ஆழி 14

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 

14

 

இருதயம் அடிக்கடி

இடம் மாறித் துடிக்கும்...

உன் நரம்பே நாணேற்றி

உனக்குள்ளே

அம்புவிடும்...

காதலித்துப் பார்!!!!

 

சௌமினி மறுக்க.. மறுக்க அவளை மருத்துவமனை அழைத்து சென்று, டாக்டர் சாதாரண காய்ச்சல் என்று கூறிய பிறகு தான் அவளை விட்டார்கள் சௌமினி குடும்பத்தினர்.. இதில் அவள் ஊசி வேண்டாம் என்று அலறியது எல்லாம் தனி கதை.

 

வழக்கம்போல வேலை முடிந்து வந்த சுஜிதா கையில் சௌமினிக்கு பிடித்த வகையில் பண்டங்களும், பழங்களும் வாங்கி வந்து இருந்தாள். உறவினரை பார்த்ததும் அவளுக்கும் மகிழ்ச்சியே, வெகு பவ்யமாக மாமன்மார்களிடம் நலம் விசாரித்து விட்டு, அய்த்தமார்களிடன் வந்து ஐக்கியமாகி விட்டாள், கையில் இருந்ததை சௌமினிடம் கொடுத்து விட்டு..

அதில் சௌமினி அம்மா மார்களுக்கு வெகு திருப்தி, ரிஷி எல்லாவற்றையும் பாராதது போல பார்த்து கொண்டிருந்தான். தன் குடும்பத்தாரை தங்கும் பெண்ணை கண்டால் ஆண்களுக்கு தனி ஒரு பாசம் வருவது இயற்கையே.. ரிஷிக்கும் அந்த சாரல் வீசியது லேசாக.. சுஜியிடம் … அதுவும் சௌமினியிடம் காட்டும் அவளின் இந்த உரிமையும் அவனுக்கு மனம் இதமாக இருந்தது.

அந்த இதத்தை ஆராய அவன் தயாரில்லை. வேண்டுமென்றே சௌமினி ரிஷியின் அருகில் பேச்சு சுவாரசியத்தில் மெதுவாக சுஜியை அமர்த்தி விட்டாள். யாரும் அதை பெரிதாக எடுக்க காணோம்.. அவரவர் தங்கள் பேச்சிலும், மகளின் பேச்சிலும் ஊன்றி விட்டார்கள். சுஜிக்கு தான், வெகு அவஸ்தையாய்.. இனிய இன்பமாய்.. அந்த உருவமில்லா பந்து தொண்டைக்கும் வயிற்றுக்கும் உருளுவதாய்.. தவித்து போனாள்.

சௌமினி அவளின் மாற்றத்தை ஒற்றை கண் அடித்து, மெதுவாக உதடு அசைத்து " என்ஜாய்.. அண்ணியாரே " என்றாள். சுஜியின் முகத்தில் வெட்க புன்னகை. ரிஷியோ பக்கத்தில் ஒரு கல் இருந்தால் கூட சுவராசியமாய் பார்த்து இருப்பான் போல, சுஜியை கண் எடுத்தும் பார்க்கவில்லை.

ஆனால் சுஜியோ அவனின் அருகாமையே போதும் என்ற கலியுக ஆண்டளாய்..

அனைவரும் வழக்கம்போல் அவர்கள் வந்த ஆம்னியில் கிளம்ப, ரிஷி தன் தங்கை தலையில் கை வைத்து ஆட்டி விட்டு சென்றான்.. அந்த பாஷை ஆயிரம் அன்பு வார்த்தைகள் விட மேலானது. எப்போதும் முறைத்து கொண்டே சுஜியிடம் விடை பெறுபவன், இன்று கீற்று புன்னகையுடன் விடை பெற்றவனை பார்த்து அவள் மயக்கம் போடாத குறை.. அவர்கள் சென்ற உடன் சௌமினியை கட்டி கொண்டு முத்த மழை பொழிந்து விட்டாள்.       

" அண்ணியாரே... உங்க வேகம் என் உடம்பு தாங்காது.. எதுக்கும் இப்போ இருந்து என் அண்ணனுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா உடம்பை கவனிக்க சொல்லணும்" என்றவளை சுஜி " போடி" என்று கூறி விட்டு, அறைக்குள் ஓடி விட்டாள் கனவு காண..

" இவ இப்படி கனவிலே , புள்ள குட்டி வரை போய்டுவா போலையே.. நாம நம்ம ஆளுக்கு ஃபோன போடுவோம்"

அப்போது தான், தன் வீட்டில் விஷ்ணு சாப்பிட்டு கொண்டிருந்தான். சௌமினி ஃபோன் கால் வரவே, எடுத்து பார்த்தான். அப்பா அம்மாவை பார்த்தவன் சாதாரணமாகவே காட்டி கொண்டு சைலண்ட் டில் போட்டு, தன் சாப்பாட்டை தொடர்ந்தான். அவளும் ஃபோன் போடுவதை நிறுத்தின பாடு இல்லை.. இவனும் எடுத்த பாடு இல்லை.. பெற்றோரை முன் எடுக்க அவன் யோசிக்க… இவளும் தொடர்ச்சியாக அடிக்க.. பெற்றோர் இவனை விநோதமாக பார்த்தனர். எப்போதும் போன் வந்தால், இரண்டு வார்த்தையில் பேசி வைத்து விடுபவன், இன்று போனை எடுக்காமல், சாப்பாட்டை அளந்து கொண்டே இருந்தான். சாப்பாடு இடையில் எழுந்து கொள்ள ரோஹிணி அனுமதிப்பது இல்லை.. எனவே சாப்பாட்டை அளந்தவனை பார்த்து, " ஒன்னு எடுத்து பேசு.. இல்லை கட் பண்ணு" என்றார். 

விஷ்ணுவும் அம்மாவிடம் சரி என்று விட்டு, ஃபோன் அழைப்பை ஏற்றான். ஹலோ என்று சொல்லும் முன், அப்பக்கத்தில் இருந்து முத்த மழை பொழிந்தாள் மினி.. சௌமினி.. 

மனதில் சந்தோசம் ஏற்பட்டாலும் அதை முகத்திற்கு கட்டாமல் உதட்டை கடித்து, கஷ்டப்பட்டு அடக்கியவன், " சொல்லுங்க.." என்றான். அவனின் பன்மை விகுதியில் அவன் பெற்றோர் கூட இருப்பதை அறிந்து கொண்ட அவள் , அவனை சோதித்தாள்.

" மாமா… போதுமா மாமா… "

"ம்ம்ம்"

" என் மாமியார் மாமனார் இருக்காங்களா.. பக்கத்துல"

" ம்ம்ம்"

" மாமா… நீங்க கொடுங்க எனக்கு..." அவன் பல்லை கடித்து கொண்டு, " ம்ம்ம்" என்றான்.

" ஆனாலும் நீங்க ரொம்ப கஞ்சம் மாமா.. நான் எவ்வளோ கொடுத்தேன்.. ஒன்னே ஒன்னு… தானே கேட்டேன்…ரொம்ப பிகு பண்றீங்க"

" ம்ம்ம்"

" இதுக்கே.. இப்படி.. நாளைக்கு உங்கள் கல்யாணம் பண்ணி… எப்படி புள்ள குட்டிகள் பெத்து..ம்ம்ஹூம்ம்" என்ற பெரு மூச்சு விட்டு அவனை வெறி ஏத்தினாள். 

மகளே.. நாளைக்கு நீ செத்தடி.. என்று அவன் மனதில் அவளை திட்டி கொண்டே அதற்கும் " ம்ம்ம்" என்றான்.

" மாமா.. மாமா.. உங்களைத்தான் மாமா… " என்று நொடிக்கொரு மாமாவை கிறக்கமாக போட்டு அவனை ஒரு வழி ஆக்கினாள் .

அவனால் அவளிடம் சகஜமாக பேச முடியவில்லை.. மேலும் அவளின் பேச்சில் உட்கார முடியாமல் நெளிந்தான். மனதில் அவளை திட்டினாலும் அவளின் அந்த குறும்பையும் குறிப்பாக அந்த மாமாவையும் ரசிக்க தவற வில்லை அந்த கணிப்பொறி காதலன்.

இதற்கு மேல் தாங்காதவனாக, " ஓகே.. யூ ஷூட் மீட் மீ அட் ஆப்ட்ர்நூன் இன் மை கேபின்" என்றதோடு போனை அணைத்து விட்டான்.. பின்ன அவள் மறுபடியும் போன் செய்தால், என்ன செய்ய.. அவனின் கணிப்பை தப்பாக்காது, அவளும் அதை தான் செய்து கொண்டிருந்தாள். அவனின் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என்றவுடன்.. கல கலவென்று சிரித்து , " மாமா .. உசார் ஆகிட்டாரு,… இனி நம்ம டர்ன்.. நாமளும் உசார் ஆகிடனும்" என்று அவனை அறிந்தவளாக அவளும் தன் போனை அணைத்து விட்டாள்.

அவசரவசரமாக உணவை முடித்தவன், இரண்டு இரண்டு படிகளாக தாவி தன் அறைக்கு சென்று கதவை சாத்தினான்.

மகனின் இந்த அவஸ்தைகளை பார்த்து, அவதானித்து கொண்டு தான் இருந்தார் ரோஹிணி, கொஞ்ச நாட்களாக மகனிடம் தெரியும் மாற்றங்கள் அவருக்கு ஒரு குறு குறுப்பை ஏற்படுத்தி இருந்தது. 

மாடி இறங்கி வரும் போது அவன் உதட்டில் நெளியும் அந்த புன்னகை.. இரவில் அவன் அறையில் ஒளிரும் விளக்கு… சில சமயம் உதட்டை கடித்து கொண்டே இருக்கும் அவன் பாங்கு.. தலை கோதி கொண்டே அவன் செல்லும் நேரங்கள்.. கண்கள் மின்ன மின்ன அவன் பேசும் ஃபோன் கால் எல்லாம் அவனின் மாற்றங்களை அன்னைக்கு சொல்லாமல் சொல்லியது தன் பையன் காதலில் விழுந்து விட்டான் என்பதை.. ஆனால் இதை அவரின் கணவரிடம் கூட இன்னும் பகிர வில்லை.. எதுவா இருந்தாலும் மகனின் மூலமே வரட்டும் என்று. அவனின் தந்தையோ வழக்கம் போல தன் தலையை நுழைத்து கொள்வார் செய்திதாளில் .. இப்போது தட்டில்..

’ என்கிட்டேவா.. இன்னைக்கு மாட்டின டி நீ" என்றவாறு போனை எடுத்து சௌமினிக்கு அழைத்தான்.. அவளின் மினியோ அவனின் குணம் அறிந்து தான் போனை அனைத்து வைத்து இருந்தாளே… மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, தன்னவளின் குரலுக்கு பதிலாய் கணினி மங்கையின் குரலில் கடுப்பாகினான் இந்த மென்பொறியாளான்…போனை மெத்தையில் எறிந்து விட்டு, ’ தப்பிச்ச்ட்டா… நாளைக்கு இருக்கு டி" என்றவாறு அவளால் கிளர்ந்து எழுந்த உணர்வு குவியலை அடக்க முடியாமல்.. தெரியாமல் தன் தலை கோதி, கண்களை மூடி சமன் படுத்த முயன்றான்.. 

மறுநாள், விஷ்ணு ஆபீஸ் நுழையவும் அவனின் கோபியர் கூட்டம் கண்களில் அதே ஆர்வத்தோடு பார்க்க.. இவன் ஏற்கனவே தன் மினி மீது இருந்த கடுப்பில் அவர்களை நோக்கி, கண்கள் வழியே கனலை கக்க… விழுந்து அடித்து ஓடியது அந்த கூட்டம்..

தன் கேபின் நுழைந்த அடுத்த கணம், ஆதர்ஷ்க்கு ஃபோன் செய்து, சௌமினியைக் வர சொல்ல அவன், அவர்கள் செமினார் ஹாலில் இருப்பதாக சொன்னான். மீண்டும் மீண்டும் எஸ் ஆகும் தன் காதலி மீது, கோபமும், தாபமும் ஒருங்கே வர, அவனும் செமினார் ஹால் நோக்கி விரைந்து விட்டான்.

இவர்கள் புராஜக்ட்க்கான புதிய அப்டேட்ஸ் பற்றி தான் அங்கே பயிற்சி நடை பெற்று கொண்டிருந்தது . நேற்றக்கு விஷ்ணு சீனியர் மேனேஜர் ரகுராம் அதை பற்றி தான் அவனிடம் விவாதித்து கொண்டிருந்தார் சௌமினியை அவன் பார்த்து விட்டு வரும் போது..

சட்டென்று நெற்றியை தேய்த்து கொண்டான்.." ச்சா எப்படி மறந்தேன்… வைரஸ் ஆப்பெக்ட் ஆன அப் மாதிரி, டோட்டல் ஆ கோலாப்ஸ் ஆகி நிக்குறேன்.. எல்லாம் இவளால… சரியான என்னை ஆட்டி படைக்கும் பேய்.. பட் கியூட்டி பேய்" என்று அவளுக்கு பெயர் வைத்தபடி ஹாலுக்குள் நுழைந்தான்.

" அவ கூட சேர்ந்து சேர்ந்து இவனும் பெயர் வைக்க ஆரம்பிச்சுட்டான்… நமக்கு பெயர் வைக்கும் முன் நாம எஸ் ஆகிடுவோம்" என்றது கியூபிட் .

செமினார் ஹாலுக்குள் நுழைந்தவன், சீனியரிடம் ஒரு தலை அசைப்புடன் அவர் அருகில் அமர்ந்து கொண்டான். அவளை பார்க்க சொன்ன மனதை கட்டுபடுத்தி விரைப்பாகவே அமர்ந்து இருந்தான். பி.எம் மோட்க்கு மாற சொல்லும் மனதை கட்டுபடுத்தி வி.பி மோட்டுலேயே மெயின்டெய்ன் பண்ணினான் விஷ்ணு ..

" நெக்ஸ்ட் செஷன் கோயிங் டூ டேக் பை அவர் ஹெட்.. வி.பி.. " என்ற பிரணவ் அறிவிப்பில் எழுந்து புரொஜெக்டர் அருகே சென்றான். அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவனின் விழிகள் சௌமினியை ஒரு ஆழ்ந்த பார்வையுடன் பதிந்து விலகியது..

" ஹாய் கைஸ்.. நாம இப்போ செய்யுற புராஜக்ட்.. ரொம்பவே முக்கியமான ஒன்று.. அதில் சில மாற்றங்கள் செய்ய போறோம் .. அதை பற்றிய அப்டேட்ஸ் தான்.. இட்ஸ் ஹைலி டஃப்.. சோ லிசென் கேர்ஃபுலி" என்று ஆரம்பித்தவன் அரை மணி நேரம் எடுத்து கொண்டிருந்தான்.

இடையிடையே கேள்விகள் வேறு.. ஒவ்வொரு முறையும் சௌமினியை உற்று பார்த்துக் விட்டு வேறு ஆளை கேட்பான்.. இவளுக்கு அவன் இவளை நோக்கும் போது இதயம் ஜம்ப் ஆகுற ஃபீல்.. ’ பி. எம்.. என் ஹார்ட்டை அது இடத்தை விட்டு விரட்டாம விட போறது இல்ல போலையே’ என்று மைண்ட் வாய்ஸ் இல் நொந்து கொண்டிருந்தாள் சௌமினி.

இம்முறை உதட்டு நக்கல் சிரிப்பில் வளைய, மாட்டுனடி என்றவாறு.. ” மிஸ். சௌடாம்பிகை " என்று அவளை அழைத்து அவள் கதற கதற கேள்வி கேட்டு துளைத்து விட்டான் விஷ்ணு..

அவளும் கண்களில் அவனை எரித்து கொண்டு, வாயை காது வரை பிடித்து இழுத்து, இளித்து விடையளித்து கொண்டிருந்தாள்.

ஒருவழியாக அவளை விட்டவுடன்.. " சர்.. ஆல்ரெடி நான் சொன்னது தான்… கால் மீ சௌமினி ஆர் சௌமி" என்றவளை பார்த்து, " இட்ஸ் ஆபீஸ்.. நோட் ஃபார் ஃபன் பிளேஸ்.. டு கால் யூ இன் நிக் நேம்" என்றான். " ஓகே.. விஷ்ணு பிரசாத் சர்" என்றாள், என்கிட்டவே வா என்ற லூக் உடன்..

 

ஹாலில் மிக மெல்லிய சிரிப்பலை எழுந்து அடங்கியது. தன் தலையை அசைத்து கொண்டு, மீண்டும் அவன் செமினாரில் மூழ்க, ’ என்னைய வளைச்சு வளைச்சு கேள்வி கேட்குற.. உன்னைய ஏதாவுது பண்ணனுமே’ என்று யோசித்தவள், மண்டைக்குள் பல்ப் எறிய.. 

ஒருமுறை அனைவரையும் சுற்றி பார்த்து விட்டு, அவனின் பார்வை எதிர் நோக்கி காத்து இருந்தாள், அனைவரையும் சுற்றி வரும் விஷ்ணு பார்வை அவளிடம் சிறிது தாமதித்து விட்டே செல்லும், இம்முறை பார்வையை பார்த்தவள், உதட்டை குவித்து கண் இமைக்கும் நேரத்தில் பல பறக்கும் முத்தங்களை அவனை நோக்கி வீசினாள். அவளின் இந்த அதிரடியில் பேச்சு மறந்துபோய் அவளை பார்த்த வண்ணம் அவன் நிற்க, விசிய புன்னகை பெண்ணவளிடத்தில்..

தன்னை உலுக்கி கொண்டு மீண்டும் தொடர, இவளும் அவனின் பார்வையின் போது தன் முத்தங்களை தொடர, நேற்று இருந்து அவளால் எழுப்பப்படும் இந்த உணர்வு குவியலை அடக்க அடக்க, இப்போது அது வளர்ந்து பெரும் பூதமாய் அவள் வேண்டுமென நின்றது…

தன் பேச்சை நிறுத்தியவன்…" ஆதர்ஷ் யூ.. கண்டினியூ " என்று விட்டு தன் இருக்கைக்கு சென்று விட்டான். சௌமினி வதனத்தில் வெற்றி புன்னகை, அவள் மாட்ட போவது அறியாமல்..

மதிய இடைவெளியில் அனைவரும் கேன்டீன் நோக்கி செல்ல, ஆதர்ஷ் வந்து வி.பி அழைப்பதாய் சௌமினியிடன் சொல்லி சென்றான். " அடிப்பாவி.. அவ்வளோ தூரத்துக்கு வந்தாச்சா… சீக்கிரம் வருவியா…இல்ல...ம்ம்" என்று கேலி செய்து விட்டு சுஜி சென்று விட்டாள்.

சௌமினி ’ அச்சோ நல்லா ஏத்தி விட்டுட்டோம் போலையே… மாட்டுனோம்’ என்றவாறு நகத்தை கடித்தவாறு நின்று கொண்டிருந்தாள். அடுத்து பிரணவ் வந்தும் அதே சொல்ல.. விரைந்து சென்றாள் அவனின் கேபினுக்கு..

உள்ளே நுழைந்தவள் அவனின் இருக்கையில் அவனை காணாமல் தேட.. பின்னிருந்து அறை கதவு சாத்தும் சத்தத்தில் அதிர்ந்து திரும்ப, கதவில் சாய்ந்து ஒரு காலை மடக்கி கதவில் வைத்து கொண்டு , ஒரு கையை பாக்கெட்டில் விட்டவாறு அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான் அவளை கொள்ளை கொள்ள போகும் கந்தர்வ கள்வனாக..

 

அச்சத்தை தாண்டிய வெட்க புன்னகை பெண்ணிடத்தில், கன்னங்கள் சூடாகி சிவக்க, விழிகள் தன்னவனை பார்க்க தயங்கி நிலம் பார்க்க, கைகளை பிசைந்து கொண்டிருந்தாள் ஓவிய பெண்ணாக..

அவளை நெருங்கி, தாடையை ஒற்றை விரல் கொண்டு தூக்கி, " இப்போ கொடுடி.. என் பொண்டாட்டி… வாங்க நான் ரெடி" என்றான்.

அவனின் பேச்சில் வெட்கம் மேலோங்க, திரும்பி நின்றவளை பின் இருந்து அணைத்து, அவனின் மீசையால் அவளின் பின் கழுத்தில் இருந்து கோலம் இட்டவாரே அவளின் கழுத்து வளைவை அடைந்தவன், " நேத்தி இருந்து … என்னை என்ன பாடு படுத்தின… அதுக்கு எல்லாம் சேர்த்து இப்போ வட்டியும் முதலுமா .. வசூலிக்க போறேன்…" என்றான். அவளின் மௌனமே சம்மதமாய்.. அவளின் இடை பற்றி திருப்பி, அவளின் இதழில் நேற்று அவள் கொடுத்த மொத்தத்தையும் மிச்சம் வைக்காமல் அவளுக்கு கொடுத்து கொண்டு இருந்தான், மென்மையாய்.. வன்மையாய்.. சத்தமின்றி…

" பார்த்தது போதும்.. வாங்க நாம போய்ட்டு நாளைக்கு வருவோம்" கியூபிட் தான் .. அட நம்மை பார்த்து தான் சொல்லுது.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top