15
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காதலித்து பார்!!!
இரண்டு மாதங்களில் காதலும், புராஜெக்ட் டும் வெற்றிகரமாக சென்றது விஷ்ணுவிற்கு.. அன்று தேசிய அளவிலான பந்து என அறிவித்து விட, விஷ்ணுவின் ஆபீசும் விடுமுறை.. பொதுவாக விடுமுறை தினங்களில் அவர்களின் டிபார்ட்மெண்ட் கடைக்கு சென்று விடுவான்.. இன்று அதுவும் விடுமுறை என்பதால், தன் மினியோடு செலவிட முடிவெடுத்து, அவளுக்கு போன் செய்தான்.
" மினி பேபி… கெட் ரெடி.. நான் இன்னும் ஒன் ஹவர்ல வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன்"
" இன்னும் ஒன் ஹவர் ஆ… நான் இப்போ தான் எழுந்தேன்… எவ்வளோ வேலை இருக்கு … பிளீஸ்.. பிளீஸ்… ஒரு டூ ஹவர் கழிச்சு வாங்களேன்.."
" ம்ஹூம்.. அப்பவும் நீ இதை தான் சொல்லுவ… ஏண்டி.. எனக்கே.. எப்போதாவது தான் நேரம் கிடைக்குது… நீ வரீயா இல்லையா?"
" சரி.. சரி… ஆங்கீரி பேர்ட் ஆகாதீங்க... ரெடி ஆகிடுறேன்"
விசில் அடித்து கொண்டே மாடி இறங்கியவன், பெற்றோரை பார்த்து புன்னகையுடன் அவர்களிடம் அமர்ந்தான்.
" நாணா.. நீ இன்னக்கு ஃப்ரீ தானே.. அப்பா அங்க நம்ம சொந்த ஊருக்கு போறாங்க.. நீயும் கூட போன நல்லா இருக்கும்.. "
" ம்மா.. அங்க ஏன் இப்போ?"
"மீதம் இருக்கும் அந்த வீட்டையும் வித்துடலாம்… என்று அவர் இழுக்க… " ரோஹி… முடியவே முடியாது… நான் அங்க போறது.. வீடு என்ன நிலைமையில் இருக்குனு பார்க்க தான்.. விற்க இல்லை.. அது தான் நம்ம மண்ணு, அந்த ஊருக்கு நமக்கும் உள்ள தொடர்பே அந்த வீடு தான்.. அதையும் வித்துட்டா… தொப்புள் கொடி அறுந்த மாதிரி… இனி இப்படி பேசாதே" என்றார் நாகேந்திரன்..
விஷ்ணுவிற்கு அப்பாவின் அந்த மனதை புரிந்து கொள்ள முடிந்தது, மெல்ல அவர் கையை பிடித்து அழுந்த பற்றி கொண்டான். மகனின் புரிதல் அப்பா பெருமையாய் உணர்ந்தார். மகனை தோளோடு அணைத்து கொண்டு, " நாணா… எக்காலத்திலும் எந்த காரணத்திற்காகவும் அந்த வீட்டை வித்துடாதே.. அது முன்னோர் பூமி ரா, வழி வழியா வரது… எனக்கு.. உனக்கு பின்னாலையும் வரணும் … எவ்வளோ தான் அடுத்த ஊருல கோடீஸ்வரனா வாழ்ந்தாலும், நம்ம ஊருல இருக்கிற அந்த வாழ்வு என்னைக்கும் இதயத்துக்கு நெருக்கமானது.." என்ற தந்தையின் பேச்சில் அவர் எவ்வளவு தூரம் அவர் பிறந்த மண்ணை பிரிந்து வந்ததில் வருத்த மடைந்து இருக்கிறார் என புரிய, அவரை அணைத்து கொண்டான்.
" நீங்க நினைக்கிற மாதிரியே ஒரு நாள் நாம் அங்க போகிற நேரம் வரும் பா… அந்த வீட்டை எதுக்காகவும் நான் இழக்க மாட்டேன் எந்த நிலையிலும்.. சீக்கிரம் அந்த வீட்டை ரினோவைட் பண்ணிடலாம்"
மகனின் பேச்சில் உள்ளம் குளிர்ந்தது பெற்றவருக்கு.. " நான் ஊருக்கு கிளம்புறேன் நாணா..நீ வேண்டாம்.. அம்மாவை.. கடையை பார்த்துக்கோ" என்றார்.
அப்பாவிடம் சரி என்றவன், அம்மாவிடம் " நான் கொஞ்சம் வெளியில போறேன்.. ம்மா….மதியம் சாப்பாட்டுக்கு எதிர் பார்க்காதீங்க. வெளியில் பார்த்துக்கிறேன் " என்ற மகனை அர்த்த புஸ்டியுடன் தலை ஆட்டி விடை கொடுத்தார்.
தன் ஆடியை எடுக்க சென்றவன், பிறகு ஒரு மர்ம சிரிப்புடன் தன் ஹோண்டாவை எடுத்து கொண்டு சென்றான். நேரே சென்றவன் சௌமினி விடுதியில் இருந்து சிறிது தள்ளி வண்டியை நிறுத்தி அவளை அழைத்தான்.
ஏற்கனவே அவனின் அழைப்பில் தயாராகி இருந்தவள், சுஜியிடம் சொல்லி கொள்ள, அவளோ " சௌமி.. உனக்கு தெரியும் இருந்தாலும் சொல்லுறேன், பார்த்து போய்ட்டு வா.. எல்லா விஷயத்திலும் ஜாக்கிரதை.. சீக்கிரம் வந்திடு.."
அவளின் எச்சரிக்கை சௌமினிக்கு புரிந்து தானிருந்தது… அவளை அணைத்து " என்னை விட.. நீ பி.எம் ஐ நம்பலாம்" என்று கூறி சென்றாள். அவளின் பதிலில் சௌமினியின் நம்பிக்கை அளவு புரிந்தது சுஜிக்கு..
வெள்ளை நிற சுடியில் தேவதை போல வந்தவளை தான் விஷ்ணு ரசித்து பார்த்துக்கொண்டு இருக்க, சம்மந்தமே இல்லாமல், அவன் வைத்த கியூட்டி பேய் பெயர் நியாபகம் வர, வாய் விட்டு சிரிக்க இருந்தவனை அவன் மனசாட்சி ’ இப்போ மட்டும் நீ சிரிச்சே … நீ செத்தடா’ என்று அவசரமாக எச்சரித்தது . அவனும் பிறகொரு நாளில் சொல்லுவோம், முதல் முறை வெளியில் செல்லும் போது ரணகளம் வேண்டாம் என்று நல்ல முடிவாய்..
ஒரு ஹெல்மெட்டை அவளிடம் கொடுத்தவன், " சேப்டி ஃபார் ஆல் ... போட்டுக்க .. ம்ம்.. சாய்ஸ் யூவர்ஸ்… எங்க போகலாம்.."
" முத தடவை உங்க கூட.. வெளியில் வரேன்.. கோயிலுக்கு போலாமா… " என்றவளை பார்த்து, முகம் அஷ்ட கோணலானது அவனுக்கு. அம்மாவை ஒரு பார்வையில் அடக்க தெரிந்தவன், காதலி கேட்கவும், முழித்தான் எவ்வாறு மறுப்பது என்று.. அதுவும் முதல் முறை கேட்பவளிடம்..
பேச்சை மாற்ற நினைத்து, " மினி.. நான் உன்னை பார்க்க வர அவசரத்துல சாப்பிடல டா.. ஃபர்ஸ்ட் சாப்பிடலாம்.. அப்புறம் மற்றதை பிளான் பண்ணலாம். " பசி என்பவனை எப்படி மறுப்பது என்று நினைத்து, " ம்ம் சரி.. என்றாள்.
அவனும் இப்போதைக்கு சமாளிச்சாச்சு என்று நினைத்த வண்ணம், அருகில் இருந்த உணவு விடுதிக்கு வண்டியை விட்டான்.
சாப்பிட்டு முடிந்ததும், அவள் கோவில் பேச்சை எடுப்பதற்கு முன் " ரொம்ப நாளாக உன்கூட ஒரு லாங் டிரைவ் போக ஆசை டா.. போகலாமா மினி" என்ற கொஞ்சலாக மொழிந்து விட்டு, வண்டியை ஹைவேவில் விட்டான் .
சந்தோசத்துடன் அவனுக்கு தலை ஆட்டி விட்டு, அவளும் அமர்ந்து விட்டாள். அவனும் பாண்டிச்சேரி ரூட் டில் வண்டியை விட்டான். சிறு சிறு சீண்டல்கள், ஸ்வீட் நத்திங் என்று இனிமையாக சென்றது நேரம் அவர்களுக்கு. வழியில் வரும் இளநீர், தர்பூசணி என்று ஒன்றையும் விட வில்லை அவள்.. ஆசை ஆசையாக கேட்கும் மகளுக்கு வாங்கி தரும் தந்தையை போலவே தோன்றினான் சௌமினிக்கு.... ஒரு ஆண் தன் மனைவியிடம் தாயின் சாயலை தேடுவது போலவே.. பெண்ணின் மனமும் தன்னவனிடம் அன்பு , காதல் , பாதுகாப்பு தாண்டியும் தன் தந்தையின் அந்த பாசத்தையும் தேடும்.. சௌமினியும் அதற்கு விதிவிலக்கல்ல..
அது ஒரு ஹை வே ரோட் ஓரம்.. வண்டியை நிறுத்திவிட்டு அவன் ஐஸ் கிரீம் வாங்க செல்ல, சென்ற அவனை தான் வைத்த கண் வாங்காமல் காதல் பொங்க பார்த்து கொண்டிருந்தாள்.
அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொண்டிருந்தவன், ஏதோ உந்துதலில் திரும்பி பார்க்க, அவள் கண்களில் தெரிந்த காதலில் அவனுமே உருகினான்... அவன் கையில் இருந்த ஐஸ் கிரீம் போலவே..
அவள் அருகில் வந்தவன், " என்ன லூக் எல்லாம் பலமா இருக்கு… ஊர் போகிற வரை என் கற்புக்கு க்யாரண்டி உண்டா" என்று கூறிவனின் மேல் கோபம் வரவில்லை அவளுக்கு.. அவன் கையில இருந்து ஐஸ் கிரீம் ஐ வாங்கியவள், ஐஸ் கிரீம் சாப்பிடுவது தான் மிக முக்கிய வேலை என்பது போல, அதை சாப்பிட்டு கொண்டே, " டவுட்.. தான்.. எதுக்கும் பந்தோஸ்பத்து ஏற்பாடு பண்ணிக்கோங்க" என்றவளை பார்த்து அவன் தான் விழுந்து விழுந்து சிரித்தான்.
" நீ அதுக்கு எல்லாம் சரி பட மாட்டே.. "
" ஆஹ்ஹாண்… அப்புறம் சேதாரதுக்கு நான் பொறுப்பு இல்லை..மாமா..பொறுப்பு துறப்பு.. ""
" என்னடி.. நான் பேச வேண்டிய டயலாக் எல்லாம் நீ பேசுற… வர வர.. ஆண்களுக்கு இங்க பாதுகாப்பு இல்லாம போய்டுச்சு… பெண்ணாதிக்க உலகம் டா" என்று போலியாக வருத்தம் தெரிவித்தவனை முறைத்தாள். அவன் சிவந்த மூக்கு நுனியை பார்த்து, கையில் இருந்த ஐஸ் கிரீமை அதில் உரசினான்.
" எனக்கு மூக்கால சாப்பிடும் பழக்கம் எல்லாம் இல்லை" என்று உதடு சுழித்தாள்.
" ம்ஹும்.. எனக்கு அப்படி சாப்பிட்டு தான் பழக்கம்"
" பொய்.. பொய்… "
" நிஜம் டி.. இப்போ பாரு" என்றவன்.. அவள் சுதாரிக்கும் முன் தன் ஐஸ் கிரீம் ஐ அவள் மூக்கில் அப்பிவிட்டு, அடுத்த நொடி அதை சுவைத்து இருந்தான்.
அவள் ஆவென்று பார்க்க, எப்படி என்று ஒற்றை புருவம் தூக்கினான். அவளின் பிளந்த வாயையும் சுட்டி காட்டி, " அங்கேயும் … நான் ரெடி தான்.. " என்றான்..
அவன் கையில் இரண்டு அடி போட்டு, " பிராடு.. பிராடு… பப்ளிக் பிளேஸ்"
" அது என் பிரைவேட் பிளேஸ் டி"
சிரிப்பும் குதூகலமாகவே சென்றது அவர்களது அந்த நாள். வண்டியில் திரும்பும்போது, அவன் தோளை சுரண்டியவள், " கோவிலுக்கு போகனும் ..இன்னும் சாக்கு எதுவும் சொல்லாமல் கூட்டு போங்க…"
தன்னை கண்டு கொண்டாள் என புரிந்து, கொஞ்சம் தூரம் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்றவனை, கொஞ்சி கொஞ்சியே போகும் வழியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு அழைத்து வந்தாள்.
உள்ள வர தயங்கியவனை இழுத்து தான் சென்றாள், பெருமாளை தாயாரை வணங்கி, பிரசாதம் பெற்று, சுற்று உள்ள தெய்வங்களையும் வணங்கியவாரே வந்தாள் சௌமினி.. இவன் வெறும் பார்வையாளராக வர... அவனை முறைக்கவும் தவறவில்லை அவள்.
" சாமி கும்பிட மாட்டேன் சொல்லுபவருக்கு அந்த பெருமாள் பெயர்… வேடிக்கையா இல்ல" என்றவளின் கேலியில், அவன் அவள் தலையில் ஒரு தட்டு தட்டி முன்னாடி சென்றான்..
" எல்லோரும் என் தலையே கார்னர் பண்ணுறாங்க .. கண்டிப்பா ஹெல்மெட் கன்பாஃர்ம்.." என்று புலம்பியவாறு அவன் பின்னே சென்றவள், அவன் கை பிடித்து நிறுத்தி, விஷ்ணுவை தன் பக்கம் திருப்பினாள்.
" என்னடி.. புளியோதரை வேணுமா"
" நான் என்ன.. சாப்பாட்டு ராமியா" என்று மூக்கு சிவந்தவளை, " பின்ன.. இல்லையா.. இது வரைக்கும் அதை ஒன்னை தாண்டி கரெக்ட் ஆஆ செஞ்சுக்கிட்டு வந்த"
" சரியான கஞ்சன் நீங்க… பேசிய பேசிய நான் பேச வந்ததை மாத்தி விட்டுறீங்க"
" சரி.. சொல்லு "
குங்குமத்தை அவனிடம் நீட்டி வைச்சு விடுங்க என்றவளை, இரு கை கட்டி தீர்க்கமாக பார்த்தான்.
" இந்த லுக் இங்க வேணாம்.. இது கோவில் மாமா" என்று அவனின் கனல் பார்வையை காதல் பார்வையாக சொல்ல, " உன்னை எல்லாம்"
" இப்போ வைக்க முடியுமா முடியாதா…"
" ம்ம் .. . இதை வைச்சா தான்.. நான் உன் புருசனா.. இல்லைனா இல்லையா.. சொல்லுடி"
" உங்க கருத்து உங்களோட .. என் கருத்து என்னோட…உங்களையா நான் வைச்சுக்க சொன்னேன்.. அப்படி சொன்னா தான் அது கருத்து திணிப்பு… நான் எனக்கு தான் வைக்க சொல்லுறேன்.." என்று லாஜிக் பேசியவளை.. என்ன செய்ய அன்று அவன் பார்க்க..
" நீங்க இப்போ வைக்கல.. அங்க போறவங்களை கூப்பிட்டு.. என் புருசன் எனக்கு பொட்டு வைக்க வெட்க படுகிறார்.. நீங்க கொஞ்சம் சொல்லுங்க னு சொல்லுவேன்" என்று மிரட்டுபவளை முடிந்தால் செய் என்று அவன் பார்க்க… முடியாமல் என்ன.. என்று இவள் பார்க்க ..
அன்று அவன் செய்ததை போல தொண்டை செருமியவளை பார்த்து அவன் நகைத்தான்.. " என்னை என்ன காமெடி பீஸ் னு நினைக்கிறீங்களா" என்று கேட்டவள்.. நிஜமாக சற்று தூரத்தில் இருந்த ஒரு பெண்மனியை பார்த்து "அம்மா இங்க கொஞ்சம் வாங்களேன்" என்றாள்..
இவன் சட்டென்று அவள் புறம் திரும்பி.." அடியே மானத்தை வாங்காதே… நெற்றியை காட்டுடி" என்று கடிந்து கொண்டே அவள் நெற்றியில் குங்குமத்தை இட்டான்.
அதற்குள் அவள் அழைத்த அந்த பெண்மணி அருகில் வர, விஷ்ணு அவருக்கு முதுகு காட்டி கொண்டு இருக்க, சௌமினி அவர்களை பார்த்து விட்டாள்.
சமாளிக்க வேண்டி.." ஒன்னுமில்லை அம்மா, இவர் என் வீட்டுக்காரர் .. என் நெற்றியில் குங்குமம் வைக்கணும்னு ஒரே அடம்.. அது தான் கோவிலில் வைக்கலாமா னு கேட்க கூப்பிட்டேன் மா.. தப்பா நினைச்சுக்காதீங்க" என்றாள்.
" புருசன் வைக்கிறது தப்பில்லை மா.." என்றவரின் குரலில் திரும்பியவன் உச்ச கட்ட அதிர்ச்சியில்…. " ம்மா… மாம்.. மீ…" என்று உளறினான்..
ஆமாம் அவள் கூப்பிட்டது ரோஹினியை தான்.
" அம்மே…" என்ற அதிர்ச்சியில் கியூபிட்… " இவள் நமக்கே ஷாக் கொடுக்குறா.. நல்
ல வேலை நமக்கு இப்படி ஒரு ஆள் இல்லை" என்றது..