அசுரன் 14

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அசுரன் 14 

 

 

தன் சூழ் தாங்கிய வயிற்றை பிடித்தப்படி அடி மேல் அடி வைத்து மெல்ல நடந்து வந்தாள் ஆரூஷி..!

 

ஆறு மாதம் தான் ஆகுது..! அதற்குள் அவளது மணி வயிறோ ஒன்பது மாதம் போல பெரியதாக இருந்தது.

 

முன்பு போல வேகமாக நடக்க முடியவில்லை... 

 

சட்டென்று உட்கார முடியவில்லை..

 

குனிந்து எதையும் எடுக்க முடியவில்லை, ஏன் அவளது செருப்பை கூட சரியாக மாட்ட முடியவில்லை..! 

 

பசிக்கிறது என்று அதிகமாக சாப்பிட முடியவில்லை..!

 

அப்பாடா என்று சிறிது நேரம் உட்கார முடியவில்லை..!

 

அவளுக்கு பிடித்தபடி மல்லாக்க படுத்து உறங்க முடியவில்லை..!

 

அவள் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிட முடியவில்லை..!

 

அத்தனை முடியவில்லையும் அவளால் இலகுவாக கடந்து வர முடிந்தது. அவ்வப்போது அவள் வயிற்றில் முட்டும் அந்த கொழுக்கு முழுக்கு சிறு கை கால்களால்..!

 

இலகுவாக பத்து மாதத்தை கடந்து விடலாம் என்று எண்ணியிருந்தவளால் ஆறாவது மாதமே அவ்வப்போது மூச்சு முட்டியது..!

 

தான் எடுத்த முடிவு தவறோ என்று சில சமயம் அவள் உள்ளே குழப்பிக் கொண்டு மனதால் உழண்டு விடிய விடிய தூங்காமல் கூட இருந்திருக்கிறாள். எல்லாம் பேறு காலத்தின் ஹார்மோன்கள் சதிராடல் தான்..!

 

பெண்களின் இந்த பேருக்கால ஹார்மோன்களின் சதிராடலை அவர்கள் வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த அம்மாவும் மாமியாரும் அண்ணியும் அக்காவும் அத்தையும் ஏதோ ஒரு வழியில் கண்டுபிடித்து அவர்களுக்கு தங்கள் கதைகளை கூறி மனமாற்றத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் ஆருஷிக்கு தான் அதுக்கு வழி இல்லையே?

 

ஒட்டுமொத்தமாக குடும்பத்தை பிரிந்து வந்துவிட்டாள் அல்லவா? 

 

ஆம்.. ராவண்னை மட்டுமல்ல அவளின் பிரிய குடும்பத்தையும் பிரிந்து வந்து விட்டாள்..!

 

அந்நேரம் அவளின் ஃபோன் சினுங்கியது.

 

“ஹே ஆருஷி.. எங்க இருக்க?”

 

“இங்க தான்.. செகண்ட் ப்ளொருல.. ஸ்கேன் முடிச்சாச்சு. ரிசல்ட் ஆக வெயிட்டிங்” என்றாள்.

 

“ஸ்கேன் ரூமுக்கு வெளில எதுக்கு வெயிட் பண்ற ஆருஷி? கீழ கைனகாலஜிஸ்ட் செக்ஷன் வா.. அங்க தான் ரிசல்ட் வரும். மேடம் இருக்காங்க.. பார்த்து வா என்ன?” என்றான் சுக்ரேஷ்.

 

“ஓகே.. சுக்ரேஷ்.” என்றவள், தன் தோழி வர்ஷாவுக்கு அழைப்பெடுக்க ஃபோனை பார்த்துக் கொண்டே வந்தாள்.

 

லிப்டில் நுழைய போனவளை தடுத்து, ஒரு பேஷண்டை ஏற்றி செல்ல “மேம்.. நீங்க அடுத்து வாங்க அர்ஜெண்டா இவங்கள கூட்டிட்டு போகணும்” என்றார் செவிலியர்.

 

“நோ இஸ்ஸூஸ்..” என்றவள், சிறிது நேரம் காத்திருக்க லிஃப்ட்டோ அவள் தளத்திற்கு வருவதாய் இல்லை..! 

 

‘ஒரு மாடி தானே.. மெதுவாக இறங்கி விடுவோம்’ என்று சூல் தாங்கிய வயிற்றை ஆதூரமாக ஒற்றை கையால் அணைத்தப்படி இறங்கினாள்.

 

இறங்கும்போதே அவளது தோழி வர்ஷாவிற்கு மீண்டும் அழைத்தாள். ஆனால் 

அழைப்போ போகவில்லை.

 

“ச்ச.. டவரே கிடைக்க மாட்டேங்குது.. என்ன ஹாஸ்பிட்டலோ?” என்றபடி அங்கே இங்கே ஃபோனை காட்டியபடி நடந்தவள், அடுத்த நிமிடம் படியை சரியாக கவனிக்காமல் காலை வைக்க.. அதுவோ அவளை சறுக்கி விட்டது. நிலைத் தடுமாறி விட்டாள் ஆருஷி. கையில் இருந்த ஃபோனோ தவறி படியில் விழுந்து குதித்து விழுந்து தரைத்தளத்தை அடைந்து சிதறி கிடக்க…

 

அதை பார்த்து “ஐயய்யோ… அடுத்த நாம் தானா? ஆண்டவா என் பேபி..!” என்று இரு கைகளாலும் வயிற்றை அவள் கோர்த்து விழுவதற்கு முன், வன் நரம்புகள் ஓடிய வலிய கரம் ஒன்று அவளை வயிற்றோடு அணைத்து பிடித்து விழாமல் தடுத்திருக்க..

 

“அய்யோ.. செத்தோம்..!” என்று இறுக கண்ணை மூடி இருந்தவள், தான் காப்பாற்றப்பட்டதை உணர்ந்து ஆசுவாசமாய் மூச்சை விட்டவள் தன்னை தாங்கியது யார் என்று திரும்பிப் பார்க்க..

 

விழுந்தால் கூட இந்த அளவுக்கு அதிர்ச்சி இருந்து இருக்காது போல அந்த அளவு பேர் அதிர்ச்சி அவளது முகத்தில்..!

 

அதே சமயம் “ஆருஷி.. பார்த்து வரக்கூடாது” என்றபடி அங்கே வந்து இருந்தான் சுக்ரேஷ்.

 

“அது.. அது வந்து..” என்று இருவரையும் அவள் மாறி மாறி பார்த்து நின்று இருக்க..

 

அங்கே நின்று இருந்தவனை பார்த்து அதிர்ந்தான் சுக்ரேஷூம்.

 

அதிர்ச்சி ஆத்திரமாகப் பெருக “அவ மேல இருந்து கை எடு..!” என்று நெருங்கி வந்து அவன் கையில் இருந்து ஆருஷியை விடுவிக்க முயன்றான். சுக்ரேஷால் முயல மட்டுமே முடிந்தது..!

 

அதற்குள் இரு கைகளால் அவளை அதி மென்மையாக தூக்கி தன் அருகில் நிறுத்திக் கொண்டவன் சுக்ரேஷை பார்த்து முறைத்தான்.

 

“என்ன ரொம்ப அக்கறையோ?” என்றான் சுக்ரேஷ் பல்லை கடித்த படி.. 

 

“என்னை விட வேற யார் அதிக அக்கறைப்பட முடியும்?” என்று கோணலாக வளைந்தது அந்த நெடியவனின் இறுக்கமான இதழ்கள்..

 

“அவ என்னோட ஃபியான்சி..” என்றான் சுக்ரேஷ் அவனின் அலட்சியத்தில் வெகுண்டு.

 

“இருந்துட்டு போகட்டும்.. ஆனா அவ வயித்துல வளர்ற குழந்தை என்னது..! அதுக்கு ஒரு ஆபத்துனா.. அப்பனா.. அங்க முதல்ல நான் நிப்பேன்” என்றான் ராவண் திரேந்திரன் மாறவேல்..!!

 

“டேக் கேர் பாப்பா.. ஆல்சோ அவர் பாப்பா” என்று அவன் பேச்சில் உறைந்து நின்ற ஆருஷியின் வெளிறிய கன்னங்களில் லேசாக தட்டி விட்டு சென்றான் ராவண்..!

 

“ஆருஷி.. ஆர் யூ ஓகே?” என்றப்படி சுக்ரேஷ் அவள் கையை பிடிக்க..

 

“ஆஃப் கோர்ஸ் நாட்..! ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் ஓகேவா தான் இருந்தேன். ஆனா இப்போ..??” என்றவள், ராவண் என்ற திசையை பார்த்து வெறித்து நின்றாள்.

 

அதற்குள் முத்து முத்தாக அவளுக்கு வியர்வை பூத்திருந்தது.

 

“நீ ரொம்பவே டென்ஷன் ஆகுற..! பதட்டப்படாத..!” என்று அவளை கைப்பிடித்து அழைத்து வந்து அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தான் சுக்ரேஷ்.

 

பார்த்து பார்த்து அவளை பதமாக பார்த்துக் கொள்ளும் சுக்கிரேஷின் மீது நன்றி உணர்ச்சி பெருகியது ஆருஷிக்கு..!

 

“என்னால உனக்கு ரொம்ப கஷ்டம் மாமா” என்றாள் சோர்வாக..!

 

அரிதாக தான் அவள் சுக்ரேஷை மாமா என்று அழைப்பாள்.

 

“அசடு..! எதையும் யோசிக்காத இப்போ..!” என்று அவள் கையில் லேசாக அழுத்தி கொடுத்தவன் அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டான். அவளது கிட் பேக்கிலிருந்து மாதுளை ஜூஸ் எடுத்து “ஃபர்ஸ்ட் இதைக் குடி..! அதுக்கப்புறம்.. டாக்டர போய் பாக்கலாம்” என்றதும் அவளுக்கும் இராவண்னை கண்டதும் நா வறண்டு இருந்தது. ஒருவித படபடப்பு..! அது தணிக்க அந்த பழச்சாறு இப்போது தேவையாய் இருக்க மறுக்காமல் வாங்கிக் குடித்தாள்..!

 

அருகில் இருக்கும் சுக்ரேஷை அன்போடு பார்த்தாள் ஆருஷி. அவள் கண்களில் துளிர்த்தது அன்பு மட்டுமே..!

 

உடன் பிறந்தவர்கள் மீது காட்டும் அக்கறை பாசம் அது..! அதை தாண்டிய நேசம்??

 

வாய்ப்பே இல்லை இவன் மீது..! அதைதான் ஏற்கனவே ஒருத்தன் கொத்திக் கொண்டு சென்று விட்டானே..!!

 

இவளது கர்ப்பம் இன்னும் வீட்டில் யாருக்கும் தெரியாது..!

 

சொல்லும் தைரியமும் இவளுக்கு இல்லை. அதுவும் திருமணத்திற்கு முன் வயிற்றில் குழந்தையோடு நின்றால்??

 

பாரம்பரியமிக்கு குடும்பத்தில் பிறந்தவள்.. பல தலைமுறைகளாக தொழிலில் கோலாச்சி வருபவர்கள்.. பாத்திரக்கடல்களை ஆள்பவர்கள்.. இப்படி ஏகப்பட்ட பெயர்களை கொண்ட குடும்பத்திற்கு தன்னால் இழுக்கு வேண்டாம் என்று மறைத்து விட்டாள் என்பதைவிட..

 

தாய்க்கு தாயாய் வளர்ந்த அவளது ஆச்சி.. தாயை விட அன்பு காட்டிய அவளது அத்தை.. இவர்கள் இருவரிடமும் பொய் சொல்ல தான் அவளுக்கு மனம் முரண்டியது..!

 

ரூபிணி தான் அவளை அத்தனை பேசி வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பி வைத்ததே..!

 

எத்தனை அன்பு அத்தனை நம்பிக்கை வைத்தார்கள்..! அவர்தளது நம்பிக்கையை உடைத்து இப்பொழுது வயிற்றில் குழந்தையோடு வந்திருக்கிறாள் என்று சொன்னால்.. அவர்களது மனநிலை எப்படி இருக்கும்? தாங்குவார்களா? இத்தனைக்கும் அவர்கள் வீட்டின் ஒற்றை வாரிசு அவள் அல்லவா?

 

இல்லை இல்லை.. அவள் மட்டுமா வாரிசு? இந்த வரிசை கொடுத்தவன் தானே தலையாய வாரிசு..!!

 

ஒருவேளை இருவரும் காதலித்து வீட்டுக்கு தெரியாமல் கூட திருமணம் செய்து அந்த திருமணத்திற்கு பின் இந்த குழந்தை தரித்திருந்தால்.. மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பாள். அதை வீட்டில் சொல்லத் தயங்கியும் இருக்க மாட்டாள்..!

 

இவர்கள் காதலின் சின்னத்தில் விளைந்த நெல் முத்தே இக்குழந்தை என்று கூறும் அளவிற்காவது இருந்திருந்தால் கூட கண்டிப்பாக மறைத்திருக்க எண்ணம் வந்திருக்காது ஆருஷிக்கு.

 

வெளிப்படையாக இருவருமே வந்து கூறி தங்களை மன்னித்து விடுமாறு கூறும் நிகழ்வு நடந்திருக்க கூடும்..!

 

ஆனா இக்குழந்தை காதலுக்கு உதித்ததல்லவே..!

 

காமத்துக்கும் பழிவாங்கும் உணர்ச்சிக்கும் உதித்தது ஆயிற்றே..!

 

பின் எங்கணம் கூற முடியும்? 

 

அந்தப் பழிவாங்கும் படலமே தன்னை பகடைக் காயாக வைத்து தன் குடும்பம் அவமானப்பட வேண்டும்.. தன் குடும்பம் மற்றவர்களால் வசை பட வேண்டும்.. என்று தான் அவனது எண்ணம்.. பழிவெறி எல்லாம்..!

 

அந்த எண்ணம் பலிக்க நான் விடமாட்டேன்..!

 

இந்த குழந்தை இருப்பது என் குடும்பத்திற்கு தெரியாமலே போகட்டும். தெரிந்தால் தானே அத்தனை மன கஷ்டமும்? 

 

ஒருவேளை தெரியும் படி சூழ்நிலை வந்தால்.. என்னோடு சேர்த்து இந்த குழந்தையையும் இந்த உலகத்தின் பார்வையில் இருந்து மறைத்து விடுவேன். 

 

எப்படி என் தாத்தாவின் ஆண் வாரிசு தொலைந்து போனதோ.. உறவுகளிலிருந்து மறைந்து போனதோ.. அதுபோலவே பெண் வாரிசும் தொலைந்து போனதாகவே இருக்கட்டும்.

 

ஆனால் வீணான அவதூறுகளால் என் குடும்பம் அசிங்கப்பட விட மாட்டேன் என்று எண்ணும் வலுப்பெற்று இதோ சுக்ரேஷையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மும்பை நகரத்தில் ஏதோ ஒரு மூலையில் கண்காணாத இடத்தில் வந்து இருக்கிறாள்.

 

வீட்டிலோ அனைவரிடமும் ஒரு வருடம் பிசினஸ் சம்பந்தமான கோர்ஸ் என்று பொய் கூறியே வந்திருந்தாள்.

 

மும்பையில் இருக்கும் அவளது தோழி வர்ஷா தான் அவளுக்கு அனைத்து உதவியும் செய்வது. அவளோடு தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறாள் ஒரு அப்பார்ட்மெண்டில். அவ்வப்போது மட்டும் சுக்ரேஷ் வந்து செல்வான். 

 

எவ்வளவு முறை ரூபிணியும் கேட்டு பார்த்துவிட்டார்

 

 

“ஏன் டா.. இங்க இருக்கிற மும்பை தானடா? பிளைட்ல பறந்தா ரெண்டு மணி நேரம். என்னையும் கூட கூட்டிட்டு போடா.. புள்ளைய பார்த்தே ரொம்ப நாளாச்சு” என்று அத்தனை அடம் பிடிப்பார். ஆனால் ஒத்துக் கொள்ளவே மாட்டான் சுக்ரேஷ். 

 

“அம்மா.. உன்னை எல்லாம் இழுத்துட்டு என்னால போக முடியாது. எனக்கே நிறைய வேலை இருக்கு. இவளும் போய் படிப்புனு அங்க உக்காந்துட்டா. நானும் அப்பாவும் தான் அவ்வளவு விலையும் பார்த்துக்கிறோம். நான் போனனா அவள பாத்துட்டு ரெண்டு மணி நேரத்துல திரும்பி வந்துடுவேன். ஆனா நீ என்ன பண்ணுவ.. ஒரு நாள் ஃபுல்லா அவளோட இருக்கணும் சொல்லுவ.. அந்த ஒரு நாள் ரெண்டு நாள் ஆகும்.. அப்படியே ஒரு வாரம் கூட ஆகும். நீயும் கூட இருனு என்னையும் புடிச்சு தங்க வைப்ப.. இதெல்லாம் எனக்கு சரி வராது..! அவளை பாக்கணும்னா வீடியோ கால் பண்ணி பாத்துக்கோ.. என்ன ஆள விடு..!” என்று சற்று கடினமாகவே அம்மாவிடம் கூறிவிட்டு வருவான். 

 

மும்பை வந்து இவளிடம் தான் அத்தனை பாடுவான். “இதெல்லாம் தேவையா டி உனக்கு? தேவையா சொல்லு?” என்று அத்தனை சண்டையிடுவான்.

 

“இப்படிப்பட்ட குழந்தை தேவையா? இத அபார்ட் பண்ணிடலாம் இல்ல..” என்று கேட்டாலும் ஒத்துக்கொள்ள மாட்டாள்.

 

“இது எங்க வீட்டு வாரிசு டா..!” என்றதும் அவன் முறைத்து பார்க்க…

 

“உண்மை அது தானே? என்ன இருந்தாலும் இறந்து போன என் மாமா அவரோட வாரிசு..! எங்க தாத்தா வெளில சொல்லேனாலும் இன்னமும் மனசுக்குள்ள பையனா ரொம்ப தேடுறாரு.. எங்க மாமா உயிரோட இல்லைன்னா அவருக்கு தெரியவே தெரியாது..! தெரிஞ்சா மகன் சாவுக்கு நானும் ஒரு காரணம்னு அவர் நொறுங்கவும் வாய்ப்பு உண்டு. ஏற்கனவே எங்க அம்மா அப்பா இறந்ததுக்கு ரொம்ப மனசுக்குள்ள அவ்வளோ கவலைப்படாரு.‌ ஆனா வெளில எதுவும் காட்ட மாட்டார் மனிசன்..! அட்லீஸ்ட் அவர் பையனோட பேரன காண்பிக்கிறதுக்கு இந்த குழந்தை இருக்கட்டுமே..!” என்றதும்..

 

“உண்மையாவே அதுதான் காரணமா?” என்று அவளை கூரந்துப் பார்ப்பான் சுக்ரேஷ். 

 

அவளோ அதற்குப்பின் வார்த்தையை என்ன வாயை கூட திறக்க மாட்டாள். பசை போட்டு ஒட்டியது போல இரு உதடுகளை இறுக்க ஒட்டி வைத்துக் கொள்வாள். 

 

வெளியில் ஆயிரம் காரணம் சொன்னாலும்.. உள்ளுக்குள் அவள் காதல் கொண்டு அதில் முகிழ்த்த முத்தல்லவா? எங்கணம் அதனை அழிக்க மனம் வரும்?

 

இவன் அடிக்கடி வந்து செல்வதால்.. அதேநேரம் இவளும் இப்படி பிள்ளை தாங்கி இருப்பதால் அனைவரிடமும் பியான்சி என்றே சொல்லி வைத்திருந்தான் சுக்ரேஷ்.

சுற்றிலும் பார்ப்பவர்களிடம்..

 

“வர வர நம்ம வழக்கமே வழிஞ்சு காணாமல் போகும் போல. இப்ப எல்லாம் குழந்தை பெத்துட்டு தான் கல்யாணமே பண்ணிக்கிறாங்க போல” என்று இவர்களை பார்த்து கூறினாலும் அந்த பிள்ளைக்கு அப்பன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற வகையில் அவர்கள் தலையிட மாட்டார்கள். 

 

முதலில் சுக்ரேஷ் பியான்சி என்று சொன்னதும் அவள் திட்டிட்டு அவனோடு சண்டையிட..

 

“நீ என்ன முறைச்சாலும் சரி.. என்கூட சண்டை போட்டாலும் சரி.. இப்படித்தான் எல்லார்கிட்டயும் சொல்லுவேன். ஒரு வருஷம் முடிஞ்ச உடனே உனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுப்பேன். ஒழுங்கா உன்னோட வாழ்க்கையை நீ சரிபடுத்துக்குற..! இல்லேனா அதுக்கப்புறம் அந்த வாழ்க்கையை நான் என் கையில் எடுத்துக்குவேன். உன்னை இப்படியே தனியா எல்லாம் விட முடியாது. அதுவும் குழந்தையை.. வாய்ப்பே இல்லை..! சீக்கிரம் நீயே ஒரு முடிவுக்கு வா” என்று ஒவ்வொரு முறை வரும்போதும் அவளிடம் தவறாமல் கூறிவிட்டு தான் செல்வான். 

 

அதுவும் அவள் மருத்துவமனைக்கு செக் அப்புக்காக செல்லும்போது எல்லாம் தவறாமல் வந்து விடுவான். எத்தனை அங்கு வேலைகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு இல்லை என்றால் “ஒரு ரெண்டு நாள் பொறுத்துக் கொள்.. ஜெனரல் செக் அப் தானே இன்னிக்கு எனக்கு ஃப்ரீ அப்போதான் நீ போகணும்” என்று அவளை சம்மதிக்க வைத்து அவனோடு தான் அழைத்துச் செல்வான். 

 

இப்படிப்பட்ட அன்புக்கு என்ன கைமாறு செய்வது என்று புரியவில்லை அவளுக்கு. ஆனாலும் இந்த அன்பு பாசம் நேசமாக மாற வாய்ப்பே இல்லை என்று புரிந்தவள்..

 

“இவனுக்கும் சீக்கிரமே ஏதாவது ஒரு அலையன்ஸ் பார்க்க அத்தை கிட்ட சொல்லணும்..! ஒருவேளை இவனை மாதிரியே அத்தையும் வீட்டில எங்களை இணை கூட்ட நெனச்சிட்டு இருந்தாங்கன்னா?? ஆண்டவா..!” என்று தலையை உலுக்கி கொண்டவள், இப்போதைக்கு வேறு எந்த நினைப்பும் வேண்டாம் என்று அமைதியாக இவளது வாய்ப்பிற்காக அவள் காத்திருக்க.. 

 

இவர் பெயர் அழைக்கப்பட்டவுடன் உள்ளே செக் அப்புக்காக உள்ள அழைத்து செல்லப்பட்டாள்.

 

ஏற்கனவே சுக்கிரேஷை கசின் என்றுதான் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார் கணவன் என்று சொல்ல அவளுக்கு வாய் வரவில்லை ஒரு முறை செக் செய்துவிட்டு ஸ்கேன்ரி போட்டு இந்த மருத்துவர் உங்க ஹஸ்பண்ட் இன்னும் வரலையா அடுத்த முறை வரும்போது கூட்டிட்டு வரணும்னுதான சொல்லிருந்தேன் என்றதும் இருவரும் ஒருவரை பார்த்துக்கிட்டு அது டாக்டர் என்று அவள் இழுக்க..

 

இத்தனை மாதமாக சொன்ன போய் போதும். சொன்னேனா உங்க கிட்ட ஒன்னு சொல்றது தான் பெட்டர் ஆரு என்றவன்,

 

டாக்டர்.. எதா இருந்தாலும் என்கிட்டே சொல்லலாம்.‌ ஏன்னா.. நான் அதான் அவ ஃபியான்சி என்று அவன் சொல்லி முடிக்கும் முன்,

 

“ஹலோ டாக்டர்..! ஐ அம் ராவண் திரேந்திரன் மாறவேல்‌..! குழந்தையோட அப்பா..!” என்று அவளுக்கு அருகில் நெருக்கமான நின்றான், போதைதாக்குறைக்கு அவனது வலது கை அவளது தோள்பட்டையை அழுத்தி பிடித்திருந்தது.

 

“என்ன டா இது? ஒருத்தன்

இவள் என் ஃபியான்சினு சொல்றான்..! இன்னொருத்தன் குழந்தையோட அப்பா சொல்றான்..”

 

இருவரையும் அதிர்ந்த முகத்தோடு மாறி மாறி பார்த்தார் அந்த மருத்துவர்..!!

 

அந்தோ பாவம்..!!

 

அசுரன்.. வருவான்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top