தன் அரச்சனை கூடையில் இருந்து குங்குமத்தை எடுத்து அவளுக்கு இட்டு விட்டு, அவள் கன்னம் வருடி அவளிடம் விடை பெற்றார்.
"சீக்கிரம் சௌமியை ஹாஸ்டலில் விட்டுட்டு வீட்டுக்கு வா" என்ற மகனிடம் கூறி விட்டு சென்றார். இவர்களும் அவருடனே சென்று அவர் காரில் கிளம்பியவுடன், சௌமினி பக்கம் திரும்பியவன் "ஏண்டி ஒரு நாள் தானடி வெளியில வந்தோம்.. அதுக்கே இப்படி ஆப்பு வைச்சிட்ட… உன்னை…" என்று பொருமியவனை பார்த்து, " எனக்கு என்ன அவங்கள பார்த்த உடனே உங்க அம்மானு தெரியுமா என்ன… நான் எதார்த்தமாக அவங்கள கூப்பிட்டேன்… நீங்க பதார்த்தம் ஆவீங்கனு எனக்கு எப்படி தெரியும்.. மாமா" என்று கண் இமைகளை கொட்டி அப்பாவி போல பேசியவளை , " இன்னைக்கு வீட்டுக்கு போன பின் தெரியும், நான் என்ன பதார்த்தம் ஆகுறேனு.." என்று வண்டியை கிளப்பி, அவளை ஏற்றி கொண்டு கிளம்பினான்.
மீண்டும் அவனின் தோளை சுரண்டியவளை பார்த்து, " தாயே. … இன்னைக்கான ஆப்பு கோட்டா முடிந்தது..போதும்… விட்டுடு…" என்றவனை பார்த்து இவள் நகைக்க.. முன் பக்கம் இருந்தே அவன் தோளில் இருந்த அவள் கையை பற்றி தன்னை நோக்கி இழுக்க, அவள் இன்னும் அவனை நெருங்க, சிரிப்பு மறந்து நாணம் குடி கொண்டது பெண்ணிடத்தில்..
அவள் கையை தன் இடுப்பை சுற்றி போட்டு இன்னும் இறுக்கியவனின் முதுகில் அவளின் மென்மைகள் அழுந்த, அதை கண்டு அவள் பின்னோக்கி விலக, இவனும் அவளுடன் சேர்ந்து பின்னோக்கி நகர்ந்து செல்ல.." மாமா.. என்று சிணுங்கியவளின் குரல் கூட அவனுக்கு கிறக்கமாக…
" சொல்லு டி" என்றான் மென்மையான குரலில்.. "பீச் போகலாமா…"
" மணி இப்போவே ஆறுக்கு மேல இருக்கும்.. ஹாஸ்டலுக்கு டைம் ஆகாது.."
" நைட்டு ஒன்பது வரை அலோ பண்ணுவாங்க… ஒரு தடவ கூட்டிட்டு போங்க… பிளீஸ்"
" எதுக்கு பிளீஸ்… உனக்கு ஹாஸ்டல் போக லேட் ஆகும் தான் கேட்டேன்… போகலாம்.. ம்ம்ம்" என்று இழுத்தவனை " என்ன…இழுக்குறீங்க"
" ஒரு கண்டீஷன் இருக்கு…"
." என்ன…"
" நீ பின்னாடியே போகாம… முன்னாடி வா" என்றவனின் முதுகில் ஒன்று போட்டாள்.
" பாரு…ப்பாரு… நீ மட்டும் எல்லா ரைட்ஸூம் எடுத்துக்கிற… எனக்கு கொஞ்சம் கூட தர மாட்டேங்குற… சரியான போங் ஆட்டம் டி…" என்று குழந்தை போல குறை கூறுபவனை பார்த்து, அவள் சிரித்தபடியே பின்னிருந்து அணைத்து கொண்டாள். அவனும் வண்டி வேகத்தை கூட்டி பீச் நோக்கி சென்றான்.
பீச் சில்.. கூட்டம் அதிகமாக இருக்க, அவள் இவ்வளவு கூட்டம் இருக்கு, யாராவுது தெரிந்தவர்கள் இருந்தால்… பார்த்தால் என்று வர தயங்க.. அவன்
சற்று தூரத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பீச் பக்கம் அழைத்து சென்றான்.
கடலை கண்டவுடன் காதலனை மறந்து , கடல் அலையுடன் ஐக்கியமாகி விட்டாள். இவன் மணலில் உட்கார்ந்து அவளின் விளையாட்டை தான் பார்த்து கொண்டிருந்தான்.
சிறு பிள்ளை போலவே.. அலைகளில் கால்களை நனைப்பதும், பின் எடுப்பதுமாக தன்னை மறந்து விளையாடினாள். எல்லா பெண்களுக்குள்ளேயும் ஒரு குழந்தையும் உண்டு.. அது தனக்கு நெருக்கமானவர்களிடமே வெளிப்படும். சௌமின் அவ்வாறே விஷ்ணுவின் அருகாமையில் குழந்தை என விளையாடி கொண்டிருக்க, திரும்பி விஷ்ணுவை பார்க்க.. அவன் அவளை தான் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான்.
ஓடி வந்து, அவன் கை பிடித்து தூக்கி" நீங்களும் வாங்க…"
" ம்ஹூம்ம்… நீ போ… நான் வரலை.."
" ஏன்…"
" நீ கடலை ரசிக்கிற… நான் என் நிலவை ரசிக்கிறேன் " என்று கூற , " போதும்.. போதும் ரசிச்சது, வாங்க.. கொஞ்ச நேரம் நிற்கலாம், " என்று அவனை வம்படியாக அழைத்து சென்றாள் .
அவளுடன் கை கோர்த்து கடலில் நிற்கும் அந்த தருணம் அவனுக்கு மனதில் ஒரு இனம் புரியா இதத்தை பரப்பியது..
அவள் மெது மெதுவாக அவனை பிடித்து கொண்டு முன் நோக்கி செல்ல , " போதும் மினி, இதுக்கு மேல வேண்டாம்.. உனக்கு பழக்கம் வேற கிடையாது… சொன்னா கேளு" என்றவனின் முகம் பார்த்து அவள் சிணுங்க… அவனும் அவளின் அந்த முக சிணுங்கலை ரசிக்க.. ஒரு அலை வந்து இருவரையும் ஒரு புரட்டி புரட்டியது…
தொப் என்று இருவரும் விழ, விஷ்ணு பழக்கம் ஆதலால், மூச்சை பிடித்து கொள்ள, ஆனால் சௌமினியோ அதை அறியாதவள் ஆகையால் மூக்கு வாய் என கடல் நீர் புகுந்து விட்டது.
அவளை தன்னுடன் இறுக்கி பிடித்து வண்ணமே, மேல எழுந்தான். அவளோ குடித்த தண்ணீரை இருமி இருமி வெளியேற்றி கொண்டு இருந்தாள். மெதுவாக அவளின் முதுகை நீவி விட்டு, தலையை தட்டி கொடுத்து என்று அவளை சரி படுத்தினான். எல்லா நீரும் வெளியேறிய பின்னர், முகம் சிவக்க.. மூக்கு நுனி அதற்கு மேல் சிவக்க.. கண்கள் இரண்டும் கலங்கி நீர் கோர்த்து நிற்க.. மேல் மூச்சி.. கீழ் மூச்சி வாங்க நின்று இருந்தவளை பார்த்து.. அவனுக்கு தாங்காமல் அணைத்து கொண்டு, " ஒன்னும் இல்லை டா.. பயந்திட்டியா என்ன"
இருக்கும் சூழல் மறந்தது சௌமினிக்கு, அவனின் அந்த அணைப்பு தேவையாய் இருக்க, அவளும் அவன் மார்பில் நன்றாக ஒட்டி கொண்டாள் தாய் பறவையிடம் தஞ்சம் புகும் சேய் பறவையென..
சிறிது நேரம் அங்கேயே நடந்து, அவளின் உடைகள் ஒருவாறு காய்ந்த பின், அவளை அழைத்து கொண்டு விடுதி நோக்கி சென்றான்.
காலை போலவே.. விடுதி இருந்து சற்று தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு, அவளை பார்க்க.. அவள் அந்த கடல் கொடுத்த பாதிப்பிலே இருக்க, மெல்ல அவளை தன் பக்கம் தோளோடு அணைத்து, மெல்லிய முத்தங்களால் அவளின் முகத்தை அளந்தவனை, அவள் இம்முறை தள்ளவில்லை… விரும்பியே ஏற்றாள்..
விடுதிக்குள் அவள் செல்வதை பார்த்து விட்டு, விஷ்ணு வண்டி எடுத்து சென்றான்.
விதி … செல்லும் விஷ்ணுவை பார்த்து நக்கலாக சிரிக்க.. கியூபிட் அதை விட நக்கலாக விதியை பார்த்து சிரித்தது…" நௌ த கேம் ஸ்டார்ட்ஸ்" என்று கூறி கொண்டே…